பூ+அரசு = பூவரசு: பூக்கும் மரங்களின் அரசு..!

மணக்கால் அய்யம்பேட்டை | 4:40 PM | Best Blogger Tips
பூக்கும் மரங்களில் அரசன் பூவரசு! எத்தகைய நிலத்திலும் வளரும் உயர் மருத்துவக் குணங்கள்கொண்ட மரம் இது. இதய வடிவத்தில்
இலை, நீண்டக் காம்பு, மஞ்சள் நிறப் பூக்களைக்கொண்ட பூவரசு மரத்தின் அனைத்துப் பாகங்களும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் குணம்கொண்டவை. இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசுகிறார் சித்த மருத்துவர் வி.கணபதி.

இலை:

சிறுசிறு விஷ வண்டுகளை வீட்டுக்குள் வரவிடாமல் தடுக்கும் இயல்பு இதற்கு உண்டு. இதனால், கிராமப்புறங்களில், வீட்டு முற்றத்தில் வண்ணக் கோலமிட்டு, பூவரசு இலையில், பசுவின் சாணத்தை வைத்து, அதன் மேல் பூசணிப் பூ அல்லது பூவரசு மரத்தின் பூவினை வைப்பார்கள். பனை ஓலைக் கொழுக்கட்டைக்கு அடுத்தப்படியாக கிராமங்களில் பூவரசு இலையில் கொழுக்கட்டை செய்வதும் இன்று வரை வழக்கில் உள்ளது. எவ்வளவு சூடு செய்தாலும் இதன் நிறம் கொழுக்கட்டையில் கலக்காது. மேலும், பூவரசு இலையில் இருக்கிற குளோரோஃபில் என்கிற பசுங்கனிகம் உடலுக்குக் குளிர்ச்சியை அளிப்பதோடு, நோய் எதிர்ப்புத்தன்மையையும் கூடுதலாக்கும். இதில் நிறைந்திருக்கிற லியூப்னோன், லியூப்யோல், அல்கேன்ஸ் போன்ற வேதிப் பொருட்கள் தீமை செய்யும் பாக்டீரியாக்களைக் கொல்லும் தன்மைகொண்டவை. இதில் உள்ள பாப்யுல் மீத்தேன் மற்றும் ஹெர்பசெடின் போன்ற வேதிப் பொருட்கள் கருப்பையைப் பலப்படுத்தும் டானிக்குகளில் பயன்படுத்தப்படுகின்றன.

வீக்கமும் வலியும் நீங்க...

பூவரசு இலையை நன்கு இடித்துத் துவையலாக மசித்து, பின் சூடுசெய்து துணியில் பொட்டலமாகக் கட்டிவைத்துக்கொள்ள வேண்டும். உடலில் அடிபட்டு வீக்கமான இடங்களில் இந்தப் பொட்டலத்தால் ஒத்தடம் கொடுக்க, வீக்கமும் வலியும் ஒருசேரக் குறையும். மூட்டு வலியினால் நீர்க்கோத்துக் காணப்படும் வீக்கமும் சரியாகும். காய்ந்த பழுப்பு இலையுடன், தேங்காய் எண்ணெய் சேர்த்து அரைத்து சரும நோய்களுக்கு வெளிப் பூச்சாகப் பூசலாம். பழுப்பு இலையைத் தீயில் கருக்கி சாம்பலாக்கி, அதனைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து தேய்த்தால், சரும அரிப்பு, கரப்பான் உள்ளிட்டவை குணமாகும்.

பட்டை:

பூவரசு மரக் கட்டைகளால் செய்யப்பட்ட கட்டிலைப் பயன்படுத்துவதால், உடலின் உஷ்ணம் குறையும். பூவரசுப் பட்டையை சிறு சிறு துண்டுகளாக்கி நீரில் இட்டுக் காய்ச்சி தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வடிகட்டிய தண்ணீருடன் தேங்காய் எண்ணெய் கலந்து மீண்டும் காய்ச்சி எடுத்துக்கொண்டு சரும வெடிப்பு மற்றும் கரும்படை உள்ள பகுதிகளில் தேய்த்து வந்தால், விரைவில் நல்ல குணமாகும். பட்டையை எரித்துச் சாம்பலாக்கித் தேங்காய் எண்ணெயுடன் கலந்தும் சரும நோய்க்குப் பயன்படுத்தலாம். உடலில் உள்ள வெண் புள்ளிகள் மறைவதற்கு, பூவரசு மரத்தின் உள் பட்டையை நீர் விடாமல் இடித்துச் சாறெடுத்து தடவிவர வேண்டும். சரும வெடிப்புப் பிரச்னைக்கும் இது நல் மருந்து. வயிற்றுக் கழிச்சலுக்கு பட்டைக் கஷாயம் கை கொடுக்கும்.

காய்:

இதன் காயை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து சிரங்கு, கால் சேற்றுப்புண் இவற்றுக்கு வெளிப்புறமாகப் பூச நல்ல குணம் கிட்டும். காயை இடித்துச் சாறு எடுத்து, சருமத்தில் தடவிவந்தால் தேமல் மறையும். தலை முடி மற்றும் மீசை, புருவத்தில் வரும் 'புழு வெட்டு’ப் பிரச்னைக்குப் பூவரசுக் காயை இடித்து அதனுடன் உப்பு சேர்த்து அரைத்துப் பூசலாம். பூவரசுக் காயில் உள்ள தெஸ்பெசின் என்ற வேதிப்பொருளுக்கு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் அதிகம். மேலும் வைரஸ் தொற்றைத் தடுக்கும் தன்மையும் இந்தக் காய்க்கு உண்டு.

பூ:

அழகிய மஞ்சள் நிறத்திலான பூவரசம் பூவை அரைத்தெடுத்து சருமத்தில் பூசிவர, தோல் வெடிப்பு நீங்கி சருமம் பளபளக்கும். பூவோடு விளக்கெண்ணெய் சேர்த்து அரைத்து, பித்த வெடிப்பு, ஆசனவாய் வெடிப்பு, மூலநோய் இவற்றுக்கு வெளிப்புறமாகத் தடவிவர விரைவில் குணமாகும். கிராமப்புறங்களில் கருப்பைப் பிணிகளைச் சரிப்படுத்தவும் கரு உற்பத்திக்கும் (குழந்தைப் பேற்றுக்கும்) இதன் பூவைக் காலையில் வெறும் வயிற்றில் துவையலாக அரைத்து சாப்பிடுகிறார்கள். பூவரசு பூ - இலையை நன்றாக அரைத்து, மோரில் கலந்து பெண்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் குடிக்கக் கொடுப்பார்கள். காரணம், பூ மற்றும் இலையில் உள்ள ரசாயனப் பொருட்கள் (தெஸ்பிசின், லூப்பினால், கிளைக்கோசைட்ஸ்) கருப்பையைப் பலப்படுத்தி, கரு முட்டை உற்பத்தியைத் தூண்டும்.

கசப்புச் சுவையும் துவர்ப்புச் சுவையும் உடைய பூவரசு இலை, காய், பூவானது கால்நடைகளின் வயிற்றுக் கிருமி உள்ளிட்ட பல்வேறு வகையான 'கால்நடை நோய்’களைக் கட்டுப்படுத்துவதிலும் (Ethnoveterinary medicine) முக்கியப் பங்கு வகிக்கிறது.

32 பற்களுக்கு நடுவே நாக்கு இருந்தாற்போல் ஜாக்கிரதையாக இருந்தேன்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:46 PM | Best Blogger Tips
எதிரிக் கூடாரத்திலிருந்து இராமனிடம் தஞ்சம் புகுந்த விபீஷணனிடம் ஜாம்பவான் கேட்டார், இவ்வளவு தீயவர்கள் நடுவே நீ மட்டும் எப்படி நல்லவனாக இருக்க முடியும்..?

அதற்கு விபீஷணன் சொன்னார்,''32 பற்களுக்கு நடுவே நாக்கு இருந்தாற்போல் ஜாக்கிரதையாக இருந்தேன்.'' 32 பற்கள் நடுவே நாக்கு இருப்பது போலத்தான் வாழ்க்கை.

அந்தப் பற்கள் நம்மைக் கடிக்காமல் இருப்பது நம் வசம் உள்ளது.பற்களையும் மீறி நாக்கு வெளியே வந்து தேவையான ஐஸ் க்ரீம் சாப்பிடுவது போல நம் சூழலின் நிர்பந்தங்களை மீறி நாம் வெளியே வந்து நமக்குத் தேவையான மகிழ்ச்சிகளை அனுபவிக்கும் சாத்தியம் உண்டு...!
Like here first -->> @[433124750055265:274:இன்று ஒரு தகவல். Today A Message.]

திருமணத்தன்று கருவளையம் இல்லாமலிருக்க சில டிப்ஸ்...

மணக்கால் அய்யம்பேட்டை | 2:39 PM | Best Blogger Tips
திருமணம் என்று சொன்னதுமே முகத்தில் ஒருவித கல்யாணக் களை வந்துவிடும். அந்த நேரம் அனைவருமே நன்கு அழகாக இருக்க வேண்டுமென்று சருமத்தில் அதிக கவனம் சொலுத்தி, அதனை சரியாக பராமரிப்போம். அதற்காக நிறைய ஃபேஸ் பேக் போடுவது, அதிகமான அளவு பழங்களை சாப்பிடுவது, உடலை குறைக்கவும், சருமம் பொலிவாகவும் க்ரீன் டீ குடிப்பது என்றெல்லாம் செய்வோம். இருப்பினும் திருமணத்தன்று மட்டும் சிலருக்கு கண்களைச் சுற்றி கருவளையம் இருக்கும்.

மேலும் இந்த கருவளையத்தை என்ன செய்தாலும் போகாமல் இருக்கும். எனவே திருமணத்தன்று இந்த மாதிரியான கருவளையம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை படித்து தெரிந்து கொண்டு, அவற்றை பின்பற்றுவதோடு, அளவுக்கு அதிகமான தண்ணீரைக் குடித்தாலும், உடலில் இரத்த ஓட்டம் சீராகி, கண்களும் நன்கு பொலிவோடு காணப்படும்.

தூக்கம்

நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தாலே, தம்பதிகளுக்கு இருக்கும் குஷியில், இரவு முழுவதும் சாட்டிங் செய்வதால், தூக்கமே வராது தான். இருப்பினும் அவ்வாறு சரியாக தூங்காமல் இருந்தால், அது உடலையும், உடல் அழகையும் பாதிக்கும். அதற்காக இரவில் தூங்காமல் இருந்து, பகலில் தூங்கிக் கொண்டால் எதுவும் ஏற்படாது என்று நினைக்க வேண்டாம். ஏனெனில் இரவில் சரியான நேரத்தில் தூங்கினால் தான், கண்களில் கருவளையம் ஏற்படாமல் இருக்கும்.

வெள்ளரிக்காய்

நிறைய பெண்கள் கருவளையம் வராமலிருக்க கண்களுக்கு வெள்ளரிக்காயை வைப்பார்கள். ஏனெனில் வெள்ளரிக்காயை வைத்தால், கண்கள் நன்கு புத்துணர்ச்சியுடனும், பளிச்சென்று ப்ளீச்சிங் செய்தது போன்றும் இருக்கும். ஆகவே திருமண நாளன்று ஒரு 20 நிமிடம் வெள்ளரிக்காய் துண்டுகளை கண்களுக்கு வைத்தால், கருவளையம் போய்விடும். வேண்டுமெனில் வெள்ளரிக்காய்க்கு பதிலாக உருளைக்கிழங்கை பயன்படுத்தலாம்.

டீ பேக்

திருமணத்திற்கு சிறிது நாட்களுக்கு முன்னர், கண்களில் உள்ள கருவளையத்தை போக்க வேண்டுமா? அப்படியெனில் டீ பேக்கை குளிர்ந்த நீரில் ஊற வைத்து, பின் அதனை பிளிந்து, அந்த டீ பேக்கை கண்களின் மீது 10 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை செய்து வந்தால், கண்களில் உள்ள கருவளையம் எளிதில் நீங்கிவிடும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சையின் சாற்றை வைத்து, கண்களைச் சுற்றி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். வேண்டுமெனில் அத்துடன் சிறிது தக்காளி சாற்றையும் கலந்து செய்யலாம். அதிலும் இதனை ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வந்தால், கருவளையம் போய்விடும். கண்களும் நன்கு சற்று கொலுகொலுவென காணப்படும்.

ஊட்டச்சத்துள்ள உணவுகள்

உடலில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டாலும், கருவளையம் வரும். ஆகவே அதற்கு பசலைக் கீரை, முட்டைகோஸ், கேரட், தக்காளி போன்றவற்றை சற்று அதிகம் சாப்பிட வேண்டும்.
வேறு என்னவெல்லாம் செய்தால் கருவளையம் நீங்கும் என்று உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

பனிக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி வேணுமா? இதை சாப்பிடுங்க!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:37 PM | Best Blogger Tips
பனிக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி வேணுமா? இதை சாப்பிடுங்க!

மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் நோய்கள் அதிகம் தாக்கும். எனவே நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சத்தான உணவுகளை உட்கொண்டால் நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். இயற்கையானது சீசனுக்கு தகுந்த காய்கறிகளையும் பழங்களையும் விளைவிப்பது மனிதர்களுக்காகத்தான். இந்த பனிக்காலத்திற்கு ஏற்ற சில காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

சத்தான சர்க்கரை வள்ளிக்கிழங்கு

இனிப்பு நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு இந்த சீசனில் அதிகம் கிடைக்கும். இதில் உயர்தர வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன் ஆகியவை உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு சரும வறட்சியை தடுத்து சருமத்தை பளபளப்பாக்கும். இதில் அதிக அளவு பொட்டாசியம் காணப்படுகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாதாரணமாக வேகவைத்து சாப்பிடலாம். சூப் அல்லது பொரியல் செய்து சாப்பிடலாம்.

நார்ச்சத்தான காலிஃப்ளவர்

குறைந்த கலோரிகளைக் கொண்ட காலிஃப்ளவரில் வைட்டமின் சி, கே சத்துக்கள் காணப்படுகின்றன. இதில் நார்ச்சத்து, போலேட், பொட்டாசியம் அடங்கியுள்ளது. இது நோய் வரும் முன் தடுக்கும் காய்கறியாகும். காலிப்ஃவர் கூட்டு, பொரியல், மஞ்சூரியன் செய்து சாப்பிலாம்.

நோய் எதிர்ப்புக்கு டர்னிப்

வைட்டமின் சி சத்தும் பொட்டாசியமும் அடங்கிய டர்னிப் கிழங்கு சுவையானதோடு சத்தான காய்கறியாகும். இது கிழங்கு வகை காயாக இருந்தாலும் குறைந்த அளவு மட்டுமே கார்போஹைட்ரேட் உள்ளது. உருளைக்கிழங்கிற்கு பதிலாக டர்னிப்பை சாப்பிடலாம். சாம்பார், கூட்டு வைத்து சாப்பிடலாம்.

கால்சியம் சத்தான வெங்காயத்தாள்

உணவில் சுவை கூட்ட உதவும் வெங்காயத்தாள் அதிக சத்து நிறைந்தது. இதில் கால்சியம், பொட்டாசியம், போலிக் அமிலம் காணப்படுகிறது. இதயநோய், புரஸ்டேட் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. காய்கறி சூப், முட்டை ஆம்லெட் போன்றவற்றுடன் மிக்ஸ் செய்து சாப்பிடலாம். வாசனையோடு சத்துக்களும் எளிதில் சேறும்.

பீர்க்கங்காய் உடல்நல நன்மைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:37 PM | Best Blogger Tips

• பீர்க்கங்கா யில், நிறைவு கொழுப்பு மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளது. நார்ச்சத்து உணவு, வைட்டமின் சி, ரிபோப்லாவின், துத்தநாகம், தயாமின், இரும்பு, மக்னீசியம் மற்றும் மாங்கனீசு அதிகமா உள்ளது.

• இரத்தம் சுத்தப்படும் பண்புகள் உள்ளது.

• இது இன்சுலின் போன்ற புரதக்கூறுகளுடன், ஆல்கலாய்டுகள் மற்றும் சரந்தின் கொண்டுள்ளது, இது அனைத்தும் அதிகரிக்கும் இரத்த இன்சுலின் அளவுகளை அதிகரிக்காவும், ரத்தம் மற்றும் சிறுநீரில் சர்க்கரை அளவுகளை குறைக்க ஒன்றாக செயல்படுகிறது.

• இதில் உயர் பீட்டா கரோட்டின் உள்ளது, அது கண்களை நல்லது.

• பீர்க்கங்காய் வயிற்றுக்கு நல்லது, அதில் ஸெல்யுலோஸ் இருப்பதால் மலச்சிக்கலை தவிர்க்க உதவும்.

• குடிப்தால் ஏற்படும் கல்லீரல் பதிப்பை தூய்மைப்படுத்துவதற்கு, மீட்டெடுக்க மற்றும் உணவூட்டுக்கு உதவுகிறது.

• இது உடல் எடை குறைக்க உதவுகிறது.

• இது படை, தடிப்பு தோல் அழற்சிக்கு எதிராக தோல் பராமரிப்பு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.

• மூல வியாதி குணப்படுத்தும்.

• காலையில் பீர்க்கங்காய் சாறு ஒரு க்லாஸ் குடிப்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் எந்த வித நோய் தோற்றி ஏற்படாமல் பாதுகாக்கும்.

பெண்கள் அணியும் ஆபரணமும் அவற்றின் சிறப்பும்?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:33 PM | Best Blogger Tips

கோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு,மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆகிய அணிகலன்கள் அணிவித்தால் தான் அலங்காரம் முழுமையடையும். பெண்களை அம்மனின் அம்சமாக கூறுகின்றனர். எனவே தான் பெண்கள் அணியும் கீழ்கண்ட அணிகலன்களுக்கும் சில காரணங்கள் கூறப்படுகிறது.

1. தாலி - தாயாகி, தாலாட்டுப்பாட கணவன் த
ரும் பரிசு சின்னம்.
2. தோடு - எதையும் காதோடு போட்டுக் கொள். வெளியில் சொல்லாதே !
3. மூக்குத்தி - மூக்கு தான் முதலில் சமையலை அறியும் உத்தி என்பதை உணர்த்துகிறது.
4. வளையல் - கணவன் உன்னை வளைய, வளைய வர வேண்டும், என்பதற்காக,
5. ஒட்டியாணம் - கணவன், மனைவி இருவரும் ஈருடல் ஓருயிராய் ஒட்டியானோம் என்பதற்காக!
6. மோதிரம் எதிலும் உன் கைத்திறன் காண்பிக்க.

இவை தவிர.. நகைகள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்காக உருவானவை, அதிகமாகன ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் இந்த வெப்பத்தை குறைத்து,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் ஏற்றது. அத்துடன் தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. இவ்வாறு அணிவதன் சிறப்பு..

கொலுசு: பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். இதற்கு காரணம் தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை. அத்துடன் வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.

மெட்டி: மெட்டி என்பது திருமணமான பெண்கள் மட்டும் அணியும் ஆபரணம். பெண்களது கருப்பைக்கான முக்கிய நரம்புகள் கால் விரல்களிலேயே இருக்கிறது.வெள்ளியில் இருக்கும் ஒருவித காந்த சக்தி கால் நரம்புகளில் ஊடுருவி நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது. மெட்டியும் கட்டாயம் வெள்ளியில் தான் அணிய வேண்டும்.

மோதிரம்: விரல்களில் அணியப்படும் மோதிரம் டென்ஷன் குறைக்கவும், இனிமையான பேச்சு திறன், அழகான குரல் வளத்திற்கு உதவுகிறது. அதிலும் மோதிர விரலில் அணியப்படுவதன் முக்கிய காரணம் ஆண் பெண் இனவிருத்தி உறுப்புகளை ஸ்திரப்படுத்தவும் பாலுணர்வுக்கும் உதவுகிறது. விரல்களில் மோதிரம் அணிவதால் இதயக் கோளாறுகள் மற்றும் வயிறு கோளாறுகள் நீங்கவும் உதவுகிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக்கூடாது.

மூக்குத்தி: மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம் இன்றும் கூட பேஷன் உலகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. பருவப் பெண்களுக்கு மண்டை ஓட்டுப் பகுதியில் சில வாயுக்கள் காணப்படுகிறது. இந்த வாயுக்களை உடலில் இருந்து அகற்றுவதற்கு தான், மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது. இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும். காற்றை வெளியேற்றுவதில் ஆண்களுக்கு வலப்புறமும் பெண்களுக்கு இடப்புறமும் பலமான வலுவான பகுதிகளாகும். வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி. சாஸ்திரப்படி பெண்கள் இடப்புறம் அணிய வேண்டும். இடப்புறம் அணிவதால் சிந்தனை சக்தி,மனம் ஒரு நிலைப்படுத்தபடுகிறது.

காதணி: தோடு என்பது காதில் அணியும் ஆபரணம் பெண்களால் அனைவரும் அணியும் இந்த ஆபரணத்தை ஆண்களும் அணிவார்கள். காது குத்துதல் என்பது சமூகத்தில் ஒரு முக்கிய சடங்காகவே கொண்டாடப்படுகிறது. காதில் துவாரமிட்டு காதணி அணிவதன் முக்கிய நோக்கம் கண் பார்வையை வலுப்படுத்தவே ஆகும்.
— with ஜோதிடகலை ஜோதிட பயிற்சி.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள் என்ன?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:22 PM | Best Blogger Tips

1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது
... எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால், தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.... பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துகிறது....

2. உடலின் pH ஐ சீராக்குகிறது...
எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது... ஆயினும், சமிபாட்டு செயன்முறையால், அது மூலச்சேர்க்கையாக மாறி, உடலின் அமிலத்தன்மையை நீக்குகிறது....

3. உடல் எடையைக் குறைக்கிறது...
எலுமிச்சையில் உள்ள பெக்டின் நார்ப்பொருள் பசியைக் குறைக்கிறது. மூலத்தன்மையுள்ள உணவுகளை அதிகம் உண்பவர்கள் மெலிவான உடல்வாகை கொண்டிருப்பது நிருபணமான உண்மை...

4. சமிபாட்டை வேகப்படுத்துகிறது...

5. சிறுநீர்த் தொகுதியைச் சுத்திகரிக்கிறது.

6. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது...

7. வாய்த்துற்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது..

8. நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது.

9. stress ஐ குறைக்கிறது
இது விட்டமின் சீ காரணமாய் இருக்கலாம் என்பது தியறி... ஆனால் நிருபிக்கப்படவில்லை...

10. காலையில் டீ அல்லது கோப்பி குடிக்கும் கெட்ட பழக்கத்தை நீக்குகிறது.

இனிப்பு சுவையுள்ள பிளம்ஸ் பழங்கள் உடல்நல நன்மைகள்:-

மணக்கால் அய்யம்பேட்டை | 2:22 PM | Best Blogger Tips
மிகுந்த இனிப்பு சுவையுள்ள பிளம்ஸ் பழங்கள் கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி, பள்ளங்கி, வடகவுஞ்சி, பெருமாள்மலை, செண்பகனூர் உள்பட பல்வேறு கிராம பகுதிகளில் விரைகின்றன.

பல்வேறு சுவைகளில் பல்வேறு பெயர்களில் இப்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பிளம்ஸ் பழ விளைச்சல் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் ஜூலை மாத வரை நடைபெறும்.சீசன் சமயத்திலேயே இப்பழங்களின் விளைச்சல் இருப்பதால் விவசாயிகள் இவற்றினை விரும்பி பயிரிடுகின்றனர். தற்போது முதல் தர பிளம்ஸ் பழங்கள் கிலோ 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.

பிளம்ஸ் பழத்தின் நன்மைகள் !!

சிவப்பு நிறப் பழங்கள். இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை. ஆப்பிள், பிளம்ஸ், செவ்வாழை, மாதுளம்பழம், இலந்தை, செர்ரி, போன்றவை சிவப்பு நிறப் பழங்களில் அடங்கும். • வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்தபழங்கள்.

இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. • இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது.

சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும். • மனம் அழுத்தத்தைப் போக்கும் டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.

கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்துகிறது. இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த சிவப்பு நிறப் பழங்கள் விளங்குகின்றன.

வாழையிலை..!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:20 PM | Best Blogger Tips

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.

3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.

4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.

6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.

7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.

தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் அதுவும் எங்க கொங்கு மண்ணில் தலை வாழை இலையுடன் தான் விருந்தே நடக்கும். அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். நான் வார இறுதிநாட்களில் எங்க ஊரில் தான் இருப்பேன். ஊரில் இருக்கும் நாட்களில் மதிய உணவு நிச்சயம் தலை வாழை இலையில் தான் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.

வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.
<<<<நலமுடன் வாழ>>>>

via தமிழால் இணைவோம்

உலக எய்ட்ஸ் தினம்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:18 PM | Best Blogger Tips
இன்று உலக எய்ட்ஸ் தினம் ! வருமுன் காப்போம் ! எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஆய்வு !

ஒவ்வொரு வருட டிசம்பர் ஒன்றாம் தேதி “உலக எய்ட்ஸ் தினம்” ஆக கடைபிடிக்கப்படுகிறத
ு.

எய்ட்ஸ்க்கு சிகிச்சை உண்டா? இல்லையா?

தடுப்பு மருந்து இல்லை
குணப்படுத்த மருந்து கிடையாது
முடிவு மரணமே!

மருந்து உண்டு என்ற போலி விளம்பரத்தால் சொத்தை அழிக்காதீர்கள் ஆனால் நோய்யைக் கட்டுப்படுத்தலாம்.... 20 -ஆம் நூற்றாண்டில் எய்ட்ஸ் பற்றி தெரியாதவர்களே இல்லை என்று கூறலாம். சின்ன குழந்தை கூட எய்ட்ஸ் என்ற வார்த்தையை கற்று வைக்கும் அளவிற்கு இன்று உலகம் முழுவதும் பிரபலமாகி இருக்கிறது. பத்திரிக்கைகள், டி.வி, சினிமா, அரசாங்க அலுவலகங்களில், நடைபாதையில் எங்கு பார்த்தாலும் எய்ட்ஸ் பற்றிய விளம்பரங்களை நாம் பார்க்கலாம். அந்த அளவிற்கு இந்த உலகையே ஆட்டி படைக்கும் பேயாக இந்த எய்ட்ஸ் விளங்குகிறது. எய்ட்ஸ் என்றால் என்ன என்பது தெரியவில்லை என்பது வருந்தத்தக்க விசியமாகும். எய்ட்ஸ் பிரச்சனைக்குரிய , உயிரை குடிகக்கூடிய நோய் என்று எல்லோரும் தெரிந்து இருக்கிறார்கள். ஆனால் , அந்நோய் எவ்வாறு ஒருவரை தாக்கும் என்பதில் அதிக விழிப்புணர்வு அற்று இருக்கிறார்கள்.

எய்ட்ஸ் என்றால் என்ன?

பல்வேறு நோய்கள் தாக்கப்பட்ட ஒருவருக்கு, அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியிருப்பதை மருத்துவ பரிசோதனை உறுதி செய்யும் பரிதாபகரமான நிலைதான் எய்ட்ஸ்.
எச்.ஐ.வி எனும் வைரசால்தான் எய்ட்ஸ் ஏற்படுகிறது. இது மனிதர்களின் இயற்கையான நோய் எதிர்ப்புத் தன்மையில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஒருவர் எச்.ஐ.வி யுடன் பல ஆண்டுகாலம் வாழ முடியும். ஆனால், அவர் உடல் நோய்களை இழக்கும் தன்மையைப் பெறும் போதுதான் எய்ட்ஸ் நோயாளியாகிறார். ஓர் ஆண்டுக்குள் அவருக்கு ஏராளமான நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொற்றிக் கொள்ளும் நிலை அவருக்கு ஏற்படுகிறது.

எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

எய்ட்சால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எச்.ஐ.வி இருக்கும். எச்.ஐ.வி தாக்கப்பட்ட அனைவரும் எய்ட்ஸ் நோயாளி என்று கூறிவிட முடியாது. ஆனால், எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் அனைவரும் எய்ட்ஸ் நோயாளியாக மாறுகிறார்கள்.எச்.ஐ.வி பாதுகாப்பற்ற உடலுறவு, பரிசோதனை செய்யப்படாத ரத்தம் மற்றும் எய்ட்ஸ் நோயாளி தாயிடமிருந்து குழந்தைகளுக்கு ஆகிய மூன்று முக்கிய வழிகளில் எய்ட்ஸ் தற்போது பரவிவருகிறது.

எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டவர் 3 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டு வரை அந்நோய்க்கான அறிகுறிகள் பற்றி தெரியாமலேயே வாழ்வார். அதே சமயம் அவர் எய்ட்ஸ் நோய்க்குரிய அறிகுறிகள் தென்படும்போதுதான் அவருக்குள் மறைந்திருந்த ஆபத்தை உணர முடியும்.

யாருக்கு எய்ட்ஸ் வரும்?

இந்தியாவிலும் உலகின் பிற இடங்களிலும் எய்ட்ஸ் ராக்கெட் வேகத்தில் பரவிவருகிறது. (இந்த நிமிடத்தில் எத்தனை பேருக்கு எச்.ஐ.வி தொற்று உள்ளது என்பதை அறிய எச்.ஐ.வி எண்ணி .)இந்தியாவில் எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்நோய் பரவி உள்ளது.

எச்.ஐ.வி தொற்று உள்ளவருடன் பாதுகாப்பற்ற உடல் உறவு கொள்வோருக்கு இந்த எச்.ஐ.வி தொற்றி விடுகிறது. 80 சதவீத எய்ட்ஸுக்கு காரணம் பாதுகாப்பற்ற உடல் உறவுதான். 25 வயதுக்குள் உள்ள இளைஞர்களுக்குத்தான் எய்ட்ஸ் அதிகமாக பரவுகிறது. அதற்கு காரணம் அந்த வயதில் அவர்கள் பாலுறவில் அதிக நாட்டமிக்கவராக இருப்பதால் பாதுகாப்பான உடல் உறவை மறந்து விடுகிறார்கள். "நீங்கள் எப்படி பட்டவராக இருந்தாலும், எங்கு வாழ்கிறவராக இருந்தாலும் எச்.ஐ.வி தொற்று பற்றிய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்' என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் மற்றும் யுனிசெப் கூட்டாக வெளியிட்டுள்ள கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்றுக்கு ஏதாவது அறிகுறி உள்ளதா?

எச்.ஐ.வி தொற்றியவுடன் எந்த அறிகுறியும் இருக்காது. அவர் மற்றவர்களைப் போலவே சாதாரணமாகவே தனது வாழ்க்கையின் கடமைகள் அத்தனையும் நிறைவேற்றிக் கொண்டிருப்பார். இந்த காலகட்டத்தில் சிறுசிறு நோய்கள் (நோய் தாக்குதல்களுக்கு ஆளாகாதோரைப் போலவே) வந்து போகும். இது எல்லோருக்கும் வரும் நோய்தானே என்பதால் எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டவருக்கு தான் இந்நோயால் தாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அறிய மாட்டார்.
எச்.ஐ.வி யால் தாக்கப்பட்டிருப்பதை ரத்தப் பரிசோதனை மூலம்தான் உறுதி செய்ய முடியும். ( சந்தேகம் உள்ளவர்களுக்கு இலவச ஆலோசனை .)

எய்ட்ஸ் எப்படி பரவுகிறது?

எய்ட்ஸ் பரவ காரணமான எச்.ஐ.வி கிருமி மூன்று வழிகளில் பரவுகிறது. என்றாலும் கூட, பாதுகாப்பற்ற உடல் உறவுதான் இன்று இந்த உலகில் ஏராளமானோருக்கு நோய்த் தொற்றை ஏற்படுத்தியிருக்கிறது.

1. பாதுகாப்பற்ற உடல் உறவு (ஆசன வாய் மற்றும் பெண் உறுப்பு வழியாக புணர்தல்).

2.பரிசோதனை செய்யப்படாத எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தை ஏற்றுவது. பயன்படுத்திய ஊசிகளை மீண்டும் பயன்படுத்தும் போது.

3.கருவுறும் முன் அல்லது கருவுற்ற நிலையில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகும் பெண்ணின் சிசுவுக்கு எச்.ஐ.வி தொற்று பரவ வாய்ப்பு.

பால்வினை நோய்கள் என்றால் என்ன?

பால்வினை நோய் தொற்றியவருடன் உடல் உறவு கொள்ளும் போது பரவுவதுதான் பால்வினை நோய்கள் (எஸ்.டி.டி). பால்வினை நோய்களில் குனோரியா எனப்படும் வெட்டை நோய், சிபிலிஸ் எனும் மேக நோய், படை உள்ளிட்ட நோய்கள்தான் அவை. இவற்றை கண்டறிந்து குணப்படுத்த முடியும்.
இந்த நோய்களை கண்டறியாமல் விடும் போது எளிதில் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகவேண்டிய நிலை ஏற்படலாம். பால்வினை நோய்கள் இனப்பெருக்க உறுப்புகளில் புண்கள் குறிப்பாக பெண்களுக்கு, ரத்தக்கசிவு உள்ள படை, தோல் கீறல்களால் எச்.ஐ.வி நுழைய கதவுகளை திறக்கின்றன.

எய்ட்ஸ் எப்படி பரவாது?

1. சாதாரணமாக சமூக பழக்கவழக்கங்களின் மூலம் பரவாது.

2.கைகுலுக்குதல், தொடுதல், கட்டியணைத்தல் மற்றும் முத்தம் மூலம் பரவாது.

3.பொதுக்கழிப்பறைகள் மற்றும் படுக்கை மற்றும் அவர்கள் பயன்படுத்திய உணவுப் பாத்திரங்கள் மூலம் பரவாது.

4.நீச்சல் குளம் மூலம் மற்றும் சலுன் கடைகள் மூலம் பரவாது.

5.ஒவ்வொரு முறையும் துய்மையாக்கப்பட்ட உபகரணங்கள் மூலம் ரத்த தானம்.

6.இருமல், தும்மல் மற்றும் கொசுக்கடி மூலம் பரவாது.

எய்ட்ஸ் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

இதுவரை எய்ட்ஸை குணமாக்க எந்த மருந்தும் கண்டறியாத போது, நாம் கவனமுடன் நடந்து கொள்வதன் மூலம்தான் அதை தடுக்க முடியும். பொறுப்புடனும் பாதுகாப்புடனும் நடந்து கொண்டால் இந்த நோயை விரட்ட முடியும்.
எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர் அதுபற்றி தெரியாமலே அந்நோயை பரப்பிக் கொண்டிருப்பதால் நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

பள்ளிகளில் எய்ட்ஸ் பற்றி பேச எல்லோராலும் முடிவதில்லை. எய்ட்ஸ் பற்றி எல்லோருடனும் பேசுங்கள். உங்களுக்கு தெரிந்தவை பற்றி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்து பேசுங்கள் (தமிழக பள்ளி மாணவர்கள் அடிக்கடி எழுப்பிய கேள்விகளின் முதல் இன்டர்நெட் தொகுப்பை பார்க்க கிளிக் செய்க.)

* எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும்.

* உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

* நீங்கள் பெற்ற தகவல்களை மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.

எச்.ஐ.வி யை விலை கொடுத்து வாங்கலாமா?

* பாதுகாப்பற்ற முறையில் ஒருவர் பலருடன் உடலுறவு கொள்தல்.

* பலருடன் உறவு கொள்பவருடன் பாதுகாப்பற்ற உடலுறவு.

* பயன்படுத்திய ஊசிகளை சுத்தப்படுத்தாமல் மீண்டும் பயன்படுத்துவது.

* பரிசோதனை செய்யாத ரத்தத்தை பெற்றுக் கொள்தல்.

பொறுப்பான உடலுறவு பழக்கங்கள்

1.திருமணத்துக்கு முன்பு உடலுறவு கொள்வதை தவிர்த்து விடுங்கள். அன்பையும் காதலையும் உணர்த்த உடலுறவு தான் ஒரே வழி அல்ல.

2.எச்.ஐ.வி தொற்று இல்லாத இருவர் உடலுறவு கொள்வதால் இருவரும் பாதுகாப்பு பெறுகின்றனர். எச்.ஐ.வி தொற்று அபாயமும் இல்லை.

3.தெரியாத புதியவருடன் உடலுறவு கொள்தல் அல்லது பாலுறவு தொழிலாளருடன் உடலுறவு கொள்ளும் ஒவ்வொரு முறையும் ஆணுறை அணிவது ஓரளவுக்கு எச்.ஐ.வி தொற்று மற்றும் பால்வினை நோய்கள் பரவாமல் பாதுகாக்கும்.

ஊசிகள்

4.ஒரு முறை பயன்படுத்தக்கூடிய ஊசிகளை பயன்படுத்த வேண்டும். பயன்படுத்திய ஊசிகளை ஸ்டெர்லைஸ் செய்ய வேண்டும்.
5.மருத்துவரால் பரிந்துரைக்காதவற்றை ஊசியால் ஏற்றிக் கொள்ளாதீர்கள்.
6.நீங்கள் எவ்வளவு பாதுகாப்பானவராக தெரிந்தாலும் கூட, நீங்கள் போட்டுக் கொண்ட ஊசியை மற்றவருக்கு அனுமதிக்காதீர்கள்.

ரத்தம்

நோயாளிக்கு ஏற்றப்படும் ரத்தம் பரிசோதிக்கப்பட்டதுதானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு தெரியுமா?

உலகில் ஒரு மணி நேரத்தில் 600 நபர்கள் எச்.ஐ.வியால் பதிக்கப்படுகிறார்கள்
உலகில் ஒரு நிமிடத்தில் ஒரு குழந்தை எய்ட்ஸ் மூலம் இறக்கிறது
கர்பிணிப் பெண்களிடமிருந்து பிறக்கப்போகும் குழந்தைக்கு எச்.ஐ.வி கிருமி பரவுவதைத் தடுக்க முடியும்:- கர்பிணிப் பெண்களிடமிருந்து பிறக்கப்போகும் குழந்தைக்கு எச்.ஐ.வி கிருமி பரவுவதைத் தடுக்க வசதி தற்பொழுது அனைத்து மருத்துவ கல்லுரி மருத்துவ மனையிலும், மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

எய்ட்ஸ் தெரிந்து கொள்ள வழி:

இரத்த பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

எய்ட்ஸ் நோய்யின் அறிகுறிகள்: எச்.ஐ.வி நுண்கிருமியால் உடல் பலமற்றதாகி விட்ட நிலையில் ஏற்படுகின்ற நோய்யின் பிரதிபலிப்பு தான் எய்ட்ஸ் ஆகும்.

தொடர்ந்து சளி, இரும்பல், காய்ச்சல் வரும்

தொடர்ந்து வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்போக்கு இருக்கும்

தோலில் தடிப்பு ஏற்படும்

எப்பொழுதும் அசதியாகவும், களைப்பாகவும் இருக்கும்

நாளடைவில் எடை குறைந்து கொண்டே போகும்

எய்ட்ஸ் வந்து விட்டால் : மனம் தளராதீர்கள்

தன்னம்பிக்ககையை வளர்த்துக் கொள்ளுங்கள் அமைதியாக வாழ பழகிக் கொள்ளுங்கள் மிகுந்த ஓய்வு எடுங்கள் சத்துள்ள கீழ் கண்ட உணவை உண்ணுங்கள்.
உடலை வளர்க்கும் உணவுகள்: பட்டாணி, மொச்சை, சோயா, வேர்கடலை, எல்ல பழங்கள், கீரை, காய்கறிகள், முட்டை, இறைச்சி, மீன், பால்.சக்தியளிக்கும் உணவுகள்: உருளைக் கிழங்கு, அரிசி, தானியம், மக்காச்சோளம், ரொட்டி, கிழங்கு, வாழைப்பழம் முதலியன

எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force)

மணக்கால் அய்யம்பேட்டை | 2:11 PM | Best Blogger Tips
எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force) என்பது இந்திய சர்வதேச எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் ஒரு படையாகும். இதுவொரு மத்திய காவல் ஆயுதப் பட
ைகளுள் ஒன்றாகும். இந்திய துணை இராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை டிசம்பர் 1 1965ல் உருவாக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதுவும் ஆகும்.

வரலாறு
=======

1965 வரை இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியை அந்தந்த மாநில ஆயுதப் படைகளே பாதுகாத்துவந்தன. 1965 ஏப்ரல் 9 குஜராத் மாநில கட்ச் பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தால் சர்தார் போஸ்ட், சார் பெட் மற்றும் பெரியா பெட் ஆகிய இந்திய வீரர்கள் தாக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்திய-பாகிஸ்தான் போர், 1965 நடந்து முடிந்தது. அதனையடுத்து இந்திய சர்வதேச எல்லைப் பகுதியை பாதுகாக்க எல்லைப் பாதுகாப்புப் படை என்ற வலிமையான படை டிசம்பர் 1, 1965 அன்று உருவாக்கப்பட்டது. இதன் முதல் தலைமை இயக்குநராக கே எஃப் ரஸ்டம்ஜி பொறுப்பேற்றார்.

பணிகள்
=======

படையின் பணிகள் பின்வருமாறு பிரிக்கப்படுகின்றன:

அமைதி நேரம்
**************
--> எல்லை பகுதிகளில் வாழும் மக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை ஊக்குவிக்கிறது.

--> எல்லை தாண்டிய குற்றங்கள், ஊடுருவல் போன்றவைகளை தடுக்கிறது.

--> கடத்தல் மற்றும் வேறு எந்த சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கிறது

--> சமீபகாலங்களில் உள்நாட்டு பாதுகாப்பிற்கும், உள்நாட்டு கிளர்ச்சியைத் தடுக்கவும் செய்கிறது.

போர் நேரம்
************

--> குறைந்த அச்சுறுத்தலுள்ள இடங்களில் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கும்.

--> முக்கிய பணியிடங்களைப் பாதுகாகும்.

--> அகதிகள் கட்டுப்பாட்டில் உதவும்.

--> குறிப்பிட்ட பகுதிகளில் எதிர்ப்பு ஊடுருவல் புரியும்.

The Border Security Force (BSF) is a border guarding force of the Government of India. Established on December 1, 1965, it is one of the Central Armed Police Forces. Its primary role is to guard India's international borders during peacetime and also prevent trans border crime. Like all paramilitary forces of India, the BSF is under the administrative control of the Ministry of Home Affairs. It is one of the many law enforcement agencies of India.
The unique BSF Camel Contingent during the annual Republic Day Parade.

With a strength of 240,000 personnel in 186 battalions, including women personnel, it is one of the world's largest border patrol forces. K F Rustomji, the BSF's first Director General is referred to as founding father of the BSF. Its current Director General is U K Bansal.

History
====

From independence in 1947 to 1965, the protection of India's international boundaries was the responsibility of local police battalions belonging to each border state, with little interstate coordination.

Formation
======

The Indo-Pakistani War of 1965 demonstrated the inadequacies of the existing border management system and led to the formation of the Border Security Force as a unified central agency with the specific mandate of guarding India's international boundaries. The BSF was the brain child of its founding father Sh KF Rustamji, the first Director General of BSF. Till 1965 India’s borders with Pakistan were manned by the State Armed Police Battalion. Pakistan attacked Sardar Post, Chhar Bet and Beria Bet on April 9, 1965 in Kutch. This exposed the inadequacy of the State Armed Police to cope with armed aggression due to which the Government of India felt the need for a specialized centrally controlled Border Security Force, which would be armed and trained to man the International Border with Pakistan. As a result of the recommendations of the Committee of Secretaries, the Border Security Force came into existence on Dec 1, 1965 with K F Rustamji was its first Director General.

The BSF's capabilities were used in the Indo-Pakistani War of 1971 against Pakistani forces in areas where the Regular Forces were thinly spread; BSF troops took part in several operations including the famous Battle of Longewala. In fact, for BSF the war on eastern front had started well before the war actually broke out in Dec '71. BSF had trained, supported and formed part of "Mukti Bahini" and had entered erstwhile East Pakistan before the actual hostilities broke out. BSF had played a very important role in Liberation of Bangladesh which Indira Gandhi and Sheikh Mujibur Rehman had also acknowledged.

The BSF, long considered a male bastion, has now deployed its first batch of women personnel at the border to carry out regular frisking of women as well as other duties performed by their male counterparts, including guarding the border. Over 100 women have been deployed on the highly volatile Indo-Pak border, while around 60 will be deployed on the Indo-Bangla border. In total, 595 women constables will be deployed on the border in different phases.

The current Director General is U K Bansal who took charge in November 2011

சிலிண்டா் பற்றி Something informative. This information is useful.......

மணக்கால் அய்யம்பேட்டை | 2:10 PM | Best Blogger Tips
Have U ever heard about LPG cylinder's expiry date....!!

Do you know that there is an expiry date (physical life) for LPG cylinders? Expired Cylinders are not safe for use and may cause accidents. In this regard, please be cautious at the time of accepting any LPG cylinder from the vendor.

Here is how we can check the expiry of LPG cylinders:
On one of three side stems of the cylinder, the expiry date is coded alpha numerically as follows A or B or C or D and some two digit number following this e.g. D06.

The alphabets stand for quarters -

1. A for March (First Qtr),
2. B for June (Second Qtr),
3. C for Sept (Third Qtr),
4. D for December (Fourth Qtr).

The digits stand for the year till it is valid. Hence D06 would mean December qtr of 2006.

Please Return Back the Cylinder that you get with a Expiry Date, they are prone to Leak and other Hazardous accidents...

The second example with D13 allows the cylinder
to be in use Up to Dec 2013.
Kindly Share this Info with everyone .

பனிக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி வேணுமா? இதை சாப்பிடுங்க!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:08 PM | Best Blogger Tips
மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் நோய்கள் அதிகம் தாக்கும். எனவே நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சத்தான உணவுகளை உட்கொண்டால் நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். இயற்கையானது சீசனுக்கு தகுந்த காய்கறிகளையும் பழங்களையும் விளைவிப்பது மனிதர்களுக்காகத்தான். இந்த பனிக்காலத்திற்கு ஏற்ற சில காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

சத்தான சர்க்கரை வள்ளிக்கிழங்கு

இனிப்பு நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு இந்த சீசனில் அதிகம் கிடைக்கும். இதில் உயர்தர வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன் ஆகியவை உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு சரும வறட்சியை தடுத்து சருமத்தை பளபளப்பாக்கும். இதில் அதிக அளவு பொட்டாசியம் காணப்படுகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாதாரணமாக வேகவைத்து சாப்பிடலாம். சூப் அல்லது பொரியல் செய்து சாப்பிடலாம்.

நார்ச்சத்தான காலிஃப்ளவர்

குறைந்த கலோரிகளைக் கொண்ட காலிஃப்ளவரில் வைட்டமின் சி, கே சத்துக்கள் காணப்படுகின்றன. இதில் நார்ச்சத்து, போலேட், பொட்டாசியம் அடங்கியுள்ளது. இது நோய் வரும் முன் தடுக்கும் காய்கறியாகும். காலிப்ஃவர் கூட்டு, பொரியல், மஞ்சூரியன் செய்து சாப்பிலாம்.

நோய் எதிர்ப்புக்கு டர்னிப்

வைட்டமின் சி சத்தும் பொட்டாசியமும் அடங்கிய டர்னிப் கிழங்கு சுவையானதோடு சத்தான காய்கறியாகும். இது கிழங்கு வகை காயாக இருந்தாலும் குறைந்த அளவு மட்டுமே கார்போஹைட்ரேட் உள்ளது. உருளைக்கிழங்கிற்கு பதிலாக டர்னிப்பை சாப்பிடலாம். சாம்பார், கூட்டு வைத்து சாப்பிடலாம்.

கால்சியம் சத்தான வெங்காயத்தாள்

உணவில் சுவை கூட்ட உதவும் வெங்காயத்தாள் அதிக சத்து நிறைந்தது. இதில் கால்சியம், பொட்டாசியம், போலிக் அமிலம் காணப்படுகிறது. இதயநோய், புரஸ்டேட் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. காய்கறி சூப், முட்டை ஆம்லெட் போன்றவற்றுடன் மிக்ஸ் செய்து சாப்பிடலாம். வாசனையோடு சத்துக்களும் எளிதில் சேறும்.
பனிக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி வேணுமா? இதை சாப்பிடுங்க!

மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் நோய்கள் அதிகம் தாக்கும். எனவே நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சத்தான உணவுகளை உட்கொண்டால் நோய் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். இயற்கையானது சீசனுக்கு தகுந்த காய்கறிகளையும் பழங்களையும் விளைவிப்பது மனிதர்களுக்காகத்தான். இந்த பனிக்காலத்திற்கு ஏற்ற சில காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

சத்தான சர்க்கரை வள்ளிக்கிழங்கு

இனிப்பு நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு இந்த சீசனில் அதிகம் கிடைக்கும். இதில் உயர்தர வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டீன் ஆகியவை உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு சரும வறட்சியை தடுத்து சருமத்தை பளபளப்பாக்கும். இதில் அதிக அளவு பொட்டாசியம் காணப்படுகிறது. சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாதாரணமாக வேகவைத்து சாப்பிடலாம். சூப் அல்லது பொரியல் செய்து சாப்பிடலாம்.

நார்ச்சத்தான காலிஃப்ளவர்

குறைந்த கலோரிகளைக் கொண்ட காலிஃப்ளவரில் வைட்டமின் சி, கே சத்துக்கள் காணப்படுகின்றன. இதில் நார்ச்சத்து, போலேட், பொட்டாசியம் அடங்கியுள்ளது. இது நோய் வரும் முன் தடுக்கும் காய்கறியாகும். காலிப்ஃவர் கூட்டு, பொரியல், மஞ்சூரியன் செய்து சாப்பிலாம்.

நோய் எதிர்ப்புக்கு டர்னிப்

வைட்டமின் சி சத்தும் பொட்டாசியமும் அடங்கிய டர்னிப் கிழங்கு சுவையானதோடு சத்தான காய்கறியாகும். இது கிழங்கு வகை காயாக இருந்தாலும் குறைந்த அளவு மட்டுமே கார்போஹைட்ரேட் உள்ளது. உருளைக்கிழங்கிற்கு பதிலாக டர்னிப்பை சாப்பிடலாம். சாம்பார், கூட்டு வைத்து சாப்பிடலாம்.

கால்சியம் சத்தான வெங்காயத்தாள்

உணவில் சுவை கூட்ட உதவும் வெங்காயத்தாள் அதிக சத்து நிறைந்தது. இதில் கால்சியம், பொட்டாசியம், போலிக் அமிலம் காணப்படுகிறது. இதயநோய், புரஸ்டேட் புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது. காய்கறி சூப், முட்டை ஆம்லெட் போன்றவற்றுடன் மிக்ஸ் செய்து சாப்பிடலாம். வாசனையோடு சத்துக்களும் எளிதில் சேறும்.

தெரிந்துக் கொள்ளுங்கள் !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:07 PM | Best Blogger Tips

* கண்டங்களில் பெரியது ஆசியா கண்டம்.

* கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்.

* தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.

* சிகரங்களில் பெரியது எவரெஸ்ட் சிகரம்.

* மலைகளில் பெரியது இமயமலை.

* ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.

* ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.

* பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.

* பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.

* வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப் படுவது தாய்லாந்து.

* மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.

* மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு.

* மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன.

* மிக வெப்பமான கோள் வெள்ளி.

* உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.

* சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.

* அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.

* இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் உள்ள இடம் கொல்கத்தா.

* ஓர் அணிலின் சராசரி ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள்.

* ஃபிலிப்பைன்ஸ் தீவுகளைக் கண்டுபிடித்தவர் மெகல்லன்.

* இரண்டாம் அசோகர் என்றழைக்கப்பட்டவர் கனிஷ்கர்.

* பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி.

* செப்பு நாணயங்களை வெளியிட்டவர் முகமது பின் துக்ளக்.

* எரிமலை இல்லாத கண்டம் ஆஸ்திரேலியா.

@ டெய்லி பெல்

* எம் அப்துல் காதர்

ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்ட உலக வரலாறு

மணக்கால் அய்யம்பேட்டை | 2:06 PM | Best Blogger Tips
ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்ட உலக வரலாறு!

நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள். நீல் ஆம்ஸ் ட்ராங் என்று. நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டி யவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது அவர் எட்வின் சி ஆல்ட் ரின்
அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட் அதாவது விமானி. ஆல் ட்ரின் அமெரிக்காவின் விமான ப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் விமா னியாக நியமிக்க ப்பட்டார்.நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்கா வின் கப்பல் படையில் வேலை பார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந் தெடுக்கப்பட்டார்.

அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி.இவர்கள் சென்ற அப் பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப் பிக்கப்பட்டது. ஆனால் ஆல்ட் ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.

இடது காலை எடுத்து வைப்ப தா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல. ‘நிலவி ல் முதன் முதலில் கால் எடுத் து வைக்கிறோம். புவி யீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கி றோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால் எரி மணலாக இருந்து காலை சுட்டு விட்டால் தய க்கத்தில் மணிக்கணக்காக தாமதிக்கவில்லை. சில நொடிகள் தான் தாமதித்திருப்பார்.

அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்ப ட்டது. கோ பைலட் நெக்ஸ்ட்.

நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்து வைத்தார்.

ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப் பட்ட உலக வரலாறு!
உலக வரலாறு ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமையும் தகுதியு ம் இருந்தும் கூட தயக்கத்தின் காரணமாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக் கும் தெரியவில்லை.
முதலாவது வருபவரைத்தான் இந்த உலக ம் நினைவில் வைத்திருக் கும் என்பது மட் டுமல்ல, தயக்கம், பயம் இவை எந்த அளவு க்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்.

இனி நிலவை பார்க்கும் போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினை வில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத் து விடுகிறது. நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படை க்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம். பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி.

வாழ்வியலில் இருக்கும் நகைச்சுவை

மணக்கால் அய்யம்பேட்டை | 2:05 PM | Best Blogger Tips
வாழ்வியலில் இருக்கும் நகைச்சுவை இயல்பானவை..ஒரு போலித்தனமில்லாது அதுவாகவே அமைந்த ஒரு சம்பவம்..ஆனால் நகைக்கக்கூடிய சம்பவமாக இருக்கும்..

நேற்று அடியயேனின் பெரியம்
மாவை அரங்கன் அழைத்துக்கொண்டான்..அன்னாரின் வயது 81...மிக நீண்ட நாட்களுக்கு பிறகு எல்லா உறவுமுறைகளும் சங்கமித்த ஒரு சந்தர்ப்பம்...

மரணம் என்பது துக்கம் தான்..இதில் கண்டிப்பாக வயது ஒரு பெரிய சூழ்நிலை இடமாற்றம் தராது...ஏன் எனில் ஒரு முக்கிய முகம்,ஒரு முக்கிய கதாபாத்திரம் இனி நடமாடாது என்பது ஏற்றுக்கொள்வது சற்றி கடினமான காரியம் தான்...

ஆனாலும் நேற்று பேரக்குழந்தைகளும் பெரிசுகளுமாய்...சற்று ரகளை தான்..இதில் என் பெரியம்மா கொள்ளூ பேத்தி, கொள்ளூ பேரன் கண்டவர்..கொள்ளு பேரன் கையால் தீ பந்தம் கிட்டியது மிக விசேஷம்.

அவர் என்றும் சொல்வார்..."என் பிள்ளை ரங்கா வந்தான்னா...எப்போதும் அந்த இடம் கல கலன்னு ...எல்லாரையும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பான்னு" இடையில் என் வாழ்வு சற்று சிரிப்பாய் சிரித்த போது கூட நான் இந்த கலகலப்பை பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டேன்...
நான் எல்லாரையும் நக்கல் செய்வதால், ஒரு கும்பலே எனக்கு எதிராக நக்கல் செய்யக்க்காத்திருந்தது...அதில் என் பெரிய்மாவின் கொள்ளூ பேத்தியிடம்...தர்சினி,,,இதோ பார் உன் தாத்தா ..உனக்கு சின்ன தாத்தா ..வரான் பாரு..என் கோதர கோதரிகளுக்கு ஒரே சந்தோஷம் ..அக்குழந்தை என்னை அப்படி கூப்பிட வேண்டும் என்று..ஆனால் அந்த ஆறாவது படிக்கும் ஆரணங்கு "இவரா ..தாத்தாவா...என்ன இவ்வளவு சின்னவரா இருக்காரு..நீங்க பொய் சொல்றீங்க..."ஹா ஹா..அவளை பொறுத்த வரை தாத்தா என்பது உறவு முறை என்பதை விட வயதை வைத்து நிர்ணயம் செய்வதாக கற்றுக்கொடுக்கப்ப்ட்டிருக்கிறது...சொன்னவர்கள் எல்லாம் வழிய, ஐயா..சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏற,

நிறைய விஷயங்கள் ப்ளாஷ் பேக் வந்தது..அடியேனுக்கு மரணம் என்ற ஒரு விஷயத்தில் அனுபவம் அதிகம்..அருகிருந்த பலர் மரணத்தை பார்த்ததால் அதை ரசிக்கவும் ஆரம்பித்தவன்...இடுகாடு போய் அவர்களிடம் பேசி,,எல்லாம் ஏற்பாடு செய்வது..இவை எல்லாம் என் வேலையாகவே இருக்கும் எப்போதும்..அப்படி ஒரு முறை நானும் என் தந்தையும் ( இவை எல்லாம் என் அன்புத்தந்தை எனக்கு குருவாய் இருந்த சொல்லி குடுத்தவை) அரும்பாக்கம் இடுகாடுக்கு இப்படி ஒரு மரணத்தின் நிகழ்வாக சென்றபோது...அவர்களின் சென்னை தமிழ்..இடுகாட்டார்...எப்படி வீரபாண்டியார், செஞ்சியார் போல ..இடுகாட்டார்...

வா சாமி.......
என்னப்பா நல்லா கீறையா...
இருக்கேன் சாமி..எப்ப வரப்போற(எத்தனை மணீக்கு இறந்தவரை கொண்டு வரப்போகீறீர்கள் என்பதை )
தெரியலபா ..சாமிக்குத்தான் தெரியும்..எப்படியும் இங்கதான் வருவேன்..இவந்தான்(என்னைக்காட்டி) தூக்கிட்டு வருவான்..
அவனுக்கு புரிந்து..ஐயோ சாமி அதெல்ல நான் கேட்டது..எப்ப பிணம் வருது..
(ஒரு உண்மை ..உறைக்கும் உண்மை..உயிர் பிரிந்த அந்த வினாடியே மனிதம் பிணம் என்ற வார்த்தைக்கு வாழ்க்கைப்பட்டுவிடுவது தான் நாம் வாழ்ந்த வாழ்க்கை எச்சமும் சொச்சமும்)
சொல்லுப்பா..நீ தான் சொல்லனும்..ஒரு பத்து மணிக்கு..
சரி சாமி..வறட்டி, கட்டை ..எல்லாம் ரெடி பண்ணிக்கிறேன்..சீக்கிரம் வா சாமி...
அவன் எந்த மூகூர்த்ததில் அப்படி சொன்னானோ ..என் தந்தையும் ஒரே மாத காலத்தில் சீக்கிரம் போய் சேர்ந்தார்...

இப்ப இருக்கிற மின் தடையினால் ஒருவர் இரவு ஒரு மணிக்கு வெளியே நடந்து சென்றார்...அவர் இல்லம் அருகே இடுகாடு இருக்கிறது...அப்படியே ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைக்க முயல,பெட்டி கொண்டு வர மறந்ததை நினைக்க,, அப்ப சற்று தூரத்தில் ஒருவர் ஒரு படியில் மேல் அமர்ந்து பீடி பிடிப்பதை பார்த்து அவரிடம் சென்றார்...

ஊம் அநியாயங்க.இந்த மின் தடை..தூக்கமே இல்ல...நீங்க எங்க இருக்கீங்க..நான் பார்த்ததே இல்லயே..
அவர்...ஆமாம்..உள்ளே ரொம்ப வேர்த்தது...அதான் மேலே வந்து ஒரு பீடி பிடிக்கிறேன்னார்..சொன்னவர் அமர்ந்து இருந்த இடம் ஒரு கல்லறை..நம்மாள் கால் பிடறி மேல் பட எடுத்தார் ஒட்டம்...அவர் செத்தாக்கூட இனி கல்லறைப்பக்கம் தலை வச்சு படுக்கமாட்டார்...

சிரியுங்கள்..சிறப்பாக வாழுங்கள்..இனிய காலை வணக்கம்...

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:03 PM | Best Blogger Tips
கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்
*************************************

1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.

2. கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக்கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள். புதிதாகக் கணினி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப் பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும்.
பழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.

3. FireFox, Chrome, IE என ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும்.

4. G-Talk, Yahoo Messenger, Live Messenger என ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby ( http://www.digsby.com/ ) போன்ற ஒரே ஒரு instant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும்.

5. கணினியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே துவங்கும். இதற்கு auto startup என்று பெயர். இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் துவங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும். http://www.revouninstaller.com/ பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும்.

6. Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம்.

7. Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார்கள்.My Computerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate Windows When minimizing and maximizing என்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும் disable செய்யவும்.

8. Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார். அதனாலேயே அவரது கணினியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும் நீக்கியபின் கணினியின் வேகம் அதிகரித்தது.

9. கணினியில் ஒரு நெருப்புச்சுவர் (firewall), வைரசு எதிர்ப்போன் (anti virus), ஸ்பைவேர் எதிர்ப்போன் (anti spyware) கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

10. ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணினிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணினிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை.

Thanks :
Om Muruga
1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.

2. கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக்கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள். புதிதாகக் கணினி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப் பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும்.
பழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.

3. FireFox, Chrome, IE என ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும்.

4. G-Talk, Yahoo Messenger, Live Messenger என ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby ( http://www.digsby.com/
) போன்ற ஒரே ஒரு instant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும்.

5. கணினியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே துவங்கும். இதற்கு auto startup என்று பெயர். இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் துவங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும். http://www.revouninstaller.com/
பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும்.

6. Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம்.

7. Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார்கள்.My Computerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate Windows When minimizing and maximizing என்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும் disable செய்யவும்.

8. Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார். அதனாலேயே அவரது கணினியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும் நீக்கியபின் கணினியின் வேகம் அதிகரித்தது.

9. கணினியில் ஒரு நெருப்புச்சுவர் (firewall), வைரசு எதிர்ப்போன் (anti virus), ஸ்பைவேர் எதிர்ப்போன் (anti spyware) கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

10. ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணினிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணினிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை.

Thanks :
Om Muruga

சீதாப்ழத்தில் (நோனா பழம் ) உடல்நல நன்மைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:02 PM | Best Blogger Tips

சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் . . என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது.

இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம் ரத்த உற்பத்தியை அதிகரித்து உடலுக்கு வலிமை தருகிறது

பழத்தில் உள்ள சத்துக்கள்:
சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்:
சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.

முகப் பருக்கள் குணமடையும்:
சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும்.

மேனி பளபளப்பாகும்:
விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.

சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும்.

சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.

மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது. விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும்

எலும்பு பலமடையும்:
சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்:
சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.

சீதாப்பழம் பற்றிய சில பொதுவான தகவல்கள்:
சீதா (. .), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (.) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும்.

இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.

பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.

பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே (.) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 . வெப்பத்தில் கூட உயிர் வாழும்.

சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது.

காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.

சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.

படித்ததில் பிடித்தது # வீர சிவாஜி

மணக்கால் அய்யம்பேட்டை | 1:56 PM | Best Blogger Tips
வீர சிவாஜி ஒரு முறை முகலாய மன்னனிடம் இருந்து தப்பித்து மாறு வேடத்தில் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தார் . ரொம்பப் பசி எடுத்ததும் அருகில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்று தனக்கு உணவளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த வீட்டிலிருந்த வயதான பாட்டி அப்போது தான் சமைத்து முடித்திருந்தது."வாப்பா" என்றழைத்து சுட சுட சோற்றைப் பரிமாறியது. அவசரக் குடுக்கையான சிவாஜி பசி தாளாமல் வேகவேகமாய் சுடு சோற்றின் நடுவே கைவைத்துச் சாப்பிட ஆரம்பித்தார்.அதிக சூட்டினால் சாப்பிட முடியாமல் தவித்தார். உடனே குறுக்கிட்ட பாட்டி... ஏம்ப்பா .. நீயும் நம்ம சிவாஜி மாதிரி விவரம் புரியாத ஆளா இருக்கியே .. முதல்ல சுற்றி இருக்க சின்ன சின்ன கோட்டைகளை கவர்ந்துவிட்டு அப்பறமா பெரிய கோட்டைய ஆக்கிரமிக்கணும்... எடுத்ததுமே மிகப் பெரிய விஷயத்துக்கு ஆச மட்டும் பட கூடாது.. அது போல நீ ஓரத்துல இருக்க சோற்றை முதலில் சாப்பிட்டு முடி... அதற்குள் நடுவில் இருக்கும் மலைக்குவியல் சோறு ஆறியிருக்கும்... பின் அதை சாப்பிடலாம் " என்றது ... சிவாஜிக்குத் தூக்கி வாரிப் போட்டது... இருந்தும் பாட்
டியின் சொல்லில் இருக்கும் நிஜத்தை புரிந்து கொண்ட சிவாஜி போர் நுணுக்கத்தை தனக்குச் சொல்லிக் கொடுத்த பாட்டியிடம் தான் தான் சிவாஜி என்று சொல்லாமலேயே, உணவளித்தமைக்கு நன்றி சொல்லி அந்த இடத்தை விட்டு வெளியே வந்தார்..

# உங்களுக்கான பாடம் மதகுருக்களிடமோ , போதகர்களிடமோ , பேச்சாளர்களிடமோ , பெரிய எழுத்தாளர்களிடமோ மட்டும் இருப்பதில்லை.... நீங்கள் கடந்து செல்லும் ரோட்டில் எதிர் வரும் காலில்லாத மனிதனிடம் கூட இருக்கலாம்.... யாரையும் துச்சமாய் நினைக்காமல் எல்லோரிடமிருந்தும் எதைக் கற்றுக் கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்ளுங்கள்... நல்லதைப் பிறர்க்கு செய்யுங்கள்... கெட்டதா .? அதையும் பிறரை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள் , நீங்களும் பின் பற்றுங்கள் !

via பிரபாகரன் சேரவஞ்சி
# படித்ததில் பிடித்தது #

வீர சிவாஜி ஒரு முறை முகலாய மன்னனிடம் இருந்து தப்பித்து மாறு வேடத்தில் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தார் . ரொம்பப் பசி எடுத்ததும் அருகில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்று தனக்கு உணவளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அந்த வீட்டிலிருந்த வயதான பாட்டி அப்போது தான் சமைத்து முடித்திருந்தது."வாப்பா" என்றழைத்து சுட சுட சோற்றைப் பரிமாறியது. அவசரக் குடுக்கையான சிவாஜி பசி தாளாமல் வேகவேகமாய் சுடு சோற்றின் நடுவே கைவைத்துச் சாப்பிட ஆரம்பித்தார்.அதிக சூட்டினால் சாப்பிட முடியாமல் தவித்தார். உடனே குறுக்கிட்ட பாட்டி... ஏம்ப்பா .. நீயும் நம்ம சிவாஜி மாதிரி விவரம் புரியாத ஆளா இருக்கியே .. முதல்ல சுற்றி இருக்க சின்ன சின்ன கோட்டைகளை கவர்ந்துவிட்டு அப்பறமா பெரிய கோட்டைய ஆக்கிரமிக்கணும்... எடுத்ததுமே மிகப் பெரிய விஷயத்துக்கு ஆச மட்டும் பட கூடாது.. அது போல நீ ஓரத்துல இருக்க சோற்றை முதலில் சாப்பிட்டு முடி... அதற்குள் நடுவில் இருக்கும் மலைக்குவியல் சோறு ஆறியிருக்கும்... பின் அதை சாப்பிடலாம் " என்றது ... சிவாஜிக்குத் தூக்கி வாரிப் போட்டது... இருந்தும் பாட்டியின் சொல்லில் இருக்கும் நிஜத்தை புரிந்து கொண்ட சிவாஜி போர் நுணுக்கத்தை தனக்குச் சொல்லிக் கொடுத்த பாட்டியிடம் தான் தான் சிவாஜி என்று சொல்லாமலேயே, உணவளித்தமைக்கு நன்றி சொல்லி அந்த இடத்தை விட்டு வெளியே வந்தார்..

# உங்களுக்கான பாடம் மதகுருக்களிடமோ , போதகர்களிடமோ , பேச்சாளர்களிடமோ , பெரிய எழுத்தாளர்களிடமோ மட்டும் இருப்பதில்லை.... நீங்கள் கடந்து செல்லும் ரோட்டில் எதிர் வரும் காலில்லாத மனிதனிடம் கூட இருக்கலாம்.... யாரையும் துச்சமாய் நினைக்காமல் எல்லோரிடமிருந்தும் எதைக் கற்றுக் கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்ளுங்கள்... நல்லதைப் பிறர்க்கு செய்யுங்கள்... கெட்டதா .? அதையும் பிறரை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள் , நீங்களும் பின் பற்றுங்கள் ! 

via @[100000415238493:2048:பிரபாகரன் சேரவஞ்சி]

முகத்திற்கு ஆவி புடிப்பதால் ஏற்படும் நன்மைகள்...

மணக்கால் அய்யம்பேட்டை | 1:55 PM | Best Blogger Tips

* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.

* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.

* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.

* மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.

* ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.

ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.

தமிழர் அணிகலன்: ( மூக்குத்தி )

மணக்கால் அய்யம்பேட்டை | 1:47 PM | Best Blogger Tips
மூக்கு குத்துவது, காது குத்துவது [துளையிடுவது] உடலில் உள்ள வாயுவை [காற்றை] வெளியேற்றுவதற்கு என்கிறார்கள்.

கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும். ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும் போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும். அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புதான் மூக்குத்தி.

நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல்படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல்பட வைக்கும். இடது பக்கத்தில் மூளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும். இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்து வலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது. பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல் சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்தத் துவாரத்தில் தஙக் முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுக்கே மூக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக்கொணர்வதற்கு ஏற்படுத்தப்பட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன. இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது. ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க மூக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்

குழந்தைகளை பாதிக்கும் ஆறு முக்கிய நோய்கள் பற்றிய

மணக்கால் அய்யம்பேட்டை | 1:43 PM | Best Blogger Tips

பொதுவாகவே குழந்தைகள் நோய்க் கிருமிகளுக்கு சுலபமாக் பாதிப்படைவர்கள் ஆதலால் அபாயகரமான நோய்களில் இருந்து அவர்களை பாதுகாக்க முறையான தடுப்பு ஊசிகளை போடுவது அவசியம், குழந்தைகளி பாதிக்கும் பல்வேறு நோய்களில் இளம்பிள்ளை வாதம், அம்மை, தொண்டை அடைப்பான், காச நோய், குத்து இருமல், டெட்டன°, ஆகியவ

ை முக்கியமானவை.

1. அம்மை நோய்- வைட்டமின் சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்கும், நீண்ட நாள் வயிற்றுப் போக்கால் அவதியுறும் குழந்தைகளுக்கும் இந்த நோய் உண்டாகௌம்போது ஆபத்து ஏற்படுகிறது, இதனால் நிமோனியா, கண்பார்வையில் குறை பாடு உள்ளிட்ட பாதிப்புகள் எற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

அம்மை நோயின் அறிகுறிகள்- மூன்று நாட்களுக்கு ஜலதோஷம், இருமல், காய்ச்சல் இதோடு கண்கள் சிவத்தல், கண்கள் கூசுதல், கண்களில் அதிகம் நீர் வருதல் ஆகியவை இருக்கும், சில குழந்தைகளுக்கு நெற்றி மற்றும் காதுகளின் பின்புறம் தடிப்புகள் ஏற்படும். பிறகு 3அல்லது 4 நாட்கள் கழித்து கண்களில் கோழை உண்டாகௌம், முகம் மற்றும் உடலில் தடிப்புகள் ஏற்படும், பிறகு ஒருவாரம் கழித்து தடிப்புகள் மறையும், தழும்புகள் இருந்த இடத்தில் தோல் உரியத் தொடங்கும்.

2. தொண்டை அடைத்தல்- இதுவும் மிக அபாயகரமானதாகும், இதனால் மூச்சு முட்டி உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம். இன்னோய்க் கிருமிகள் ஏற்படும் நச்சு காரணமாக இதயமும் நரம்பு மண்டலமும் பாதிப்படையலாம்.

இதன் அறிகுறிகளாக சிலவற்றை குறிப்பிடலாம். முதலில் குழந்தைகள் மிகுந்த சோர்வுடனும் வாட்டமுடனும் இருக்கும், சாப்பாடு விளையாட்டு ஆகியவை இருக்காது, கழுத்து வீக்கம் இருக்கும், மேலும் குழந்தைகள் பலவீனமடையும், கிருமிகள் சுவாசப் பகுதிக்குத் தாவும்போது சுவாசம் தடை படும் அபாயம் உண்டு, இதனால் உடனே மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.

3. வறட்டு அல்லது குத்து இருமல்- தொடர் இருமலால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது, தொடர்ந்து இருமல் இருப்பதால் சில சமயங்களில் வாந்தி எடுக்கலாம், ஊட்டச் சத்து குறையும், முதலில் சளி பிடிக்கும், பிறகு இருமல் வலுக்கும் இதற்கு தற்போது மருந்துகள் ஏராளம் வந்து விட்டதால் இதன் ஆபத்தை மருத்துவ உலகம் ஏறத்தாழ களைந்து விட்டது என்றே கூறலாம்.

4. இளம்பிள்ளை வாதம்-- மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளை இது பாதிக்கும், இதனால் குழந்தைகள் முடமாகும் வாய்ப்புகள் ஏற்படலாம்.

முதல் 3 நாட்களுக்கு காய்ச்சலும் பிறகு காய்ச்சல் குறைந்து தலை வலிக்க தொடங்கும், கழுத்தை திருப்புவதில் சிரமமும், தசைகளில் வலியும் இருக்கும், நோய் கவனிக்கப் படாமல் தீவிரமடைந்தால் 7 நாட்களில் கால் அல்லது தோள் செயலிழக்கலாம், இதற்கெல்லாம் தற்போது தடுப்பு ஊசி மருந்துகள் வந்து விட்டன, ஆகவே குறித்த காலத்தில் தடுப்பு ஊசிகளை போடுவதன் மூலம் இந்த நோயை அறவே தவிர்க்கலாம்.

5. டெட்டனஸ்- பிறந்த குழந்தைகளை இந்த நோய் தாக்கினால் உயிரழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது, தொப்புள் கொடியை சுத்தம் செய்யப்படாத கத்தியால் அறுப்பதன் மூலம் இந்த நோய் ஏற்படுகிறது. திறந்த புண்கள் மூலமாக இப்புண்கள் பெரியவர்களையும் பாதிப்பதால், கருவுற்ற பெண்கள் இதற்காக தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியமாகிறது.

பிறந்து 5 முதல் 7 நாட்கள் கழித்து குழந்தை வாயைத் திறக்காது, பால் குடிப்பதை நிறுத்தி விடும், வலிப்பு ஏற்படும் இதனால் இறப்பு ஏற்படலாம். வளர்ந்தவர்களுக்கு வாய், மற்றும் கை கால்கள் விறைத்து ஒரு கட்டத்தில் உடம்பே விறைத்து விடும் அபாயம் உள்ளது, இதற்கும் தகுந்த மருந்துகள் தற்போது கிடைக்கின்றன.

6. காச நோய்- இந்த நோய் தற்போது முன்பிருந்த அளவிற்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் நோயாக இல்லாவிட்டாலும், தற்போதும் சுகாதாரக் குறைவால் இன்னமும் சில பகுதி மக்களிடையே இது அச்சுறுத்தும் ஒரு நோயாக இருந்து வருவது உண்மைதான். இந்த நோய் குழந்தைகளை தாக்கும் போது குழந்தைகள் மிகவும் சோர்வாக இருக்கும், விளையாட்டில் நாட்டம் இருக்காது, உடல் எடை குறையும், காய்ச்சல் தலைவலி, நாற்றமுடன் கூடிய சளி வரும் இருமல் போன்றவைகள் இதன் அறிகுறிகள். இருப்பினும் முறையான சோதனைகளையும் தடுப்பு முறைகளையும் கையாண்டால் குழந்தைகளை காப்பாற்ற முடியும்.

சபரிமலை போறீங்களா.. முதல்ல இதப்படிங்க!

மணக்கால் அய்யம்பேட்டை | 1:38 PM | Best Blogger Tips
1. ஐயப்ப விரதத்தில், மூட நம்பிக்கைகள் அவசியமில்லாதவை.

2. ஐயப்ப பூஜை என்ற பெயரில், ஒலிபெருக்கி வைத்து நள்ளிரவு வரை அடுத்தவர்களுக்கு இடையூறாக இருப்பது விரும்பத்தக்கதல்ல!

3. தங்களுக்கு இது எத்தனையாவது மலை என்று வினவுவதும், தான் இத்தனை தடவை மலைக்குச் சென்றிருக்கிறேன் என்று பெருமை அடித்துக்கொள்ள வேண்டாம்.

4. மாலை போடுதல், இருமுடி கட்டுதல் மிகவும் புனிதமான வைபவம் ஆகும். இதை வீடியோ, புகைப்படம் எடுப்பது உகந்த செயல்கள் அல்ல. இதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

5. இருமுடி கட்டும் நாளை ஒரு விழாவாக எண்ணி, உற்றார் உறவினர்களுக்கு அழைப்பு அனுப்பி அவர்களிடம் அன்பளிப்பாகப் பணம் பெறுதலும் ஐயப்ப பக்தி விதிமுறைக்குப் புறம்பானது. பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் பொருள்களை சன்னிதான உண்டியலில் அப்படியே சேர்ப்பதுதான் முறை.

6. இருமுடி தாங்குபவர்களுக்கு பூமாலை அணிவித்து, அடுத்த நிமிடமே அந்தப் பூக்கள் மற்றவர்கள் காலில் பட்டுச் சீரழிவது விரும்பத்தக்க செயல் அல்ல.

7. சபரிமலை யாத்திரையின்போது, கன்னி சாமிகள்தான் எல்லா வேலைகளையும் செய்யவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது தவறானது. பக்தியும் பணிவும் எல்லோருக்கும் பொதுவானது.

8. ஐயப்ப பக்தர்கள் வெளி ஸ்தலங்களுக்கு வழிபடச் செல்லும்போது, அங்குள்ள நடைமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் மதித்து நடத்தலும் அவசியமானது. உதாரணத்துக்குச் சொல்லவேண்டுமெனில், குருவாயூரப்பன் சன்னதியில் மிக சப்தமாக சரண கோஷம் சொல்லாமல், அமைதியாக வழிபடுதல்.

9. சபரிமலை யாத்திரை செல்லும் ஒவ்வொரு பக்தரும், ஒரு ஐந்து நிமிடமாவது பம்பை நதிக்கரையையோ அல்லது சன்னிதானத்தையோ சுத்தம் செய்வது மிகவும் போற்றத்தக்க செயலாகும்.

10. சபரிமலை யாத்திரையின்போது மிகவும் ஆடம்பரமான விருந்து உண்ணுதலைத் தவிர்த்தல் எல்லா வகையிலும் நல்லது.

11. சாப்பிட்ட இலைகளை, புனிதமான பம்பை நதியில் எறிந்து அந்தப் புண்ணிய நதியை அசுத்தப்படுத்துதல் மிகவும் தவறான செயலாகும். மாறாக, ஒரு குழி தோண்டி அவற்றைப் புதைக்கலாம்.

12. பம்பையில் விளக்கேற்றி வழிபடுதலை, மற்றவர்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல், அமைதியாக, ஆடம்பரமின்றி தங்கும் தாவளத்திலேயே (இடத்திலேயே) கொண்டாடுதல் மிக சிறப்பான செயல்.

13. சன்னிதானத்தில், கற்பூர ஆழிப் பிரதட்சிணத்தை எந்தவித அசம்பாவிதத்துக்கும் உட்படுத்தாமல் அடக்கமாகச் செய்வது எல்லோருக்கும் நல்லது.

14. கண்ணாடி பாட்டில்களையும் உடைந்த தேங்காய் மூடிகளையும் கண்ட இடத்திலும் போட்டு, மற்ற ஐயப்பன்மார்களின் பாதத்தைப் புண்ணாக்கும் பாவத்தைச் செய்ய வேண்டாம்.

15. ஐயப்பன் வழிபாட்டை, ஆவேசத்துக்கும் ஆக்ரோஷத்துக்கும் ஆடம்பரத்துக்கும் உட்படுத்தாமல், அமைதியாகவும் சாத்விகமாகவும் மேற்கொண்டால் அனைவருக்கும் நன்மையே.

----சுவாமியே சரணம் ஐய்யப்பா ------------
சபரிமலை போறீங்களா.. முதல்ல இதப்படிங்க!
===================================