மனிதன் தோன்றிய வரலாறு - 3

மணக்கால் அய்யம்பேட்டை | 5:22 PM | Best Blogger Tips
Picture
                                 
                                
சமயங்களில் மனிதன் தோன்றிய வரலாறு
"ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாக இருந்தது. ஆழத்தின் மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். தேவன் வெளிச்சம் உண்டாகக் கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று" என்று தொடங்குகிறது மனிதன் உருவாக்கப்பட்ட வரலாற்றைச் சொல்லும் கிறிஸ்தவ வேதம்.வெளிச்சத்தில் தொடங்கி, ஜலம், ஆகாயம், தரை, புல் பூண்டு, மரங்கள், பகல் இரவு வித்தியாசம், நட்சத்திரங்கள், பறவைகள், மீன்கள், நாட்டு மிருகங்கள், காட்டு மிருகங்கள் என்று தொடர்ந்து மனிதனைப் படைத்தார் என்கிறது கிறிஸ்தவ வேதாகமம். கிறித்துவ வேதம் பொதுவாக வேதம் என்ற சொல் 4 வேதங்களை மட்டுமே குறிப்பவை. வேதம் என்பது 'வித்' என்கிற அறிதல் என்று பொருள்படும் சமஸ்கிருத சொல்லடியில் பிறந்தது. கிறத்துவ வேதம் என்றோ இஸ்லாமிய வேதம் என்றோ குறிப்பது முரண்பாடான சொல். அதற்கு பகரமாக மறை (மரை அல்ல) என்ற தமிழச் சொல்லே ஏற்புடையது. விரும்பினால் புணிதமறை திருமறை போன்ற சொற்களை பயன்படுத்தலாம். மறை என்பது மறைபொருளாக உள்ள இறைவனின் வாக்கு அல்லது இறை பறறிய அறிவு என்பதால் இந்த சொல்லே சிறப்பானது என்பது என்கருத்து. கிறித்துவ வேதாகாமம் என்கிற சொல்லிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. வேதம் + ஆகமம் இரண்டும் இணைந்ததுதான் வேதாகமம் என்பது. இதனையே சைவ சித்தாந்தம் என்கிறார்கள். ஆகமம் என்ற சொல்லுக்கு 'ஒன்றிலிருந்து வந்தது' என்பது பொருள் வேதத்திலிருந்து வநததால் அதனை வேதாகாமம் என்கிறார்கள். வேதாந்தமும் சித்தாந்தமும் ஒன்றல்ல என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்து மதத்தில் இது மாதிரியான மனிதத் தோற்றம் குறித்த கருத்து இருக்கிறதா என்று பார்த்தால் ரிக் வேதத்தில் இருக்கிறது என்று தெரிகிறது.ஐதரேய உபநிஷதத்தின்படி மனிதப் பிறப்பு கீழ்க்கண்டவாறு நிகழ்ந்திருக்கிறது: 
                              ஆரம்பத்தில் கடவுள் ஒருவர் மட்டுமே இருந்தார். இமைக்கின்ற ஏதும் அப்போது இல்லை. (அதாவது கடவுள் அல்லது தேவர்கள் தவிர மற்ற எல்லா உயிரினங்களும் இமைப்பவை என்பது இந்து மதக் கோட்பாடு). 'நான் உலகங்களைப் படைப்பேன்' என்று அவர் நினைத்தார்.அம்பலோகம், மரீசீ லோகம், மரலோகம், ஆபலோகம் ஆகிய உலகங்களைக் கடவுள் படைத்தார்.அம்பலோகம் (கடவுள் இருக்கும்) சொர்க்க லோகத்துக்கு மேலே உள்ளது. அம்பலோகத்துக்கு சொர்க்கம் ஆதாரமாக உள்ளது.மரீசி லோகம் ஒளியுலகங்கள் நிறைந்த இடைவெளி. மரலோகம் என்பது பூமி. பூமிக்குக் கீழே உள்ளது ஆபலோகம்.உலகங்களைப் படைத்து விட்டேன்; இனி உலகின் காவலர்களைப் படைப்பேன் என்று கடவுள் நினைத்தார். பிறகு தண்ணீரிலிருந்தே திரட்டி பிரம்ம தேவனை உண்டாக்கினார்.
பிரம்ம தேவனைப் பற்றி கடவுள் சிந்தித்தார்.
பிரம்ம தேவனின் வாய் பிளந்தது. வாயிலிருந்து பேச்சு வெளி வந்தது. பேச்சிலிருந்து நெருப்பு வெளி வந்தது.

மூக்கு தோன்றியது. மூக்கு பிளந்தது. மூக்கு துவாரங்களில் இருந்து மூச்சு வந்தது. மூச்சிலிருந்து காற்று தோன்றியது.
கண்கள் தோன்றின. கண்கள் பிளந்தன. அவற்றிலிருந்து பார்வை தோன்றியது. பார்வையிலிருந்து சூரியன் தோன்றினான்.
காதுகள் தோன்றின. அவை பிளந்த போது கேட்கும் தன்மை உண்டாயிற்று. அதிலிருந்து திசைகள் தோன்றின.
தோல் உண்டாகியது. தோல் பிளந்து முடிகளும் முடிகளில் இருந்து மூலிகைகளும் செடிகளும் தோன்றின.
இதயம் தோன்றியது இதயம் பிளந்த போது மனமும் மனத்திலிருந்து சந்திரனும் தோன்றின.
தொப்புள் தோன்றியது. பிளந்த தொப்புளில் இருந்து அபானனும் அபானனிலிருந்து மரணமும் தோன்றின.
குறி தோன்றியது. பிளந்த குறியிலிருந்து விந்துவும் விந்திலிருந்து தண்ணீரும் தோன்றின. படைக்கப்பட்ட இவை யாவும் பெரிய கடலில் விழுந்தார்கள். பிரம்ம தேவன் அவற்றைப் பசி தாகத்துக்கு உள்ளாக்கினார். 'நாங்கள் தங்கி உணவை உண்பதற்கு எங்களுக்கு ஓர் இடத்தைக் காட்டுங்கள்' என்று அவர்கள் பிரம்ம தேவனிடம் கேட்டார்கள். பிரம்மதேவன் அவர்களுக்கு ஒரு பசுவைக் கொண்டு வந்தார்.'இது எங்களுக்குப் போதாது' என்று அவர்கள் கூறினார்கள். அவர் ஒரு குதிரையைக் கொண்டு வந்தார். 'இது எங்களுக்குப் போதாது' என்று அவர்கள் கூறினார்கள். பிறகு பிரம்ம தேவன் அவர்களுக்காக ஒரு மனிதனைக் கொண்டு வந்தார். அவனைக் கண்டதும் அவர்கள் 'ஆகா, இவன் சிறப்பாகப் படைக்கப்பட்டவன்' என்று கூறினார்கள். அவர்களிடம் பிரம்ம தேவன் 'அவரவர்க்கு உரிய இடங்களில் புகுந்து கொள்ளுங்கள்' என்றார்.
நெருப்பு பேச்சாகி வாயில் புகுந்தது.
காற்று பிராணனாகி மூக்கில் புகுந்தது.
சூரியன் பார்வையாகிக் கண்களில் புகுந்தது.
திசைகள் கேட்கும் தன்மையாகிக் காதுகளுக்குள் புகுந்தன.
மூலிகைகளும் செடி கொடிகளும் முடிகளாகித் தோலில் புகுந்தன.
சந்திரன் மனமாகி இதயத்தில் புகுந்தது.
மரணம் அபானனாகித் தொப்புளில் புகுந்தது.
தண்ணீர் விந்துவாகிக் குறியினுள் புகுந்தது.

பசியும் தாகமும் பிரம்மதேவனை அணுகி 'நாங்கள் இருவரும் தங்குவதற்கு ஓர் இடத்தைத் தெரிவியுங்கள்' என்று கேட்டன. அதற்கு பிரம்ம தேவன், "இந்தத் தேவர்களிடம் உங்களுக்கு இருப்பிடம் அளிக்கிறேன். அவர்களின் உணவில் பங்குதாரராகவும் ஆக்குகிறேன்" என்றார். அதனால் எந்த தேவனுக்கு உணவு அளிக்கப்பட்டாலும் பசியும் தாகமும் அதில் பங்கேற்கின்றன. "உலகங்களையும் அதன் காவலர்களையும் படைத்து விட்டேன். இனி அவர்களுக்கு உணவை உண்டாக்குவேன்" என்று கடவுள் நினைத்தார். கடவுள் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தார். தண்ணீரில் இருந்து ஓர் உருவம் தோன்றியது. அது உணவே. கடவுள் படைத்த உணவு திரும்பி ஓட ஆரம்பித்தது. மனிதன் தன்னுடைய வாக்கினால்,முகர்வதன் மூலம், பார்வையால், கேட்கும் திறன் மூலம், தொடு உணர்ச்சியால், மனத்தால் எல்லாம் உணவைப்பிடிக்க முயன்று தோற்றான்.அதனால் தான் உணவு என்று சொல்வதாலேயோ,முகர்வதனாலேயோ, தொடுவதானாலேயோ, கேட்பதனாலேயோ, நினைப்பதனாலேயோ திருப்தி அடைய முடிவதில்லை. ஓடுகின்ற உணவைத் தன் அபானன் மூலம் பிடிக்க முடிந்தது மனிதனால். எனவே அபானனே உணவின் மூலம் மனிதனைத் தாங்குகிறது. ஐதரேய உபநிஷதம் மூன்று அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. முதல் அத்தியாயத்தில் கடவுள் உலகத்தையும் மனிதனையும் உணவையும் படைத்தது பற்றிக் கூறும் இந்தப் பகுதி இவ்வளவு தான் மொத்தமே. இதில் பெண்ணைப் பற்றி ஒன்றுமே சொல்லப்படவில்லை என்பதோடு உயிரினங்களின் படைப்பு சம்பந்தமான வரிசையும் விவரிப்பும் எந்த அளவுக்கு அறிவியல் பூர்வமாக இருக்கிறது.
                             வேதங்களில் மனிதன் தோன்றிய வரலாறு வேதங்கள் வேறு உபனிஷத் வேறு, வேதங்களில் சொல்லாததை பின்னர் மக்கள் சேர்த்துக்கோண்டு அதை உபநிஷத் ஆக்கிவிட்டார்கள்.உபனிஷத் என்றால் அருகில் இருந்து கேட்பது, பெரும்பாலும் அதை துணை வேதம் என்ற ரீதியில் வைத்துக்கொள்வார்கள். பிரம்மாவின் கனவில் தான் இந்த உலகம் , மனிதர்கள் எல்லாம் தோன்றினார்கள் என்பதும் ஒரு கருத்து, நீங்கள் சொல்வதும் அதனோடு ஒத்துப்போகிறது. பிரம்மா மனசால் நினைத்தாலே அது நிறைவேறிவிடுமாம்.அப்படி மனசால் நினைத்தே பிரம்மாவிற்கு மகன் கூட பிறந்தானாம் அவர் பெயர் சனத் குமாரர் என்கிற சுஜாதர்! பிரம்மாவின் ஒரு நாள் கல்பம் என்பார்கள் அதில் இரவு மட்டும் ... நான்கு யுகங்களும் சேர்ந்து எத்தனை வருடமோ அவ்வளவு காலம், அதனால் நான்கு யுகம் முடிந்தால் உலகம் அழிந்து விடும் , அதாவது பிரம்மா கனவு கலைந்ததும் உலகம் அழிந்து விடும் என்பார்கள். கலியுகமே கடைசி யுகம் என்பதால் , கலி முத்திப்போச்சு லோகம் அழிய போகுதுனு சில பெருசுகள் சொல்வதும் அதனால் தான்.கலியுகம் முடிந்ததும் பிரம்மாவின் தூக்கம் கலைந்து எழுந்து விடுவார் அப்போது தானாகவே உலகம் அழிந்து விடும். 652 கல்பம் என்று நினைக்கிறேன் , அது முடிந்தால் இப்போது இருக்கும் பிரம்மாவும் அழிந்து விடுவாராம், பின்னர் அடுத்த பிரம்ம பதவிக்கு ஒருவரை நியமிப்பார்களாம், அப்படி அடுத்த பிரம்மாவாக நியமிக்கப்படுவது யார்னு இப்போவே பூமியில் இருப்பவர்கள் வேதத்தில் சொல்லிட்டாங்களாம், அடுத்த பிரம்மா ஆஞ்சநேயராம்! பிரம்மா உருவாக்கின மனுசனே அடுத்த பிரம்மா யாருனு சொல்லுற அளவுக்கு திறந்த வெளியாக தெய்வங்கள் இருக்கு :-)) வேதங்கள் உபநிஷத்துகள் குறித்து எனக்கு ஆழ்ந்த வாசிப்பில்லை என்றாலும், அவை கடவுள் குறித்து பேசுவது என்பது பிரம்மம் குறித்தவையே. கடவுள் என்பதும் இறைவன் என்பதும் வேறுபாடான தத்துவ உள்ளடக்கங்களைக்  கொண்டவை. உதாரணமாக அல்லா என்கிற அரபிச் சொல்லிற்கு பொருள் இறைவன் என்பதுதான். அதாவது அரபி தாய்மொழியாகக் கொண்ட கிறித்தவனோ யூதனோ அல்லது இந்துவோ அவனது இறைவனை அல்லா என்றே குறிக்க முடியும். அதற்கு இணையான வேறு சொல் உண்டா என்று எனக்கு தெரியவில்லை. அல்லா என்பது பெயர்ச்சொல் அல்ல. அல்லாவை வாணிக்க்கூடிய பல பெயர்கள் உண்டு. அது வேறு. வார்த்தைகளின் உள்ளடக்கங்களில் உள்ள நுட்பமான வித்தியாசத்தை குறிக்கவே இந்த உதாரணம்.
                     வேதம் துவங்கி பின்னாளைய சங்கரரின் அத்வைதம் வரை பிரம்மம் என்கிற ஓரிறைக் கொள்கைதான் பேசப்பட்டுள்ளதாகவே நான் படித்திருக்கிறேன். பிரம்மம் என்பது பிரபஞ்ச விகசிப்பில் இரண்டு நிலைகளைக் கொண்டது. சத்பிரபஞசம் மற்றும் நிஷ்பிரபஞசம் என்பதாக இத்தத்துவ விசாரங்கள் செல்கின்றன. ஆனால் இப்பதிவிலான வர்ணனை நுட்பமான பல சங்கேதங்களைக் கொண்டதாக உள்ளது. மிகவும் ஆர்வமூட்டக்கூடிய வர்ணனை. அவசியம் அந்த உபநிஷத் பகுதிகளை படிக்கத் தூண்டுவதாக உள்ளது. முன்பு ராகுல சாங்கிருத்யானின் இநதிய தத்துவ வரிசை நூல்களில் படித்தது நினைவில் இல்லை. இந்தவகை விளக்கம் உங்கள் மூலம்தான் அறிகிறேன். இந்த வர்ணனை பல முரண்களைக் கொண்டிருந்தாலும் அதன் உவமைகள் அற்புதமானவை. குறிப்பாக புலன்கள் பற்றிய வர்ணனை. நான்கு வேதங்களையும் அலைகள் வெளியீட்டகம் தமிழில் செம்பதிப்பாக வெளியிட்டுள்ளது. வழக்கம்போல வாங்கி பிரிக்காமல் ஊரில் வைத்திருக்கிறேன். ஒரே ஒரு முரண் மட்டும். 'நான் உலகங்களைப் படைப்பேன்' என்று அவர் நினைத்தார்.இதில் நினைவு என்பது முன்பே ஒருவருக்குள் சேகரித்து வைக்கப்பட்டுள்ள அல்லது ஒருவருக்குள் பிரசன்னமாகியுள்ள மொழியால் மட்டுமே சாத்தியம். மொழியில்லாமல் நினைவும் இல்லை சிந்தனையும் இல்லை. சிந்திப்பது மொழியால்தான் எனும்போது கடவுள் சிந்தித்த மொழி கடவுளுக்கு முன்பானதாக இருக்க வேண்டும். அப்படியெனில் கடவுளுக்கு முன்பு மொழியைத் தோற்றுவித்தவர் யார்? என்கிற கேள்வி வரும். கடவுளையும் மொழி இயக்குவதாக மாறிவிடும். அதனால்தான் சைவசித்தாந்தம் சிவனை நாதவடிவானவன் நாதரூபன் என்கிறது. நாதம் என்பது இசை. இசை என்பது ஒழுங்கப்படுத்தப்பட்ட ஓசை. அதாவது அரூபமான மொழி. அதனால்தான் எல்லா மதங்களும் சில ஓசைகளை உதாரணமாக ஓம் என்கிற பிரணவம்போல மந்திர வடிவஙகளாக வைத்துள்ளன. ஓசைக்கும் உளவியலுக்கும் உள்ள உறவு இதனை விளக்கும். அது மற்றொரு விவாதம். சைவ சித்தாந்தத்தின்படி கடவுள் உலகை மாயையிலிருந்தே படைத்தார் என்பது. இந்த மாயை என்பது குவாண்டம் பிஸிக்ஸில் சொல்லப்படும் வெறுமை (emptiness) போன்றது. அல்லது விசைத்துகள் நிறைந்த ஒருவகை புலம் எனலாம். ஏனேனில் நவீன இயற்பியலில் வெறுமை என்கிற empty ஆக உள்ள ஒரு வெளியே இல்லை. ஆக, இந்திய சித்தாந்தங்கள் மற்றும் வேதாந்தங்கள் ஆகியவை படிக்க படிக்க வியப்பூட்டும் மற்றும் மலைப்பூட்டும் ஒரு சிகரப்பயணம். உங்களது உலகத் தோற்றம் பற்றியவை பயனுள்ள பல புதிய செய்திகளைத் தருகிறது. இந்த உலகத் தோற்றம் பற்றிய வர்ணனை தண்டவாளங்களில் ஒன்றான வேதாந்தத்தை (வைணவ) அடிப்படையாக் கொண்டது. மற்றொன்றான சித்தாந்தத்தை (சைவ) அடிப்படையாகக் கொண்டது அல்ல. மாயை என்பதை வேதாந்திகள் விளக்குவதற்கும் சித்தாந்திகள் விளக்குவதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. விசை பற்றிய நியூட்டனின் கருத்துக்கும் ஐன்ஸ்டினின் கருத்துக்கும் உள்ள வேறுபாடு போன்றது. சைவசித்தாந்தம் உலகத் தோற்றத்தை மாயை அடிப்படையில் விளக்குவதால் இதனை பொதுவான இந்து இறையயில் பார்வையாக என்பது
                           தமிழ் இலக்கியத்தில் மனித தோற்றம். உலகில் அகழ்வாய்வுச் சான்று ஒன்று கூட இன்றி அனைத்து வரலாற்றுக் கோட்பாடுகளையும் விடச் செல்வாக்குடன் கேள்வி கேட்பாரின்றி நிற்பது “ஆரிய இனக் கோட்பாடு” ஒன்று தான். அந்தக் கோட்பாட்டைத் தூக்கிக் குப்பையில் வீசினால் தான் உண்மையான குமரிக் கண்ட, தமிழக, இந்திய, ஏன் உலக வரலாறு மட்டுமின்றி மனித வரலாறே வெளிச்சத்துக்கு வரும். பாவாணர் முதல் பல்வேறு தமிழ் ஆய்வர்களும் தமிழ் இலக்கியங்களை விட சமற்கிருத நூல்களிலிருந்து தான் குமரிக் கண்டம் பற்றிக் கூடுதலான செய்திகளைத் தர முடிகிறது. தென் அரைக் கோளத்தில் இருந்த “ரூட்டா” என்ற நிலப்பகுதி கடலினுள் முழுகிய போது அங்கிருந்த மக்கள் சீனத்துக்கும் மேற்கு நோக்கியும் பாரதத்துக்கும் குடிபெயர்ந்தனர் என்று கூறுகிறது இருக்கு வேதம். மச்ச புராணம், வாயு புராணம் ஆகியவை கடற்கோள் பற்றி விரிவாகப் பேசுகின்றன. நாக நாட்டை 700 காவதம் கடல் கொள்ளும் என்பதறிந்த பூருவ தேசத்து அரசன் படகில் மாவும் மரமும் புள்ளும் ஏற்றி குசராத்துக் கரையில் அவந்தி நாட்டில் கரையேறி காயங்கரை ஆற்றை அடைந்தான் என்கிறது “பழம் பிறப்புணர்ந்த காதை” மணிமேகலையில். அவர்கள் சிந்துக் கரையில் பரவி மேற்கு நோக்கிப் பாரசீகத்தையும் கிழக்கு நோக்கிக் கங்கைச் சமவெளியையும் அடைந்தனர். காயங்கரை ஆறு மணலிணுள் மறைந்துபோக கங்கையும் தொழுனை(யமுனை)யும் இணையும் இடத்தில் கண்ணுக்குத் தெரியாமல் மணலினுள் வந்து கலக்கும் சரசுவதி ஆறு என்று அதனை இன்றும் வழிபடுகின்றனர். சமற்கிருத நூல்களிலிருந்து அபிதான சிந்தமணி, கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி ஆகியவை திரட்டித் தரும் செய்திகளின் படி இமயமலையும் விந்திய மலையும் நில நடுக்கோட்டின் தெற்கிலிருந்து தொடங்கி வடக்கு நோக்கி நீண்டுகிடந்த இரு மலைத் தொடர்கள்; அவற்றுக்கு இடையில் இருந்த நிலம் நடுநாடு (மத்தியப் பிரதேசம்) என்ற செய்திகள் தெரிகின்றன. சீவகசிந்தாமணியில் வருகின்ற சச்சந்தனின் நடுநாடு இதுவாகலாம். இந்தியாவில் இருக்கின்ற மலைகள், ஆறுகளின் பெயர்கள் அனைத்தும் முழுகிப்போன நிலத்திலிருந்த மலைகள், ஆறுகளின் பெயர்களே.
                             இந்தியாவில் கேரளத்திலும், சேலத்திலும் குமரி மாவட்டத்திலும் பறளியாறுகள் ஓடுகின்றன. நெல்லை மாவட்டத்திலும் குமரி மாவட்டத்திலும் தாமிரபரணியாறுகள் ஓடுகின்றன.
துவரைக் கோமான் என்பவன் இடைக் கழகத்தவன். கார்க்கி கூறுவது தவறு. துவார் என்றால் கதவு. கபாடம் என்றாலும் கதவு. கபாடபுரம் தான் துவாரகை →துவரை. தெற்கே கடலினுள் அமிழ்ந்த நிலத்துக்குத் துவரையம்பதி என்ற பெயர் உண்டு என்ற மரபு குமரி மாவட்டத்தில் உருவான அகிலத் திரட்டு அம்மானை என்ற நூலில் பதிவாகியுள்ளது. அய்யா ஒளி என்ற இதழில் நான் எழுதியுள்ள “துவரையம்பதி” என்ற கட்டுரை பார்க்க. கபாடபுரம் அழிந்த பின் அங்கிருந்து குசராத்துக் கரையில் குடியேறியவர்கள் தங்கள் நகரத்துக்குத் துவாரகை என்று பெயரிட்டனர். மகாபாரதம், மதுரை (மாத்ரா = மா + துறை → மாதுறை → மதுரை)யில் ஆண்ட கண்ணனை சிசுபாலன் என்ற நாக அரசன் துரத்த அவன் துவாரகையில் குடியேறியதாகக் கூறுகிறது. இதைக் குமரிக் கண்டத்தில் நிகழ்ந்த மதுரை → கபாடபுரம் இடப்பெயர்ச்சியை நினைவுகூரும் கதைக் கருவாகக் கொள்ளலாம். மகாபாரதம் குமரிக் கண்டத்தில் நடந்த நிகழ்வின் தொன்ம வடிவம். பாம்பைத் தோற்றக்குறியாகக் கொண்ட நூற்றுவர்க்கும் அதாவது நாகர்களுக்கும் இயற்கையில் அதன் எதிரியாகிய பருந்தைக் குலக்குறியாகக் கொண்ட கண்ணணுக்கும் அதாவது யாதவர்களுக்கும் நடந்த போர். அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்கிறார் எரிக் வான் டெனிக்கன்.காண்டவனத்தை (கோண்ட்வானா – காண்டவனம்; இன்று இந்தியாவில் கோண்டு எனும் மக்கள் வாழும் பகுதியின் பெயர். கோண்டுவானா நிலம் என்று கண்டப்பெயர்ச்சிக்கு முன் தென் அரைக் கோளத்தில் அனைத்து நிலப்பரப்பும் திரண்டிருந்த நிலைக்கு ஏன் புவியியங்கியலாளர் பெயர் கொடுத்தனர்?) எரித்து அழிக்கப் புறப்பட்ட கண்ணணும் அருச்சுனனும் பயன்படுத்திய படைக்கலன் (அம்பு?) ஏற்படுத்திய விளைவுகளை நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுக்குண்டின் விளைவுகளோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார் அவர். அசுவத்தாமன் வீசிய ஓர் ஆயுதம் கருவிலிருந்த குழந்தைகள் அனைத்தையும் அழித்ததாம். நூற்றுவரும் சேரர்களின் முன்னோர் என்று பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனை முரிஞ்சியூர் முடி நாகராயர் பாடிய பாடல் மூலம் தெரிய வருகிறது.
அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் (புறம் 1:13-16)
இதன் பொருள் ஐவரைப் பகைத்து போர்க்களத்தில் இறந்த நூற்றுவர்க்கும் சேரலாதன் முன்னோர் கடன் ஆற்றினான் என்பதாகும். மகாபாரதம் கலுழன் சருக்கத்தில் பாம்புகளுக்கும் பருந்துகளுக்கும் உள்ள பகைமை கூறப்பட்டுள்ளது. காண்டவனத்தைக் கண்ணணும் அருச்சுனனும் தீவைத்ததே நாகங்களை (நாகர்களை)க் கொல்லத்தான்.போர் முடிந்து அனைவரும் மடிந்து இறுதியில் கண்ணன் உயிரைக் கால் கட்டைவிரலில் தேக்கி அறிதுயிலில் இருந்த போது அசைந்த விரலைக் குருவி எனக் கருதி அம்பெய்து கண்ணனின் சாவுக்குக் காரணமான வேடனின் பெயர் சேரன். அதுவரை நாகமாக இருந்த சேரனின் கொடி இதிலிருந்து தான் வில்லாயிற்றோ? முரிஞ்சியூர் முடி நாகராயர் ஓர் நாகர் என்பது அவர் பெயரிலிருந்து தெரிகிறது. அவர் இரண்டாம் கழகத்தில் துவரையை ஆண்ட கண்ணனின் பிற்காலத்தவராக இருக்க வேண்டும். குமரிக் கண்டத்திலிருந்து முதலில் வெளியேறியவர்கள் தொலைவான இடங்களுக்கே சென்றனர். ஆறுகளின் கரைகளில் பாலை நிலம் முடிந்து மருத நிலம் தோன்றும் மென்காடுகளையே நாடினர். தாம் சென்ற இடங்களில் இரும்பைக் கண்டுபிடித்து கோடரி செய்த பின்னரே அடர்காட்டுப் பகுதிகளை நாடினர். கங்கைச் சமவெளிக்கும் அவ்வாறே. வட இந்தியாவில் அவர்களுக்கு முன்பே குடியிருந்தவர்களோடு போரிட வேண்டியிருந்தது. அந்தப் போரைப் பாடும் முகத்தான் குமரிக் கண்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் சேர்த்துக் கொண்டனர். பாண்டியர்களின் நிலவு மரபு பாண்டவர்-கவுரவர்களுக்கும் சோழர்களின் கதிரவன் மரபு இராமனுக்கும் கூறப்பட்டுள்ளது. மேற்குக் கடற்கரையில் கோவா வரையுள்ள பகுதி மாவலி நாடு (மகாபலி நாடு) என்று சேரர்க்குரியதாகக் கூறப்படுகிறது.
                               தமிழகம் அடர்காட்டுப் பகுதியாக இருந்தது.எனவே இறுதியாகக் குமரிக் கண்டத்திலிருந்து வெளியேறிவர்கள் தாம் அங்கு குடியேறினர்.பரசுராமன் கோடரி கொண்டு கடலில் வீசி சேரநாட்டை உருவாக்கினான் என்பது இதனைத் தான். சேரர்,அவர்களைத் தெடர்ந்து சோழர், இறுதியில் பாண்டியர் குடியேறியதால் சேர,சோழ,பாண்டியர் என்ற வரிசை முறை வழங்குகிறது.நெல்லை மாவட்டத் தாமிரபரணியாற்றுக்குச் சோழனாறு என்ற பெயர் இருந்ததாக வி.கனகசபையார் தன் ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் நூலில் குறிப்பிடுகிறார்.அதன் கரையில் தான் ஆதித்த நல்லூர் அகழ்வாய்வுக் களம் உள்ளது.ஆதித்தன் எனும் கதிரவன் குலத்தினர் சோழர்கள்.அவர்களைத் துரத்திவிட்டுப் பாண்டியன் அமர்ந்தான்.
“மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வெளவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்
புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர் கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தன்னவன்”.
என்று முல்லைக் கலிப்பாடல் (104 : 1-4) இதனைக் குறிப்பிடுகிறது.
சோழன் இந்திரனுடன் உறவு கொண்டவன். இது சிலப்பதிகாரத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்திரன் அவையில் ஆடல் மகளான ஊர்வசி எனும் மாதவியை இந்திரன் சோழ நாட்டுக்கு நாடுகடத்த அவள் வழிவந்த மாதவி தான் கோவலனின் காதலி என்கிறது சிலம்பு. இந்திரன் வாழ்ந்த நாடு தாய்லாந்து என்கிறார் பாவாணர். இந்தரனின் ஊர்தியாகிய வெள்ளையானை அங்கு தான் உள்ளது. அங்குள்ள ஒரு நகரின் பெயர் சம்பாபதி. புகார் நகரக் காவல் தெய்வமும் சம்பாபதியே - மணிமேகலை. சம்பா என்ற ஒரு வகை நெல்லைத் தாய்லாந்திலிருந்து சோழன் கொண்டு வந்திருக்கலாம். இன்று பள்ளர்கள் என்று அழைக்கப்படும் மருதர்கள் அங்கிருந்து சோழர்களுடன் வந்திருக்கலாம். இந்திரனை மருத்துக்கள் என்பவர்களோடு எப்போதுமே இணைத்துப் பேசுகின்றன மறைகளும் தொன்மங்களும்.இந்திரனிடமிருந்து ஒருவகை நெல்லையும் ஒருவகைக் கரும்பையும் சேரன் பெற்றுவந்தான் என்று கழக இலக்கியம் கூறுகிறது.இந்திரனுக்கும் பாண்டியனுக்கும் பகை இருந்ததையும் இந்திரனது மணிமுடியிலிருந்த வளையத்தை உடைத்து அவனது ஆரத்தைப் பிடுங்கிக் கழுத்தில் அணிந்து கொண்டான் பாண்டியன் என்கிறது சிலம்பு. மறைகளில் வரும் இந்திரனும் வருணனும் பொருளிலக்கணத்தில் மருத, நெய்தல் நிலத் தெய்வங்கள் எனும் போது மறைகளையும் தொல்காப்பியத்தையும் யாத்தவர்கள் தமிழர்களே என்பதும் “ஆரியர்கள்” என்பவர்கள் ஐரோப்பியர் உருவாக்கிய கற்பனை என்பதும் 

Via (சித்தர்கள்) angelinmery