வெற்றிகரமாகவும் ஊக்கமாகவும் இருங்கள்..கனவு காணுங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:15 AM | Best Blogger Tips

Buy 3Millions Wooden Showpiece Dream Believe Achieve Quotes for Study Table  | Kids Room | Office Desk | Home Decoration | Living Room | Modern Gifting  Showpiece Item Online at Low Prices in India - Amazon.in

வெற்றிகரமாகவும் ஊக்கமாகவும் இருங்கள்..

1.உங்கள் வரம்பு -  உங்கள் கற்பனை மட்டுமே வானமே எல்லை .

2 உங்களை நீங்களே இலக்கை நோக்கித் தள்ளுங்கள், ஏனென்றால் வேறு யாரும் அதை உங்களுக்காக செய்யப்போவதில்லை.

3 சில நேரங்களில் பிறகு பார்த்துக்கலாம்  என்பது ஒருபோதும் ஆகாது. உடனே செய்.

4. பெரிய விஷயங்கள் ஒருபோதும் பாதுகாப்பான  சூழலில் இருந்து  வருவதில்லை.

5. கனவு காண்க. அதை விரும்புங்கள் . செய்யுங்கள் .
6. வெற்றி உங்களைக் கண்டு பிடிக்கவில்லை என்றால்  நீங்கள் வெளியே சென்று அதைப் பெற வேண்டும்.

7. நீங்கள் எதையாவது அடையக் கடினமாக உழைக்கிறீர்கள், அதை அடையும் போது நீங்கள் அதிகமாக உணருவீர்கள்.
 Motivational Quote about Dream Stock Vector - Illustration of believe,  motivational: 80350004
8. பெரியதாக கனவு காணுங்கள் . பெரிதாகச் செய்யுங்கள்.

9. நீங்கள் சோர்வாக இருக்கும் போது நிறுத்த வேண்டாம். நீங்கள் முடித்ததும் நிறுத்துங்கள்.

10. உறுதியுடன் எழுந்திருங்கள். திருப்தியுடன் படுக்கைக்குச் செல்லுங்கள்.

11. உங்கள் எதிர்காலம் உங்கள் வசமாக  மாற இன்று ஏதாவது செய்யுங்கள்

12. சிறிய விஷயங்கள் பெரிய நாட்களை உருவாக்குகின்றன.
வெற்றி அடைய கனவு காணுங்கள்!
13. ஒன்று கடினமாக இருக்கும், ஆனால் கடினமானது என்பது சாத்தியமற்றது என்று அர்த்தமல்ல.

14. வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டாம். அதை உருவாக்கவும்.

15. சில நேரங்களில் நாம்  பலவீனங்களைக் காட்ட அல்ல, மாறாக நம் பலங்களைக் கண்டறிய சோதிக்கப்படுகிறோம்.

16. வெற்றிக்கான திறவுகோல் தடைகளில் அல்ல, இலக்குகளில் கவனம் செலுத்துவதாகும்.

17. கனவு காணுங்கள் . நம்புங்கள். அதை உருவாக்குங்கள்.

இந்தநாள் இனிய நாளாக இருக்க வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்..
🌹 ரமேஷ் ராமலிங்கம்
🌹

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 

உணர்வு மேலாண்மை❤️💕💜💖💖❤️💜💖💕

மணக்கால் அய்யம்பேட்டை | 10:24 AM | Best Blogger Tips

 
உணர்வு மேலாண்மை

நம் உணர்வுகளைச் சரியாக கையாள வேண்டும் இல்லையெனில் மன ரீதியான பிரச்சனைகளையும், பண ரீதியான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும் ஏன் என்றால் நம் உணர்வுகளே நம்மை வழி நடத்துகின்றன.

நீங்கள் எத்தனை நேர்மறையான செய்திகளை, காணொளிகளைப் பார்த்தாலும், படித்தாலும் உங்கள் உணர்வுகள் சரியாக இல்லையெனில் அது உங்களுக்கு முழுமையான பலனைக் கொடுக்காது.

உங்கள் உணர்வுகள் சரியாக இல்லையெனில் உங்களைச் சுற்றி எத்தனை நேர்மறையான மனிதர்கள் இருந்தாலும் உங்கள் எண்ணங்கள் எதிர்மறையாக மாறுவதைத் முழுமையாகத் தடுக்க முடியாது.

எதிர்மறை உணர்வுடன் இருந்தால், நேர்மறை அதிர்வுகள் அதிகமாக இருக்கும் புனிதத் தளங்களினாலும் உங்களுக்கு நேர்மறை எண்ணங்களை ஒரு அளவிற்கு மேல் அதிகமாக்க முடியாது.
Unarvu melanmai - An online Tamil story written by Thakarthik tamizh |  Pratilipi.com
இதற்கான மூலக் காரணத்தை மீண்டும் தெளிவாகக் கூறுகிறேன்.

உங்களுக்கு நேர்மறை எண்ணம் உருவாக வேண்டுமா? அல்லது எதிர்மறை எண்ணம் உருவாக வேண்டுமா? என்பதை முடிவு செய்வதே உங்கள் உணர்வுகள் தான். 

உங்களுடைய உணர்வுகளை எந்த சூழலிலும் சரியாக வழி நடத்தக் கற்றுக் கொள்ளுங்கள். 

நேர்மறை எண்ணங்களை மட்டும் வளர்த்துக் கொள்ள நினைத்து, உங்கள் உணர்வுகளை கண்டு கொள்ளாமல் இருக்காதீர்கள்.

இத்தனை சக்தி வாய்ந்த உங்கள் உணர்வுகளை சரியாகக் கையாளுவது மிகவும் கடினமென நினைத்து விடாதீர்கள், அது மிகவும் எளிமையானது. அதற்கான சரியான மற்றும் எளிமையான வழியைக் கூறுகிறேன்.
உணர்ச்சி நுண்ணறிவு திறன்கள்: தலைமைத்துவத்தின் சிறந்த 5 பண்புகள்
அந்த வழி,

உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருப்பது தான். உங்கள் மனசாட்சிக்கு நீங்கள் உண்மையாக இருந்தாலே போதும் உங்கள் உணர்வுகள் சரியாக இருக்கும். 

யாரையும் புறம் பேசாமல், யாரையும் வேதனைப் படுத்தாமல், யாரையும் எதற்காகவும் எப்போதும் தவறாக எண்ணாமல் உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருந்தாலே போதும். 
உணர்வு பகுப்பாய்விற்கான உரை சிறுகுறிப்பு செயல்முறையைப் புரிந்துகொள்வது |  ஹைடெக் டிஜிட்டல்
யாரே ஒருவர் தவறு செய்வதை நினைத்து, அவர்களையே நினைத்து, அவர்களுடைய எதிர்மறை செயலை உங்கள் மனதிற்குள் அனுமதித்து உங்கள் உணர்வுகளை நீங்களே கெடுத்துக் கொள்ளாமல் இருந்தாலே போதும்.

மொத்தத்தில்,

உங்களுக்கு நீங்கள் 100% உண்மையாக இருந்தாலே போதும்.

😊
 

❤️💕💜💖💖❤️💜💖💕 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 


  🌷 🌷🌷 🌷