கட்டிடத்திற்கும் கிரக பாதிப்பு உண்டா? !

மணக்கால் அய்யம்பேட்டை | 10:19 PM | Best Blogger Tips
கட்டிடத்திற்கும் கிரக பாதிப்பு உண்டா?
----------------------------------------------------
மனிதன் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் நவக்கிரக பாதிப்புகள் உண்டு.உதாரணமாக ஒரு பேருந்து விபத்து உள்ளாகிறது அதில் பலபேர் மரணமடைகிறார்கள்.அப்படியானால் அனைவருக்குமா மாரக விதி நடந்தது?.அதாவது மனிதன் ஒன்றை இயக்கும்பொழுதோ,இயங்கும் பொழுதோ உயிரில்லாத பொருளும் உயிருள்ளதாக இயங்க தொடங்கிறது.இன்னும் நீங்கள் கவனித்தீர்களானால் பலபேர் பேருந்தை 12a வந்துட்டானா என மனிதரை கேட்பதுபோல் கேட்பார்கள்.

அதனால்தான் நாம் புது வாகனம் வாங்கும் பொழுதோ,கட்டிடம் கட்டும்பொழுதோ ஸ்திர லக்கினமாக தேர்ந்தெடுத்து 4-மிடம்,7-மிடம்,8-மிடம் சுத்தமாக இருப்பது போல் பார்த்துக்கொள்ளவேண்டும்.நல்ல திதியும்,நல்ல நட்சத்திரத்திரமும் கொண்டதாகவும்,மேற்கண்ட இடங்களை சுபர்கள் பார்க்கவேண்டும்.

நமக்கு திசா அமைப்பும்,ஜாதக அமைப்பும் சரியில்லாவிட்டாலும் கூட நாம் ஏற்படுத்திகொள்ளும் அத்தியாவாச பொருட்களுக்கு நேரம் காலம் பார்த்து வாங்கினாலோ,ஆரம்பித்தாலோ போதும் எந்த வித தீமைகளும் நேராது நிச்சயமான உண்மையாகும்.

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

உங்கள் மூளை எவ்வளவு இளமையானது? - ஒரு சிறிய டெஸ்ட்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:15 PM | Best Blogger Tips
உங்கள் மூளை எவ்வளவு இளமையானது? - ஒரு சிறிய டெஸ்ட்

நண்பர் ஒருவர் அனுப்பி இருந்த மின்னஞ்சல் இது. ரொம்பவே சுவாரஸ்யமா இருக்கு. நீங்களும், உங்கள் மூளை , நரம்பு எவ்வளவு துல்லியமா இருக்குது னு செக் பண்ணுங்களேன்...

A Short Neurological Test

1- Find the C below..
Please do not use any cursor help.

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOCOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO

2- If you already found the C, now find the 6 below.

99999999999999999999999999999999999999999999999
99999999999999999999999999999999999999999999999
99999999999999999999999999999999999999999999999
69999999999999999999999999999999999999999999999
99999999999999999999999999999999999999999999999
99999999999999999999999999999999999999999999999

3 - Now find the N below. It's a little more difficult.

MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMNMM
MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM

This is NOT a joke. If you were able to pass these 3 tests, you can cancel your annual visit to your neurologist.
Your brain is great and you're far from having a close relationship with Alzheimer.

Congratulations!

Only great minds can read this.

eonvrye that can raed this, rsaie your hnad.
To my 'selected' strange-minded friends:

If you can read the following paragraph, forward it on to your friends and
This is weird, but interesting!

If you can raed this, you have a sgtrane mnid, too.

Can you raed this? Olny 55 plepoe out of 100 can.

I cdnuolt blveiee that I cluod aulaclty uesdnatnrd what I was rdanieg. The phaonmneal pweor of the hmuan mnid, aoccdrnig to a rscheearch at Cmabrigde Uinervtisy. It dseno't mtaetr in what oerdr the ltteres in a word are, the olny iproamtnt tihng is that the frsit and last ltteer be in the rghit pclae. The rset can be a taotl mses and you can still raed it whotuit a pboerlm. This is bcuseae the huamn mnid deos not raed ervey lteter by istlef, but the word as a wlohe. Azanmig, huh? Yaeh and I awlyas tghuhot slpeling was ipmorantt! If you can raed this, share it.

<3, @[115109758557124:274:தமிழ் -கருத்துக்களம்-]

Via  
தமிழ் -கருத்துக்களம்-

முகநூல் உணர்குறிக் குறுவழி! FaceBook Emoticons Shortcut!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:14 PM | Best Blogger Tips

முகநூல் உணர்குறிக் குறுவழி!
FaceBook Emoticons Shortcut! 

<3, தமிழ் -கருத்துக்களம்-
Via  தமிழ் -கருத்துக்களம்

நீங்கள் சொலுங்கள் விமானம் கண்டுபிடித்தது யார்? பரத்வாஜ முனிவர்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:09 PM | Best Blogger Tips

1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம், ரைட் சகோதரர்களால் கிட்டி ஹௌக் என்ற இடத்தில் பறக்கவிடப்பட்டதாக கூறப்பட்டதற்கு முழுமையாக எட்டு (8) ஆண்டுகளுக்கு முன், மும்பாயில் உள்ள சௌபதி கடற்கறையில்……………

இதுவரை இந்தியாவில் பழங்காலத்தில் விமானங்கள் இருந்ததாக கூறப்பட்ட கதைகள் வெறும் புனையப்பட்டதாகவும் கற்பனைகளாகவுமே கருதப்பட்டது. ஆனால் அன்று மாலை, விமானம் என்றால் என்னவென்று நிகழ்லுலகம் அறியா தருணத்தில் அந்த அதிசய நிகழ்வு நடத்திக் காண்பிக்கப்பட்டது. நான் கூறும் நிகழ்வு ஏதோ மனிதன் வாழாத கண்டத்திலோ அல்லது கற்காலத்திலோ அல்ல.

1895 ஆம் ஆண்டு சிவ்கர் பாபுஜி தால்பேட் (Shivkar Bapuji Talpade) என்ற இந்திய விஞ்ஞானியும், அவரது மனைவியும் இணைந்து, மும்பாயின் சௌபதி கடற்கறையில் ஒரு ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டு அதிசயித்தனர். இதுவே தற்போதிய காலத்து முதல் விமான கண்டுபிடிப்பு. நான் கூறும் இந்த செய்தி ஏதோ உளறல் போல் தோன்றினால் வலைதளத்தில் தகவல்களைத் தேடவும். மேலும் அக்டோபர் 18, 2004ல் வெளிவந்த டைம்ஸ் ஒஃப் இந்தியா நாளிதழின் செய்தியை இங்கே காணவும் (http://articles.timesofindia.indiatimes.com/2004-10-18/mumbai/27162445_1_plane-wright-brothers-air-show

)

இவர்கள் முழுக்க முழுக்க இந்தியாவின் பழங்கால ரிக் வேதங்களில் தெரிவித்துள்ள முறைப்படி அந்த விமானத்தை வடிவமைத்தனர். விமான சாஸ்த்திரம் குறித்து 100 தொகுப்புகளில், 8 பகுதிகளாக, 500 விதிகளில், 3000 ஸ்லோகங்களாக ரிக் வேதம் விளக்குகிறது. இன்றைய அறிவியலுக்கு புலப்படாத பல விஷயங்கள் அதில் புதைந்துள்ளது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர், மேலும் இவர்கள் பரத்வாஜ முனிவரால் இயற்றப்பட்ட விமானம் செய்யும் வழிமுறைகள் அடங்கிய பழங்கால ஏடுகள் மூலம் இதை சாதித்தனர். உலகில் முதல் முதலில் பாதரசத்தை (Mercury) எரிவாயுவாக பயன்படுத்தியது இந்தியர்கள் தான். பாதரசத்தை எரிவாயுவாக பயன்படுத்துவது எவ்வாறு என்று இன்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கொண்டு தான் இருக்கின்றனர். இந்த விமானம் முழுக்க முழுக்க பாதரசத்தை பயன்படுத்தும் Mercury Vortex Principle அடிப்படையைக் கொண்டது. இந்த Ion Mercury Vortex Engine ஆனது NASA வின் தீவிர ஆய்வில் உள்ளது.

இதைப்பற்றி தி ஹிஸ்டரி சேனல் (The History Channel) என்ற தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட ஏன்ஸியன்ட் ஏலியன்ஸ் (Ancient Aliens) என்ற ஆவணப்படத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது…

இவர் உருவாக்கிய அந்த ஆளில்லா பறக்கும் விமானம் மணிக்கு சுமார் 40000 கிமீ வேகத்தில் 1500 அடி சென்று விண்ணை முட்டி எந்த பாதிப்பும் இல்லாமல் தரையிறங்கியது. பொது மக்களோடு மக்களாக பரோடாவின் மகாராஜர், சர் சயாஜிராவ் கேக்வாட் அவர்களும் ஜஸ்டிஸ் கோவிந்த் ரானடே அவர்களும் அதை கண்டு வியந்தனர். இந்த செய்தி அப்போதிய “கேசரி” நாளிதழிலும் வெளியானது.

இவரது ஆய்வுகளுக்கு முக்கிய காரணமாக விளங்கிய பரத்வாஜ முனியின் பழைய குறிப்புகளை கொடுத்துதவியது பண்டிதர் ஸ்ரீ சுப்பராய சாஸ்த்ரி (Pandit Shri Subbaraya Shastri). இவரது தூண்டுதலின் பேரில் தான் தால்பேட் அவர்கள் ஆய்வை தொடங்கினார். தற்போதிய பொறியியல் வரைபடம் போல மிக எளியதாகவும், விமான கட்டுமானத்திற்கு தேவையான வடிவமைப்பு, இயந்திரங்கள், முதலிய அனைத்தின் வரைபடங்கள் மற்றும் விமானிகளின் உடைகள், அவர்களின் உணவு முறைகள் முதற்கொண்டு அதில் அனைத்தும் இடம் பெற்றிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன, இது பின் நாளில் திரு ஜோஸ்யர் (Mr. Josyer) மற்றும் திரு டேவிட் ஹேட்சர் சில்ட்ரஸ் ( Mr. David Hatcher Childress) ஆகியவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. தால்பேடுக்கு தேவையான நிதியுதவியை மகாராஜ சயாஜிராவ் வழங்கினார்.

இத்தனை கண்டுபிடிப்புகளுக்கு பின் தால்பேடுக்கு கிடைக்கப்பட்ட வெகுமதி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கைது நடவடிக்கை. அவருடன் சாஸ்த்ரியும் கைது செய்யப்பட்டார். மகாராஜா பிரிட்டிஷ் அரசினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டார். பின் சில நாட்களில் தால்பேடின் மனைவி இறந்த பின் ஆய்வில் இருந்து ஓய்வு கொண்டார் தால்பேட். அவரும் இறந்த பின்னர் அவரது மிக முக்கிய குறிப்புகளை, அதன் மதிப்பறியாமல் சில ஜெர்மானியர்களிடம் விற்றுவிட்டனர் அவரது உறவினர்கள்.

இப்போதும் இதை வெளிப்படுத்த இந்திய அரசாங்கம் தவறிவிட்டது. இப்போது நீங்கள் சொலுங்கள் விமானம் கண்டுபிடித்தது யார்?

(பின் குறிப்பு :- பரத்வாஜ முனிவர் வாழ்ந்த காலகட்டம் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பு, இராமாயண காலம்)

Dileepkumar
Via உலக தமிழ் மக்கள் இயக்கம்

காந்திஜி கொல்லப்பட்ட வழக்கில் கோட்சேயின் வாக்குமூலம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 10:04 PM | Best Blogger Tips

Image result for கோட்சேயின் வாக்குமுலம் !

காந்தி கொலை செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு. வீரசவர்க்கார் உள்பட வேறு எவருக்கும் தொடர்பு இல்லை" என்று கோட்சே கூறினார். டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கோட்சே தொடர்ந்து வாக்குமூலம் அளித்தார். வாக்கு மூலத்தின் பின்பகுதி வருமாறு:-

ஜின்னாவின் இரும்புப்பிடி, எக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்தி, அகிம்சைக் கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கை ஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக் கொள்ளாமலேயே இருந்தார்.

தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது, அவர் மீது கோபம்தான் வருகிறது.
Image result for கோட்சேயின் வாக்குமுலம் !

காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும். மக்கள் என்னை "முட்டாள்" என்று அழைக்கலாம். அறிவில்லாமல் அண்ணல் காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒரு பலமுள்ள நாடாகவும், சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால், காந்தியடிகளின் கொள்கையை நாம் கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது. நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை. எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை.

பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30_1_1948_ல் காந்தியைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவழைத்துக்கொண்டேன். இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும்.

நேதாஜி விடுதலைப்போரில், வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள் உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரை, காந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை.

சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்தி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால், இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார்.

முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம். காந்திஜிக்கும், எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இருந்தது இல்லை. காந்திஜி மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம், நம் நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை. பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால், என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது.

15
 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர். இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான். "தேசத்தந்தை" என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.

பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார். பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15_ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி? பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர். பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை.

சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன். மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறு கட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை.

பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. `கொலைக்கு நானே பொறுப்பு' என்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன். வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன்.

1948
 ஜனவரி 17_ந்தேதி சவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் "வெற்றியோடு திரும்புங்கள்" என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று கூறுவதையும் மறுக்கிறேன். இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும், பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு "இந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால், அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்து, அதிலுள்ள உண்மையை உணர்ந்து, உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." இவ்வாறு கோட்சே கூறினார்.

நன்றி இணையம்