இங்கும் ஒரு எல்லோரா - கழுகுமலை

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:14 | Best Blogger Tips
இங்கும் ஒரு எல்லோரா - கழுகுமலை 

எல்லோரா குகைக் கோவில்களுக்கு நிகராகக் கருதப்படும் மிகச் சிறந்த குகைக்கோவில்களைக் கொண்ட ஊர் தான் கோவில்பட்டியில் இருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள நம் கழுகுமலை. இங்கு உள்ள மூன்று முக்கியப் பகுதிகள் தான் வெட்டுவான் கோயில், சமணர் பள்ளி மற்றும் கழுகாசலமூர்த்தி திருக்கோவில் என்பதாகும்.

வெட்டுவான் கோயில்: பெரிய மலைப்பாறையை "ப' வடிவில் 7.50 மீட்டருக்கு சதுரமாக வெட்டி, அதன் நடுப்பகுதியை ஒரே கல்லில் அழகிய சிற்பங்களுடன் கி.பி 8ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன் நிறுவிய சிறப்பைப் பெற்றது. இந்தக் கோவிலை வெளியே இருந்து பார்க்கும் போது வெறும் பாறை போலத் தான் காட்சியளிக்கும். ஆனால் உள்ளே சென்று பார்த்தால் இவை அனைத்தும் சிற்பங்களா அல்லது உண்மையிலே இறைவன் குகைக்குள்ளே அமர்ந்து கொண்டிருக்கிறானா என்ற வியப்பு ஏற்படும் அளவு உயிரோட்டமான சிற்பங்களைக் காணலாம்.

சமணர் பள்ளி :நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்தங்கரர் சிற்பங்கள், 90க்கும் மேற்பட்ட வட்டெழுத்துக்கள் என மலையே ஒரு அழகிய சிற்பக்கலைக்கூடமாக காட்சித்தருகிறது. அந்தக் காலத்திலேயே இங்கு ஆண்கள் பெண்கள் இருவருக்கும் சமண சித்தாந்தம் போதிக்கப்பட்டது என்பதை இங்குள்ள பல்வேறு கல்வெட்டுக்கள் மூலம் தெரிய வந்துள்ளது. சமண சித்தாந்தம் மட்டுமன்றி மருத்துவம், வானியல், கணிதம், சோதிடம் போன்ற பல்வேறு துறைகளும் இங்கு கற்பிக்கப்பட்டுள்ளது.

கழுகாசலமூர்த்தி திருக்கோவில்: குடவரைக் கோயில் வகையைச் சேர்ந்த இந்த முருகன் கோவிலானது அருணகிரிநாதரால் பாடல்பெற்ற ஒப்பற்ற ஸ்தலம் ஆகும். முருகப் பெருமானின் சிலை குகைச் சுவற்றைக் குடைந்து செதுக்கியிருப்பதால் சுவாமியை வலம் வர வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் முழு மலையையும் சுற்றி வர வேண்டும்.

சமணமும், சைவ, வைணவ சமயங்களை பிரதிபலிக்கும் இந்த கல்லில் அமைந்த கலைப்பெட்டகத்தை நேரில் காண விரைவில் பயண ஏற்பாட்டைச் செய்யுங்கள்..

@Deepa Chaithanyan

Deepa Chaithanyan

    Via சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா