இன்று சீனாவுக்கோ பாகிஸ்தானுக்கோ நம் மக்கள் பயம்கொள்ளவேண்டி வருமா..?
************தேவர் சொன்னது இதுதான் ************
"தேசத்தை ஆளவேண்டும்மென்று விரும்பும்போது தேசத்தைப் பாதுகாக்க வேன்டிய அவசியமும் ஏற்ப்படுகிறது.
இந்தத் தேசத்திற்குச் சுதந்திரம் வந்தபிறகு இந்த தேசத்தின் இராணுவத்தைப் பற்றிக் கொஞ்சம் சிந்திக்கவேண்டும்.
பிறர் நம்மை தாக்கினால் இன்று நம் மக்கள் அந்தத் தாக்குதலை எந்த அளவுக்கு சமாளித்து நிற்கக்கூடிய நிலையிலேயே ராணுவப் பயிற்சியளிக்கப்படிருக்கின்றனர்
இந்த நாட்டிலே மக்களுக்கு நவீனப் ஆயுதங்களை எப்படி உபயோகிப்பது? என்பதைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க எவ்வளவு ராணுவப்பயிற்சி பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன?
இப்போது இருக்ககூடிய நிலையிலே பாகிஸ்தான் இந்தியாவை தாக்கிற்று என்றால் அதைச் சமாளிக்க என்ன ராணுவத் திட்டம் நம்மிடமிருக்கின்றது?
அதற்காக ஏதாவது ராணுவ பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்தி, எப்படி எதிர்ப்பை எதிர்த்து நிற்பது பற்றிச் சொல்லிக் கொடுக்கக் கூடாதா?
தீபாவளி வருகிறபோது வீட்டிலே இருக்கிற ஒரு சிறு வாண்டுப் பையன், பட்டாசு என்ற "சீனா" வெடி ஒன்றைக் கொளுத்திப் போடுவானேயானால், தாய்மார்களும் தந்தைமார்களும் அலறி அடித்துக்கொண்டு, பயத்தால் மல்லாந்து அப்பாற்போய் விழுகின்ற அளவுக்கு நம் தேசமக்கள் கோழைகளாக இருக்கின்றார்கள்.
அவர்களை எப்போது தைரியசாலிகளாக ஆக்கப்போகிறீர்கள்?
நம்மை ஆண்டுக்கொண்டிருந்த வெள்ளையன் நம்மை இன்றைக்கும், "இந்தியர்கள் கோழைகள் தைரியமற்றவர்கள்; பயந்தாங்கொள்ளிகள்" என்று இழிவுப்படுத்துகிறானே அதை என்று போக்கிக்கொள்ளப் போகிறோம்?
இந்திய மக்களின் நெஞ்சிலே என்றைக்கு புதிய உரத்தை ஏற்றப்போகிறோம்?***
- திரு.பசும்போன் தேவர்
(1952- ஜூலை மாதம் 9-ஆம் தேதி - சென்னை மகாணம் சட்டப்பேரவையில் பேசியது)
இந்திய மக்களை அரசாங்கம் என்று தன்னை தானே தற்காத்துக்கொள்ளும் சக்தியை தரப்போகிறது?
Via Hindu Madurai'