தழும்புகள் மறைவதற்கு சூப்பர் டிப்ஸ்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:45 PM | Best Blogger Tips
தழும்புகள் மறைவதற்கு சூப்பர் டிப்ஸ்

உடல் அழகைக் கெடுப்பதில் தழும்புகள் முக்கிய பங்கினை வகிக்கிறது.
அத்தகைய தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தழும்புகளை இயற்கையான முறையில் நீக்கலாம்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.

பாதாம் எண்ணெய்

தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.

கற்றாழை

கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.

பால்

தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் மறையும்.

தக்காளி சாறு

தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும்.

அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டிவோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்.
தழும்புகள் மறைவதற்கு சூப்பர் டிப்ஸ்

உடல் அழகைக் கெடுப்பதில் தழும்புகள் முக்கிய பங்கினை வகிக்கிறது.
அத்தகைய தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தழும்புகளை இயற்கையான முறையில் நீக்கலாம்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றை தினமும் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முக்கியமாக எலுமிச்சை சாற்றை தீக்காயம் நன்கு காய்ந்தப் பின்னர் தடவ வேண்டும்.

பாதாம் எண்ணெய்

தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் ஆயிலை தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

அதிலும் ஒரு நாளைக்கு இரு முறை தடவி வந்தால், நன்கு பளிச்சென்று தெரியும் தழும்புகள் மங்கிவிடும்.

கற்றாழை

கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.

பால்

தினமும் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் தழும்புகளை நீக்கவும் பயன்படுகிறது. எனவே இந்த ஆயிலை தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தினமும் காலையும், மாலையும் தடவி மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் மறையும்.

தக்காளி சாறு

தக்காளியில் அதிகமான வைட்டமின்கள் இருப்பதால், அவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும்.

அதற்கு தக்காளி துண்டுகளை வெட்டிவோ அல்லது அதன் சாற்றையோ பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வந்தால் தழும்புகள் போய்விடும்.

பெண்கள் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்...

மணக்கால் அய்யம்பேட்டை | 1:48 PM | Best Blogger Tips

இன்றைய காலத்தில் நிறைய பேர் உடல் எடையை அதிகமாக இருப்பதால், அவற்றை குறைப்பது மிகவும் கடினமானது என்று நினைக்கின்றனர். ஆனால் அது தவறு. உண்மையில், உடல் எடையை குறைப்பது அவ்வளவு பெரிய கஷ்டமான ஒரு விஷயம் அல்ல.

எப்படி உணவுகள் உடல் எடையை அதிகரிக்கிறதோ, அதே உணவுகளை வைத்தே உடல் எடையையும் குறைக்கலாம். அதிலும் தற்போது புத்தாண்டு பிறக்க போவதால், நிறைய பார்ட்டிகள் நடக்கும். நண்பர்களுடன் வெளியே சென்று பல செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கேக், வறுத்த உணவுகள் என்று பலவற்றை சாப்பிடக் கூடும். அதுமட்டுமின்றி, வீட்டில் இருக்கும் பெண்கள், வீட்டு வேலையை செய்து கொண்டு, நன்கு சாப்பிடுவார்கள். அதனால், அவர்கள் உடல் எடை அதிகரிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

எனவே அவ்வாறு உடல் எடை அதிகரித்து, வடிவம் மாறாமல் இருக்க, பெண்கள் ஒரு சில உணவுகளை சாப்பிட்டால் போதுமானது. மேலும் அந்த உணவுகளோடு, உடற்பயிற்சியையும் தினமும் தவறாமல் செய்து வந்தால், உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கலாம். இந்த உணவுகள் பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் தான். இப்போது உடல் எடையை அதிகரிக்காமல் தடுக்கும் உணவுகள் என்னவென்று பார்ப்போமா...

பப்ளிமாசு:

இந்த பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இந்த பழம் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிப்பதோடு, உடலில் கொழுப்புக்கள் தங்காமல் தடுப்பதோடு, தேவையற்ற கொழுப்புக்களை கரைக்கிறது. மேலும் இந்த பழத்தை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள லிமினாய்டு மற்றும் லைகோபைன் என்னம் பொருட்கள் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

பசலைக்கீரை :

பெண்கள் நிச்சயம் பச்சை இலைக் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் முக்கியமாக பசலைக் கீரை மற்றும் ப்ராக்கோலி போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் உள்ளது. எனவே இவற்றை சாப்பிட்டால், வயிறு நிறைந்திருப்பதோடு, கொழுப்புக்களும் கரைந்துவிடும்.

தானியங்கள்:

பெண்களின் டயட்டில் தானியங்கள் மிகவும் முக்கியமானவை. இதில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன. அதுமட்டுமின்றி, இந்த உணவுகளை சாப்பிட்டால், எளிதில் செரிமானமடைவதோடு, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

மிளகாய்:

கார உணவுகள் உடல் எடையை குறைக்கும். மேலும் காரமான உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படாமலும் தடுக்கும்.

ராஸ்பெர்ரி:

பெர்ரி பழங்களில் ராஸ்பெர்ரியை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்பு செல்களை கரைப்பதோடு, அதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தின் வேகத்தை குறைக்கும். இதனால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.

நட்ஸ்:

நட்ஸில் பாதாம் ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ். ஏனெனில் நட்ஸில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. எனவே இதனை உணவு நேரங்களை தவிர்த்து, மற்ற நேரங்களில் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிட்டால், பசியானது நீண்ட நேரம் எடுக்காது

ஆரஞ்சு :

உடலில் உள்ள கொழுப்புக்களை கரைப்பதில் ஆரஞ்சு பழங்கள் மிகவும் சிறந்த உணவுப்பொருள். ஏனெனில் இதில் கலோரிகள் குறைவாக இருப்பதோடு, சிட்ரஸ் ஆசிட் இருப்பதால், அவை உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்துவிடும்.

வேர்க்கடலை:

வேர்க்கடலை பசியைக் கட்டுப்படுத்துவதோடு, உடல் எடையை அதிகரிக்காமலும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் குறைக்கும். எனவே வேர்க்கடலையை சாப்பிடுவது நல்லது.

பெர்ரி :

பெர்ரிப் பழங்கள் எப்போதும் ஒரு சிறந்த கொழுப்புக்களை கரைக்கும் உணவுப் பொருள். அதுமட்டுமின்றி அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. எனவே இவையும் பெண்கள் உணவில் கண்டிப்பாக சேர்க்க வேண்டியுள்ளது.

எலுமிச்சை :

எலுமிச்சை மற்றும் தேன் கலந்த ஜூஸ் ஒரு சிறந்த பெண்களுக்கான பானம். எலுமிச்சையும் ஒரு சிட்ரஸ் பழம் என்பதால், அவை பசியை தூண்டாமல், கொழுப்புக்களை கரைத்துவிடும்.


ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! : நிரூபிக்கப்பட்ட உண்மை...

மணக்கால் அய்யம்பேட்டை | 12:08 PM | Best Blogger Tips
ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! : நிரூபிக்கப்பட்ட உண்மை...

அடுக்களையில் அடிமைகளாக இருந்த பெண்கள் கடந்த முப்பதாண்டு காலத்தில் உலகத்தையே அடிமைப்படுத்தும் அளவிற்கு ஆளுமைத்திறன் படைத்தவர்களாக வளர்ந்திருக்கின்றனர்.

வீடோ அலுவலகமோ அவர்களின் பன்முகத்திறமை பளிச்சிடுகிறது. ஒவ்வொரு செயலிலும் வெளிப்படும் புத்திசாலித்தனம் அவர்களின் திறமையை உலகிற்கு பறைசாற்றுகிறது.

ஆனால் பெண்களை மட்டம் தட்ட நினைக்கும் ஆண்கள் பாலியல் ரீதியாக அவர்களை துன்புறுத்துகின்றனர். எங்கு அடித்தால் அவர்களுக்கு வலிக்கும் என்பதை உணர்ந்துள்ள ஆண்கள் அவர்களின் பெண்மையை குறிவைத்து தாக்குகின்றனர்.

இதுபோன்ற சவால்களையும் சந்தித்து வரும் பெண்கள் படிப்போ, வேலையோ எல்லாவற்றிலும் ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை பெண்கள் ஒவ்வொரு முறையும் நிரூபித்துக்கொண்டிருக்கின்றனர். ஆண்களை விட எந்தெந்த விதத்தில் பெண்கள் மேம்பட்டவர்களாக இருக்கின்றனர் என்று பத்து விசயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது படியுங்களேன்.

தாய்மை உணர்வு :

கருவை சுமக்கும் பெண் வலிமையானவளாகவும், உணர்வுகளையும், அன்பையும் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளிப்பவளாகவும் இருக்கிறாள். கடவுளின் சிறந்த படைப்பு பெண் என்றால் மிகையாகாது.

ஆளுமைத்திறன் அதிகம் :

பெண்கள் இன்றைக்கு மருத்துவர்களாக, பொறியியல் வல்லுனர்களாக, ஆசிரியர்களாக, விமானம் ஓட்டுபவர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர். மிகப்பெரிய நிறுவனங்களில் சி.இ.ஒ பதவியை கூட பெண்கள்தான் வகிக்கின்றனர். அவர்களின் ஆளுமைத்திறன் அதிகம். இந்தியாவில் ருக்மணி லட்சுமிபாய், இந்திரா காந்தி, ஜெயலலிதா, சோனியா, மம்தா பானர்ஜி, மாயாவதி உள்ளிட்ட பெண் தலைவர்களின் ஆளுமைத்திறன் உலக அளவில் பிரசித்தி பெற்றது.

பெண்கள் ஆரோக்கியசாலிகள் :

இன்றைக்கு ஆண்களை விட பெண்கள்தான் 5 முதல் 10 வயதுவரை அதிகம் உயிர் வாழ்கின்றனர். உலக அளவில் 85 சதவிகித பெண்கள் 100 வயதுவரை வாழ்வதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.

ஆண்கள்தான் அதிக அளவில் மாரடைப்பினால் இறக்கின்றனர். பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது குறைவுதான் இதற்கு காரணம் அவர்களின் உடலில் சுரக்கு ஈஸ்ரோஜன் என்ற ஹார்மோன்தான். இது ரத்தத்தில் தேவையற்ற கொழுப்பு சேர்வதை தடுக்கிறதாம்.

பன்முகத்திறமை அதிகம்:

இயற்கையாகவே பெண்கள் பன்முகத்திறன் படைத்தவர்கள். பிரச்சினைகளை எளிதில் கையாளுவார்கள் என்று உளவியல் நிபுணர்கள் நிரூபித்துள்ளனர். அன்னையாகவும், மனைவியாகவும் அதே சமயத்தில் அலுவலகத்தில் அதிகாரிகளாகவும் பணிபுரிந்து தங்களில் திறமையை நிரூபித்துள்ளனர்.

பெண் சிறந்த மேலாளர் :

மிகப்பெரிய நிறுவனங்களில் மேலாளர்களாக பதவி வகிக்கும் பெண்கள் அந்த நிறுவனத்தினை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஹிலாரி கிளிண்டன், சாந்தா கோச்சர், இந்திராநூயி, உள்ளிட்ட பெண்கள் தாங்களுக்கு அளிக்கப்பட்ட பதவியை திறமையாக நிர்வாகித்து நிரூபித்துள்ளனர்.

மகிழ்ச்சியான மனநிலை:

பெண்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கின்றனர். அதுதான் அவர்களின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது. கணவர் குழந்தைகளிடம் மகிழ்ச்சியோடு சமாளிக்கின்றனர். தன்னுடன் பணிபுரிபவர்கள், அலுவலக உயரதிகாரிகள் ஆகியோருடன் இதே மகிழ்ச்சியான மனநிலையுடன் தான் பேசுகின்றனர். ஆண்களின் சந்தோசம் பணம் சார்ந்தது. ஆனால் பெண்களின் சந்தோசம் பொருளாதாரத்தை மட்டுமே சார்ந்தது அல்ல என்கின்றது நீல்சன் நிறுவனம்.

வசீகரிக்கும் அழகு:

பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள். அது கடவுள் கொடுத்த வரம். பதின்பருவ பெண் ஒருவித அழகு என்றால் குழந்தை பேற்றுக்குப் பின்னர் பெண்களுக்கு அழகுடன் கம்பீரமும் அதிகரிக்கும். எதிர்காலத் தலைமுறையை உலகிற்கு அறிமுகம் செய்துவிட்டோம் என்ற கர்வத்தில் பெண்களுக்கு அழகு கூடுமாம்.

எதையும் சமாளிப்பார்கள்:

பெண்கள் எத்தகைய பிரச்சினைகளையும் சமாளிக்கும் திறன் படைத்தவர்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவது குறைவுதான் என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்

தீர்க்கதரிசனம் அதிகம்:

பெண்கள் ஆலோசனை சொல்வதில் சிறந்தவர்கள். அவர்கள் எதையும் தீர்க்கதரிசனத்துடன் அணுகுவார்கள். அதனால்தான் பெண்புத்தி பின்புத்தி என்ற பழமொழியே உருவானது. ஆனால் இந்த பழமொழியை சில தவறாக சொல்லி வருகின்றனர். எதையும் லாஜிக் ஆக யோசிப்பதில் பெண்கள் கில்லாடிகளாம்.

பெண்கள் சுகாதாரமானவர்கள்:

ஆண்களை விட பெண்கள் சுகாதாரமானவர்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் ஆண்கள் பணிபுரியும் இடத்தில் பத்து முதல் இருபது சதவிகித பாக்டீரியா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் பெண்கள் பணிபுரியும் சூழல் சுகாதாரமாக இருந்ததாம். தவிர அவர்கள் ஆரோக்கியமான உணவையே உட்கொள்கின்றனர். அதனால்தான் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஆண்களை விட அதிகமாக உள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.

சிறுநீரகங்களுக்கு ஓய்வ‌ளி‌க்கா‌தீ‌ர்க‌ள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:00 PM | Best Blogger Tips
சிறுநீரகங்களுக்கு ஓய்வ‌ளி‌க்கா‌தீ‌ர்க‌ள்! 
 
 உட‌லி‌ன் ‌மிக மு‌க்‌கியமான பாக‌ங்க‌ளி‌ல் ‌சிறு‌நீரக‌ங்களு‌ம் ஒ‌ன்று. உட‌லி‌ல் வ‌யி‌ற்‌றி‌ன் அடி‌ப்பகு‌தி‌யி‌ல் அவரை ‌விதை வடிவ‌த்‌தி‌ல், ‌சி‌றிதாக இரு‌ப்பதுதா‌ன் ‌சிறு‌நீரக‌ம. இதனை ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் ‌கி‌ட்‌னி எ‌ன்‌கிறோ‌ம்.

இடுப்புக்கு மேலே விலா எலும்புக் கூண்டுக்குள் இரு பக்கமும் இருப்பதுதான் சிறுநீரகம். ஒரு ம‌னித‌ ‌சிறு‌‌நீரக‌த்‌தி‌ன் சராச‌ரி எடை 150 கிராம். 12 செ.மீ. நீளம் 5 செ.மீ. அகலம் கொ‌ண்டதாக ஒ‌வ்வொரு ‌சிறு‌‌நீரகமு‌ம் இரு‌க்கு‌ம். . சிறுநீரகத்தைப் பொருத்தவரை அதன் அளவு‌ம் ‌மிகவு‌ம் மு‌க்‌கியமாக‌க் கருத‌ப்படு‌கிறது. ஏதாவதொரு காரணத்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும் நிலையில்தான் அதன் அளவும் குறையவோ அல்லது கூடவோ செய்கிறது.
‌‌
சிறு‌நீரக‌த்‌தி‌ன் செய‌ல்களை எ‌ண்‌ணி‌ப் பா‌ர்‌த்தோமானா‌ல் நம‌க்கு இறைவ‌னி‌ன் ‌மீது ‌நி‌ச்சய‌ம் ஒரு ம‌தி‌ப்பு வரு‌ம். அ‌ந்த அள‌வி‌ற்கு ‌சிறு‌நீரக‌த்‌தி‌ன் ப‌ணி அமை‌ந்து‌ள்ளது.
உட‌லி‌ல் ப‌ல்வேறு நடவடி‌க்கைகளை கவ‌னி‌க்‌கிறது இ‌ந்த ‌சிறு‌நீரக‌ங்க‌ள். பொதுவாக ஒரு ம‌னிதனு‌க்கு இர‌ண்டு ‌‌சிறு‌நீரக‌ங்க‌ள் இரு‌க்கு‌ம். ஆனா‌ல் ஒரு ம‌னித‌ன் வாழ ஒரு ‌சிறு‌நீரகமே போதுமானதாக‌க் கருத‌ப்படு‌கிறது.

உட‌லி‌ல் உ‌ள்ள ர‌த்த‌த்தை வ‌டிக‌ட்டி அ‌தி‌ல் உ‌ள்ள க‌ழிவுகளை ‌சிறு‌நீராக வெ‌ளியே‌ற்று‌கிறது. உடல‌க்கு‌த் தேவையான ‌நீ‌ர்‌ச்ச‌த்து சம அள‌வி‌ல் இரு‌க்கவு‌ம் உதவு‌கிறது. ர‌த்த அழு‌த்த‌த்தை‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் வை‌க்‌கிறது. உட‌லி‌ல் அ‌மில - கார‌த் த‌ன்மையை சம‌நிலை‌யி‌ல் வை‌க்‌கிறது.

இதும‌ட்டும‌ல்‌ல், உட‌லி‌ல் ‌சிவ‌ப்பணு‌க்க‌ள் உ‌ற்ப‌த்‌தி‌க்கு‌ம் உத‌வி செ‌ய்‌கிறது. அதாவது, உட‌லி‌ல் ‌சிவ‌ப்பணு‌க்க‌ள் உ‌ற்ப‌த்‌தி‌க்கு உதவு‌ம் எ‌த்தோபா‌ய்‌ட்டி‌ன் எ‌ன்ற ஹா‌ர்மோனை ‌சிறு‌நீர‌க‌ம் சுர‌க்‌கிறது. இ‌ந்த ஹா‌ர்மோ‌ன் சுர‌ப்‌பி‌ல் குறை ஏ‌ற்படு‌ம் போதுதா‌ன் ர‌த்த சோகை எ‌ன்ற ‌வியா‌தி ஏ‌ற்படு‌கிறது.

இ‌ப்படி ‌சிறு‌நீரக‌த்‌தி‌ன் ப‌ணிகளை அடு‌க்‌கி‌க்‌ கொ‌ண்டே போகலா‌ம். இவை ம‌ட்டு‌ம் வேலை செ‌ய்யாம‌ல் போனா‌ல் உட‌ல்‌நிலை எ‌‌வ்வாறு பா‌தி‌க்கு‌ம் எ‌ன்பதை வா‌ர்‌த்தைகளா‌ல் ‌விவ‌ரி‌க்க முடியாது.

ர‌த்த‌ம் சு‌த்‌திக‌ரி‌க்க‌ப்படாம‌ல் அ‌ப்படியே உட‌ல் முழுவது‌ம் பரவு‌ம். ர‌த்த‌த்‌தி‌ல் தேவைய‌ற்ற உ‌ப்பு, தாது‌ப் பொரு‌ட்க‌ள் த‌ங்‌கி‌விடு‌ம். இதனா‌ல் கை, கா‌ல்க‌‌ளி‌ல் ‌வீ‌க்க‌ம் ஏ‌ற்படு‌ம். ர‌த்த ‌சிவ‌ப்பணு‌க்க‌ளி‌ன் உ‌ற்ப‌த்‌தி பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு ர‌த்த சோகை ஏ‌ற்படு‌ம். இ‌ந்த ‌நிலை தொட‌ர்‌ந்து ‌நீடி‌த்தா‌ல் உட‌ல் சம‌ச்‌சீ‌ர் ‌நிலையை இழ‌ந்து மரண‌ம் ஏ‌ற்படு‌ம்.

இ‌ப்படி நாளெ‌ல்லா‌ம் நம‌க்காக பாடுபடு‌ம் ‌சிறு‌நீரக‌ம் ‌சீராக செய‌ல்பட வே‌ண்டு‌ம் எ‌னி‌ல் நா‌ம் செ‌ய்ய வே‌ண்டியது எ‌ன்ன? ‌தினமு‌ம் உடலு‌க்கு‌த் தேவையான ‌நீரை அரு‌ந்‌தி வர வ‌ே‌ண்டு‌ம். உடலு‌க்கு‌த் தேவையான ‌நீரை நா‌ம் அரு‌ந்து‌ம் போது ‌சிறு‌நீரக‌த்‌தி‌ன் வேலை எ‌ளிதா‌கிறது. ‌‌தினமு‌ம் உடலு‌க்கு‌த் தேவையான அளவு‌க்கு‌க் குறைவாக ‌நீ‌ர் அரு‌ந்துவதாலோ, நீ‌ர் அரு‌ந்தாம‌ல்‌ இரு‌ப்பதாலோ ‌சிறு‌நீரக‌த்‌தி‌ற்கு ஓ‌ய்வு அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ண்‌ணினா‌ல் அது ‌‌விரை‌வி‌ல் நிர‌ந்தர ஓ‌ய்வை எடு‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள்.