நீரிழிவு நோய்யை கட்டுபடுத்தும் காய்கறிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 4:23 PM | Best Blogger Tips
தற்போது நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலில் ள்ளது. ஏனெனில் இந்தியர்கள் எந்த ஒரு உணவிலும் சரியான கட்டுப்பாட்டுடன் இல்லாததால், பாரபட்சமின்றி நோய்கள் உடலைத் தாக்குகின்றன. அவ்வாறு தாக்கும் நோயில் ஒன்று தான் நீரிழிவு. அதிலும் அந்த நோய் வந்தால், அதற்கான டயட சார்ட்டை தயார் செய்வது என்பது மிகவும் கடினம். பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு ஆரோக்கியத்தை தந்தாலும், நீரிழிவு நோயளிகளுக்கு சில நேரங்களில் அவை கெடுதலை விளைவிக்கும். ஏனெனில் நிறைய காய்கறிகளில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பொருள் உள்ளது.
உதாரணமாக, உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் போன்ற காய்கள் அனைத்தும் உடலுக்கு மிகவும் சிறந்தவை. ஆனால், அது நீரிழிவு உள்ளவர்களுக்கு சிறந்தது அல்ல.
ஆகவே இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த ஒரு உணவை உண்ண வேண்டுமென்றாலும், மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. அதிலும் உண்ணும் காய்கறிகள் மற்றும் பழங்களில் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நிச்சயம் இனிப்பு உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காய்கறிகள் தான் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம், அவற்றிலும் இனிப்புகள் அதிகம் இருக்கும் காய்கறிகளும் உள்ளன.
எனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், எந்த காய்கறிகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைப் பார்ப்போமா!!!
பாகற்காய்
நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
வெந்தயக் கீரை
கீரை வகைகளில் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வந்தால், நீரிழிவைத் தடுக்கலாம். இந்த கீரையில் உள்ள லேசான கசப்பு சுவையானது, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை குறைக்கிறது.
வெண்டைக்காய்
வெண்டைக்காயை நறுக்கும் போது வரும் ஒருவித பசை போன்ற நீர்மம், நீரிழிவைக் கட்டுப்படுத்தும். அதற்கு இரவில் தூங்கும் போது வெண்டைக்காயை இரண்டாக கீறி, ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, அதிகாலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
சுரைக்காய்
இன்சுலின் குறைபாட்டினால் வரும் நீரிழிவை, சுரைக்காயின் சாற்றை எடுத்து, காலையில் குடித்து வர சரியாகும்.
லெட்யூஸ் (Lettuce)
இந்த பச்சை இலைக் காய்கறியில் நார்ச்சத்து அதிகமாகவும், சர்க்கரையின் அளவு குறைவாகவும் உள்ளது. ஆகவே இதனை சாப்பிடுவது நல்லது.
காலிஃப்ளவர்
மற்ற காய்கறிகளைப் போன்று, காலிஃப்ளவர் இனிப்பு சுவையற்றது. ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், உடலானது நன்கு ஆரோக்கியமாக இருக்கும். இனிப்பு சுவை இல்லாத காய் என்பதால, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.
பூசணிக்காய்
அனைவருக்குமே பூசணிக்காய் இனிப்பு சுவையுடையது என்பது தெரியும். ஆனால் அவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக இருக்கும். எனவே தான் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு காய்கறி.
பிரெஞ்சு பீன்ஸ்
பிரெஞ்சு பீன்ஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. எனவே இதனை நீரிழிவு உள்ளவர்கள் உண்டால், நீரிழிவைத் தடுக்கலாம்.
இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
இயற்கையோடு ஆரோக்கியமாக வாழ்வோம்..!
இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்கள் எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள் விழிப்புணர்வு செய்யுங்கள்..!
============================================================
பொது நலனில் அக்கறை கொண்ட உங்கள் கடலூர் அரங்கநாதன்...

இரும்புச்சத்து இல்லாமல் போனால்.. !

மணக்கால் அய்யம்பேட்டை | 4:11 PM | Best Blogger Tips

கவனச்சிதறல்
இரும்புச்சத்துக் குறைபாட்டினால் வரும் முக்கியப் பிரச்னை இது. பொதுவாகக் குழந்தைகளுக்கு இத்தகைய கவனச் சிதறல் ஏற்படும்போது உடனடியாக பெற்றோர்கள், பரிசோத-னையை மேற்கொண்டு அது இரும்புச் சத்தின் குறைபாட்டினால் வந்ததா அல்லது வேறு ஏதும் பிரச்னையா என்பதைக் கண்டறிந்து, அதைச் சரிசெய்ய முயற்சிக்க வேண்டும்.
தடுக்கும் முறைகள்
இரும்புச்சத்துக் குறைபாட்டை ரத்தம், மலம் பரிசோதனை மூலம் கண்டறியலாம். குறைபாட்டைக் கண்டறிந்தால் இரும்புச்சத்து மாத்திரைகள் கொடுத்தும், மல்ட்டி வைட்டமின் மாத்திரைகள் கொடுத்தும் சரி செய்யலாம். அச்சுவெல்லம், முருங்கைக்கீரை, கடலைமிட்டாய், பேரிச்சம்பழம், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றைத் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம். இதில் எந்த ஓர் அறிகுறியையும் அலட்சியப்படுத்தாமல், பரிசோதித்து அறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், இரும்பு சக்தியின்மை நம்மை பெருமளவு பாதிக்கும் அளவுக்கு வீரியமானது
‪#‎Vikatan