சோதிடம்என்பது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்படுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எதிர்வு கூறவும் விழையும் ஒரு துறையாகும். சோதிடத்துக்கு அறிவியல் அடிப்படை இல்லாதபோதும், மேற்கு கிழக்கு என்ற வேறுபாடின்றி உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் சோதிடத்தை நம்புகின்றனர். உலகின் பல பகுதிகளிலும் இருந்து வெளியாகும் செய்திப் பத்திரிகைகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான பத்திரிகைகள் சோதிட ரீதியான அன்றாட பலன்களைத் தாங்கிவருவதே இதற்குச் சான்று.கோள்களும், வான் வெளியில் அவற்றின் நகர்வுகளும் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் தாக்கத்தை உண்டாக்குகின்றன என்னும் கருத்துருவே சோதிட நூலின் அடிப்படையாகும்.
வானியல் அடிப்படை
வேத காலத்திலிருந்து இந்த அறிவு விரிவாக்கம் பெற்று வளர்ச்சியடைந்த கால கட்டங்களில் முக்கியமான ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூன்று விஷயங்கள் பற்றிய சிந்தனை வளர்ச்சியை இந்தத் துறை உள்ளடக்கியது –
1. வானியல் : வெளியில் தோன்றும் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை இனம் கண்டு வகைப் படுத்துவது. அவற்றின் இயக்கம் மற்றும் சுழற்சி பற்றி அறிவது, தட்பவெப்ப நிலை மாற்றங்களில் வான் பொருட்களின் (celestial objects) தாக்கம், கிரகணங்கள், வால் நட்சத்திரங்கள் போன்றவற்றைப் புரிந்து கொள்ளுதல் முதலியவை.
2. கணிதம் :வான் பொருட்களின் இடம் மற்றும் இயக்கம் பற்றிய அறிவை முன்னெடுத்துச் செல்ல அடிப்படை ஜியோமிதி மற்றும் முக்கோணவியல் (Trignometry) அத்தியாவசியமாயிற்று. ‘கணிதம்’ என்பதும் ஆறு வேத அங்கங்களில் ஒன்றாக அறியப்பட்டுத் தனித் துறையாக வளர்ந்து வந்தது. எனவே, ஜோதிடத்திலும் கணித அறிவின் பல கூறுகள் பயன்படுத்தப் பட்டன.
3. கால அளவு முறைகள்: எல்லா பண்டைய நாகரீகங்களின் வளர்ச்சியிலும் காலக் கணக்கு முறைகள் இயற்கை நிகழ்வுகளின் அடிப்படையிலேயே உண்டாயின. பன்னிரண்டு ராசிகள், சந்திரனின் வளர்பிறை, தேய்பிறை சுழற்சியைக் கொண்டு நாட்களை அளவிடுதல் போன்றவை. பிறப்பு, இறப்பு நாட்கள், பருவங்கள், பண்டிகைகள் இவை அனைத்தும் இந்தக் கால அளவு முறையிலேயே குறித்து வைக்கப் பட்டன. ஆவணி மாதம் வளர்பிறையில் அஷ்டமியும் ரோகிணியும் கூடியிருந்த நாளில் கண்ணன் பிறந்தான் என்பது போல. பஞ்சாங்கம் என்பது அடிப்படையில் ஒரு காலக் கணக்குக் காட்டி என்பதாகவே உருவாயிற்று.
கோள்களும், விண்மீன் குழுக்களும் (constellation) வான்வெளியிலுள்ள பொருட்களே. அவை புவியீர்ப்பு விசையின் விதிகளுக்கு உட்பட்டே விளங்குகின்றன. வான்வெளியில் இவற்றின் இருப்பிடத்தை காலத்தின் அடிப்படையில் கணிக்கலாம். பண்டைக்காலச் சோதிட நூல்கள் 9 கோள்கள் பற்றிக் கூறுகின்றன. இவற்றுள் 7 உண்மைக்கோள்களாகும் ஏனைய இரண்டும் நிழற்கோள்கள் எனப்படுகின்றன. அக்கோள்கள் பின்வருமாரு:
- சூரியன் (ஞாயிறு Sun)
- சந்திரன் (திங்கள் Moon)
- செவ்வாய் (Mars)
- புதன் (அறிவன் Mercury)
- குரு (வியாழன் Jupiter)
- சுக்கிரன் (வெள்ளி Venus)
- சனி (காரி Saturn)
- இராகு (நிழற்கோள்)
- கேது (நிழற்கோள்)
1. மேடம் (மேஷம்)
2. இடபம் (ரிஷபம்)
3. மிதுனம்
4. கர்க்கடகம் (கடகம்)
5. சிங்கம் (சிம்மம்)
6. கன்னி
7. துலாம்
8. விருச்சிகம்
9. தனு (தனுசு)
10. மகரம்
11. கும்பம்
12. மீனம்
சோதிடத்தில் விண்மீன் குழுக்கள் ஞாயிற்றின் தோற்றுப்பாதை (முழுவதுமாக 360 பாகை) 131⁄3 பாகை இடைவெளியில் 27 விண்மீன் குழுக்களாக கூர் செய்யப்பட்டுள்ளது. 'அசுவினி' ஞாயிற்றின் தோற்றுப்பாதையில் முதற் கூராகும், 'ரேவதி' கடைக்கூராகும். இதன்படி, ஒரு கோளின் நிலநிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன்குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம். ஒவ்வொரு விண்மீன் குழுவையும் மேலும் 31⁄3 பாகைகள் கொண்ட 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவு 'பாதம்' எனப்படும். ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் மீதுள்ள இராசி சக்கரமும் 30 பாகை இடைவெளியில் 12 இராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'மேடம்' இராசி சக்கரத்தில் முதற் கூராகும், 'மீனம்' கடைக்கூராகும். இராசி சக்கரத்தில் உள்ள 12 இராசிகளையும், 27 விண்மீன் குழுக்களையும், ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் பாகைகளையும் பின்வருமாறு இணைத்து பட்டியலிடலாம்:
1. அசுவினி முதலாம் பாதம் மேடம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம்
2. பரணி முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம்
3. கார்த்திகை முதலாம் பாதம் இரண்டாம் பாதம் இடபம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம்
- 4. ரோகிணி முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் 5. மிருகசீரிடம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் மிதுனம் நான்காம் பாதம்
6. திருவாதிரை முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம்
7. புனர்பூசம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் கர்க்கடகம்
8. பூசம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம்
9. ஆயிலியம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம்
10. மகம் முதலாம் பாதம் சிங்கம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம்
11. பூரம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம்
12. உத்தரம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் கன்னி மூன்றாம் பாதம் நான்காம் பாதம்
13. அத்தம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம்
14. சித்திரை முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் துலாம் நான்காம் பாதம்
15. சுவாதி முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம்
16. விசாகம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் விருச்சிகம்
17. அனுஷம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம்
18. கேட்டை முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம்
19. மூலம் முதலாம் பாதம் தனு இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம்
20. பூராடம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம்
21. உத்திராடம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மகரம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம்
22. திருவோணம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம்
23. அவிட்டம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் கும்பம் நான்காம் பாதம்
24. சதயம் முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம்
25. பூரட்டாதி முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம் மீனம்
26. உத்திரட்டாதி முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம்
27. ரேவதி முதலாம் பாதம் இரண்டாம் பாதம் மூன்றாம் பாதம் நான்காம் பாதம்
27 நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தெய்வங்கள்
நட்சத்திரங்கள் -அதிஸ்டம் தரும் தெய்வங்கள்
01. அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி
02. பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
03. கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
04. ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
05. மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
06. திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்
07. புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
08. பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
09. ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
10. மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
11. பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி
12. உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி
13. அத்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி
14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15. சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.
17. அனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர்.
18. கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
19. மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22. திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
23. அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)
24. சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25. பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26. உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
27. ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்.
மேலே குறிப்பிட்டள்ளது ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிஸ்டம் தரக் கூடிய தெய்வங்கள் ஆகும். மேலே தரப்பட்டுள்ள தெய்வங்களின் காயத்திரி மந்திரம், அஸ்டோத்திரம் ஜெபம், அவர்களின் திருக்கோவில் வழிபாடு, அவர்களின் உருவத் தியானம் ஆகியன செய்து வழிபடலாம். இருப்பினும் குல தெய்வ வழிபாடு மிக முக்கியமான வழிபாடாகும். குல தெய்வ வழிபாடிருந்தால் மட்டுமே மற்ற எந்த வழிபாடாயினும் சிறப்பைத் தரும். இதனைத் தவிர அவர்அவர்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கிரகமெதுவோ அந்த கிரகத்திற்குரிய அதிதேவதையான தெய்வத்தினையும் வழிபட்டு வாழ்வில் சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.
நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம்
1. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் - சிவன்
2. ரோகிணி, அத்தம், திருவோணம் - சந்திரன் - சக்தி
3. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன்
4. திருவாதிரை, சுவாதி, சதையம் - ராகு - காளி, துரக்;கை
5. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு - தட்சிணாமூர்த்தி
6. பூசம், அனுசம், உத்திரட்டாதி - சனி - சாஸ்தா
7. ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - விஷ்ணு
8. மகம், மூலம், அசுவினி - கேது - வினாயகர்
9. பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் - மகாலக்மி
மேற்கூறிய வழிமுறை இல்வாழ்க்கைக் குறியது “பிறவிப் பெருங்கடல் நீத்துவர் நீத்தார் இறைவனடி சேராதவர்” என்ற திருவள்ளுவரின் வாக்குப்படி இறைவன் அடியினை சேர விரும்புபவர்கள் அதாவது இனியொரு பிறவி வேண்டாம் முத்தீ – மோட்சம் அடைய வேண்டும் என நினைப்பவர்கள் ஜோதிடப்படி 12ம் வீடு, அதற்குரிய கிரகம், அந்த கிரகம் இருக்கும் வீடு, அந்த வீட்டிற்குரிய கிரகம், 12ம் வீட்டினை பார்க்கும் கிரகம், 12ம் வீட்டில் உள்ள கிரகம், 12ம் வீட்டு கிரகத்துடன் சேர்ந்துள்ள கிரகங்கள், 12ம் வீட்டு கிரகத்தினைப் பார்க்கும் கிரகம் என பல தரப்பட்ட வழிகளிலும் ஆராய்ந்து தனக்குரிய வழிபாட்டு முறையினை தேர்ந்தெடுக்க வேண்டும்.