மதம் - கிறிஸ்தவம் !

மணக்கால் அய்யம்பேட்டை | 6:28 PM | Best Blogger Tips

Picture
கிறிஸ்தவம் - 210 கோடி (கத்தோலிக்கம் - 100 கோடி; புரட்டஸ்தாந்தம் - 77.5 கோடி, கிழக்கு மரபுவழி திருச்சபை - 24.0 கோடி)
                      கிறித்தவம் ஓரிறைக் கொள்கையுடைய (Monotheism) சமயமாகும். தமிழில் கிறித்தவம், கிறித்துவம், கிறிஸ்தவம் என்றும் குறிப்பர். நாசரேத்தூர் இயேசுவின் வாழ்வையும் அவரது போதனைகளையும் மையப்படுத்தி விவிலிய புதிய ஏற்பாட்டின்படி செயற்படுகிறது. கிறிஸ்தவர் இயேசுவை மேசியா (மீட்பர்) என்றும் கிறிஸ்த்து (ஆசிர்வதிக்கப் பட்டவர்) எனவும் விசவாசிக்கின்றனர். 2.1 பில்லியன் விசுவாசிகளை கொண்டு உலகின் பெரிய சமயமாக காணப்படுகிறது. கிறிஸ்தவம் பல உட்கிளைகளைக் கொண்டுள்ளது. இதில் கத்தோலிக்கம் மிகப்பெரியதாகும். கிறிஸ்தவம் கி.பி. முதலாம் நூற்றாண்டில் யூத மதத்தின் ஒரு பிரிவாக ஆரம்பிக்கப்பட்டதன் காரணத்தினால் யூத மதத்தின் நூலை, பழைய ஏற்பாட்டாகக் கொண்டுள்ளது. இதில் யூதரின் புனித நூலான எபிரேய விவிலியத்தை கிறிஸ்தவர் விவிலியத்தின் ஒரு பகுதியாக ஏற்கின்றனர். யூத, இஸ்லாம் மதங்ளைப் போலவே கிறிஸ்தவமும் அபிரகாமிய (Abrahamic) (ஆபிரகாம் வழிவந்த)சமயமாகும். உட்பிரிவுகள் கிறிஸ்தவம் பல உட்பிரிவுகளையும் வழக்குகளையும் திருச்சபைகளையும் கொண்டது. இவை இடத்துக்கும் காலாச்சாரத்துக்கும் ஏற்றபடி வேறுபடும் சமயக் கோட்பாடுகளை(doctrine) கொண்டுள்ளன. 2001 ஆண்டு உலகக் கிறிஸ்தவ கலைக்களஞ்சியத்தின் படி உலகம்முழுவதும் சுமார் 33,830 கிறிஸ்தவ பிரிவுகள் உள்ளன. சீர்த்திருத்ததுக்குப் பிறகு கிறிஸ்தவம் பிரதான மூன்று பிரிவுகளாக பிரிந்ததாக கொள்ளப்படுகிறது.
                     
   அனொ டொமினி (இலத்தீன்: Anno Domini இடைபட்ட காலத்தில் இலத்தீன் மொழியில் இவ்வாறு பொருள்பட வழங்கி வந்தனர்.(Anno=Our-அனோ= நமது, Domini=God-டொமினி=கடவுள்), இதன் முழுப் பொருள் கொண்ட வாசகம் எம் கடவுளாகிய ஏசு பிறந்த காலத்தில் (Anno Domini Nostri Iesu (Jesu) Christi="In the Year of Our Lord Jesus Christ") என்ற இலத்தின் மொழி வாசகத்தின் சுருக்கமே அனோ டொமினி. ஆங்கிலத்தில் AD என சுருக்கப்பட்டுள்ளது. இதன் தமிழாக்கம் கிறிஸ்த்துவுக்கு பின் என்பதனால், கி.பி. அல்லது கிபி என சுருக்கி வழங்கப்படுகிறது. இது நாசரேத்தூர் இயேசு பிறந்த ஆண்டை ஆரம்ப ஆண்டாகக் கொண்டு அதன் பிந்திய காலத்துக்கு வழங்கப்படுகிறது. இந்த அனோ டொமினி முறை காலக்கணக்கீடை அறிமுகப்படுத்தியவர் 525 ம் ஆண்டில் ரோம் நாட்டில் பிறந்த டையனைசியஸ் எக்ஸிகஸ். இயேசு கிறிஸ்த்துவுக்கு முற்பட்ட (Before Christ=BC) காலம் கிறிஸ்த்துவுக்கு முன் என்பதை சுருக்கி கி.மு. அல்லது கிமு எனத் தமிழில் வழ்ங்கப்படுகிறது. அனொ டொமினி முறை கிபி 525 இல் கண்டுபிடிக்கப்பட்டாலும், கி.பி. 8ஆம் நூற்றாண்டிலேயே மேற்கு ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 
                           சிலுவைப் போர்கள்
என்பன, வெளி எதிரிகளுக்கும், உள் எதிரிகளுக்கும் எதிராகப் பெரும்பகுதி கிறிஸ்தவ ஐரோப்பா நடத்திய பல தொடர்ச்சியான போர்கள் ஆகும். மதம் சார்ந்த இப்போர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களுக்கு எதிராகவே நடத்தப்பட்டது எனினும்,
சிலாவியர்கள், யூதர், ரஷ்ய மற்றும் கிரேக்க பழமைக் கோட்பாட்டுக் கிறிஸ்தவர்கள், மங்கோலியர், காத்தார்கள், ஹுசைட்டுகள், வால்டென்சியர்கள், பழம் பிரஸ்சியர்கள், பாப்பாண்டவரின் அரசியல் எதிரிகள் போன்றோருக்கு எதிராகவும் போர்கள் இடம்பெற்றன.
சிலுவைப் போர்கள் தொடக்கத்தில் ஜெரூசலத்தையும், புனித நிலத்தையும் முஸ்லிம்களிடமிருந்து மீளக் கைப்பற்றுவதை இலக்காகக் கொண்டிருந்ததுடன், அனத்தோலியாவுக்குள், முஸ்லிம் செல்யூக் துருக்கியர் நுழைவதைத் தடுப்பதற்கான கிழக்கத்திய பழமைக் கோட்பாட்டு பைசண்டியப் பேரரசின் வேண்டுகோளை ஏற்றுப் போர் தொடுக்கப்பட்டது. சிலுவைப் போர் என்னும் பெயர் இதற்குப் பின்னர் லேவன்ட்டுக்கு வெளியே பல்வேறு காரணங்களுக்காக நடத்தப்பட்ட போர்களையும் குறிக்கப் பயன்பட்டது. சிலுவைப் போர்கள் நீண்டகால அரசியல், பொருளியல், சமூகத் தாக்கங்களைக் கொண்டிருந்தன. இவற்றுட் சில அண்மைக்காலம் வரை நீடித்தன. கிறிஸ்தவ இராச்சியங்கள், அரசியல் சக்திகள் மத்தியில் இருந்த உள் முரண்பாடுகளினால், சில சிலுவைப் போர்களின் தொடக்க இலக்கு த்சி திரும்பியது. நான்காவது சிலுவைப் போர் இதற்கு எடுத்துக்காட்டு ஆகும். இது, கிறிஸ்தவ கொன்ஸ்டண்டினோப்பிள் அழிவதற்கும், பைசண்டியப் பேரரசு பிரிக்கப்படுவதற்கும் காரணமாகியது. ஆறாவது சிலுவைப் போரே பாப்பாண்டவரின் அதிகாரபூர்வ ஆசியில்லாமல் நடைபெற்ற முதல் போராகும். ஏழாம், எட்டாம், ஒன்பதாம் சிலுவைப் போர்களில், மாம்லுக், ஹாப்சிட் வெற்றிகள் கிடைத்தன. ஒன்பதாம் சிலுவைப் போரே இறுதிச் சிலுவைப்போர் ஆகும். இது மையக்கிழக்கில் முடிவடைந்தது.ஜெபங்களும் கோட்பாடுகளும்
கிறிஸ்து கற்பித்த செபம்
கிறிஸ்து கற்பித்த செபம் (பரலோக மந்திரம்) இயேசுவின் சீடர் எப்படி செபிப்பது என கேட்டபோது இயேசு சொல்லிக்கொடுத்த செபமாகும்.விவிலியத்தில் மத்தேயு 6:9-13 ஆம் வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா கிறிஸ்த்தவரும் இச்செபத்தை உச்சரிக்கைன்றபோதும் , கத்தோலிக்கர் அதிகமாக பாவித்துவருகின்றனர். இச்செபத்தின் வசன நடை இடத்துகிடம் வேறுபட்டாலும் பொருள் மாற்றமில்லை. கைகளை விரித்து வான்நோக்கி உயர்த்தியபடியோ,குழுவாக உச்சரிக்கும் போது அருகிலுள்ளவரின் கையை பிடித்து ஒருமனித சங்கிலி அமைத்தவாறோ சொல்வது வழக்ககமாகும். அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டவை மூல விவிலியத்தில் காணப்படாவில்லை,பின்னர் இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணிருக்கும் எம் தந்தாய்!
ஒளிரட்டும் நின் திருப்பெயரே!
வருகவே உம் ஆட்சியே!
விண்ணைப்போல மண்ணிலே!
அளிப்பீரே எமக்கு உணவு இன்று!
மன்னிப்பீரே எம் குற்றம்தனை!
யாமும் பிறரை மன்னித்தவாறே!
தூண்டற்கவே எம்மை தீவழியிலே!
கடையேற்றுகவே எம்மை தீயனிடமிருந்து நீர்.
("ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமக்கே. ஆமென்.")
ஆமென்(எபிரேயம்:אָמֵן ’Āmēn ,அரபு: آمين ஆமின்) ஆம் அல்லது அப்படியே ஆகுக என பொருள்படும். விவிலியத்திலும் திருக்குர்ஆனிலும் மகிழ்சியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. இஸ்லாம் மதத்தில் மட்டுமே ஆரம்பத்தில் பாவிக்கப்பட்டு வந்த இச்சொல் பின்னர் கிறிஸ்தவரது செபங்கள் மற்றும் பாடல்களை முற்றும் சொல்லாக பாவிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாம் மதத்தில் சுராக்களை முற்றும் சொல்லாக பயன்படுத்தபடுகிறது.விவிலியத்தில் ஆமேன்  விவிலியத்தில் மூன்று பயண்பாடுகள் நேக்கத்தக்கவை.
வசனத்தின் முன் ஆமென்,  மற்றைய பேச்சாளரின் கருத்தை ஏற்றுக்கொள்ளும் போது. உதாரணமாக;1அரசர்1:36(யோயாதாவின் மகன் பெனாயா அரசருக்கு மறுமொழியாக அப்படியே ஆகுக! என தலைவரான அரசரின் ஆண்டவராகிய கடவுள் நீர் சொன்னதை உறுதிப்படுத்துவாராக)
ஆச்சரிய ஆமேன், ஆச்சரியத்துகுள்ளான போது.உதாரணமாக;நேகேமியா 5:13(மேலும், நான் என் ஆடையை உதறிவிட்டு, இவ்வார்த்தையின்படி நடக்காத ஒவ்வொருவரையும் கடவுள் இவ்வாறே தம் வீட்டினின்றும், திருப்பணியினின்றும் உதறிவிடுவாராக. அவர்கள் இவ்வாறு உதறிவிடப்பட்டு, வெறுமையாக்கப்படுவர் என்றேன். இதற்குச் சபையார் அனைவரும் ஆமென் என்று சொல்லி ஆண்டவரைப் புகழ)
முற்று ஆமேன், ஒரு பேச்சாளர் தனது பிரசங்கத்தை/பேச்சை முடிப்பதற்காக பயன்படுத்துவது. கிறிஸ்தவ விவிலியத்தில் மொத்தம் 99 முறை "ஆமேன்" பாவிக்கப்பட்டுள்ளது.
விசுவாச அறிக்கை
         நைசின் விசுவாச அறிக்கை (Latin: Symbolum Nicenum), நைசின் நம்பிக்கை இயம்பும் உறுதிமொழி என்பது கிறிஸ்தவத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளபடும் முக்கியமான நம்பிக்கையை உறுதிபடுத்தும் அறிக்கையாகும். இது கத்தோலிக்கம், கிழக்கு மரபுவழி கிறிஸ்தவர், கிழக்குப்பகுதி (oriental) மரபுவழி கிறிஸ்தவர், ஆங்கிலிக்கன், ஆசிறியன், லூதரன், சீர்திருத்தர்கள் மற்றும் பல திருச்சபையினரும் ஏற்கும் அடிப்படை உறுதிமொழி அறிக்கையாகும். கத்தோலிக்க மற்றும் கிழக்கு மரபுவழி கிறிஸ்தவ திருச்சபைகளில் திவ்விய திருப்பலியின் போது உச்சரிக்கப்படுகிறது. இது விசுவாசத்தின் அடையாலம்,விசுவாசத்தின் மறைப்பொருள் அல்லது விசுவாச அறிக்கை எனவும் அழைக்கப்படுகிறது
நைசின் மூல விசுவாச அறிக்கை கி.பி.325 முதலாவது நைசின் விசுவாச அறிக்கையானது கி.பி.325 ஆம் அண்டு கூட்டப்பட்ட நைசியா மன்றம்I இனால் முடிவு செய்யப்பட்டது.நைசியா மன்றம்I அனாது திருச்சபையின் சகல ஆயர்களும் கலந்து கொண்ட மன்றமாகும் (Ecumenical Council). இதன் போது ஏற்றுக்கொள்ள்ப்பட்ட விசுவா அறிக்கயானது "பரிசுத்த ஆவியை விசுவாசிக்கிறேம்" என்ற சொல்லுடன் முற்றியது. நைசியா மன்றம்I முற்றிய உடனேயே விசுவாச அறிக்கையை புதுப்பிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.அப்போது அரியவாத்தின்(Arian heresy) புது தர்க்கங்களின் முன் புதியதோர் விசுவாச அறிக்கைகான தேவயேற்பட்டது.
நைசின் கி.பி. 381 விசுவாச அறிக்கை திருச்சபையின் சகல ஆயர்களும் கலந்து கொண்ட இரண்டாம் சர்வ ஆயர் மன்றம் 381 (First Council of Constantinople) ஆம் ஆண்டு கூடி விசுவாச அறிக்கையின் மீத்முள்ள வசனங்களையும் இணைத்ததது.இவ்வறிக்கையானது கிழக்கு மரபுவழி கிறிஸ்தவர் மற்றும் கிரேக்க கத்தோலிக்க திருச்சபைகளும் இத்னை மாற்றமின்றி பயன்படுத்துகின்றன. மூன்றாம் சர்வ ஆயர் மன்றம் (Council of Ephesus) 431 ஆம் ஆண்டு கூடியது.இச்சபையின் முடிவில் 381 ஆண்டிண் விசுவாச அறிக்கையானது மாற்றமின்றி ஏற்கப்பட்டது. மேலும் விசுவா அறிக்கை இனிமாற்றம் செய்யமுடியாதது எனவும் முடிவு செய்தது.
325 மற்றும் 381 விசுவாச அறிக்ககளிடையான வேறுபாடுகள் ஆங்கில மொழிப்பெயர்ப்பிலுள்ள வேறுபாடுகள்
பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவாசிக்கிறேன்.
அவருடைய ஏகசுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன்.
இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார்.
போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.
பாதளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரிதவரையும் நடுத்தீர்க்க வருவார்.
பரிசுத்த ஆவியை விசுவாசிக்கிறேன்.
ஏக,பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவாசிக்கிறேன்.
புனிதர்களுடைய சமுதீதப் பிரயோசனத்தை விசுவாசிக்கிறேன்.
பாவப்புறுத்தலை விசுவாசிக்கிறேன். நித்திய சீவியத்தை விசுவாசிக்கிறேன். -- ஆமென்.
பத்துக் கட்டளைகள்
பத்துக் கட்டளைகள் அல்லது கற்பனைகள் என்பது சமய, மனிதநேய விதிகளின் பட்டியலாகும். இது விவிலியத்தின் படி சீனாய் மலை மீது கடவுளால் கற்பலகைமேல் எழுதி மோசே மூலமாக இசுரவேலருக்கு கொடுக்கப்பட்டது. கற்பனைகள் என்ற சொல் விவிலியத்தில் யாத்திராகமம் 34:28 இல் காணப்படுகிறது. யேம்சு மன்னன் பதிப்பு "பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கை" என்ற பதத்தைப் பாவிக்கையில், விவிலிய இலகு வாசிப்பு பதிப்பு உடன்பயிகை என்ற பதத்தைப் பாவிக்கிறது.  விவிலியத்தின் படி, பத்துக் கட்டளைகள் என்பது கடவுள் சீனாய் மலையில் இருந்து இஸ்ரவேலருக்கு பேசி உரைத்த வார்த்தைகளாகும். இது கடவுளால் நேரடியாக கற்பலகைகள் இரண்டின் மீது எழுதப்பட்டு மோசே மூலம் இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் இஸ்ரவேலர் எகிப்தின் அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு மூன்றாம் மாதம் அவர்கள் சீனாய் மலையடிவாரத்துக்கு வந்தபோது நடந்தது. கட்டளைகள் கொடுக்கப்படும் முன்னர் மக்கள், இரண்டு நாட்கள் பரிசுத்தமாக இருக்கப் பணிக்கப்பட்டனர்.அவர்கள் பரிசுத்தமாக்கப்படும்படி பின்வருவனவற்றை செய்ய கட்டளையிடப்பட்டது: 1. உடைகளை கசக்கி தூயப்படுத்தல் (19:10) 2. உடலுறவு கொள்ளாதிருத்தல் (19:15) மேலும் மூன்றாம் நாள் வரை மலையச்சுற்றி ஒரு எல்லை குறிக்கப்பட்டு அதனுள் யாரும் வராமலிருக்க உத்தரவிடப்பட்டது.
விவிலிய வசனம் பின்வரும் விவிலிய பாடமானது பத்துக்கட்டளை எனப் பொதுவாக ஏற்கப்பட்டதாகும். இது யாத்திராகமம் 20:1-17 இல் காணப்படுகிறது.கிறிஸ்தவ உட்பிரிவினர் இக்கட்டளைகளை 10 குழுக்களாக தொகுக்கும் முறை வெவ்வேறானது. பின்வரும் வசனங்கள் குழுக்களாக பிரிக்காமல் தரப்பட்டுள்ளது. இவை ஜேம்சு மன்னன் பதிப்பு விவிலியத்திலிருந்து பெறப்பட்டவையாகும். தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளாவன;
(1) உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.
(2) என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்.
(3) மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்;
(4) நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
(5) என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ் செய்கிறவராயிருக்கிறேன்.
(6) உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.
(7) ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக;
(8) ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;
(9) ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருக ஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.
(10) கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
(11) உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
(12) கொலை செய்யாதிருப்பாயாக.
(13) விபசாரம் செய்யாதிருப்பாயாக.
(14) களவு செய்யாதிருப்பாயாக.
(15) பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
(16) பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.

வகைப்படுத்தல்கள்மேற்காணப்படும் யாத்திராகமம் 20 இன் விவிலியப் பகுதியானது, பத்துக்கு மேற்பட்ட தனி வசனங்களை கொண்டுள்ளது. ஆனால் விவிலியத்தில் பத்துக் கட்டளைகள் என்ற பதம் யாத்திராகாமம் 34:28, உபாகமம் 4:13, உபாகமம் 10:4 இல் பாவிக்கப்பட்டுள்ளது.எனவே இவ் 16 வசனங்களும் 10 கட்டளைகளாக குழுப்படுத்தப்படுகின்றது. இக் குழுப்படுத்தல் சமய மற்றும் சமய குழுக்களிடையே வேறுபடுகிறது. கத்தோலிக்கர் மற்றும் லூதரன் திருச்சபைகள் முதல் ஆறு வசனங்களை அன்னிய தெய்வங்களை வணங்குவதற்கு எதிரான கட்டளையாக கொள்கின்றனர். லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய சீர்த்திருத்த திருச்சபைகள் இவ்வாறு வசனங்களை இரண்டு கட்டளைகளாக பிரித்து நோக்குகின்றன. (முதலாவது "ஏக கடவுள்" ,இரண்டாவது "சிலைவழிபாட்டுக்கு எதிரானது") கத்தோலிக்க மற்றும் லூதரன் திருச்சபைகள் கடைசி வசனங்களில் கூறப்பட்டுள்ள விரும்புதலுக்கு எதிரான கட்டளைகளை "மனைவி" மற்றும் உடைமை என இரண்டாக பிரிக்கின்றனர்.
கத்தோலிக்கரின் பத்துக் கட்டளைகள்
1. ஒரே கடவுளை நம்புவாயாக.
2. கடவுள் திருப்பெயரை வீணாக உச்சரிக்காதிருப்பாயாக
3. கடவுளின் திருநாட்களை தூய்மையாக அனுசரிக்க மறவாதிருப்பாயாக
4. பெற்றோரை கனம் பன்ணுவாயாக
5. கொலை செய்யாதிருப்பாயாக
6. மோக பாவம் செய்யாதே
7. களவு செய்யாதிருப்பாயாக
8. பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக
9. பிறர் மனைவியை விரும்பாதிருப்பாயாக
10. பிறர் உடைமையை விரும்பாதிருப்பாயாக
லூதரன் சபைகளின் பத்துக் கட்டளைகள் லூதரன் திருச்சபைகளின் பத்துக்கட்டளை வகைப்படுத்தலும் கத்தோலிக்க திருச்சபையின் வகைப்படுத்தலை ஒத்ததாகும்.
சீர்த்திருத்த சபைகளின் பத்துக் கட்டளைகள்சீர்த்திருத்த திருச்சபைகள் பல காணப்படுகின்ற காரணத்தினால் அவை எல்லாவற்றினதும் கருத்துக்களை ஒன்றாக தொகுப்பது கடினமான விடயமாகும். பின்வருவன லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய திருச்சபைகளின் பொதுவான நோக்காகும்.
முகவுரை: 20:1-2 இது கட்டளைகளை ஏன் இஸ்ரவேலர் கைக்கொள்ள வேண்டும் என்பதை சுட்டி நிற்கிறது.
1. வசனம் 20:3  இங்கு அன்னிய கடவுள்களை வணங்குதலை தடுக்கும் கட்டளையாகும். இங்கு வணங்குதல் மட்டுமல்லாது அன்னிய தெய்வங்களை மரியாதை செய்தல் போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
2. வசனங்கள் 20:4-6  இவ்வசனங்கள் இரண்டும் சேர்த்து இரண்டாவது கட்டளையாக கொள்ளப்படிகிறது. இங்கு கடவுளை சிலகளூடாக வழிபடுவது தடைசெய்யப்படுகிறது. இங்கு சிலைகளோ அல்லது வேறு உயிரினங்களையோ கடவுளாக கருதுவது பாவச்செயலாக சுட்டப்படுகிறது.
3. வசனம் 20:7 இதில் கடவுளின் பெயர், அவரது செயல்கள், வசனங்கள் போன்றவற்றுகு புனித தன்மை கொடுக்கப்பட்டு அவை வீணாக உச்சரிக்கமல் இருப்பதை உறுதி செய்கிறது. இது சத்தியம் செய்வதற்கு எதிரான கட்டளையாக சிலரால் கொள்ளப்படுகிறது.
4. வசனங்கள் 20:8-11  இம்மூன்று வசனங்களும் சேர்த்து கடவுளுக்கு கடவுளுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும் என்ற நான்காவது கட்டளையாக கொள்ளப்படுகின்றது. இது வாரத்தின் இறுதிநாளை கடவுளுக்காக ஒடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
5. வசனங்கள் 20:12  இக்கட்டளை ஒன்றே நேரடியாக செய்யவேண்டியதை சுட்டுகிறது. இது பெற்றோரை மதித்து அவகளை கணம்பண்ணுவதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது.
6. வசனங்கள் 20:13 இது உயிரின் முக்கியத்துவத்தை விளக்குகிறது. உயிர் ஒன்றை கொலை செய்ய அல்லது அதை தடை செய்வதற்கான எந்த நடவடிக்கைகளையும் தடுக்கிறது.
7. வசனங்கள் 20:14 இதன் மூலமாக மற்றைவர்களை மீதான காம எண்ணங்களும் நடவடிகைகளும் தடைசெய்யப்படுகிறது.
8. வசனங்கள் 20:15  திருடலுக்கு எதிரான கட்டளையாகும். இதன் மூலம் சட்டப்படி நம்முடையவைகள் தவிர்ந்த ஏனையவற்றை சட்டவிரோதமான முறையில் சேர்ப்பது தடைசெய்யப்படுகிறது.
9. வசனங்கள் 20:16 இது மக்களிடையே உண்மைபேசப்படுவதன் முக்கியத்துவதை கூறுகின்றது. முக்கியமாக ஏதாவது ஒரு சம்பவத்துக்கு சாட்சியாக இருக்கும் போது உண்மையை பேசவேண்டியதன் முக்கியத்துவதை சுட்டுகிறது.
10. வசனங்கள் 20:17 இக்கட்டளை தனதல்லாத வேறு நபர் ஒருவரின் உடைமைகளையோ அல்லது அவரது துணைவரையோ( மனைவி, கணவன்) பெற்றுக்கொள்ளும் படி விரும்புவதை இக்கட்டளை தடைசெய்கிறது.
திருமறைச்சுவடி
1. மனிதவாழ்க்கையும் கடவுளும்
2. மீட்புக்கு ஆயத்தம்
3. இயேசுகிறிஸ்து மனுக்குல மீட்பர்
4. பரிசுத்த ஆவி
5. திருச்சபை
6. திருமறைநூல்
7. திருவருட்சாதனங்கள்
8. கிறிஸ்தவனின் அன்றாட வாழ்க்கை
சிலுவை அடையாளம்பிதா/சுதன்/பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்
மங்கள வார்த்தை செபம் அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே/ பெண்களுக்குள் ஆசிர்வதிக்க்கப்பட்டவள் நீரே/ உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசிர்வாதிக்கப்பட்டவரே.அர்ச்சியஸ்ட மரியாவே/ சர்வேசுரனுடைய மாதவே, பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்போதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். ஆமென். திருத்துவப்புகழ் பிதாவுக்கும் சுதனுக்க்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக./ ஆதியிலே இருந்தது போல/ இப்போதும் என்றென்றும் இருப்பதாக. ஆமென் கத்தோலிக்க திருச்சபையின் ஒழுங்குவிதிகள்
1. ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் முழுப்பூசை காணல்
2. வருடத்திற்கு ஒருமுறையாவது, நல்ல பாவசங்கீர்த்தனம் செய்தல்
3. தவக்காலத்தில் பாவ சங்கீர்த்தனம் செய்து தேவநற்கருணை உட்கொள்ளல்
4. மாமிச தவிர்ப்பு நாட்கள், ஒருசந்தி நாட்களை கடைப்பிடித்தல்
5. சிறுவர் மற்றும் விகினஉறவுமுறைத் திருமணம் செய்யாமை
6. ஆட்சியாளருக்கு நல்லுதவி செய்தல்
மூவேளைஜெபம் ஆண்டவருடைய தூதர் மரியாளுக்கு தூதுரைத்தார். தூய ஆவியால் அவள் கருத்தாங்கினாள். - அருள் நிறை... இதோ ஆண்டவரின் அடிமை. உமது சொற்படியே எனக்கு ஆகட்டும். - அருள் நிறை... வாக்கு மனிதனானார். நம்மிடையே குடிகொண்டார். - அருள் நிறை... கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படி இறைவனின் தூய அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இறைவா/ உம் திருமகன் மனிதனானதை / உம்முடைய வானதூதை வழியாக அறிந்து இருக்கின்றோம். அவருடைய பாடுகளினாலும் மரணத்தினாலும் நாங்கள் உயிர்ப்ப்பின் மகிமை பெற உமது அருளைப் பொழிவீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.- ஆமென்.
சுருக்கமான மனத்துயர் ஜெபம் என் இறைவனாகிய தந்தையே! நீர் நன்மை நிறைந்தவர். எனவே எல்லாவற்றிற்கும் மேலாக / உம்மை நான் அன்பு செய்கின்றேன். என் பாவங்களால் உமது அன்பை மறந்ததற்காக/ மனம் வருந்துகிறேன். உமது அருளுதவியால் இனிமேல் பாவம் செய்வதில்லை என்று உறுதிகூறுகிறேன். - விசுவாச முயற்சிஎன் இறைவா, உமது திருச்சபை விசுவசித்துப் படிப்பிக்க உண்மைகளை எல்லாம் / நீரே அறிவித்திருப்பதால், அவைகளை எல்லாம் / நான் உறுதியாக ஏற்றுக்கொள்கிறேன். நம்பிக்கை முயற்சி என் இறைவா/ நீர் தந்த வாக்குறுதிகளை / நான் ஏற்றுக் கொள்கிறேன். எங்கள் ஆண்டவர் இயேசுவைன் இரத்தத்தால் என் பாவங்களைப் பொறுத்து எனக்கு உமதி அருளையும் வானக வாழ்வையும் அளிப்பீர் என்று உறுதியாக நம்புகிறேன். ஆமென். அன்பு முயற்சிஎன் இறைவா! நீர் அளவில்லாத அன்புக்கு உரியவர் என்பதால் அனைத்திற்கும் மேலாக, உம்மை நான் முழுமனதோடு அன்பு செய்கின்றேன்.அவ்வாறே என்னை நான் நேசிப்பது போல் எல்லோரையும் நேசிக்கிறேன். தேவதாயை நோக்கி புனித பெர்நார்துவின் ஜெபம் இரக்கம் மிகுந்த தாயே/ உன் அடைக்கலம் நாடி உதவியைத் தேடி தமக்காய் பரிந்து பேச மன்றாடி வந்த எவரும் ஏமாந்தார் என உலகில் என்றுமே கேட்டதில்லை. அம்மா இதனை நினைத்தருள்வாயே. கன்னியருள் உயர் கன்னியே/ தாயே / இப்பெரும் நம்பிக்கையால் உந்தப்பட்ட நான் உன்னிடம் ஓடிவருகிறேன். பாவி நான். உன் தாள் விழுகிறேன். வார்த்தையின் தாயே/ தள்ளிவிடாதே/ என் மன்றாடைத் தயவாய் கேட்டருளும்.
உலக இளையோர் நாள் (World Youth Day) என்பது இளைஞர்களுக்காக ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையினால் ஆண்டு தோறும் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வாகும்.இந்நிகழ்வு பெரும்பாலும் கத்தோலிக்க சமய நிகழ்வாகக் கருதப்பட்டாலும், அனைத்து இளைஞர்களும் இன, மாத பேதமின்றி பங்குபற்றுமாறு அழைக்கப்படுகின்றனர்.உலக இளையோர் நாள் பன்னாட்டு இளையோர் நாளை விட வேறுபட்டதாகும்.உலக இளையோர் நாள் 1984ம் ஆண்டில் பாப்பரசர் இரண்டாம் ஜோன் போல் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டது.இது ஆண்டு தோறும் ஆயர் மட்டத்தில் இடம்பெறும். அதை விட இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச ரீதியில் ஒரு-வார நிகழ்வாக வெவ்வேறு நாடுகளில் இடம்பெறுகிறது.பன்னாட்டு நிகழ்வுகளில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் உலகின் பல நாடுகளிலும் இருந்து வந்து கலந்து கொள்கின்றனர்.2008ம் ஆண்டுக்கான நிகழ்வுகள் ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரத்தில் ஜூலை 15 முதல் ஜூலை 20 வரை இடம்பெற்றன.

கிறித்தவ பிரிவுகள்.

Picture
                       உரோமன் கத்தோலிக்கம் உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையானது கிறிஸ்தவத்தின் மிகப்பெரிய உட்பிரிவாகும். இது சில கிழக்கு கத்தோலிக்கத் திருச்சபைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மொத்தமாக 1 பில்லியன் திருமுழுக்கு பெற்ற விசுவாசிகளை கொண்டுள்ளது.                      கத்தோலிக்கம் அல்லது உரோமன் கத்தோலிக்க திருச்சபை(Roman Catholic Church) மிகப்பெரிய கிறிஸ்தவ மதப்பிரிவாகும். 2004 ஆம் ஆண்டு கணக்கின் படி1,098,366,000 விசுவாசிகளை கொண்டதாக இப்பிரிவு இருக்கிறது. இவ்வடிப்படையில் கத்தோலிக்கமே உலகில் மிகப்பெரிய சமயபிரிவாகும். மற்றைய கிறிஸ்தவ மத பிரிவுகளைப்போலவே கத்தோலிக்கரும் இயேசுவை தங்களது கடவுளாக ஏற்றுக்கொள்கின்றார்கள். பாப்பரசர் கத்தோலிக்கரின் உலகத்தலைவராவார். கத்தோலிக்க தேவாலயத்தின் சுயவரைவிலக்கணத்தின் படி கத்தோலிக்க தேவாலயம் எனப்படுவது, இயேசுவின் தலைமைச்சீடரான இராயப்பரின் வழிவருபரின் தலைமையின் கீழ் ஏனைய ஆயர்களாலும் குருக்களாலும் வழிநடத்தப்படும் சமயமாகும். இங்கு இராயப்பரின் வழிவருபவராக பரிசுத்த பாப்பரசர் கொள்ளப்படுகிறார். தற்போது 16 ஆம் ஆசீவாதப்பர் பாப்பரசராக கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்துகிறார். இவர் 265 ஆவது புனித பாப்பரசராவார். இத்திருச்சபை ஒரு, புனித, கத்தோலிக்க,அப்போஸ்தலிக திருச்சபையை (திருச்சபையின் நான்கு அடையாளங்கள்) போதித்து வலியுறுத்துகிறது. கத்தோலிக்கம் என்ற பதம் கிரேக்க மொழியிலிருந்து எடுத்துப் பயன் படுத்தப்படுகிறது. இதன் மூலக்கருத்து 'அகில' என்பதாகும். இதன்படி கத்தோலிக்க திருச்சபை, இயேசுவால் அகிலத்துக்காக நிறுவப்பட்ட திருச்சபை என்ற கருத்துப்பெற பாவிக்கப்படுகிறது. இப்பெயர் திருச்சபையால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து பயன்படுத்தப்படுகிறது. மற்றைய கிறிஸ்தவ மதபிரிவுகள் 'கத்தோலிக்க திருச்சபை' பயன்பாடு முறையற்றது எனவும் அது மற்றப்பிரிவுகளை இழிவுப்படுத்துவதாகவும் முறையிட்டபோது மாத்திரமே 'உரோமன் கத்தோலிக்க திருச்சபை' என்ற பெயரை பயன்படுத்துகிற்து.
                   
தோற்றமும் வரலாறும் கத்தோலிக்க திருச்சபை இயேசு மற்றும் அவரது பன்னிரண்டு சீடர் வழிவருவதாகும். இதில் முதன்மைச் சீடர் இராயப்பர் முக்கிய இடம் பெருகிறார். இயேசுவால் தனக்கு பின்னர் தனது விசிவாசிகளை வழிநடத்தும்படி இராயப்பர் பணிக்கப்பட்டார். இயேசுவின் பின்னர்,புனித விவிலியத்தில் கூறப்பட்டுள்ளதன் படி, வேறுபட்ட போதனைகளுககு தமது விசுவாசத்தை விட்டுக்கொடுக்காது இராயப்பரதும் அவர் வழிவந்த பாப்பரசர்களதும் போதனைபடி வாழ்ந்த உண்மையான இயேசுவின் விசுவாசிகளே காத்தோலிக்க திருச்சபையின் மூல விசுவாசிகளாவார்கள். 'கத்தோலிக்க திருச்சபை' என்ற பெயர் ஆன்டியொக்கின் ஆயர் இக்னேசிய அவர்களால் எழுதப்பட்ட மடலொன்றில் முதன்முறையாக பாவிக்கப்பட்டதாக அறிஞர்கள் கருதுகிறர்கள்.ஆரம்பத்தில் திருச்சபை பல நெருக்கடிகளுக்கு உள்ளானது. கி.பி. 4ம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் உரோமையில் சட்டபூர்வமாக்கப்பட்டது. கி.பி. 313 ஆம் ஆண்டு ரோமப் பேரரசன் கான்ஸ்டாண்டைன் வெளியிட்ட மிலான் ஏற்புகள் (Edict of Milan) மூலம் உரோமை அரசு சமயங்கள் தொடர்பில் நடுவுநிலைமை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டது. அத்தோடு உரோமையில் கிறிஸ்தவர் அனுபவித்த அடக்குமுறைகள் முடிவுக்கு வந்தன. மேலும் கொண்ஸ்டன்டைன் நைசியா மன்றத்தைக் கூட்டி(Council of Nicea) அப்போது திருசசபயில் தோன்றியிருந்த ஆரியவாதத்தை (Arian heresy) முடிவுக்கு கொண்டு வந்தார். இக்கூட்டத்தில் பின்னர் வெளியிடப்பட்ட'நைசின் விசுவாச அறிக்கை' (Nicene Creed) இன்றும் கத்தோலிக்க,கீழ் மரபு வழாத (Eastern Orthodox),Protestant திருச்சபைகளால் ஏற்றுகொள்ளப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. கான்ஸ்டாண்டைன்குப் பின்னர், தியோடியஸ் எனும் மற்றொரு பேரரசர் கிறித்தவராக ஞானஸ்னானம் செய்யப்பட்டு,கி.பி. 380 ஆம் ஆண்டு தொடக்கம் கிறிஸ்தவம் உரோமையின் அரச சமயமாக உயர்ந்தது.11 ஆம் நூற்றாண்டில் திருச்சபை பெரும் கருத்து முரண்பாட்டை (Great Schism) எதிர்நோக்கியது. பொதுவாக 1054 ஆம் ஆண்டு இது தோன்றியதாக கூறப்பட்டாலும், இது பல தாசப்த்தங்களாக காணப்பட்ட கருத்து வேறுபாடுகளின் விளைவாகும்.
                         இதன் போது கத்தோலிக்க திருச்சபைக்கும் கீழ் மரபு வழாத திருச்சபைக்குமிடயே சபை முகாமை, சமயபோதனைகள் (liturgical), சமய கோட்பாடுகள் (doctrine) தொடர்பில் கருத்து வேறுபாடுகள் தோன்றியது. முக்கியமாக பாப்பரசரின் தலைமை (Papal primacy of jurisdiction) மற்றும் இயேசு மற்றும் பரிசுத்த ஆவி தொடர்பான சமய போதனை வேறுபாடு (Filioque) முக்கிய இடம் வகித்தது. இறுதியில் இவ்விரு திருச்சபைக்களும் பிரிந்தன. இரண்டாம் இலியோன்ஸ் மன்றம்,
1274 (Second Council of Lyons) மற்றும் பசெல் மன்றம், 1439 (Council of Basel) இவ்விரு திருச்சபைகளையும் இணைக்க முயன்றது எனினும் இன்று வரை இத்திருச்சபைககள் பிரிந்தே செயற்படுகின்றன. இவ்விரு திருச்சபைகளும் நைசின் விசுவாச அறிக்கையில் கூறப்பட்ட ஓரே,புனித,கத்தோலிக்க,அப்போஸ்தலிக திருச்சபை தாமே என உரிமை கோறிவருகின்றன. அது முதல் சில கீழ் மரபு வழாத திருச்சபைகள் பாப்பரசரின் தலைமையை எற்று கத்தோலிக்க திருச்சபையுடன் இணைந்துள்ளன.
திருச்சபையின் இரண்டாவது பெரிய பிரிவினை சமய சீர்த்திருத்தவாதத்தால் ஏற்பட்டது. இதில் பாப்பரின் தலைமை, திருச்சபையின் சமய கோட்பாடுகள், மேலும் சபையில் அப்போதிருந்த நடைமுறைகள் என்பவற்றை பிழையென கருதிய பல குழுக்கள் திருச்சபையிலிருந்து பிரிந்து சென்றன. இது கத்தோலிக்க திருச்சபைக்குள் சீர் திருத்தத்துக்கு வழிகோலியது. இந்நோக்கத்துக்காக டெரன்ட் மன்றம்(Council of Trent) 1545, கூட்டப்பட்டு கத்தோலிக்க திருச்சபையின் பல கோட்பாடுகளையும் கொள்கைகளையும் சீர்த்திருத்தியது. டெரன்ட் மன்றத்துக்குப் பிறகான மூன்று நூற்றாண்டுகள் இம்மன்றத்தின் சீர்த்திருத்தங்களை அமுல்படுத்துவதிலும் கிறிஸ்தவ கல்வியிலும் மற்றும் மறைப்பரப்பு பயணங்களிலும் திருச்சபை முக்கிய கவனமெடுத்துக் கொண்டது.  இப்பணிகளில் 'இயேசு சபை' குருக்களும் 'பிரன்சிஸ்கன்' குருக்களும் முன்னின்று செயற்பட்டனர். 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் சமய சீர்த்திருத்தவாதிகளால் மட்டுமல்லாது விஞ்ஞான வளர்ச்சி, கைத்தொழில் புரட்சி போன்ற வற்றாலும் திருச்சபை பல சவால்களை எதிர்நோக்கியது.
முதலாம் வத்திக்கான் சங்கம்(1869-1870),இரண்டாம் வத்திக்கான் சங்கம்(1962–1965) போன்ற மன்றங்கள் அவ்வப்போதிருந்த பாப்பரசர்களால் கூட்டப்பட்டு கத்தோலிக்க திருச்சபை காலத்துகேற்றவாரு புதுப்பிக்கப்பட்டது.
இரண்டாம் வத்திக்கான் சங்கம் :இரண்டாம் வத்திக்கான் சங்கம் ரோம் நகரில் 1962 முதல் 1965 வரை ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் காலத்தில் நடைபெற்றது. பாப்பரசர் அருளப்பர் XXIII முதலாவது ஆண்டில் தலைமை வகித்தார். பின்னர் பாப்பரசர் ஆறாம் சின்னப்பர் கூட்டங்களை தொடர்ந்து நிறைவு செய்தார். கத்தோலிக்க திருச்சபையை புதுப்பித்தலும் கிறிஸ்தவ மறுஒன்றிப்புமே இச்சங்கத்தின் முக்கிய குறிக்கோள்கள். இச்சங்கம் உருவாக்கிய இரண்டு முக்கிய ஏடுகள் - சமய சுதந்திரம் (Dignitatis Humanae) மற்றும் நவீன உலகில் திருச்சபையின் மேய்ப்புப்பணி அமைப்பு (Gaudium et Spes) ஆகியனவாகும். சங்கத்தின் பரிந்துரைப்படி கத்தோலிக்க சபை வழிபாடுகள் பெருமளவில் மாற்றப்பட்டன. லத்தீன் மொழி பலிப்பூசை (Tridentine Mass) முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, புதிய பலிப்பூசை அவரவர் சொந்த மொழியில் நிறைவேற்ற ஆவன செய்யப்பட்டது. இதைத் தவிர வ்ழிபாடுகளில் குரு (Priest) விரும்பினால் உள்ளூர் கலாச்சாரப்படி சில மாற்றங்கள் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் பரப்பப் பட்டது. இதனை 'இரண்டாம் வத்திக்கான் சங்க ஒளி' யில் செய்வதாக அவ்வாறு செய்பவர்கள் கூறிக்கொள்கின்றனர். (சங்க 'ஒளி' எனப்படுவது சங்க ஏடுகளில் எழுதி பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கைகள் அல்ல. மாறாக, அவற்றில் இருந்து தர்க்க ரீதியாக பெறப்பட்டதாக சொல்லப்படும் சார்பு கொள்கைகள். ஆனால், கத்தோலிக்க குருமாரிடையே இவை பற்றிய ஒருமித்த கருத்து இன்றளவும் இல்லை). எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையும் இச்சங்க 'ஒளி' யில் காணப்படுவதாக சிலர் கூறுகின்றனர். லத்தீன் மொழி பலிப்பூசையை பல விசுவாசிகள் விரும்பியதால் தற்போதய பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட், இறை மக்கள் விரும்பினால் லத்தீன் மொழி பலிப்பூசையை வழங்கலாம் என்று அண்மையில் உத்தரவிட்டுள்ளார். இச்சங்க கோட்பாடுகளைப் விரும்பாதவர்கள், பல்வேறு புராதன கத்தோலிக்க சபைகளை (Traditional Catholic) உருவாக்கியுள்ளனர். பேராயர் லெபபர் (Archbishop Marcel Lefebvre]) உருவாக்கிய பத்தாம் பத்திநாதர் சபை (SSPX) இவற்றில் முக்கியமானது. இன்னும் சில கத்தோலிக்க பொதுமக்கள் கத்தோலிக்க வழிபாடுகளில் பக்தி குறைந்து விட்டது என்று பெந்தெகோஸ்தே சபைகளுக்கு தங்களை மாற்றிக்கொண்டனர்.
            
               கிழக்கு கிறிஸ்தவம் இது கிழக்குப்பகுதி (ஒரியன்டல்) மரபுவழி, கிழக்கு ஆசிறியன், கிழக்கு மரபுவழி (மேற்கு மரபுவழி திருச்சபை உற்பட) திருச்சபைகளைக் கொண்டுள்ளதோடு மொத்தம் 300 மில்லியன் ஞானஸ்நானம் பெற்ற விசுவாசிகளை கொண்டுள்ளது. 
                            சமய சீர்த்திருத்த வாதம் அல்லது புரடஸ்தாந்தம்:
இதில் பல உட்பிரிவுகள் காணப்படுகின்றன. அங்கிலிக்கன், லூதரன், Reformed, ஆவிக்குரிய(Evangelical), Charismatic, Presbyterians, Baptists, மெதோடிஸ்த, Nazarenes, Anabaptists, பெந்தகோஸ்தே போன்றவை பிரதானமானவையாகும். முதன் முதலாக 16 ஆம் நூற்றாண்டில் இச்சபைகள் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரிந்தன. இவர்கள் தாங்களை கிறிஸ்தவரென்றோ மீளப் பிறந்த கிறிஸ்தவரென்றோ அழைக்கின்றனர். அங்கிலிக்கன் மற்றும் புதிய-லூதரன்(Neo-Lutheranism) திருச்சபைகள் 592-650 மில்லியன் விசுவாசிகளை கொண்டுள்ளன. மற்றைய திருச்சபைகள் சுமார் 275 மில்லியன.
               
                       கிழக்கு மரபுவழித் திருச்சபை
(Eastern Orthodox Church) உலகில் இரண்டாவது பெரிய கிறிஸ்தவ சபையாகும். இச்சபையினர் இயேசுவாலும் அப்போஸ்தலர்களாலும் நிறுவப்பட்ட திருச்சபையின் உண்மையான தொடர்ச்சியாகத் தம்மைக் கருதுகின்றனர். இச்சபையில் ஆரம்பத்தில் இயற்றப்பட்ட சமயக் கோட்பாடுகளில் மாற்றங்கள் ஏற்கப்படுவதில்லை. இச்சமயக்கோட்பாடுகள் கி.பி. 4 தொடக்கம் 8 வரையான காலப்பகுதியில் நடைப்பெற்ற 7 புனித சங்கங்களில் இயற்றப்பட்டவையாகும். கத்தோலிக்க, ஒரியண்டல் திருச்சபைகள் இச்சபையிலிருந்து வெளியேறிய பகுதிகளாக கொள்ளப்படுகிறன. நாட்டுக்கு நாடு பிரிந்து காணப்பட்டாலும் (இரசிய கிழக்கு மரபுவழி திருச்சபை, சேர்பிய கிழக்கு மரபுவழி திருச்சபை...) அதிகாரபூர்வமாக நைசின் விசுவாச அறிக்கையின் படி தம்மை "ஒரே கத்தோலிக்க அப்போஸ்தலிக திருச்சபை" என அழைத்துக் கொள்கிறது. இச்சபைக்கு தனித் தலைவர் கிடையாது, மாறாக இது இன மற்றும் நாட்டு எல்லைகளை கருத்திற் கொண்டு அதிகார அலகுகளாகப் பிரிக்கப்பட்டுக் காணப்படுகிறது. ஒவ்வெரு அலகும் சினோட் எனப்படும் ஆயர்கள் சபையால் நிர்வகிக்கப்படுகிறது. சினோட்டில் எல்லா ஆயர்களும் சம அதிகாரம் கொண்டவர்களாகக் காணப்படுவதோடு மற்றைய ஆயரது அதிகாரங்களில் தலையிடுவதில்லை. மேலும் எப்போதாவது புனித சங்கமொன்றை கூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டால் கொன்சாந்தினோபிலின் ஆயர் "சமமானவரிடையே முதலாமவர்" என்ற பதவியை கொண்டிருப்பார்.(அதாவது புனித சங்கத்தில் தலைமைப் பதவியைக் கொண்டிருப்பார்)

                          மெதடிஸ்தம்(Methodism) என்பது கிறிஸ்தவ மதப்பிரிவான மறுப்பாளர்களில் (protestant) ஒரு பிரிவினர் ஆவர். 18ம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் இம்மதப்பிரிவு தோன்றியது. முதன் முதலில் ஆங்கிலத் திருச்சபையைச் சேர்ந்த ஜோன் வெஸ்லி என்ற மதகுருவானவர் மெதடிஸ்த மதக் கொள்கையைப் பரப்பினர். இதனால் இம்மதக் கொள்கை பொதுவாக வெஸ்லிய மெதடிசம்'எனவும் அழைக்கப்படுகிறது. ஜோன் வெஸ்லி இம்மதத்தை ஆங்கிலத் திருச்சபையின் போட்டிக் குழுவாகவே இதனை உருவாக்கினார். மெதடிஸ்தத்தைப் பின்பற்றும் ஆங்கிலிக்கர்கள் மெதடிஸ்துகள் என அழைக்கப்படுகின்றனர். 18ம் நூற்றாண்டில் தோன்றிய மெதடிசத்தில் வேல்சிய மெதடிஸ்துகளும் உள்ளனர்.
                                  ஆங்கிலிக்க ஒன்றியம் அல்லது ஆங்கிலேய ஐக்கியம்(Anglican Communion) என்பது உலகம் முழுவதுமுள்ள ஆங்கிலிக்க திருச்சபைகளின் சேர்க்கையாகும். இது உலகத்தில் மிகபெரிய மதத்தின் இரண்டாம் பெரிய மதபிரிவாகும். இங்கிலாந்து திருச்சபை மற்றும் அதன் தலைவர் கன்டபரி பேராயருடன் முழு ஒற்றுமையோடு இருக்கும் திருச்சபைகளின் ஒன்றியமாகும். ஆங்கிலிக்க திருச்சபைகளிர்க்கு பிராந்திய பேராயிர்கள் தலமையேற்கின்றன. மாறாக நாடு, பிரதேச மட்டத்திலான முழு அதிகாரம் கொண்ட திருச்சபைகளே காணப்படுகின்றன. 77 மில்லியனுக்கும் மேலான பின்பற்றுனர்களைக் கொண்ட அங்கிலிக்க ஒன்றியம் உரோமன் கத்தோலிக்க திருச்சபை , கிழக்கு மரபுவழி திருச்சபைக்கு அடுத்தப்படியாக உலகின் மூன்றாவது பெரிய சமயப் பிரிவாகும். தமிழ் நாடு உட்பட தென் இந்திய மானிலங்களும் இலங்கையும் ஒரு பிரிவாக தென்-இந்திய திருச்சபையின்கீழ் உள்ளன.
                        இங்கிலாந்து திருச்சபை, இங்கிலாந்தின் அதிகாரபூர்வமான கிறித்தவத் திருச்சபையாகும். இது உலகெங்கும் உல்ல சர்வதேச ஆங்கிலேய ஐக்கியம் எனப்படும் திருச்சபை குடும்பத்தின் முதல் சபையாகும். இத்திருச்சபை தன்னை திருத்தப்பட்ட கத்தோலிக்கமாகவும் (உரோமன் கத்தோலிக்க திருச்சபை) என்கிறது.
                        இரட்சணிய சேனை (The Salvation Army), ஒரு அனைத்துலக் கிறித்தவ நற்செய்தி இயக்கமாகும். இவ்வியக்கம் தற்போது 118 நாடுகளில் இயங்கி வருகிறது. இரட்சணிய சேனை இயக்கத்தின் தலைமைச் செயலகம் இலண்டன் நகரின் குயீன் விக்டோரியா சாலையில் அமைந்துள்ளது. இவ்வியக்கம் 1865 ஆம் ஆண்டு வில்லியம் பூத், அவரது மனைவி காதரின் பூத் என்பவர்களால் கிழக்கு இலண்டன் அறவியக்கமாக துவக்கப்பட்டது. இவ்வியக்கம் அரை-இராணுவக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இரட்சணிய சேனையின் ஸ்தாபகர் வில்லியம் பூத் அவர்கள் லண்டனில் உள்ள நாட்டிங்காம் என்னுமிடத்தில் 1829 'ம் ஆண்டு பிறந்தார். இரட்சணிய சேனையானது கிறிஸ்தவ சுவிசேஷம் மற்றும் சமூக சேவை பணிகளை ஏழை எளியவர்களிடத்திலும், திக்கற்றவர்களிடத்திலும் செய்து வருகிறது.
                        கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் (Protestant Reformation) 1517 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் தொடங்கப்பட்ட ஒரு கிறிஸ்தவ சமய சீர்த்திருத்த இயக்கமாகும். இதற்கான ஏதுநிலை 1517 ஆண்டுக்கு முன்னரே ஏற்பட்டிருந்தன. இது மார்டின் லூதருடன் தொடங்கி 1648 ஆம் ஆண்டின் மேற்குபாலிய சமதான ஒப்பந்தத்துடன் முடிவுற்றதாகக் கொள்ளப்படுகிறது.இவ்வியக்கம், கத்தோலிக்கத் திருச்சபையை சீர்த்திருத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது. மேற்குலக கத்தோலிக்கர்கள், சிலவேளைகளில் பாப்பரசர் வரை சென்ற, கத்தோலிக்க மேலிடத்தில் நிழவிவநத ஒழுக்கக் கேடுகளாலும் சமயக் கோட்பாடுகளில் செய்யப்பட்ட திரிபுகள், திணிப்புகள் என்பவற்றாலும் விரக்தியிற்றிருநதனர். முக்கியமாக பாவமன்னிப்பு விற்பனை, சபையின் முக்கிய பதவிகளை வணிகப் பொருட்கள் போல வாங்கி விற்றல் (சீமோனி) போன்றவை கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கம் தொடங்கப்பட்டதற்கான உடனடிக் காரணங்களாக அமைந்தன.                         புரடஸ்தாந்தம் அல்லது சீர்திருத்தத் திருச்சபைகள்என்பது 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட கிறிஸ்தவச் சீர்திருத்த இயக்கத்தை தொடர்ந்து தொடங்கப்பட்ட கிறிஸ்தவ சபைகளை குறிக்கும். சீர்திருத்தச் சபைகளின் கோட்பாடுகள் விவிலியத்தின் உள்ளடக்கத்துக்கு ஏனையவர்கள் கொடுத்துள்ள விளக்கங்களை பின்பற்றாது விவிலியத்தை நேரடியாக பின்பற்றுகிறது.அது விவிலியத்தை கடவுளை அறிவதற்கான ஒரே வழியாகவும், மீட்படைய கடவுளின் கருணை மட்டும் மூலமே முடிவும் எனவும் போதிக்கிறது.
                          மக்கள் கோயில் (Peoples Temple) என்பது 1955 ஆம் ஆண்டில் ஜிம் ஜோன்ஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சமூக அமைப்பாகும்.1970களின் நடுப்பகுதிக்குள் கலிபோர்னியாவில் பல இடங்களில் இதன் கிளைகள் நிறுவப்பட்டன.இதன் தலைமையகமும் கலிபோர்னியாவில் உள்ளது.கயானாவில் ஜோன்ஸ்டவுன் என்ற இடத்தில் இவ்வமைப்பின் கிளையொன்றில் 1978, நவம்பர் 18 ஆம் நாள் 900 பேர் வரையில் இறந்த நிகழ்வு இவ்வமைப்பு பற்றி உலகறியச் செய்த நிகழ்வாகும். ஜோன்ஸ்டவுன் நகரில் இடம்பெற்ற நிகழ்வு அமெரிக்காவின் வரலாற்றில் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்கு முன்னர் ஒரே நாளில் பெரும் தொகையானோர் இயற்கை அழிவல்லாத நிகழ்வு ஒன்றில் இறந்தது இதுவே ஆகும். இதன் போது கொலை செய்யப்பட்டவர்களில் ஐக்கிய அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர் லியோ ராயன் என்பவரும் ஒருவர். கம்யூனிசத் தத்துவத்தால் கவரப்பட்ட ஜிம் ஜோன்ஸ் மார்க்சியத்தை கிறிஸ்தவத் தேவாலயங்களில் பயன்படுத்தத் திட்டமிட்டார். இன்டியனாபொலிஸ் மாநிலத்தில் 1952 ஆம் ஆண்டு மெதடிஸ்த தேவாலயத்தில் மதகுருவானார். அங்கிருந்து அவர் விலகி தனக்கெனத் தனியே ஒரு தேவாலயத்தை நிறுவி செயற்படலானார். 1956 ஆம் ஆண்டில் அவ்வாலயத்துக்கு "Peoples Temple Full Gospel Church" என்ற பெயரைச் சூட்டி நிதி சேகரிக்கலானார். இவரது கோயில் குறிப்பாக ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கிடையே பிரபலமானது.
கயானா கோயில் நிகழ்வு :1974 ஆம் ஆண்டில் மக்கள் கோயில் கயானாவில் நிலம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து மக்கள் கோயில் விவசாயத் திட்டம் என்ற பெயரில் ஒரு பெரும் திட்டத்தை ஆரம்பித்தது. அப்பஓது அங்கிருந்த மக்கள் 50 பேர் மட்டுமே. ஜிம் ஜோன்ஸ் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கயானாவுக்குக் குடி பெயர்ந்தார். அவருடன் அவரது கோயில் உறுப்பினர்களும் இடம்பெயர்ந்தனர். கயானா கோயிலின் மக்கள் தொகை 1978 இல் 900 ஆக அதிகரித்தது. அங்கு குடி பெயர்ந்தவர்களுக்கு அக்கோயிலை சுவர்க்க புரியாகவும், உலகின் தீய பழக்கங்கள் அற்ற பிரதேசமாக மாற்றியமைக்கவும் உறுதிமொழி கொடுக்கப்பட்டது.இக்கோயில் முறைகேடுகள் நடைபெறுவதாக கூறப்பட்ட புகார்களை விசாரிக்கவென அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் லியோ ராயன் 1978, நவம்பர் 17 இங்கு வருகை தந்தார். அக்கோயின் பல உறுப்பினர்கள் கோயிலை விட்டு வெளியேறுவதற்கு தமது விருப்பத்தை அவருக்குத் தெரிவித்தனர். இதனை அடுத்து நவம்பர் 18 ஆம் நாள் மாலையில் இவர்கள் ராயனுடன் அங்கிருந்து வெளியேறினர். கோயில் பாதுகாப்பு அதிகாரிகள் இவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் ராயன், மற்றும் மூன்று ஊடகவியலாளர்கள் உட்பட ஐவர் கொல்லப்பட்டனர். அதே நாள் இரவு ஜிம் ஜோன்ஸ் தனது கோயில் உறுப்பினர்கள் அனைவரையும் சயனைட் கலந்த பானம் அருந்த உத்தரவிட்டார். ஜிம் ஜோன்ஸ் துப்பாக்கிச் சூடு பட்டு இறந்ததாகப் பின்னர் அறியப்பட்டது. அத்துடன் அவரது உடலில் போதை மருந்து அதிகளவில் ஏற்றப்பட்டிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் இந்நிகழ்வில் 918 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 270 பேர் சிறுவர்கள்.
                              மொர்மனிசம் ஒரு கிறிஸ்தவ சமயப் பிரிவு. மொர்மனிசம் Latter Day Saint movement மற்றும் The Church of Jesus Christ of Latter-day Saints ஆகியவறின் சமய, பண்பாட்டு, கருத்து போக்குளைக் குறித்து நிற்கின்றது. Book of Mormon இந்த சமயப் பிரிவின் மறைநூலாகும். இது பைபிளையும் தனது சமய நூற்களில் ஒன்றாக கருதுகிறது.மொர்மனிசமும் மையநீரோட்ட கிறீஸ்துவ சமயப்பிருவுகளுடன் ஒரு சுமூகமான உறுவு இல்லை. பல விசித்திரமான சமயக் கொள்கைகள் மொர்மனிசத்திடம் உண்டு. சில வழிமுறைகளைப் பின்வற்றுவதன் மூலம் மனிதர்கள் கடவுளாக வரலாம் என்பது, பல மனவிகளை மணப்பது, சமய குற்றம் (sin) இழைத்தோரைக் கொல்வது போன்றவை இவற்றுள் அடங்கும்.
                                லூதரனியம்என்பது "நம்பிக்கையால் மட்டுமே மீட்பு உண்டு" என்னும் கொள்கையை கொண்டுள்ள இறையியல் இயக்கத்தைக் குறிக்கும். இது தன் பெரும்பாண்மையான கொட்பாடுகளை மார்ட்டின் லூதர் என்னும் ஜெர்மனிய சீர்திருத்தவாதியிடமிருந்து பெருகின்றது. லூதர் காலத்திலேயே அவர் தொடங்கிய சீர்திருத்தம் மாற்று கருத்துக்களால் பலவாறாகப் பிரிந்தது. ஆங்கிலியன், கால்வினியம், பிரெஸ்பைடேரியன், அனபாப்டிஸ்ட் என்றெல்லாம் பிரிவுகள் தோன்றி எல்லாவற்றுக்கும் மொத்த அடையாளமாகக் கத்தோலிக்கத்திலிருந்து விலகி வந்த கூறுகள் புராட்டஸ்டன்ட் என்று பொதுப் பெயரிட்டு அழைக்கப் படலாயின. மார்டின் லூதர் தொடக்கத்தில் கத்தோலிக்க சபைக்கு மாற்றாக நிறுவிய சீர்திருத்தக் கிறிஸ்தவ சபை இன்றளவும் லூதரன் ஆலயம், லூதரன் சபை (லூதரன் சர்ச்)என்றெல்லாந்தான் அழைக்கப் படுகிறது. அவர்களின் சீர்திருத்தக் கோட்பாடு லூதரனியம் என்று அடையாளப் படுத்தப் படுகிறது.

கிறிஸ்தவ அடையாளங்கள்.

Picture
                      சிலுவை சிலுவை இரண்டு கோடுகள் ஒன்றை ஒன்று 90° கோணத்தில் வெட்டும்போது உண்டாகும் கேத்திரகணித வடிவமாகும். இக்கோடுகள் கிடையாகவும் செங்குத்தாகவோ அல்லது மூலைவிட்டங்கள் வழியாகவோ செல்லும் சிலுவைகள் அதிகமாகும். ஆதி மனிதன் பயன்படுத்தியது சிலுவை ஆதி மனிதன் பயன்படுத்திய அடையாள குறியீடுகளில் ஒன்றாகும் மேலும் இது பல சம்மயங்களில் சமயசின்னமாக பயன்படுத்தப்படுகிறது, முக்கியமாக இது கிறிஸ்தவ சமயசின்னமாகும். குறியீடுகள் சிலுவைகள் பல இடங்களில் பல தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. கணிதத்தில் இதன் பயன்பாடு அதிகமாகும்.
உறோமன் இலக்கம் பத்து X ஆகும்.
இலத்தீன் அகரவரிசையில் X எழுத்தும் t எழுத்தும் சிலுவைகளாகும்
ஹன் எழுத்தில் பத்து 十
கூட்டல் அடையாளம் (+)
பெருக்கல் அடையாளம் (x)

பிழை அடையாளம் (x)
                             சிலுவைப் பாதை (Stations of the Cross) என்பது இயேசு கிறித்து தம் மண்ணக வாழ்வின் இறுதி நாள்களில் துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த நிகழ்வுகளை நினைவு கூர்கின்ற வழிபாட்டுச் செயல் ஆகும். இந்த வழிபாட்டுச் செயல் கத்தோலிக்கக் கிறித்தவரிடையே பரவலாக உள்ளது. லூத்தரன் மற்றும் ஆங்கிலிக்கன் சபையாரிடையே இப்பழக்கம் அதிகமாக இல்லை. அசிசி நகர் தூய பிரான்சிசு என்பவர் காலம் தொடங்கி (1181/1182-1226) சிலுவைப் பாதை கிறித்தவ கோவில்களில் நடைபெற்று வருகிறது. தவக் காலத்தின் போதும், குறிப்பாக பெரிய வெள்ளிக் கிழமையன்றும் கிறித்தவர்கள் சிலுவைப் பாதை கொண்டாடுகிறார்கள்.
                      சிலுவைப் பாதையின் வரலாறும் உட்பொருளும் இயேசு கிறித்து துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த எருசலேம் நகருக்குத் திருப்பயணம் சென்றுவர மக்கள் எப்போதுமே விரும்பியதுண்டு. இயேசு தம் தோள்மேல் சுமத்தப்பட்ட சிலுவையைச் சுமந்துகொண்டு வழிநடந்த பாதையில் கிறித்தவர்களும் நடந்துசெல்ல விழைந்தார்கள். ஆனால் எருசலேம் சென்றுவர எல்லாருக்கும் வசதி இருக்கவில்லை. எனவே ஐரோப்பாவின் வெவ்வேறு நாடுகளில், குறிப்பாக இத்தாலி நாட்டில் சிலுவைப் பாதை அல்லது சிலுவை நிலைகள் (Way of the Cross or Stations of the Cross) என்னும் வழக்கம் உருவானது. இயேசுவுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட நிகழ்ச்சி, அவர்மீது சிலுவை சுமத்தப்பட்ட நிகழ்ச்சி, அவர் சிலுவையில் அறையுண்ட நிகழ்ச்சி, அவர் சிலுவையில் உயிர்துறந்த நிகழ்ச்சி போன்றவற்றைப் படிமங்களாக அல்லது உருவச் சிலைகளாக வடித்து, தியானத்திற்கு உதவும் கருவிகளாகப் பயன்படுத்தினர். 18ஆம் நூற்றாண்டில் இவ்வழக்கம் கிறித்தவத் திருச்சபை முழுவதும் பரவியது. இயேசு அனுபவித்த துன்பங்களை நினைவுகூர்ந்து, தியானித்து, இறைவேண்டல் செய்ய மொத்தம் பதினான்கு நிலைகள் பயன்படும் எனவும் உறுதி செய்யப்பட்டது.
                           சிலுவைப் பாதையின் பதினான்கு நிலைகள் 1. இயேசுவுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்படுகிறது
2. இயேசுவின்மீது சிலுவையைச் சுமத்துகிறார்கள்
3. இயேசு முதல் முறை கீழே விழுகிறார்
4. இயேசு தம் தாய் மரியாவைச் சந்திக்கிறார்
5. சிரேன் ஊர் சீமோன் என்பவர் இயேசுவின் சிலுவையைச் சுமந்து உதவுகிறார்
6. வெரோணிக்கா என்னும் பெண்மணி இயேசுவின் திருமுகத்தைத் துணியால் துடைக்கிறார்
7. இயேசு இரண்டாம் முறை கீழே விழுகிறார்
8. இயேசு எருசலேம் நகரப் பெண்களைச் சந்திக்கிறார்
9. இயேசு மூன்றாம் முறை கீழே விழுகிறார்
10. இயேசுவின் ஆடைகளை உரிகிறார்கள்
11. இயேசுவைச் சிலுவையில் அறைகிறார்கள்
12. இயேசு சிலுவையில் உயிர் துறக்கிறார்
13. இயேசுவின் திருவுடலைச் சிலுவையிலிருந்து இறக்குகிறார்கள்
14. இயேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள் மேற்கூறிய பதினான்கு நிலைகளோடு இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சியைப் பதினைந்தாம் நிலையாகச் சேர்ப்பது இன்றைய வழக்கம்.
                                    தூய ஆவி என்பது கிறித்துவத்தில் கடவுளின் ஆவி எனவும், கடவுளின் சாரம் எனவும் பொருள்படும். தம திரித்துவக் கொள்கையையுடைய கிறித்துவ உட்பிரிவிகளின் படி, ஒரே கடவுள் மூன்று ஆள்களாயிருக்கிறார். முதலாமவர் தந்தை. இரண்டாமவர் மகன் (இயேசு). மூன்றாமவர் தூய ஆவியார். இவர் பிதாவோடும் மகனோடும் ஒரே கடவுளாக இருப்பவர். இவர் உலகையும், திருச்சபையையும் இன்றும் புதுப்பித்துக்கொண்டு வருகிறார் என கிறித்துவர்களால் நம்பப்படுகிறது.தூய ஆவியின் வரங்கள்
1. ஞானம்
2. மெய்யுணர்வு
3. அறிவுரைத்திறன்
4. நுண்மதி
5. இறைபற்று
6. இறை அச்சம்
தூய ஆவியின் கனிகள்
1. அன்பு
2. மகிழ்ச்சி
3. அமைதி
4. பொறுமை
5. பரிவு
6. நன்னயம்
7. நம்பிக்கை
8. கனிவு
9. தன்னடக்கம்
10. பண்புதயம்
11. தாராளகுணம்
12. நிறை கற்பு