கர்வம் தவிர் மனிதனை மனிதனாக பார் !!

மணக்கால் அய்யம்பேட்டை | 6:01 PM | Best Blogger Tips
கர்வம் தவிர் மனிதனை மனிதனாக பார் !!

'கர்வமுடையவர்கள் எப்போதும் மற்றவர்களைக் குனிந்தே பார்ப்பதால், தமக்கு மேல் இருக்கும் உயரிய விஷயங்களைப் பார்க்கும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்' என்கிறார், கடந்த நூற்றாண்டின் பெருமைக்குரிய அயர்லாந்து நாட்டு எழுத்தாளர் சி.எஸ். லூயிஸ்.

தன்னை மட்டும் பல்லக்கில் உட்கார வைத்து, மற்றவர்களை மதிப்புக் குறைந்தவர்களாய்ப் பார்க்க வைப்பது கர்வத்தின் முதல் வேலை.மனிதனுடைய வளர்ச்சிப்படியில் கர்வம் கால்நீட்டிப் படுத்திருக்கும். இதுதான் கடைசிப் படி என மனிதன் அதன் காலடியில் இளைப்பாறத் துவங்கும்போது, வெற்றிகளின் கதவுகள் துருப்பிடிக்கத் துவங்கும்.

கர்வம் மனிதனின் வேகக்கால்களை வெட்டி வீழ்த்தும் கண்ணுக்குத் தெரியாத ஆயுதம்.கொஞ்சம் நடுநிலைமையோடு கர்வத்தின் முகங்களைக் கொஞ்சம் கூர்மையாகப் பார்த்தால், கர்வம் நமது தனி வாழ்க்கையையும், சமூக வாழ்க்கையையும் எப்படியெல்லாம் பாதிக்கிறது எனும் கோரமான உண்மை புரியும்.எனக்கு எல்லாம் தெரியும்' என்பது கர்வக் கிரீடத்தின் குரல்ஆழ்மனதின் ஆழத்தை எட்டிப் பார்த்தால் வெற்றிடங்களின் விலாசமே தெரியும்.

எல்லாம் தெரியும் எனும் கர்வம், தனது குடத்தை மூடி வைத்து விடுகிறது. தண்ணீர் நிரம்பாத நிலை அதன் நிரந்தரமாகி விடுகிறது.

'நீ எனக்கு மரியாதை செலுத்த வேண்டும்' என கர்வத்தின் வேர்கள் கூக்குரலிடும்.

பிறருடைய மரியாதை மழையில் நனைய நினைக்கும் தாவரமாய் கர்வம் மனிதனை நடுவழியில் இறக்கிவிடும்.'மரியாதையை எதிர்பார்க்கும் மனம், பிறரை மரியாதை செய்ய மறுத்தும் விடும்' என்பதுதான் நிதர்சனத்தின் இன்னோர் பக்கம்.

'நான் எல்லோரையும் விட பெரியவன்' என கர்வம் தனது காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளும்.தனது வெற்றுக் கொடியை வேற்றுக் கிரகத்தில் நாட்ட வேண்டுமென நாட்டம் கொள்ளும்.

அடுத்தவனை விட நான் பெரியவன் எனும் சிந்தனையே அவன் மனதிலிருந்து ஒட்டுமொத்தப் பணிவையும் தூக்கி பரணில் போடும்.இதோ என் சாதனைகளின் பட்டியல்' என வெற்றிப் பட்டியலை கர்வம் தனது நெஞ்சில் சுமந்து திரியும். தவறுகளின் நிகழ்வுகளை யாரும் காணா எல்லைக்கப்பால் நாடு கடத்தும்.
தனது வெற்றிகளைப் பறைசாற்றவும், சாமான்யன் தனக்குச் சாமரங்கள் வீச வேண்டுமென எதிர்பார்க்கவும் கர்வம் துடிதுடிக்கும்.

'நான் தவறுகளுக்கு அப்பாற்பட்டவன்' என கர்வம் முகமூடியை முகமாக்க முயலும். தவறுகள் செய்யாத மனிதன் இல்லை- என்னைத் தவிர, என்று கர்வம் கொக்கரித்துத் திரியும்.'என் தகுதிக்குரியவை எனக்குக் கிடைத்திருக்கின்றன. மறுக்கப்பட்ட பலவற்றுக்கும் கூட நான் தகுதியானவனே' என கர்வம் தனக்குக் கிடைத்த பிறர் உதவிகளையோ, இறை வரங்களையோ கூட தனது காலடியில் மண்டியிடச் செய்யும். தன்னால்தான் எல்லாமே நடக்கின்றன எனும் சக்கரவர்த்தியின் மூச்சுக் காற்றாய் முணுமுணுக்கும்.

'என்னைப் பாராட்டுங்கள், நான் அதற்குத் தகுதியானவன்' என கர்வம் தனக்கான பாராட்டு அபிஷேகத்தை எப்போதும் எதிர்பார்க்கும். பாராட்டுவோர் பாக்கியவான்கள் என நினைத்து இன்னும் நாலு மடங்கு கர்வம் கொள்ளும்.

கர்வத்தின் கணக்கற்ற முகங்களின் சில முகங்களே இவை. கர்வம் தனது அலமாரி முழுக்க பல்வேறு முகத்திரைகளை வரிசையாய் வைத்திருக்கிறது. தனது தேவைக்கேற்ப ஒன்றை அது அணிந்து திரிகிறது.

ஏதோ ஒரு செயலைச் செய்துவிட்டால், அது நல்லபடியாய் முடிந்துவிட்டால் நம்மால் இயல்பாக இருக்க முடிவதில்லை. பெருமை வந்து விடுகிறது. அது அத்துடன் நின்று போவதில்லை. அதே செயலைச் செய்ய முயன்று தோற்றுப் போன எல்லோரையும் அது இளக்காரமாய்ப் பார்க்க ஆரம்பித்து விடுகிறது.

ஒரு மனிதனுடைய வெற்றி இன்னொரு மனிதனை வெற்றியை நோக்கி இழுக்க வேண்டுமே தவிர, அவனுடைய தோல்வியை விமர்சிப்பதாய் அமையக் கூடாது. மனிதநேயத்தின் இயல்பே அரவணைத்தலில்தான் இருக்கிறது. இல்லையேல் நீங்கள் அடைந்த வெற்றியே ஒருவகையில் உங்களுடைய இயல்பைச் சிதைப்பதால் தோல்வியாகி விடுகிறது.

பலர் செய்யும் ஒரு தவறு, கர்வத்தையும் தன்னம்பிக்கையையும் போட்டுக் குழப்பிக் கொள்வதுதான். தன்னம்பிக்கை வேறு, கர்வம் வேறு. தன்னம்பிக்கை உங்கள் மீது நீங்கள் வைக்கும் மரியாதை. கர்வம் என்பது பிறரைத் தாழ்ந்தவராய்க் கருதிக்கொள்ளும் உங்களுடைய ஆழ்மன ஆர்வம்.

என்னால் முடியும் என்பதும், என்னால் மட்டும்தான் முடியும் என்பதும் தன்னம்பிக்கைக்கும், கர்வத்துக்குமான ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.

தன்னம்பிக்கையை உளவியல் ரீதியான உந்துதல் என்று கொண்டால், கர்வத்தை மோசமான குணாதிசயம் எனலாம்.

கர்வம் மனிதனை தவறுகளை நோக்கிச் செலுத்தும் சுக்கானாகி விடுகிறது. கர்வம் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் மனதைத் தருவதில்லை. பழியைத் தூக்கி அடுத்தவர் தோளில் சுமத்தும் வழியையே தேடச் செய்யும். காரணம், கர்வத்தின் அஸ்திவாரத்தில் ஈகோ உறைந்து கிடக்கும்.

கர்வத்தைக் கழற்றி வைத்துவிட்டுச் சக மனிதர்களோடு கலந்து வாழும் வாழ்க்கையே ஆனந்தங்களின் இசையை திசையெங்கும் இசைக்கும். அதுவே தனிமைகளின் கூட்டை உடைத்து இனிமைகளின் கூட்டணியை அமைக்கும். கர்வத்தின் கல்வெட்டுகளைத் தாண்டி தாழ்மையின் படிக்கட்டுகளை நோக்கிய பயணமே மனிதகுலத்துக்கு அவசியம்.

தாழ்மை நம்மைப் பற்றிய ஆழமான அறிதலில் இருந்து புறப்படும். உண்மையில் நான் யார்? எனது மனம் மனிதநேயத்தின் தாழ்வாரங்களில்தான் நடக்கிறதா? பிறருக்குத் தெரியாத பலவீனங்கள் எனக்கு என்னென்ன இருக்கின்றன? கோபம், பொறாமை, சுயநலம், வெறுப்புணர்வு இப்படிப்பட்ட ஒவ்வோர் புரிதலும் நமது தாழ்மையைக் கூர்தீட்டும்.

தாழ்மை என்பது பச்சாதாபமல்ல. அது நம்மைக் கனவுப் பல்லக்கிலிருந்து இறங்கி வீதியில் நடக்க வைப்பது மட்டுமே. அது சக மனிதனின் மீதான கரிசனையின் மீது கட்டியெழுப்பப்படும். தன்னைப் பற்றிய மையத்தை விட்டு வெளியே வரும் மனதின் சிறகடிப்பே தாழ்மையின் வாசம்.

ஒரு மன்னனைக் காண ஏழை மனிதன் ஒருவன் வந்தான். நெடுநேரக் காத்திருப்புக்குப் பின் அவனுக்கு மன்னனைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. உள்ளே சென்றதும் தனது தலைப்பாகையை அவிழ்த்து மன்னனுக்கு முன்னால் குனிந்து வணங்கினான் அவன். மன்னனும் உடனே எழுந்து கிரீடத்தைக் கழற்றி வைத்துவிட்டுக் குனிந்து வணங்கினான்.

அந்த ஏழை சென்றபின் அமைச்சர்கள் மன்னனிடம் கேட்டார்கள், "அவன் ஓர் ஏழை, அவனுக்கு முன்னால் நீங்கள் ஏன் கிரீடம் கழற்றினீர்கள் மன்னரே?''

மன்னன் சொன்னான், "வந்தவன் செல்வத்தால் ஏழை. ஆனால் தாழ்மையில் அவன் மன்னனாக இருந்தான். அவனுக்கு முன்னால் நானும் கர்வத்தைக் கழற்றி வைத்துவிட்டு தாழ்மையை அணிவதே நல்லதெனப் பட்டது.''தாழ்மை என்பது கர்வத்தைக் கழற்றுவதுதான். யார் வேண்டுமானாலும் எட்டி மிதிக்கும் மிதியடியாய் மாறுவதல்ல.

பிறரைப் பாராட்டும் குணம் தாழ்மையான மனதின் வெளிப்பாடு. தான் மட்டுமே சிறப்பானவன் எனும் கர்வம் எப்போதுமே பாராட்டுகளை வழங்கத் தயங்கும். எல்லோரையும் சமமாய் நேசிக்கும் மனதில் பாராட்டுகளுக்குப் பஞ்சம் இருக்காது. பிறர் உயர்ந்தவர் என நாம் கருதும் வினாடியில் நாம் புதிய விஷயங்கள் சிலவற்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் உருவாகிறது என்பதை கவனத்தில் கொள்வோம்.விலக்கிவிட மிகவும் கஷ்டமான விஷயம் கர்வம்தான். நான் கர்வத்தை விட்டு விலகி தாழ்மையாய் மாறிவிட்டேன் என்று சொல்லும்போது கூட, 'நான் தாழ்மையின் சின்னம்' என கர்வம் கொள்ள முயல்கிறது மனது' என்கிறார் பெஞ்சமின் பிராங்ளின்.
கர்வம் என்பது எந்த விஷயத்துக்காக வேண்டுமானாலும் எழலாம் என்பதையே அவருடைய வாசகங்கள் படம் பிடிக்கின்றன. 'நான் நல்லவன்', 'நான் பிறரை மதிப்பவன்', 'நான் எளிமையானவன்', 'நான் கடவுள் பக்தி நிறைந்தவன்', 'நான் ஏழைகளுக்கு உதவுபவன்' என எந்த முளையிலிருந்து வேண்டுமானாலும் கர்வத்தின் தரு தழைத்து வளரலாம்.

தாழ்மை உங்களுடைய உறவினர்களோடு ஆழமான, நேர்மையான அன்புறவு கொள்ள வைக்கும். கர்வம் பல வேளைகளில் சண்டைகளுக்கான முதல் சுவடை வைத்து விடும். விட்டுக் கொடுத்தல் தாழ்மையின் அடையாளம். உறவுகளைக் கட்டி எழுப்புகையில் நமது வலக்கரமாய் செயல்படும் விஷயமும் அதுதான்.
தொட்டதுக்கெல்லாம் அடுத்தவர்களோடு ஒப்பிட்டு, அவர்களை விட நான் பெரியவன் என நினைப்பதுதான் கர்வத்தின் காட்டுத் தீயில் எண்ணை ஊற்றும் சமாச்சாரம். ஒப்பீடுகளினால் எதுவும் நிகழப் போவதில்லை. அதனால்தான் ஆழமான ஆன்மிகவாதிகள் தங்களை இறைவனோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். அது அவர்களுக்குத் தாழ்மையை கற்றுக் கொடுக்கிறது.

சின்னச் சின்ன விஷயங்களில் இருக்கும் அழகையும், வியப்பையும் ரசிக்கத் துவங்குங்கள். தாழ்மை உங்களை வந்தடையும். ஆர்வமும், தேடலும் உலகின் அழகிய பக்கங்களை அவிழ்த்து வைக்கும். நமது அறியாமையின் கதவுகளை ஒவ்வொன்றாய்த் திறக்கும். கூடவே நமது கர்வத்தின் திரைச்சீலைகளை ஒவ்வொன்றாய்க் கிழிக்கும்.பிறர் மீதான உண்மையான கரிசனை அவரையும் நம்மைப் போலவே நேசிப்பதில் துவங்குகிறது. அது நமது தாழ்மையின் பயணத்தில் நிகழ்கிறது.

கர்வப் பிழைகள் அழியட்டும்
தாழ்மை மழையாய் பொழியட்டும்!

மூட்டு வலி அதிகமாக இருக்கா? இதெல்லாம் சாப்பிடுங்க..

மணக்கால் அய்யம்பேட்டை | 6:01 PM | Best Blogger Tips

மூட்டு வலி அதிகமாக இருக்கா? இதெல்லாம் சாப்பிடுங்க...
இந்த உலகில் உடலில் எந்த ஒரு பிரச்சனையுமின்றி யாரும் இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது பெரிய அதிசயம் தான். அதிலும் உடலில் எந்த ஒரு நோயுமின்றி சில நாட்கள் இருக்கிறோம் என்றால், ஏதோ ஒன்று உடலுக்கு வரப் போகிறது என்பதற்கு அறிகுறியாகிவிட்டது. ஏனெனில் அந்த அளவில் நமது சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் போன்றவை ஆரோக்கியமற்றதாக இருக்கின்றன. அதிலும் நிறைய பேர் மூட்டு வலிகளால் தான் அதிகம் அவஸ்தைக்குள்ளாகின்றனர். இத்தகைய மூட்டு வலிகள் பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் ஏற்படுகிறது. மேலும் இந்த வயதிற்கு மேல் வரும் நோய்களுக்கு அளவே இருக்காது. எதை செய்தாலும், ஏதாவது வந்துவிடும்.
பெரும்பாலும் மூட்டு வலிகள் வருவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அவை சரியான ஊட்டச்சத்தில்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி, உடல் எடையை சரியான அளவில் வைக்காமல் இருப்பது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவை. இதனால் ஏதாவது அதிக எடை உள்ள பொருட்களை தூக்கினால் போதும், தோள்பட்டை, முழங்கை, முழங்கால், கழுத்து, இடுப்பு போன்றவற்றில் வலிகள் அல்லது சுளுக்குகள் வந்து பெரும் தொந்தரவை ஏற்படுத்திவிடும்.
ஆகவே இத்தகைய இடங்களில் வலிகள் ஏற்படாமல் இருக்க, ஒரு சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணும் உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருப்பதோடு, உடலில் எந்த ஒரு வலியும் இல்லாமல், அனைத்து வேலைகளையும் நன்கு பயப்படாமல், சுறுசுறுப்போடு இருக்கலாம். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

சாலமன்

கடல் உணவுகளில் அதிகமான அளவில் ஒமேகா-3 உள்ளது. அதிலும் சாலமன் மீனில் அளவுக்கு அதிகமாகவே உள்ளது. ஆகவே இதனை அடிக்கடி உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், மூட்டுகளில் ஏற்படும் வலிகள் குறைந்து, சரியாகிவிடும்.

பெர்ரிஸ்

ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளுபெர்ரிகள் மருத்துவ குணம் நிறைந்த பழங்கள். அதிலும் இவை மூட்டுகளில் ஏற்படும் வலிகளுக்கு சிறந்தது என்று அமெரிக்கன் கல்லூரியில் உள்ள நியூட்ரிசன் டிபார்ட்மெண்ட் மேற்கொண்ட ஆய்வில் தெரிவித்துள்ளது. ஏனெனில் அவற்றில் மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் புண்களை சரிசெய்யுமளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

காய்கறிகள்

உடலில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் குறைவாக இருந்தால், மூட்டு வலிகள் ஏற்படும். ஆகவே அவற்றை சரிசெய்ய அதிக அளவில் காய்கறிகளான கீரை, ப்ராக்கோலி, வெங்காயம், இஞ்சி போன்றவற்றை சாப்பிட வேண்டும். மேலும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளான பாஸ்தா, பிரட், ஜங்க் ஃபுட் போன்றவற்றை தவிர்த்தால், மூட்டு வலிகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

நட்ஸ்

பாதாம், வால்நட் மற்றும் மற்ற விதைகளான பூசணிக்காய் விதை போன்றவற்றை சாப்பிட்டால் நல்லது. ஏனெனில் இவற்றில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது. இதனால் மூட்டுகளில் ஏற்படும் புண் மற்றும் வலிகள் போன்றவை நீங்கும். ஆகவே இனிமேல் ஜங்க் ஃபுட்களை சாப்பிடுவதை தவிர்த்து, இவற்றை சாப்பிடுவதை தொடங்குங்கள்.

பால் பொருட்கள்

உடலில் எலும்புகள் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்க, கால்சியம் சத்துக்கள் இருக்க வேண்டும். அவை குறைவாக இருந்தால், அடிக்கடி எலும்புகளில் வலிகள், சுளுக்குகள் ஏற்படும். ஆகவே அத்தகைய வலிகள் வராமல் இருக்க பால் பொருட்களான வெண்ணெய், பால், சீஸ் போன்றவைகளை அதிகம் உடலில் சேர்க்க வேண்டும். அதிலும் ஸ்கிம் மில்க்கை சாப்பிட்டால், உடல் எடையை அதிகரிக்காமலும், உடலில் நீரிழிவு ஏற்படாமலும் தடுக்கலாம்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலின் மகிமைகளை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. ஏனெனில் அந்த அளவு அதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஆகவே சமைக்கும் போது மற்ற எண்ணெய்களை பயன்படுத்துவதை விட, ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தி சமைத்தால், இதயத்திற்கும், எலும்புகளுக்கும் நல்லது. ஏனெனில் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாகவும், கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாகவும் உள்ளது.

ஆரஞ்சு ஜூஸ்

நிறைய ஆராய்ச்சியில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், எலும்புகள் நன்கு வலுவோடு இருப்பதோடு, எந்த ஒரு வலியும், புண்களும் எலும்புகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படாமல் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் இந்த வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தில் அதிகமாக உள்ளது. ஆகவே இந்த ஜூஸை குடித்தால், மூட்டு வலிகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

அரிசி

மணக்கால் அய்யம்பேட்டை | 5:40 PM | Best Blogger Tips
அரிசியின் பயன்பாடு உலகம் முழுவதும் உள்ளது. குறிப்பாக தென்னிந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மக்களின் அன்றாட உணவாக அரிசி இருக்கிறது. அரிசி உற்பத்தியில் மியான்மர் (பர்மா) முதலிடம் வகிக்கிறது. அதுபோல் தாய்லாந்து, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அதிகம் விளைகிறது.

அரிசி ஒரு மாவுப் பொருளாகும். உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரிசியையே உணவாகக் கொண்டுள்ளனர்.

அரிசியில் அதாவது தவிடு நீக்கப்படாத அரிசியில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி12, வைட்டமின் கே, வைட்டமின் இ, மாவுச்சத்து, புரதச் சத்துக்கள் நிரம்பியுள்ளன.

ஆனால் தவிடு நீக்கப்பட்ட அரிசியில் மாவுச்சத்து மட்டுமே நிரம்பியுள்ளது.

நாம் அனைவருமே கண்ணைப் பறிக்கும் வெண்மையான மல்லிகைப் பூ போன்ற அரிசியையே விரும்புகிறோம். இதில் நாவிற்கு சுவை மட்டுமே உண்டு.

இரண்டு மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்ட இவ்வகையான அரிசியில் உள்ள எல்லா வைட்டமின் சத்துக்களும் வெளியேற்றப்பட்டு விடுகிறது.

இந்த அரிசியை சமைத்து உண்பதால் மாவுச் சத்து அதிகம் உடலில் சேருகிறது. ஆரம்பத்தில் அந்த மாவுச்சத்தைக் கட்டுப்படுத்த உடலில் இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இன்சுலின் சுரப்பு குறைவதால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் சர்க்கரை நோய் உண்டாகிவிடுகிறது.

விஞ்ஞான முன்னேற்றம் காணாத காலத்தில் மக்கள் கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தினர். உரலில் நெல்லை போட்டு உலக்கையால் அந்த நெல்லினை இடித்து அதன் உமியைப் பிரித்து சுத்தம் செய்து அந்த அரிசியை சமைத்து சாப்பிட்டனர்.

இவ்வாறு அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய்யும்.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்னும் பழமொழியை நாம் அறிந்திருப்போம்..

எந்த ஒரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவிலேயே இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.

இதைத்தான் சித்தர்கள் சத்துரு(பகைவன்), மித்துரு(நண்பன்) என்கின்றனர்.

தவிடு நீக்காத அரிசியை சாப்பிடுவதால் அதன் பலன்கள் அனைத்தும் சரிசமமாக உடலுக்கு சேர்கிறது.

இந்த தவிடு நீக்காத அரிசி இந்தியாவில் கேரளாவிலும், இலங்கையிலும் மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் இந்த அரிசியை பயன்படுத்துவது தற்போது வெகுவாக குறைந்துவிட்டது.

குறட்டைக்கு குட்பை

மணக்கால் அய்யம்பேட்டை | 5:13 PM | Best Blogger Tips
குறட்டைக்கு குட்பை

சுவாசமானது காது மூக்கு தொண்டை மூச்சுக்குழாய் வழியாக நுரையீரலைச் சென்றடைகிறது. இந்தப் பாதையில் எங்கேனும் அடைப்பு ஏற்படும்போது குறட்டைச் சத்தம் ஏற்படுகிறது. குழந்தையில் ஆரம்பித்து பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் குறட்டைப் பிரச்னை வரலாம்.

பெரியவர்களுக்கு வரும் குறட்டைக்கு முதல் காரணமாக இருப்பது உடல் பருமன் பிரச்னையே.

குறட்டைத் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் மல்லாக்கப்படுப்பதைத் தவிர்த்து, ஒரு பக்கமாக ஒருக்களித்துப் படுத்தால் குறட்டையின் அளவு குறையும். காபி, டீ போன்ற பானங்கள் அருந்துவதைக் குறைத்துக்கொள்வதும் குறட்டைப் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கான சிறந்த வழி. அசிடிட்டி மற்றும் வாயுத் தொல்லையால் அவதிப்படுவோருக்கு எளிதில் குறட்டை தொல்லையும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இதற்கு டாக்டர்ரைச் சந்தித்து ஆலோசனைப் பெற வேண்டும். உணவில் காரத்துக்கு தடா சொல்ல வேண்டும்.

via Doctor Vikatan

இயற்கை நமக்குத் தந்துள்ள பரிசு இளநீர்

மணக்கால் அய்யம்பேட்டை | 5:12 PM | Best Blogger Tips
இளநீர் இயற்கை நமக்குத் தந்துள்ள புத்துணர்ச்சி தரும் இனிய பானம் தென்னை தரும் இளநீர் மிகவும் சுவையானது சத்தானது கோடையின் கொடுமையைத் தணி க்க வெப்ப மண்டல மக்களுக்கு இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம்.

தாகத்தைத் தணிக்கும் பானம் மட்டு மல்ல தாதுபொருட்கள் அடங்கிய பல நோய்களைத் தீர்க்கும் தன்மை யும் கொண்டது.

மனித உடலில் அதிக அளவு நீர்ச்ச த்து விரயமானால் அவற்றைச் சரி செய்ய எளிதில் குறைந்த செலவில் கிடைப்பது இளநீர் மட்டுமே. இள நீரில் உள்ள புரதச்சத்து பசும்பாலில் உள்ளதைவிட அதிகமாகும்.

இளநீரின் பயன்கள்.

இளநீர் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.

இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது.

இளநீர் முதியோர்களுக்கும். நோயாளிக்கும் சிறந்த ஊட்டச் சத்து பானமாகும்.

இளநீரை உடலில் பூசிக்கொண்டால் தட் டம்மை, சின்னம்மை., பெரியம்மை, ஆகி யவைகளால் ஏற்படும் உடல் அரிப்பைத் தடுக்கலாம்.

இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருட்களை அகற்ற உதவு கிறது.

உடலில் ஏற்படும் நீர் இழப்பை சரி செய் வதற்கு இளநீரை பருகுவது நல்லது.

இளநீரில் உள்ள உப்புத்தன்மை மற்றும் வழவழப்புத் தன்மை கார ணமாக காலரா நோயாளிகளுக்கு இளநீர் நல்லதொரு பானமாக விளங்குகிறது.

மனித குலத்திற்கு இயற்கை தந்துள்ள சத்தான இன்சுவை பானம் இளநீர் மட்டும்தான். மற்ற பானங்களுடன் ஒப்பிடுகையில் இளநீர் மட்டுமே அதிகமான பயன்களைத் தருகிறது.

இளநீர் மிகக் குறைந்த செலவில் அதிகப் பயன்களைத் தரவல்லது. எனவே தாகத்தைத் தணிக்க உடல்நலம் காக்க தினமும் ஒரு இளநீர் குடிப்போம் என்றும் நலமாய் இருப் போம்.

மூட்டு வலி அதிகமாக இருக்கா? இதெல்லாம் சாப்பிடுங்க...

மணக்கால் அய்யம்பேட்டை | 12:13 PM | Best Blogger Tips