உணர்வு மேலாண்மை
நம் உணர்வுகளைச் சரியாக கையாள வேண்டும் இல்லையெனில் மன ரீதியான பிரச்சனைகளையும், பண ரீதியான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும் ஏன் என்றால் நம் உணர்வுகளே நம்மை வழி நடத்துகின்றன.
நீங்கள் எத்தனை நேர்மறையான செய்திகளை, காணொளிகளைப் பார்த்தாலும், படித்தாலும் உங்கள் உணர்வுகள் சரியாக இல்லையெனில் அது உங்களுக்கு முழுமையான பலனைக் கொடுக்காது.
உங்கள் உணர்வுகள் சரியாக இல்லையெனில் உங்களைச் சுற்றி எத்தனை நேர்மறையான மனிதர்கள் இருந்தாலும் உங்கள் எண்ணங்கள் எதிர்மறையாக மாறுவதைத் முழுமையாகத் தடுக்க முடியாது.
எதிர்மறை உணர்வுடன் இருந்தால், நேர்மறை அதிர்வுகள் அதிகமாக இருக்கும் புனிதத் தளங்களினாலும் உங்களுக்கு நேர்மறை எண்ணங்களை ஒரு அளவிற்கு மேல் அதிகமாக்க முடியாது.
இதற்கான மூலக் காரணத்தை மீண்டும் தெளிவாகக் கூறுகிறேன்.
உங்களுக்கு நேர்மறை எண்ணம் உருவாக வேண்டுமா? அல்லது எதிர்மறை எண்ணம் உருவாக வேண்டுமா? என்பதை முடிவு செய்வதே உங்கள் உணர்வுகள் தான்.
உங்களுடைய உணர்வுகளை எந்த சூழலிலும் சரியாக வழி நடத்தக் கற்றுக் கொள்ளுங்கள்.
நேர்மறை எண்ணங்களை மட்டும் வளர்த்துக் கொள்ள நினைத்து, உங்கள் உணர்வுகளை கண்டு கொள்ளாமல் இருக்காதீர்கள்.
இத்தனை சக்தி வாய்ந்த உங்கள் உணர்வுகளை சரியாகக் கையாளுவது மிகவும் கடினமென நினைத்து விடாதீர்கள், அது மிகவும் எளிமையானது. அதற்கான சரியான மற்றும் எளிமையான வழியைக் கூறுகிறேன்.

அந்த வழி,
உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருப்பது தான். உங்கள் மனசாட்சிக்கு நீங்கள் உண்மையாக இருந்தாலே போதும் உங்கள் உணர்வுகள் சரியாக இருக்கும்.
யாரையும் புறம் பேசாமல், யாரையும் வேதனைப் படுத்தாமல், யாரையும் எதற்காகவும் எப்போதும் தவறாக எண்ணாமல் உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருந்தாலே போதும்.
யாரே ஒருவர் தவறு செய்வதை நினைத்து, அவர்களையே நினைத்து, அவர்களுடைய எதிர்மறை செயலை உங்கள் மனதிற்குள் அனுமதித்து உங்கள் உணர்வுகளை நீங்களே கெடுத்துக் கொள்ளாமல் இருந்தாலே போதும்.
மொத்தத்தில்,
உங்களுக்கு நீங்கள் 100% உண்மையாக இருந்தாலே போதும்.
😊
❤️💕💜💖💖❤️💜💖💕
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷


