அர்த்தமுள்ள இந்து தர்மம்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:19 PM | Best Blogger Tips
அர்த்தமுள்ள இந்து தர்மம்:

இந்து தர்மம் இதுநாள் வரை எதிர்கொள்ளாப் பல்வேறு கேள்விகளையும், சவால்களையும் எதிர் நோக்கியுள்ளது . மக்களுக்கு இந்து தர்மம் கொடுத்த அளவற்ற சுதந்திரத்தின் பயனாக எழுந்துள்ள இக்கெள்விகளால், பெரும் நன்மை ஒன்று ஏற்படப் போகிறது. மக்களுக்கு இதுநாள் வரையில் இருந்த அறியாமை இருளை விளக்கும் ஒரு வாய்ப்புததான் அது. தர்மத்தின் வேறினை சாதியின் பெயரால் அறிய முடியாமல் போனவாரும் அறிந்திடும் ஓர் அறிய வாய்ப்பு.

ஒரு இழையில் கோர்க்கப்படாத முத்துக்கள் எப்படி மாலையாய் அழகு பெறாதோ, அதுபோல் சாதீயச் சிதறலாய் பெருமை மறந்து (இழந்தல்ல) கிடக்கிறது இந்து தர்மம்,.

இந்த பேதத்தை யார் தோற்றுவிததது, யார் வளர்த்தது என்று ஆராய்ந்து நேரம் வீன்ாக்குவதை விட இனி எவ்வாறு இந்தப் பேதங்களைக் களைந்து மேலேறலாம் எனச் சிந்திப்பதே தேசீய உணர்வும், ஆறாவது அறிவும் உடைய பாரதப் பெருமக்கள் செய்ய வேண்டியது.

மதத்தைக் காக்க மட்டுமல்ல,உலகளவில் பாரதம் இதுநாள் கொண்டிருக்கும் கலாசாரப் பெருமையின் சீர் காக்கவும் இது அவசியமாகிறது. எவ்வாறு?????

பன்னெடுங்காலமாக தன்னிககரில்லாப் பண்பாடு, ஆன்மீக ஒருமைப்பாடு, போரில் கூட மதிக்கப்படும் தர்மம் என்று உலகையே வியக்க வைத்த பாரதக் கலாசாரமும், இன்று அனைவரும் தூஷித்து அரசியல் செய்யும் இந்துதுவமும் வேறு வேறல்ல.

இந்து தர்மத்தைக் கைவிட்டு பாரதக் கலாசாரத்தைக் காத்து விட முடியும் என்று நம்பினால் மூடத்தனமாகும். மழையை வேண்டாமென்றும், ஆனால் குடிக்க நீர் மட்டும் வேண்டும் என்றும் கூறும் மூடாத்திற்கு ஒப்பாகும்,

இந்து மதம் தன் மக்களுக்களித்த சுதந்திரத்தின் வெளிப்பாடுதான் பாரதம் பல்வேறு பழைமைவாத்ங்களையும், தீவிரவாதத்தையும் கடந்து ஒரு வெற்றிகரமான சுதந்திர நாடாக நிற்பது. சதி, கைம்மை போன்ற பழைமைவாத்த்தில் ஒன்றான சாதீயமும் காலப்போக்கில் ஒழியும். இது சத்தியம். ஆனால், இதைக் காட்டி நம்மைப் பிரிக்க முற்படுபபவர் சதியில் வீழ்ந்தால் விளைவு, நாம் அழகிய பட்டுச் சேலையில் இருந்து பிரிதத்ெடுக்கப்படும் ஒற்றைப் பத்து நூலாய்ப் பாழ்பட்டுப் போவோம்.

உணர்வால், தர்மதால் பல்லாயிரம் காலம்மாகா ஒன்றுபட்ட பாரதம் மாற்றுக் கொள்கையுடையோரின் வரவால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எனத் தூண்டாதப்பட்ததே அதற்குச் சான்று.

இன்னும் நாம் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று அடித்துக் கொண்டு பிரிந்து கிடப்பதைபோல் பாரத அன்னைக்குச் செய்யும் துரோகம் வேறில்லை. தங்களுக்குத் தேவையானதை மட்டும் ஊதிப் பெரிதாக்கும் அரசியலே திருக்குறளையும், ஆத்திசூடியையும் விட்டு வரூநாசிரமத்தையும், மநுவையும் மக்களின் மனத்தில் திணிப்பதாகும்.

பிறப்பால் அமையாது, ஒருவர்தம் குணமே ஒருவன் சாதியைத் தீர்மானிக்கும் என்பதே ஆன்றோர் கூற்று. ஆனால், சாதிக்குச் சான்றிதழ் கொடுத்து அதைத் தலைமுறை தாண்டிக் கடத்திச் செல்வது அரசியல்.

இதை நிறுத்த வேண்டும்.

பிராமிநர்கள், மற்ற மேல்ஜாதியினர் தாங்கள் கற்ற தர்மத்தின் சாரத்தை கடைநிலையில் இருப்போருக்கும் பகிர முன் வர வேண்டும்.
இதுநாள் வரை கீழ்ஜாதி எனத் தவறாக முத்திரை குத்தப் பட்டவர்கள் தங்கள் தாழ்வு மனப்பான்மை விடுத்து தர்மத்தை அறிய ஆர்வம் கொள்ள வேண்டும்.

என்ன பெயர் சொல்லி இறைவனை அழைத்தாலும், எந்தச் சாதியின் சான்றிதழை அரசு அளித்தாலும் தர்மம் என்னும் கடலில் பேதம் கடந்து சங்கமித்தால் நலமே.

''ஏனென்றால் தர்மத்தின் வாழ்வே, தேசத்தின் வாழ்வு''

குழந்தை கீழே விழுந்து அடியா? அவசர குறிப்பு இதோ.. First Aid

மணக்கால் அய்யம்பேட்டை | 11:11 AM | Best Blogger Tips
குழந்தை கீழே விழுந்து அடியா? அவசர குறிப்பு இதோ.. First Aid 

வீட்டில் குழந்தைகள் இருந்தாலே வீடே கலகலப்பாய் இருக்கும். ஏனெனில் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி, நமக்கு மகிழ்ச்சி அளிப்பார்கள். ஆனால் அத்தகைய சுட்டிக் குழந்தைகள் கீழே விழுந்தாலோ அல்லது நோய்களில் பாதிக்கப்பட்டாலோ, என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்போம்.. மேலும் சில குழந்தைகள் திடீரென்று அழத் தொடங்கும். ஆகவே அவ்வாறு குழந்தைகளை என்ன நோய்கள் அடிக்கடி தாக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு, குழச்தைகளை அவஸ்தையிலிருந்து தடுக்கலாம். அவசர காலத்தில் குழந்தைகளுக்கு வீட்டிலேயே முதலுதவி அளிக்கலாம். அப்படிப்பட்ட சில குறிப்புகள் இதோ,

குழந்தை விளையாடும் போது கீழே விழுந்து அடி

பஞ்சு மற்றும் பாண்டேஜ் துணி ஆகியவற்றால் மட்டும் அந்தப் பகுதியை அழுத்திக் கட்டினால்போதும். பெரிய காயம் என்றால் மருத்துவ உதவி தேவை. வீட்டு வைத்தியம் என்ற பெயரில் மஞ்சள் பொடி, சர்க்கரை, காபி பொடி என்று எடுத்து பூச வேண்டாம். 

தலைக்குள் நீர் கோர்த்துக் கொள்ளுதல்

நீலகிரி தைலம் எனப்படும் யூக்கலிப்டஸ் எண்ணெய்யின் ஆவி பயனளிக்கும். மிகவும் சிறிய குழந்தை என்றால் தலையணையைக்கு மேல் குழந்தையின் தலையை சுற்றி யூகலிப்டஸ் எண்ணெய் நனைக்கப்பட்ட துணி ஒன்றை வைக்கலாம்.

திடீர் காய்ச்சல்

க்ரோசின் என்ற மாத்திரைகளை நாடுவதற்கு முன் நீரினால் ஸ்பான்ஞ் பாத் கொடுங்கள். நேரடியாக ஐஸ் தண்ணீரில் உடலை ஒத்தியெடுக்கக்கூடாது. குளிரால் நடுக்கம் வந்துவிடலாம். சாதாரணமான தண்ணீரில் ஈரத்துணியை நனைத்து உடலைத் துடைக்க வேண்டும். டர்க்கி டவலாக இருந்தால் மேலும் நல்லது. முக்கியமாகப் பெரிய ரத்தக்குழாய்கள் உள்ள அக்குள் மற்றும் தொடை இடுக்குப் பகுதிகளில் நன்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும். பதினைந்து முறையாவது இப்படிச் செய்ய வேண்டும். உடனடி நிவாரணம் தரும்.

தசைப்பிடிப்பு மற்றும் சுளுக்கு

விரல்களால் அந்தப் பகுதியை அழுத்தி நீவுவது, எண்ணெய்யைக் கொதிக்க வைத்து அந்தப் பகுதியில் ஒத்தடம் கொடுப்பது என்பதெல்லாம் விஷயத்தைச் சிக்கலாக்கிவிடும். ஐஸ் கட்டியை ஒரு துணியில் சுற்றி அந்தப் பகுதியில் ஒத்தி ஒத்தியெடுங்கள். பெரும்பாலும் சரியாகிவிடும். (ஐஸ் கட்டியை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியில் வைக்கவேண்டாம்).

விஷப்பூச்சிக்கடி

டாக்டரிடம் குழந்தையை அழைத்துச் செல்லுங்கள். ஆனால் அதற்குமுன் பாதிக்கப்பட்ட பகுதியை பலமுறை சோப்புத் தண்ணீரால் நன்கு கழுவிவிடுங்கள். இது அவசியம்.

Via FB ஆரோக்கியமான வாழ்வு
 
மன அழுத்தத்திற்கு என்ன மருந்து

மணக்கால் அய்யம்பேட்டை | 11:06 AM | Best Blogger Tips

மன அழுத்தம் அனைவருக்கும் பிரச்னையாக இருக்கிறது. இதனால் வெற்றி வாய்ப்புகளை இழக்க நேரிடுகிறது. இதற்கான காரணங்கள் பல. அதைக் கண்டறிந்து வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் செயல்படுவதே சிறந்தது. சில டிப்ஸ்களை தொடர்ந்து கடைபிடித்தால் மன அழுத்தத்தை குறைக்கலாம்

1.பலம் மற்றும் பலவீனத்தைஅறிதல்:

உங்களிடம் உள்ள பலம் என்ன என்பதை அறிந்து அதை வெற்றிக்கான படிக்கல்லாக கொள்ள வேண்டும்.மேலும் உன்னுடைய பலவீனத்தை அறிந்து, அதனையும் உங்களுடைய பலமாக மாற்ற முயல வேண்டும்.

2.மாற்றத்திற்கு தயாராக இருத்தல்:

நமது வாழ்வின் ஒரு பகுதி மாற்றம். வாழ்க்கை மாற்றத்தை ஏற்று அதன் நிறை குறைகளை அறிந்து செயல்படும் போது மன அழுத்தத்தை குறைக்கலாம்.

3.முன்னெச்சரிக்கையோடு இருத்தல்:

எந்த செயலையும் செய்யும் போது பல முறை யோசித்து செய்தல் நலம் பயக்கும். தனக்கென கட்டுப்பாடுகளை வகுத்து, அதை
செயல்படுத்தும் போது மன அழுத்தத்தை குறைக்கலாம். குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட வேலையை சிறப்பாக செய்ய முயற்சி செய்தல் வேண்டும்.

4.சிறந்த சமுக உறவு:

நல்ல சமுக உறவுகள் கொண்டிருப்பதே, மன அழுத்தத்தை குறைக்க வழி. உங்கள் நண்பர்களில், சரியான வழிகாட்டுதல் செய்கிறவர் யார், என கண்டறிந்து அவரோடு நட்பை தொடருங்கள். அதே நேரத்தில் தீமை செய்யும் நண்பர்களின் நட்பை துண்டித்து விடுங்கள்.

5.உறுதியாக இருத்தல்:

உங்கள் பாதை மற்றும் கட்டுப்பாடுகளில் உறுதியாக இருங்கள்.

6.நல்ல பழக்க வழக்கம்:

பிறரது மனம் நோகாமல், அன்போடு செயல்படுங்கள். சிறந்த பழக்கம் மற்றும் பண்பு நலன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.

7.தேவைப்படும் பொழுது உதவி:

நமது கை தான் நமக்கு பலம். பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் போன்றவர்களிடம் தேவைப்படும் பொழுது உதவியை நாடுங்கள்.

8.பிரச்னையை தீர்க்க கற்றுக் கொள்ளல்:

பிரச்னையை நேர்வழியில் எதிர் கொள்ளுதல். சிறந்த மனப்பாங்குகளை வளர்த்துக் கொள்ளுதல். வயது முதிர்ந்தவர்களிடம் பிரச்னைக்கான காரணங்களை கூறி ஆலோசனை பெறுதல் சிறந்தது.

9.ஓய்வு எடுத்தல்:

மனிதனுக்கு ஓய்வு அவசியம். ஓய்வு எடுப்பதால் மூளை மற்றும் உடம்பு புத்துணர்ச்சி பெறுகிறது. தகுந்த ஓய்வு எடுக்கும் போது மன அழுத்தத்தை குறைக்கலாம்.

10.சிறந்த வாழ்க்கை முறை:

உணவு, தூக்கம், உடற்பயிற்சி ஆகிய மூன்றும் சிறந்த வாழ்க்கை முறைக்கு அவசியம். இதனை சரியாக மேற்கொண்டு மன அழுத்தத்தை குறைக்கலாம். இந்த டிப்ஸ்களையும் தொடர்ந்து கடைபிடிக்கும் போது மன அழுத்தத்தை குறைத்து, வெற்றிப் பாதையில் செல்லலாம்.
Via FB ஆரோக்கியமான வாழ்வு

84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு... உங்களுக்கு தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 11:01 AM | Best Blogger Tips

எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு

ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ??
அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !!

கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்

கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான்

உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது

உலகத்தில் முதன் முதாலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான்

கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கற்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்கலாம் ..

உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர்

உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு

இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்கள் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று அந்த நாடு தான் யூதர்களின் இஸ்ரேல்
Via FB தமிழ்
 
காய்... கறி... கனி... மருத்துவ குணங்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 10:56 AM | Best Blogger Tips

காரட்: தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

முட்டைக்கோசு: மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பினைக் குறைக்கிறது.

பீட்ரூட்: ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து பீட்ரூட்டில் உள்ளதால் தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகை நோய் வருவதில்லை. இரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.

இஞ்சி: கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப் போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது.

வெங்காயம்: வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இரத்தத்தின் உறை தன்மையும், ஒட்டும் தன்மையும் குறைவதால் மாரடைப்பு நோய் வரவே வராது.

மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.

இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தவர்களும் கூட தினமும் 100 கிராம் வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள்: இதில் உள்ள `பெக்டின்' என்ற நார்ச்சத்து இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு 10லிருந்து 15 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது. ஆப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.

அன்னாசி: இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் அன்னாசி சிறந்து விளங்குகிறது. மேலும், அன்னாசிப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் உறையும் தன்மை குறைவதோடு, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளும் நீங்கும்.

எலுமிச்சம்பழம்: உடம்பிலுள்ள சிறிய இரத்தக் குழாய்களின் சுவர்களை எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் உறுதிப்படுத்துவதோடு சிறுநீரகங்களில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. எலுமிச்சையில் `பெக்டின்' சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.

பூண்டு: இதில் `சாலிசிலிக்' என்ற இரசாயனப் பொருள் உள்ளது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் இரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பை உண்டாக்கும் போது பூண்டிலுள்ள `சாலிசிலிக்' என்ற சத்து அந்த அடைப்பை உடைத்துவிடுகிறது.
சுரைக்காய்: இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்பை நீக்குவதில் சுரைக்காய் பலே கில்லாடி! சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 200 மிலி மூலம் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் தவிடு பொடியாகிவிடும்.

வெள்ளரிக்காய்: இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட்டைக் கணிசமாக குறைத்து, இதயத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக இயக்க வல்லது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் இதற்கும் பங்கு உண்டு.

தர்ப்பூசணி: இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கி இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது.

முள்ளங்கி, வெண்டைக்காய்: இந்தக் காய்களைத் தினசரி காலையில் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் மூன்றே மாதங்களில் 80 சதவிகிதம் ஒழிக்கப்பட்டுவிடும். ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.

Via FB Karthikeyan Mathan

வயிற்றில் சங்கடம் - வாயு தொல்லை

மணக்கால் அய்யம்பேட்டை | 1:35 PM | Best Blogger Tips

 இரப்பை வயிறு அழற்சி Gastritis எனப்படும். இதன் பெயரை வைத்து பலர் இதை வாய்வுத் (Gas) தொல்லை என்று நினைக்கிறார்கள். இல்லை, இது இரைப்பையில் ஏற்படும் வீக்கம். அல்சர் வருவதற்கு முன் ஆரம்பமாகி, அல்சரில் கொண்டு விடும். இந்த வீக்கம் அழற்சி, இரப்பையின் சுவர்களில் உருவாகும். Gastritis என்பது ஆயுர்தேத்தில் அமல பித்தம் எனப்படும். பித்த பிரகிருதிகளுக்கு வரும் வாய்ப்பு அதிகம்.
காரணங்கள்

• காரம், மசாலா நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல். முன்பே சொன்ன மூன்று விஷயங்கள் Hurry, Worry, Curry. மற்றவரைப்பார்த்து பொறாமை படுதல் கூட வயிற்றில் அமிலத்தை அதிகம் சுரப்பிக்கும்.

• தொற்றுகளினால் (Infection). பேக்டீரியா, வைரஸ், ஃபங்கள் கிருமிகளால் வரும். பெயர் பெற்ற ஹெலிகோ பேக்டர் பைலோரி (Helicobacter Pylori) என்ற பயங்கர வாத ரகத்தை சேர்ந்த வலுமையான பேக்டீரியா காஸ்டிரைடீஸையும் உண்டாக்கும், பிறகு அல்சரையும் உண்டாக்கும். நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த பாக்டீரியா தொற்று வர வாய்ப்புகள் அதிகம். இந்த நோய்களால் இரப்பைக்கு போகும் ரத்தம் குறைந்த விடுவதால், வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படும்.

• உடலின் நோய் தடுப்பு சக்தி குறைந்துவிட்டாலும் கேஸ்டிரைடீஸ் வரும்.

• சில நச்சுப் பொருட்களை உண்ணுதல், ஆஸ்பிரின், ப்ரூஃபென் போன்ற மருந்தகளாலும் வரும். மூட்டுவலி, முதுகுவலி, தலைவலி, இவற்றுக்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் வயிற்றை பாதிக்கும் பக்க விளைவுகள் உள்ளவை. இவற்றால் கேஸ்டிரைடீஸ் வரும். இந்த மாத்திரைகள், இரைப்பையின் சுவற்றிலுள்ள ப்ரோஸ்டா கிளான்டின் (Prosta glandin) என்ற ஹார்மோன் போன்ற வேதிப் பொருள் வற்றிப்போய் விடும். இதனால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு புண்கள் உண்டாகின்றன. புண்கள் தீவிரமாகி, அல்சராக மாறிவிடுகின்றன.

• திருப்பி, திருப்பி சொல்வது, மன இறுக்கம், டென்ஷன், ஸ்ட்ரெஸ், இவை காரணமாகலாம். காரணங்களை பொறுத்து கேஸ்டிரைடீஸ் பலவகைகளாக சொல்லப்படுகிறது.

அறிகுறிகள் / சிக்கல்கள்

• கேஸ்டிரைடீஸ் காண்பிக்கும் அறிகுறிகள் குறைவு. அறிகுறிகள் தோன்றினால் அவை – வலி, பிரட்டல், வாந்தி. இவற்றை நாம் அஜீரணம் என்றும் நினைப்போம். கேஸ்டிரைடீஸ் அல்சராக முன்னேறும் போது அறிகுறிகள் தீவிரமாகும்.
• இரப்பை அல்சரை உருவாக்குவது கேஸ்டிரைடீஸ். இதை அல்சரின் முன் நிலை என்றே கூறலாம்.

சிகிச்சை

அலோபதி முறையில் எச். பைலோரியை அழிக்க ஆன்டி – பயாடிக் மாத்திரைகள் தரப்படுகின்றன. அன்டாசிட் அமிலத்தை எதிர்க்கும் மருந்துகள் தரப்படும். அலுமினியம் ஹைட்ராக்ஸைட் பொதுவாக பயன்படும் ஆன்டாசிட். இதை விட பயன் அளிப்பது மக்னீஷயம் ஹைட்ராக்ஸைட். சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்களுக்கு மக்னீஷயம் ஹைட்ராக்ஸைட் குறைவாகத் தான் கொடுக்க வேண்டும். பல அன்டாசிட் மருந்துகள், அலுமினியம் மற்றும் மக்னீஷயம் ஹைட்ராக்ஸைடுகள் இரண்டும் கலந்தவை.

ஆயுர்வேத அறிவுரைகள்

• மிளகாய், மசாலா, புளி, ஆரஞ்ச், சாத்துக் குடி, இவற்றை ஒதுக்கவும்.
• பூண்டு, இஞ்சி, தனியா, ஜீரகம் இவற்றின் உபயோகத்தை குறைக்கவும்
• அப்பளம், சட்னி, ஊறுகாய் – தவிர்க்கவும்.
• பால் நல்லது.
• வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய், கேரட் எடுத்துக் கொள்வது நல்லது. கேஸ்டிரைபீஸ் நோய்க்கு பீடா காரேடீன், வைட்டமின் ‘சி’ சேர்ந்த உணவுப் பொருட்கள் தேவையான மருந்தாகும்.
• புகையிலை, மது தவிர்க்கவும்
• மன அமைதி தேவை.

ஆயுர்வேத மருந்துகள்

• அதி மதுரம் கேஸ்டிரைடிஸை கட்டுப்படுத்த, பல தலை முறைகளாக பயன்படுத்தப்படும் மருந்து. இது எச். பைலோரி பாக்டீரியாவையும் வளரவிடாமல் தடுக்கும். ஒரு தேக்கரண்டி அதி மதுரப் பொடி, 1/2 தேக்கரண்டி நெய், 1 தேக்கரண்டி தேன் இவற்றை கலந்து வெறும் வயிற்றில் உட்கொள்ளவும் தினசரி 2 வேளை போதுமானது.
• சதவாரி, நெல்லிக்காய் பொடி நல்ல, நிரூபிக்கப்பட்ட மருந்துகள்
• ஆம்லக்கி சூரணம், தாத்ரீலோஹா, சுகமார க்ருதம். போன்றவை கேஸ்டீரைடீஸ§க்கு கொடுக்கப்படும் மருந்துகள்.
எந்த மருந்தானாலும், உங்களின் ஆயுர்வேத மருத்துவரின்
ஆலோசனைப் படி உட்கொள்ளவும்

வயிற்றை துன்புறுத்தும் எச்.பைலோரி

ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobacter Pylori) என்ற பாக்டீரியா கேஸ்டிரைபீஸ் பாதிப்புக்கு முக்கிய காரணம். தவிர பெப்டிக் அல்சருக்கும், இந்த கிருமியே காரணம்.

எச்.பைலோரி கிருமிகள் இரப்பையின் ம்யூகோஸா என்ற ஜவ்வுப்படலத்தில் புகலிடம் தேடி வசிக்கின்றன. இந்த ஜவ்வுப் படலத்தால் கிருமிகளுக்கு ஹைட்ரோகுளோரிக் அமிலத்தால் பாதிப்பு ஏற்படுவதில்லை. அமிலம் சுரக்கும் போதெல்லாம் எச்.பைலோரி, ஜவ்வுப் படலத்தை துளைத்து, உள்புறச் செல்களுக்குள் பாதுகாப்பாக ஒளிந்து கொள்கின்றன. தவிர யூரிஸ் (Urease) என்ற நொதியை (Enzyme) உண்டாக்குகின்றன. இதிலிருந்து வெளிப்படும் அம்மோனியாவுடன் ஹைட்ரோகுளோரிக் அமிலம் சேர்ந்து, நீர்த்துப் போய் விடுகிறது. இதனால் அமில ஆபத்தின்றி, தங்குதடையின்றி எச்.பைலோரி எல்லையில்லாமல் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த கிருமிகள் ஏற்படுத்தும் ஒட்டைகளினால் ரத்தக்கசிவு ஏற்படுகிறது. அட்ரோபிக் (Atrophic) கேஸ்டிரைடிஸ் ஏற்படுகிறது. ரத்த சோகையும் ஏற்படும்.

எச்.பைலோரிகிருமியுள்ள அனைவருக்கும் கேஸ்டிரைடீஸ் ஏற்படும். முழுவயிற்றையும் பாதிக்கலாம். இல்லை வயிற்றின் கீழ்பாகத்தை (Antrum) பாதிக்கலாம். கேஸ்டிரைட்டீஸ், அல்சராகமாறி நாளடைவில் புற்று நோயாக மாறும்.

எச்.பைலோரியை அழிப்பதற்கான வழி – அமில சுரப்பை கட்டுப்படுத்தும் மருந்துகளுடன் இரண்டு ஆன்டிபயாட்டிக் (அமோக்ஸிலின், க்ளரித்ரோமைசின்) மருந்துகள் கொடுப்பது தான்.

எச்.பைலோரி நமது விரல்களில் நகங்களின் இடுக்கில் இருக்கும் அழுக்கில் காணப்படுகிறது. அசுத்தமான குடிநீர், ஈ மொய்க்கும் தெருவோர உணவுக் கடைகள் இவற்றிலிருந்து எச்.பைலோரி பரவும்.

எச்.பைலோரி கிருமிகளை, மூச்சுக்காற்று, மலம், ரத்தம் ஆகிய பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கலாம். என்டோஸ் கோபி மூலமும் கண்டுபிடிக்கலாம்.

மார்ஷலும், வாரனும்

எச்.பைலோரி பாக்டீரியா (Helicobacter Pylori) தான் கேஸ்டிரைடீஸ் மற்றும் அல்சருக்கு காரணம் என்று கண்டுபிடித்தவர். மார்ஷல் எனும் ஆஸ்திரேலிய மருத்துவ மாணவர். முதலில் இதை இவரது கல்லூரி தலைவர் ஒப்புக் கொள்ளாததால், மார்ஷல் விடாமுயற்சியாக, வாரன் என்ற டாக்டருடன் சேர்ந்து தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார். இந்த கிருமியை தனியாக பிரித்து தன் உடலிலேயே மார்ஷல் தைரியமாக செலுத்திக் கொண்டார்! இரண்டு நாட்களில் கடுமையான வயிற்றுவலி ஏற்பட, இவரின் ஆராய்ச்சி தோழர் வாரனை வைத்து “என்டோஸ்கோபி” உள்பட பல சோதனைகளை தனக்கு செய்து கொண்டார். சோதனைகளின் முடிவில், மார்ஷலுக்கு “ஆன்ட்ரல் கேஸ்டிரைடீஸ்” வந்திருப்பது தெரியவந்தது. அல்சருக்கு காரணம் எச்.பைலோரி கிருமி என்பதை மருத்துவ உலகம் ஏற்றுக் கொண்டது. இந்த கண்டுபிடிப்புக்காக மார்ஷலுக்கும், வாரனுக்கும் 2005 ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
 
Thanks FB ஆரோக்கியமான வாழ்வு

ஆட்கொல்லி நோயாக உருவெடுக்கும் நுரையீரல் நோய்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:13 PM | Best Blogger Tips
ஆட்கொல்லி நோயாக உருவெடுக்கும் நுரையீரல் நோய்கள்

2020ஆம் ஆண்டுவாக்கில் நுரையீரல் தொடர்பான நோய்கள் உயிர்பறிக்கும் நோய்களாக உருவெடுக்கும் அபாயம் உள்ளது என்று மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அதாவது மும்பை நகரில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களில் பாதிப்பேருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 10 கோடி மக்கள் நுரையீரல் வியாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருநகரங்களில் வாகனப்புகையை சுவாசிக்கும் பெருமபகுதி மக்களுக்கு பல்வேறு விதமான மூச்சுக்குழல் நோய்கள் உருவாகி வருவதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

குறிப்பாக சாலைகளில் பணியாற்றும் போக்குவரத்துத் துறை காவலர்களில் பெரும்பாலானோருக்கு நுரையீடல் நோய் இருப்பது தற்போது மும்பையில் தெரியவந்துள்ளது.

மும்பை செவென் ஹில்ஸ் மருத்துவமனையில் சுமார் 115 போக்குவரத்துக் காவலர்களுக்கு இலவச நுரையீரல் சோதனை நடத்தப்பட்டதில் 45% காவலர்களுக்கு நுரையீரல் பலவீனமடைந்திருப்பது தெரியவந்துள்ளது.

20 சதவீதத்கினருக்கு ஆரம்ப நிலை நுரையீரல் பாதிப்புகள் உள்ளன. மும்பையின் அதிக வாகனப்புகை கக்கும் ஒரு பகுதியில் போக்குவரத்துக் காவலராக பணியாற்றி வரும் சுரேஷ் பாட்டீல் என்ற காவலர் வாகனப்புகையினால் தனது முடி கொட்டிப்போனதையும், சரும நோய்கள் ஏற்பட்டிருப்பதையும் தெரிவித்துள்ளார்.

மற்றொரு போக்குவரத்துக் காவலரான சுஹாஸ் பாட்டீல் தனது நிறம் கரிய நிறமானதோடு இரவில் மூச்சு விடுவதில் கடும் சிரமங்கள் தோன்றியிருப்பதாகவும் கூறுகிறார்.

நுரையீரல் பாதிப்பு பற்றிய அறிகுறிகள் தாமதமாகவே தெரியவருகிறது. உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டால் சிகிச்சை சாத்தியம் என்று இந்த மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காவலர்கள் மட்டுமல்ல பெருநகரங்களில் நாள் முழுதும் சாலையில் சுற்றும் நபர்களும், சாலையோரங்களில் கடை கண்ணிகள் நடத்துவோரும் இன்னும் பலரும் தங்களது நுரையீரலின் நிலைமை குறித்து பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்று இந்த மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கை மணி ஒலித்துள்ளனர்

பிரசவத்திற்கு பின்பு...

மணக்கால் அய்யம்பேட்டை | 5:58 PM | Best Blogger Tips
பிரசவத்திற்கு பின்பு...

*ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கிய காலகட்டம் தாய்மைப் பருவம். குழந்தை பெற்ற பிறகு, அது சுகப் பிரசவமானால் 1 மாதமும், சிசேரியன் என்றால் 3 மாதங்களும் ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்த, பெண், முழுமையாக மனதளவிலும், உடலளவிலும் பழைய நிலைக்குத் திரும்ப குறைந்தது 18 மாதங்கள் அவசியம் என்கிறது லேட்டஸ்ட் மருத்துவக் குறிப்பு.

*சிசிசேரியன் என்றாலும் சுகப்பரசவம் என்றாலும் சரி அதிக கணம் கொண்ட பொருட்களை தூக்குவது கூடாது.ஏனென்யால் அது உடல் நிலை பாதிப்பு ஏற்பட வழிவகுக்கும்.குழந்தைக்கு முதலில் தாய் பால் தான் தரவேண்டும்.தாய்பாலைவிட சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை. பிறந்த குழந்தையை தாயின் உடலோடு இணைத்து அந்த சூட்டில் குழந்தையை படுக்க வேண்டும்

*குழந்தை பெற்ற உடன் அனேகப் பெண்களுக்கு தன்னம்பிக்கை அளவு சரேலெனக் குறைகிறது. உடல் எடை தாறுமாறாக மாறுகிறது. சருமம் பொலிவிழக்கிறது. அவர்களது ஒட்டுமொத்த தோற்றமுமே மாறிப் போகிறது. 18 மாதங்களுக்குப் பிறகே எல்லாம் சகஜ நிலைக்குத் திரும்புமாம். அதுவரை பொறுமை அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

வாழும் வழிகள் 30 THIRTY TIPS + அமுத மொழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:35 PM | Best Blogger Tips

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.

2.
காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.

3.
இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.

4.
உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.

5.
தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.

6. 2009
விட இந்த வருடம் நிறைய புத்தகம் படியுங்கள்.

7.
ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.

8.
குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.

9.
குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் / மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.

11.
எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.

12.
உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

13.
மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

14.
நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.

15.
அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.

16.
கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.

17.
வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.

18.
எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

19.
வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

20.
முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21.
வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.

22.
மன்னிக்கப் பழகுங்கள்.

23. 70
வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.

24.
அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.

25.
உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26.
உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27.
ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

28.
உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.

29.
உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.

30.
எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

கண்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 5:33 PM | Best Blogger Tips
கண்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்?

தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார். பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள்.

எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான். மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை.

சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும். இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் ஆகும். ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது.

கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன்மூலம் நிரூபிக்கிறான். ஆலிலையில் படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான். அடே பக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே. என்னைப் போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய்.

குடும்பம் என்ற சம்சாரக்கடலில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என்கிறான். இதுதான் கண்ணன் ஆலமர இலையில் மிதக்கும் தத்துவம் ஆகும்.

இன்சுலின் அளவை சீராக வைப்பதற்கான இயற்கை வழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:31 PM | Best Blogger Tips
Photo: இன்சுலின் அளவை சீராக வைப்பதற்கான இயற்கை வழிகள்

இன்சுலின் என்பது கணையத்தில் சுரக்கப்படும் ஒரு ஹார்மோன். இந்த ஹார்மோன் தான் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. ஆனால் இந்த இன்சுலினானது குறைய ஆரம்பித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரித்து, நீரிழிவு நோயை ஏற்படுத்திவிடும். ஆகவே உடலில் நீரிழிவு நோயானது தாக்காமல் இருக்க வேண்டுமெனில், இன்சுலினின் அளவை சீராக பராமரிக்க வேண்டும்.

பொதுவாக இது எளிதான காரியம் அல்ல. இது மிகவும் கடினமானது. ஆனால் சரியான வாழ்க்கை முறை, உணவுகள் போன்றவற்றை மேற்கொண்டு வந்தால், நிச்சயம் இன்சுலினை சீராக வைத்துக் கொள்ளலாம். அதிலும் ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக உண்ணும் உணவுகளில் சர்க்கரையின் அளவும், கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவும் குறைவாக இருக்க வேண்டும். இவ்வாறு கவனமாக இல்லாவிட்டால், நீரிழிவு நோயானது முற்றிவிடும்.

சரி, இப்போது அந்த இன்சுலின் அளவை சீராக வைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய சில செயல்களைப் பார்ப்போம்.

சரியான எடை

உடல் எடையானது அளவுக்கு அதிகமாக இருந்தால், இன்சுலின் உற்பத்தியில் குறைபாடு ஏற்படும். எனவே உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். அதற்கு சரியான உடற்பயிற்சி மற்றும் டயட்டை மேற்கொள்ள வேண்டும்.

சுறுசுறுப்பான நடை

போதிய உடற்பயிற்சியானது இல்லாவிட்டாலும், இன்சுலின் குறைபாடு ஏற்படும். எனவே, தினமும் 30 நிமிடம் சுறுசுறுப்பான நடையை மேற்கொண்டால், இன்சுலினானது சரியாக சுரக்கப்பட்டு, உடல் முழுவதும் சீராக செல்லும்.

பூசணிக்காய்

பூசணிக்காய் இனிப்பான உணவுப் பொருளாக இருந்தாலும், இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. மேலும் பூசணிக்காயில் உள்ள ஒருசில நொதிகள் இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ளும்

ஸ்டார்ச் உணவுகளை தவிர்க்கவும்

ஏற்கனவே நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள், ஸ்டார்ச் அதிகம் உள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். குறிப்பாக சாதத்தை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் நிறைந்த தினை, கம்பு போன்ற உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

 கொழுப்பு நிறைந்த ஈரல்

தற்போதுள்ள இளம் தலைமுறையினர் அவஸ்தைப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கொழுப்பு நிறைந்த கல்லீரல் பிரச்சனை. இந்த பிரச்சனையில் கொழுப்புக்களானது கல்லீரலில் அதிகம் தங்கி, கிளைகோஜன் பயன்படுத்தப்படாமல் அதிகப்படியாக சேகரிக்கப்பட்டிருக்கும். இதனால் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிக்கிறது. எனவே கல்லீரலை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. மேலும் இதனை சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படாமல் இருப்பதோடு, உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதும் குறையும். எனவே ப்ராக்கோலி, பசலைக்கீரை போன்ற உணவுகளை அதிகம் சேர்ப்பது நல்லது.

குறைந்த கிளைசீமிக் உள்ள உணவுகள்

உண்ணும் உணவுகளில் சர்க்கரையின் அளவு மட்டும் குறைவாக இருந்தால் போதாது. அதில் உள்ள கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவும் குறைவாக இருக்க வேண்டும்.

பட்டை

பட்டையை உணவில் அதிகம் சேர்த்தால், இன்சுலின் குறைபாட்டை போக்கி, நீரிழிவு நோயை தடுக்கலாம். அதற்கு தினமும் காலையில் காபி குடிக்கும் போது, அதில் சர்க்கரைக்கு பதிலாக சிறிது பட்டையை பொடி செய்து போட்டு குடிப்பது மிகவும் நல்லது.
 
குரோமியம் குறைபாடு

உடலில் குரோமியம் என்னும் கனிமச்சத்து குறைவாக இருந்தாலும், இன்சுலின் சுரப்பில் தடை ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே குரோமியம் அதிகம் உள்ள உணவான கடல் சிப்பியை அதிகம் உட்கொள்வது சிறந்தது.

வைட்டமின் கே உணவுகள்

எளிதில் கரையக்கூடிய கொழுப்பு தான் வைட்டமின் கே. இந்த வைட்டமின் கே உள்ள உணவுப் பொருட்களையோ அல்லது மருந்துகளையோ சாப்பிட்டால், இன்சுலின் குறைபாட்டை தவிர்க்கலாம். அதிலும், பச்சை இலை காய்கறிகளான பசலைக்கீரை, வெந்தயக் கீரை போன்றவற்றில் வைட்டமின் கே அதிகம் உள்ளது.
வெண்டைக்காய்

இரவில் படுக்கும் போது வெண்டைக்காயை நீரில் நறுக்கி போட்டு, காலையில் எழுந்து அந்த நீரைப் பருகினால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவதோடு, இன்சுலின் குறைபாடும் நீங்கும்.