தினசரி 6000 அடிகள் நடக்கும் பெண்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயநோய்கள் ஏற்படாது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
பெண்கள் மெனோபாஸ் பருவத்தை எட்டிய உடனே நீரிழிவு தொடங்கி இதயநோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் அழையா விருந்தாளிகளாக வந்து குடியேறிவிடுகின்றன. உடல் நோய்களோடு மனஅழுத்தமும் சேர்ந்து பெண்களை பாடாய் படுத்திவிடும். உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்த நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.இதேபோல் மெனோபாஸ் காலத்தை எட்டிய பெண்களின் நலனுக்காக பிரேசில் நாட்டில் நாட்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 45 வயது முதல் 72 வயதுடைய 292 பெண்கள் பங்கேற்றனர். அவர்களின் உடல் எடை பரிசோதிக்கப்பட்டது. அடி வயிறு கொழுப்பு, ரத்த சர்க்கரை ஆகியவை கணக்கெடுக்கப்பட்டன. பின்னர் ஆய்வில் பங்கேற்ற பெண்களை தினசரி 6 ஆயிரம் அடிகள் நடக்குமாறு பணிகள் கொடுக்கப்பட்டன.
4 வாரங்களுக்குப் பின்னர் அவர்களின் உடல் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் நோய்களான நீரிழிவு, இதயம் தொடர்பான நோய்கள் பாதிப்பு ஏற்படுவது குறைந்து இருந்தது. அவர்களின் ஹார்மோன் சுரப்பும் சீராக இருந்தது தெரியவந்தது.
இதன்மூலம் நன்றாக நடந்து ஓடி ஆடி வேலைபார்க்கும் பெண்களுக்கு நோய்கள் ஏற்படுவது குறைகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உட்கார்ந்த நிலையிலேயே இருக்கும் பெண்களுக்குத்தான் நோய் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. எனவே தினசரி 6000 அடி நடப்பவர்கள் நோய்களில் இருந்து தப்பிவிடுகிறார்கள் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.