நம் முன்னோர்கள் கூறிய பழமொழிகளில் சில காலப்போக்கில் மாற்றப்பட்டுள்ளதற்கு இதுவும் நல்ல உதாரணம். ஏனென்றால், “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்பதே உண்மையான பழமொழியாகும். காலப்போக்கில் “போய் சொல்லி” என்ற வார்த்தை “பொய் சொல்லி” என மாற்றப்பட்டு விட்டது.
பழங்காலத்தில், சுற்றத்தினர் பற்றி அவ்வளவாக அறியப்படாத காரணத்தால் பெண் கொடுக்கும் முன் அந்தக் குடும்பத்தினர் பலமுறை யோசனை செய்வர். அதனால் மாப்பிள்ளை வீட்டிற்கு நெருக்கமானவர்கள், பெண் வீட்டாரிடம் பலமுறை சென்று, “நல்ல வரன்தான், நீங்கள் தாராளமாக பெண் கொடுக்கலாம்” என வலியுறுத்துவர். இதைத்தான் “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்று குறிப்பிட்டனர்.
ஆனால் தற்போது இந்தப் பழமொழி மருவி, “ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” எனக் கூறப்படுவதால், பலர் மாப்பிள்ளை, பெண் வீட்டாரிடம் சில உண்மைகளை மறைத்து திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இதனால் தம்பதிகளின் வாழ்க்கைதான் பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொண்டால் நல்லது.
Via ஒ ! சட்டை மேலே எவ்ளோ பட்டன்