மனித வரலாறு - 5 தீவுகள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 6:04 PM | Best Blogger Tips
Picture
                     
தீவு 
என்பது நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு நிலப் பகுதியைக் குறிக்கும்.
                    
தீவு நாடு
 
ஒரு நாடானது ஒரு தீவினிலோ அல்லது ஒரு தீவுக்கூட்டத்திலோ முழுமையாக அடங்கியிருந்தால் அது தீவு தேசம் அல்லது தீவு நாடு எனப்படுகிறது. உலகில் மொத்தமுள்ள நாடுகளில் 47 நாடுகள் தீவு நாடுகள் ஆகும். இவற்றில் பெரும்பாலானவை சிறியவை ஆகும்.

                          கன்னித் தீவுகள் (Virgin Islands) கரிபியக் கடலில் காற்றெதிர் தீவுகளில் அமைந்துள்ள ஒரு தீவுக் குழுமம் ஆகும். இத்தீவுகள் இரண்டாக பிரிக்கப்பட்டு பிரித்தானியாவாலும் அமெரிக்காவாலும் ஆட்சி செய்யப்படுகின்றன. வெர்ஜின் தீவுகளைக் கண்ட முதல் ஐரோப்பியர் கிரிஸ்டோபர் கொலம்பஸ் ஆவார் இவர் 1493 ஆம் ஆண்டு அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது கடற்பயணத்தின் போது இத்தீவை அடைந்தார். கொலம்பஸ் இத்தீவிற்கு Santa Ursula y las Once Mil Vírgenes (புனித ஊர்சுலாவும் அவரது 1000 கன்னியரும்) எனப் பெயரிட்டார். பின்னர் Las Vírgenes எனச் சுருக்கப்பட்டது. இத்தீவுகளில் வசித்து வந்த அரவாக், கரிப், செர்மிக் இந்தியர்கள் ஐரோப்பிய அடிமைக் காலத்தின் போது ஏற்பட்ட நோய்கள் காரணமாகவோ அல்லது இன அழிப்புகளிந் காரணமாகவோ அழிந்துப் போயினர். பின்னர் இத்தீவுகளிக்ல் கரும்பு பெருந்தோட்டங்களில் வேலைச் செய்வதற்காக ஆப்பிரிக்காவிலிருந்துக் கொண்டுவரப்பட்ட தொழிலாளர்களால் குடியேற்றப்பட்டது. தற்போது கரும்புத் தோட்டங்கள் இல்லையாயினும் வேலைக்காக கொண்டுவரப்பட்ட வேலையாட்களில் பரம்பரையினர் இங்கு வசித்து வருகின்றனர்.
                                 
அமெரிக்க கன்னித் தீவுகள் அமெரிக்கக் கன்னித் தீவுகள் அல்லது அமெரிக்க வெர்ஜின் தீவுகள் கரிபியத்தில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சியின் கிழுள்ள மண்டலமாகும். இது கன்னித் தீவுக் கூட்டத்தில் சிறிய அண்டிலுசுவில் காற்றுமுகத் தீவுகளில் அமைந்துள்ளது. அமெரிக்கக் கன்னித்தீவுகள் செயிண்ட்.ஜோன், செயிண்ட். தோமஸ், செயிண்ட்.குரொயிஸ் என்ற முக்கியத் தீவுகளுடன் மிகச் சிறிய ஆனால் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தன்னீர்த் தீவையும் , மேலும் பல சிறியத் தீவுகளையும் கொண்டுள்ளது. இம்மண்டலத்தின் மொத்தப் பரப்பளவு 346.36 சதுர கிலோமீட்டராகும் (133.73 சதுர மைல்). 2000 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணிப்பீட்டின் படி இம்மண்டலத்தில் 108,612 பேர் வசிக்கின்றனர். வெர்ஜின் தீவுகள் கி.மு. 100 அண்டளவில் தென் அமெரிக்காவிலிருந்து வந்த அராவாக் இந்தியர்களால் முதலாவதாக குடியேறேறப்பட்டது. கி.மு. 1500 முதல் இங்கு அமெரிக்க இந்தியர்கள் வசித்தற்காண சான்றுகளும் கிடைக்கப்பட்டுள்ளன.15 ஆம் நூற்றாண்டு வரை இத்தீவுகளில் வசித்து வந்த அராவாக் இந்தியர்களை சிறிய அண்டிலுசுத் தீவுகளிலிருந்து வந்த தீவிர கரிப் இனக் குடிகள் வெளியேற்றினர்கள். வெர்ஜின் தீவுகளைக் கண்ட முதல் ஐரோப்பியர் கிரிஸ்டோபர் கொலம்பஸ் ஆவார் இவர் 1493இல் அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது கடற்பயணத்தின் போது இத்தீவை அடைந்தார். கொலம்பஸ் இத்தீவிற்கு Santa Ursula y las Once Mil Vírgenes ( புனித ஊர்சுலாவும் அவரது 1000 கன்னியரும்) எனப் பெயரிட்டார். பின்னர் Las Vírgenes எனச் சுறுக்கப்பட்டது. அடுத்துவந்த 300 ஆண்டுகளில் அப்போதைய ஐரோப்பிய வல்லரசுகளான ஸ்பெயின், பிரித்தானியா, பிரான்ஸ், டென்மார்க் போன்றவை இத்தீவுகளின் ஆட்சியைக் மாறிமாறிக் கொண்டிருந்தன. டென்மார்க் மேற்கிந்தியக் கம்பனி 1672 இல் செயிண்ட். தோமஸ் தீவிலும் 1694 இல் செயிண்ட்.ஜோன் தீவிலும் குடியேற்றங்களை அமைத்தது. 1733 இல் செயிண்ட்.குரொயிஸ் தீவை பிரான்சிடமிருந்து விலைக் கொடுத்து வாங்கியது. 1754 ஆம் ஆண்டு இத்தீவுகள் டென்மார்க் அரச காலனியாக கொள்ளப்பட்டது. இங்கு விளைவிக்கப்பட்ட கரும்பு காரணாமாக 18ஆம் நூற்றாண்டிலும் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அடிமைமுறை ஒழிக்கப்படும் வரை பொருளாதாரம் வளர்ச்சிக் கண்டது. டென்மார்க் ஆட்சியின் எஞ்சியக் காலப்பகுதியில் இத்தீவுகளின் பொருளாதாரம் வீழ்ச்சிக் கண்டு, தீவின் செலவுகளை பேனுவதற்க்காக டென்மார்க்கிலிருந்து மேலதிக நிதி கொண்டுவரப்பட்டது. 1867 இல் இத்தீவுகளை ஐக்கிய அமெரிக்காவுக்கு விற்பனைச் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன. தீவுகளின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப பல புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டனவெனினும் அவை பெரிய பலனைக் கொடுக்கவில்லை. தீவுகளை அமெரிக்காவுக்கு விற்பனைச் செய்யும் இரண்டாவது சட்டமூலம் டென்மார்க் பாராளுமன்றத்தில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைக் கண்டது .
                                     
முதலாம் உலகப் போரின் போது இத்தீவுகள் ஜேர்மனியால் நீர்மூழ்கி கப்பல் தளமாக பயன்படும் நோக்கில் கைப்பற்றப்படலாம் எனக்கருதியதால் மீண்டும் இத்தீவுகளை வாங்கும் நோக்கில் டென்மார்க்கை அனுகியது. சில மாதங்களாக நடைப்பெற்ற விலைப்பேசல்களின் பின்னர் 25 மில்லியன் அமெரிக்க டொலருக்கு இத்தீவினை விற்பனைச் செய்ய டென்மார்க் அரசர் முடிவு செய்தார். தீவுகளின் பொருளாதார வீழ்ச்சி, மற்றும் விற்பனைச் செய்யாவிடின் அமெரிக்கா தீவுகளைக் கைப்பற்றிக் கொள்ளும் என்ற அச்சம் இம்முடிவுக்கு காரணமாக கொள்ளப்படுகிறது. 1916 ஆம் ஆண்டு டென்மார்க்கில் நடைப்பெற்ற டென்மார்க் மேற்கிந்தியத் தீவுகளிந் விற்பனை மக்கள் கருத்துக் கணிப்பில் விற்பனைக்கு மக்கள் ஆதரவு கிடைத்தது. இதன் படி 1917 ஜனவரி 17 இல் விற்பனைக்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 1917 மார்ச் 31 இல் அமெரிக்கா இத்தீவுகளைப் பெற்றுக் கொண்டது. 1927 ஆமாண்டு இத்தீவில் வசித்தவருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டது. செயிண்ட். தோமஸ் தீவிற்கு தெற்கே அமைந்துள்ள சிறியத் தீவான தன்னீர்த் தீவு இவ்விற்பனையில் உள்ளடக்கப் படவில்லை. 1944 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவால் 10,000 அமெரிக்க டொலர் கொடுத்து வாங்கப்படும் வரை இத்தீவு டென்மார்க் மேற்கிந்தியக் கம்பனி வசமிருந்தது.[4] ஆரம்பத்தில் இத்தீவு அமெரிக்க கூட்டாட்சி அரசால் நேரடியாக நிர்வகிக்கப் பட்டது. 1996 ஆம் ஆண்டு இத்தீவின் 50 ஏக்கர் நிலம் கன்னித்தீவுகள் மண்டலத்துக்கு வழங்கப்பட்டது. மீதமிருந்த 200 ஏக்கர் நிலமும் 2005 ஆம் ஆண்டு 10 அமெரிக்க டொலர் பணப் பரிமாற்றத்தின் மூலம் அமெரிக்க உள்விவகாரத் திணைக்களத்திலிருந்து இத்தீவு கொள்வனவுச் செய்யப்பட்டது. அமெரிக்க வெர்ஜின் தீவுகள் கரிபியக் கடலிலும் அட்லாண்டிக் பெருங்கடலிலும் போட்ட ரிக்கோவிலிருந்து 50 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இம்மண்டலத்தில் நான்கு முக்கிய தீவுகள் அமைந்துள்ளன:செயிண்ட்.ஜோன், செயிண்ட். தோமஸ், செயிண்ட்.குரொயிஸ், தன்னீர்த் தீவு இவற்றுக்கு மேலதிகமாக பல சிறிய தீவுகளையும் மணல்மேடுகளையும் கொண்டுள்ளது. அமெரிக்க கன்னித் தீவுகள் அதன் வெள்ளை கடற்கரைகளுக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களுக்கும் பிரசித்தமானதாகும். செயிண்ட். தோமஸ் தீவு அடங்கலாக பெரும்பான்மையான தீவுகள் எரிமலை மூலம் தோன்றியத் தீவுகளாகக் காணப்படுகின்றன. உயரமான மலை முகடான கிரவுண் மலை (474 மீட்டர்) செயிண்ட். தோமஸ் தீவில் காணப்படுகிறது. மண்டலத்தின் மிகப்பெரியத் தீவான செயிண்ட்.குரொயிஸ் மண்டலத்தின் தெற்கில் அமைந்துள்ளதோடு இது தட்டையான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளது.
                                      செயிண்ட்.ஜோன் தீவின் பரப்பில் அரைவாசிக்கும் மேலானப் பகுதியும் அசெல் தீவின் முழுமையும் பல ஏக்கர் முருகைப் பாறைகளும் அமெரிக்க வனத்துறை சேவைகளுக்கு சொந்தமானதாகும்.
 அமெரிக்க கன்னித்தீவுகள் வட அமெரிக்கப் புவியோட்டினதும் கரிபிய புவியோட்டினதும் எல்லையில் காணப்படுகிறது. இங்கு புவி அதிர்ச்சி, சூறாவளி, சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் காணப்படுகின்றன. அமெரிக்க கன்னித் தீவுகள் ஐக்கிய அமெரிக்காவிற்குரிய மண்டலமாகும். இம்மண்டலதின் குடிகள் சட்டத்தின் படி அமெரிக்க குடிகளாக இருந்தாலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க முடியாது. ஆனால் இம்மண்டலத்தின் குடிகள் அமெரிக்காவின் 50 மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் குடியேறும் போதுதிபர் தேர்தலில் வாக்களிக்க உரிமைப் பெறுகின்றனர். இங்கு கன்னித்தீவுகளின் சனநாயகக் கட்சி, கன்னித்தீவுகளின் குடியரசுக் கட்சி, மக்கள் விடுதலை இயக்கம் ஆகிய மூன்று முக்கிய கட்சிகள் இயங்கி வருகின்றன. மேலதிகமாக வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் தேர்தல்களில் போட்டியிடுகின்றார்கள். அமெரிக்க கன்னித் தீவுகளிலிருந்து ஒரு ஒரு பிரதிநிதியை அமெரிக்க காங்கிரசுக்கு தெரிவுச் செய்கிறது. ஆனால் இப்பிரதிநிதியால் குழுநிலை வாக்கெடுப்பில் மட்டுமே கலந்துக் கொள்ள முடியும் காங்கிரஸ் பொது வாகெடுப்பில் கலந்துக் கொள்ள முடியாது. தற்போதைய பிரதிநிதி டொனா கிறிஸ்டீன்சன். மண்டல மட்டத்தில் 15 சட்டவாக்கக் கழக உறுப்பினர்கள் ( செயிண்ட்.குரொயிஸ் மாவட்டதிலிருந்து 7 பேர், செயிண்ட். தோமஸ் மற்றும் செயிண்ட்.ஜோன் மாவட்டங்களிலிருந்து 7 பேர் மற்றும் செயிண்ட்.ஜோன் மாவட்டதிலிருந்து 1 விசேட பிரதிநிதி) ஓரவை சட்டவாக்கக் கழகத்துக்கு 4 ஆண்டு பதவிக் காலத்துக்குத் தெரிவுச் செய்யப்படுகின்றனர். 1970 ஆம் ஆண்டிலிருந்து நான்காண்டுகளுக்கு ஒரு முறை மண்டல ஆளுனர் ஒருவரை வாக்கெடுப்பு மூலம் தெரிவுச் செய்து வந்துள்ளது. 1970க்கு முன்னர் ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ஆளுனர்களை நியமித்து வந்தார்.
                                      அமெரிக்க கன்னித்தீவுகள் மாவட்ட, உயர்,உச்ச நீதிமன்றங்களைக் கொண்டுள்ளது. மாவட்ட நீதிமன்றம் சட்ட ஒழுங்க்குக் பொறுப்பாக உள்ளது. உயர் நீதிமன்றம் அமெரிக்க கன்னித் தீவுகளின் நீதிக்கு பொறுப்பாக உள்ளதோடு உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத்திலிருந்து வரும் வினவல்களை விசாரிக்க பொறுப்பாக உள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆளுனராலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமெரிக்க அதிபராலும் நியமிக்கப் படுகின்றனர். ஐக்கிய அமெரிக்காவால் இத்தீவுகளுக்கு விடுதலை அல்லது மாநில அந்தஸ்த்து வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்புகள் மக்கள் ஆதரவைப் பெறாத நிலையில் இத்தீவுகள் தொடர்ந்தும் ஐக்கிய அமெரிக்காவின் மண்டலாமாக இருக்கும். இத்தீவுகளுக்கு விடுதலை அளிக்க அமெரிக்கா முன்வந்ததைக் கருதாமல் ஐக்கிய நாடுகள் அவையின் அடிமை நாடுகள் ஒழிப்புக் குழு அமெரிக்க கன்னித் தீவுகளை சுயாட்சியற்ற மண்டலங்களாக பட்டியலிட்டுள்ளது. உல்லாசப்பிரயாணத் தொழிற்துறை இம்மண்டலத்தின் பொருளாதாரத்தின் முக்கிய பங்கை வகிக்கிறது. இத்தீவுகள் ஆண்டுக்கு அண்ணளவாக 2 மில்லியன் உல்லாசப்பிரயாணிகளைக் கவர்கின்றது. இவர்களில் பெருமபாலோனோர் உல்லாசப் பிரயாணக் கப்பல்கள் மூலமே இங்கு வருகின்றனர். உற்பத்தித் தொழிற்துறையில் பெற்றோலியம் சுத்தீகரிப்பு, ஆடை உற்பத்தி, இலத்திரனியல் உற்பத்தி, ரம் வடிக்கட்டல், மருந்து உற்பத்தி, கடிகார உற்பத்தி போன்றவை முக்கியமானவையாகும். பன்நாட்டு வணிக நிறுவனங்களின் முதலீடுகள் மிகக் குறைவாகக் காணப்பட்டாலும் இத்துறையும் வளர்ந்து வருகின்றது. விவசாயத்துறை சிறியதாகும் பெரும்பாலான உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய பெற்றோலிய சுத்தீகரிப்பகங்களில் ஒன்று செயிண்ட். குரோயிக்ஸ் தீவில் அமைந்துள்ளது.இத்தீவுகள் பகலொளி சேமிப்பு நேரத்தில் பங்குக் கொள்வதில்லை. ஐக்கிய அமெரிக்கா சீர் நேரத்தில் இருக்கும்போது அமெரிக்க கன்னித் தீவுகள் 1 மணித்தியாலம் முன்னால் இருக்கும். ஐக்கிய அமெரிக்கா பகலொளி சேமிப்பு நேரத்தில் இருக்கும்போது ஐக்கிய அமெரிக்காவும் அமெரிக்க கன்னித் தீவுகளும் ஒரே நேரத்தைக் கொண்டுள்ளன. இத்தீவுகள் அயணமண்டல புயல்களுக்கும் சூறாவளிகளுக்கும் ஆளாகின்றன. அமெரிக்க கன்னித்தீவுகள், பாதையில் வாகனங்கள் இடதுபுறமாக பயணிக்கும் வழக்கு கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் ஒரே பகுதியாகும். இருப்பினும் இங்க்குள்ள வாகனங்கள் சாரதி ஆசனத்தை இடதுபுறம் கொண்டவையாக விளங்குகின்றன.
                                        2000 ஆம் ஆண்டு நடைப்பெற்ற மக்கள் தொகை கணிப்பீட்டின் படி இங்கு மொத்தம் 108,612 பேர் வசிக்கின்றனர். இவர்களுள் 76.19% கருப்பினத்தவர்
அல்லது ஆபிரிக்க வம்சாவழியினர்,
 13.09% வெள்ளையினத்தவர்,
7,23% ஏனைய இனத்தவர்,
3.49% கலப்பினத்தவர் ஆவர்.
எந்த இனத்திலும் இலதீனோ அல்லது இஸ்பானிய மரபினர் 13.99% ஆக காணப்பட்டது.
இங்கு 40,648 வீடுகள் காணப்பட்டன, அவற்றுள்
34,7% வீடுகளில் 18 வயதிற்கும் குறைந்த வயதுடைய குழந்தைகள் காணப்பட்டன,
33.2 சதவீதமான விடுகளில் மணமுடித்த தம்பதியினர் மட்டும் வசித்தனர்,
 24.9 சதவீதமான வீடுகள் பெண் குடும்ப தலைவியைக் கொண்டிருந்தன, மேலும்
34.5 சதவீதமாந வீடுகள் குடும்பங்களைக் கொண்டிருக்கவில்லை. எல்லா வீடுகளினது 30.2 சதவீதமான வீடுகளில் தனிநபர்களே வசித்து வந்தனர். 6.3 சதவீதம்மன வீடுகள் 65 வயதிற்கு மேற்பட்டு தனியாக் அவாழும் நபர்களைக் கொண்டிருந்தது. சராசரி வீட்டில் 2.64 பேர் வசிப்பதோடு ஒரு குடும்பத்தில் சராசரியாக 3.34 பேர் வசிக்கின்றனர். இம்மண்டலத்தின் மக்கள் தொகையில் 31.6 சதவீதமானோர் 18 வயதிலும் குறைவானவர்களாவர், 8 சதவீதமானோர் 18 தொடக்கம் 24 வயதுக்குட்பட்டவர்களாவர், 27.1 சதவீதமானோர் 25 வயதுக்கும் 44 வயதுக்குட்பட்டவர்களாவர், 24.9 சதவீதமானோர் 44 தொடக்கம் 64 வயதுக்குட்பட்டவர்களாவர், 8.4 சதவீதமானோர் 64 வயதை விட கூடியவர்களாவர். இடைய வயது 33 ஆகும். ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 91.4 ஆண்களும், 18வயதும் அதற்க்கு மேற்பட்ட வயதைக் கொண்ட ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 87.7 ஆண்கள் காணப்படுகின்றனர். ஆண்டு மக்கள்தொகை வளர்ச்சிவீதம் -0.12% ஆகும். வீடு ஒன்றிந் தளா ஆண்டு வருமானம் $24,704 அமெரிக்க டொலராகவும் குடும்பமொன்றின் தளா ஆண்டு வருமானம் $28,553 அமெரிக்க டொலராகவும் காணப்பட்டது. ஆண்களி சராசரி வருமானம் $28,553 அமெரிக்க டொலராகவும் பெண்களில் அது $28,309 அமெரிக்க டொலராகவும் காணப்பட்டது. 28.7 சதவீமான குடும்பங்களும் 32.5 சதவீதமான மக்களும் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கின்றார்கள்.
                                                ஐக்கிய அமெரிக்க கன்னித் தீவுகள் இரண்டு மாவட்டங்களாகவும் 20 துணை மாவட்டங்களாகவும் பிரித்து நிர்வகிக்கப் படுகிறது. மாவட்டங்களும் துணை மாவட்டங்களும் பின்வறுமாறு: செயிண்ட்.குரொயிஸ் செயிண்ட். தோமஸ்/செயிண்ட்.ஜோன்/தன்னீர்த் தீவு செயிண்ட்.
 
குரொயிசின் துணை மாவட்டங்கள்:
1. அன்னாஸ் ஓப் கிராமம்
2. கிறிஸ்டியன்ஸ்டெட்
3. கிழக்கு மூளை ( செயிண்ட்.குரொயிஸ்)
4. பிரெட்ரிக்ஸ்டெட்
5. வடமத்திய
6. வடமேற்கு
7. சியொன் பண்ணை
8. தென் மத்திய
9. தென்மேற்கு செயிண்ட்.
 
தோமசின் துணை மாவட்டங்கள்:
1. சார்லொட் அமலீ
2. கிழக்கு மூளை(செயிண்ட். தோமஸ்)
3. வடபக்கம்
4. தென்பக்கம்
5. டுடு
6. அசல் தீவு
7. மேற்கு மூளை செயிண்ட்.
 
ஜோனின் துணை மாவட்டங்கள் :
1. மத்தி
2. கொரல் குடா
3. குருஸ் குடா
4. கிழக்கு மூளை (செயிண்ட்.ஜோன்).

                                              கலாபகசுத் தீவுகள்('Galápagos Islands, Archipiélago de Colón; வேறு ஸ்பானியப் பெயர்கள்: Islas de Colónumio அல்லது Islas Galápagos) என்பன பசிபிக் கடலில் எக்குவாடோருக்கு மேற்கே 965 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் தீவுக் கூட்டங்கள் ஆகும் (
கிட்டத்தட்ட 30,000 பேர் வசிக்கும் இத்தீவுகள் தென் அமெரிக்காவின் எக்குவாடோர் நாட்டின் ஒரு மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் "புவெர்ட்டோ பாக்குவெரிசோ மோரெனோ" (Puerto Baquerizo Moreno). சார்ள்ஸ் டார்வின் கடல் வழியே HMS Beagle என்னும் கப்பலில் காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகளுக்காக இத்தீவுகள் பெருமை அடைந்தன. இங்கு 13 பெரிய தீவுகளும் 6 சிறிய தீவுகளும் 107 சிறிய தீவுத் திட்டுகளும் உள்ளன. இந்தத் தீவுகள் புவியியல் உயர் வெப்பப் பகுதியில் அமைந்துள்ளதால் இங்கு எரிமலை வெடிப்பு அடிக்கடி இடம்பெறுவதுண்டு. மிகப் பழைய தீவு சுமார் 5 முதல் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. மிகவும் அண்மையில் 2007 இல் இடம்பெற்ற எரிமலை வெடிப்புகளினால் இசபெல்ல தீவு, பேர்டினட்டீனா தீவு ஆகியன உருவாகின. கலாபகசுத் தீவுகளுக்கு ஐரோப்பியரின் வருகை மார்ச் 10, 1535 இல் ஆரம்பமானது. பனாமாவின் ஆயரான ஃபிறே டொமாஸ் டெ பேர்லாங்கா என்பவரின் தலைமையில் வந்த கப்பல் பெருவுக்குச் செல்லும் வழியில் இங்கு தரையிறங்கியது. 1593ல் ஆங்கிலேயர் "ரிச்சார்ட் ஹோக்கின்ஸ்" என்பவன் வந்திறங்கினான். பொதுவாக 19ம் நூற்றாண்டின் முதற்பகுதி வரை இத்தீவுகள் சென்னமெரிக்காவில் இருந்து ஸ்பெயினுக்கு பொன், வெள்ளி போன்றவற்றைக் கடத்தும் கடற்கொள்ளைக்காரர்களின் புகலிடமாகவே இருந்து வந்திருக்கிறது. 1793இல் ஜேம்ஸ் கோல்நெட் என்பவர் பசிபிக் கடலில் திமிங்கில வேட்டையாடுவோருக்கான மையமாக இதனை உருவாக்கினார். இவர்கள் இத்தீவுகளில் ஆயிரக்கணக்கான ஆமைகளை அவற்றின் கொழுப்புகளுக்காக வேட்டையாடிக் கொன்றனர். இந்த ஆமை வேட்டைகளினால் இத்தீவுகளின் பல உயிரினங்கள் முற்றாக அழிந்தோ அல்லது அவற்றின் எண்ணிக்கை குறைந்தோ வந்தது. எக்குவாடோர் கலாபகசுத் தீவுகளை பெப்ரவரி 12, 1832இல் தன்னுடன் இணைத்துக் கொண்டது. இவை எக்குவாடோரின் தீவுக்கூட்டங்கள் என அழைக்கப்பட்டன. இதன் முதலாவது ஆளுநர் ஜெனரல் ஜோசே டெ வில்லாமில் என்பவர் பல சிறைக்கைதிகளை இங்கு கொண்டுவந்து குடியேற்றினார். அதன்பின்னர் பல அக்டோபர், 1832இல் பல விவசாயிகளும் குடியேறினர்.

பிரித்தானிய  தீவுகள்.

Picture

                                பிரித்தானியத் தீவுகள் (British Isles) எனப்படுபவை ஐரோப்பாக் கண்டத்தின் வடமேற்குக் கரையில் பெரிய பிரித்தானியா, அயர்லாந்து தீவு, மற்றும் சிறிய தீவுகளை உள்ளடக்கிய தீவுகள் ஆகும். பிரித்தானியத் தீவுகள் என்னும் பெயருடன் அயர்லாந்தை இணைப்பதற்குப் பெரும்பாலான ஐரிய மக்கள் எத்ர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அயர்லாந்து அரசும் இச்சொல்லை அதிகாரபூர்வமாகப் பயன்படுத்துவதில்லை. இத்தீவுகளில் ஐக்கிய இராச்சியம், அயர்லாந்துக் குடியரசு என இரண்டு தனியாட்சியுடைய நாடுகள் உள்ளன. அத்துடன் இத்தீவுகளில் முடியாட்சிக்குட்பட்ட மாண் தீவு, கால்வாய் தீவுகள், ஆகியன உள்ளன.

                                    பேக்கர் தீவு (Baker Island) (ஒலிப்பு: /ˈbeɪkər/) ஓர் வாழ்வோர் இல்லாத நிலநடுக்கோட்டிற்கு சற்றே வடக்கே மத்திய பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பவளப்பாறை திட்டாகும்.இது ஹொனலுலுவிலிருந்து 3,100 கி.மீ(1,700 மைல்கள்) தொலைவில் உள்ளது.ஹவாய் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே சரிபாதி தொலைவில் உள்ள இந்தத் தீவு அமெரிக்க ஆளுமையின் கீழ் உள்ளது.இதன் அண்மையில் உள்ள தீவு வடக்கே 68 kilometres (37 nmi) தொலைவில் உள்ள ஹவுலாந்து தீவு ஆகும்.இதன் பரப்பளவு 1.64 square kilometres (410 acres), மற்றும் கடற்கரை நீளம் 4.9 kilometres (3.0 mi). வானிலை நிலநடுக்கோட்டு வலயத்தில் உள்ளதாகும். குறைந்த மழையும் நிறைந்த காற்றும் கூடுதல் சூரிய ஒளியும் மணற்பாங்கான இத்தீவில் நிலவுகின்றன.
இந்தத் தீவு பேக்கர் தீவு தேசிய வனவாழ்வு உய்வகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடிநீரில்லாத பேக்கர் தீவில் மரங்கள் வளருவதில்லை. நான்கு வகை புற்கள்,கொடிகள் மற்றும் புதர்கள் அங்குமிங்கும் வளர்வதைக் காணலாம்.கடற்பறவைகள்,கடற்கரைப் பறவைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு புணர்ச்சிகால மற்றும் பேறுகால உய்விடமாக உள்ளது. இத்தீவு பல அருகிவரும் மற்றும் அழிந்துவரும் இனங்களுக்கு புகலிடமாக உள்ளது.கடற்கரைப் பறவைகள் தவிர பச்சை ஆமைகள் போன்ற ஆமையினங்களின் புகலிடமாகவும் உள்ளது.

                                            பிரித்தானிய கன்னித் தீவுகள் கரிபியத்தில் போட்ட ரிக்கோவுக்கு கிழக்கில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த மண்டலமாகும். இது கன்னித் தீவுக் கூட்டத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது தீவுக் கூட்டத்திந் எஞ்சிய பகுதியில் அமெரிக்க வெர்ஜின் தீவுகள் அமைந்துள்ளது. பிரித்தானிய கன்னித் தீவுகளில் டொர்டோலா, வெர்ஜின் கோர்டா, அனேகாடா, ஜோஸ்ட் வன் டைக் என்ற முக்கிய நான்கு தீவுகளும் மேலும் பல சிறிய தீவுகளும் மணல்மேடுகளும் காணப்படுகின்றன. இங்கு அண்ணளவாக 15 தீவுகளில் குடியேற்றங்கள் காணப்படுகின்றன. மண்டலத்தில் காணப்படும் மிகப்பெரிய தீவான டொர்டோலா சுமார் 20 கி.மீ. (சுமார் 12 மைல்) நீளமும் 5 கி.மீ.(சுமார் 3 மைல்) அகலமும் கொண்டதாகும். இம்மண்டல அண்ணளவாக 22,000 மக்களைக் கொண்டுள்ளது இதில் சுமார் 18,000 பேர் டொர்டோலாவில் வசிக்கின்றனர். மண்டலத்தில் தலைந்கரான ரோட் டவுண் டொர்டோலாவில் அமைந்துள்ளது. வெர்ஜின் தீவுகள் கி.மு. 100 அண்டளவில் தென் அமெரிக்காவிலிருந்து வந்த அராவாக் இந்தியர்களால் முதலாவதாக குடியேறேறப்பட்டது. கி.மு. 1500 முதல் இங்கு அமெரிக்க இந்தியர்கள் வசித்தற்காண சான்றுகளும் கிடைக்கப்பட்டுள்ளன.[1] 15 ஆம் நூற்றாண்டு வரை இத்தீவுகளில் வசித்து வந்த அராவாக் இந்தியர்களை சிறிய அண்டிலுசுத் தீவுகளிலிருந்து வந்த தீவிர கரிப் இனக் குடிகள் வெளியேற்றினர்கள். வெர்ஜின் தீவுகளைக் கண்ட முதல் ஐரோப்பியர் கிரிஸ்டோபர் கொலம்பஸ் ஆவார் இவர் 1493இல் அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது கடற்பயணத்தின் போது இத்தீவை அடைந்தார். கொலம்பஸ் இத்தீவிற்கு Santa Ursula y las Once Mil Vírgenes ( புனித ஊர்சுலாவும் அவரது 1000 கன்னியரும்) எனப் பெயரிட்டார். பின்னர் Las Vírgenes எனச் சுறுக்கப்பட்டது.
                                          எசுப்பானிய பேரரசு 16 ஆம் நூற்றாண்டில் இத்தீவுகளுக்கு உரிமைக் கோரியது எனினும் நிரந்தர குடியேற்றங்களை அமைக்கவில்லை. பின்வந்த ஆண்டுகளில் பிரித்தானியா,நெதர்லாந்து, பிரான்ஸ் Snish டென்மார்க் போன்ற நாடுகள் இத்தீவுகளிற்கு உறிமைக் கோரின. இத்தீவுகளில் முதற்குடிகள் காணப்பட்டமைக்கான சான்றுகள் கிடையாது எனினும் கிட்டிய செயிண்ட்.குரொயிஸ் தீவில் காணப்பட்ட முதற்குடிகள் முற்றாக அழிக்கப்பட்டது. நெதர்லாந்து 1648 ஆம் ஆண்டளவில் டொர்டோலாத்தீவில் நிரந்தர குடியேற்றமொறை அமைத்தனர். 1672 இல் இங்கிலாந்து டொர்டோலாவைக் கைப்பற்றியது, 1680 இல் அனேகாடா, வெர்ஜின் கோர்டாத் தீவுகளும் இணைத்துக் கொள்ளப்பட்டன. இருப்பினும் 1672 முதல் 1733 வரையான காலப்பகுதியில் டென்மார்க் அருகிலுள்ள செயிண்ட். தோமஸ், செயிண்ட்.குரொயிஸ் தீவுகளைக் கைப்பற்றிக் கொண்டது. பிரித்தானியர் இத்தீவுகளை அவற்றில் கேந்திர முகியத்துவம் வாய்ந்த இடத்துக்காக வைத்திருந்தாலும் இத்தீவில் வர்த்தாக நடவடிக்கைகளையும் ஆரம்பித்து வைத்தனர். இங்கு ஆரம்பிக்கப்பட்ட கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அடிமைகளாக ஆபிரிக்காவிலிருந்து மக்கள் கொண்டுவரப்பட்டனர். 1800களில் நடுப்படுகுதிவரை இக்கரும்புத் தோட்டங்கள் இத்தீவுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்கியது. 1800களின் நடுப்பகுதிக்குப் பின்னர், ஐக்கிய அமெரிக்காவில் கரும்பு மற்றும் ஐரோப்பாவில் சினிபீட் வளர்க்கத் தொடங்கியதன் காரணமாகவும் , அடிமைமுறை மண்டலத்துள் நீக்கப்பட்டது காரணமாகவும் பல நாசகார சுறாவளிகள் காரணமாகவும்  கரும்பு உற்பத்தி பெருமளவில் குறைந்து, இத்தீவு பொருளாதார வீழ்ச்சியை எதிர் கொண்டது. 1917 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா செயிண்ட். தோமஸ், செயிண்ட்.குரொயிஸ் தீவுகளை 25 மில்லியன் அமெரிக்க டொலர் விலைக் கொடுத்து வாங்கி அமெரிக்க வெர்ஜின் தீவுகள் எனப் பெயர் மாற்றம் செய்தது. இம்மண்டலத்தின் பெயர் வெர்ஜின் தீவுகள் என்பதேயானாலும் அமெரிக்க மண்லத்திலிருந்து இத்தீவுகளை வேறுபடுத்தும் நோக்கில் 1917 இல் இருந்து இம்மண்டலம் பிரித்தானிய வெர்ஜின் தீவுகள் என்றே அழைக்கப்பட்டு வந்தது. 2000 ஆண்டுகளில் ஆரம்பம் முதல் போட்ட்ரிகோ தனது கலேப்ரா, வியேகுயிஸ் என்றத் தீவுகளை உல்லாசப்பிரயாணிகளைக் கவரும் பொருட்டு எசுப்பானிய வெர்ஜின் தீவுகள் என்று அழைத்து வருகின்றது.
                                 பிரித்தானிய வெர்ஜின் தீவுகள், காற்றுமுகத்தீவுகளில் ஒரு பகுதியாகவும், செயிண்ட். கிட்ஸ் நெவிசின் ஒரு பகுதியாகவும் தீவில் இருந்த பிரித்தானிய அதிகாரிகள் மூலமாகவும் என்றவாறு பலவராக ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளன. தனியான காலனித்துவம் என்றத் தகுதி 1960இல் வழங்கப்பட்டது மேலும் 1967 இல் சுயாட்சி வழங்கப்பட்டது. தற்போது இத்தீவுகள் பாரம்பரியமாக கடைப்பிடித்துவந்த விவசாயத்தை முதன்மைப் படுத்திய பொருளாதார முறையிலிருந்து நீங்கி உல்லாசப் பிரயாணக் கைத்தொழில், மற்றும் சேவைகள் போன்றவற்றை முதன்மை படுத்தியுள்ளது. பிரித்தானிய வெர்ஜின் தீவுகள் சுமார் 60 உப அயணமண்டலத் தீவுக்ளைக் கொண்டுள்ளது. இவற்றுள் 20 கி.மீ. நீள்மும் 5 கி.மீ. அகலமும் கொண்ட டொர்டோலா தீவு முதல் மனித வாசத்திற்கு பொருந்தாத சிறிய மணல்மேடுகள் வரையடங்கும். வெர்ஜின் தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ள இம்மண்டலத்தின் மேற்கில் அமெரிக்க வெர்ஜின் தீவுகளும் வடக்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே கரிபியக் கடலும் அமைந்துள்ளன. இம்மண்டலத்தின் பெரும்பாண்மையானத் தீவுகள் எரிமலை மூலம் தோன்றியவையாகும். இவை கரடுமுரணனான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளன. அனேகாடா புவியியல் ரீதியாக மண்டலத்தின் ஏனைய தீவுகளிலிருந்து வேறுபட்டத் தீவாகும். இது முருகை பாற்களால் ஆனத் தட்டையான புவியியல் அமைப்பைக் கொண்டத் தீவாகும். டொர்டோலா, வெர்ஜின் கோர்டா, அனேகாடா, ஜோஸ்ட் வன் டைக் என்ற முக்கிய நான்கு தீவுகளுக்கு மேலதிகமாக பின்வரும் தீவுகளும் காணப்படுகின்றன:
 பீஃப் தீவு,
கூப்பர் தீவு ,
ஜிஞ்சர் தீவு,
பாரிய கமனோ,
பாரிய தட்ச் ,
குவான தீவு,
மொஸ்குய்டோ தீவு,
நெக்கர் தீவு ,
நோர்மன் தீவு,பீட்டர் தீவு ,
சால்ட் தீவு
பிரித்தானிய வெர்ஜிந்தீவுகள் ப்ருவக்காற்றுகளால் கட்டுப்படுத்தப்படும் அயணமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. வெப்பநிலை வேறுபாடு மிகச் சிறியதாகவே காணப்படுகிறது. தலைநகரம் ரோட் டவுணில் கோடைக் காலத்தில் அதி கூடிய வெப்பநிலை 32 பாகை செல்சியசாகவும் குளிகாலத்தில் அதுகூடிய வெப்பநிலை 29 பாகை செல்சியசாகவும் காணப்படுகிறது. கோடைக் காலத்தில் அதி குறைந்த வெப்பநிலை 24 பாகை செல்சியசாகவும் குளிகாலத்தில் அதி குறைந்த வெப்பநிலை 21 பாகை செல்சியசாகவும் காணப்படுகிறது. சராசரியாக ஆண்டுக்கு 1150 மி.மி. மழைவீழ்ச்சி கிடைக்கிறது. மிகவும் கூடிய மழைவீழ்ச்சி அக்டோபர், நவம்பர் மாதங்களில் கிடைக்கிறது.ஜூன் தொடக்கம் நவன்பர் வரையான சூறாவளிப் பருவத்தில் சில சூறாவளிகள் இத்தீவைத் தாக்குகின்றன. நிறைவேற்றதிகாரம் அரசியிடமே தங்கியுள்ளது அவருக்குப் பதிலாக பிரித்தானிய பாராளுமன்றின் ஆலோசனைப்படி அரசியால் நியமிக்கப்பட்ட ஆளுனர் ஒருவர் அதிகாரம் செலுத்துகின்றார். வெளியுரவு மற்றும் பாதுகாப்பு ஐக்கிய இராச்சியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. 2007 ஆம் ஆண்டு புதிய யாப்பு ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.இதன் படி அரச தலைவர் பிரதமராவார் இதற்கு முன்னர் இப்பதவி முதலமைச்சர் என் அழைக்கப்பட்டது. இங்கு ஒரு சபையையும் 13 ஆசனங்களையும் கொண்ட சட்டவாக்கக் கழக முறை உள்ளது. தற்போதைய ஆளுனர் டேவிட் பியரே ஆவார், மேலும் தற்போதைய பிரதமர் ற்ல்ஃப் டி. ஓநீள் ஆவார். மண்டலம் 5 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. இவை நிர்வாக அலகுகளாக தொழிற்படுவதைவிட திட்டமிடல் அலகுகளாகவே காணப்படுகின்றன.
உட்பிரிவு                               முக்கிய நகரம்            பரப்புkm²           மக்கள் தொகை(2006 மதிப்பீடு)
அனேகாடா                                                த செட்டில்மண்ட்                              38.6                               204
ஜோஸ்ட் வன் டைக்                             கிரேட் ஆர்பர்                                          8.3                                176
டொர்டோலா                                            ரோட் டவுண்                                         59.2                               16630
வெர்ஜின் கோர்டா                                 ஸ்பெனிஷ் டவுண்                            21.2                                3063
ஏனையத் தீவுகள்                                    பீட்டர் தீவு                                              23.7                               181
பிரித்தானிய வெர்ஜின் தீவுகள்      ரோட் டவுண்                                         151                                   20253
ஏனையத் தீவுகள் என்பதில் மீதமுள்ள எல்லாத்தீவுகளும் அடங்குவதில்லை மாறாக டொர்டோலாவுக்கு தெற்கேயும் வெர்ஜின் கோர்டாவுக்கு தென்மேற்காகவும் காணப்படும் ஜிஞ்சர் தீவு,பீட்டர் தீவு,கூப்பர் தீவு,சால்ட் தீவுகள் மாத்திரமே இதில் அடக்கப்பட்டுள்ளன. ஏனய சிறிய தீவுகள் அவற்றுக்கு அண்மையில் காணப்படும் முக்கிய தீவோடு இணைத்து பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு 6 குடி மதிப்பு மாவட்டங்கள் காணப்படுகின்றன:
குடிப் பதிவு மாவடம்              பகுதி
மாவட்டம்
A                                             வெர்ஜின் கோர்டா
மாவட்டம் B                                              அனேகாடா
மாவட்டம் C                                              கிழக்கு மூளை (டொர்டோலா)
மாவட்டம் D                                              ரோட் டவுண் (டொர்டோலா)மாவட்டம் E                                               மேற்கு மூளை (டொர்டோலா)
மாவட்டம் F                                               ஜோஸ்ட் வன் டைக்
குடிப்பதிவு மாவட்டங்கள் C, D, E என்பன டொர்டோலா மாவடத்தில் அமைந்துள்ளன.யாப்பின் படியும் 1954 ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்தின் மூலமும் மண்டலம் 5 தேர்தல் மாவட்டங்களாக பிரிகப்பட்டது. ரோட் டவுண் மாவட்டத்திலிருந்து இரண்டு பிரதிநிதிகளும் ஏனைய மாவட்டங்களிலிருந்து ஒரு பிரதிந்தியும் தெரிந்தெடுக்கப்படுவர். 1967 ஆம் ஆண்டின் யாப்பின் படி 7 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 7 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர். 1977 இல் , தேர்தல் மாவட்டங்கள் 9 ஆக கூட்டப்பட்டன இவ்வொரு தேர்தல் தொகுதியிலிருந்து ஒவ்வொரு பிரதிந்திகள் சட்டவாக்கக் கழகத்துக்கு தெரிவுச் செய்யப்பப்படுகின்றனர், 4 மேலதிக பிரதிநிதிகள் பெரும்பான்மையால் தெரிவுச் செய்யப்படுகின்றனர்.
முதலாம் தேர்தல் மாவட்டம் மேற்கு மூளை, கரட் பே (டொர்டோலா)
இரண்டாம் தேர்தல் மாவட்டம் மேயர்ஸ், கேன் கார்டன் பே, புருவர்ஸ் பே(டொர்டோலா), ஜோஸ்ட் வன் டைக்
3ஆம் தேர்தல் மாவட்டம் சீ கௌஸ் பே, அதன் அயன் பகுதிகள் (டொர்டோலா)
4ஆம் தேர்தல் மாவட்டம் ரோட் டவுண் மற்றும் அதன் அயன் பகுதிகள் (டொர்டோலா)
5ஆம் தேர்தல் மாவட்டம் அன்டம் கட் மற்றும் லோம்க் டிரென்ச் (டொர்டோலா)
6ஆம் தேர்தல் மாவட்டம் பௌகர்ஸ் பே, கிழக்கு மத்திய டொர்டோலா
7ஆம் தேர்தல் மாவட்டம் Long Look (டொர்டோலா), பீஃப் தீவு
8ஆம் தேர்தல் மாவட்டம் கிழக்கு மூளை, கீரிலாண்ட், ஓப் தோட்டம் (டொர்டோலா)
9ஆம் தேர்தல் மாவட்டம்
வெர்ஜின் கோர்டா,அனேகாடா
                                           பிரித்தானிய வெர்ஜின் தீவுகள் கரிபியத்தில் சிறந்த பொருளாதாரதைக் கொண்டு விளங்குகிறது. ஆள்வீத வருமானம் 38,500 அமெரிக்க டொலராகும் (2004 மதிப்பீடு).உல்லாசப் பிரயாணம் மற்றும் சேவைகள் துறை பிரித்தானிய வெர்ஜின் தீவுகளின் பொருளாதாரத்தின் இரண்டு முக்கிய காரணிகளாகும். அதிகளவான மக்கள் உல்லாசப்பிரயணக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சேவைகள் துறை அதிக வருவாய் பெற்றுத்தரும் துறையாக உள்ளது. உல்லாசப்பிரயாணத்துறை மணடலத்தின் வருவாயில் 45 விழுக்காட்டை ஈட்டிக் கொடுகிறது. இந்த தீவுகள் ஐக்கிய அமெரிக்க குடிகளின் பிரசித்தமான உல்லாசப்பிரயான கழிப்பிடமாகும். சுமார் 350,000 உல்லாசப்பிரயாணிகள் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து இங்கு வருவதாக 1997 இல் மதிப்பிடப்பட்டது. இங்குள்ள வெள்ளை மணல் கடற்கரைகளும் முருகை பாறைகளும் முக்கிய உல்லாசப்பிராயாண கவர்ச்சிகளாகும். வெளிநாட்டு நிறுவனங்களின் பதிவு காரணமாகவும் பெருமளவான வருவாய் ஈட்டப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு 550,000 நிறுவனங்கள் இங்கு பதிவு செய்துள்ளன. 2000 KPMG அறிக்கையின் படி உலகின் கரை கடந்த நிறுவனங்களில் 41% மானவை பிரித்தானிய வெர்ஜின் தீவுகளில் பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. விவசாயம் மண்டலத்தின் மொத்த வருவாயில் ஒரு சிறிய பகுதியையே ஈட்டிக் கொடுக்கிறது. விவசாய உற்பத்திகளில் பழங்கள், கரும்பு, மரக்கரி, கால்நடை என்பனவும் ரம் வடிக்கட்டலும் அடங்கும். அமெரிக்க டொலர் 1959 ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானிய வெர்ஜின் தீவுகளில் புழக்கத்தில் உள்ளது. பிரித்தானிய வெர்ஜிந் தீவுகள் போதைப் பொருள் கடத்துபவர்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான முக்கிய வழியாக விளங்குகிறது. பொதுநலவாய அலுவலக அறிக்கையின் படி போதைப் பொருள் கடத்தல் வெர்ஜின் தீவுகளின் எதிர்க்காலத்துக்கு தீங்கான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும்.2003 ஆம் ஆண்டு இம்மண்டலத்தின் மொத்த மக்கள்தொகை 21,730 ஆகும். இதில் 83% இத்தீவிற்க்கு அடிமைகளாக கொண்டு வரப்பட்ட ஆபிரிக்க மக்களுக்கும் ஐரோப்பியருக்கும் பிறந்த ஆபிரிக்க கரிபியராவர். ஏனைய இனத்தவர்கள் பிரித்தானிய ஐரோப்பிய தொடக்கத்தைக் கொண்டவர்களாவர்.
 1999 மக்கள்தொகை கணிப்பீடு: 83.36%
கருப்பர்
7.28%
வெள்ளையர்
5.38%
கலப்பு
3.14%
கிழக்கு இந்தியர்
0.84%
ஏனையவர்
பிரித்தானியர், போர்த்துக்கல், சிரிய/லெபனீய. இம்மண்டலத்தில் மக்கள் மறுசீரமைப்பு கிறிஸ்தவ சம்யத்தைப் பின்பற்றுபவர்களாவர்.
மெதடிஸ்ட்,(33%)
அங்கிலிக்கன் (17%)
உரோமன் கத்தோலிக்கம் (10%).

மண்டலம் சிறிய தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ளப்படியால் போக்குவரத்துவசதிகள் மட்டுப்படுத்தப் பட்டவையாகக் காணப்படுகின்றன. இங்கு மொத்தம் 113 கி.மீ. நீளமான பாதைகள் காணப்படுகின்றன. முக்கிய விமான நிலையம் ( பீஃப் விமானநிலையம் என்வும் அறியப்படும் டெரன்ஸ் பி. லெஸ்டோம் பன்நாட்டு விமான நிலையம்) டொர்டோலா தீவின் கிழக்கில் அமைந்துள்ள பீஃப் தீவில் அமைந்துள்ளது. வெர்ஜின் கோர்டா, அனேகோடா தீவுகளிலும் சிறிய விமான நிலையங்கள் காணப்படுகின்றன. முக்கிய துறைமுகம் ரோட் டவுணில் அமைந்துள்ளது. பிரித்தானிய வெர்ஜின் திவுகளின் பாரம்பரிய இசைவடிவம் பங்கி என அழைக்கப்படுகிறது. ஆபிரிக்க ஐரோப்பிய இசை வடிவங்களின் இணைவு காரணமாக பங்கி இசை தனக்கேயுரிய சிறப்பான ஒலிகளைக் கொண்டுள்ளது. இது பாரம்பரிய நாட்டுக் கூத்து, மற்றும் வரலாறு மக்களிடையே கொண்டுச் செல்லப்படும் ஊடகமாக விளங்குகிறது. பங்கி இசை பாடசலைக் கல்வித் திட்டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவ்விசையை வாசிக்கும் இசைக்குழுக்கள் ஸ்கெரெச் பாண்ட் என அழைக்கப்படுகின்றன.

ஆஸ்திரேலியத் தீவுகள்.

Picture

                         
ஆஸ்திரேலியத் தீவுகள் நோர்ஃபோக் தீவு (Norfolk Island, என்பது பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் நியூ கலிடோனியா ஆகியவற்றிற்கிடையில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவு. இத்தீவும் இதனருகே அமைந்துள்ள வேறு இரு தீவுகளும் இணைக்கப்பட்டு ஆஸ்திரேலியாவின் வெளிப் பிரதேசமாக ஆஸ்திரேலியாவினால் நிர்வகிக்கப்படுகிறது. இத்தீவில் வளரும் ஊசியிலை மரம் நாட்டின் சின்னமாக அதன் கொடியில் வரையப்பட்டுள்ளது. இம்மரம் ஆஸ்திரேலியாவில் பிரபலமானதாகும். நோர்போக் தீவு தெற்கு பசிபிக் கடலில் ஆஸ்திரேலியப் பெருநிலப் பரப்பின் கிழக்கே அமைந்துள்ளது. வூ இதன் பரப்பளவு 34.6 கிமீ² (13.3 மைல்²), 32 கிமீ நீள கரையோரப் பிரதேசத்தைக் கொண்டுள்ளது. இதன் அதிஉயர் புள்ளி பேட்ஸ் மலை (கடல் மட்டத்தில் இருந்து 319 மீ உயரத்தில் தீவின் வடமேற்கில் உள்ளது. தீவின் பெரும்பாலான நிலாம் கமத்தொழில் மற்றும் விவசாயத்துக்கு உகந்தது. இத்தீவு இதன் நிர்வாகப் பிரதேசத்தின் மிகப்பெரிய தீவாகும். இப்பிரதேசத்தின் இரண்டாவது பெரிய தீவு பிலிப் தீவாகும். இது நோர்போக் தீவில் இருந்து 7 கிமீ தெற்கே அமைந்துள்ளது. ஆட்களற்ற சிறிய நேப்பியன் தீவு 1 கிமீ தெற்கே அமைந்துள்ளது.
                                பிரித்தானிய நாட்டுப்பண் "கடவுள் எம் அரசியைக் காப்பாற்றுகிறார்” (God Save the Queen), அல்லது "கடவுள் எம் அரசரைக் காப்பாற்றுகிறார்” (God Save the King), என்பது பிரித்தானியாவில் ஆளுகைக்கு உட்பட்ட பல பொதுநலவாய நாடுகளின் நாட்டுப்பண் ஆகும். இது ஐக்கிய இராச்சியம் மற்றும் அதன் பிராந்தியங்கள், நோர்போக் தீவு ஆகியவற்றின் நாட்டுப்பண் ஆகும். நியூசிலாந்து (1977 முதல்), கேமன் தீவுகள் ஆகியவற்றின் இரண்டு நாட்டுப்பண்களில் ஒன்றாகவும், கனடா (1980 இலிருந்து), ஆத்திரேலியா (1984 இலிருந்து), கிப்ரால்ட்டர், மாண் தீவு, யமேக்கா, துவாலு ஆகிய நாடுகளின் அரசருக்குரிய பண் ஆகவும் விளங்குகின்றது. இப்பாடலை இயற்றியது யார் என்பது தெரியவில்லை.
                                ஆஷ்மோர் மற்று கார்ட்டியர் தீவுகளின் பிரதேசம் (Territory of Ashmore and Cartier Islands) என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இரண்டு சிறிய மக்களற்ற வெப்ப-வலயத் தீவுக் கூட்டம் ஆகும். ஆஸ்திரேலியாவினால் நிருவகிக்கப்படும் இப்பிரதேசம் ஆஸ்திரேலியாவின் வட-மேற்கேயும், இந்தோனீசியாவின் ரோட்டி தீவின் தெற்கேயும் அமைந்துள்ளன. இப்பிரதேசம் ஆஷ்மோர் கற்பாறை (Ashmore Reef), (கிழக்கு குறுந்தீவுகள்) மற்றும் கார்ட்டியர் தீவு (70 கிமீ கிழக்கே) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பாறைகள் மற்றும் குடாக்களிடையே 199.45 கிமீ² பரப்பளவையும், வெற்று நிலம் 114,400 மீ² பரப்பளவையும் கொண்டுள்ளது. 74.1 கிமீ நீள கடற்கரையைக் கொண்டிருந்தாலும் இங்கு துறைமுகங்கள் எதுவும் இல்லை. ஆஷ்மோர் கற்பாறைக்கு 42 கிமீ தூரத்தில் உள்ள ஹைபேர்ணியா கற்பாறை இப்பிரதேசத்தில் அடங்கவில்லை. இப்பிரதேசம் ஆஸ்திரேலியாவின் கான்பராவில் இருந்து சட்டமா அதிபர் திணக்களத்தினால் நிர்வாகிக்கப்படுகிறது. இதன் பாதுகாப்பு ஆஸ்திரேலியாவின் பொறுப்பில் உள்ளது. ஆஸ்திரேலியக் கடற்படை, மற்றும் வான்படை இங்கு அடிக்கடி பயணம் மேற்கொள்ளும்.
                                 ஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும் தென்னகப் பெருங்கடலில் அமைந்துள்ள மக்கள் குடியிருப்புகள் ஏதுமற்ற இரண்டு தீவுகளாகும். இது இந்தியாவின் மாகாராஷ்டிர மாநிலத்தின் ராஜ்பூருக்கு சரி தெற்கே 7718 கி.மீ. தொலைவிலும் பேர்த் நகரிலிருந்து மேற்கே 4099 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 1947 ஆண்டு முதல் இவை ஆஸ்திரேலியாவிற்குரிய மண்டலங்களாக இருந்து வருகின்றன. ஆஸ்திரேலியாவில் காணப்படும் செயல்படுநிலையிலுள்ள இரண்டு எரிமலைகளும் இத்தீவுகளில் அமைந்துள்ளன அவற்றில் ஒன்றான மோன்சன் முகடு ஆஸ்திரேலியாவில் மிக உயரமான மலையாகும். இத்தீவுக்குழுமத்தின் பரப்பளவு 372 square kilometres (144 sq mi) ஆகும்.
                                 கிறிஸ்துமஸ் தீவுகள் ஆட்சிப்பகுதி இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அவுஸ்திரேலியாவின் ஒரு சிறிய ஆட்சிப்பகுதியாகும். இது பேர்த் நகரிலிருந்து 2600 கி.மீ. (1600 மைல்) வடமேற்கிலும் ஜாகார்த்தா நகரிலிருந்து 500 கி.மீ. (300 மைல்) தெற்காகவும் அமைந்துள்ளது. இங்கு காணப்படு சில குடியேற்றங்களில் சுமார் 1600 பேர் வரை வசிக்கின்றனர். இங்கு காணப்படும் புவியியல் இயற்கை அமைப்பானது ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்ததாகும். இத்தீவிற்கே உரிய பல உயிரினங்கள் காணப்படுகின்றன.கனிய அகழ்வு இத்தீவின் முக்கிய தொழிற்துறையாக விளங்கி வந்தது. இத்தீவின் மொத்த 135 சதுர கிலோமீட்டர் (52 சது மை) பரப்பில் 65% வை மழைக்காடுகளாகக் காணப்படுகின்றது.
                                  கொகோசு (கீளிங்) தீவுகள்அல்லது கொகோசு தீவுகள் மற்றும் கீளிங் தீவுகள் அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆட்சிப்பகுதியாகும். இங்கு இரண்டு பவளத்தீவுகளும் 27 முருகைத் தீவுகளும் காணப்படுகின்றன. இத்தீவுகள் இந்தியப் பெருங்கடலிள் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையான தூரத்தின் அண்ணளவான மத்தியில் புவியியல் ஆள்கூறுகள் அமைந்துள்ளன.
                                    டிவி தீவுகள்(Tiwi Islands) ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தின் தலைநகர் டார்வின் நகரில் இருந்து 880 கிமீ வடக்கே, அரபூரா கடலுக்கும் திமோர் கடலுக்கும் இடையில் அமைந்துள்ளன. இத்தீவுக் கூட்டத்தில் கிழக்கே மெல்வில் தீவு, மேற்கே பாத்தர்ஸ்ட் தீவு ஆகிய தீவுகள் ஆப்சிலி நீரிணையினால் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்தப் பரப்பளவு 8,320 சதுர கிமீ (3,212 சதுர மைல்கள்) ஆகும். மெல்வில் தீவின் பரப்பளவு 5.786 சதுர கிமீ ஆகும். இது டாஸ்மானியாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய தீவாகும். இத்தீவுகளில் பழங்குடிகளான டிவி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஐரோப்பியக் குடியேற்றத்துக்கு முன்னர் இருந்தே இங்கு வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பண்பாடு மற்றும் மொழி ஆஸ்திரேலியப் பெரும் பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடி மக்களினதையும் விட வித்தியாசமானவை. கிட்டத்தட்ட 2,500 டிவி மக்கள் இங்கு வருகின்றனர். 1996 ஆம் ஆண்டில் இத்தீவுகளின் மொத்த மக்கள்தொகை 2,033 ஆக இருந்தது. இவர்களில் 93.8 விழுக்காட்டினர் பழங்குடிகள். இவர்களில் பெரும்பாலானோரின் முதல் மொழி டிவி, இரண்டாவது மொழி ஆங்கிலம் ஆகும். 1912 ஆம் ஆண்டில் இத்தீவுகள் பழங்குடியினரின் சிறப்பு நிலமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, 1980 ஆம் ஆண்டில் இத்தீவுகளின் உரிமை டிவி பழங்குடிகளின் நில அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது. 2001 ஜூலை 12 இல் இங்கு உள்ளூராட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
                                   டொரெஸ் நீரிணைத் தீவுகள்(Torres Strait Islands) என்பது ஆஸ்திரேலியா கண்டத்தின் வடமுனையில் உள்ள கேப் யோர்க் தீபகற்பத்தையும் நியூ கினி தீவையும் பிரிக்கும் டொரெஸ் நீரிணையில் அமைந்துள்ள கிட்டத்தட்ட 274 சிறிய தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக் கூட்டமாகும். இவை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அடங்கும் தீவுகளாகும். டொரெஸ் நீரிணை வட்டார ஆணையத்தின் நிர்வாகத்தில் இங்கு வாழும் பழங்குடியினரான மெலனீசியர்களுக்கு சிறப்பு நில உரிமை அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாணையம் ஜூலை 1, 1994 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. குயின்ஸ்லாந்தின் பொசெசன் தீவில் முதன்முதலாக இங்கிலாந்து மாலுமி ஜேம்ஸ் குக் 1770 இல் தரையிறங்கி அங்கிருந்து ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியை பிரித்தானியப் பேரரசுக்காக உரிமை கோரினான். அதன் பின்னர் லண்டன் சமயப் பிரசாரகரான வண. சாமுவேல் மக்ஃபார்லேன் டொரெஸ் நீரிணையின் டார்ன்லி தீவில் 1871, ஜூலை 1 இல் வந்திறங்கினார். இந்நாளை அத்தீவு மக்க "வெளிச்சத்தின் வரவு" என அறிவித்து ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். டொரெஸ் நீரிணைத் தீவுகள் 1879 ஆம் ஆண்டு குயின்ஸ்லாந்துடன் இணைக்கப்பட்டது. பப்புவா நியூ கினி 1975 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் இருந்து பிரிந்து தனிநாடாகியபோது இத்தீவுகளின் நிலை பிரச்சீனைக்குள்ளாகியது. இத்தீவு மக்கள் தம்மை ஆஸ்ட்திரேலியர்கள் என அடையாளப்படுத்தினாலும் பப்புவா நியூ கினி அரசு நீரிணையின் முழு உரிமையையும் ஆஸ்திரேலியாவுக்குத் தர மறுத்தது. இது குறித்த உடன்பாடு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, தீவுகளும், அதன் மக்களும் ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தம் எனவும், கடல் பிரதேசங்கள் இரு நாடுகளுக்கும் பகிரப்படும் எனவும் உடன்பாடு எட்டப்பட்டது. நீரிணையின் வளங்கள் இரு நாடுகளினதும் நிர்வாகத்தில் பங்கிடப்படுகின்றன. 1982 இல் எடி மாபோ மற்றும் நான்கு டொரெஸ் நீரிணை பழங்குடியினர் (மறி தீவு) தமக்கு நில உரிமை வழங்கப்பட வேண்டும் என குயின்ஸ்லாந்து உயர் நீதிமன்றத்திலும், பின்னர் ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தனர். 1992 இல் அவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கூறப்பட்டது. குயின்ஸ்லாந்துடன் இணைக்கப்படு முன்னரிலிருந்து மேர் மக்கள் தமக்கென நிலங்களை வைத்திருந்ததாக தீர்ப்பளிகக்ப்பட்டது. இத்தீவுகள் மொத்தம் 48 000 கிமீ² பரப்பளவைக் கொண்டது. கேப் யோர்க்கில் இருந்து நியூ கினி வரையான மிகக்கிட்டவான தூரம் கிட்டத்தட்ட 150 கிமீ. இத்தீவுகளில் உள்ள பழங்குடியினர் மெலனீசியர்கள் ஆவர். இவர்கள் பொதுவாக பப்புவா நியூ கினியின் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறைகளை ஒத்தவர்கள். இதனால் இவர்கள் ஏனைய ஆஸ்திரேலியப் பழங்குடிகளில் இருந்து வேறுபட்டுள்ளார்கள். இதனால் இவர்கள் டொரெஸ் நீரிணைத் தீவு மக்கள் என அடையாளம் காட்டப்படுகிறார்கள். 2001 ஆஸ்திரேலிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இத்தீவுகளின் மக்கள் தொகை 8,089 ஆக இருந்தது. இவர்களில் 6,214 பேர் பழங்கிடியினர் ஆவர்.
                                 
 பவளக் கடல் தீவுகள் பிரதேசம்(Coral Sea Islands Territory) என்பது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வடகிழக்கே பவளக் கடலில் அமைந்துள்ள சிறு வெப்பவலயத் தீவுக் கூட்டங்களாகும். இத்தீவுகளில் விலிஸ் தீவு மட்டுமே மக்கள் வசிக்கும் தீவாகும். இப்பிரதேசத்தின் மொத்தப் பரப்பளவு 780,000 கிமீ² ஆகும். இங்கு கிட்டத்தட்ட 30 வெவ்வேறு பவளப்பாறை (reefs) திட்டுக்களும் உள்ளன. இவற்றுடன் சேர்த்து மொத்தம் 51 தீவுகள் உள்ளன.
                          பாத்தர்ஸ்ட் தீவு (Bathurst Island, 2,600 சதுர கிமீ அல்லது 1,000 சதுர மைல், 11°35′S 130°18′E / -11.583, 130.3) ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தில் வடக்கே அமைந்துள்ள டிவி தீவுகளில் ஒன்றாகும். பாத்தர்ஸ்ட் பிரபு என்றி பாத்தர்ஸ்ட் என்பவரின் நினைவாக இத்தீவிற்கு பாத்தர்ஸ்ட் தீவு எனப் பெயரிடப்பட்டது. (கனடாவில் உள்ள பாத்தர்ஸ்ட் தீவும் இவரது பெயராலேயே அழைக்கப்படுகிறது). இங்கு பழங்குடிகளான டிவி மக்கள் வாழ்கின்றனர்.1910 முதல் 1938 வரையான காலப்பகுதியில் இங்கு ரோமன் கத்தோலிக்க மிசனறியான பிரான்சிஸ் சேவியர் கிசெல் என்பவர் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் "150 மனைவிகளின் ஆயர்" என அழைக்கப்படுகிறார். இவர் இங்கு தங்கியிருந்த காலப்பகுதியில் பழங்குடியினரின் வழக்கப்படி முதியவர்களுக்கு வாழ்க்கைத்துணையாகக் காத்திருந்த இளம் பெண்களை விலைக்கு வாங்கி அவர்களை ஒத்த வயது ஆண்களுக்குத் திருமணம் செய்வித்தார். பாத்தர்ஸ்ட் தீவின் மிகப்பெரும் குடியேற்றப்பகுதி "நியூ" (Nguiu). இங்கு 1,450 பேர் வசிக்கின்றனர்[2]. இது இத்தீவின் தென்கிழக்கு முனையில் டார்வின் நகரில் இருந்து 70 கிமீ வடக்கே அமைந்துள்ளது. இரண்டாவது பெரும் நகரம் "வுரக்கூவு". இங்கு 50 பேர் வாழ்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக "4 மைல் முகாம்" என்ற இடத்தில் ஒரு குடும்பம் வாழ்கிறது.
                                  மெல்வில் தீவு(Melville Island) ஆஸ்திரேலியாவின் வட மண்டலத்தில் கிழக்குத் திமோர் கடலில் அமைந்துள்ளது. இத்தீவின் பெரிய நகரம் மிலிகபிட்டி, இதன் மக்கள் தொகை 559 பேர். இரண்டாவது பெரிய நகரம் பிலான்கிம்பி, இங்கு 440 பேர் வசிக்கிறார்கள். இவர்களை கிட்டத்தட்ட 30 பேர் வெவ்வேறு இடங்களில் வசிக்கிறார்கள். மெல்வில் தீவு டாஸ்மானியாவுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய தீவாகும். இதன் பரப்பு 2,234 மைல்² (5,786 கிமீ²). டிவி மொழியில் இது யெர்மால்னர் என அழைக்கப்படுகிறது. இத்தீவின் தென் முனையில் 55 மீட்டர்கள் தொலைவில் இரிட்டிட்டு தீவு உள்ளது. இதன் பரப்பளவு 1.7 கிமீ². மெல்வில் தீவும், பாத்தர்ஸ்ட் தீவும் இணைந்து டிவி தீவுகள் என அழைக்கப்படுகின்றது. 1644 ஆம் ஆண்டு இத்தீவைக் கண்டுபிடித்த ஐரோப்பியர் ஏபெல் டாஸ்மான் எனக் கருதப்படுகிறது. இதன் காலநிலை வெப்பவலயத்தைச் சேர்ந்தது.
                                லோர்ட் ஹாவ் தீவு (Lord Howe Island, (ஒலிப்பு:/ˈhaʊ/) என்பது ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பில் இருந்து 600 கிமீ (370 மைல்) கிழக்கே பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சிறிய தீவு. லோர்ட் ஹாவ் தீவுகளின் கூட்டத்தில் 20 கிமீ தென்கிழக்கே உள்ள போல் பிரமிட் உம் அடங்கும்[6]. இத்தீவுக் கூட்டம் லோர்ட் ஹாவ் தீவுச் சபையினால் நிர்வகிக்கப்படுகிறது. இவ்வமைப்பானது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் 175 உள்ளக அமைப்புகளில் ஒன்றாகும். இது ஆஸ்திரேலியாவின் உள்ளூராட்சிப் பகுதிகளுள் அடங்காது. எனவே இது "இணைக்கப்படாத பகுதி" (unincorporated area) என அழைக்கப்படுகிறது. இத்தீவுச் சபையினால் தன்னாட்சி முறையில் ஆளப்படுகிறது. லோர்ட் ஹாவ் தீவு அதன் தனித்தன்மையான அழகிற்காகவும், இங்குள்ள பல்லின உயிரினங்களுக்காவும், இத்தீவு உலகப் பாரம்பரியக் களமாக 1982 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இத்தீவின் பொதுவான நேர வலயம் UTC+10:30. கோடை நேர பகலொளி சேமிப்புக் காலத்தில் அரை மணி நேரம் முன் தாள்ளப்படும் (UTC+11)[8]. லோர்ட் ஹாவ் தீவு 1788, பெப்ரவரி 17 ஆம் நாள் லெப். ஹென்றி லிட்ஜ்பேர்ட் போல் என்பவர் தலைமையிலான "எச்எம்எஸ் சப்ளை" என்ற கப்பல் மாலுமிகளினால் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் அந்நேரம் பொட்டனி விரிகுடாவில் இருந்து நோர்போக் தீவுக்கு குற்றவாளிகளை ஏற்றிக் கொண்டு அங்கு குடியேற்றத் திட்டத்தை ஆரம்பிக்கச் செல்லும் வழியில் இத்தீவைக் கண்டுபிடித்தார். திரும்பி வரும் வழியில் 1788 மார்ச் 13 ஆம் நாளில் தனது சிறு குழுவொன்றை அத்தீவுக்கு அனுப்பினார். மனிதவாழ்வற்ற தீவாக அது அப்போது இருந்தது. அத்துடன் தெற்கு பசிபிக்கின் பொலினீசிய மக்கள் எவரினதும் காலடி பட்டிருக்கவில்லை. இப்பகுதியில் உள்ள லிட்ஜ்பேர்ட் மலை, போல் பிரமிட் ஆகியன இவரது நினைவுப் பெயர்களாகும். இத்தீவின் பெயர் முடியரசின் முதலாவது பிரதிநிதி (1st Earl) ரிச்சார்ட் ஹாவ் என்பாரின் நினைவாகச் சூட்டப்பட்டது.

இந்தியத் தீவுகள்.

Picture

                                  இந்தியத் தீவுகள்
                                 
அந்தமான் தீவுகள்என்பது வங்காள விரிகுடாவில் உள்ள ஒரு தீவுக் கூட்டம் ஆகும். இது இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுகளின் ஒரு பகுதியாகும். போர் பிளேர் நகரமே இதன் நிர்வாக மையம் ஆகும். அந்தமான் தீவுகள் அனைத்தும் அந்தமான் மாவட்டம் என்ற நிர்வாக அமைப்பின் கீழ் வருகின்றன். மற்றொரு மாவட்டமான நிகொபார் மாவட்டம் 1974-ஆம் ஆண்டு உருவானது. அந்தமானின் மக்கள் தொகை 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 314, 084 ஆகும்.
இத்தீவுக்கூட்டத்தில் மொத்தம் 576 தீவுகள் உள்ளன. அவற்றில் இருபத்து ஆறு தீவுகளில் குடியேற்றங்கள் உள்ளன. இவை ஊக்ளி ஆற்றில் இருந்து 950 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன. இத்தீவுத் தொடரின் மொத்த நீளம் 352 கி.மீ. அதிகபட்ச அகலம் 51 கி.மீ ஆகும். அந்தமானின் மொத்த பரப்பளவு 6408 சதுர கி.மீ. ஆகும்.அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தென்கோடித் தீவிலுள்ள இந்திரா முனைஎன்ற இடம், இந்திய நாட்டின் தென்முனையாகும்.
                                     லட்சத்தீவுகள் இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கவரத்தி ஆகும். இது மொத்தம் 32 கிமீ² பரப்பளவு கொண்ட 36 தீவுகளாக அமைந்துள்ளது. கேரளக் கரைக்கு அப்பால் 200 தொடக்கம் 300 கிமீ தூரத்தில், அரபிக் கடலில் இது உள்ளது. முக்கிய தீவுகள் கவராட்டி, மினிக்கோய், அமினி என்பனவாகும். 10 மக்கள் வாழும் தீவுகளின் மொத்தச் சனத்தொகை 51,000 ஆகும்.
                                   நிக்கோபார் தீவுகள்(Nicobar Islands) இந்தியப் பெருங்கடலின் கிழக்கே, இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒன்றியப் பகுதியில் உள்ள தீவுக் கூட்டம் ஆகும். இவை இந்திய உபகண்டத்தின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவினால் 1,300 கிமீ தூரத்தில் பிரிக்கப்பட்டுள்ளது. நிக்கோபார் தீவுகள் அந்தமான் தீவுகளுக்கு தெற்கே, இந்தோனேசியத் தீவான சுமாத்திராவுக்கு வடமேற்கே ஏறத்தாழ 189 கிமீ தூரத்தி அமைந்துள்ளன. மொத்தம் 22 தீவுகளை நிக்கோபார் தீவுகள் கொண்டுள்ளது. இவற்றில் பெரிய தீவு பெரும் நிக்கோபார் தீவு. இந்தியாவின் தென்கோடியான இந்திரா முனை பெரும் நிக்கோபாரிலேயே அமைந்துள்ளது. இத்தீவுக்கூட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 1841 கிமீ². அதிஉயர் புள்ளி பெரும் நிக்கோபார் தீவில் உள்ள துளியர் மலை. இதன் உயரம் 642 மீட்டர். 2001 ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள் தொகை 42,026. இவர்களில் 65 விழுக்காட்டினர் பழங்குடிகள் (நிக்கோபார் மக்கள் மற்றும் சோம்பென் மக்கள்). ஏனையோர் இந்தியாவின் பெருநிலப்பரப்பையும், இலங்கைத் தீவையும் சேர்ந்தவர்கள். நிக்கோபார் தீவுகளில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் குடியேற்றம் ஆரம்பித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆறு பழங்குடி நிக்கோபார் மொழிகள் இத்தீவுகளில் பேசப்படுகின்றன. இவை ஆஸ்திர-ஆசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொன்-கெமர் பிரிவைச் சேர்ந்தது. பெரும் நிக்கோபாரின் தென்கோடியில் வாழும் சோம்பென் என்ற பழங்குடிகள் தென்கிழக்காசிய இடைக் கற்கால இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். "நிக்கோபார்" என்ற பெயர் சோழர்கள் இத்தீவுக்கு வைத்த "நக்கவரம்" என்ற சொல்லில் இருந்து மருவியிருக்கிறது. இது தஞ்சாவூரில் இருந்து பெறப்பட்ட 1050 ஆண்டு கல்வெட்டுகளின் மூலம் அறியக்கிடக்கிறது.
                                        இத்தீவுகளில் ஐரோப்பியர்களின் திட்டமிடப்பட்ட குடியேற்றம் 1754/56 ஆம் ஆண்டுகளில் தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் வருகையுடன் ஆரம்பிக்கிறது. இக்கம்பனி அப்போது தரங்கம்பாடியில் "பிரெடெரிக்சோர்ன்" என்ற பெயரில் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. மரோவியன் திருச்சபையைச் சேர்ந்த மதப்பரப்புனர்கள் இத்தீவுகளின் நன்கவுரி என்ற இடத்தில் முதலில் குடியேறினர். ஆனாலும் மலேரியா மற்றும் பல்ல்வேறு தொற்று நோகளினால் இவர்களில் பலர் இறக்கவே இங்கு குடியேற்றம் பல முறை இடைநிறுத்தப்பட்டது. டென்மார்க் இங்கு குடியேற்றத்தை நிறுத்தி விட்டதாக தவறாக அனுமானித்து 1778 - 1783 காலப்பகுதியில் ஆஸ்திரியா இங்கு குடியேற முயற்சித்தது. கடைசியாக 1868 ஆம் ஆண்டு அக்டோபர் 16 இல் டென்மார்க்கின் காலனித்துவம் இங்கு முடிவுக்கு வந்தது. அப்போது தானியர்களின் உரிமை பிரித்தானியர்களுக்கு விற்கப்பட்டது. 1869 ஆம் ஆண்டில் இருந்து இத்தீவுகள் பிரித்தானிய இந்தியாவின் கீழ் ஆளப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது 1942 முதல் 1945 வரை இத்தீவுகள் சப்பானின் முற்றுகைக்கு உள்ளாயிருந்தது. 1950 இல் அந்தமான் தீவுகளுடன் சேர்த்து இந்தியாவின் ஒன்றியப் பகுதியாக ஆக்கப்பட்டது. 2004 டிசம்பர் 26 ஆம் நாள் இடம்பெற்ற இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தின் போது எழுந்த ஆழிப்பேரலை காரணமாக நீக்கோபார் தீவுகளில் பலத்த சேதம் ஏற்படட்து. அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மட்டும் 6,000 பேர் வரை கொல்லப்பட்டனர். தெரேசா தீவு இரண்டாக பிரிந்தது. திரிங்கட் தீவு மூன்றாகப் பிளந்தது. 2005, ஜூலை 24 இல் இங்கு 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதியப்பட்டது. நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒன்றியப் பகுதியின் கீழ் நிருவகிக்கப்பட்டு வருகிறது. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகர் தெற்கு அந்தமான் தீவில் உள்ள போர்ட் பிளேர் நகரம். யூனியன் பகுதி வடக்கு மற்றும் நடு அந்தமான் மாவட்டம், தெற்கு அந்தமான் மாவட்டம், மற்றும் நிக்கோபார் மாவட்டம் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நிக்கோபார் தீவுகளுக்குச் செல்பவர்கள் சிறப்பு அனுமதிச் சீட்டு (Tribal Pass) பெற வேண்டும். பொதுவாக, இந்தியரல்லாதோர் கம்பெல் விரிகுடா தவிர நிக்கோபார் தீவுகளின் எப்பகுதிக்கும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
                                        பாம்பன் தீவு(Pamban Island) என்பது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாக்கு நீரிணையில் அமைந்துள்ள ஒரு தீவு. இந்தியாவைச் சேர்ந்த இத்தீவு தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. சுற்றுலா மற்றும் இந்துக்களின் புனிதத் தலமாக உள்ள இராமேஸ்வரம் இத்தீவின் முக்கிய நகரம் ஆகும். பாம்பன் தீவின் அகலம் பாம்பன் நகரப்பகுதியின் மேற்கில் இருந்து தனுஷ்கோடியின் தெந்கிழக்கு வரை கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர்கள் ஆகும். நீளம் தனுஷ்கோடி முதல் இராமேஸ்வரம் வரை 2 கிமீ முதல் 7 கிமீ வரை பரந்துள்ளது. பாம்பன் தீவு இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு தாலூகா ஆகும். இது ஓகரிசல்குளம், மாஹிந்தி, பாம்பன், இராமேஸ்வரம் என நான்கு நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு இரண்டு நிர்வாக கிராமங்கள் உள்ளன. அவை: பாம்பன், இராமேஸ்வரம் என்பவை. இவை இரண்டும் இத்தீவின் முக்கிய நகரங்கள் ஆகும். இவ்விரு நகரங்களிலும் தொடருந்து நிலையங்களும் உள்ளன. இவற்றைவிட தங்கச்சிமடம்
, இராமர்படம் (Ramarpadam) என இரண்டு சிறிய குடியேற்றக் கிராமங்களும் உள்ளன. பாம்பன் தீவின் நிர்வாகத் தலைமையகம் இராமேஸ்வரத்தில் உள்ளது. இராமேஸ்வரம் பாம்பன் நகரில் இருந்து 11 கிமீ தூரத்திலும், தனுஷ்கோடியில் இருந்து 18 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது.                                       சாகோஸ் தீவுக்கூட்டம்(Chagos Archipelago) என்பது இந்தியப் பெருங்கடலின் நடுவில் அமைந்துள்ள தீவுக்கூட்டம் ஆகும். இவை முன்னர் எண்ணெய்த் தீவுகள் (Oil Islands) என அழைக்கப்பட்டன. இவை தமிழில் பேகான தீவுகள் என்றும் திவெயி மொழியில் ஃபேகண்தீபு எனவும் அழைக்கப்படுகின்றன. இவற்றில் கிட்டத்தட்ட 60 சிறு வெப்பவலயத் தீவுகளைக் கொண்ட ஏழு பவளத்தீவுக் கூட்டங்கள் (atolls) உள்ளன. பேகான தீவுகள் மாலைதீவுகளில் இருந்து தெற்கே 500 கிமீ (300 மைல்கள்) தூரத்திலும், இந்தியாவில் இருந்து தென்மேற்கே 1600 கிமீ (1000 மைல்) தூரத்திலும், தான்சானியாவுக்கும், ஜாவாவிற்கும் இடைநடுவீல் அமைந்துள்ளன. இப்பகுதி அதிகாரபூர்வமாக பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலத்தைச் சேர்ந்ததாகும். கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இங்கு சாகோசிய மக்கள் வாழ்ந்து வந்தனர். பின்னர் பிரித்தானியரும் அமெரிக்கரும் 1960களில் இவர்களை விரட்டிவிட்டு இங்குள்ள மிகப் பெரிய தீவான டியேகோ கார்சியாவில் அமெரிக்க இராணுவத் தளம் ஒன்றை அமைத்தனர். இத்தீவுகளின் மொத்த நிலப்பரப்பு 63.17 கிமீ² ஆகும். டியேகோ கார்சியா தீவின் பரப்பு 27.20 கிமீ². இவற்றின் மொத்தப் பரப்பளவு (வளைகுடாக்கள் உள்ளிட்டவை) 15,000 கிமீ² ஆகும். இங்குள்ள ஏழு பெரிய தீவுகள்:
டியேகோ கார்சியா (Diego Garcia) டியேகோ கார்சியா இந்தியப் பெருங்கடலின் தென்முனையிலுள்ள பெரிய தீவு; இந்தியாவிலிருந்து 1000 மைல்களுக்கு அப்பாலுள்ளது. பிரிட்டிஷாருக்குச் சொந்தமான இத்தீவில் இப்பொழுது அமெரிக்க விமான மற்றும் கடற்படைப் பிரிவுகள் செயல்படுகின்றன. இங்கிருந்தும் வளைகுடாப் போர், ஆப்கானிஸ்தான் மீதான விமானத்தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. சி.ஐ.ஏவின் சில வேலைகளுக்கும் இத்தீவு உபயோகப்படுத்தப்படுகிறதாம்.
எக்மொண்ட் தீவுகள் (Egmont Islands)
பெரோஸ் கரை (Peros Banhos)
சாலொமன் தீவுகள், (Salomon Islands)
பெரும் சாகோஸ் கரை (Great Chagos Bank)
பிளென்ஹைம் பாறை (Blenheim Reef)
பேச்சாளர் கரை (Speakers Bank)

இந்தோனேசியாவின் தீவுகள்.

Picture

                                 
இந்தோனேசியாவின் தீவுகள் போர்ணியோ (Borneo) உலகின் மூன்றாவது பெரிய தீவாகும். இதன் பரப்பளவு 743,330 கிமீ² (287,000 சதுர மைல்கள்). இது மலே தீவுக் கூட்டங்களுக்கும், இந்தோனேசியாவுக்கும் நடுவில் அமைந்திருக்கிறது. இதன் நிர்வாகப் பகுதி, இந்தோனேசியா, மலேசியா, மாற்றும் புரூணை ஆகியவற்றிற்குப் பிரிக்கப்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய தீவாக இது அறியப்படுகிறது. இந்தோனேசியாவில் இத்தீவு கலிமந்தான் என்றழைக்கப்படுகிறது. கிழக்கு மலேசியா அல்லது மலேசிய போர்ணியோ என்பது சாபா மற்றும் சரவாக் மாநிலங்கள் என அழைக்கப்படுகின்றன. போர்ணியோ தீவு வடக்கேயும் வடமேற்கேயும் தென் சீனக் கடல், வடகிழக்கே சுளு கடல், கிழக்கே செலெபெஸ் கடல், மற்றும் மக்கசார் நீரிணை, தெற்கே ஜாவாக் கடல் மற்றும் கரிமட்டா நீரிணை ஆகியவ்ற்றால் சூழ்ந்துள்ளது. போர்ணியோவின் மேற்கே மலே மூவலந்தீவு, மற்றும் சுமாத்திரா ஆகியன அமைந்துள்ளன. தெற்கே ஜாவாவும், வடகிழக்கே பிலிப்பைன்ஸ் ஆகியன உள்ளன.
                                  சரவாக் (Sarawak) போர்ணியோ தீவில் உள்ள இரண்டு மலேசிய மாநிலங்களில் ஒன்றாகும். மற்றையது சாபா ஆகும். பூமி கென்யாலங் (‘ஹோர்ன்பில்களின் நிலம்’) என அழைக்கப்படும் சரவாக், போர்ணியோ தீவில் வட-மேற்கே அமைந்துள்ளது. மலேசியாவின் மிகப் பெரும் மாநிலம் இதுவாகும். இரண்டாவது பெரிய மாநிலமான சாபா தீவின் வடகிழக்கே அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைநகரமான கூச்சிங்கின் மக்கள் தொகை 579,900 (2006 கணக்கெடுப்பின் படி) ஆகும். மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 2,357,500. இங்குள்ள பெரும்பான்மையானோர் முஸ்லிம்-அல்லாதோர் ஆவர். இங்கு கிட்டத்தட்ட 30 மலே அல்லாத பழங்குடி இனக்குழுக்கள் வாழ்கின்றனர். 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போர்ணியோ தீவின் கிழக்குக் கரையில் போர்த்துக்கீசர் வந்திறங்கினர். ஆனாலும் அவர்கள் அங்கு குடியேற முயலவில்லை. 17ம் நூற்றாண்டில் சுல்தான் டெங்கா என்பவனால் ஆளப்பட்டாலும், இன்றைய சரவாக் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புருணை சுல்தானகத்தினால் ஆளப்பட்டது. 1841 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் புரூக் இங்கு வந்திறங்கினான். இவன் வந்த காலத்தில் அங்கு தயாக் பழங்குடியினர் சுல்தானுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களின் கிளர்ச்சியை அடக்க சுல்தான் புரூக்கின் உதவியை நாடினான். புரூக் சூல்தானுடன் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டான். அதன்படி சரவாக் ஜேம்ஸ் புரூக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. சுல்தான் 1841, செப்டம்பர் 24 இல் ஜேம்ஸ் புரூக்கை சரவாக்கின் ஆளுநர் ஆக்கினான். ஜேம்ஸ் புரூக் தன்னை "சரவாக்கின் ராஜா" என அறிவித்து அங்கு வெள்ளை ராஜா வம்சத்தை ஏற்படுத்தினான். 1842, ஆகஸ்ட் 18 ஆம் நாள் புரூக் சரவாக்கின் ராஜாவாக புருணை சுல்தானினால் அறிவிக்கப்பட்டான். அவன் 1868 இல் இறக்கும் வரை சரவாக்கை ஆட்சி செய்தான். அதன் பின்னர் அவனது மருமகன் சார்ல்ஸ் புரூக் 1917 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தான். அவன் இறந்த பின்னர் அவனது மகன் சார்ல்ஸ் வைனர் புரூக் ஆட்சி செய்தான். புரூக் வம்சம் சரவாக்கை கிட்டத்தட்ட நூறு ஆண்டுகாலம் ஆட்சி செய்தது. இவர்கள் வெள்ளை ராஜாக்கள் எனப்புகழ் பெற்றிருந்தனர். எனினும் பிரித்தானியாவின் ஏனைய கூடியேற்ற நாடுகளைப் போலல்லாமல் சரவாக் ராஜாக்கள் பழங்குடிகளின் உரிமைகளைப் பாதுகாத்து வந்தனர். சீன வர்த்தகர்களின் வருகையை ஊக்குவித்தாலும் அவர்களை பழங்குடியினர் வாழும் இடங்களில் குடியேற அனுமதிக்கவில்லை. தாயக் மக்களின் கலாச்சாரத்தில் சீனர்கள் கலப்பதை இராசாக்கள் விரும்பவில்லை. சரவாக் அருங்காட்சியகம் ஒன்றை அமைத்தார்கள். இது போர்ணியோவின் முதலாவது அருங்காட்சியகம் ஆகும். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் சரவாக்கை முற்றுகையிட்டது. 1941 டிசம்பர் 16 இல் மிரி நகரையும், டிசம்பர் 24 இல் கூச்சிங் நகரையும் கைப்பற்றினர். போர்ணியோ தீவு முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 1945 இல் ஆஸ்திரேலியப் படைகள் ஜப்பானியரிடம் இருந்து போர்ணியோவைக் கைப்பற்றினர். ஜூலை 1, 1946 இல் ராஜா சரவாக்கின் அதிகாரத்தை பிரித்தானியாவிடம் ஒப்படைத்தான். பதிலாக ராஜா குடும்பத்துக்கு மிகப் பெறுமதியான ஓய்வூதியம் வழங்கப்பட்டது. ஆனாலும், ராஜாவின் மருமகன் அந்தனி புரூக் சரவாக்கின் தீவிரவாதிகளுடன் இணைந்து ஆட்சிக்கு உரிமை கோரி வந்தான். லகப் போரின் முடிவில் நாட்டில் இருந்து தப்பியோடினான். பதினேழு ஆண்டுகளின் பின்னர் சரவாக் மலேசியாவுடன் இணைக்கப்பட்ட போது இவன் நாட்டுக்குத் திரும்பிவர அனுமதிக்கப்பட்டான். மலே மக்கள் சரவாக் பிரித்தானியரிடம் ஒப்படைக்கப்பட்டமைக்கு பலத்த எதிர்ப்பைக் காட்டினர். சரவாக்கின் முதலாவது பிரித்தானிய ஆளுநர் படுகொலை செய்யப்பட்டார். சரவாக் அதிகாரபூர்வமாக 1963, ஜூலை 22 இல் விடுதலை அடைந்து அதே ஆண்டு செப்டம்பர் 16 இல் மலேசியக் கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
                                        
 மலுக்கு தீவுகள்(Maluku Islands) எனப்படுபவை இந்தோனேசியாவில், குறிப்பாக மலே தீவுக்கூட்டத்தில் காணப்படும் தீவுகள் ஆகும். இவை மொலுக்காஸ், மொலுக்கன் தீவுகள், ஸ்பைஸ் தீவுகள் அல்லது மலுக்கு எனவும் அழைக்கப்படுகின்றன. இத்தீவுக் கூட்டம் ஆஸ்திரேலியப் புவித்தட்டில் சுலவேசிக்கு கிழக்கே, நியூ கினிக்கு மேற்கே, திமோரிக்கு வடக்கே அமைந்துள்ளன. வரலாற்று ரீதியாக சீனர்களாலும், ஐரோப்பியர்களாலும் இது இவை ஸ்பைஸ் தீவுகள் என அழைக்கப்பட்டு வந்தன. இங்குள்ள பெரும்பாலான தீவுகள் மலைகளையும் குமுறும் எரிமலைகளையும் கொண்டுள்ளன. ஈரப்பாங்கானவை. மழைக்காடுகள் பல உள்ளன. உணவு வாசனைப் பொருட்கள் பெருமளவில் உற்பத்தியாகின்றன. இவற்றில் மெலனீசியர்கள் ஆரம்ப காலத்தில் வாழ்ந்திருந்தாலும், பல தீவுப்பகுதி மக்கள், குறிப்பாக பண்டா தீவுகளில் வாழ்ந்த மக்கள் 17ம் நூற்றாண்டுப் பகுதியில் கொல்லப்பட்டனர். ஆஸ்திரனேசியர்கள் இங்கு 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டச்சு ஆட்சிக் காலத்தில் குடியேறினர். இக்குடியேற்றம் பின்னர் இந்தோனீசிய ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்தது. 1950 ஆம் ஆண்டில் மலுக்கு தீவுகள் இந்தோனீசியாவின் ஒரு மாகாணமாக உருவாக்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டில் இது இரண்டாகப் பிரிக்கப்பட்டு மலுக்கு, வடக்கு மலுக்கு என இரண்டு இந்தோனீசீய மாகாணங்களாக்கப்பட்டன. 1999 - 2002 காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் இங்கு கருத்து வேறுபாடு காரணமாகக் கலவரங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனாலும் தற்போது அங்கு அமைதி நிலவுகிறது. மலுக்கு தீவுகளில் மொத்தம் 999 தீவுகள் உள்ளன. 77,990 கிமீ2 நிலப்பகுதியையும், 776,500 கிமீ2 கடற் பரப்பையும் கொண்டுள்ளன.
 வடக்கு மலுக்கு மாகாணம்
டேர்னேட், முக்கிய தீவு
பக்கான் ஹல்மஹேரா - 20,000 கிமீ2 மலுக்கு தீவுகளில் பெரியது.
மொரட்டாய்
ஓபி தீவுகள்
 சூலா தீவுகள்
டைடோர் மலுக்கு மாகாணம்
அம்போன் தீவு, முக்கிய தீவு
ஆரு தீவுகள்
பாபார் தீவுகள்
பண்டா தீவுகள்
புரு
காய் தீவுகள்
கிசார் லெட்டி தீவுகள்
சேரம்
டனிம்பார் தீவுகள்
 வெட்டார்
                                           சாவகம்(Java) என்பது இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும். அத்துடன் இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவும் இங்குள்ளது. இந்து மன்னர்களினதும், பின்னர் டச்சு கிழக்கிந்தியக் கம்பனியின் ஆதிக்கத்திலும் இருந்த சாவகம் இப்போது இந்தோனீசியாவின் பொருளாதாரம், மற்றும் அரசியலில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. 2006 இல் 130 மில்லியன் மக்கள் தொகையை இது கொண்டிருந்தது. இதுவே உலகின் மிகவும் மக்கள் அடர்த்தி கூடிய தீவாகும். பொதுவாக எரிமலைகளின் குமுறல்களால் தோன்றிய இத்தீவு உலகின் பெரிய தீவுகளில் 13வது, இந்தோனீசியாவின் 5வது பெரிய தீவும் ஆகும்.
                                           சுமாத்திரா உலகின் ஆறாவது மிகப் பெரிய தீவாகும். இந்தோனேசியாவில் உள்ள இத்தீவின் பரப்பளவு 470,000 சதுர கிலோ மீற்றர்கள் ஆகும். 2005 இல் இத்தீவில் 45 மில்லியன் மக்கள் வசித்தனர்.
                                           சுலாவெசி(Sulawesi) இந்தோனேசியாவின் தீவுகளில் ஒன்று. போர்னியோ, ஜாவா, மற்றும் சுமாத்திராவுடன் பெரும் சுண்டா தீவுகளில் ஒன்று. இத்தீவு ஆறு மாகாணங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில் சுலவேசியில் மிகப்பெரிய நகரம் மகசார். 2005-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இத்தீவில் ஏறத்தாழ 16 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.
                                            திமோர்(Timor) என்பது திமோர் கடலின் வடக்கில் மலாய் தீவுக்கூட்டத்தின் தெற்கு பாகத்தில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இத்தீவு கிழக்கு திமோர் என்ற தனிநாட்டையும் இந்தோனீசியாவைச் சேர்ந்த மேற்கு திமோரையும் தன்னகத்தே கொண்டுள்ளது. திமோர் தீவின் தெற்கு, மற்றும் தென்கிழக்கே ஓசியானியாவும், வடமேற்கே சுலாவெசி தீவும் மேற்கே சும்பா தீவும் அமைந்துள்ளன. திமோரின் மேல்-வடமேற்கே புளோரஸ் தீவுகள், அலோர் தீவு ஆகியனவும், வடகிழக்கே பாரத் தாயா தீவுகளும் உள்ளன. பெரும்பாலான திமோரியர்கள் மெலனேசியர்கள் ஆவார்[1]. மொத்தம் 11 இனக்குழுக்கள் இங்குள்ளனர். இவர்களில் பெரும்பான்மையோர் மேற்கு திமோரில் வசிக்கும் அட்டோனி, மற்றும் நடு, கிழக்கு திமோரில் வசிக்கும் டேட்டம் இனத்தவர்கள் ஆவர்[2]. பெரும்பாலும் திமோரின் பழங்குடியினரின் மொழிகள் இந்தோனீசியத் தீவுக்கூட்டங்களில் பேசப்படும் ஆஸ்திரனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இவற்றைச் சாராத மொழிகள் மலுக்கு தீவுகளிலும் மேற்கு நியூ கினியிலும் பேசப்படுகிறது[3]. கிழக்கு திமோரில் டேட்டம், மற்றும் போர்த்துக்கீச மொழியும், மேற்கு திமோரில் இந்தோனீசிய மொழியும் அதிகாரபூர்வ மொழிகள் ஆகும். ஆனாலும் கிழக்கு திமோரில் இந்தோனீசிய மொழி பரவலாகப் பேசப்பட்டு வரும் மொழிகளில் ஒன்றாகும். இத்தீவின் கிட்டத்தட்ட 90 விழுக்காடு மக்கள் கிறிஸ்தவ சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இவர்களில் கிழக்கு திமோரில் பெரும்பான்மையானோர் கத்தோலிக்கர்கள் ஆவார். மேற்கு திமோரில் புரட்டஸ்தாந்து பிரிவினர் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். ஏனையோர் முஸ்லிம்கள் ஆவார்.
                                             நியூ கினி (New Guinea), ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே உள்ள உலகின் இரண்டாவது பெரிய தீவாகும். தற்போது டொரெஸ் நீரிணையில் இருந்து கடைசிப் பனிக்காலத்தின் போது ஏற்பட்ட வெள்ளத்தினால் இது ஆஸ்திரேலியப் பெரும் பகுதியில் இருந்து பிரிந்தது. இத்தீவின் மேற்குப் பகுதியான மேற்கு நியூ கினி இந்தோனீசியாவின் பப்புவா மற்றும் மேற்கு பப்புவா ஆகிய மாகாணங்களை உள்ளடக்குகிறது. இத்தீவின் மீதமுள்ள கிழக்குப் பகுதி விடுதலை பெற்ற நாடான பப்புவா நியூ கினியின் முக்கிய பிரதேசத்தை உள்ளடக்குகிறது.
                                              பாலி (Bali) என்பது ஒரு இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும். இது சுந்தா தீவுகளுக்கு மேற்கேயும், ஜாவாவுக்கும் லொம்பொக் தீவுகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. பாலித் தீவு நாட்டின் 33 மாகாணங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் டென்பசார் என்பதாகும். இங்கு பெரும்பான்மையாக இந்துக்களே வாழ்கின்றனர். இதன் கலை, கலாச்சாரம் குறிப்பாக நடனம், சிற்பம், இசை போன்றவை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளன. இதனால் பாலித் தீவு இந்தோனீசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகத் திகழ்கிறது.
                                              மென்டவாய் தீவுகள் (Mentawai Islands) இந்தோனேசியாவில் சுமாத்திராவின் மேற்கில் அமைந்துள்ள தீவுக்கூட்டம் ஆகும். இதில் கிட்டத்தட்ட 70 தீவுகளும் சிறுதீவுகளும் உள்ளன. சிபெருட் (4,030 கிமீ²) என்பது இதில் உள்ள பெரிய தீவாகும். சிப்பூரா, வடக்கு பகாய், தெற்கு பகாய் ஆகியன இங்குள்ள ஏனைய முக்கிய தீவுகள். இத்தீவுகள் சுமாத்திராக் கரையில் இருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தூரத்தில் மென்டவாய் நீரிணைக்குக் குறுக்கே அமைந்துள்ளது. இத்தீவுகளின் பழங்குடி மக்கள் மென்டவாய் மக்கள் என அழைக்கப்படுகின்றனர். சுற்றுலாத் துறைக்கு, குறிப்பாக கடலலை சறுக்கல் விளையாட்டுக்கு இத்தீவுகள் பேர் பெற்றது.

இலங்கையின் தீவுகள்.

Picture

               
இலங்கையின் தீவுகள் இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகள் சப்த தீவுகள் எனப்படும். அவ் ஏழு தீவுகளும் பின்வருமாறு:
1. லைடன் தீவு (வேலணைத்தீவு)
2. புங்குடுதீவு
3. நயினாதீவு
4. காரைநகர்
5. நெடுந்தீவு
6. அனலைதீவு
7. எழுவைதீவு
 8. (மண்டைதீவு)
இவற்றுள் லைடன் தீவு, புங்குடுதீவு, காரைநகர் ஆகியவை கடல்வழிச் சாலைகள் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் இணைக்கப்படுள்ளன. ஏனைய நான்கு தீவுகளான எழுவைதீவு, நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு என்பவற்றுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து கடல்வழிப் போக்குவரத்துத் தொடர்பு மட்டுமே உண்டு. சப்த தீவுகள் கந்தபுராணத்தில் வேறு பெயர் கொண்டும், ஒல்லாந்தர் காலத்தில் ஒல்லாந்து நாட்டின் முக்கிய நகரங்கள் அல்லது தீவுகள் பெயர் இட்டு அழைத்தனர். அவற்றின் விபரம் பின்வருமாறு:
பெயர்                                    ஆங்கிலத்தில்               ஒல்லாந்தர் பெயர்        கந்தபுராண பெயர்
வேலணைத்தீவு                Velanaitivu                             Leiden (லைடன்)             சூசை
புங்குடுதீவு                             Punkudutivu                         Middleburgh                        கிரவுஞ்சம்
நயினாதீவு                             Nainativu                                Harlem                                   சம்பு
காரைநகர்                               Karaitivu                                 Amsterdam                          சாகம்
நெடுந்தீவு                               Neduntheevu                        Delft (டெல்ப்ற்)                 புட்கரம்
அனலைதீவு                          Analaitivu                              Rotterdam                            கோமேதகம்
எழுவைதீவு                           Eluvaitivu                               Ilha Deserta                         இலவு

                                       தீவுகளில் மக்களின் ஆரம்ப குடியேற்றம், வாழ்வு முறை, ஆட்சி முறைகள் பற்றிய வரலாற்று தகவல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன. இடப் பெயர்களை வைத்து நோக்குகையில் இலங்கை மீதான தென் இந்திய கடல் படையெடுப்புகளில் இத்தீவுகளில் படைகளை அல்லது தனைகளை தங்க வைத்திருக்கலாம் என்று தெரிகின்றது. மேலும் ஊர்காவல்துறை போன்ற துறைகளும் முக்கியத்துவம் பெற்று விளங்கின. மேலும், தீவு மக்களின் உணவு, மொழி போன்ற சில அம்சங்கள் கேரள மக்களுடன் ஒப்பிடத்தக்கவை.
போர்த்துகேயர் (1505 - 1658), ஒல்லாந்தர் (1656 - 1796) ஆகியோரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் கிறிஸ்தவ குருமார்கள் வந்து போதித்து பலர் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள். யாழ் சமூகத்தை ஒத்த சாதிய படிநிலை அடுக்கமைவே இங்கும் நிலவியது. குறிப்பாக "குடிமைகள்" என்று அழைக்கப்படும் ஒடுக்கப்பட்டோர், வயல்களிலிலும், மேற் சாதி வீடுகளிலும் கூலி வேலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டு சுரண்டப்பட்டனர். மேலும், சம ஆசனம், சம போசனம் மறுக்கப்பட்டு இழிவுபடுத்தப்பட்டனர். இவர்களை தவிர, மீனவ சமூகமும் ஒதுக்கப்பட்ட ஒரு பிரிவினராகவே வாழ்ந்தனர். தற்போது, இச் சாதி கட்டமைப்பு தீவு பகுதிகளில் மிதமாக இடம்பெற்ற கிறீஸ்தவ மத மாற்றம், பின்னர் ஏற்பட்ட புலப் பெயர்வு காரணமாக மிகவும் வலுவற்று இருக்கின்றது. யாழ் சமூகத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு. யாழ் குடாநாடு போலின்றி தீவுகளில் கல்வி வசதி குறைவு, அதன் காரணமாக பலர் வியாபாரத்தில் ஈடுபட்டனர். இக் கூற்றை கா.சிவத்தம்பியின் யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை என்ற நூல் பின்வருமாறு விபரிக்கின்றது: "வியாபாரத்தை பொறுத்தமட்டில், (இத்தகைய) கல்வி வசதிகள் பெருமளவில் கிடையாத தீவுப்பகுதியினரே பெரும்பாலும் வெளிப் பிரதேசங்களில் கடைகள் நிறுவினர். இன்றும் இந்நிலைமை ஓரளவு தொடர்ந்து நிலவுவதைக் காணலாம். காரைநகர், புங்குடு தீவு முதலிய தீவுகளை சேர்ந்தவர்கள் இத்துறையில் முன்னோடிகளாக விளங்கினார்". இலங்கையின் வட மாகாணத்துக்கு உள்ளேயும் கிளிநொச்சி மற்றும் வன்னிப் பகுதிகளில் விவசாயக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டபோது அங்கே இடம்பெயர்ந்து குடியேறியோரில் பெரும்பகுதியினர் தீவுப்பகுதிகளைச் சேர்ந்த மக்களே. "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்பதற்க்கமைய ஈழப் போர் காலத்தில் தீவுப் பகுதி மக்கள் பெரும்பாலனவர்கள் புலம் பெயர்ந்து விட்டார்கள்.
                                        ஆரம்பத்திலேயே அவர்களுக்கு இருந்த வியாபார வெளி தொடர்புகள் இப் புலம் பெயர்வை உந்துவித்திருக்கலாம். பொரும்பாலான புலம் பெயர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் கனடாவிலும் சிதறி வாழுகின்றார்கள்.
விவசாயம், மீன்பிடி, வியாபாரம் ஆகிய மூன்று துறைகளுமே தீவுகளின் பொருளாதார அடிப்படை. நில வளம், நீர் வளம் விவசாயத்துக்கு அவ்வளவு ஒத்துழைக்காவிடினும் நெல், தோட்ட செய்கை, மற்றும் வியாபாரப் பயிரான புகையிலை செய்கையும் மேற்கொள்ளப்படுகின்றது. இத் தீவுகளின் புவியியல் சூழல் மீன்பிடித்தலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கின்றது. தீவக மக்கள் கொழும்பு, தென் இந்தியா மற்றும் பிற நாடுகளிலும் வியாபார தொடர்புகளை பேணியும், வியாபர தாபனங்களை உருவாக்கியும் பொருள் ஈட்டுவதில் ஈடுபட்டு வந்தனர், வருகின்றனர். இங்கும், யாழிலும் உற்பத்தியாகும் பல பொருட்களை இவ் வியாபரிகளே பல பிரதேசங்களிலும் சந்தைப்படுத்துகின்றார்கள். தீவக பொருளாதார கட்டமைப்பை யாழ்ப்பாண அரச உத்தியோக, உயர் கல்வி, தொழில் ரீதியிலான பொருளாதார கட்டமைப்போடு ஒப்பிட்டு வேறுபாடு சுட்டலாம். தீவுகள் அரசியல் முக்கியத்துவம் அற்ற பிரதேசங்களாகவே கணிக்கப்பட்டு வந்துள்ளன. எனவேதான், இந்திய அமைதிகாக்கும் படை தீவுகளை ஆக்கிரமிக்கவில்லை. மேலும், இலங்கை அரசு தீவுப்பகுதிகளை ஆக்கிரமித்த பொழுது ஈழப் போராளிகள் முக்கியத்துவம் கொடுத்து பாதுகாக்க முயலவில்லை. எனினும், நயினா தீவில் உள்ள விகாரை மற்றும் இராணுவ முகாம், ஊர்காவல்துறையில் உள்ள துறைமுகம் என்பன கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தவை. இத் தீவுகளில் இருந்து இடம் பெயர்ந்தோர் அத்தீவுகளின் சார்பாகவோ, அல்லது அத்தீவுகளில் உள்ள கிராமங்களின் சார்பாகவோ ஊர் ஒன்றியங்கள் அமைத்து அத் தீவுகளில் சமூக சேவை செய்யது வருகின்றார்கள். ஆபத்து உதவிகள், வைத்திய உதவிகள், பாடசாலைகள் மீள் கட்டமைப்பு, சனசமூக நிலையங்கள் பராமரிப்பு, தொழில் வள உதவிகள் (படகுகள், மீன் வலைகள், இழுவை இயந்திரங்கள், விதைகள், விவசாய நுட்பங்கள், மர வேலை கருவிகள்), பொருள் சந்தைப்படுத்தல் ஏற்றுமதி உதவிகள், போக்குவரத்து மேம்படுத்தல், மின்சத்தி வழங்குதல், கணணி கல்வி ஊக்குவிப்பு, தொலை தொடர்பு மேம்படுத்தல், குழந்தைகள்-முதியோர்-நோய்வாய்பட்டோர் பராமரிப்பு, கோயில்/தேவாலயங்கள்/பள்ளிவாசல்கள் பராமரிப்பு மற்றும் விழா எடுத்தல் போன்ற பல சேவைகளில் ஈடுபட்டு அங்கிருக்கும் மக்களின் நலனில் அக்கறை காட்டி வருகின்றனர். இவ் அமைப்புகள் தொடர்பு தகவல்கள் வியாபார/விளம்பர கைநூல்களில் இருக்கின்றன.
அவற்றின் விபரம் பின்வருமாறு:
லைடன் தீவு (வேலணைத்தீவு)
கரம்பொன் மக்கள் ஒன்றியம் - www.karampon.com
காவலூர் - கனடா மக்கள் ஒன்றியம்
நாரந்தனை மக்கள் ஒன்றியம் - கனடா
சுருவில் மக்கள் ஒன்றியம்
புளியங்கூடல் மக்கள் ஒன்றியம்
சரவணையூர் மக்கள் ஒன்றியம்
வேலணை மக்கள் ஒன்றியம் - www.velanai.com
புங்குடுதீவு நலன்புரி சங்கம் (பிரித்தானியா) www.pungudutivu.org
சர்வதேச நெடுந்தீவு ஒருங்கிணைப்பு மையம் www.neduntheevu.com
நயினாதீவு கனடிய அபிவிருத்தி சங்கம்
அனலைதீவு கலாசார ஒன்றியம் - கனடா - Analaitivu
கனடா காரை கலாச்சார மன்றம் - www.karainagar.com
இத் தீவுகளில் இருந்து யாழ் குடா நாடு நோக்கியோ, வெளி நாடுகள் நோக்கியோ மக்கள் வெளியேறிக்கொண்டே இருக்கின்றார்கள். பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களே இத் தீவுகளில் இன்னும் தங்கி உள்ளார்கள் என்றும் கூறலாம். எனினும், புலம் பெயர்ந்தவர்களிடம் ஊர் பற்றிய அக்கறை உள்ளது. அவர்களுடைய உதவியுடன் இத் தீவுகள் பொருளாதார அபிவிருத்தி அடையலாம். மேலும், அவர்களுக்கு இத்தீவுகள் உல்லாச அல்லது சுற்றுலா இடங்களாகவும் பரிமானிக்கலாம்.
                                        லைடன் தீவு (Layden island) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் பெரிய தீவு ஆகும். வேலணைத்தீவு என்றும் இத்தீவு அழைக்கப்படுவதுண்டு. கி.பி. 1658 முதல் கி.பி. 1796 வரை யாழ்ப்பாணத்தை ஆண்ட ஒல்லாந்தர் யாழ்ப்பாணக் குடாநாட்டை அண்டியிருந்த தீவுகள் ஏழுக்கும் ஒல்லாந்து (Holland) நாட்டின் முக்கிய நகரங்களின் பெயர்களை இட்டார்கள். இவற்றில் தெற்கு ஒல்லாந்தில் உள்ள லெய்டன் (Leiden) (யாழ்ப்பாணத்தில் இப்பெயரை லைடன் என்றே உச்சரிப்பது வழக்கம்) நகரத்தின் பெயர் இத் தீவுக்கு வழங்கப்பட்டது. இங்கு பத்து கிராமங்கள் உண்டு, அவை பின்வருமாறு:
1. சுருவில்
2. நாரந்தனை
3. கரம்பொன்
4. ஊர்காவற்றுறை (காவலூர்)
5. பரித்தியடைப்பு
6. புளியங்கூடல்

7. சரவணை
8. வேலணை

9. அல்லைப்பிட்டி
10. மண்கும்பான்
இவற்றுள் ஊர்காவற்றுறை (காவலூர்) பிரித்தானியர் ஆட்சிக்கு முற்பட்ட காலத்தில் வடக்கு இலங்கையில் முக்கியத்துவம் பெற்றிருந்த துறை முகங்களில் ஒன்றாகும்.
லைடன் தீவின் கிராமங்களைப் பற்றியொரு பாடல் தொகுதி
ஊர்காவர்றுறை, கரம்பன், சுருவில்
உற்றநற் புளியங்குடல் நாரந்தனை
பேர்மிகு சரவணை, வேலனை மண்கும்பான்
பெருமை சொல் மண்டைத்தாவல் லைப் பிட்டி
சேர்ந்தே லைடன் தீவெனும் நிலமாம்
(கவிஞர் சக்தி அ. பால. ஐயா)
வேலணைத்தீவின் நேர் வடக்கே அமைந்துள்ளது காரைநகர் என்று பொதுவாக அழைக்கப்படும் காரைதீவு. தென் மேற்குத் திசையில் புங்குடுதீவும், தென் கிழக்குத் திசையில் மண்டைதீவும் அமைந்துள்ளன. மண்டைதீவு யாழ்ப்பாண நகரத்துக்கும் வேலணைத்தீவுக்கும் இடையில் உள்ளது. வேலணைத்தீவு பண்ணை கடல் வழிச் சாலையினால், மண்டைதீவுக்கு ஊடாக யாழ்ப்பாண நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு, காரைதீவு என்பவற்றை இத் தீவுடன் இணைக்கும் கடல் வழிச் சாலைகளும் உண்டு.
அல்லைப்பிட்டி (Allaipiddy) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள வேலணைத்தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.ஊர்காவற்துறை என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த தீவுகளுள் ஒன்றான, லைடன் தீவு எனவும் அழைக்கப்படுகின்ற, லைடன் தீவில் உள்ள ஒரு ஊராகும். இங்கே ஒரு சிறிய துறைமுகமும் உண்டு. யாழ்ப்பாண அரசுக் காலத்திலும், போத்துக்கீசர் மற்றும் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்திலும், இத் துறைமுகம் நாட்டின் வடபகுதியிலிருந்த முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக விளங்கியது. இத்துறைமுகத்தின் மூலம் குறிப்பிடத்தக்க அளவு வருமானம் அரசாங்கத்துக்குக் கிடைத்துவந்ததாக ஆவணங்கள் காட்டுகின்றன. புனித பிரான்சிஸ் சேவியர் அடிகளார் இத்துறைமுகத்துக்கு 16ம் நூற்றாண்டில் வந்திறங்கி கத்தோலிக்க மதப் பரப்பலில் ஈடுபட்டார்.
கரம்பொன் (Karampon) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
சரவணை (Saravanai) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்க்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
சுருவில் (Suruvil) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது கடல்வளமும், நல் மண்வளமும் கொண்டது. இக்கிராமமானது தமிழீழம் யாழ்ப்பாணத்திற்கு மூவைந்து கிலோமீற்றர் தொலைவிலே உள்ளது. இங்கு ஏறக்குறைய 2500 - 3000 குடிமக்கள் உள்ளனர். வளைந்த கிராமம் என்ற படியால் சுரி + வில் = சுருவில் என வந்தது என்பர். " முன்னொரு காலத்தில் பல செல்வந்த வியாபாரிகளின் தாயகமாக செழிப்புற்று இருந்தமையினால், "குட்டி அமெரிக்கா" என்ற குறிப்பெயரும் கொண்டிருந்தது. சுருவில் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் காலப்பகுதியில் மிகப் பிரபல்லியமானதொன்றாக விளங்கியது. சுருவில் பதியின் அருகாமையில் கடற்கரைப் பிரதேசம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் அயற் தீவுகளான் புங்குடுதீவு, நயினாதீவு, எழுவைதீவு, அனலைதீவு, காரைதீவு, மண்டைதீவு போன்ற இடங்களுக்கு முற்காலத்தில் இலகுவாகப் போக்குவரத்துச் செய்வதற்கு இப்பகுதியில் அமைந்துள்ள கப்பல் துறைமுகமே பெரிதும் உதவியாக இருந்தது. சுருவில் கடல்வளம் நிறைந்ததொன்றாக விளங்கியமையால் கடற்கரைப் பிரதேசத்தை அண்டி நூற்றுக்கதிகமான மீனவர்கள் வசிக்கின்றார்கள். அவர்களில் பலர் கப்பல் ஓட்டிகள். இவர்கள் இந்தியா, மாலைதீவு போன்ற இடங்களில் இருந்து உணவு இறக்குமதியிலும், மக்கள் போக்குவரத்துக்கு உதவியாகவும் முற் காலங்களில் செயற்பட்டார்கள். தற்போதைய நிலவரம் தெரியவில்லை. சுருவில் மண்வளம் கமச்செய்கைக்கு (Paddy cultivation) மிகவும் உகந்தது. நெல் பரவலாகப் பயிரிடப்படுகின்றது. கிராமத்தை சுற்றிக் கற்பகதருச் (பனைமரச்) சோலைகளும், தென்னஞ்சோலைகளும், மாஞ்சோலைகளும் நிறைந்திருக்கின்றன. தோட்டங்களில் புகையிலை, வெங்காயம், மிளகாய், மரக்கறிகள் பயிரப்படுகின்றன. கற்பகத்தருவின் மூலப்பொருட்களான ஓலை, மட்டை, நார், பனம்பழம், பனாட்டு, புழுக்கொடியல், ஒடியல் போன்றவற்றைகொண்டு சிறு கைத்தொழில்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இங்கிருந்த மக்களின் மற்றுமொரு முக்கிய பொருளாதார மார்க்கம் வியாபாரம் ஆகும். கொழும்பிலும் பிற இடங்களிலும் கடைகள், உற்பத்தி தாபனங்கள் வைத்து பொருள் ஈட்டினர். எனினும், போர் சூழலுக்கு பின்னர் பல வர்த்தகர்கள் நிரந்தரமாக இடம்பெயர்ந்து விட்டனர். யாழ் சமூகத்தை ஒத்த சாதிய படிநிலமை அடுக்கமைவின் கூறுகள் இங்கு உண்டு. குறிப்பாக மீனவ, விவசாய-வியாபார சமூகங்களுக்கிடையே ஒரு இடைவெளி இருக்கின்றது. இருவரும் ஒருவரை ஒருவர் தங்கி வாழ்ந்தாலும், ஒரு இடைவெளி இருக்கின்றது. எனினும், ஒரு அடித்தளமான சமத்துவ அல்லது சமநிலை உணர்வு இங்கு மேலோங்கி இருக்கின்றது எனலாம். இங்குள்ள பெரும்பான்மை மக்கள் ஐயனார், அம்மன் ஆகிய குல தெய்வங்களை வழிபடும் இந்துக்கள். இங்கிருக்கும் ஐயப்பன் கோயில், நாக பூசணி அம்மன் கோயில், வைரவ கோயில் ஆகியவை இம் மக்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றுள், ஐயனார் கோயில் 250 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றை கொண்ட, விசாலமான கோயிலாகும். யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி|போர்த்துகேயர் காலனித்துவ ஆட்சியின்]] கீழ் கணிசமான மக்கள் கத்தோலிக்க கிறீஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டனர். இங்குள்ள அன்னை மேரி ஆலயம் கத்தோலிக்கரும், இந்துக்களும் வழிபடும் ஒரு தலம் ஆகும். இங்கு வாழும் மக்கள் அனேகர் பரம்பரை உறவினர், சினேகர். ஆகையால், இந்து கிறீஸ்தவ வேற்றுமை அல்லது பிரிவினை இல்லை. அதாவது, மதம் காரணமாக பிரச்சினையோ, அல்லது குமுகாய உணர்வில் பாதிப்போ இல்லை. சுருவிலில் ஒரு ஆரம்ப பாடசாலை, 5 ம் வகுப்புவரை கொண்ட அன்னைமேரி பாடசாலை ஆகியவை கல்வி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன. மேற்கல்விக்கு எல்லை கிராமங்களுக்கோ அல்லது வெளி கிராமங்களுக்கோ செல்ல வேண்டும். கிராம அபிவிருத்தி சபை, தையல் நிலையம், பப்பட தொழிற்சாலை ஆகியவை முன்னர் இயங்கி வந்தன. ஈழப் போரின் காரணமாக அவற்றின் தற்போதைய நிலை பற்றி தெளிவான விபரங்கள் இல்லை. மேலும், மக்கள் வசதிக்காக கூட்டுறவுக்கடையும், உபதபாற்கந்தோரும் உண்டு.
நாரந்தனை (Naranthanai) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்க்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.பரித்தியடைப்பு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
புளியங்கூடல் (Puliyankodal) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்க்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.
மண்கும்பான் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.
                            வேலணை(Velanai) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள லைடன் தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். வேல் + அணை = வேலணை; "வேல் அணைந்த இடம்". முருக வழிபாடு முதன்மை பெற்றிருந்ததனால் இப்பெயர் வந்திருக்கலாம் என்றும், "பண்டை நாளில் வேலன் என்ற தலைவனின் பொறுப்பில் நிர்வகிக்கப்பட்டு வந்தமையினால் வேலணை எனப் பெயர் பெற்றதன்ப" என்றும் இரு பெயர் தோற்ற காரணங்களை சுட்டுகின்றது "இடப்பெயர் ஆய்வு" என்னும் நூல்.
                                    குமுதினிப் படுகொலைகள்அல்லதுகுமுதினி படகுப் படுகொலைகள்என்பது மே 15, 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர். நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை வாள்களாலும் கத்திகளாலும் வெட்டிக் கொன்றனர்.சாட்சியங்கள் பன்னாட்டு மன்னிப்பு அவையினால் பதியப்பட்டன. குமுதினி 1960களில் இலங்கை அரசால் நெடுந்தீவுக்கு போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை நெடுந்தீவு மக்களை வெளியுலகத்தொடர்பில் வைத்திருக்க உதவிய படகு இதுவாகும். இயந்திர அறை முன்பகுதி பின்பகுதி என மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. குமுதினி படகு 1985 மே 15 காலை 7:15 மணிக்கு நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டது. நயினாதீவு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது புறப்பட்ட அரைமணி நேரத்தின் பின் நடுக்கடலில் கண்ணாடி இழைப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டது. ஆறு பேர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர். பின்புறமிருந்த பயணிகளை இயந்திர அறையின் முன்பக்கம் செல்லுமாறு மிரட்டினர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். பின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால் இயந்திரத்தில் இருந்து பின்புறம் செல்லும் ஆடு தண்டுப்பகுதியை அவர்கள் அகற்றினர். இருக்கை மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட சுமார் 4 அடி ஆழமானதாக அது இருந்தது. இதன்பின் பணியாளர்கள் உட்பட ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். அரைகுறைத் தமிழில் அவர்கள் கதைத்தனர்.
                                     குமுதினியின் இருபக்க வாசல்களிலும் உள்ளும் வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக கடற்படையினர் அழைத்து கத்தியால் குத்தியும் கண்டங்கோடலியால் வெட்டியும் இரும்புக்கம்பியால் தாக்கியும் கொன்று அந்த ஆடு தண்டுப்பகுதியில் போட்டனர். இப்படி கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி முன்புறம் இருப்பவர்களுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும் ஊரையும் உரக்கச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர். அவலக் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் இருந்தவர்களும் உண்டு. கடுமையாகத் கடற்படை தாக்க குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கடற்படையினரால் கருதப்பட்டும் போடப்பட்டனர்.
நேரில் கண்டவர் கூறியதாவது: "எனது தலையில் அடித்தார்கள். நான் விழுந்து விட்டேன். நான் இழுத்துச் செல்லப்படுவதை உணர்ந்தேன். கோடரி போன்ற ஆயுதத்தால் எனது தலையை அடித்தார்கள். வயிற்றிலும் கால்களிலும் அடித்தார்கள். பின்னர் ஒரு பள்ளத்தில் வீழ்ந்தேன். நான் இறந்து விட்டதாக நடித்து அப்பாடியே கிடந்தேன். எனக்கு மேல் மேலும் உடல்கள் விழுந்தன. குழந்தைகள், பெண்களின் அவலக்குரலைக் கேட்கக்கூடியதாக இருந்தது." கிட்டத்தட்ட 45 நிமிடங்களின் பின்னர் கண்னாடி இழைப்படகு அங்கிருந்து புறப்பட்டது. இப்படுகொலையில் இறந்தோர் எண்ணிக்கை 36 முதல் 48 வரை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் பன்னாட்டு மன்னிப்பு அவை இறந்தோர் எண்ணிக்கை 23 எனத் தெரிவிக்கிறது.பன்னாட்டு மன்னிப்பு அவையினர் இந்நிகழ்வில் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் விரிவான அறிக்கை ஒன்றை இலங்கை அரசுக்குச் சமர்ப்பித்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கெதிராக முறைப்படி சட்ட நடவடிக்கை எடுக்கும் படி வற்புறுத்தியது.இப்படுகொலைகள் நயினாதீவு கடற்படைத்தளத்தைச் சேர்ந்தோரால் மேற்கொள்ளப்பட்டதென குற்றஞ்சாட்டப்பட்ட வேளையில் இலங்கை அரசின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கூறியதாவது: "இக்குற்றத்தை யார் புரிந்தார்கள் என அறிவதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை," தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் நவம்பர் 22, 2006 விடுத்த அறிக்கையில் படகில் 72 பேர் இருந்ததாகவும் 36 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. உயிர் தப்பியவர்கள் பலரின் வாக்குமூலங்களை அது வெளியிட்டிருக்கிறது.

நயினாதீவு.

Picture

                               நயினாதீவு (Nainativu, Nainathivu or Nayinativu) யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள(Jaffna District) சப்த தீவுகள் என அழைக்கப்படும் ஏழு தீவுகளுள் ஒன்று. இது நாகதீபம் (சிங்கள மொழியில், நாகதீப) எனவும் அழைக்கப்படுகிறது. இலங்கையிலுள்ள பௌத்த சமயத்தவர் புத்த பெருமான் இந்தத் தீவுக்கு வருகை தந்ததாக நம்புகிறார்கள்.
யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக, அதற்குத் தென்மேற்குத் திசையில் 23 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதற்குக் கிழக்குத் திசையில் புங்குடுதீவும், நேர் வடக்கில் அனலைதீவும் அமைந்துள்ளன. இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்சம் என்னும் நூலில் நயினாதீவு பற்றிய பல குறிப்புகள் உள்ளன. புத்தர் வாழ்ந்த காலத்தில் இலங்கையில் ஆட்சிபுரிந்த இரண்டு நாக அரசர்களுக்கிடையில் ஒரு மணியாசனத்தின் உரிமை தொடர்பாக ஏற்பட்ட பிணக்கைத் தீர்த்து வைப்பதற்காக அவர் நாகதீபத்துக்கு வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இதே பிணக்கு/யுத்தம் ‘மணிபல்லவத்தில்’ இடம்பெற்றது என்று ‘மணிமேகலை’க் காப்பியம் கூறுகின்றது. இங்கே பௌத்த கோவில் ஒன்று இருந்ததாகவும், இந் நூலில் குறிப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. நயினாதீவுக்கு முற்காலத்தே பல பெயர்கள் வழங்கப்பட்டனவென்று கருதப்படுகிறது. குல. சபாநாதன் "இத்தலத்திற்கு நாகதிவயின, நாகதீவு அல்லது நாகத்தீவு, நயினார்தீவு, நாகநயினார்தீவு, மணிநாகதீவு, மணிபல்லவத் தீவு, மணித்தீவு, பிராமணத்தீவு, ஹார்லெம் (Haorlem), சம்புத்தீவு, நரித்தீவு, நாகேஸ்வரம், நாகேச்சரம் முதலிய பல பெயர்கள் உள்ளன"எனக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இவற்றுட் பல பெயர்கள், வெறும் செவிவழிக் கதைகளின் அடிப்படையில் நயினாதீவுடன் தொடர்புபடுத்தப்படுவனவாகவும் ஆய்வாளர்கள் ஏற்கத்தக்க சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, இப்பெயர்கள் எக்காலத்திலாவது நயினாதீவைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டன என்று நிரூபிக்கப்பட முடியாதவையாகவுமே உள்ளன.
                                     வல்லிபுரக் கோயிற் பொற்சாசனம் நாகதீப, மணிபல்லவம் ஆகிய பௌத்த சமயச் சார்புடைய பெயர்களை, குறிப்பாக நயினாதீவுடன் தொடர்புபடுத்தும் தொல்பொருட் சான்றுகள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், நாகதீவு (நகதிவ) எனும் பெயர் யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதையும் குறிப்பதாக வழங்கப்பட்டதற்கு அசைக்க முடியாத சான்றாக வசப அரசனின் காலத்தில் (கி.பி.66-111) பொறிக்கப்பட்ட வல்லிபுரக் கோயிற் பொற்சாசனம் விளங்குகின்றது. ஆகவே, "நாகதீப" அல்லது "நாகதீபம்" என்ற பெயரால் நயினாதீவை அழைக்கும் வழக்கம் மிகச் சமீப காலத்தில் - இங்குள்ள புத்தர் கோவில் அமைக்கப்பட்ட 1940 களின் முற்பகுதியில் - தோன்றியது என்பதே சரியாக அமையும். நாகதிவயின என்ற சிங்களப் பெயர், நயினாதீவைக் குறிப்பதாக கி.பி. 15ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நம்பொத்த என்ற சிங்கள நூலில் காணப்படுகின்றது. இது நயினார்தீவு அல்லது நாகநயினார்தீவு அல்லது நாகதீவு என்ற தமிழ்ப் பெயரின் சிங்கள வடிவமே என்பதற்கு நம்பொத்த குறிப்பிடும் ஏனைய தீவுகளுக்கான சிங்களப் பெயர்களே சான்றாகும். அவை வருமாறு:
தண்ணீர்த்தீவு (வேலணைத்தீவு)-தன்னிதிவயின
புங்குடுதீவு - புவங்குதிவயின
காரைதீவு - காறதிவயின
அனலைதீவு - அக்னிதிவயின
‘நம்பொத்த’ நூலாசிரியர் தமிழ் ஊர்ப் பெயர்களை சில இடங்களில் சிதைத்து சிங்களத்தில் மொழிமாற்றம் செய்ய முயன்றுள்ளார். வேறு சில இடங்களில் அவர் தமிழ்ப் பெயரில் உள்ள சொல்லுக்குச் சமமான சிங்களச் சொல்லைப் பதிலிட்டு மொழிமாற்றம் செய்துள்ளார் என்பதை மேலே கண்டோம். ‘அனல்’ என்ற தமிழ்ச் சொல் ‘அக்னி’யைக் குறிப்பது என்பதை அறிந்து இருந்த ‘நம்பொத்த’ ஆசிரியர், ’நயினார்’, ‘நாகநயினார்’ என்பன நாகதேவனைக் குறிக்கும் பெயர்கள் என்பதையும் அறிந்து இருந்திருக்கலாம். ஆகவே, பதினைந்தாம் நூற்றாண்டில், நயினாதீவுக்கு வழங்கிய தமிழ்ப் பெயர் நாகதீவு, நயினார்தீவு, நாகநயினார் தீவு - இவற்றில் எதுவாகவும் இருந்திருக்கலாம் என்பதே ‘நம்பொத்த’ மூலம் நமக்குத் தெரியவருகின்றது. "மணிபல்லவம்" என்ற பெயரும் "நாகதீபம்" என்ற பெயரைப் போன்று முழு யாழ்ப்பாணக் குடாநாட்டையுமே குறிப்பதாக வழங்கப்பட்டது என்பது நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர், முதலியார் சி. இராசநாயகம் ஆகிய அறிஞர் பெருமக்களது கருத்தாகும். டாக்டர் போல் பீரிஸ், டாக்டர் பரணவிதான போன்ற சிங்கள தொல்பொருளியல் அறிஞர்களும் இதே கருத்தையே வெளியிட்டுள்ளனர்.
                                            மணிமேகலையில் கூறப்பட்ட ‘மணிபல்லவம்’ நயினாதீவு அல்ல. அது நாகதீபமாகிய யாழ். குடாநாடே! என்று கொள்வதற்கு மேற்கூறப்பட்ட அறிஞர்கள் ஒரு மணியாசனத்தின் உரிமை தொடர்பாகப் போரிட்ட இரண்டு நாக அரசர்களின் கதையை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்திருப்பது போலத் தோன்றுகிறது. இந்த யுத்தம் நடந்த இடம் ‘நாகதீபம்’ என்;று மகாவம்சம் கூறுகின்றது. இதே யுத்தம் ‘மணிபல்லவத்தில்’ இடம்பெற்றது என்று ‘மணிமேகலை’க் காப்பியம் கூறுகின்றது. ஆகவே, ‘மணிபல்லவமும் நாகதீபமும் ஒன்றே; யாழ்.குடாநாடுதான் நாகதீபம் என்றால், அதுவே மணிபல்லவமுமாகும்’ என்று மேற்கூறிய அறிஞர் பெருமக்கள் முடிவுகட்டியுள்ளதுபோன்று தோற்றுகின்றது. இதில் ஒருவேளை தவறிருக்கலாம் என்பது சிறியேனின் கருத்து. மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடும் ‘மணிபல்லவம்’ நயினாதீவாக இருக்கக்கூடும் என்ற கருத இடமுண்டு, ஆனால் ‘நாகதீபம்’ என்ற பெயர் பண்டைய நாட்களில் நாகர் அரசாட்சிக்குட்பட்ட ஒரு தேசத்தை அல்லது இராச்சியத்தைக் குறிக்க வழங்கப்பட்டதே அல்லாது, எமது ஊரைப் போன்ற ஒரு சிறிய ஊரைக் குறிக்க வழங்கப்படவில்லை என்பதற்கு நிறைய ஆதாரங்களுண்டு. இது குறைந்த பட்சம் யாழ். குடாநாட்டையும் அயல் தீவுகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. இன்றைய வடமாகாணம் முழுவதையும் மேற்குக் கரையில் கல்யாணி (களனி) ஆறு வரையான பகுதிகளையும்கூட ‘நாகதீபம்’ உள்ளடக்கியிருந்தது என்ற கருத்தும் உண்டு. ஆகவே, ‘நாகதீபம்’ என்பது ஒரு இராச்சியத்தின் பெயர் நயினாதீவைப் போன்ற ஒரு சிறிய தீவை அல்லது ஊரைக் குறித்த பெயரல்ல. ஆனால், மணிபல்லவம் ஒரு சிறிய தீவு. காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து தெற்கே முப்பது ‘யோசனை’ தூரத்தில் அமைந்திருந்தது என்று ‘மணிமேகலைக் காப்பியம் கூறும் விவரங்கள் நயினாதீவுக்குப் பொருந்துவனவாக உள்ளன. ‘புத்தர் இங்கு வந்தார். போரை நிறுத்திச் சமாதானம் செய்து மணியாசனத்தில் அமர்ந்து பஞ்சசீலத்தைப் போதித்தார்’ என்பது உண்மையோ பொய்யோ என்பது வேறு விடயம். அதுபற்றி சிங்கள வரலாற்றுத் துறை அறிஞர்களிடையேகூடக் கருத்து வேறுபாடு உண்டு. ஆனால், ஒரு காலத்தில் இங்கு வாழ்ந்த தமிழ் நாகர்கள் பௌத்த சமயத்தைத் தழுவியிருந்தனர்.
                                      இந்தத் தீவு ஒரு பௌத்த வழிபாட்டுத் தலமாக அக்காலத்திலும் திகழ்ந்திருந்தது. ஆகவே, ‘மணிமேகலை’க் காப்பியம் எழுந்த சங்கமருவிய காலத்தில் - அதாவது கி.பி.மூன்றாம் நூற்றாண்டு அளவில் - நயினார்தீவு, ‘மணிபல்லவம்’ என்றும் அழைக்கப்பட்டது என்றும், இது நாக அரசர்களால் ஆட்சிசெய்யப்பட்ட நாகதீவு (அல்லது ‘நாகதீபம்’) என்ற இராச்சியத்துக்கு உட்பட்டிருந்தது என்றும் கொள்வது தவறன்று.
‘மணிமேகலை நயினாதீவுக்கு வந்திருக்கலாம் என்று கூறும்போது, புத்தர் வந்திருக்கமுடியாது என்று எப்படிக் கூறமுடியும்? மணிமேகலை மணிபல்லவத்துக்கு வந்திருந்த சமயம் அத்தீவில் முன்னர் புத்தர் வந்து அமர்ந்து பஞ்சசீலத்தை உபதேசித்த மணியாசனத்தைத் தரிசித்தாளென்று அல்லவா மணிமேகலைக் காப்பியம் கூறுகிறது?’ எனச் சிலர் வாதிடலாம். அத்தகைய வாதம் ஏற்கத் தக்கதாகாது. பாம்பு-கருடன் போராட்டத்தின் விளைவாகவே தமிழகத்து வணிகர் ஒருவரால் நயினைக் கோயில் அமைக்கப்பட்டது என்பது செவிவழிக் கதை. பாம்பு சுற்றிக் கல்லையும், கருடன் கல்லையும் கோவிலையும் இன்று அடியார்கள் தரிசிக்கின்றனர். இன்றும் அக்கற்களையும், கோவிலையும் அடியார்கள் தரிசிப்பது உண்மையாதலால், பாம்பும் கருடனும் முன்னர் தமக்குள் போராடியதாகக் கூறப்படும் கதையும் உண்மையாகிவிட முடியாது. வரலாற்றுத்துறை அறிஞர்கள் (பல சிங்களவர்கள் உட்பட) தமது ஆய்வுகளின் அடிப்படையில் ‘புத்தர் இலங்கைக்கு வந்தார் என்பது வெறும் கட்டுக்கதை’ என்ற கூறியிருப்பதை நாம் புறந்தள்ளிவிட முடியாது. கலாநிதி ஜீ.சீ.மெண்டிஸ் போன்ற சிங்கள அறிஞர்கள் உட்பட்ட பல வரலாற்றுத்துறை அறிஞர்கள், ‘புத்தர் இலங்கைக்கு வந்தார்’ என்பது ‘இயேசுக் கிறீஸ்து லண்டனுக்கு போனார்’ என்பது போன்றதொரு கட்டுக்கதை என்று கருத்து வெளியிட்டுள்ளமையும் இங்கு மனங்கொள்ளத்தக்கது.
                                      4. இச்சிறுதீவின் தற்காலப் பெயரான ‘நயினாதீவு’ என்ற பெயர் இத்தீவுக்கு இடப்பட்ட காரணம் இங்கு நயினார்பட்டர் என்ற பிராமணர் குடியேறியதே என்று சிலர் கூறுவது பொருத்தமற்ற கூற்று என்பதை நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்:
“நாகதீவு, நயினாதீவு எனப் பெயர் மாறியது நயினாபட்டர் என்னும் பிராமணர் ஒருவர் அங்கு குடியேறிக் கிலமாய்க் கிடந்த நாகதம்பிரான் கோயிலைப் புதுக்கியபின் என்ப. ஆயின், “நாகநயினார் தீவு” என வையாபாடலில் வருகின்றது. நாகதம்பிரான், நாகநயினார் எனவும் அழைக்கப்பட்டதேயோ?” திரு.குல.சபாநாதன் அவர்களும் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் மேற்குறித்த கருத்தை வழிமொழியும் வகையில் தனது நூலில் பின்வருமாறு குறித்துள்ளார்: “நாகர் தாம் வழிபட்ட நாகத்தை, நாகநயினார், நாகதம்பிரான் எனப் போற்றியிருத்தல் கூடுமாதலின், அத்தெய்வம் கோவில் கொண்டெழுந்தருளிய தலம் நாகநயினார்தீவு, நயினார்தீவு எனப் பெயர்பெற்றதாகவும் கூற இடமுண்டு.” “நயினார்தீவு” எனும் பெயருக்கான காரணம் தொடர்பாக இக்கட்டுரையாளர் வெளியிட்ட “நயினாதீவு நாகம்மாள்” என்ற நூலின் 102 ஆம் பக்கத்திலும், கனடிய நயினாதீவு நாகம்மாள் கோவிலின் திருக்குட முழுக்குப் பெருவிழா மலரில் இக்கட்டுரையாளர் வரைந்த “நயினாதீவு சிறி நாகபூசணி அம்மன் கோவில்” என்ற தலைப்பிலான கட்டுரையிலும் மேலதிக தகவல்களைக் காணலாம்.
                                          5. ஆக, எமது இச்சிறுதீவு, நாகதீவு (சிங்களத்தில் ‘நாகதிவயின’), நயினாதீவு (அல்லது நயினார் தீவு) என்ற பெயர்களாலும், டச்சுக்காரர்களின் ஆட்சியின்போது (Haorlem) ‘ஹார்லெம்’ எனவும் அழைக்கப்பட்டதென்பது ஆதாரபூர்வமாக அறியக்கிடக்கின்றது. ‘ஹார்லெம்’ என்பது ஒல்லாந்தில் தலைநகர் ‘அம்ஸ்ரடாமு’க்கு அருகில் உள்ள சிறிய நகரின் பெயர். ஒல்லாந்தர் அமெரிக்காவில் குடியேறியபோது, தற்போதைய நியயோர்க் நகருக்கு அண்மையில் ஒரு குடியிருப்பை நிறுவி, அதற்கும் ‘ஹார்லெம்’ என்றே பெயரிட்டனர். நயினாதீவு தற்போது ‘ஹார்லெம்’ என்று அழைக்கப்படுவதில்லையாயினும். ஒல்லாந்திலும் ஐக்கிய அமெரிக்க அரசுகளிலும் (USA) ‘ஹார்லெம்’ நிலைத்திருக்கின்றது.
                                            6. விசயனின் வருகைக்கு முந்திய காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாடும் அயலிலுள்ள தீவுகளும், திருமலை, வன்னி, மன்னார், மற்றும் கிழக்கு மேற்குக் கரையோரப் பட்டினங்களும் நாகர்களது குடியிருப்புக்களாக இருந்தன. யாழ்ப்பாணக் குடாநாடும் அயல்தீவுகளும் ‘நாகதீபம்” என்ற பெயருக்கேற்றவாறு, கதிரமலையில் தனது தலைநகரைக் கொண்ட, ஒரு நாகர் அரசின் கீழ் இருந்தன. முதலியார் திரு.செ.இராசநாயகம், தமது “யாழ்ப்பாணச் சரித்திரம்” (1933) என்னும் நூலில் இதனை அறுதியிட்டுக் கூறியுள்ளார். “இத்தீவுகளிலும், இலங்கையின் மேற்பாகத்திலும், சரித்திர காலத்துக்கு முந்தியே நாகர் எனும் ஒரு சாதியார் குடியேறியிருந்தனர். இத்தீவுகளுக்கு இப்போது கந்தரோடை என்று அழைக்கப்படும் கதிரமலையே இராசதானியாகவிருந்தது.”
                                             7. ஆக, நயினார்தீவும், ஏனைய யாழ்ப்பாணத் தீவுகளையும் யாழ் குடாநாட்டையும் போன்று, சரித்திர காலத்துக்கு முன்னர் - அதாவது விசயன் வரவுக்கு முன்னர் - நாகர்களது ஒரு குடியிருப்பாக இருந்திருக்கலாம். அல்லது, சில நூற்றாண்டுகள் கழித்து, நாகர்கள் நாகதீபத்தில் (யாழ்.குடாநாட்டில்) இருந்தோ அல்லது அயல் தீவுகளில் இருந்தோ நயினாதீவில் குடியேறியிருக்கலாம். எங்கிருந்து அவர்கள் வந்தனர், எப்போது வந்தனர் என்பதைத் திட்டவட்டமாகக் கூறமுடியாவிடினும். முதன் முதலாக நயினாதீவில் குடியேறிய மக்கள் நாகர்கள் என்பது சந்தேகமறப் புலப்படுகின்றது. நயினார்தீவு, நாகதீவு, நாகதிவயின, நாகநயினார்தீவு, ஆகிய நயினாதீவுக்கு வழங்கப்பட்ட தொன்மைவாய்ந்த பெயர்களும் இவ்வுண்மையை மேலும் உறுதிசெய்கின்றன.

நாகர்கள்.

Picture
   
                                 8. நாகர்கள் யார்? என்ன மொழிக்குரியவர்கள்?
சரித்திர காலத்திற்கு முற்பட்ட, பெரும்பாலும் திராவிடர்களாகவே இருந்திருக்கக்கூடிய, தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் பரந்து வாழ்ந்த இனத்தவரின் ஒரு கிளையினரே நாகர் என சேர் பொன். அருணாசலம் அவர்கள், ‘Sketches of Ceylon History' என்ற தமது நூலில் கூறுகின்றார். பன்மொழிப் புலவர் திரு.கா.அப்பாத்துரையாரோ மேலும் ஒருபடி சென்று, “நாகர்கள் தமிழராகவே தமிழகத்தில் வாழ்ந்தனர். எங்கும் வேறு இன மொழிக்கு உரியரென்ற பேச்சும் ஏற்படவில்லை. தனி இனமாகவே வாழ்ந்தனர். ஆகவே, அவர்கள் கடல்கொண்ட தமிழகத்திலோ, தமிழகம் சூழ்ந்த நிலத்திலோ இருந்த தமிழினப் பிரிவினர் என்றும், கடல்கோளின் பயனாகவோ, வேறு காரணங்களாலோ எங்கும் பரந்தவர் என்றும் கருத இடமுண்டு.” என்று குறிப்பிட்டுள்ளார். தென்னிந்தியத் தமிழகத்தின் திருநெல்வேலி நகரில் இருந்து 24 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆதிச்சநல்லூர் (ஆதித்த நல்லூர்) என்னும் இடத்தில் குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான “முதுமக்கள் தாழி”கள் (இறந்தோரின் உடலை இட்டுப் புதைக்கும் மண்சாடிகள்) அகழ்வாராய்ச்சியாளரால் சமீபத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. புதை குழிகளிலிருந்து சிலநூறு மீற்றர் தூரத்தில் மக்கள் குடியிருப்புப் பகுதியும் தொழிலகங்கள் பகுதியும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. சிவப்பு, கறுப்பு நிற மண்பாண்டங்களின் உடைந்த துண்டுகளும், எலும்பில் செய்த ஆயுதங்களும், இரும்பு, செம்பு, பொன் முதலிய உலோகங்களில் செய்த பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதைகுழிகள் மூன்று அடுக்குகளாக ஒன்றின்மேல் ஒன்றாக அமைந்து இருந்தன. இவற்றுள் காணப்பட்ட மட்பாண்டம் ஒன்றின் உட்புறத்தில் தமிழ்-பிராமி எழுத்துக்களில் வரையப்பட்ட ஒருவருடைய பெயர் என்று கருதப்படும் ஏழு எழுத்துக்களைக் கொண்ட சொல் காணப்பட்டுள்ளது. மணிமேகலை, நற்றிணை, பதிற்றுப்பத்து, புறநானூறு முதலிய சங்கத் தமிழ் இலக்கியங்கள் விவரிக்கும் இறந்தோர் உடலைப் புதைக்கும் அல்லது இறந்தோர் எலும்புகளைப் புதைக்கும் முறை, ஆதிச்சநல்லூரில் ஒழுங்கு பிசகாமல் பின்பற்றப்பட்டுள்ளது. சரித்திர காலத்துக்கு முற்பட்ட இந்தியர் (திராவிடர்) குள்ளமான தோற்றம் உடையவர்கள் என்று இதுவரை நம்பப்பட்டதைப் பொய்யாக்கும் வகையில் இங்கு புதைக்கப்பட்டவர்கள் உயரமானவர்களாகவும் மொங்கோலிய உருவ அமைப்பின் அம்சங்களைக் கொண்டவர்களாகவும் இருந்தனர் என்று அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகவல்களை ஒருங்கு சேரப் பார்க்கையில் புதைக்கப்பட்ட மக்கள் ‘தமிழ் நாகர்’ என்று சுட்டுவனவாக உள்ளன. “நாகர்களின் தசைக் கட்டமைப்பு, மஞ்சள் நிறம், சப்பை மூக்கு, சிறிய கண்கள், உயர்ந்த கன்ன எலும்புகள், அற்பதாடி முதலியவை, அவர்கள் முன்னொரு காலத்தே மொங்கோலிய இனக் குழுமத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர் என்பதைக் காட்டும்” என்று ‘இந்து வரலாறு’ (Hindu History) எனும் நூலின் ஆசிரியர் திரு.ஏ.கே.மஜும்தார் என்பார் கூறுகின்றமையும் இங்கு நோக்கத் தக்கது. “தாமிரவருணி” ஆற்றங்கரையில் உள்ள ஆதிச்சநல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட தாழிகள் போன்ற அதே வகைத் தாழிகள் பல ஆண்டுகளுக்கு முன் இலங்கையின் மேற்குப் பகுதியில் “பொம்பரிப்பு” என்று தவறாக உச்சரிக்கப்படும் ‘பொன்பரப்பி’ (தாமிரவருணி) என்ற ஊரிலும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இவை முறையான ஆய்வுக்குட்படுத்தப்பட்டால் புத்தர் பிறப்பதற்கு குறைந்தது 500 வருடங்களுக்கு முன்னரே இலங்கையில் தமிழ் நாகர்கள் வாழ்ந்த உண்மை நிரூபணமாகும். இவ்வாறான தாழிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன் கோவிலையடுத்த குவளக்கரைக் கிராமத்திலும், திருநெல்வேலிக்கு மேற்கே சேரநாடாகிய கேரள எல்லைக்குள் கொல்லம் நகரையடுத்த அட்டமுடி ஏரிக் கரையில் மாங்காடு எனுமிடத்திலும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. (ஆதாரம்: திரு.டி.எஸ்.சுப்பிரமணியன் The Hindu இதழில் 14.03.2004 இலும், 03.04.2005 இலும் வரைந்த கட்டுரைகளும், The Telegraph இதழில் 20.06.2005 இல் திரு.எம்.ஆர்.வெங்கடேசு வரைந்த கட்டுரையும்) நாக வழிபாட்டில் திளைத்த தமிழ்த் தொல்குடியினரான நாகர்கள், நயினாதீவு மற்றும் தீவுகளிலும், யாழ். குடாநாட்டிலும் ஒரு காலத்தில் சிறப்புற வாழ்ந்தனர். பிற்காலத்தில் இந்து சமயம், பௌத்தம், கிறீத்தவம், இஸ்லாம் என்ற பிறமதப் பாதிப்புகளால் தமது நாக வழிபாட்டு அடையாளத்தை இழந்தும், சாதியக் கொடுமைகளால் ஒடுக்கப்பட்டும் நாகர்கள் இன்று சிறப்பொழிந்து போயினர். எனினும், நாகர்களின் வழிவந்த மக்கள் நயினாதீவில் நம்மத்தியில் இன்றும் உளர். கி.பி. 1620 அளவில், நயினாதீவில் அமைந்திருந்த "நயினார் கோவில்" போர்த்துக்கீசரால் தாக்கி அழிக்கப்பட்ட வேளையில், இங்கு வாழ்ந்த நாகர்வழிவந்த மக்களில் பெரும்பாலோர் தமது நயினார் கோவிலைப் பாதுகாக்கும் முயற்சியில் உயிர் இழந்தார்கள். நயினையில் இன்று வாழும் தொல் தமிழராகிய வள்ளுவ சமுதாயத்தவர்கள் எஞ்சிய நாகர்களின் நேரடிப் பிற்சந்ததியார் ஆவர். இவர்களே நயினையின் முதற் குடிகள் ஆவர்.
                                         9.பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இலங்கையின் வடபாகம் சோழ மண்டலத்தின் ஒரு பகுதியாயிற்று. கி.பி.1012 இல் முழு இலங்கையும் சோழமண்டலத்துக்குச் சேர்ந்தது. யாழ்ப்பாண இராச்சியத்தை அப்போது ஆண்டுகொண்டிருந்த சிங்கை நகர் (வல்லிபுரம்) அரசர்கள் சோழப் பிரதானிகளாயினர். சோழர்கள் எண்ணிறந்த சைவக் கோவில்களைப் புதிதாக அமைத்ததுடன், பழைய சைவாலயங்களையும் புதுப்பித்தனர். நூற்றிருபத்தாறு நீண்ட ஆண்டுகள் தொடர்ச்சியாகச் சோழராட்சி இலங்கையில் நிலவிய காலத்தில் நயினாதீவில் இருந்த பழம்பெருமை வாய்ந்த நயினார்கோவிலும் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவேற்றப்பட்டு இருக்கலாம். அவ்வேளை இங்கு வந்து திருப்பணி வேலைகளைச் செய்த சோழதேசத்துச் சிற்பிகளும் பிராமணக் குடிகளும் மற்றும் கோவில் பணிக்கு அவசியப்பட்ட ஊழியர்களும் தமது குடும்பங்களுடன் இங்கு நிரந்தரமாகவே தங்கிவிட்டிருக்கலாம். இவ்வாறு தமிழகத்து மக்கள் வந்து தங்கும் முறை தொடர்ந்ததாலோ என்னவோ இவ்வாறு பிறநாட்டவர் வந்து தாம் இறங்கும் துறைமுகங்களுக்கு அண்மையில் வசிக்க விழைவதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், பிற நாட்டார் (பரதேசிகள்) “ஊராத்துறையில் வந்து இருக்க வேணுமென்றும்..” “புதுத் துறைகளில் வந்தாலித் துறையிலே சந்திக்க வேணுமென்றும்…” முதலாம் பராக்கிரமபாகு அரசனின் ஆட்சிக் காலத்தில் (கி.பி.1153-1186) நயினாதீவில் நிறுவப்பட்ட தமிழ்க் கல்வெட்டின் மூலம் அரச கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வணிகக் கப்பல்கள் வந்து செல்லும் துறைமுகமாக நயினாதீவு இருந்தமையால் தமிழகத்தவர் அல்லாத பிறநாட்டவர் சிலரும் தனிப்பட்ட காரணங்களின் பொருட்டு இத்தீவில் நிரந்தரமாகத் தங்கி வாழ்ந்திருத்தலும் நிகழ்ந்திருக்கக்கூடும்.
                                          10. சோழ, பாண்டிய அரசர்களும், அவர்களுக்குப் பின்பு சேது நாட்டு (இராமநாதபுரம்) அரசர்களும், பின் யாழ்ப்பாண அரசர்களும் முத்துக்குளித்தல், சங்கு குளித்தல் போன்ற தொழில்களை ஊக்குவித்து வந்தனர். வரலாற்றுக்கெட்டாத காலம் தொடக்கம் நயினாதீவுக் கடலில் சங்கு குளித்தல் இடம்பெற்றது. போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், பிரிட்டிசுக்காரரும்கூட சங்கு குளித்தலுக்கு ஊக்குவிப்பு அளித்தனர். சங்குகுளித்தல் நயினாதீவுக் கடலில் மும்முரமாக இடம்பெற்றதால் அத்தொழில் செய்யும் மக்கள் ஈழத்தின் பிறபகுதிகளில் இருந்தும், தமிழகத்தின் கிழக்குக் கரைப் பட்டினங்களில் இருந்தும் வந்து நயினாதீவில் குடியேறலாயினர். இவர்களில் இஸ்லாம் மதத்தவரான தமிழர்களும் அடங்குவர். இஸ்லாமியரின் வழிபாட்டுக்கென பள்ளிவாசல் ஒன்றும் தீவின் தென்கிழக்குக் கரையில் அமைக்கப்பட்டு இன்றும் வழிபாடு அங்கு நிகழ்கின்றது.
                                        
 11. முதலில் நாகர்களும், பின்பு இங்குள்ள நயினார் கோவிலைச் சீரமைப்பதற்கும், வழிபாடுகளைக் குறைவற நடத்துவதற்கும் ஆயிரம் ஆண்டுகளின் முன்பு நயினாதீவுக்கு வெளியிலிருந்து குறிப்பாக சோழநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட சிற்பிகள், பிராமணர்கள், மற்றும் கோவில் ஊழியர்கள், அவர்களது குடும்பத்தவர், உறவினர், வேலையாட்களும், தொடர்ந்து வந்து சங்கு குளித்தலில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களும் ஆகிய இவர்களுள் இங்கு நிரந்தரமாகத் தங்கிவிட்டவர்கள் என இத்தீவின் குடித்தொகை மெல்ல மெல்ல வளர்ந்து வந்தது.
                                           12. போர்த்துக்கேயர் ஆட்சிக்கால விளைவுகள்: 1619 இல் யாழ்ப்பாணத் தமிழரசு போர்த்துக்கீசரிடம் வீழ்ந்தது. “கி.பி. 1620 இல் தொடங்கிய போர்த்துக்கீச தனியரசாட்சியில், முதற் தேசாதிபதியான பிலிப் தே ஒலிவேறா நல்லூரை வதிவிடமாக்கியவுடன் முன்கூறியபடி நல்லூர்க் கந்தசாமி கோயிலை இடித்து, அக்கோயிற் கற்களைக் கொண்டு கோட்டையும் வீடுகளும் கட்டினான். யாழ்ப்பாணத்தில் இருந்த சைவ, வைணவ ஆலயங்கள் எல்லாவற்றையும் தரைமட்டமாக இடிப்பித்தான். இதையறிந்த கோவிலதிகாரிகளும், அர்ச்சகர்களும் தத்தம் கோவில் விக்கிரகங்களைக் கிணறுகளிலும், குளங்களிலும் போட்டு மறைத்தார்கள்”. “யாழ்ப்பாணத்திலன்றித் தமக்கெட்டிய மற்றும் பிற இடங்களில் எல்லாம் உள்ள புத்த, சைவ ஆலயங்கள் எல்லாவற்றையும் சமையம் வாய்த்துழி வாய்த்துழி பறங்கிகள் இடித்து நாசமாக்கிவிட்டனர்,” என்பது முதலியார் செ.இராசநாயகம் அவர்களது கூற்று. இக்காலத்தில் (கி.பி. 1620-1624 அளவில்) நயினாதீவுக் கோவில் அழிக்கப்பட்டது என முன்னரே அறிந்தோம். நயினாதீவில் இருந்த கோவில் அழிக்கப்பட்ட பின்பு, போர்த்துக்கீசரும், அவர்களின் பின்வந்த டச்சுக்காரரும் அதனை மீள நிறுவுவதற்கு அனுமதிக்கவில்லை. இருப்பினும் டச்சுக்கார ஆட்சியின் இறுதிக்காலத்தே (கி.பி.1788 அளவில்) கோவில் இருந்த இடத்தில் சிறிய அளவில் வழிபாடு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது எனக் கூறப்படுகின்றது.
                                              13. ஒல்லாந்தர் காலம் : போர்த்துக்கீசர் காலத்தில் யாழ்ப்பாண இராச்சியம் எங்குமே பெயரளவுக்காகுதல் கத்தோலிக்க சமயம் பரவியது. இக்காலம் நயினாதீவில் எத்தகைய சமய மாற்றம் ஏற்பட்டது என்பது திட்டவட்டமாகத் தெரியவரவில்லை. ஆயினும் தொடர்ந்து வந்த ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில ஊரவர்கள் சிலர் அச்சமயம் ஏற்பட்ட சமய நெருக்கடியைத் தவிர்க்க முடியாதவராக விரும்பியோ விரும்பாமலோ மதம் மாறியுள்ளனர். கி.பி. 1788இல் நாகம்மாள் வழிபாட்டை சிறிய அளவில் மீள ஆரம்பித்து வைத்தவர் என நம்பப்படும் திரு.இராமலிங்கர் இராமச்சந்திரரின் மகன் திரு.கதிரித்தம்பி, கிறீஸ்தவராக மதம் மாறித் தனது பெயரையும் ‘பிரான்சீஸ்க்கு கதிரித்தம்பி’ என்று மாற்றிக்கொண்டார். இவரது ‘விசுவாச’த்தை மெச்சி, ஒல்லாந்த அரசினர் இவருக்கு ‘நொத்தாரிஸ்’ உத்தியோகமும், கிராம வரி அறவிடும் அதிகாரமும் கொடுத்தனர். இவர் நயினாதீவில் ‘மேரி மாதா கோவில்’ ஒன்றையும் அமைத்தாரென்றும், அக்கோவிலுக்கு வேண்டிய மணியையும், உதவியாள் ஒருவரையும் ஒல்லாந்த அதிகாரிகள் வழங்கியதாகவும் ஐதீகம். இவர் நொத்தாரிசாக பணியாற்றியபோது, ‘பிரான்சீக்கு கதிரித்தம்பி’ என்று தனது ஒப்பத்தை இட்ட காணி உறுதிகள் யாழ்ப்பாணம் காணிக் கந்தோரில் உள்ளன என்று திரு.க.சண்முகநாதபிள்ளை தனது நூலில் உறுதிப்படுத்தியுள்ளார். ஆயினும் திரு.சண்முகநாதபிள்ளை “ ‘பிரான்சீஸ்கு’ என்பது அவருடைய பெயர் அல்ல, அவருக்கு வழங்கப்பட்ட பட்டம்” என்று கூறியிருப்பது விந்தையாகவுள்ளது. திரு.இராமலிங்கர் இராமச்சந்திரரையும் அவரது மகன் திரு.கதிரித்தம்பியையும் மேல் உயர்த்திக் காட்டும் ஆர்வக் கோளாறினால் அன்பர் திரு.சண்முகநாதபிள்ளை தனது நூலின் 41, 42, 43 ஆம் பக்கங்களில் குறித்துள்ள பின்வரும் தகவல்கள் உண்மையாக இருக்க வேண்டுமேயானால், திரு.இராமலிங்கர் இராமச்சந்திரர் 165 ஆண்டுகளுக்கு மேல் (குறைந்தபட்சமாக கி.பி.1624 தொடக்கம் கி.பி. 1788 வரை) உயிர் வாழ்ந்த ஒருவராயிருந்திருக்க வேண்டும்: “கி.பி.1620க்கும் 1624க்கும் இடைப்பட்ட காலத்தில் முன்னர் கூறிய வீராசாமிச் செட்டியாரினால் கட்டப்பட்ட கோயில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. பொருட்கள் சூறையாடப்பட்டன.கி.பி.1645ல் நயினாதீவிலுள்ள நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்குத் தோம்பேடுகள் எழுதப்பட்டன. இக்காலத்தில் பட்டர் மரபில் தோன்றிய இராமலிங்கர் இராமச்சந்திரரே ஏக எஜமானாகப் பணியாற்றினார்.” “போர்த்துக்கேயர் அழித்த கோயிலை இவருடைய (திரு.கதிரித்தம்பியுடைய) தந்தையார் இராமலிங்கர் இராமச்சந்திரரே சிறிய அளவில் கட்டுவித்தார். இவரே போர்த்துக்கேயர் கோவிலை இடித்தபோது அம்பாளை வல்லிக்காடு மேற்கு ஆலம்பொந்தில் ஒளித்துவைத்து சலியன் ஐயரைக் காவலுமாக வைத்தார். புதிய ஆலயம் கட்டும்வரை அம்பாளுக்கான பூசைகள் அனைத்தையும் நயினாதீவு இரட்டங்காலி முருகன் ஆலயத்தில் செய்வித்தார். கட்டுவித்த காலம் கி.பி.1788 ஆகும்.” மேலும், நாகம்மாள் கோவிலை அழிக்கவந்த ஒல்லாந்தர் “இது மாதா கோவில்” என்று திரு.கதிரித்தம்பி எடுத்துக் கூறியதும் அவரது வாக்கை வேத வாக்காக எடுத்துக்கொண்டு, (கோவிலுக்குள்ளேபோய் அங்கு வழிபடு பொருளாக எந்தக் கடவுள் இருக்கிறார் என்பதைக் கூட பார்த்து உறுதிசெய்துகொள்ளாமல்) திரும்பிப்போய்விட்டார்கள் என்று திரு.சண்முகநாதபிள்ளை கூறுவதை நம்புவதற்குச் சங்கடமாக உள்ளது.
                                                14. ஆகவே, திரு.இராமச்சந்திரர் கதிரித்தம்பி ஒல்லாந்தர் காலத்தில் நொத்தாரிஸ், மற்றும் கிராம வரிவசூலிப்பவர் ஆகிய பதவிகளைப் பெறுவதற்காக கிறீஸ்தவராக மதமாற்றம் பெற்று இருக்கலாமென்றும், ஒரு மேரிமாதா கோவிலையும்கூட அவர் நிறுவி நிருவகித்து இருக்கலாமெனவும் கருதுவதற்கு ஆதாரங்களுண்டு. ஒல்லாந்தர் தமது சமயத்தை யாழ்ப்பாண இராச்சியத்தில் வசித்த சாதாரண பொது சனங்கள் மத்தியிலேகூட வலுக்கட்டாயமாகத் திணித்தார்கள் என்று முதலியார் திரு.செ.இராசநாயகம் கூறுகிறார். “தொடக்கத்தில் சமய விருத்தியைப்பற்றிக் கடுமையாக வற்புறுத்தாத ஒல்லாந்தர், காலம் செல்லச் செல்ல அதன் விருத்தியில் நாட்டம் வைத்தவராய் சனங்கள் சைவசமய ஆசாரங்களை முற்றாக நீக்கி கிறிஸ்தவ ஆலயங்களுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் போகவேண்டுமென்றும், பிள்ளைகள் கிறிஸ்தவ பள்ளிக்கூடங்களுக்குப் போய் கிறீஸ்தவ சமய பாடங்கள் கற்க வேண்டுமென்றும் கட்டளை இட்டனர்” என்பது முதலியார் கூற்று. சாதாரண பொது சனங்களையே இவ்விதம் நெருக்கிக் கிறீஸ்தவராகத் தூண்டிய ஒல்லாந்தர், நொத்தாரிஸ் மற்றும் கிராம வரி வசூலிப்பவர் பதவிகளை ஒரு சைவ சமயத்தவருக்குக் கொடுத்திருப்பார்கள் என்பது நம்பக்கூடியதன்று. நயினாதீவில் ஒரு கிறீஸ்தவ வழிபாட்டுத் தலம் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. ஆங்கில மொழிக் கல்வியையும் கிறீஸ்தவ சமயப் பிரசாரகர்களே முதன்முதலில் நயினாதீவில் தொடக்கிவைத்தனர்.
                                                  15. தீவுப்பகுதி மக்களின் குடியமர்வு அயல்தீவுகளில் வசித்த மக்களில் சிலரும் நயினாதீவில் திருமணத் தொடர்பு காரணமாக குடிவந்துள்ளார்கள். அதிகமான திருமணத் தொடர்புகள் பக்கத்தேயுள்ள புங்குடுதீவு மக்களுடன் ஏற்பட்டதைத் தொடர்ந்து கணிசமான தொகையினரான புங்குடுதீவு மக்கள் நயினாதீவுக்கு வந்து குடியமர்ந்துள்ளனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் புங்குடுதீவில் வசித்த மாதுங்கர் என்பவரின் மகன் சரவணமுத்து நயினாதீவில் உடையாராக நியமிக்கப்பட்டார். இவர் நயினாதீவில் திருமணம்செய்து அங்கேயே நிரந்தரமாக வாழத் தொடங்கியதன் பின்பு அவரது உறவினர் பலரும் நயினாதீவில் திருமணஞ்செய்து அங்கு சென்று குடியேறி வாழத் தலைப்பட்டனர். இவ்வாறே நெடுந்தீவு, அனலைதீவு, எழுவைதீவு மற்றும் தீவக மக்களும் திருமணத் தொடர்பு காரணமாக குடிவந்துள்ளனர். நயினை நாகம்மாள் தேவியின்மீது தீவுப்பகுதி மக்கள் கொண்ட பற்றும், பக்தியும் நயினாதீவு மக்களுடனான இத் திருமணத் தொடர்புகளை ஊக்குவித்த மற்றொரு காரணியாகலாம்.
                                                    16. நயினாதீவில் பௌத்தம் 1939இல், நயினாதீவில் சிங்கள புத்த பிக்கு ஒருவர் வந்து, தெருவெங்கும் சுற்றித் திரிந்தார்;. மர நிழலில் படுத்து உறங்குவார். ‘ஒரு நாளுக்கு ஒரு வீட்டில்’ என்று முறை வைத்துப் போய் உணவு பெற்று உண்பார். சில ஆண்டுகள் செல்ல, நயினை திரு.இளையவர் கந்தர் என்பவர் திரு.நல்லதம்பி என்பவருக்கு ஈடுவைத்து நீண்டகாலமாக மீட்காமல் விட்டிருந்த சிறு துண்டுக்காணி ஒன்றை நல்ல விலை தந்து தான் வாங்கிக்கொள்வதாக காணி உரிமையாளரிடம் (திரு.இளையவர்; கந்தர்) ஒரு ரூபாவை முற்பணமாகக் கொடுத்துவிட்டு திடீரென்று ஒருநாள் அந்த பிக்கு வெளியூர் புறப்பட்டுப் போனார். சில நாட்களில் அவர் திரும்பிவந்து, கணிசமான விலைக்கு அக்காணித் துண்டை வாங்கி, சில வருடங்களில் புத்த தாதுகோபம் ஒன்றை 1944 இல் நயினாதீவில் அமைத்தார். சிங்கள யாத்திரீகர் வருகை இந்தக் காலகட்டத்திலேயே முதன்முதலாக நயினாதீவில் இடம்பெற ஆரம்பித்தது. இதற்கு முன்னர் நயினாதீவில் தமிழ்ப் புத்தர் கோவில் ஒன்று இருந்திருக்கலாம். அல்லாமலும் இருக்கலாம். நயினாதீவு அல்ல - யாழ்ப்பாணக் குடாநாடுதான் ‘மணிபல்லவம்’ எனவும் ‘நாகதீபம்’ எனவும் அழைக்கப்பட்டது என்பது நிறுவப்பட்டுள்ள நிலையில், இதனை எவரும் திட்டவட்டமாகக் கூறுவதற்கு முடியாது. ஆனால், இங்கே சிங்களவர்களது புத்த விகாரை இருந்ததற்கான எவ்வித ஆதாரமும் இல்லை.
                                                      17. கிறீஸ்துவுக்கு முன் மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி, கி.பி. ஆறாம் றூற்றாண்டு வரை பௌத்தம் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் தழைத்திருந்த காலத்து, நாகதீபத்தில் - அதாவது யாழ்ப்பாணக் குடாநாட்டில் - வாழ்ந்த தமிழ் நாகர்களும் அவர் பின்னோரும் பௌத்தர்களாக மதம் மாறி வாழ்ந்த காலத்தில், நயினாதீவிலும் பௌத்தமதம் காலூன்றி இருந்திருக்கலாம். மாமன்னர் முதலாம் இராஜஇராஜ சோழ தேவரும், அவரது பெருமைவாய்ந்த புதல்வர் முதலாம் இராசேந்திர சோழ தேவரும் தமது நண்பரான சிறீவிசயத்து அரசரின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க நாகபட்டினத்தில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில்கூட மாபெரும் புத்தர் கோவில் ஒன்றை அமைத்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. இதனால் நாகபட்டினத்தின்மீது இன்று பௌத்தர்கள் ஏதேனும் உரிமை பாராட்ட முடியுமா? தமிழர்கள் பௌத்த மதத்தின் விரோதிகள் அல்லர். சில நூற்றாண்டுக்கு முன்னர் பெருமளவுக்கு பௌத்தராக வாழ்ந்தோரின் சந்ததியாரே இன்றுள்ள தமிழர்கள் ஆவர். ஆயினும், வட இலங்கையிலுள்ள நம் மூதாதையர் அமைத்த புத்தர் கோவில்களின் எச்சங்களைக் காரணம் கூறி, சிங்களப் பேரினவாதம் எமது தாயகத்தை விழுங்கிவிட நாம் அனுமதிக்க முடியாது. பிராமணனாகவும், சைவ சமயத்தவனாகவும் இருந்த விசயனின் சந்ததியாருக்கு பௌத்த சமயிகளாக மதம் மாறுவதற்கும், தமது வாழ்விடங்களில் இருந்த இந்துக் கோவில்களை அழித்து புத்த விகாரங்களாக மாற்றி அமைப்பதற்கும் இருந்த உரிமை, பௌத்த சமயத்தைக் கைவிட்டு சைவர்களாக மீண்டும் மதம் மாற விரும்பிய தமிழர்க்கும் இருந்தது.
                                                      18. ஆகவே, 1939 இல் நயினாதீவுக்கு வந்த புத்தபிக்குவால் 1944 அளவில் இங்கு ஒரு புத்த விகாரமும் தாதுகோபமும் அமைக்கப்பட்டதற்கு முன்பு, நயினாதீவில் புத்தர்கோவில் ஏதாவது எக்காலத்திலாவது இருந்திருக்குமாயின் பௌத்தர்களாயிருந்த நயினையில் வாழ்ந்த தமிழ் நாகர்கள் சைவர்களாக மதமாற்றம் பெற்றமையாலும், அதன்பின் பௌத்தர்கள் யாரும் இங்கு குடியேறாமையாலும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த அக்கோவிலும், நயினார் (அல்லது நாகம்மாள்) கோவிலைப் போன்று கி.பி.1620 அளவில் போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்டது என்று கருத இடமுண்டு. அப்படியான புத்தர்கோவில் இங்கே இருந்திருக்குமாயின், அந்தத் தமிழ்ப் பௌத்தர் கோவில் நயினாதீவில் எந்த இடத்தில் அமைந்திருந்தது என்பது இதுவரை ஆதாரபூர்வமாக அறியப்படவில்லை.

                                                       19. வட இலங்கையில் வாழ்ந்த நாகர்கள் முதலில் நாகவழிபாட்டுடன் சங்கமித்த பௌத்தத்தை ஏற்றுக்கொண்டு பௌத்தர்கள் ஆகினர். பின், கி.பி. ஏழாம் நூற்றாண்டளவில் தமிழ் கூறும் நல்லுலகெங்கும் சைவம் தழைக்க அவர்களும் சைவசமயத்தைச் சார்ந்தனர். ஆயினும், எக்காலத்தும் நாகவழிபாட்டை மறந்தாரல்லர். நயினாதீவிலுள்ள நாகம்மாள் கோவில் கருவறைக்குள் இன்றும் நிலைத்திருக்கும் ஐந்தலை நாகத்தின் தொன்மை வாய்ந்த சிலா வடிவம் இதனை நிருபிப்பதாக உள்ளது. தொடர்ச்சியும் தொன்மையும் கொண்டதாக நயினாதீவில் நிலைத்திருக்கும் ஒரே வழிபாடு நாகவழிபாடு மட்டுமே. பௌத்த சமய வழிபாடோ, இந்து சமய வழிபாடோ அல்ல.

சிங்களப் பேரினவாதம்.

Picture

                                            20. சிங்களப் பேரினவாதம் நெருக்கடி பிரித்தானியர் ஆட்சி முடிவடைந்ததை அடுத்து, தமிழ் ஈழத்தின் ஏனைய சிற்றூர்களை விடவும் அதிக அளவில் சிங்களப் பேரினவாதப்பிடி நயினாதீவை இறுக்கத்தொடங்கிற்று. 1958ஆம் ஆண்டில் அது உச்சக் கட்டத்தை அடைந்தது. தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்ட தமிழர்களின் சாத்வீகமான போராட்டத்தை அடக்க இனக்கலவரத்தை ஏவிவிட்டனர் சிங்கள ஆட்சியாளர்கள். இந்த இனக்கலவரத்தின் காரணமாக தமிழ் இனத்திற்கு நேர்ந்த உயிரழிவுகளும் சொத்தழிவுகளும் எழுதப்புறப்பட்டால் முடிவின்றி நீளும். கொழும்பிலும் ஏனைய தென்பகுதி நகரங்களிலும் தாக்கப்பட்டும், உடைமைகளை இழந்தும் அகதிகளாகி தமது உற்றார் உறவினர்கள் தமிழ் ஈழப் பகுதிகளுக்குத் திரும்பி வந்ததாலும், பலர் கொல்லப்பட்டதாலும் தமிழர்கள் தமிழ்ப் பகுதிகளில் ஆங்காங்கே சிங்களவர்களுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொண்டனர். ஆயினும், யாழ்ப்பாண மாவட்டத்தில் சிங்களவர் எவருமே கொல்லப்படவில்லை. இந்த வேளையில், நயினாதீவில் இருந்த புத்தபிக்கு 1958.05.29இல் காரைநகர் கடற்படைமுகாமில் சென்று தஞ்சமடைந்ததன்பின்பு, நயினாதீவிலுள்ள பௌத்த விகாரை 1958 யூன் மாத முற்பகுதியில் தாக்கப்பட்டுச் சேதப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து யூன் 10 ஆம் நாள் பகல் ஒரு மணி அளவில் பொலிசாரும் கடற்படையினரும் நயினாதீவுக்கு வந்திறங்கி, ஏழு ஊரவர்களைக் கைதுசெய்து கொண்டு சென்றதுடன் பல வீடுகளையும், கடைகளையும் எரித்து அழித்தனர். அத்துடன் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலையும் அவர்கள் எரித்துச் சேதப்படுத்தினர். கோவிலைச் சூழவிருந்த மடங்கள் யாவும் எரித்து முற்றாக அழிக்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் ஏழுபேரும் காரைநகர் கடற்படை முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, மாலை சுமார் 7.30 மணிவரை அங்கு வைத்து பொலிசாராலும், கடற்படையினராலும் அடித்து நொருக்கப்பட்டனர். பின்னர் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு, மீண்டும் அங்கும் பொலிசாராலும், கடற்படையினராலும் நடுச்சாமம் வரை அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.
                                               21. மறுநாள் - அதாவது 11.06.1958 அன்று - காலை இந்த ஏழுபேரும் கடற்படைப் படகு ஒன்றில் மீண்டும் நயினாதீவுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அந்தப் படகில் பொலிசாரும், கடற்படையினரும், ஊர்காவற்றுறைப் பொலிஸ் பொறுப்பதிகாரி, துணை ஆய்வாளர் சிட்னி ஐவர் பளிப்பான Sub-Inspector Sydney Ivor Palipane)என்பவரும் சென்றனர். நயினாதீவில் அன்றைய தினம் மேலும் பதினான்கு பேர் கைது செய்யப்பட்டனர். நயினாதீவுப் பால முகப்பில் ‘சிங்களவரே திரும்பிப் போங்கள்’ (Sinhalese Go Boack)என்று ஆங்கிலத்தில் தார் கொண்டு எழுதப்பட்டு இருந்த வாசகங்களை நாக்கால் நக்கும்படி படையினர் சில கைது செய்யப்பட்ட ஊர்மக்களைப் பலவந்தப்படுத்தி செய்வித்தார்கள். அன்று மாலை சுமார் 6.30 மணிவரை நயினாதீவில் படையினரின் அட்டகாசங்கள் தொடர்ந்தன. மாலை 6.30 மணிக்கு நயினாதீவில் இருந்து புறப்பட்ட படகு காரைநகர் கடற்படை முகாமுக்கு சென்றடைந்ததும் கைது செய்யப்பட்ட நயினை மக்கள் அனைவரும் வேறு ஒரு படகுக்குள் மாற்றப்பட்டு அதனுள் வைத்துத் தாக்கப்பட்டனர். இரவு 9.15 மணி அளவில் கைது செய்யப்பட்டோர் யாவரும் ஊர்காவற்றுறை பொலிசு நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு, இரவு முழுவதும் அடித்தும், வேறு அநாகரிகமான விதத்திலும் கொடுமைப்படுத்தப்பட்டனர். மறுநாள் 12.06.1958 பகல் 12.00 மணிவரை இவர்கள் பொலிசு நிலையத்தில் வைத்துத் தாக்கப்பட்ட பின்பு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நீதிவான் திரு.பி.ஜி.எஸ்.டேவிட் முன்னிலையில் அன்றைய நாள் முன்னிலைப்படுத்தப்பட்டு, அனைவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். ஒரு வாரத்தின் பின்பு, விளக்க மறியலில் இருந்தவர்களில் மூவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஏனையோரில் ஒருவரைத் தவிர, மற்றவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். கடைசி நபர் 03.07.1958 அன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். கைதுசெய்யப்பட்டு, அடித்துத் துன்புறுத்தப்பட்;ட எந்த ஒருவருக்கும் எதிராக எவ்வித குற்றச்சாட்டுக்களும் பொலிசாரால் நீதிமன்றத்தில தாக்கல் செய்யப்படவில்லை. (இந்த நபர்களில் சிலர் தற்போதும் உயிருடன் உள்ளனர். அவர்களது பாதுகாப்பை உத்தேசித்து இங்கு பெயர்கள் வெளியிடப்படவில்லை.) தம்மை அடித்துக் கொடுமைப்படுத்தியோரை அடையாளம் காட்ட முடியுமென்று தாக்கப்பட்டவர்கள் கூறியும் அரசாங்கம் அவர்களைத் தாக்கிய பொலிஸ் மற்றும் கடற்படையினருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த விதமாக அப்பாவி நயினை மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டமையும், அது தொடர்பாக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமையும் பிற்காலத்தில் புத்த விகாரை நிருவாகத்தின் எந்தச் செயலையும் கண்மூடிப்பார்த்திருக்கும் போக்கை நயினாதீவில் வளர்த்துவிட்டன எனலாம்.
                                                   22. பிக்குவும் தனது தேவைகளுக்கு உதவுவதற்கும், தனக்கு ஊரவர்பற்றி தகவல் தருவதற்கும் நயினாதீவைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு குடும்பத்தவர்களைப் பயன்படுத்த ஆரம்பித்தார். 1979 மே மாதத்தில் இந்த புத்தபிக்கு புத்த விகாரைக்கு வழிபாட்டுக்காக வரும் யாத்திரீகர்கள் தங்குவதற்கான மடம் அமைப்பதற்கென அரசிடமிருந்து தான் பெற்ற அரச காணிக்குள் கடைகளைக் கட்டி வியாபார நோக்கத்துக்காக பயன்படுத்த முற்பட்டபோது இந்தக் கட்டுரையாளர் அதனை எதிர்த்து துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டு, பொதுசன அபிப்பிராயத்தை பிக்குவின் சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிராக திரட்ட முயன்றவேளை, 18.05.1979இல் பிக்குவின் தூண்டுதலின் பேரில் கொழும்பில் வைத்து பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு சில மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். எனினும் நீதிமன்றில் பொலிசாரால் குற்றச்சாட்டுப் பத்திரம் எதுவும் தாக்கல் செய்யப்படாததால் பின்பு விடுதலை செய்யப்பட்டார். புத்தபிக்கு அமைத்த கடைகளுள் ஒன்று மேலே குறிப்பிடப்பட்ட குடும்பத்தினருக்குக் கொடுக்கப்பட்டது. பிக்குவின் பணத்தை ஊருக்குள் வட்டிக்குக் கொடுப்பதையும் இவர்களே கவனித்து வட்டியிலும் பங்கு பெற்றுக்கொண்டனர். ஐம்பது ஆண்டுகளாக தானும் தனக்கு முன் தனது குடும்பமும் நயினாதீவிலுள்ள பிக்குவுக்கு உணவு வழங்கி வருவதாக இக்குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்ததாக 2001 யூன் மாதத்தில் வெளிவந்த The Sri Lanka Reporter என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
                                                      23. பேரினவாதிகளின் மற்றொரு படைத் தாக்குதல் நயினாதீவின் மீது 03.03.1986 அன்று நிகழ்ந்தது. இது தொடர்பாக 05.03.1986இல் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ‘ஈழநாடு’ பத்திரிகை பின்வருமாறு விவரிக்கின்றது: “ஆலயத்தின் பெரிய கதவு 65 வீதம் எரிந்திருக்கக் காணப்பட்டது. அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள், பட்டாடைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.” “நயினை அம்மன் கண்ணீர் விடுகிறாள்! ஆலயத்தின் நட்டம் 20 இலட்சம்!” “நால்வர் பலி!(உண்மையில் ஐவர் அன்று கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு சடலம், இச்செய்தி வெளியான பின்பு கண்டு எடுக்கப்பட்டது.) வீடுகள் தீக்கிரை!”, “நாகபூசணி அம்மனின் இரண்டு தேர்கள், மஞ்சம் தீக்கிரையாகின!”, “நகைகளைக் கொள்ளையடித்த பின்பு வீட்டுக்காரரைச் சுட்டுக்கொன்றனர்”, “படகுகள் எரிப்பு!, போக்குவரத்து பாதிப்பு!”
                                                      24. அனைத்துலக மன்னிப்புச் சபையின் (Amnesty International) வெளியீடான “Sri Lanka: Disappearances” (AI Index: ASA37/08/86 ISBN: 0 86210 1085) என்ற பிரசுரத்தில் அன்று கடற்படையினர் நயினாதீவில் நடத்திய தாக்குதல் குறித்து முழு விவரங்களும் பிரசுரிக்கப்பட்டன. (D இணைப்பு – பக்கம் 24). பின்னர், 1990 யூலையில் ஒரு நயினைவாசி படையினரால் கைக்குண்டு வீசிக் கொல்லப்பட்டார். இக்கொலை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் திரு.மாவை சேனாதிராசா அவர்கள் பாராளுமன்றத்தில் பிரஸ்தாபித்தார். அரசாங்கம், வழமைபோல விடுதலைப்புலிகளே இக்கொலையைச் செய்திருக்கலாமென்று கூறி முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயன்றது. இங்குள்ள கடற்படை முகாம் 24.07.1983 அன்று நிறுவப்பட்டு, தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றது. இதன் விளைவாக, தற்போது நடுத்தர வயதிலும் இளைஞர்களாகவும் உள்ள தலைமுறைகளைச் சேர்ந்தோர் வாழ்நாள் முற்றிலும் உளத் தாக்கங்களுக்குட்பட்டு வாழ்கின்ற நிலை உள்ளது. அத்துடன், பல தனியார் வீடுகள், காணிகள், கிராம முன்னேற்றச் சங்கத்தின் அலுவலகம், வழித்துணை வைரவ சுவாமி கோயில், பொது வீதிகள் முதலியன கடற்படையினரால் அழிக்கப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளன. 1976 இல் நயினாதீவில் சனத்தொகை சுமார் 4,750 அளவில் இருந்தது. ஆயினும், 2,500 பேர் அளவிலேயே இன்றைய சனத்தொகை உள்ளது.

இதர இலங்கையின் தீவுகள்.

Picture

                          அனலைதீவு (Analaitivu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும்.
இத்தீவிலே பல திருக்கோயில்கள் அமைந்துள்ளன.
ஸ்ரீ கௌரியம்மாள் கோயில், போர்த்துக்கேயர் சிதைத்த கோயில்களில் ஒன்று.
புளியந்தீவு நாகேஸ்வரன் கோயில் ஒல்லாந்தர் காலத்திற்கு முற்பட்டது.
அரசன்புலம் சங்கநாதர் கணபதிப்பிள்ளையார் கோயில்
ஆறாம் வட்டாரம் சங்கநாதர் முருகமூர்த்தி கோயில்

ஆறாம் வட்டாரம் எழுமங்கை நாச்சிமார் அம்பாள் கோயில்
நான்காம் வட்டாரம் இராஜராஜேஸ்வரி அம்பாள் கோயில்
இரண்டாம் வட்டாரம் பத்திரகாளியம்மன் கோயில்
 ஐந்தாம் வட்டாரம் ஐயனார் கோயில்
                                எழுவைதீவு (Eluvaitivu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் ஒரு தீவு ஆகும். சப்த தீவுகள் என அழைக்கப்படும் தீவுகளில் ஒன்றாகும்.
எழுவைதீவு முருகவேல் வித்தியாலயம்
எழுவைதீவு ரோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
                                   
 காரைநகர் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மேற்குத்திசையில் அமைந்துள்ள ஏழு சப்த தீவுகளில் ஒன்றாகும். மற்றைய தீவுகளை விட யாழ்நகருக்கு அண்மையில் இருப்பதுதான் காரைநகர். இது நாற்புறமும் கடலினால் சூழப்பட்ட ஒரு தீவு ஆகும். இவ்வூரில் அப்பொழுது ஏராளமான காரைச்செடிகள் நின்றமையால் அப்பெயர் பெற்றது என்றும் பெயருக்குரிய காரணம் கூறப்படுகின்றது. காரைதீவு வடக்கு, மேற்கு திசைகளில் ஆழமான பாக்கு நீரிணைக் கடலாலும் கிழங்கு, தெற்கு திசைகளில் ஆழமற்ற வற்றும் தன்மையுள்ள பரவைக் கடலாலும் சூழப்பட்டுள்ளது. பிரித்தானியரின் ஆட்சியில் 1869 அம் ஆண்டில் அப்போது அரசாங்க அதிபராக இருந்த துனவைந்துரையால் பொன்னாலைக் கடலுக்கூடாக கற்தெருவும், ஒன்பது பாலங்களும் அமைந்து காரைத்தீவினைக் குடாநாட்டுடன் இணைத்தனர். இவ்விணைப்பு தெருவினது நீளம் சுமார் 3 கிலோ மீட்டர் ஆகும். இத்தரைத் தொடர்பினை அடுத்து சேர் பொன் இராமநாதனின் விதைந்துரைப்புடன் காரைதீவினை 1923ம் ஆண்டு தொடக்கம் காரைநகர் என்று பெயர் மாற்றிக் கொண்டனர். இங்கே வலந்தலை, கோவளம், தங்கோடை, கருங்காலி, பலுகாடு, களபூமி என்ற ஆறு பெருங்குறிச்சிகள் உள்ளன. காரைநகர் ஏழு கிலோ மீட்டர் நீளமும் நாலரை கிலோ மீட்டர் அகலமும் உடையது. மேற்கே உள்ள கோவளக் கடற்கரையில் கலங்கரை விளக்கமும் தெற்கே இயற்கையாக அமைந்த கப்பல் துறைமுகமும் உள்ளன. நகரின் வடக்கு பக்கமாக இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. திண்ணபுரம் சிவன் கோவில். இக்கோவிலுக்கு கிழக்கு, தெற்கு திசைகளில் பசும்புல் தரைகளும் மேற்கு வடக்கு திசைகளில் தென்னஞ்சோலைகளும் அதனை அடுத்தாற் போல கசூரினா கடற்கரை உள்ளது காரைதீவு (Kaaraitivu) இலங்கையின் பாரம்பரிய தமிழர் நிலமாகும். இப்பெயரை உடைய ஊர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு, மேற்கு என தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற மூன்று பிரதேசங்களிலும் உண்டு. அவை பின்வருமாறு: காரைதீவு (அம்பாறை) - அம்பாறை மாவட்டத்தின் கிழக்குக் கரையோரமாய் அமைந்துள்ள ஒரு கிராமம். காரைநகர் - யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும். இத்தீவு தற்போது காரைநகர் என்று அழைக்கப்படுகின்றது. கரைத்தீவு - புத்தளம் மாவட்டத்தின் மேற்குக் கரையோரமாய் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். இத்தீவு தற்போது கரைத்தீவு என்று அழைக்கப்படுகின்றது. காரைதீவு இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தின் கிழக்குக் கரையோரமாய் அமைந்துள்ள ஒரு கிராமமாகும். இக்கிராமத்தைச் சுற்றி ஆறொன்று ஓடுவதாலும், முற்காலத்தில் காரைமரங்கள் நிறைந்து காணப்பட்டமையாலும் இது காரைதீவு என அழைக்கப்பட்டது. சுவாமி விபுலானந்தர், சுவாமி நடராஜானந்தர், சித்தானைக்குட்டிச் சித்தர், சிவாச் சித்தர் போன்ற ஆன்மீகப் பெரியார்கள் வாழ்ந்த பெருமைவாய்ந்த கிராமம் இக்கிராமமாகும். நெடுந்தீவு (Neduntheevu) இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்று. ஒல்லாந்தர் இத்தீவை டெல்வ்ற் (Delft) என்று பெயரிட்டு அழைத்தார்கள். இன்றும் ஆங்கிலத்தில் இத்தீவு இப்பெயராலேயே குறிப்பிடப்படுகின்றது. இலங்கை இராணுவம் நெடுந்தீவை ஆக்கிரமித்தைத் தொடர்ந்து பெரும்பாலன மக்கள் யாழ் குடாநாட்டுக்கோ வெளிநாடுகளுக்கோ புலம்பெயர்ந்து விட்டார்கள். இன்று இங்கு பொருளாதார வசதிகள் அருகிய தமிழ் மீனவ சமூகத்தை சாந்த 2500 இருந்து 3000 மக்களே கடும் சிக்கல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை அரச சேவைகள் கூட கிடைப்பதில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து மற்றெல்லாத் தீவுகளிலும் கூடிய தொலைவில் அமைந்திருக்கும் தீவு இதுவே. யாழ்ப்பாணத்திலிருந்து இதன் தூரம் 45 கிலோமீட்டர் ஆகும். ஆனால் இந்தியாவின் இராமேஸ்வரக் கரையிலிருந்து இதன் தூரம் 38 கிலோமீட்டர் மட்டுமே. மே 24, 2007 இலங்கைக் கடற்படையின் நெடுந்தீவு தெற்கில் அமைந்திருந்த மூகாம் ஒன்றை தாக்கியழித்ததில் 36 இலங்கை கடற்படையினரும் 4 கடற்புலிகளும் பலியானதாக கடற்புலிகள் தெரிவிப்பு.[1] புங்குடுதீவு (Pungudutivu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும். யாழ் நகரில் இருந்து செல்லும் 18 மைல் நீளமுள்ள பெருஞ்சாலையின் மூலம் இத்தீவு யாழ்நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. குடாக்கள், முனைகள் என்பன அமையப்பெற்ற இத்தீவின் சுற்றளவு 21 மைல்கள் ஆகும். இது கிழக்கு மேற்காக 5.5 மைல் நீளமும், வடக்கு தெற்காக 3 மைல் அகலமும் கொண்டு தோற்றமளிக்கின்றது. இத்தீவானது வேலணை வாணர் பாலத்தினால் இணைக்கப்பட்டதன் மூலம் இங்குவாழும் மக்கள் பெரும் பயனைப் பெற்றுள்ளார்கள். குறிகட்டுவான், கழுதைப்பிட்டி போன்ற துறைகள் மூலம் மற்றய தீவுகளுடனான தொடர்புகளைக் கொண்டுள்ளது. இங்கு சிறிதளவு விவசாயமும் கால்நடை வளர்ப்பும் கடல் வளத்தின் மூலம் மீன்பிடியும் சிறப்பாக நடைபெறுகின்றன. புங்குடுதீவு என்ற பெயர் தோன்றியமைக்கு பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன. அக்காலத்தில் புங்கை மரம் நிறைந்த காடாக இவ்விடம் இருந்தமையால் புங்குடுதீவு என பெயர் பெற்றதாக கதைகள் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள ‘புங்குடி’ என்னும் ஊர்ப் பெயரை புங்குடுதீவுடன் தொடர்பு படுத்தி பெயர் விளக்கம் கூறப்படுவது முண்டு. மேலும் இசுலாமியரின் படையெடுப்பு தமிழகத்தில் ஏற்பட்டபோது அங்குள்ள பூங்குடி ஊரினர் படையெடுப்பாளர்களது கொடுமையில் இருந்து தமது கன்னிப் பெண்களை பாதுகாக்க வேண்டிய அவல நிலையில் இங்கு தப்பி ஓடிவந்து குடியேறியதால் இத்தீவுக்கு ‘பூங்கொடி’ ‘திருப்பூங்கொடி’ எனும் பெயர்களை பெற்றதாயிற்று. இந்த வகையில் பூங்கொடித் தீவு என வழங்கி அது காலப்போக்கில் புங்குடுதீவு என மருவியதாயிற்று என்பர்[1]. இத்தீவானது ஏனைய தீவுகளுக்கு நடுநிலையாகக் காணப்பட்டமையால் ஒல்லாந்தர் இதற்கு ‘மிடில்பேர்க்’ எனப் பெயரிட்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் ஒல்லாந்தரால் கடலில் குளித்தெடுத்த சங்குகளை கொண்டுவந்து பதம்பிரித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இடமாகவும் இது அமைவு பெற்று விளங்குகின்றது. இதனால் இதற்கு சங்குமாவடி என்று பெயர் பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்[1]. இங்கு புளியடித்துறை, கழுதைப்பிட்டித்துறை, குறிகட்டுவான் துறை, மடத்துவெளித் துறை எனும் நான்கு துறைகள் காணப்படுகின்றன. ‘கோரியா’ என்ற இடத்தில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட வெளிச்சவீடு ஒன்று அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். பெருங் கப்பல்களும், செழித்த வாணிபமும் அக்காலத்தில் இருந்தமையால் நடுக் கடலில் கப்பல்கள் சென்று திரியும் இராக் காலத்திலே கப்பல்கள் திசை மாறாது கரையை சேர்வதற்கு துணையாக கடற்கரைப் பட்டினத்தில் 35 அடி உயரமுடையதாக இவ்வெளிச்ச வீட்டை அமைத்துள்ளனர். இவ்வெளிச்ச வீடு 5 செக்கனுக்கு ஒருமுறை விட்டு விட்டு ஒளிரும் வெள்ளை ஒளியை வீசும் வண்ணம் அமைந்து காணப்படுகின்றது[1]. இலங்கையின் 1981ம் ஆண்டின் குடிசனமதிப்பீட்டின் படி 14622 பேர் அன்று வாழ்ந்துள்ளார்கள். இன்றைய நாட்டின் இனப்பிரச்சனை காரணமாக அதிகமான மக்கள் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்றார்கள். மணிபல்லவத்தீவு ஈழநாட்டின் வடபகுதியிலுள்ள தீவுகளில் ஒன்றாகும். இது தற்போது நயினாதீவு என் அழைக்கப்படுகிறது. மண்டைதீவு (Mandathivu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும். யாழ் நகருக்கு அண்மையில் அமைந்துள்ள தீவு. யாழ் குடா நாட்டில் உள்ள 8 தீவுகளில் (எழு தீவு என்பது தவறானது) ஒன்றாகும். இங்கு முக்கிய தொழிலாக மீன்பிடித்தலும் விவசாயமும் காணப்படுகிறது. கிட்டத்தட்ட அங்குள்ள அனைவருமே வயல் நிலங்களுக்கு உரித்துடையவர்களாக காணப்படுகின்றனர். மண்டைதீவு புனித இராயப்பர் தேவாலயம் இங்குள்ள கத்தோலிக்கர்களின் வணக்கத்தலமாகும். மண்டைதீவின் மத்தியில் அமைந்துள்ள இந்த ஆலயம், போர்க்காலத்தில் இராணுவ முகாமாக மாற்றப்பட்டிருந்தது. இதனால் இங்கு வழிபாடும் தடைப்பட்டிருந்தது. வருடந்தோறும் ஆனி மாதம் இத் தேவாயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது. மண்டைதீவு சைவ மக்களுடைய ஆலயமாக திருவெண்காடு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேர் திருவிழா போன்ற சிறப்பு சைவ விழாக்கள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. கந்தசாமி கோவில் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. மிக அழகிய கடற்கரைகளும் செல்வச்செழிப்பான வயல் நிலங்களையும் கம நிலங்களையும் தங்களுடைய தேவைகளை தாங்களே நிறைவு செய்த மகக்களையும் கொண்டிருந்த மண்டைதீவு போர்ச்சூழல் காரணமாக விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்திற்கும் இடையில் அடிக்கடி கைமாறிக்கொண்டேயிருந்தது. யாழ் நகருக்கும் கடலுக்கும் நடுவே அமைந்திருந்ததினால் போர்க்காலத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மண்டைதீவு இருந்தது. கடும் வெய்யில் மற்றும் வரட்சியான காலநிலை இருந்தாலும் கல்வி செல்வம் நிறைந்த குடிமக்களை கொண்டிருந்தது. மண்டைதீவு மக்கள் ஆசிரியத்தொழிலிலும் குறிப்பிட்ட வியாபாரத்திலும் சிறந்து விளங்கினர். எனினும் பிற்காலத்தில் மக்கள் பல பகுதிகளுக்கும் பரவிச்சென்றபடியால் அங்குள்ள மக்களின் எண்ணிக்கை கனிசாமான அளவு குறைந்துள்ளது. மண்டைதீவில் 3 பாடசாலைகள் இருக்கின்றன. மண்டைதீவு மகாவித்தியாயலம் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள பெரிய பாடசாலையாகும். மண்டைதீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையும் கார்த்திகேய வித்தியாசாலையும் கிழக்குப் பகுதியில்; அமைந்துள்ளன. மண்டைதீவில் நன்னீர் வளம் மிகக் குறைவாகவே உள்ளது. தீவின் சில பகுதிகளில் மட்டும் நன்னீர் கிணறுகள் உள்ளன. கடல் நீர் நிலத்தின் கீழாக நிலப்பரப்பிற்குள் ஊடுருவுவதே இதற்கான காரணமாகும். மண்டைதீவில் மூலிகைகள் அதிகமான காணப்படுகின்றன. இதனால் சமாதான சூழ்நிலை நிலவிய முன்னைய காலங்களில் யாழ் மாவட்ட கல்லூரிகளின் உயர்தர வகுப்பு மாணவர்கள் இங்கு வந்து தாவரவியல் தொடர்பான ஆராய்சசிகளை மேற்கொள்வதுண்டு. மண்டைதீவு படுகொலைகள் பெரிய அளவில் இராணுவத்தால் படுகொலைகள் 2 தடவைகள் நடந்துள்ளன. இதில் ஒன்று 1986ம் ஆண்டு ஆனி மாதம் பத்தாம் திகதி நடைபெற்றது. கச்சதீவு யாழ்ப்பாண தீபகற்பக்கத்திற்கு அருகிலுள்ள ஒரு தீவாகும். கச்சதீவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அந்தோனியார் ஆலய விழா நடைபெற்று வந்தது. இதற்கு தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து அதிகளவில் பக்தர்கள் சென்று வந்தனர். இரு நாட்டு மக்களும் சங்கமிக்கும் அமைதி தீவாக விளங்கிய கச்சதீவு 1975 ஒப்பந்தத்திற்கு பின் இலங்கைக்கு சொந்தமானது.ஒப்பந்தத்தின்படி கச்சதீவில் தமிழக மீனவர்கள் தங்கி மீன்பிடித்து திரும்பவும், கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய விழாவில் எப்போதும் போல் கலந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானதற்கு பின் கச்சதீவு விழாவிற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்தது. ஆயினும் திருப்பலி பூஜைகளை தங்கச்சிமடம் ரோமன் கத்தோலிக்க பங்கு தந்தையர்களே செய்து வந்தனர். இந்நிலையில் 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து தொடர்ந்து பாதுகாப்பு கருதி கச்சதீவு விழா நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2002 இல் மீண்டும் கச்சதீவு விழா யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்கு தந்தையர்களால் நடத்தப்பட்டது. 20 வருடங்கள் கழித்து நடந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டு திரும்பினர். தொடர்ந்து கடந்த ஆண்டு வரை கச்சதீவு விழாவிற்கு ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் இருந்து அதிகளவில் பக்தர்களும், பத்திரிகையாளர்களும். சென்று திரும்பினர்.

சீனா, ஜப்பானியத் தீவுகள்.

Picture
சீனாவில் உள்ள தீவுகள் லாம் ச்சாவ் தீவு (Lam Chau Island) ஹொங்கொங் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு தீவாகும். இது ஹொங்கொங் தீவில் இருந்து கிட்டத்தட்ட 22 மைல்களுக்கு அப்பால் தென்சீனக் கடலில் அமைந்திருந்தது. இதன் நிலப்பரப்பு 0.08 கிலோ மீட்டராக இருந்தது. ஆனால் தற்போது ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையத்திற்கான தரை உருவாக்கும் பணிக்காக இத்தீவில் இருந்த மலைக்குன்று தரைமட்டமாக்கப்பட்டு சில கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருந்த இன்னொரு தீவுடன் இணைக்கப்பட்டு செக் லாப் கொக் எனும் ஒரே பெயர் கொண்ட தீவாகியது. எனவே தற்போது லாம் ச்சாவ் எனும் தீவு ஹொங்கொங் அபிவிருத்தி திட்டங்களில் மறைந்து போன தீவுகளில் ஒன்றாகும். ஹொங்கொங் தீவுகள் லாம் ச்சாவ் தீவு (Lam Chau Island) ஹொங்கொங் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு தீவாகும். இது ஹொங்கொங் தீவில் இருந்து கிட்டத்தட்ட 22 மைல்களுக்கு அப்பால் தென்சீனக் கடலில் அமைந்திருந்தது. இதன் நிலப்பரப்பு 0.08 கிலோ மீட்டராக இருந்தது. ஆனால் தற்போது ஹொங்கொங் பன்னாட்டு விமான நிலையத்திற்கான தரை உருவாக்கும் பணிக்காக இத்தீவில் இருந்த மலைக்குன்று தரைமட்டமாக்கப்பட்டு சில கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருந்த இன்னொரு தீவுடன் இணைக்கப்பட்டு செக் லாப் கொக் எனும் ஒரே பெயர் கொண்ட தீவாகியது. எனவே தற்போது லாம் ச்சாவ் எனும் தீவு ஹொங்கொங் அபிவிருத்தி திட்டங்களில் மறைந்து போன தீவுகளில் ஒன்றாகும். அலூசியன் தீவுகள் (Aleutian Islands) என்பவை வடக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள முன்னூறிற்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவுக் கூட்டம் ஆகும். இவற்றின் மொத்தப் பரப்பளவு 6,821 சதுர மைல் (17,666 கிமீ²). அலாஸ்கா குடாவில் இருந்து மேற்கே 1,200 மைல் (1,900 கிமீ) வரை பரந்துள்ளது. இத்தீவுக் கூட்டத்தின் பெரும் பகுதி அலாஸ்காவில் இருந்தாலும், மேற்குப் பக்கத்தின் கடைசிப் பகுதியில் ஒரு சிறிய கொமண்டாஸ்கி தீவுகள் ரஷ்யாவில் உள்ளது. மொத்தம் 57 எரிமலைகள் இத்தீவுக் கூட்டத்தில் உள்ளன. 1867ம் ஆண்டுக்கு முன்னர் இவை கத்தரீன் தீவுக்கூட்டம் என்றழைக்கப்பட்டன. இத்தீவுகளில் உள்ள பழங்குடியினர் தம்மை உனாங்கன் என அழைக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் "அலூட்" என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பேசும் மொழி அலூட் மொழி ஆகும். இம்மொழி எஸ்கிமோ-அலூட் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இம்மொழிக் குடும்பம் வேறு எந்த மொழியுடனும் தொடர்புடையதல்ல. 2000 இல் இத்தீவுகளின் மொத்த மகக்ள் தொகை 8,162 ஆகும். இவர்களில் 4,283 பேர் உனலாஸ்காவில் வாழ்கின்றனர். ஆட்மிரால்ட்டி தீவுகள் (Admiralty Islands) என்பன பப்புவா நியூ கினியில் மானுஸ் மாகாணத்தில் அமைந்துள்ள பிஸ்மார்க் தீவுக்கூட்டத்தில் உள்ள 18 தீவுகளைக் குறிக்கும். இது மானுஸ் தீவுகள் (Manus Islands) எனவும் அழைக்கப்படுகிறது. இதன் மொத்த பரப்பளவு 2100 சதுர கிலோமீட்டர்கள் (810 சதுர மைல் ஆகும்). இக்கூட்டத்தில் உள்ள பெரிய தீவுகள் மானுஸ் தீவு (Manus Island), லாஸ் நேகிரோஸ் தீவு (Los Negros Island), டொங் தீவு ஆகியனவாகும். இத்தீவுகளில் முதன் முதலாக கிட்டத்தட்ட 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்கிழக்காசியாவில் இருந்து மனிதர் குடியேறியதாக நம்பப்படுகிறது. 1616 இல் டச்சு நாடுகாண் பயணி வில்லெம் ஷவுட்டன் என்பவர் இத்தீவைக் கண்டறிந்தார். 1884 முதல் 1914 வரை ஜெர்மனியர்களின் கட்டுப்ப்பாட்டில் இருந்தது. நவம்பர் 1914 இல் ஆஸ்திரேலியக் கடற்படையினர் இங்கு வந்திறங்கினர். ஜெர்மனியர்களுடன் இடம்பெற்ற சிறு போரின் பின்னர் இது ஆஸ்திரேலியர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஏப்ரல் 7, 1942 இல் ஜப்பானியர்கள் வந்திறங்கித் தீவுகளைக் கைப்பற்றினர். 1944 இல் இரண்டாம் உலகப் போரின் கூட்டுப் படைகளினால் தாக்கப்பட்டது. நிலவியலில் அல்லது தொல்லியலில் உயர் தீவு (high island) எனப்படுவது எரிமலையால் உருவாக்கப்பட்ட தீவைக் குறிக்கும். இதற்கு எதிர்மாறான தாழ் தீவு (low island) எனப்படுவது பவளப் பாறைகளின் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புகளினால் உருவான தீவுகளைக் குறிக்கும். பல எண்ணிக்கையான உயர் தீவுகள் கடல் மட்டத்தில் இருந்து சில அடிகள் உயரத்துக்கே எழும்பக்கூடியவை காணப்படுகின்றன. இவை பொதுவாக குறுந்தீவுகள் (islets) என அழைக்கப்படுகின்றன. அதே வேளையில் மக்கடேயா, நவூரு, நியுவே, ஹெண்டர்சன் தீவு, பனாபா தீவு போன்ற பல தாழ் தீவுகள் பல நூற்றுக்காணக்கான அடிகள் உயரத்திற்கு வளர்ச்சியடைந்தவை. இவ்விரண்டு வகைத் தீவுகளும் பொதுவாக அருகருகே காணப்படும். குறிப்பாக தெற்கு பசிபிக் பெருங்கடலில் காணப்படும் தீவுகளில் தாழ் தீவுகள் பல உயர் தீவுகளைச் சுற்றியுள்ள பவளப் பாறைகளில் காணப்படுகின்றன. எல்பா (Elba, இத்தாலிய மொழி: Ilva) என்பது இத்தாலியின் டஸ்கானி பிரதேசத்தில் உள்ள ஒரு தீவாகும். இத்தாலியின் கரையோர நகரமான பியோம்பினோவுக்கு 20 கிமீ தூரத்தில் உள்ளது ( டஸ்கான் தீவுகளில் இதுவே மிகப்பெரியதும், இத்தாலியின் தீவுகளில் சிசிலி மற்றும் சார்டீனியாவுக்கு அடுத்ததாக மூன்றாவது பெரியதும் ஆகும். எல்பாவுக்கு மேற்கே 50 கிமீ தூரத்தில் பிரெஞ்சு தீவான கோர்சிக்கா அமைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 224 கிமீ² பரப்பளவும் கரையோர நீளம் 147 கிமீ உம் ஆகும். இதன் மிக உயரமான மலை மொண்டே கப்பானே 1,018 மீட்டர்கள் உயரமானது. இத்தீவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 30,000 ஆகும். 1814 இல் பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் பொனபார்ட் எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான். மே 3, 1814 இல் இவன் இத்தீவின் நகரமான் போர்ட்டோஃபெராய்யோவை அடைந்தான். நெப்போலியன் தனது பாதுகாப்புக்காக 600 பேரைக்கொண்ட படைகளை வைத்திருக்க அனுமதிக்கப்பட்டான். பொதுவாக எல்பா தீவை இவன் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலும் பிரித்தானியக் கடற்படையினர் இத்தீவைக் கண்காணித்து வந்தனர். மொத்தம் 300 நாட்கள் இத்தீவில் வாழ்ந்த நெப்போலியன் பெப்ரவரி 26, 1815 இல் ஒருவாறாகத் தப்பித்து பிரான்சை அடைந்தான். 1860 இல் இத்தீவு இத்தாலியின் கூட்டமைப்புக்குள் வந்தது. பிரெஞ்சுப் படைகள் ஜூன் 17, 1944 இல் இங்கு புகுந்து தீவை ஜெர்மனியிடம் இருந்து விடுவித்தனர். ஓல்க்கான் என்பது உலகின் நான்காவது பெரிய ஏரி சூழ் தீவு ஆகும். இது சைபீரியாவின் கிழக்கில் பைக்கால் ஏரியில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 730 சதுர கிலோமீட்டர்கள். ஜப்பானியத் தீவுகள் ஹொக்கைடோ ( ஹன் எழுத்தில்:北海道)என்பது வடகடல்வழி என பொருள்படும். முன்னர், இது எசொ(Ezo) என அழைக்கப்பட்டது. இது ஜப்பான் நாட்டின் இரண்டாவது பெரிய தீவாகும். மேலும், இது இந்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமுமாகும். (இ)ற்சுகரு (Tsugaru) கடல்நீரேரியால் ஹொன்ஷூ தீவிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இப்போது செய்கன் (Seikan) என அழைக்கப்படும் செயற்கை கடலடி குகைவழியால் ஹொன்ஷூவுடன் இணைக்கப்பட்டுள்ளது. சப்போரோ (Sapporo) இதன் தலைநகராகும்; இதுவே, இத்தீவின் பெரிய நகரமுமாகும். ஒக்கைடோ பல்கலைக்கழகம் (யப்பானிய மொழி:北海道大学) யாப்பானிலுள்ள முன்னணித் தேசிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இது சப்போரோ நகரின் மத்தியில் அமைந்துள்ளது. ஒக்கைடோ பல்கலைக்கழகம் 1876 இல் சப்போரோ விவசாயக் கல்லூரியாக அமெரிக்கரான வில்லியம் கிளார்க் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 24 மாணவர்களையும் 6 விரிவுரையாளர்களையும் கொண்டிருந்தது. இது 1918 ஏப்ரல் முதலாம் நாள், யப்பானின் 9 அரச பல்கலைக்கழகங்களில் ஒன்றாக மாற்றப்பட்டது. 1919 இல் மருத்துவ பீடம் நிறுவப்பட்டதோடு விவசாயக் கல்லூரி விவசாய பீடமாக மாற்றப்பட்டது. அதன் பின்னர் பல பீடங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடக்கப்பட்டு, 2006இல் மொத்தமாக 12 பீடங்களைக் கொண்டுள்ளது. 2004 முதல் யப்பானின் தேசிய பல்கலைக்கழகக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் கீழ் நிதி தொடர்பாக தன்னாட்சியை கொண்டிருந்தாலும் யப்பான் கல்வி, கலாச்சார, விளையாட்டு, விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சு முக்கிய அதிகாரத்தை செலுத்தி வருகின்றது. சிறேதொகோ தீபகற்பம் (知床半島 ஷிறேடொகோ அண்தோ) யப்பானின் நான்கு பிரதான தீவுகளுல் மிக வடக்கில் அமைந்துள்ளதான ஒக்கைடோ தீவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது ஒகோட்ஸ் கடலை நோக்கி ஊடுருவி காணப்படுகிறது. யுனெஸ்கோ நிறுவனம் இப்பகுதியை 2005 ஜூலை 15 அன்று உலக உரிமை பிரதேசமாக பிரகடணப்படுத்தியது. சிறேதொகோ என்ற பெயர் இப்பிரதேசத்தின் ஆதி குடிகளின் மொழியான ஐனு மொழியில் உலக முடிவு என்ற அர்த்தம் தரும் பதத்தில் இருந்து யப்பானிய மொழிக்கு மறுவியதாகும். தீபகற்பத்தின் அந்ததில் காணப்படும் சிறேதொகோ முனை தொடக்கம் தீபகற்கபத்துக்கூடாக சங்கிலித்தொடரான எரிமலைகள் காணப்படுகின்றன. இவ்வெரிமலைத் தொடரில் மிக உயரமான கொடு முடியான உதபெட்சுதகே, மற்றும் சிறேதொகோய்யோசான் என்ற கொடுமுடிகள் பிரசித்தமானவை. இங்குள்ள எரிமலைகளில் இருந்து பல வெண்நீர் ஊற்றுகள் தோற்றம் பெறுகின்றன இவ்வூற்றுகளுக்கு அருகில் ஒன்சென்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. இவ் ஒன்சென்சன்கள் காரணமாக சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். இங்கு கூம்பு வடிவ ஊசியிலை தாவரங்களும் அகன்ற இலை தாவரங்களும் கலப்பாக காணப்படுகின்றன. நரிகள், பிரவுன் கரடிகள் யப்பானிய மான்கள் போன்றவை இங்கு பரவலாக காணப்படுகின்றதோடு கடல்ச் சிங்கங்கள் அடிக்கடி கடற்கரைக்கு வந்து போவது வழக்கமாகும். இப்பிரதேசத்தின் இயற்கை அழகை பாதுகாக்கும் வகையிலும் வனவிலங்களின் பாதுக்காப்புக்காகவும் 1964 இல் இப்பிரதேசம் பாதுக்காக்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, சிறேதொகோ தேசிய வனம் நிறுவப்பட்டது. இங்கு சுற்றுலா பயணிகளுக்கு பார்வைக்கன சிறிய பிரதேசம் தவிர ஏனைய பகுதிகளுக்கு மக்கள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சிறேதொகோ தேசிய வனம் (கன் எழுத்து:知床国立公園 சிறேதொகோ கொகுரிட்சு கோயென்) சிறேதொகோ தீபகற்பத்தின் பெரும் பகுதியை அடைத்து அமைந்துள்ளது. யப்பானின் ஒக்கைடோ தீவின் கிழக்கு மூலையில் அமைந்துள்ள இப்பிரதேசம் யப்பானில் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாகும். இங்கு பெரும்பாலன பகுதிகளைக் கால் நடையால் மட்டுமே அணுக முடியும். இவ்வனம் பிரவுன் கரடிகளுக்கு பிரசித்தமானதாகும். மேலும் இரசியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள யப்பான் உரிமை கோரும் குனசிறி தீவு இப்பிரதேசத்துக்கு அருகில் அமைந்துள்ளது. 2005 யுனெஸ்கோ இவ்வனத்தை உலக உரிமையாக அடையாளப்பட்டுத்தியது. மேலும் குனசிறி தீவையும் சேர்த்து எல்லை கடந்த உலக உரிமை சமாதான பூங்காவாக அபிவிருத்தி செய்ய அறிவுறுத்தியது. கியூஷூ (九州 -- ஒன்பது மாகாணங்கள்) ஜப்பானின் நாலு மிகப்பெரிய தீவுகளில் ஒன்றாகும். 35,640 சதுக்க கிமீ பரப்பளவில் அமைந்த கியூஷூவில் 2006 கணக்கெடுப்பின் படி மொத்தத்தில் 13,231,995 மக்கள் வசிக்கின்றனர். ஷிகொக்கு (Shikoku, 四国 -- நான்கு நாடுகள்) ஜப்பானின் நான்கு முக்கியத் தீவுகளில் மிகச்சிறிய தீவு ஆகும். 2005-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 4,141,955 மக்கள் வசிக்கின்றனர். ரியுக்யு தீவுகள் மேற்கு பசிபிக் பெருங்கடலில் ஒரு தீவுக்கூட்டம் ஆகும். கியூஷூ தீவிலிருந்து தாய்வான் வரை தொடரும். ஹொன்ஷூ (அல்லது ஒன்சூ) (ஜப்பானிய மொழி: 本州, என்பது "பிரதான நாடு") ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய தீவு ஆகும். உலகில் பரப்பளவின் படி ஏழாவது மிகப்பெரிய தீவும் மக்கள் தொகையின் படி இரண்டாம் மிகப்பெரிய தீவும் ஆகும். 1990 கணக்கெடுப்பின் படி இத்தீவில் 98,352,000 மக்கள் வசிக்கின்றனர். கிட்டத்தட்ட 1,300 கிமீ நீள ஹொன்ஷூ தீவின் நடுவில் ஜப்பானிய ஆல்ப்ஸ் மலைத்தொடர் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடரின் மிக உயரமான மலை ஃபூஜி மலை ஆகும். ஐந்து பகுதிகளில் பிரிந்த இத்தீவில் டோக்கியோ, ஹிரோஷிமா, ஒசாக்கா, கியோட்டோ முதலிய பல முக்கியமான நகரங்கள் அமைந்துள்ளன.

நியூசிலாந்தின் தீவுகள்.

Picture
நியூசிலாந்தின் தீவுகள். குக் தீவுகள் தன்னிச்சையாக நியூசிலாந்துடன் இணைந்துக் காணப்பட்டும் சுயாட்சி பாராளுமன்ற மக்களாட்சியாகும். தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குக்தீவுகளின் 15 சிறிய தீவுகள் மொத்தம் 240 சதுர கிலோமீட்டர் (92.7 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளன. குக் தீவுகளுக்கான பிரத்தீயே பொருளாதார வலயம் 1.8 மில்லியன் சதுர கிலோமீட்டர் (0.7 மில்லியன் சதுர மைல்) பரப்பளவைக் கொண்டதாகும். முக்கிய மக்கள் குடியிருப்பு மையங்கள் ரரொடொங்கா (Rarotonga) தீவில் அமைந்துள்ளன குக்தீவுகளின் பன்னாட்டு விமான நிலையமும் ரரொடொங்கா தீவில் அமைந்துள்ளன. குக் தீவு மக்ககளின் முக்கிய குடியேற்றங்கள் நியூசிலாந்திலும் அமைந்துள்ளது முக்கியமாக நியூசிலாந்தின் வட தீவில் 2006 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது 58,008 பேர் தன்னிச்சையாக குக் தீவுகளின் மஓரி இனத்தவராக தம்மை பதிவு செய்துள்ளனர். 2006 ஆம் ஆண்டு 90,000 பேர் உல்லாசப்பிரயானிகளாக இங்கு வந்துள்ளனர், உல்லாசபிரயான கைத்தொழில் நாட்டின் முக்கிய வருவாய் மூலமாகும். கடல்சார் உற்பத்திகள், பழங்கள், முத்துக்கள் ஏற்றுமதியும் வெளிநாட்டு வங்கி வைப்பு வருமானங்களும் ஏனைய முக்கிய வருவாய் மூலங்களாகும். குக் தீவுகளின் பாதுகாப்புக்கு நியுசிலாந்து பொறுப்பாகும். எனினும் இது குக் தீவுகளின் யாப்புக்குட்பட்டு குக் தீவுகளின் கோரிக்கையின் பேரிலேயே மேற்கொள்ளப்படலாம். அண்மைக்காலமாக குக் தீவுகள் கட்டற்ற வெளிநாட்டுக் கொள்கையை கைக்கொண்டு வருகிறது. சத்தாம் தீவு நியூசிலாந்தில் உள்ள ஒரு தீவு ஆகும். 40 கிலோ மீட்டர் விட்டம் கொண்ட பகுதியுள் 10 தீவுகளை இது கொண்டுள்ளது. இந் நாட்டைச் சேர்ந்த மிகத் தொலைவில் உள்ள தீவுகள் தெற்கு நியூசிலாந்துக்குக் கிழக்கே 800 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் அமைந்துள்ளது. 1842 ஆம் ஆண்டில் இத் தீவுகள் நியூசிலாந்துக்கு உரியவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. மொரியோரி, ஆங்கிலம், மாவோரி மொழிகளில் நாட்டின் முக்கிய தீவுகளுக்கு வழங்கப்படும் பெயர்களின் பட்டியல் பின்வருமாறு: ரேகோஹு / Chatham Island / வாரேகவுரி ரங்கியாவோட்டெயா / Pitt Island / ரங்கியாவுரியா ரங்காத்திரா / South East Island / ரங்காத்திரா தெரியாது / The Fort / மாங்கேரே தெரியாது / Little Mangere / தாப்புவெனுக்கு மோட்டுஹோப்பே / Star Keys / மோட்டுஹோப்பே ரங்கித்தாத்தாகி / The Sisters / ரங்கித்தாத்தாகி மொத்துஹாரா இத் தீவுகள் சிலவற்றில் வேளாண்மை செய்வதற்காக ஒரு தடவை காடுகள் அழிக்கப்பட்டன. இவை இப்போது சதாம் தீவுகளுக்குத் தனித்துவமான தாவர, விலங்கினங்களைக் காப்பதற்கான காப்பகங்கள் ஆக்கப்பட்டுள்ளன. புதிய நாள் தொடங்குவதாகக் கருதப்படும் அனைத்துலக நாள் கோடு சதாம் தீவுக்குக் கிழக்கே அமைந்துள்ளது. ஆனால் இத்தீவு 180° புவி நெடுங்கோட்டுக்குக் கிழக்கில் அமைந்துள்ளது. இதனால் சதாம் தீவின் நேரம் நியூசிலாந்து நேரத்தை விட 45 நிமிடங்கள் முந்தியது ஆகும். தீவின் பெரும்பகுதி பன்னங்களினாலும், மேய்ச்சல் புல்வெளிகளினாலும் மூடப்பட்டுள்ளது. சில காட்டுப் பகுதிகளும் உள்ளன. காற்றின் எதிர்த்திசையில் கிடைமட்டமாகக் கிளைகளைக் கொண்ட மாக்குரோகார்ப்பா என்னும் மரங்கள் குறிப்பிடத்தக்கவை. தீவுகள் பெரும்பாலும் மலைப் பாங்கானவை. பிட்ஸ் தீவு, சதாம் தீவிலும் கூடிய மலப்பாங்கானது. மிகவும் உயர்ந்த பகுதி (299 மீட்டர்) முதன்மைத்தீவின் தென் முனைக்கு அண்மையில் அமைந்துள்ளது. ரெக்கோஹு கூட்டத்தைச் சேர்ந்த முதன்மைத் தீவு, பல ஏரிகளையும், குடாக்களையும் கொண்டு அமைந்துள்ளது. தே வாங்கா குடா இவற்றுள் குறிப்பிடத்தக்கது. சதாமில் உள்ள ஏனைய ஏரிகளுள் ஹூரோ, ரங்கித்தாகி என்பன அடங்கும். ரேக்கோகுவில் தே அவைனங்கா, தூக்கு (Tuku) போன்ற சிற்றாறுகளும் உள்ளன. இத் தீவுகள் இடத்துக்குரிய பறவைகள் பலவற்றின் இருப்பிடமாக உள்ளன. இவற்றுள் மஜெந்தா பெட்ரேல் (Magenta Petrel), கரும் ராபின் என்பவை குறிப்பிடத்தக்கவை. இவ்விரு இனங்களும் முன்னர் அழியும் நிலையில் இருந்து பின்னர் காப்பு நடவடிக்கைகள் மூலம் அழியாமல் காப்பாற்றப்பட்டவை. டோக்கெலாவ் (Tokelau) என்பது நியூசிலாந்தின் ஒரு பகுதியாகும். இது பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மூன்று வெப்பவலய பவளத் திட்டுகளைக் கொண்டுள்ளது. இப்பிரதேசத்தை சுயாட்சியற்ற பிரதேசமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அறிவித்துள்ளது[1]. 1976 ஆம் ஆண்டு வரையில் இப்பகுதி டோக்கெலாவ் தீவுகள் என அழைக்கப்பட்டு வந்தது. மேலை நாட்டவர்களால் இது சிலவேளைகளில் யூனியன் தீவுகள் எனவும் அழைக்கப்பட்டது. டோக்கெலாவ் என்பது பொலினீசிய மொழியில் வடக்குக் காற்று எனப் பொருள். டிசம்பர் 9, 1976 முதல் டோக்கெலாவ் என்ற பெயர்அதிகாரபூர்வமாக்கப்பட்டது. தெற்குத் தீவு (South Island, மாவோரி: Te Wai Pounamu) என்பது நியூசிலாந்தின் இரண்டு பெரும் தீவுகளில் ஒன்றாகும். மற்றையது வடக்குத் தீவு. தெற்குத் தீவு பொதுவாக "பெருந்தரை" (The Mainland) என அழைக்கப்படுகிறது. வடக்குத் தீவைவிட இத்தீவு பரப்பளவில் சிறிது அதிகம், அத்துடன் நியூசிலாந்தின் மொத்த 4 மில்லியன் மக்களில் காற்பகுதி மக்களே இங்கு வசிக்கின்றர்கள்.

பசிபிக் பெருங்கடல் தீவுகள்.

Picture
பசிபிக் பெருங்கடல் தீவுகள். பசிபிக் தீவுகள் (Pacific Islands) எனப்படுபவை பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிட்டத்தட்ட 20,000 முதல் 30,000 தீவுகளைக் குறிக்கும். ஆஸ்திரேலியா தவிர்ந்த மற்றையவை பொதுவாக மூன்று பிரிவுகளில் அடக்கப்பட்டுள்ளன. அவை: மெலனேசீயா, மைக்குரொனேசியா, பொலினேசியா என்பவை. இங்கு வாழும் மக்கள் பசிபிக் தீவு மக்கள் என அழைக்கப்படுகின்றனர். பசிபிக் தீவுகள் சில நேரங்களில் கூட்டாக ஓசியானியா என அழைக்கப்படுகின்றன. ஹவுலாந்து தீவு (ஒலிப்பு:/ˈhaʊlənd/) மத்திய பசிபிக் பெருங்கடலில் நிலநடுக்கோட்டின் சற்று வடக்கே அமைந்துள்ள ஆட்களில்லாத பவளப்பாறை தீவாகும். இது ஹொனலுலுவிலிருந்து தேன்மேற்கே ஏறத்தாழ 1,700 nautical miles (3,100 km) தொலைவில் உள்ளது.இது ஐக்கிய அமெரிக்காவின் ஆளுமைக்குட்பட்ட நிலப்பகுதியாகும். புவியியலின்படி இதனை பீனிக்ஸ் தீவுகளின் பகுதியாகக் கருதலாம்.ஹவாய் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கிடையே மையப்பகுதியில் அமைந்துள்ளது.ஹவுலாந்து தீவின் அமைவிடம்  இதன் பரப்பு 450 acres (1.8 km2), மற்றும் கடற்கரை 4 miles (6.4 km) தொலைவுள்ளது.சற்றே நீள்வட்டமாக அமைந்துள்ள இத்தீவில் தாழ்மட்ட கடற்குளம் (lagoon) இல்லை. ஹவுலாந்து தீவு தேசிய வனவிலங்கு உய்வகம் இங்கு அமைந்துள்ளது. வேறு பொருளியல் செயல்கள் எதுவும் இங்கு நடைபெறவில்லை. முறையான துறைமுகமோ படகுத்துறையோ இல்லை.[1] வானிலை ஓர் நிலநடுக்கோட்டுப் பகுதி வானிலைப் போன்று கடுமையான வெயில் உள்ள தீவாகும்.மழை மிகக் குறைவு.குடிநீர் வளம் இல்லை. இங்கு மரங்கள் அதிகமில்லை.பெரும்பாலும் கடற்பறவைகளுக்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் பேறுகால வாழ்விற்கு பயனாகும் தீவாகும். மெலெனேசியா என்பது கருப்புத் தீவுகள் எனப் பொருள்படும். இவை நியூ கினி, நியூ கலிடோனியா, செனாட் கெஸ் (டொரெஸ் நீரிணைத் தீவுகள்), வனுவாட்டு, பிஜி, மற்றும் சொலமன் தீவுகள் ஆகும். பொலினேசியா என்பது பல தீவுகள் எனப் பொருள்படும். இவை நியூசிலாந்து, ஹவாய் தீவுகள், ரொட்டுமா, மிட்வே தீவுகள், சமோவா, அமெரிக்க சமோவா, தொங்கா, துவாலு, குக் தீவுகள், பிரெஞ்சுப் பொலினேசியா, ஈஸ்டர் தீவு ஆகியனவாகும். மூன்று வலயங்களிலும் இவையே மிகப் பெரியதாகும். இந்தப் பிராந்தியத்தின் தீவுகள் உயர் தீவுகள் மற்றும் தாழ் தீவுகள் என இரண்டு வலயங்களாக வகுக்கப்பட்டுள்ளன. எரிமலைகள் உயர் தீவூகளை அமைத்துள்ளன. இவை பொதுவாக கூடியளவு மக்களைக் கொள்ளக்கூடியது, மேலும் இவை வளம் மிக்க மண்ணைக் கொண்டுள்ளன. தாழ் தீவுகள் பொதுவாக கற்பாறைகளையும், பவழக் கற்பாறைகளையும் கொண்டுள்ளன. இவற்றின் மணல் பொதுவாக வளமற்றவை. மூன்று பிரிவுகளிலும் மெலனேசியா தீவுகளி பெரும்பாலானவை உயர் வலயத்தில் அமைந்துள்ளன. மற்றைய இரண்டு பிரிவு தீவுகள் தாழ் வலயத்தில் உள்ளன. இவற்றை விட வேறு பல தீவுகளும் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளன. ஆனால் இவை ஓசியானியாவிற்குள் அடக்கப்பட்டிருக்கவில்லை. இவை எக்குவடோரின் கலாபகசுத் தீவுகள்; அலாஸ்காவின் அலூசியன் தீவுகள்; ரஷ்யாவின் சக்காலின், கூரில் தீவுகள்; தாய்வான்; பிலிப்பீன்ஸ்; தென் சீனக் கடல் தீவுகள்; இந்தோனீசியாவின் பெரும்பாலான தீவுகள்; மற்றும் ஜப்பான் ஆகியவை. பரோயே தீவுகள் (Faroe Islands) வட ஐரோப்பாவில் நோர்வே கடலுக்கும்வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடையில் அமைந்துள்ள தீவுக் கூட்டமொன்றாகும். ஐசுலாந்து, சுகொட்லாந்து, நோர்வே என்பவற்றிலிருந்து அண்ணளவாக சம தூரத்தில் அமைந்துள்ளது. இத்தீவுகள் 1948 ஆம் ஆண்டு முதல் டென்மார்க் இராச்சியத்தின் சுயாட்சி மாகாணமாக இருந்து வருகின்றன. இருப்பின் அண்மை ஆண்டுகளில் பாதுகாப்பு, சட்டவாக்கம், வெளியுறவுக் கொள்கை தவிர்ந்த ஏனைய விடயங்களை தானாக தீர்மானித்து வருகின்றது. பாதுகாப்பு, சட்டவாக்கம், வெளியுறவுக் கொள்கை என்பன டென்மார்கின் பொறுப்பில் இருக்கின்றது. பரோயே தீவுகள் ஐசுலாந்து, செட்லாந்து, ஓக்னீ, வெளி ஏப்பிரைட் தீவுகள், கிறீன்லாந்து என்பவற்றுடன் நெருங்கிய காலாச்சார பிணைப்புகளைக் கொண்டுள்ளது. தீவுக் குழுமம் 1814 இல் நோர்வேயில் அரசியலிருந்து விடுபட்டது. பரேயே தீவுகள் நோர்டிக் சங்கத்தில் டென்மாக் குழுவின் அங்கத்தவராகவே பங்கேற்கின்றது. பவளத்தீவுகள் பால்மைரா பவளத்தீவு (ஒலிப்பு:/pælˈmaɪrə/) ஐக்கிய அமெரிக்காவினால் ஆளப்படும் பவளத்தீவாகும். இத்தீவு (4.6 sq mi (12 km2)) வடக்கு பசிபிக் பெருங்கடலில் ஹவாய் மற்றும் அமெரிக்கன் சமோவா தீவுகளுக்கிடையே அமைந்துள்ளது. இப்புவியியல் அமைப்பில் பவளப்பாறையைத் தவிர இரு ஆழமற்ற கடற்காயல்கள் மற்றும் 50க்கு மேற்பட்ட மணல் மற்றும் பாறை தீவுத்திடல்கள் உள்ளன.ஆட்கள் வசிக்காத இத்தீவு பால்மைரா பவளத்தீவு தேசிய வனவாழ்வு உய்விடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சென்றுவர அரசின் அனுமதி தேவை[1]. 2005இல் உலகெங்குமிருந்து அறிவியலாளர்கள் சிலர் இங்கு சுற்றுப்புறச் சூழலை ஆய்வு செய்ய ஆராய்ச்சி நிலையம் ஒன்றை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.[2]. பெரும் தடுப்புப் பவளத்திட்டு (The Great Barrier Reef) உலகின் மிகப் பெரிய பவளப்பாறைத் திட்டுத் தொகுதியாகும். இது 2,900 தனித் திட்டுக்களையும், 2,600 கிமீ தூரம் நீண்டிருக்கும் 900 தீவுகளையும் கொண்டு ஏறத்தாள 344,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்துள்ளது. இது வடகிழக்கு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கரைக்கு அப்பால் பவளக் கடலில் (Coral Sea) அமைந்துள்ளது. பெரும் தடுப்புப் பவளத்திட்டு, உயிரினங்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய ஒற்றை அமைப்பாகும். இதனை விண்வெளியில் இருந்தும் பார்க்க முடியும். இந்தப் பவளத்திட்டு அமைப்பு பல கோடிக்கணக்கான நுண்ணிய உயிரினங்களால் அமைக்கப்பட்டவை. பல்வகைமைப்பட்ட உயிரினங்களின் வாழ்விடமாக உள்ள பெரும் தடுப்புப் பவளத்திட்டு 1981 ஆம் ஆண்டில் உலக பாரம்பரியக் களமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சி.என்.என் (CNN) எனப்படும் ஆங்கில மொழித் தொலைக்காட்சிச் சேவை இதனை உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்றாகத் தெரிவு செய்துள்ளது. குயீன்ஸ்லாந்தின் தேசிய நம்பிக்கை நிறுவனம் (Queensland National Trust) இதனை மாநிலத்தின் அடையாளச் சின்னமாக அறிவித்துள்ளது. இப் பவளத்திட்டின் பெரும் பகுதி, பெரும் தடுப்புப் பவளத்திட்டுக் கடல்சார் பூங்கா திட்டத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அளவுக்கதிகமான மீன்பிடித்தல், சுற்றுலா போன்ற மனித நடவடிக்கைகளால் இப் பவளத்திட்டு பாதிக்கப்படுவது குறைக்கப்படுகிறது. இப் பவளத்திட்டுக்களுக்கும், அதன் சூழ்நிலை மண்டலத்துக்கும் இருக்கக்கூடிய இன்னொரு தாக்கம், இப்பகுதியில் வந்து விழும் நீரின் தரம் ஆகும். அத்துடன், காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாரிய பவள வெளிறல், "முள்முடி நட்சத்திர மீன்களால்" ஏற்படும் தாக்கம் என்பனவும் குறிப்பிடத்தக்கவை. வேக் தீவு (Wake Island) என்பது வடக்கு பசிபிக் பெருங்கடலில் 12 மைல் நீள கரையைக் கொண்ட ஒரு பவளப் பாறைகளைக் கொண்ட தீவாகும். இது வேக் பவளத் தீவு எனவும் அழைக்கப்படுகிறது. இது ஹொனலுலுவில் இருந்து 3,700 கிமீ மெற்கிலும், குவாமில் இருந்து 2,430 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவினால் நிர்வகிக்கப்படுகிறது. இத்தீவிற்குச் செல்ல எவரும் அனுமதிக்கப்படுவதில்லை. தற்போது இங்கு ஐக்கிய அமெரிக்காவின் வான்படையினர் இங்கு நிலை கொண்டுள்ளனர். அத்துடன் அமெரிக்க இராணுவத்தினரின் ஏவுகணைத் தொழிற்சாலை ஒன்றும் இங்கு உள்ளது. இப்பவளப் பாறைத் திட்டுகளின் முக்கிய தீவான வேக் தீவு கிட்டத்தட்ட 9,800 அடி (3,000 மீட்டர்) நீள ஓடுபாதை உள்ளது. பிஜியின் தீவுகள் பிஜி (பிஜி மொழி: விட்டி; இந்தி: फ़िजी, உருது: فِجی, உத்தியோகபூர்வமாக பிஜித் தீவுகளின் குடியரசு), அமைதிக் கடலின் தெற்கேயுள்ள் ஒரு தீவு நாடாகும். இது வானுவாட்டுவின் கிழக்கேயும், தொங்கா நாட்டிற்கு மேற்கேயும், துவாலு நாட்டிற்கு தெற்கேயும் அமைந்துள்ளது. மொத்தம் 322 தீவுகளக் கொண்ட பிஜியில் விட்டி லேவு, வானுவா லேவு ஆகியன பெரிய தீவுகளாகும். இவை நாட்டின் 87% சனத்தொகையைத் தன்னகத்தே கொண்டுள்ளன. பிஜி என்னும் பெயர் தீவு என்பதைக் குறிக்கும் பழைய தொங்கா மொழியில் இருந்து உருவானது. காவு (Gau, ஒலிப்பு [ŋau]) என்பது பிஜியின் லொமாய்விட்டி தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறு தீவு. 18.00°தெ மற்றும் 179.30°கி அமைந்துள்ள இத்தீவின் பரப்பளவு 136.1 சதுர கிலோமீட்டர்கள். இதன் மொத்த கரைப்பகுதி 66.3 கிலோமீட்டர்கள் நீளமானது. இதன் மிக அதிகமான உயரம் 738 மீட்டர்கள். இத்தீவின் தெற்கே லோவு என்ற இடத்தில் ஒரு விமான ஓடுபாதை உள்ளது. பிஜியின் நோசோரி பன்னாட்டு விமானநிலையத்தில் இருந்து விமானங்கள் இங்கு வந்திறங்குகின்றன. காவுவின் மேற்குக் கரைப்பகுதியில் உள்ள நவியாவியா கடற்கரையில் கடல் ஆய்வு நிலையம் ஒன்று அமைந்துள்ளது. 2005 ஆம் ஆண்டில் இப்பன்னாட்டு ஆய்வு நிறுவனம் அமைக்கப்பட்டது இத்தீவில் பிஜி பெட்ரெல் எனப்படும் மிக அரிதான கடற்பறவையினம் தரையிறங்குவதுண்டு. பிஜி பெட்ரெல் (Fiji Petrel, Pseudobulweria macgillivrayi) எனப்படுவது சிறியவகை கரும் கடற்பறவையாகும். இது ”மக்கில்விரே பெட்ரெல்” (MacGillivray's Petrel) எனவும் அழைக்கப்படுகிறது. பிஜி பெட்ரெல்[1] என்ற கடற்பறவையின் வளர்ச்சியுறா மாதிரி ஒன்றை முதன் முதலாக பிரித்தானிய இயற்கை ஆர்வலர் ஜோன் மக்கில்விரே என்பவர் பிஜி தீவுகளில் ஒன்றான காவு தீவில் 'எச்.எம்.எசு எரால்ட்' என்ற கப்பலில் செல்லும்பொழுது கண்டெடுத்து அதனை லண்டனில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தார். இப்பறவையினம் பின்னர் 1983 ஆம் ஆண்டில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் ஏழு முறை இவை கடல் வெளியில் பறக்கக் காணப்பட்டன. ஏப்ரல் 1984 இல் முழு வளர்ச்சியடைந்த நிலையில் உள்ள பறவையைக் கைப்பற்றிப் படம் பிடித்தனர். கடைசியாக 2009 செப்டம்பரில் பிஜி தீவுகளில் ஒன்றான குவா தீவின் தெற்கே 25 கடல்மைல் தொலைவில் இவை கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தம் 8 பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டு 11 நாட்களாக அவற்றைப் படம் பிடித்தனர்[2][3]. இப்பறவை 30 செமீ உயரமான கரும்பழுப்பு நிறமானவை. இவற்றுக்குக் கரும் கண்களும், வெளிறிய நீல நிற அலகுகளும் உண்டு. இப்பறவையினம் அரிதாகக் காணப்படும் செய்தி, காவு தீவுகளின் மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. அத்துடன் இதன் படம் பிஜியின் வங்கி நாணயத்திலும் பதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2007 இல் காயமடைந்து பின்னர் இறந்த பிஜி பெட்ரெலின் தோல் ஆய்வுக்காக வழங்கப்பட்டது. இப்பறவையினம் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தினால் 192 அழிதருவாயில் உள்ள, அல்லது மிக அரிதான இனங்களில் ஒன்றாக பட்டியல் படுத்தப்பட்டுள்ளது. மே 2009 இல், இப்பறவையின் முதலாவது கடலில் பறக்கும் படம் காவு தீவு அருகே பிடிக்கப்பட்டது[4].

இத்தாலியத் தீவுகள்.

Picture
இத்தாலியத் தீவுகள். சிசிலி (Sicily, இத்தாலிய மொழி: Sicilia) இத்தாலி நாட்டின் ஒரு சுயாட்சி பிரிவாகும். இதுவே மத்திய தரைக் கடலில் அமைந்துள்ள மிகப் பெரிய தீவாகும். 5 மில்லியன் மக்கள் வாழும் இத்தீவின் மொத்தப் பரப்பளவு 25,708 km² ஆகும். சிசிலி இன்றைய நிலையில் இத்தாலியின் ஒரு பகுதியாக இருந்தாலும் இது முன்னர் ஒரு முழுமையான விடுதலை பெற்ற நாடாக சிசிலி பேரரசு என்ற பெயரில் இருந்தது. இது சில காலம் தெற்கு இத்தாலி, மோல்ட்டா ஆகியவற்றின் பாகுதியாகவும் இருந்தது. இது பின்னர் போர்பன்களின் ஆட்சியில் நேப்பில்ஸ் நகரில் இருந்து ஆளப்பட்டது. அன்றிலிருந்து சிசிலி இத்தாலியின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கோர்சு (ஆங்கிலம்: Corsica; பிரெஞ்சு: Corse; இத்தாலியம்: Corsica; கோர்சு: Corsica) என்பது மத்தியதரைக்கடளிலுள்ள ஒரு தீவு. இத்தீவு இத்தாலியின் வடக்கு பகுதியிலும் பிரான்சின் தென்கிழக்கு பகுதியிலும் உள்ளது. இதன் பரப்பளவு 8,680 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை 302,000 ஆகும். சார்க் (Sark, பிரெஞ்சு: Sercq) என்பது தென்மேற்கு ஆங்கிலக் கால்வாயில் உள்ள சானெல் தீவுகளில் ஒன்றான கேர்ன்சியின் ஒரு சிறிய தீவாகும். இதன் மொத்த மக்கள் தொகை 600 (2002 இல் 610) ஆகும். இதன் பரப்பளவு 2 சதுர மைல்கள். இங்கு தானுந்துகள் அனுமதிக்கப்படுவதில்லை. பதிலாக குதிரை வண்டில்களே முக்கிய போக்குவரத்தாகும். அதைவிட மிதிவண்டி, உழவு வண்டி, மின்கலங்களில் இயங்கும் தானுந்துகள் (வலது குறைந்தோருக்காக) ஆகியனவும் பாவனையில் உள்ளன. சுற்றுலாத்துறை ஒரு முக்கிய வருவாய் தரும் தொழிலாகும். சார்க்கின் அதி உயரமான இடம் கடல் மட்டத்தில் இருந்து 374 feet (114 m) ஆகும். 1571 இல் கட்டப்பட்ட காற்றாலை ஒன்று இங்கு உள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியினரால் இதன் பாகங்கள் சேதமாக்கப்பட்டன. பிரெக்கு என்ற தீவும் சார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது ஒரு தனியாரின் தீவாகும். தற்போது இங்கு சேர் டேவிட் மற்றும் பிரெடெரிக் பார்க்லே என்போர் வசிக்கின்றனர். இவர்கள் இதனை 1993 இல் வாங்கினார்கள். வெளியாட்கள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை. சார்க் தீவு ஐரோப்பாவின் கடைசி நிலமானிய (feudal) அமைப்பாக இருந்து வந்தது.[1]. குத்தகை (fiefdom) இங்கு இன்னமும் நடைமுறையில் உண்டு. ஆனாலும், ஏப்ரல் 2008 இல் ஐக்கிய இராச்சியத்தின் பிரிவி கவுன்சில் சார்க் தீவில் நிலமானிய அமைப்பை மாற்றி மக்களாட்சி முறைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது[2]. சார்தீனியா (ஆங்கிலம்: Sardinia; பிரெஞ்சு: Sardaigne; இத்தாலியம்: Sardegna; சார்தீனியம்: Sardigna, Sardinnya) என்பது மத்தியதரைக்கடலிலுள்ள இரண்டாவது பெரிய தீவு ஆகும். இது இத்தாலிய நாட்டை சேர்ந்தது ஆகும். இதன் பரப்பளவு 24,090 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை 1,670,219 ஆகும். இதன் தலைநகரம் கலியாரி ஆகும். எல்பா (Elba, இத்தாலிய மொழி: Ilva) என்பது இத்தாலியின் டஸ்கானி பிரதேசத்தில் உள்ள ஒரு தீவாகும். இத்தாலியின் கரையோர நகரமான பியோம்பினோவுக்கு 20 கிமீ தூரத்தில் உள்ளது ( டஸ்கான் தீவுகளில் இதுவே மிகப்பெரியதும், இத்தாலியின் தீவுகளில் சிசிலி மற்றும் சார்டீனியாவுக்கு அடுத்ததாக மூன்றாவது பெரியதும் ஆகும். எல்பாவுக்கு மேற்கே 50 கிமீ தூரத்தில் பிரெஞ்சு தீவான கோர்சிக்கா அமைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 224 கிமீ² பரப்பளவும் கரையோர நீளம் 147 கிமீ உம் ஆகும். இதன் மிக உயரமான மலை மொண்டே கப்பானே 1,018 மீட்டர்கள் உயரமானது. இத்தீவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 30,000 ஆகும். 1814 இல் பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் பொனபார்ட் எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான். மே 3, 1814 இல் இவன் இத்தீவின் நகரமான் போர்ட்டோஃபெராய்யோவை அடைந்தான். நெப்போலியன் தனது பாதுகாப்புக்காக 600 பேரைக்கொண்ட படைகளை வைத்திருக்க அனுமதிக்கப்பட்டான். பொதுவாக எல்பா தீவை இவன் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலும் பிரித்தானியக் கடற்படையினர் இத்தீவைக் கண்காணித்து வந்தனர். மொத்தம் 300 நாட்கள் இத்தீவில் வாழ்ந்த நெப்போலியன் பெப்ரவரி 26, 1815 இல் ஒருவாறாகத் தப்பித்து பிரான்சை அடைந்தான். 1860 இல் இத்தீவு இத்தாலியின் கூட்டமைப்புக்குள் வந்தது. பிரெஞ்சுப் படைகள் ஜூன் 17, 1944 இல் இங்கு புகுந்து தீவை ஜெர்மனியிடம் இருந்து விடுவித்தனர். ஓல்க்கான் என்பது உலகின் நான்காவது பெரிய ஏரி சூழ் தீவு ஆகும். இது சைபீரியாவின் கிழக்கில் பைக்கால் ஏரியில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 730 சதுர கிலோமீட்டர்கள்.

பொலினீசியா தீவுகள்.

Picture
பொலினீசியா தீவுகள். பொலினீசியா (Polynesia) என்பது ஓசியானியாவின் ஓர் உப பிரிவாகும். இது பசிபிக் பெருங்கடலின் நடு மற்றும் தெற்குப் பகுதிகளில் பரந்து காணப்படும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியது. பொலினீசியா என்ற பெயர் கிரேக்க மொழியில் πολύς பல, νῆσος தீவு, அதாவது பல தீவுகள் எனப் பொருள். பொலினீசியாவில் பின்வரும் தீவுகள் மற்றும் தீவுக்கூட்டங்கள் தனி நாடுகளாகவோ அல்லது கூட்டுப் பிரதேசங்களாகவோ அமைந்துள்ளன: ஈஸ்டர் தீவு (Easter Island) என்பது பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கே அமைந்துள்ள பொலினீசியத் தீவாகும். இது சிலியின் ஆளுகைக்கு உட்பட்ட சிறப்பு மண்டலம் ஆகும். ராப்பானூயி மக்களினால் அமைக்கப்பட்ட மோவாய் (moai) என அழைக்கப்படும் பல நினைவுச் சின்னங்கள் இத்தீவின் சிறப்பாகும். இது உலகப் பாரம்பரியக் களமாகும். "ஈஸ்டர் தீவு" என்பது முதன் முதலாக இங்கு வந்திறங்கிய டச்சுப் பயணியான ஜேக்கப் ரகவீன் என்பவரால் கொடுக்கப்பட்டது. இவர் இத்தீவில் 1722 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு நாளன்று வந்திறங்கினார். இத்தீவின் தற்போதைய பொலினீசியப் பெயர் "ராப்பா நூயி" (Rapa Nui அல்லது "பெரும் ராப்பா" எனப்பொருள். பிரெஞ்சு பொலினீசியாவின் பாஸ் தீவுகளில் இருந்து 1870களில் இங்கு குடியேறிய ராப்பா மக்களின் நினைவாக இப்பெயர் இடப்பட்டது. ஈஸ்டர் தீவு உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட குடியேற்றத் தீவுகளில் ஒன்றாகும். இது சிலியில் இருந்து 3,600 கிமீ (2,237 மைல்) மேற்கேயும், பிட்கேர்ன் தீவில் இருந்து 2,075 கிமீ (1,290 மைல்) கிழக்கே அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகத்திலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு சிறிய தனித் தீவு, முதன்முதல் பார்த்தவர்களிலிருந்து இன்றுவரைப் பார்ப்பவர்களின் விழிகளை வியப்பில்லாழ்த்திக் கொண்டிருக்கிறது. தென்கிழக்கு பசிபிக் தீவுகளில் ஒன்று, இதன் பொலினிசியப் பெயர் ரப்பா நுயி (Rapa Nui). தற்சமயம் சிலியின் அரசுக்குட்பட்ட சிறப்பு பகுதி. கி.பி 1722 டச்சைச் சேர்ந்த ஜேக்கப் ரகவீன் (Jacob Roggeveen) ஈஸ்டர் தினத்தில் இந்த தீவுக்கு வந்தார், வந்த இடத்தில் இந்த தீவின் பெயரை கேட்டு தீவுவாசிகளைச் சிரமப்படுத்தாமல் "ஈஸ்டர் தீவு" என்று நாமகரணம் சூட்டிவிட்டார். ஜேக்கப் எதனைப் பார்த்து திகைத்தாரோ அவை இன்னமும் நம்மை திகைப்படைய வைக்கின்றன, அது மோவாய்கள் (Moai). மனித முகம் போல் தோற்றமுடைய மோவய்கள் என்ற பிரமாண்டமான நூற்றுக்கணக்கான கற்சிலைகள் தீவெங்கும் காணப்படுகின்றன, உயரம் சராசரியாக 10 மீட்டர், எடை 80 டன். ஒரு மர்மமான கற்கால நாகரீகத்தின் நினைவாக எஞ்சியிருப்பது மோவய்கள் தவிர ஒன்றுமில்லை. யார் இந்த சிலைகளைச் செய்தார்கள் ?, எதற்காக இந்த சிலைகளைகள் ?, செய்தவர்கள் எங்கே ? அவர்களுக்கு என்ன ஆனது? எல்லாவற்றையும் தோண்டிக்கொண்டிருந்த தொல்பொருள் ஆய்வாளர்களையே தோண்டியது இந்தக் கேள்விகள். விஞ்ஞானம் வளரவளர பதிலலித்தது மெதுவாக. ஈஸ்டர் தீவு, ஒரு தனித்தீவு அருகில் நிலப்பரப்பு கிழக்கில் தென் அமெரிக்கா மேற்கில் பொலினீசிய தீவுகள் ஆனால் இரண்டும் இருப்பதோ ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில். பெரும் நிலப்பரப்பான தென் அமெரிக்காவிலிருந்து வந்திருக்ககூடும் என்று நம்பப்பட்டு வந்ததை மாற்றியவர் எரிக்கா. ஒவ்வொரு இனத்துக்கும் மரபியல் நியதி (genetic code) வேறுபடும். அதன் படி ஈஸ்டர் தீவுவாசிகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட டி. என். ஏ ஜெனடிக் கோட் ஒத்துப்போனது பொலினேசிய கோட். அந்த நாளில் சாதாரண படகுகள் மூலம் அவர்கள் கடந்த தூரம் மலைக்க வைக்கிறது, உலகின் நடந்த மாபெரும் கடல் வழி இடப்பெயர்ச்சி. இந்த இடப்பெயர்ச்சி கிபி ஏழாம் நூற்றாண்டில் நடந்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது, அதற்குப்பின் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு யாரும் இந்த தீவுக்கு வரவில்லை. தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகள் அங்கே நூற்றுக்கணக்கான வீடுகள் இருந்திருந்ததையும், வேளாண்மை, மீன்பிடித்தல் முக்கிய தொழிலாக இருந்ததையும் மக்கள் தொகை 12,000 ஆக இருந்திருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தின. பிரமாண்டமான கற்சிலைகள், எப்படி ஒரு கற்கால மனிதர்களால் இதை செய்யமுடிந்தது? எப்படி அவர்கள் இதை தீவைச் சுற்றி நகர்த்தினார்கள் என்பது முதல் ஆச்சரியம். அடுத்தது ரானோ ரரக்கூ (Rano Raraku), இந்த மொவய்கள் செதுக்கப்பட்ட கற்சுரங்கம் முன்னூறுக்கும் மேற்ப்பட்ட மொவய்கள் பல்வேறு நிலைகளில் இன்றும் காணப்படுகின்றன எடை 80 டன்னிலிருந்து 250 டன் வரை. பத்து மைல் தூரம் வரை தீவைச்சுற்றி நகர்த்தியிருக்கிறார்கள். மூதாதையர்களின் வாழும் முகங்கள் இதைத்தான் மொவய்கள் குறிக்கின்றது. இந்த மோவய்களுடன் காணப்படுவது மனிதனும் பறவையும் சேர்ந்த ஒரு உருவம் (பறவை மனிதன்). எது இந்த தீவுவாசிகளை இந்த நாள் வரை பேசவைத்ததோ அதுவே ஈஸ்டர் தீவுவாசிகளுக்கு சவக்குழியும் தோண்டியது. ஒவ்வொரு முறையும் சிலைகளை நகர்த்த ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன, ஒரு கட்டத்தில் இந்தத் தீவின் வனப்பகுதி முற்றிலும் அழிந்தது. பெரும் மழைகள் வண்டல் மண்ணை அடித்துச் செல்ல விவசாயம் பொய்த்தது, மீன் பிடிக்க படகு செய்ய மரம் இல்லாததால் தீவுவாசிகள் பெரும் உணவுப்பிரச்சனைக்கு ஆளானார்கள். நாகரீகம் பின்னோக்கி சுழலத்துவங்கியது "நரமாமிசகாலம்" தொடங்கியது. ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு இறந்தார்கள். கூடவே மோவய்களையும் முடிந்தவரை சிதைத்தார்கள். மக்கள் தொகை பெருமளவு குறைந்தது. எஞ்சியிருந்தவர்கள் மெதுவாக பழைய வாழ்க்கைக்கு திரும்பத்தொடங்கியிருந்த போது ஜேகப் ஈஸ்டர் தீவில் காலடி எடுத்துவைத்தார். கூடவே தீவுவாசிகளையும் பிடித்துக்கொண்டு போனார்கள், சிலை செய்ய இல்ல அடிமைகளாக. ஒரு சிலர் சில ஆண்டுகளுக்குப்பின் தப்பி வந்தார்கள், வந்தவர்கள் கொண்டுவந்தது சின்னம்மை. இது போன்ற வியாதிகளை அறிந்திராத தீவுவாசிகள் வாழ்க்கையின் இறுதி அத்யாயத்தை அது எழுதியது. ஒரு கற்காலத்திலேயே தேங்கிப்போன ஒரு நாகரீகம் தடயமில்லாமல் அழிந்தது. ஒரு சிறிய தீவில் மரங்களை முற்றிலும் அழித்தன் மூலம் சுற்றுப்புற சூழலை மாற்றினார்கள். சிலை செய்வதற்காக தங்கள் வாழ்வாதாரங்களையே அழித்தார்கள். குறைந்த அளவுடைய மற்றும் பதிலியில்லாத வளங்களை எப்படி கையாள்வது என்று அவர்களுக்கு தெரியவில்லை. சகமனிதனின் வன்மம் தப்பிபிழைத்தவர்களையும் அழித்தது. ஈஸ்டர் தீவு ஒரு எரிமலை உயர் தீவு ஆகும். இது முக்கியமாக மூன்று அழிந்த எரிமலைகளைக் கொண்டுள்ளது: டெரவாக்கா (507 மீட்டர்) தீவிம் முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. பொய்க்கே மற்றும் ரானோ காவு என்ற மற்றைய இரண்டும் இத்தீவுக்கு ஒரு முக்கோண வடிவைக் கொடுக்கின்றன. சமோவா ஒரு தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடாகும். இதன் தலைநகரம் ஆப்பியா ஆகும். தொங்கா இராச்சியம் (Kingdom of Tonga) அல்லது தொங்கா என்பது தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் ஒரு விடுதலையடைந்த தீவுக் கூட்டமாகும். தொங்கன் மொழியில் இது "தெற்கு" எனப் பொருள்படும். இது நியூசிலாந்துக்கும் ஹவாயிற்கும் இடையிலும் சமோவாவுக்கு தெற்கேயும் பிஜிக்கு கிழக்கேயும் அமைந்துள்ளது. பசிபிக் தீவில் உள்ள தீவு நாடுகளில் தொங்காவில் மட்டுமே மன்னராட்சியில் உள்ளது. இங்கு வாழும் மொத்த 112,422 மக்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர் தொங்கடாப்பு என்ற முக்கிய தீவில் வாழ்கின்றனர். நியுயே (நியுவே) தென் பசிபிக் பெருங்கடலில் பொலினீசியா துணைப்பகுதியில் அமைந்துள்ள தீவு நாடாகும். இது பொதுவாக பொலினீசியாவின் பாறை என அழைக்கப்படுகிறது. சுயாட்சி உள்ள நாடாயினும் நியுயே நியூசிலாந்துடன் தன்னிச்சையாக இணைந்துள்ளது. இதன் மூலம் நியூசிலாந்துக்கு உரிமையுள்ள முடிக்குரியவரே நியுயேயின் அரச தலைவராவார். பெரும்பான்மையான வெளிநாட்டு தொடர்பாடல்கள் நியுயே சார்பாக நியூசிலாந்து மேற்கொண்டு வருகிறது. நியுயே நியூசிலாந்திலிருந்து வடகிழக்குத் திசையாக 2,400 கி.மீ. தொலைவில் டொங்கா, சமோவா, குக் தீவுகள் என்பவற்றால் அமைக்கப்படும் முக்கோணத்துள் அமைந்துள்ளது. நியுயே மொழியும் ஆங்கிலமும் பாடசலைகளில் கற்பிக்கப்படுவதோடு அன்றாட வியாபார நடவடிக்கைளிலும் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள மக்கள் பெரும்பான்மையினர் பொலினீசியராவார்கள். டெஹீட்டி (Tahiti) என்பது பசிபிக் பெருங்கடல் பகுதியில் பிரெஞ்சு பொலினீசியாவில் அமைந்துள்ள விண்ட்வார்ட் தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ள முகப் பெரிய தீவாகும். இத்தீவின் மக்கள் தொகை ஆகஸ்ட் 2007 இல் 178,133 ஆகும். பிரெஞ்சுப் பொலினீசியாவில் மக்கள் அடர்த்தி கூடிய தீவு இதுவாகும். பிரெஞ்சுப் பொலீனீசியாவின் மொத்த மக்கல் தொகையில் 68.6% விழுக்காட்டினர் டெஹூட்டியில் வாழ்கின்றனர். இதன் தலைநகரம் பப்பியேட்டி ஆகும். டெஹீட்டியில் பொலினேசியர்கள் கி.பி. 300 முதல் 600 ஆண்டளவில் இருந்து தொங்கா, மற்றும் சமோவா ஆகிய நாடுகளில் இருந்து வந்ததாகக் கருதப்படுகிறது. 1606 இல் முதன் முதலில் ஸ்பெயின் நாட்டுக் கப்பல் முதன் முதலில் இங்கு வந்தது. ஆனாலும் அவர்கள் இத்தீவில் குடியேறுவது பற்றிக் கவலைப்படவில்லை. அதன் பின்னர் ஜூன் 18, 1767 இல் சாமுவேல் வாலிஸ் தலைமையில் ஆங்கிலேயர்கள் வந்தனர். இத்தீவின் அமைதியான சூழலும் உள்ளூர் மக்களின் அன்பான உபசரிப்பும் ஆங்கிலேயரை மிகவும் கவர்ந்தது. ஆங்கிலேயரைத் தொடர்ந்து ஏப்ரல் 1768 இல் பிரெஞ்சு நாடுகாண் பயணி லூயி-அண்டன் டி போகன்வில் இங்கு தரையிறங்கினார். ஜூன் 2, 1769 இல் கப்டன் ஜேம்ஸ் குக் இங்கு வந்து ஆகஸ்ட் 9 வரை தங்கியிருந்தான். அக்காலத்தில் இத்தீவின் மக்கள் தொகை 50,000 ஆக இருந்தது. பல ஐரோப்பியக் கப்பல்கள் இதன் பின்னர் இங்கு வந்து போயின. ஐரோப்பியர்களின் வருகை இங்குள்ள மக்கள் வாழ்க்கை நிலையையும் பாதிக்க ஆரம்பித்தது. அவர்கள் தம்முடன் பல நோய்களையும் இங்கு கொண்டு வந்தனர். இதனால் இத்தீவின் மக்கள் தொகை பெருமளவில் குரைய ஆரம்பித்தது. 1797 இல் மக்கள் தொகை 16,000 ஆகக் குறைந்தது. அதன் பின்னர் 6,000 ஆகக் குறைந்தது. 1842 இல், டெஹீட்டியின் அரசியாக இருந்த நான்காம் பொமாரே என்பவள் இத்தீவை பிரான்சின் காப்பாட்சியாக அமைக்கச் சம்மதித்தாள். பிரெஞ்சு அட்மிரல் "டுப்பேட்டி தௌவார்ஸ்" தலைமையில் 1843 இல் பல பிரெஞ்சு மாலுமிகளுடன் டெஹீட்டியில் இறங்கி அந்நேரம் பிரித்தானிய ஆளுநரைக் கைது செய்து நாட்டை விட்டுத் துரத்தினான். எனினும் டெஹீட்டியர்களுக்கும் பிரெஞ்சுக்களுக்கும் இடையில் 1847 ஆம் ஆண்டு வரையில் போர் நீடித்தது. இத்தீவு ஜூன் 29, 1880 வரையில் ஒரு பிரெஞ்சுக் காப்பாட்சியாக இருந்து ஜூன் 29 இல் ஐந்தாம் பொமரே மன்னன் நாட்டின் இறைமையை விட்டுக் கொடுத்து பிரான்சிடம் முழுமையாக ஒப்படைத்தான். 1946 முதல் டெஹீட்டி உட்பட முழு பிரெஞ்சு பொலினீசியாவும் பிரெஞ்சு கடல்கடந்த பிராந்தியமாக ஆக்கப்பட்டன. டெஹீட்டியர்கள் அனைவருக்கும் பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கப்பட்டது.2003, பிரெஞ்சு பொலினீசியா பிரெஞ்சு கடல்கடந்த சமூகம் என்ற நிலைக்கு மாற்றப்பட்டது.

மைக்குரோனீசியா தீவுகள்.

Picture
மைக்குரோனீசியா தீவுகள். மைக்குரொனேசியா என்பது சிறிய தீவுகள் எனப் பொருள்படும். இவை மரியானாஸ், குவாம், வேக் தீவு, பலாவு, மார்சல் தீவுகள், கிரிபட்டி, நவூரு, மற்றும் மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் என்பனவாகும். இவற்றின் பெரும்பாலானவை நிலநடுக் கோட்டின் வடக்கே காணப்படுகின்றன. மைக்குரோனீசியா (Micronesia, [ˌmaɪkroʊˈniʒə] (உதவி·விவரம்), என்பது ஓசியானியாவின் ஒரு பிரிவாகும். இது பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளை உள்ளடக்கியது. இதன் வடமேற்கே பிலிப்பீன்ஸ், மேற்கு மற்றும் தெற்கே இந்தோனீசியா, பப்புவா நியூ கினி, மெலனீசியா, கிழக்கே பொலினீசியா ஆகியனவும் அமைந்துள்ளன. மைக்குரோனீசியா என்னும் சொல் கிரேக்க மொழியில் μικρός (சிறிய), νῆσος (தீவு), அதாவது சிறிய தீவுகள் என்று பொருள். மைக்குரோனீசியா என்ற சொல் இப்பிரதேசத்திற்கு முதன் முதலில் 1831 ஆம் ஆண்டில் தரப்பட்டது. மேற்கு பசிபிக் பகுதியில் பரந்துள்ள நூற்றுக்கணக்கான சிறிய தீவுகளை இப்பிரதேசம் கொண்டுள்ளது. மைக்குரோனீசியாவில் தோன்றிய ஒரேயொரு இராச்சியம் யாப் என்ற தீவை மையமாகக் கொண்டிருந்தது. அரசியல் அமைப்புப் படி மைக்குரோனீசியா முக்கியமாக எட்டு நாடுகள் மற்றும் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன: பெரும்பாலான தீவுகள் ஐரோப்பியரின் ஆளுமைக்கு ஆரம்பத்திலேயே உட்பட்டிருந்தன. குவாம், வடக்கு மரியானாக்கள், கரொலைன் தீவுகள் (பின்னர் FSM, பலாவு) ஆகியன ஸ்பானியரின் காலனித்துவ தீவுகளாக ஆரம்பத்தில் இருந்தன. இவை 17ம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் 1898 வரை ஸ்பானிய கிழக்கிந்தியாவின் பகுதியாக இருந்து ஸ்பானியரின் பிலிப்பீன்சின் நிர்வாகத்தில் இருந்தன. முழுமையான ஐரோப்பிய ஆளுகை 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது. அப்போது இது பின்வரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன: ஐக்கிய அமெரிக்கா: 1898 இல் ஸ்பானிய அமெரிக்கப் போரை அடுத்து ஐக்கிய அமெரிக்கா குவாமைக் கைப்பற்றி, வேக் தீவில் குடியேற்றத்தை ஆரம்பித்தது. ஜெர்மனி: நவூருவை தனது ஆளுமைக்கு உட்படுத்தியது. பின்னர் மார்சல், வடக்கு மரியானா, கரொலைன் ஆகியவற்றை ஸ்பெயினிடமிருந்து கொள்வனவு செய்தது. பிரித்தானியா: கில்பேர்ட் தீவுகள் (கிரிபட்டி)யைத் தனது ஆளுகைக்குட்படுத்தியது. முதலாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் பசிபிக் தீவுப் பகுதி பறிக்கப்பட்டது. நவூரு அவுஸ்திரேலியாவுக்குத் தரப்பட்டதூ. ஏனையவை ஜப்பானுக்கு தரப்பட்டது. இரண்டாம் உலகப் போரை அடுத்து ஜப்பானியரின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகள் ஐக்கிய நாடுகளின் பொறுப்பில் ஐக்கிய அமெரிக்கா தனதாக்கிக் கொண்டது. இன்று, குவாம், வேக் தீவு, வடக்கு மரியானா தீவுகள் என்பவை தவிர்த்து அனைத்து தீவுகளும் விடுதலை அடைந்த த்ஹனி நாடுகளாக உள்ளன. இங்குள்ள மக்கள் மைக்குரோனீசியக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகின்றனர். இது மெலனீசியர்கள், பிலிப்பீனியர்கள், மற்றும் பொலினீசியர்களின் கலாச்சாரங்களின் கலப்பாகும். இக்கலப்பினால் இங்கு வாழும் மக்கள் தம்மை மெலனீசியா, பொலினீசியா மற்றும் பிலிப்பீன்ஸ் இனத்தவர்களுடன் ஒத்தவர்களாகத் தம்மைக் கருதுகின்றனர். இங்குள்ள யாப் இனத்தவர்கள் வடக்கு பிலிப்பீன்சின் ஆஸ்திரனீசிய பழங்குடிகள் ஆவர். பல்வேறு மைக்குரோனீசிய பழங்குடிகளின் தாய்மொழி ஆஸ்திரனீசிய மொழிக் குடும்பத்தின் ஓசியானிய உபகுழுவைச் சேர்ந்தனவாகும். ஆனாலும், இதற்கு விதிவிலக்காக மேற்கு மைக்குரோனீசியாவின் பின்வரும் இரண்டு மொழிகள் மேற்கு மலாய பொலினீசிய உபகுழுவைச் சேர்ந்தவை: சமாரோ, டனபாக் மற்றும் கரொலீனியம் (இவை மரியானா தீவுகளில் வழக்கிலுள்ளன. பலாவு மொழி. இந்த மேற்கு மலாய பொலினீசிய உபகுழு இன்று பிலிப்பீன்ஸ், மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளிலும் வழக்கிலுள்ளன. பைசு தீவு (Fais Island) மைக்குரோனீசியக் கூட்டு நாடுகளின் ஒரு பகுதியாகிய யாப் மாநிலத்தின் வெளிப்புறத் தீவுகளில் ஒன்று. இது உலகின் மிக ஆழமான கடற் பகுதியாகிய சலஞ்சர் ஆழம் என்னும் இடத்திற்கு ஆகக் கிட்டிய தொலைவில் உள்ள நிலப்பகுதியாகும். பிரெஞ்சுக் கடற்படைத் தலைவரான லூயி டிரொமெலின் (Louis Tromelin) என்பவரே இத்தீவைக் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது. 1828-29 காலப்பகுதியில் பசிபிக் பெருங்கடல் ஊடாகப் பயணம் செய்தபோது இதை அவர் கண்டுபிடித்தார். எனினும், 16 ஆம் நூற்றாண்டிலேயே பிரான்சிசு டி காசுட்ரோ என்பவர் பிலிப்பைன்சு நாட்டுக்குச் செல்லும்போது கடுங் காற்றினால் இப்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. குவாம் (Guam, சமோரோ மொழி:சமோரோ: Guåhan), என்பது மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு. இது ஐக்கிய அமெரிக்காவின் உள்முகப்படுத்தப்படாத ஆட்சிக்குட்பட்ட ஐந்து பிரதேசங்களில் ஒன்றாகும்.இத்தீவின் தலைநகர் ஹகாட்னா. குவாம் மரியானா தீவுகளில் அமைந்துள்ள தீவுகளில் மிகவும் பெரியது. இத்தீவின் ஆதிகுடிகளானா சமோரோக்கள் 6,000 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு குடியேறினர்.[மேற்கோள் தேவை]1668 இல் ஸ்பானிய மிஷனறி பாட்ரே சான் விட்டோரெஸ் என்பவரே இங்கு காலடி வைத்த மூதலாவது ஐரோப்பியர் ஆவார். 1898 இல் இத்தீவு ஸ்பானியர்களிடம் இருந்து ஐக்கிய அமெரிக்காவுக்குக் கைமாறியது. மைக்குரொனேசியாவில் உள்ள மிகப் பெரும் தீவான குவாமை இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் டிசம்பர் 1941 முதல் ஜூலை 1944 வரையில் பிடித்து வைத்திருந்தது. இன்று, இத்தீவின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாத்துறையிலும் அமெரிக்க இராணுவாத்தளங்காளிலுமே தங்கியுள்ளது.ஐக்கிய நாடுகள் சபை குவாமை சுயாட்சியற்ற ஆட்சிப்பிரதேசமாகவே பட்டியலிட்டுள்ளது. மரியானா தீவுகள் (Mariana Islands) அல்லது மரியானாஸ் என்பது பசிபிக் பெருங்கடலின் வட-மேற்கே அமைந்துள்ள 15 எரிமலைத் தீவுகளின் கூட்டம் ஆகும். ஸ்பானியர்கள் இங்கு குடியேறிய காலத்தில் ஸ்பானிய அரசியான மரியானா என்பவளின் நினைவாக 17ம் நூற்றாண்டில் இத்தீவுகளுக்கு மரியானா தீவுகள் எனப் பெயரிடப்பட்டது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் இத்தீவுகள் சில வேளைகளில் லாட்ரோனஸ் தீவுகள் (Ladrones Islands, "திருடர்களின் தீவுகள்") என அழைக்கப்பட்டு வந்தது. மரியானா தீவுகள் குவாமில் இருந்து 2,519 கிமீ தூரம் ஜப்பான் வரை பரந்திருந்த கடலில் மூழ்கிய ஒரு மலைத்தொடரின் தெற்குப் பகுதியாகும். இத்தீவுகள் மைக்குரோனீசியா தீவுக்கூட்டங்களின் குடும்பத்தில் ஒரு பகுதியாகும். இவற்றின் மொத்த நிலப்பரப்பு 389 சதுர மைல்கள் (1007 கிமீ²). இவை இரண்டு நிர்வாக அலகுகளைக் கொண்டுள்ளன: குவாம் - இது ஐக்கிய அமெரிக்காவின் பகுதி. வடக்கு மரியானா தீவுகள் - இவை ஐக்கிய அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஓரளவு தன்னாட்சியுடைய (பொதுநலவாய) அலகு. இவற்றில் சாய்ப்பான், தினியான்ரோட்டா ஆகிய தீவுகளும் அடங்கும். இத்தீவுக் கூட்டத்தைக் கண்ட முதலாவது ஐரோப்பியர் பேர்டினண்ட் மகலன். இவர் உலகைச் சுற்றிவரும் தனது முயற்சியின் போது 1521 மார்ச் 6 ஆம் நாள் தெற்கில் இருந்த இரண்டு தீவுகளைக் கண்டு அதனூடே சென்றார்.அவர் முதன் முதலில் குவாமின் உமாட்டாக் தீவில் தரையிறங்கினார். 1667 ஆம் ஆண்டில் ஸ்பெயின் தனது வழமையான குடியேற்றத்தை ஆரம்பித்து அதற்கு மரியானா தீவுகள் என அதிகாரபூர்வமாகப் பெயரிட்டது. அப்போது அங்கு கிட்டத்தட்ட 40,000 முதல் 60,000 வரையான சமோரோ மக்கள் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் வந்தேறு குடிகளான ஸ்பானியர்களிடம் இருந்து பெற்ற தொற்று நோய்களினால் இறந்தனர். மார்சல் தீவுகள் (Marshall Islands) அல்லது அதிகாரபட்சமாக மார்சல் தீவுகள் குடியரசு மைக்ரோனீசியாவைச் சேர்ந்த மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இத்தீவுகள் நௌருவுக்கும் கிரிபாட்டிக்கும் வடக்கிலும் மைக்ரோனீசிய கூட்டாட்சி நாடுகளுக்கு கிழக்கிலும் ஐக்கிய அமெரிக்க மண்டலமான வேக் தீவிலிருந்து தெற்கேயும் அமைந்துள்ளது. வேக் தீவுகளுக்கான ஆட்சியை மார்சல் தீவுகள் கோரிவருகிறது. வடக்கு மரியானா தீவுகள் (Northern Mariana Islands, /ˈnɔrðərn mɛəriˈænə ˈaɪləndz/ (உதவி·விவரம்)), ஐக்கிய அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஆனால் ஓரளவு தன்னாட்சி உடைய தீவுகள் ஆகும். மேற்கு பசிபிக் பெருங்கடலில் இந்த தீவுகள் அமெரிக்காவுக்கு இராஜதந்திர முக்கியத்துவம் கொண்டவை. இந்த தீவுகளின் மொத்த பரப்பளவு 463.63 கிமீ². இங்கு கிட்டத்தட்ட 80,362 (2005 ஊகம்) மக்கள் வசிக்கின்றனர். 1521 ஆண்டு இந்த பகுதி ஸ்பானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இங்கிருந்த பழங்குடிகளுக்கும் இவர்களுக்கும் நடந்த சண்டையில் பழங்குடிகள் பலர் மாண்டனர். 1898 ஸ்பானிய அமெரிக்கா போருக்கு பின்னர் இதன் சில பகுதிகள் அமெரிக்காவுக்கும் எஞ்சிய பகுதிகள் யேர்மனிக்கும் சேர்ந்தது. 1919 யப்பான் இந்த தீவுகளைப் பெற்றுக்கொண்டது. 1945 பின்னர் யப்பானை தோற்கடித்த அமெரிக்கா இந்த தீவுகளைப் பெற்றுக்கொண்டது. மரியானா அகழி (Mariana Trench) என்பது, உலகின் கடற்பகுதிகளில் உள்ள மிகவும் ஆழமான இடம் ஆகும். புவிமேலோட்டில் உள்ள மிகத் தாழ்வான பகுதியும் இதுவே. இப்பகுதி மிகக்கூடிய அளவாக 10,924 மீட்டர்கள்[1] (35,840 அடிகள்; 6.78 மைல்கள்) ஆழம் கொண்ட இப்பகுதி, வடக்குப் பசிபிக் பெருங்கடலில் மரியானா தீவுகளுக்குத் தெற்கிலும், கிழக்கிலும் குவாமுக்கு அருகில் அமைந்துள்ளது. இசு-போனின்.மரியானா வளைவின் ஒரு பகுதியான இந்த அகழி, பசிபிக் புவிப்பொறைத் தட்டும், சிறிய மரியானா புவிப்பொறைத் தட்டும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த அகழியின் அடிப் பகுதியில், அதற்கு மேலுள்ள நீரினால் ஏற்படும் அழுத்தம் (அமுக்கம்) 108.6 மெகாபாசுக்கல் ஆகும். இது கடல் மட்டத்தில் உள்ள பொது வளிமண்டல அமுக்கத்திலும் 1000 மடங்குக்கும் மேலானது. இந்த ஆழத்தில் வாழக்கூடிய உயிரினங்கள் மிகக் குறைவே. சில வகை ஆழ்கடல் மீன்கள் இப்பகுதியில் இருப்பது தெரிய வந்துள்ளது. மரியானா அகழி முதன் முதலாக, 1872 டிசம்பர் முதல் 1876 மே வரையான சலஞ்சர் ஆய்வுப் பயணத்தின் போது அளக்கப்பட்டது. இதன் படி இவ்வகழியின் ஆழம் 31,614 அடிகளாகப் (9,636 மீட்டர்கள்) பதிவு செய்யப்பட்டது. பின்னர் சலஞ்சர் 2 ஆய்வுப் பயணத்தின்போது , திருத்தமான எதிரொலிமானியைப் பயன்படுத்தி மீண்டும் அளக்கப்பட்டது. அப்போது இதன் அதிகூடிய ஆழம் 5,950 பாதங்கள் (10,900 மீட்டர்கள், 35,760 அடிகள்) எனப் பதிவு செய்யப்பட்டது[2].  ஆள்கூற்றால் குறிக்கப்படும் இவ்விடம் சலஞ்சர் ஆழம் எனப்படுகின்றது. 1957 ஆம் ஆண்டில் வித்தியாசு (Vityaz) எனப்படும் சோவியத் கடற்கலம் இதன் ஆழம் 11,034 மீட்டர்கள் (36,200 அடிகள்) என அளவிட்டது.1962 ஆம் ஆண்டில் கடற்பரப்புக் கப்பலான எம். வி. இசுப்பென்சர் எப். பயார்ட், திருத்தமான அளவுமானிகளைப் பயன்படுத்தி இதன் ஆழத்தை 10,915 மீட்டர்கள் (35,840 அடிகள்) எனக் கணக்கிட்டது.1984 ஆம் ஆண்டில், இதற்கென உயர் சிறப்பாக்கம் பெற்ற தக்குயோ என்னும் அளவைக் கலம் ஒன்றை அனுப்பிய சப்பானியர், ஒருங்கிய பல்கதிர் எதிரொலிமானியைப் பயன்படுத்திச் சேகரித்த தரவுகளைப் பயன்படுத்தி இதன் ஆழத்தை 10,924 எனக் கணக்கிட்டதுடன் இதன் துல்லிய எல்லைகள் 10,920 ± 10 மீட்டர்கள் எனவும் அறிவித்தனர். இதுவரை எடுக்கப்பட்டவற்றுள் மிகத் திருத்தமானது எனக் கொள்ளத்தக்க அளவீடு 1995 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. சப்பானின் இந்த ஆய்வுத்திட்டத்தில் கைக்கோ என்னும் ஆளில்லாக் கலம் 1995, மார்ச் 24 ஆம் தேதி அகழியின் அடித்தளத்தில் இறங்கியது. இது அகழியின் ஆழத்தை 10,911 மீட்டர்கள் (35,798 அடிகள்) என அளவிட்டது. கைக்கோ (Kaikō) என்பது, ஆழ்கடலில் இயங்கக்கூடிய தொலை இயக்கு நீர்க்கீழ்க் கலம் ஆகும். இது ஜாம்ஸ்டெக் (JAMSTEC) என்னும் சப்பானிய நிறுவனம் ஒன்றால் அமைக்கப்பட்டது. இது உலகின் மிக ஆழமான கடற்பகுதியான மரியானா அகழியிலுள்ள சலஞ்சர் ஆழம் என்பதன் தளத்தில் இறங்கி அங்கிருந்து பக்டீரியா மாதிரிகளையும் எடுத்து வந்தது. 1996 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் நாள் 10,897 மீட்டர் ஆழத்தை எட்டிய இக் கலமே மிகக்கூடிய ஆழத்துக்கு நீர்மூழ்கிய ஆளில்லாக் கலம் என்ற பெருமையைப் பெற்றது. 2003 மே மாதத்தில் சான்-ஒம் சூறாவளியின்போது இதனை மேற்பரப்புடன் இணைத்த கம்பிவடம் அறுந்ததனால் கடலுள் அமிழ்ந்து காணாமற் போய்விட்டது.

ஆங்கிலக் கால்வாய்.

Picture
ஆங்கிலக் கால்வாய் ஆங்கிலக் கால்வாய் (English Channel) அட்லாண்டிக் பெருங்கடலில் பெரிய பிரித்தானியாத் தீவையும் வடக்கு பிரான்சையும் பிரிக்கும் ஒரு நீரிணை ஆகும். அத்துடன் இது வட கடலை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கிறது. இது கிட்டத்தட்ட 562 கிமீ நீளமும் 240 கிமீ அதிகூடிய அகலமும் கொண்டது. டோவர் நீரிணையில் இதன் அகலம் 34 கிமீ ஆகும்.[1] இக்கால்வாய் வழியே பல தீவுகள் அமைந்திருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை: ஆங்கிலக் கடற்பரப்பில் வைட் தீவு (Isle of Wight), பிரான்ஸ் கடற்பரப்பில் கால்வாய் தீவுகள் ஆகியன முக்கியமானவை. ஆங்கிலக் கால்வாயை பலர் கால்வாய் சுரங்கத்தினூடாகக் கடக்கின்றனர். இச்சுரங்கத்துக்கான திட்டம் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே அமைக்கப்பட்டாலும் இது 1994 இலேயே நிறைவானது. இது ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் தொடருந்துப் போக்குவரத்து மூலம் இணைக்கிறது. கால்வாய் சுரங்கம் (Channel Tunnel, அல்லது சணெல் (Chunnel), அல்லது யூரோ சுரங்கம் (Eurotunnel) என அழைக்கப்படும் ', 50.5 கிமீ (31.4 மைல்கள்) நீள கடலடிச் சுரங்க தொடருந்துப் போக்குவரத்து சாலை ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் இணைக்கிறது. இது ஆங்கிலக் கால்வாய் ஊடாக டோவர் நீரிணையில் இங்கிலாந்தின் கென்ட் கவுண்டியின் போல்ஸ்டோன் என்ற நகரில் இருந்து வட பிரான்சின் கோக்கெலெஸ் என்ற இடத்தை அடைகிறது. இச்சுரங்க வழி ஜப்பானின் செய்க்கான் சுரங்கத்திற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது நீளமான சுரங்க வழியாகும். சானெல் தீவுகள் (Channel Islands, நோர்மன்: Îles d'la Manche, பிரெஞ்சு: Îles Anglo-Normandes அல்லது Îles de la Manche) என்பது ஆங்கிலக் கால்வாயில் நோர்மண்டியின் பிரெஞ்சுக் கரையில் அமைந்துள்ள ஒரு தீவுக்குழுமம் ஆகும். இத்தீவுகள் பிரித்தானிய முடியாட்சியின் கீழ் உள்ளது, ஆனாலும் இவை ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதி அல்ல. சானெல் தீவுகள் கேர்ன்சி மற்றும் ஜேர்சி என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மக்கள் தொகை 160,000 ஆகும். கேர்ன்சியின் தலைநகர் சென் பீட்டர் போர்ட் (மக்கள் தொகை: 16,488), ஜேர்சியின் தலைநகர் சென் ஹெலியர் (மக்கள் தொகை: 28,310). சானெல் தீவுகளில் கேர்ன்சி பகுதியில் அமைந்துள்ள முக்கிய தீவுகள் கேர்ன்சி, ஆல்டேர்னி, சார்க், ஹேர்ம் ஆகியனவாகும். இவற்றை விட ஜெத்தோ, பிரெக்கு, லீஹூ ஆகிய சிறிய தீவுகளும் உள்ளன. கிங்மன் பாறை (Kingman Reef)(ஒலிப்பு:/ˈkɪŋmən/) பெரும்பாலும் அமிழ்ந்துள்ள வாழ்வோரில்லா வெப்ப மண்டல பவளப்பாறையாகும். இது வடக்கு பசிபிக் பெருங்கடலில் ஹவாய் தீவுகளுக்கும் அமெரிக்க சமோவாவிற்கும் நடுப்பட்டப் பகுதியில்  அமைந்துள்ளது.இது லைன் தீவுகளின் வடக்குக் கடைசியில், அடுத்துள்ள பால்மைரா பவளத்தீவிற்கு வடக்கு-வடமேற்கில் 65 kilometres (40 mi) தொலைவில் உள்ளது.ஹொனலுலுவிற்கு தெற்கே 920 nautical miles (1,700 km) தொலைவில் உள்ளது. பவளப்பாறை 73அடி ஆழமுள்ள காயலை(lagoon)சுற்றியுள்ளது.சில நேரங்களில் அதன் கடற்கரை 3 கிமீ வரை நீளமடையும்.பவளப்பாறையின் வெளிப்புற எல்லைக்குள் அடைபட்டுள்ள பரப்பு 76 ச.கிமீ ஆகும்.கிழக்குப் பகுதியில் ஓர் சிறிய ஈரமில்லாப்பகுதி,0.01 சகிமீ பரப்புடன் உள்ளது.கடற்மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் அளவே உயரமுள்ள இப்பாறைகள் எப்போதுமே நீரினால் நனைக்கப்பட்டு வரும்.இங்கு இயற்கை கனிமங்களோ,வாழ்வினங்களோ மற்றும் எந்த பொருளியல் செயல்பாடுகளோ இல்லை. கிரகட்டோவா (Krakatoa, இந்தோனீசீயம்: Krakatau) என்பது ஓர் எரிமலைத் தீவாகும். இது ஜாவாவுக்கும் சுமாத்திராவுக்கும் இடையில் உள்ள சுந்தா நீரிணையில் அமைந்திருக்கிறது. தீவுக் கூட்டத்துக்கும், அதன் முக்கிய தீவுக்கும் அதன் எரிமலைக்கும் கிரக்கடோவா என்ற பெயரே வழங்கி வருகிறது. இது வரலாற்று ரீதியாக பல முறை வெடித்திருப்பதாகப் பதியப்பட்டுள்ளது. இதன் பெரும் வெடிப்பு 1883 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 26 - 27 இல் இடம்பெற்றது. இதுவே அண்மைக் காலத்தில் இடம்பெற்ற பெரும் எரிமலைக் குமுறல்களில் பெரும் அழிவைத் தந்தது எனக் கருதப்படுகிறது. இதன் தாக்கம் 200 மெகாதொன் டி.என்.டி அளவுக்கும், ஹிரோஷிமாவில் வீசப்பட்ட சின்னப் பையன் என்ற அணுகுண்டின் தாக்கத்தின் 13,000 மடங்கு அதிகமானது எனவும் கருதப்படுகிறது, . 1883 குமுறலில் 25 கன கிலோமீட்டர் அளவு பாறைகள், தூசு, மாக்கல் (pumice) என்பன வீசப்பட்டன.இக்குமுறலின் ஒலி 3,110 கிமீ தூரத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரம் வரையும், மற்றும் 5,000 கிமீ தூரத்தில் மொரீசியஸ் வரையும் கேட்டது. மொத்தம் 165 கிராமங்களும் நகரங்கள் அழிந்தன. குறைந்தது 36.417 பேர் கொல்லப்பட்டனர். இக்குமுறலை அடுத்து சுனாமி அலைகளும் கிளம்பி பலத்த சேதத்தை உண்டு பண்ணியது. கிரக்கடோவா தீவின் மூன்றில் இரண்டு பகுதிகள் இந்த எரிமலைக் குமுறலினால் அழிந்தன. 1927ம் ஆண்டு எரிமலைக் குமுறல்களை அடுத்து இங்கு அனாக் கிரக்கடோவா என்ற புதிய தீவு உருவானது. இது கிட்டத்தட்ட 2 கிமீ ஆரையும் கடல் மட்டத்தில் இருந்து 200 மீட்டர் உயரமும் கொண்டுள்ளது. சில்லி தீவுகள் (Isles of Scilly) பெரிய பிரித்தானியாவில் தென்மேற்கில் அமைந்துள்ள ஒரு தீவுக் குழுமம் ஆகும். இங்கிலாந்தின் கோர்ன்வால் கவுண்டியின் நேரடி ஆட்சியில் இத்தீவுகள் இருந்து வந்தன. தற்போது இவை தமக்கென ஒரு ஆலோசனைக் குழுவை (council) அமைத்துள்ளன. இத்தீவுகளில் வாழும் மக்கள் சில்லியர்கள் என அழைக்கப்படுகின்றனர். சில்லி தீவுகள் இங்கிலாந்தின் மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ளன. இவற்றில் மொத்தம் ஆறு தீவுகளும் 140 சிறிய தீவுப் பாறைகளும் 45 கிமீ (28 மைல்கள்) தூரத்தில் உள்ளன. ஜான்ஸ்டன் பவளத்தீவு (Johnston Atoll) வடக்கு பசிபிக் பெருங்கடலில் ஹவாய் தீவுகளிலிருந்து ஏறத்தாழ 1400 கிமீ(750 கடல்வழி மைல்கள்)தொலைவில் 50-square-mile (130 km2)பரப்பு கொண்ட பவளப்பாறையாகும்.இந்த பவளப்பாறை திட்டை மையப்படுத்தி நான்கு தீவுகள் அமைந்துள்ளன;இவற்றில் இரண்டு இயற்கையான ஜான்ஸ்டன் தீவு மற்றும் மணல் தீவு,பவளப்பாறை அகழ்தல் மூலம் விரிவாக்கப்பட்டிருக்கின்றன.வடக்கு தீவு (அகௌ)மற்றும் மிழக்குத் தீவு(இகினா) இரண்டும் முற்றிலும் பவளப்பாறை அகழ்வினால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஜான்ஸ்டன் ஐக்கிய அமெரிக்காவின் ஆளுமைக்குட்பட்ட ஆட்சிப்பகுதியாகும்.1958-1975 காலப்பிரிவில் இங்கு பல அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டன.பின்னர் இங்கு அமெரிக்காவின் வேதியியல் ஆயுதங்கள் சேமிப்புக் கிடங்கு செயல்பட்டது.தற்போது அவை அழிக்கப்பட்டு இராணுவ பொறுப்பிலிருந்து உள்துறை பொறுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. மிட்வே பவளப்பாறை (அல்லது மிட்வே தீவு அல்லது மிட்வே தீவுகள், ஒலிப்பு:/ˈmɪdweɪ/; ஹவாய்: Pihemanu Kauihelani[1]) 2.4 ச.மை (6.2 ச.கிமீ) பரப்பளவு கொண்ட வடக்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பவளப்பாறைகளாகும். ஹவாய் தீவுக்கூட்டத்தின் வடமேற்கு எல்லையில் ஹொனலுலு விற்கும் டோக்யோவிற்கும் இடையே இவை உள்ளன. இது ஐக்கிய அமெரிக்காவின் ஆளுமைக்குட்பட்ட நிலப்பகுதியாகும். இது பன்னாட்டு நாள் கோட்டிலிருந்து கிழக்கே 140 nmi (வார்ப்புரு:Convert/km mi) தொலைவிலும், சான் பிரான்சிஸ்கோவிற்கு மேற்கே ஏறத்தாழ 2,800 nmi (வார்ப்புரு:Convert/km mi)தொலைவிலும்,டோக்யோவிற்கு கிழக்கே 2,200 nmi (வார்ப்புரு:Convert/km mi) தொலைவிலும் உள்ளது. இது மோதிரம் போன்ற பவளப்பாறை தடுப்புடன் பல தீவுத்திட்டுகளைக் கொண்டுள்ளது. இரண்டு குறிப்பிடத்தக்க தீவுகள்,மணல் தீவு மற்றும் கிழக்குத்தீவு, மில்லியன் கணக்கான கடற்பறவைகளுக்கு புகலிடமாக விளங்குகின்றன. தீவுகளின் அளவுகள் கீழே காண்பிக்கப்படுகிறது: இத்தீவுகள் வடக்கு அமெரிக்காவிற்கும் ஆசியாவிற்கும் ஏறத்தாழ நடுவிலும்,ஐக்கிய ராச்சியம்|இங்கிலாந்தின் கிரீன்விச்சிலிருந்து உலகின் சரிபாதிக்கு இருப்பதாலும் மிட்வே தீவுகள் என்பது காரணப்பெயராக அமைந்தது. மிட்வே தீவுகளில் உலகின் லேசன் அல்பட்ராஸ் பறவைகளில் 67-70% தொகையும் கருத்த அடிகள் கொண்ட அல்பட்ராஸ் பறவைகளில் 34-39% தொகையும் வாழுமிடமாக உள்ளது.[2] மூன்று மில்லியன் பறவைகளுக்கு புகலிடமாக விளங்கினாலும்,ஒவ்வொரு பறவையினமும் தமக்கென ோர் குறிப்பிட்ட இடத்தை பவளப்பாறையில் பேறுகாலத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளன.பதினேழு வகையான கடற்பறவைகளை இங்கு காண முடியும்.[3] நவாசா தீவு (ஆங்கிலம்: Navassa Island) (பிரெஞ்சு: La Navase) கரிபியன் கடலில் உள்ள ஓர் சிறிய ஆளில்லாத தீவாகும். இதனை ஐக்கிய அமெரிக்கா தனது மீன் மற்றும் வனத்துறை மூலம் ஆட்கொண்டுள்ளது. ஆயின் எயிட்டி இத்தீவை 1801இலிருந்து தனது பகுதியாக இருந்ததாக உரிமை கோருகிறது.[1]

இதர தீவுகள்.

Picture
போக்லாந்து தீவுகள் (Falkland Islands) தென் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவுக்குழுமம் ஆகும். ஆர்ஜென்டீனாவின் கரையிலிருந்து 300 மைல் (483 கிமீ) தொலைவிலும் தெற்கு யோர்சியாவின் சாங் பாறைகளிலிருந்து 671 மைல் (1,080 கிமீ) மேற்காகவும் பிரித்தானிய அண்டார்டிக் மண்டலத்திலிருந்து 584 மைல் (940 கிமீ) வடக்காகவும் அமைந்துள்ளது. போக்லாந்து தீவுகள் கிழக்கு போக்லாந்து தீவு, மற்றும் மேற்கு போக்லாந்து தீவு என்ற முக்கிய இரண்டு தீவுகளையும் 776 சிறிய தீவுகளையும் கொண்டுள்ளது[2]. கிழக்கு போக்லாந்து தீவில் அமைந்துள்ள சுடான்லி இதன் தலைநகராமாகும். இத்தீவுகள் சுயாட்சி அரசைக் கொண்ட ஐக்கிய இராச்சியத்தின் கடல்கடந்த மண்டலமாகும். இருப்பினும் ஆர்ஜென்டீனா இத்தீவுகளுக்கு 1833 முதல் உரிமைக் கோரி வருகின்றது. இந்த உரிமைக் கோரலுக்காக 1982 ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனா இத்தீவுகளை ஆக்கிரமித்தது. இதைத் தொடர்ந்து ஆர்ஜென்டீனாவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்குமிடையே இரண்டு மாதங்களாக அறிவிக்கப்படாத போக்லாந்து போர் இடம்பெற்றது. இப்போரில் ஆர்ஜென்டீனாவின் தோல்வியுடன் தனது படைகளை அது பின்வாங்கிக் கொண்டது. போர் முடிவடைந்தது முதல் மீன்பிடிக் கைத்தொழில், உல்லாசப்பிரயாணக் கைத்தொழில் என்பவற்றில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக பொருளாதாரம் முன்னேற்றம் கண்டு வருகிறது. 1983 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் இயற்றப்பட்ட சட்டத்தின் படி இத்தீவுகளின் குடிகள் பிரித்தானிய குடிமக்களாக கணிக்கப்படுகின்றனர், மேலும் ஆர்ஜென்டீன குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் தகுதியையும் கொண்டுள்ளனர். இத்தீவுகளின் குடிகள் பெரும்பான்மையாக 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கு குடியேறிய சுகொட்லாந்து நாட்டினரின் வம்சாவழியினராவார்கள். இத்தீவுகளின் குடிகள் ஆர்ஜென்டீனாவின் உரிமைக் கோரலை நிராகரிக்கின்றனர். மடகாஸ்கர் (இலங்கை வழக்கு:மடகஸ்கார்) என்பது ஆப்பிரிக்க கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு நாடு ஆகும். இந்நாட்டின் உத்தியோகபூர்வ பெயர் மடகாஸ்கர் குடியரசு (Republic of Madagascar). இத்தீவு உலகிலேயே நான்காவது மிகப்பெரிய தீவு ஆகும். மடகாஸ்கர் உயிரியற் பல்வகைமை கூடிய நாடாகும். உலகிலுள்ள தாவர மற்றும் விலங்கு வகைகளில் ஐந்து சதவீதமானவை இத்தீவிவில் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இத்தீவில் உள்ள விலங்குகளும் மரஞ்செடி கொடிகளும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றுள் சுமார் 80% உலகில் வேறு எங்கும் காண இயலாதன. குறிப்பாக பாவோபாப் மரங்களும், மனிதர்கள் உட்பட, கொரில்லா, சிம்ப்பன்சி, ஒராங்குட்டான் முதலியன சேர்ந்த முதனி எனப்படும் தலையாய உயிரினத்தைச் சேர்ந்த இலெமூர் என்னும் இனம் சிறப்பாக இங்கே காணப்படும். உலகில் உள்ள 5% உயிரின, நிலைத்திணை இன வகைகள் இங்கு இருக்கின்றன. இங்கே பேசப்படும் மொழி மலகாசி (mal-gazh) என்பதாகும். மடகாஸ்கரின் வரலாறு கி.பி. ஏழாவது நூற்றண்டில் எழுத்தில் தொடங்குகிறது. அரேபியர்கள் தான் முதல் முதலாக இங்கே தங்கள் வாணிபத்திற்காக ஓர் இடத்தைத் துவக்கினர். ஐரோப்பியர்களின் வருகை 1500ல் தொடங்குகிறது. இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த காப்டன் டியேகோ என்னும் போர்துகீசிய மாலுமி தன்னுடைய கப்பலில் இருந்து பிரிய நேர்ந்த பொழுது இந்தத் தீவைக் கண்டான். 17 ஆம் நூறாண்டில் பிரெஞ்சுக்காரர்களும் பின்னர் பலரும் வாணிபத்திற்காக இங்கே தங்க நேர்ந்தது. மொன்செராட் (Montserrat) கரிபிய கடலில் அமைந்துள்ள சிறிய அண்டிலிசு தீவுச் சங்கிலியின் ஒரு பாகமான காற்றெதிர் தீவுகளில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த மண்டலமாகும். இத்தீவு 11 கிமீ (7 மைல்) அகலத்தையும் 16 கிமீ (10 மைல்) நீளத்தையும் கொண்டுள்ளதோடு இங்கு 40 kilometres (25 mi) நீளமான கடற்கரையும் காணப்படுகிறது.[1] 1493 ஆம் ஆண்டு புது உலகு நோக்கிய தனது இரண்டாம் பயணத்தின் போது கிரிஸ்டோபர் கொலம்பஸ் இத்தீவுகளுக்கு சுபெயினிலுள்ள மொன்செராட் மலையின் பெயரை இத்தீவுக்கு இட்டார். அயர்லாந்துக் கடற்கரைப்பகுதிகளை ஒத்திருப்பதாலும், ஐரியர்கள் இங்கே வந்து குடியேரியமையாலும் மொன்செராட் பரவலாக கரிபியத்தின் பைம்மணி என அழைக்கப்படுவதுண்டு. ஜூலை 18, 1995 இல் முன்னதாக உறங்கு எரிமலையான சௌபியரே எரிமலை வெடித்துச் சிதறியதன் காரணமாக ‎மொன்செராட்டின் தலைநகரம் பிளை மௌத் அழிக்கப்பட்ட்துடன் மண்டலத்தின் மக்கற்தொகையின் மூன்றில் இரண்டுப்பகுதியினர் தீவை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது.[2] ஒப்பளவில் குறைந்த அளவுள்ள வெடிப்புகள் இன்னமும் தொடர்ந்த வண்ணமுள்ளன. சேதங்கள் பிளைமௌத்த்துக்க் அண்மிய பகுதிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. எரிமலையின் குவிமாடத்தின் அளவி பெரிதாகி உள்ளபடியால் விலக்கப்பட்ட வட்டாரமொன்று தீவின் தென்பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு புதிய விமான நிலையமொன்று தீவின் வட பகுதியில் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது. ரீயுனியன் (Reunion) என்பது இந்தியப் பெருங்கடலில் அமைந்த ஒரு தீவாகும். இத்தீவு பிரான்ஸ் நாட்டவரால் ஆட்சி செய்யப்படுகின்றது. இங்கு குறிப்பிடத்தக்க தமிழர் வம்சாவழிகள் வாழ்கின்றார்கள். கோசோ தீவு (Gozo), மத்தியதரைக் கடலில் உள்ள, மோல்ட்டாத் தீவுக் கூட்டங்களைச் சேர்ந்த ஒரு தீவு ஆகும். தென் ஐரோப்பிய நாடான மால்ட்டாவின் ஒரு பகுதியான இத் தீவு, மால்ட்டாத் தீவுக்கு அடுத்தபடியாக இந் நாட்டின் இரண்டாவது பெரிய தீவு ஆகும். மால்ட்டாத் தீவுடன் ஒப்பிடும்போது கோசோ நாட்டுப்புறப் பகுதியாகும். இது அழகான காட்சிகளைக் கொண்ட மலைகளுக்குப் பெயர் பெற்றது. கிரேக்க இலக்கியமான ஹோமரின் ஒடிசியில் வரும் கதை மாந்தர்களில் ஒருவனின் பெயரைத் தழுவி இத் தீவு கலிப்சோத் தீவு எனவும் அழைக்கப்படுவது உண்டு. மோல்டா நாட்டின் மொத்த மக்கள்தொகையான 402,000 இல் கோசோ 31,000 மக்களைக் கொண்டுள்ளது. இதன் மக்கள் கோசித்தான்கள் எனப்படுகின்றனர். இத்தீவில் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள் உள்ளன. கண்டிஜாக் கோயில்கள் இவற்றுள் சிறப்புப் பெற்றவை. உலகின் மிகப் பழைமையான தனித்து நிற்கும் அமைப்புக்களாகவும், மிகப் பழைய சமயம் சார்ந்த கட்டிடங்களாகவும் இக் கோயில்கள் விளங்குகின்றன. கோசோவில் கிமு 5000 ஆண்டுகளிலிருந்தே மக்கள் குடியிருந்தனர். சிசிலியில் இருந்து கடல் கடந்து வந்த வேளாண்மைச் சமுதாயத்தினரே இங்கு முதலில் குடியேறியவராவர். இவர்கள் சிசிலியின் சிசானி இனக்குழுவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கார் தலாம் (Għar Dalam) காலப்பகுதியைச் சேர்ந்த மட்பாண்ட ஓடுகள் இரு இடங்களிலும் கிடைத்துள்ளதை வைத்து, கோசோவில் முதலில் குடியேறியவர்கள் சிசிலியின் அக்ரிஜெண்டோ (Agrigento) பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் இது குறித்துத் தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. சிசிலி மால்ட்டாத்தீவிலும், கோசோவுக்கே அண்மையில் இருப்பதால் குடியேறியோர் மால்ட்டாவுக்குச் செல்வதற்கு முன்னர் கோசோவிலேயே குடியேறினர். அவர்கள் இன்று சென் லாரன்ஸ் என அழைக்கப்படும் இடத்தில் புறப் பகுதிகளில் உள்ள மலைக் குகைகளில் வாழ்ந்திருக்கலாம் எனப்படுகின்றது. கோசோ பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சியில் ஒரு முக்கியமான இடமாகும். கட்டிடக் கலை வளர்ச்சியில் முக்கியமான படிநிலை ஒன்றைக் குறிக்கும் கண்டிஜாக் கோயில்கள் இங்கே அமைந்துள்ளன. இவை எகிப்தியப் பிரமிட்டுகளுக்கும், இங்கிலாந்தின் ஸ்டோன் ஹெஞ்சுகளுக்கும் முந்தியவை. கோசோவில் உள்ள இன்னொரு புதியகற்காலக் களம், சாக்ரா கல் வட்டம் (Xagħra Stone Circle) ஆகும். 1551 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஓட்டோமான்களும், பார்பேரியக் கடற் கொள்ளையரும் துர்குத் ரெயிஸ், சினான் பாஷா ஆகியோர் தலைமையில் கோசோவைத் தாக்கிப் 5000 அளவிலான பெரும்பாலான கோசோ மக்களை அடிமைகளாகப் பிடித்துச் சென்றனர். பின்னர் மால்ட்டாவின் பிரபுக்களினால், 1565க்கும், 1580க்கும் இடையில் மால்ட்டாத் தீவில் இருந்து கொண்டு செல்லப்பட்டோரால் குடியேற்றப்பட்டது. நெப்போலியனால் தன்னாட்சி வழங்கப்பட்ட 1798 அக்டோபர் 28 தொடக்கம், 1800 செப்டெம்பர் 5 வரையான காலப்பகுதி தவிர, கோசோ மால்ட்டாவின் ஆளுகைக்குக் கீழ் உள்ளதால் கோசோவின் அண்மைக்கால வரலாறு மால்ட்டாவில் வரலாற்றுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. டிரினிடாட் (ஆங்: Trinidad) என்பது திரினிடாட் டொபாகோ என்னும் நாட்டைச் சேர்ந்த 23 தீவுகளில் மிகப்பெரியதும் மக்கள்தொகை மிகுந்ததுமான தீவு. டிரினிடாட், கரிபியன் பகுதியின் தென்கோடியில் உள்ளது. வெனிசுவேலாவின் வடகிழக்குக் கரையில் இருந்து 11 கிமீ தொலைவில் உள்ளது. இத்தீவின் பரப்பளவு 4,769 ச.கி.மீ. ஆகும். நவூரு (Nauru), தெற்கு பசிபிக்கில் அமைந்துள்ள மைக்குரோனேசியத் தீவு நாடாகும். இதன் மிகக்கிட்டவான தீவு கிரிபட்டியில் 300 கிலோமீட்டர் கிழக்கே உள்ள பனாபா தீவாகும். உலகின் மிகச்சிறிய தீவு நாடு இதுவாகும். இதன் மொத்தப் பரப்பளவு 21 கிமீ² ஆகும். அத்துடன் உலகிலேயே அதிகாரபூர்வமாக தலைநகரம் எதுவும் இல்லாத ஒரு குடியரசு நாடு இதுவாகும்[1]. அயர்லாந்து ஐரோப்பா கண்டத்தின் மேற்குப்பகுதியில் உள்ள ஒரு தீவு ஆகும். இதன் மேற்குப் பகுதியில அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. இது ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய தீவும் உலகின் இருபதாவது பெரிய தீவும் ஆகும். அயர்லாந்து தீவு இரண்டு வெவேறு ஆட்சிகளை உடைய பிரிவுகளைக் கொண்டுள்ளது: அயர்லாந்து குடியரசு (அயர்லாந்து இதன் சட்டப் பெயர்[1]), விடுதலை பெற்ற ஒரு தனி நாடு. இதன் தலைநகர் டப்ளின். வட அயர்லாந்து, இது ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பிரிவு. இதன் தலைநகர் பெல்பாஸ்ட். கிறீன்லாந்து (தமிழக வழக்கு:கிரீன்லாந்து) தன்னாட்சியுள்ள டென்மார்க்கின் ஆட்சிப்பகுதி. ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கிடையில் அமைந்துள்ள தீவு. புவியியல் நோக்கில் வட அமெரிக்காவுடன் தொடர்புடைய ஓர் ஆர்ட்டிக் தீவானபோதும் வரலாற்று நோக்கிலும் அரசியல் நோக்கிலும் ஐரோப்பாவுடன் தொடர்புடையதாக உள்ளது. உலகில் ஒரு கண்டமாகக் கருதப்படாத மிகப் பெரிய தீவு இதுவாகும். இத்தீவின் பரப்பளவு 2,166,086 கிலோமீட்டர்2 (km²) இது உலகிலேயே 13 ஆவது இடத்தில் உள்ள பெரிய நிலப்பரப்பு ஆகும். ஆனால் இப்பெரு நிலத்தில் மொத்தம் 57,100 பேரே வாழ்கின்றனர். உலக மக்கள் தொகை வரிசையில் இது 214 வது இடம் பெறுகின்றது. அசென்சன் தீவு தெற்கு அட்லாண்டிக் கடலில் ஆபிரிக்காவின் மேற்க்குக் கரையிலிருந்து சுமார் 1000 மைல் (1600 கி.மீ.) தொலைவில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இது பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப்பகுதியான செயிண்ட் எலனாவில் தங்கி்யுள்ள பகுதியாகும். இது செயிண்ட். எலனாவில் இருந்து வடமேற்குத் திசையில் 800 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இத்தீவு இயேசு கிறிஸ்துவின் விண்ணேற்ப்பு (Ascension) திருவிழா நாளில் கண்டுபிடிக்கப்பட்டதனால் இத்தீவிற்கு இப்பெயர் வழங்கிற்று. இத்தீவில் அமெரிக்க பிரித்தானிய வான்படைகளின் கூட்டுத்தளமான வைடவேக் வான்படைத்தளம் அமைந்துள்ளது. போக்லாந்து போரின் போது பிரித்தானிய இராணுவத்தால் இத்தீவு பெருவாரியாக பயன்படுத்தப்பட்டது. உலக அமைவிட முறைமைக்கான (GPS) மூன்று நில அண்டனாக்களில் ஒன்று இங்கு அமைந்துள்ளது. அசெசன் தீவு தனக்கான ஒரு சின்னத்தையோ கொடியையோ கொண்டிருக்கவில்லை, இங்கு பிரித்தானிய கொடியும் சின்னமும் பயன்படுத்தப்படுகிறது. அங்கியுலா அல்லது அங்கில்லா கரிபியக் கடலில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் கடல்கடந்தப் பகுதியாகும். இது காற்றுமுகத்தீவுகளில் மிகவும் வடக்காக அமைந்த தீவாகும். இது சுமார் 26 கி.மீ. (16 மைல்) நீளமும் அதன் மிக அகலமான் இடத்தில் 5 கி.மீ. (3 மைல்) அகலமும் கொண்ட அங்கியுலா என்ற முக்கிய தீவையும் மக்கள் குடியிருப்புகளற்ற பல சிறிய தீவுகளையும் கொண்டுள்ளது. தலைந்கரம் த வெளியாகும். இவ்வாட்சிப்பகுதியின் பரப்பளவு 102 சதுரகிலோமீட்டராகும், மொத்த மக்கள்தொகை 2006 ஆம் ஆண்டில் 13,500 ஆகும். கேமன் தீவுகள் கரிபியக் கடலில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதியாகும். இதில் கிராண்ட் கேமன், கேமன் பிரக், லிட்டில் கேமன் என்ற மூன்றுத் தீவுகள் அமைந்துள்ளன. இங்கு கடல்கடந்த நிறுவனங்களுக்காக வரிவிலக்கு அளிக்கப்படுவதால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகமாக உள்ளது. ஆழ் நீச்சல் சுற்றுலாவிற்கு பிரசித்தமான இடமாகும். கிப்ரல்டார்ஐபீரிய குடாநாட்டின் முனையில் கிப்ரல்டார் நீரிணையில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த மண்டலம் ஆகும். இம்ண்டலத்தின் வட எல்லையில் சுபெயின் அமைந்துள்ளது. கிப்ரல்டார் பிரித்தானிய இராணுவத்தின் முக்கியத் தளமாக விளங்கி வந்துள்ளது தற்போது பிரித்தானிய கடற்படையின் தளமொன்று இங்கே அமைந்துள்ளது. இம்மண்டலத்தின் பெயர் டரிக் மலை எனப் பொருள்படும் அரபு மொழிப் பதமான ஜபல் டாரிக் (جبل طارق) அல்லது டரிக் பாறை சிபால் டரிக் என்பதலிருந்து தோன்றியிருக்கலாம்.இம்மண்டலத்தின் ஆட்சியுரிமைத் தொடர்பாக சுபெயினுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும்மிடையே கருத்து வேறுபாடு நிகழ்கிறது.1713 ஆண்டின் உட்டிரிச் உடன்படிக்கையின் படி சுபெயின் இம்மண்டலத்தின் ஆட்சியைக் கோருகிறது எனினும் இம்மண்டலத்தின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் சுபெயினுக்கு ஆட்சி கைமாறுவதொயோ அல்லது சுபெயினுடனான இணை ஆட்சிக்கோ விரும்பவில்லை. தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலிள் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப்பகுதியாகும். இது தெற்கு யோர்சியா என்ப்படும் சுமார் 106.25 மைல் (170 கி.மீ.) நீளமும், 18 மைல் (29 கி.மீ.) அகலமும் கொண்ட ஒரு பெரிய தீவையும் தெற்கு சண்ட்விச் தீவுகள் எனப்படும் அளவில் சிறிய தீவுக் கூட்டங்களையும் கொண்டது. இவ்வாட்சிப் பகுதியில் பாரம்பரியக் குடிகள் யாரும் கிடையாது, பிரித்தானிய அரச அலுவலர், பதில் தாபல் அதிகாரி, வேதியலாளர்கள், மற்றும் பிரித்தானிய அண்டார்டிக்கா ஆய்வு நிறுவணத்தின் துணை சேவையாளர்கள் மாத்திரமே இங்கு வசிக்கின்றனர். ஐக்கிய இராச்சியம் தெற்கு யோர்சியாவுக்கு 1775 முதல் முடியுரிமையக் கொண்டுள்ளதோடு, தெற்கு சண்ட்விச் தீவுகள் 1985 ஆம் ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்டதாகும். 1985 இற்கு முன்னர் தெற்கு சண்ட்விச் தீவுகள் பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப்பகுதியான போக்லாந்து தீவுகளின் சார்புப் பகுதியாக ஆட்சி செய்யப்பட்டு வந்தது. ஆர்ஜென்டீனா 1927 ஆம் ஆண்டு தெற்கு யோர்சியாவுக்கும் 1938 ஆம் ஆண்டு தெற்கு சண்ட்விச் தீவுகளுக்கும் உரிமை கோரியது. 1976 முதல் 1982 இல் பிரித்தானிய கடற்படையால் மூடப்படும் வரை ஆர்ஜெனிடீனா தெற்கு சண்ட்விச் தீவுகளில் ஒரு கடற்படைத்தளத்தையும் பேணி வந்த்தது. ஆர்ஜென்டீனாவின் தெற்கு யோர்சியா மீதான உரிமைக் கோரல் 1982 ஆம் ஆண்டு போக்லாந்துப் போருக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. மால்ட்டா அல்லது மோல்ட்டா (Malta) தெற்கு ஐரோப்பாவில் மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள உள்ள ஒரு மக்கள் தொகை அடர்த்தி கூடிய ஒரு தீவு நாடாகும். இந்நாட்டில் மொத்தம் ஏழு தீவுகள் உள்ளன. சிசிலிக்குத் தெற்காகவும், துனீசியாவுக்கு கிழக்கேயும், லிபியாவுக்கு வடக்கேயும் அமைந்துள்ளது.[1] இதன் உத்தியோகபூர்வ மொழிகளாக மால்ட்டீஸ் மொழியும் ஆங்கிலமும் விளங்குகின்றன. ரோமன் கத்தோலிக்கம் இங்கு பெரும்பான்மையோரால் பின்பற்றப்படும் மதமாகும்.




Via (சித்தர்கள்) angelinmery