விஞ்ஞான விதியின்படி நமது பகுத்தறிவை உபயோகப் படுத்திப் பார்க்கையில் நமது நம்பிக்கைகளுக்கு ஆதாரம் இல்லை. புராதன நம்பிக்கை என்று கொள்ளுவது சகஜ, கடவுள், ஆன்மா, மோட்சம், நரகம், பேய், பிசாசு, மணி மந்திரம், பூசை நைவேத் தியம், பிரார்த்தனை, பலி இவைகளைப் போன்ற நம்பிக்கைகள். மனிதன் குழந்தைப் பருவத்தை அடைந்திருந்த காலம் முதல் எழுந்த எண்ணங்களாகும். அந்தக் காலங்களில் பிரகிருதங்களில் நடக்கும் சம்பவங்களுக்குத் தன்னைப் போன்ற கர்த்தா இருக்கலா மென்று எண்ணுவான். இதற்கு Anthropomorphism (அதாவது மனிதனைப் போன்ற கர்த்தர் ஒருவனோ, பலரோ உளதாக எண்ணுவது) என்று பெயர். இந்த மனப்பான்மை நமது நாட்டில் ஒவ்வொருவருடைய மனதில் குடி கொண்டுள்ளது.
கடவுள் என்பவர் அண்டம் முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும், அவர் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர் என்றும், இறப்பு, பிறப்பு, இரவு, பகல், இன்பம், துன்பம் போன்ற உலக வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து நிற்கும் ஏகாந்த நிலை என்றும் கடவுள் இருப்பதை நம்புபவர்கள் கருதுகின்றனர். உலகம் முழுவதிலும் பரந்திருக்கின்ற பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் கடவுள் பற்றிப் பல விதமான கருத்துக்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். அன்பு, புனிதம், கருணை என்பவற்றின் மறு பொருள் கடவுள் என கூறுகின்றனர். சில மதங்கள் கடவுள் ஒருவரே என்று நம்புகின்றன. வேறு சில மதங்களைச் சேர்ந்தவர்கள் பல கடவுள்களை வணங்குகின்றனர். சில மதங்களில் கடவுளைப் பல்வேறு வடிவங்களாக உருவகப்படுத்திச் சிலைகளை அமைத்து வழிபடுகின்றனர். வேற் சில சமயங்கள் சிலை வணக்கத்தை முற்றாக எதிர்க்கின்றன. கடவுளை இறைவன் அல்லது ஆண்டவன் எனவும் அழைக்கிறார்கள்.
ஒரு கடவுட் கொள்கை இறையியலில், ஒரு கடவுட் கொள்கை(monotheism) என்பது, இறைவன் ஒருவனே என்னும் நம்பிக்கை ஆகும். ஒரு கடவுட் கொள்கையில், ஆபிரகாமிய மதங்கள் என அழைக்கப்படும், யூதாயிசம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்பவற்றிலுள்ள கடவுள் பற்றிய கருத்துருவுக்கு முதன்மை கொடுக்கும் போக்கு உள்ளது. ஒரு கடவுட் கொள்கை பொதுவாக பல கடவுட் கொள்கை, இயற்கை அனைத்தும் கடவுளே என்னும் கொள்கை என்பவற்றுக்கு முரண்படுகின்றது என்னும் வகையிலேயே வரையறுக்கப்படுகின்றது. ஒரு கடவுட் கொள்கை, பல கடவுட் கொள்கையை எதிர்ப்பதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. எனினும், பல கடவுள்களை வணங்கினாலும், எல்லாக் கடவுளருமே ஒரு கடவுளின் வெவ்வேறு அம்சங்களே எனக் கொள்ளும் பல கடவுட் கொள்கையினர் இத்தகைய வாதத்தை முன்வைப்பதில்லை. இது போலவே ஒரு கடவுட் கொள்கையிலும், இறைப் பன்மைக் கருத்துருக்கள் காணப்படுவது உண்டு. எடுத்துக் காட்டாக கிறிஸ்தவ சமயத்திலுள்ள "மும்மை"க் கோட்பாட்டைக் குறிப்பிடலாம். இங்கே இறைவனுக்குத் தந்தை, மகன், புனித ஆவி என்னும் மும்மை நிலை கூறப்படுகிறது. இது தவிரவும் பல கிறிஸ்தவர்கள் யேசுவுக்கு தேவன், மனிதன் என்னும் இரண்டு இயல்புகள் உள்ளதாக நம்புகின்றனர். எனினும் கிறிஸ்தவ இறையியல் "தேவ" அம்சமான யேசுவையே வணக்கத்துக்கு உரியவராக ஏற்றுக்கொள்கிறது. கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள், சிறப்பு இயல்புகளைக் கொண்ட மனிதர்களாகக் கருதப்படுகின்ற மேரி உட்படப் பல புனிதர்களையும் வணங்குகிறார்கள். இவர்கள் இறைவன் மீது எல்லையில்லா நம்பிக்கை உள்ளவர்களாக வாழ்ந்ததுடன், தொடர்ந்தும் பிறரின் மீட்சிக்கு உதவுகின்றனர் என நம்பப்படுகின்றனர்.
தோற்றமும் வளர்ச்சியும் ஒரு கடவுட் கொள்கைக்கான கருத்துரு; ஒரு கடவுளையே வணங்கினாலும், இவ்வாறு வணங்கப்படக்கூடிய பல கடவுள்கள் இருக்கலாம் என்னும் கொள்கை (henotheism); பல கடவுள்களில் ஒருவரை முதன்மைக் கடவுளாகக் கொண்டு வணங்கும் முதன்மைக் கடவுட் கொள்கை (monolatrism) என்பவற்றிலிருந்து படிப்படியாக வளர்ச்சியடைந்ததாகக் கொள்ளப்படுகின்றது. பண்டைய தூரகிழக்கில் ஒவ்வொரு நகரத்துக்கும் ஒரு முதன்மைக் கடவுள் இருந்ததாகத் தெரிகிறது. லார்சா நகருக்கு ஷமாஸ் என்னும் கடவுளும், ஊர் நகருக்கு சின் என்னும் கடவுளும் முதன்மைக் கடவுளாக இருந்ததை எடுத்துக் காட்டாகக் குறிப்பிடலாம்.
பல கடவுட் கொள்கை பல கடவுட் கொள்கை (Polytheism) என்பது, பல கடவுள்களில் நம்பிக்கை வைத்திருக்கும் அல்லது பல கடவுள்களை வணங்கும் கடவுட் கொள்கையாகும். பழங்காலத்தைச் சேர்ந்தவையும், தற்காலத்தனவுமான பல சமயங்கள் "பல கடவுட் கொள்கை" உடையனவாக இருக்கின்றன. இந்துசமயம், ஷின்டோ சமயம், சீன நாட்டார் சமயம், பண்டைக் கிரேக்க சமயங்கள் என்பன இத்தகையவையாகும். பல கடவுட் கொள்கை உடையவர்கள் தாம் நம்பும் எல்லாக் கடவுளரையுமே ஒரே நிலையில் வைத்து வணங்குவதில்லை. அக் கடவுளர்களில் சிலருக்கே கூடிய முக்கியத்துவம் இருப்பது வழக்கம். சில சமயங்களில் ஒரு கடவுளுக்கு முழுமுதற் கடவுள் என முதன்மை கொடுத்து வணங்குவதும் உண்டு. எந்தக் கடவுளுக்கு முதன்மை என்ற அடிப்படையில் ஒரு சமயத்திலேயே பல பிரிவுகளும் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இந்து சமயத்தில், சிவனை முழுமுதற் கடவுளாகக் கொள்ளும் பிரிவு சைவம் எனவும், விஷ்ணுவுக்கு முதன்மை கொடுக்கும் பிரிவு வைணவம் எனவும் அழைக்கப்படுகின்றது. இது போலவே, சக்தியாகிய தாய்க் கடவுள், பிள்ளையார் (கணபதி), முருகன் (குமரன்) போன்ற கடவுளர்களை முதன்மைப் படுத்தும் பிரிவுகள் முறையே சாக்தம், காணாபத்தியம், கௌமாரம் ஆகிய பெயர்களில் வழங்குகின்றன. குறிப்பிட்ட காலங்களில் சிறப்பாகச் சில கடவுளருக்கு முக்கியத்துவம் கொடுத்து வணங்கும் நிலையும் உண்டு. பல கடவுட் கொள்கை சார்ந்த சமயங்களில் காணப்படும் கடவுளருக்கு அவ்வப் பண்பாடுகளின் தொன்மங்களில் இடம் உண்டு. இவர்கள் மனித இயல்புகளுடனும், பல்வேறுபட்ட தகுதிகளுடனும், மேலதிகமாகத் தனிப்பட்ட, சக்திகள், இயலுமைகள், அறிவு, நோக்கு என்பவற்றுடன் கூடியவர்களாக இத் தொன்மங்களில் காட்டப்படுகின்றனர். பல கடவுட் கொள்கையைப் பல இனக்குழுச் சமயங்களில் காணப்படும் ஆன்மவாத நம்பிக்கைகளில் இருந்து தெளிவாகப் பிரித்து அறிய முடியாது. "பல கடவுட்" சமயங்களில் காணப்படும் கடவுள்கள் பல வேளைகளில் மூதாதையர், பூதங்கள் போன்ற இயல்புகடந்த தன்மையைக் கொண்டவர்களினதோ அல்லது ஆவிகளினதோ தொடர்ச்சியாகக் காணப்படுகின்றன. இக் கடவுள்கள் வானம் சார்ந்தவர்களாகவும், பூமி சார்ந்தவர்களாகவும் பிரிக்கப்படுவதும் உண்டு.
உயிர் (சமயம்) உலக மதங்கள் பலவற்றில் உயிர் என்பது, உயிரினம் ஒன்றின் "பொருள் தன்மை" அற்ற பகுதியைக் குறிக்கும். ஆன்மா, ஆவி போன்ற வேறு பல பெயர்களாலும் குறிப்பிடப்படும் இதிலேயே சிந்தனை, ஆளுமை முதலியன அடங்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. இறையியலில், பொதுவாக உயிர் ஒரு உயிரினத்தின் இறப்பிற்குப் பின்னரும் தொடர்ந்து இருப்பதாக நம்பப்படுகிறது. சில மதங்கள், உயிர்கள் இறைவனால் படைக்கப்பட்டன என்கின்றன. வேறு சில மதங்களில் உயிர் எவராலும் படைக்கப்படாத நிலையானவற்றுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இறப்பின் போது உடலை விட்டு நீங்கும் உயிர் இன்னொரு உடல் எடுத்து உலகில் மீண்டும் பிறக்கின்றது என்கின்றன மறுபிறவியில் நம்பிக்கை கொண்ட சில மதங்கள். உடல் உயிர்களுக்கான தற்காலிகத் தங்குமிடம் என்றும், இறுதியில் இறைவனைச் சென்றடைவதற்கான செயல்களில் ஈடுபடுவதற்காக உயிர்களுக்கு இறைவன் உடலைக் கொடுக்கிறான் என்பதும் சில மதங்களின் கொள்கை.
மதம் அல்லது சமயம் - மனிதன் கடவுள் நிலையை அடைவதற்கான வழியினை வாழ்ந்து காட்டினார்கள்(இறைவன், ஆண்டவன்,யோகிகள்,ஞானிகள்,மகான்கள்).இவர்களை பின்பற்றி வாழ்ந்த மக்கள் காலம் செல்ல செல்ல அவர்கள் கூறியதை "அனைவரும் ஒன்றே" என்பதை மறந்து மற்றவர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டவே உருவாக்கப்பட்டதாகும்.மனித இனம் ஜாதி, மதம் மற்றும் மொழி என அனைத்திலும் வேறுபட்டு இருந்தாலும் அவர்களின் செயல் நிலை ஒன்றாக இருக்கிறது என்பதை உணரலாம். இதில் ஜாதி, மத வேறுபாடு தோன்றலுக்கு முன்பாகவே மொழி என்பது உண்டானது. மொழி என்பதை பற்றி கூற வேண்டுமானால் பல கருத்துகளை கூறிகொண்டே போகலாம். அரசியல் மற்றும் இலக்கியம் என பேசுபவர்கள் மொழி மேல் பற்றுடனும் , இன்னும் சிலர் வெறி உடனும் இருப்பதை பார்க்கிறோம். மொழி என்பது செய்தி பரிமாற்றம் செய்ய உதவும் ஓர் ஒலி வடிவம். ஒருவரிடம் நேரடியாக கருத்துக்களை பரிமாற்றம் செய்ய மொழியானது ஒலி வடிவிலும், நேரடியாக இல்லாத பொழுது வரிவடிவிலும் பயன்படுகிறது. வரி வடிவம் பெரும் மொழி இலக்கணம் இலக்கியம் எனும் கட்டுப்பாட்டில் அமைந்துவிடுகிறது.அதிக மக்கள் பின்பற்றுவதனால்,
உலகின் முக்கியமான சமயங்களாக பின் வரும் 13 சமயங்கள் கருதப்படுகின்றன.
இறையியல் - Theology
கிறிஸ்தவம் - (கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்தம், கிழக்கு மரபுவழி திருச்சபை) - Christianity
இஸ்லாம் - Islam
இந்து சமயம் - Hinduism
சைவ சமயம் - Shaivism
வைணவம் - Vaisnavam
அய்யாவழி - Ayyavazhi
சாக்தம் - Shaktham
ஆசிவகம்
புத்தம், பௌத்த சமயம் - Buddhism
சமணம் - Jainism
யூதம் - Judaism
சான்ரு - Shinto
டாவோயிசம் - Taoism
கன்பூசியம் - Confuciaism
சீக்கிய சமயம் - Sikhism
அய்யாவழி சோறாஸ்ரியனிசம்
பஹாய் - Bahai,
பாபி மற்றும் பஹாய் நம்பிக்கைகள்
அனிமிசம் - Animism-மிருக வழிபாடு
உலகின் முக்கிய சமயங்கள் (பின்பற்றும் மக்களின் எண்ணிக்கையுடன்): 1. கிறிஸ்தவம் - 210 கோடி (கத்தோலிக்கம் - 100 கோடி; புரட்டஸ்தாந்தம் - 77.5 கோடி, கிழக்கு மரபுவழி திருச்சபை - 24.0 கோடி)
2. இஸ்லாம் - 110 கோடி
3. இந்து சமயம் - 105 கோடி
4. கன்பூசியம் - 40.0 கோடி
5. பெளத்தம் - 35.0 கோடி
6. டாவோயிசம் - 5.0 கோடி
7. ஷிந்தோ - 3.0 கோடி
8. யூதம் - 1.2 கோடி
9. சீக்கியம் - 90 இலட்சம்
10. சமணம் - 60 இலட்சம்
11. பாபி மற்றும் பஹாய் நம்பிக்கைகள்
12. அய்யாவழி
13. சோறாஸ்ரியனிசம் மேற்படி விவரங்களை எல்லோரும் ஏற்றுக்கொள்வதில்லை; ஏனெனில், குறிப்பாக சீனா போன்ற சில நாடுகளில் எத்தனை பேர் குறிப்பிட்ட சமயங்களைப் பின்பற்றுகிறார்கள் என்பதை சரியாகச் சொல்ல முடிவதில்லை. உலகச் சமயங்களின் பாராளுமன்றம்.
பல ஆயிரக்கணக்கான மதங்கள் உலகெங்கணும் உள்ள மக்களால் அனுசரிக்கப்பட்டு வருகின்றன.அம் மதங்கள் சம்பந்தமான விபரங்களைத் தனித்தனியான நூல்களாகப் பெற்றுக் கொள்ள முடிகிறன்து.ஆனால் உலக மதங்கள் என்ற பெயரில் பல மதங்களின் விபரங்களை உள்ளடக்கிய ஒர முழுமையான.நூல் தமிழில் இதுவரை வெளிவந்தில்லை. இந்த நூலில் புராதனமான 30 மதங்களின் விபரங்களையும், தற்போது அதிகமான மக்களால் அனுசரிக்கப்பட்டு வருகின்றன.
இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம்,சமனம், சீக்கியம், யூதம், பஹாய், கொன்பூசியணிஷம், ராவோசிம், ஷின்ரோசிம், ஸோறொஸ்ரியன் ஆகிய 12 மதங்களின் வரலாறுகள் ஜதீகங்கள், மதப்பன்புகள், பரபல்கள் போன்ற விபரங்களை “வாழும் மதங்கள்” என்ற பகுதியில் அழகு தமிழில் எடுத்துக்கூறி உள்ளார்.அத்துடன் ‘நாஸ்தீக வாதம்’ பற்றியும் மேலதிகமாக ஓர் அத்தியாயத்தையும் சேர்த்துள்ளார்.சரியான புரிந்துணர்வு இன்மையே மதங்களிடையே கசப்பு நிலை தோன்றவும், அதனால் சில சமயங்களில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கும்,இரத்தம் சிந்துவதற்கும் கூட காரணமாகின்றது என்று முன் வைக்கின்ற நூலாசிரியர்,பிற மதங்களை பற்றிய அறிவு ஏற்படும் இடத்து மதங்களிடையே புரிந்துணர்வும்,மத சகிப்பத்தன்மையும் ஏற்பட வாய்புண்டெனவும் கூறுகின்றார்.தத்தமது மதங்களை கற்கின்றஅதே வேலை வேற்று மதங்களில் ஆக குறைந்த அடிப்படை தத்துவங்களையாவது ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்கிறார். மதங்களை பற்றிய அறிவினை, புரிந்துணர்வினை தமிழ் பேசும் மக்களிடையே ஏற்படுத்தும் . கிறித்துவர்கள், முசுலிம்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள், பார்சிகள் என்றழைக்கப்படுகின்ற மக்கள் பிரிவினைரைத் தவிர இந்தியாவிலுள்ள மற்றவர்களையெல்லாம் இப்போது இந்துக்கள் என்றே கொள்ளப்படுகின்றனர். வேத காலம் தொடங்கியுள்ள வரலாற்றை உரிமை கொண்டாடுகின்ற ஒரு மதமே இப்போது இந்து மதம். ஆனால், முன்பு ஒருபோதும் இந்தப் பெயரில் ஒரு மதம் இருந்ததில்லை. ஒவ்வொரு காலத்திலும் இந்தியாவில் உருவான மதங்களையெல்லாம் ஓர் இழையில் கோத்து இணங்க வைத்து ஒரு மதமாக்க நடத்துகின்ற முயற்சிகள் இன்று வரை வெற்றி பெறவில்லை. இசுலாம், கிறித்துவ மதங்கள் புகுந்ததைக் கண்டு மலைத்த இந்தியர்கள் அவர்களுடைய பழைய பகைமையெல்லாம் மறந்து ஒன்றிணைய முயலுகின்றனர் அவ்வளவுதான்.வைதிக மதம், சைவ மதம், வைஷ்ணவ மதம்,புத்த மதம், ஜைன மதம், அத்வைத மதம், கோஸாயி மதம், விசிஷ்டாத்வைத மதம், திராவிட மதம், காபாலிக மதம், தாந்திரிக மதம் எனப் பல மதங்கள் இந்தியாவில் தோன்றின.பிற நாடுகளில் நிகழ்வதைப் போலவே இந்த மதத்தினரும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளவும், தாக்குதல் எதிர்தாக்குதல் நடத்தவும் செய்தனர்.அதன் பலனாக இவற்றில் பல மதங்களும் அழிந்துவிட்டன.
உலகச் சமயங்களின் பாராளுமன்றம் என்ற பெயரில் பல கூட்டங்கள் நடை பெற்றுள்ளன. இவற்றுள் மிகச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது, 1893 இல் சிக்காகோவில் இடம்பெற்ற கூட்டம் ஆகும். உலக மத நம்பிக்கைகளிடையே கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான முதல் முயற்சி இதுவாகும். இந்த நிகழ்வு, அதன் நூற்றாண்டு நிறைவான 1993 ஆம் ஆண்டில் இன்னொரு உலக சமயங்களின் பாராளுமன்றம் என்னும் பெயர் தாங்கிய கூட்டம் ஒன்றால் நினைவு கூரப்பட்டது. இது, உலக சமயங்களின் பாராளுமன்றம் என்னும் பெயரில் தொடர் கூட்டங்கள் நடப்பதற்கு வித்திட்டது. 1893 இன் பாராளுமன்றம் 1893 ஆம் ஆண்டில், கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த 400 ஆவது ஆண்டைக் கொண்டாடுமுகமாக சிக்காகோவில், உலக கொலம்பியக் கண்காட்சி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது. இதற்காக உலகெங்கிலும் இருந்து பலர் சிக்காகோவுக்கு வந்தனர். முன்னெப்போது இல்லாத அளவுக்கு இடம்பெற்ற இந்த ஒன்றுகூடலைப் பயன்படுத்திக் கொண்டு, மகாநாடுகள், பாராளுமன்றங்கள் என்னும் பெயர்களில் பல கருத்தரங்குகளும் இடம்பெற்றன. இவற்றுள் ஒன்றுதான் உலக சமயங்களின் பாராளுமன்றம். செப்டெம்பர் 11 தொடக்கம் செப்டெம்பர் 27 வரை இடம்பெற்ற 1893 ஆம் ஆண்டுப் பாராளுமன்றமே கிழக்கையும், மேற்கையும் சேர்ந்த ஆன்மீக மரபுகளின் பேராளர்கள் ஒன்றுகூடிய முறைப்படியான முதல் நிகழ்வு ஆகும். உலகம் தழுவிய மதங்களிடையேயான முறையான கருத்தாடல்களின் தொடக்கம் என இந் நிகழ்வு இன்று போற்றப்படுகிறது. தாயக அமெரிக்கச் சமயங்கள், சீக்கியம், வேறு சில உள்ளூர்ச் சமயங்களும், புவி மையச் சமயவாதிகளும் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 1993 ஆம் ஆண்டுக் கூட்டத்திலேயே இவை முதன் முதலாகக் கலந்து கொண்டன. அக்காலத்தில் புதிய இயக்கங்களாக இருந்த ஆன்மீகவாதம் (Spiritualism), கிறிஸ்தவ அறிவியல் (Christian Science) ஆகிய சமயங்கள் இக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தன. கிறிஸ்தவ அறிவியலின் நிறுவனரான மேரி பேக்கர் எடி என்பவரும் பேராளராக வந்திருந்தார். ஐரோப்பாவில் ஏற்கெனவே அறிமுகமாகி இருந்தாலும், இக் கூட்டத்தில் பேசப்பட்டதில் இருந்தே பஹாய் சமயம் அமெரிக்காவில் அறிமுகமானது. இலங்கையைச் சேர்ந்த அனகாரிக தர்மபால தேரவாத பௌத்தத்தின் பேராளராகவும், சுவாமி விவேகானந்தர் இந்து சமயத்தின் பேராளராகவும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Via (சித்தர்கள்) angelinmery