சிக்கனை பிடிக்காதவர் எவரும் இருக்க முடியாது. அசைவ பிரியர்களுக்கு 
சிக்கன் ஒரு பிடித்தமான உணவு. ப்ராய்லர் கோழி உண்பவர்களுக்கு உடல் ரீதியாக 
பல பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 
 
 நாட்டுக்கோழியை விட ப்ராய்லர் கோழியின் விலை குறைவு என்பதாலும், 
நகர்புறத்தில் எளிதில் கிடைக்கும் என்பதாலும் மக்கள் இதை சாப்பிடுகின்றனர்.
 ஆனால் ப்ராய்லர் கோழியில் உள்ள தீமைகளை பலர் அறிய வாய்ப்பு இல்லை. 
 
 பெரும்பாலானோர் கோழியின் இறக்கையைத் (chicken wings) தான் அதிகம் விரும்பி
 சாப்பிடுகின்றனர். இந்த சிக்கன் விங்ஸ் உடலில் பல அபாயகரமான பிரச்சனைகளை 
ஏற்படுத்தும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. அதிலும் குறிப்பாக 
பெண்களுக்கு கர்ப்பப்பையில் இரத்தக்கட்டிகள் உருவாகும் வாய்ப்பு அதிகம் 
உள்ளதாக கூறுகின்றனர். 
 
 இந்த கட்டியை நீக்கினாலும் எதிர்காலத்தில்
 கர்ப்ப பையில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும் என்பது தான் அதிர்ச்சிகரமான 
தகவல். ப்ராய்லர் கோழியானது வெறும் 65 நாட்களில் முழு வளர்ச்சி அடைந்து 
விடுகிறது. இதன் வளர்ச்சியை தூண்டுவதற்கு ஸ்டெராய்டு (Steroids) என்னும் 
ஊக்கமருந்தானது ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. 
 
 மேலும் இந்த 
ஊசியானது கோழியின் கழுத்து மற்றும் இறக்கை பகுதிகளில் செலுத்தப்படுகிறது. 
ஆதலால் ஸ்டெராய்டு என்னும் ஊக்கமருந்தின் தாக்கம் கழுத்து மற்றும் 
இறக்கைகளில் அதிகமாக இருக்கும். 
 
 எனவே சிக்கனில் கழுத்து மற்றும் 
இறக்கையை அதிகம் விரும்பி சாப்பிடுவோருக்கு எளிதில் நோய்களானது தாக்கும். 
எனவே ப்ராய்லர் கோழி சாப்பிடுவதை தவிர்த்து நாட்டு கோழி சாப்பிடுவதே நல்லது
 என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
சிக்கனை பிடிக்காதவர் எவரும் இருக்க முடியாது. அசைவ பிரியர்களுக்கு 
சிக்கன் ஒரு பிடித்தமான உணவு. ப்ராய்லர் கோழி உண்பவர்களுக்கு உடல் ரீதியாக 
பல பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கோழியை விட ப்ராய்லர் கோழியின் விலை குறைவு என்பதாலும், நகர்புறத்தில் எளிதில் கிடைக்கும் என்பதாலும் மக்கள் இதை சாப்பிடுகின்றனர். ஆனால் ப்ராய்லர் கோழியில் உள்ள தீமைகளை பலர் அறிய வாய்ப்பு இல்லை.
பெரும்பாலானோர் கோழியின் இறக்கையைத் (chicken wings) தான் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த சிக்கன் விங்ஸ் உடலில் பல அபாயகரமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு கர்ப்பப்பையில் இரத்தக்கட்டிகள் உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறுகின்றனர்.
இந்த கட்டியை நீக்கினாலும் எதிர்காலத்தில் கர்ப்ப பையில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும் என்பது தான் அதிர்ச்சிகரமான தகவல். ப்ராய்லர் கோழியானது வெறும் 65 நாட்களில் முழு வளர்ச்சி அடைந்து விடுகிறது. இதன் வளர்ச்சியை தூண்டுவதற்கு ஸ்டெராய்டு (Steroids) என்னும் ஊக்கமருந்தானது ஊசி மூலம் செலுத்தப்படுகிறது.
மேலும் இந்த ஊசியானது கோழியின் கழுத்து மற்றும் இறக்கை பகுதிகளில் செலுத்தப்படுகிறது. ஆதலால் ஸ்டெராய்டு என்னும் ஊக்கமருந்தின் தாக்கம் கழுத்து மற்றும் இறக்கைகளில் அதிகமாக இருக்கும்.
எனவே சிக்கனில் கழுத்து மற்றும் இறக்கையை அதிகம் விரும்பி சாப்பிடுவோருக்கு எளிதில் நோய்களானது தாக்கும். எனவே ப்ராய்லர் கோழி சாப்பிடுவதை தவிர்த்து நாட்டு கோழி சாப்பிடுவதே நல்லது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.




![புனித தீர்த்தம் - punitha theertham
இந்தியாவில் ஆன்றோர்கள் புனித ஆலயங்களின் வழிபாடுகள் மூலம் சூட்சுமமாக உடல்நோயும் ,உளநோயும் நீங்கி நலம்பெற வழி வகுத்துள்ளனர்
ஆலயங்களை வலம்வருதல், அங்கங்கள் பூமியில் பட விழுந்து வணங்குதல், அங்கப்பிரதட்சணம் செய்தல், காவடி எடுத்தல், திருமண் இடுதல், திருநீறு , சந்தனம், குங்குமம்அணிதல், திருத்துழாய்(துளசி), வில்வம், பயன்படுத்துதல் போன்ற ஆன்மீக செயல்பாடுகள் அனைத்தும் உடலும் ,உள்ளமும் நலம்பெற அமைந்துள்ளன.
ஆலய வழிபாட்டு முறைகளில் தலைசிறந்ததாகப் புனித தீர்த்தம் வழங்குதல் அமைந்துள்ளது. 
வைணவ திருத்தலங்களில் வழங்கும் "துளசி தீர்த்தம்" இரத்தத்தை சுத்தம் செய்வதுடன், உடலில் பிராணசக்தி மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலுப்படுத்துகின்றது. துளசி தீர்த்தம் தொடர்ந்து அருந்தி வருபவர்களுக்கு கேன்சர் எனப்படும் புற்று நோய் வராது என்பது மருத்துவ உண்மையாகும்.
சைவத்திருத்தலங்களில் வழங்கும் "வில்வ தீர்த்தம்" குன்மம், வயிற்றுக் கடுப்பு, மேகவாயு, போன்றவைகளைப் போக்குகின்றது. அல்சர் எனப்படும் குடல்ப் புண்ணையும் போக்குகின்றது.
ஆலயங்களில் வழங்கப்படும் மேற்கண்ட இரண்டு தீர்த்தங்களும் முறைப்படி தயார் செய்தால் இம்மருத்துவ குணங்கள் நிச்சயம் உண்டு.
நாம் வீட்டிலேயே செய்து உண்டு பயன்பெறக்கூடிய ஒரு புனித தீர்த்தம் முறையை இப்போது பார்ப்போம். இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப் போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு அளிக்கும் குணம் கொண்டது.
புனித தீர்த்தம்
1 - ஏலம், 2 - இலவங்கம், 3 - வால்மிளகு, 4 - ஜாதிப்பத்திரி, 5 - பச்சைக் கற்பூரம் இவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கு சேர்க்கவும்.
முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக்கொள்ளவும். பிறகு பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை பாட்டலில் பதனம் செய்து பூஜை அறையில் வைக்கவும்.
இந்த தீர்த்தப் பொடியை திரிகடி [மூன்று விரல் அளவு] அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும்.
இதனுடன் சைவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து அருந்தலாம். வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம். 
இருதயம், இரைப்பை பலம் பெரும்,கண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும், நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும், இரத்தம் சுத்தியாகும், பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல், மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள் நீங்கும். இரத்தம் பெருகும் .
இது உடலைப் பற்றிய நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து முறையாகும். இது அனுபவத்தில் கை கண்ட அரிய முறையாகும்.](https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/s403x403/1014378_669734833052534_711875479_n.jpg)
![உண்மையான அழகு எது? - அம்மா குட்டிக்கதை
ஓர் அழகான கிராமத்தின் மாலை வேளையில், வயல்களில் வேலை செய்து களைத்த உழவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். தன் அம்மாவுடன் நடந்துசென்ற ஒரு சுட்டிப் பையன், பட்டாம்பூச்சிகளைக் கண்டு அவற்றின் பின்னால் ஓடினான். தன் தாயை விட்டு வெகுதூரம் வந்து விட்டதை அப்போது தான் சிறுவன் உணர்ந்தான். யாருமே இல்லாத அப்பகுதியில் சிறுவனின் அழுகுரல் மட்டுமே எங்கும் ஒலித்தது.
"அய்யோ, வழி தெரியாம ரொம்ப வந்துட்டேனே...அம்மா..அம்மா...எங்கம்மா கிட்ட யாராச்சும் கொண்டு போய் விடுங்களேன்! என கதறி அழுதான்.
அப்போது அவ்வழியே வந்த ஒரு உழவன், சிறுவனின் அழுகுரல் கேட்டு அவனிடம் சென்றார்.
நீ யாரு...எதுக்காக இங்க தனியா நிக்கற?
நான் பட்டாம்பூச்சி பிடிக்க ஓடி வந்து அம்மாவ தொலைச்சிட்டேன்..அவங்க வயல்ல வேலை செஞ்சிட்டு வீட்டுக்கு போய்க்கிட்டு இருக்காங்க..எனக்கு திரும்பிப் போக வழி தெரியல.. என்று சிறுவன் கூறவே, அவனை சமாதானப்படுத்திய உழவன், "சரி, பயப்படாதே... நான் உங்கம்மா கிட்ட கூட்டிகிட்டு போறேன்! உங்கம்மா எப்பிடி இருப்பாங்கன்னு சொல்றியா?" எனக் கேட்டார்.
அதற்கு "எங்கம்மா ரொம்ப அழகா இருப்பாங்க...இந்த ஊருலயே அவங்க தான் அழகு!" என பெருமையுடன் பதிலளித்தான் சிறுவன்.
சிறுவனை அழைத்துக் கொண்டு ஊரை நோக்கிச் சென்ற உழவன், எதிரில் மிகவும் அழகான பெண் நடந்து வருவதைக் கண்டார். உடனே "தம்பி, இவங்க ரொம்ப அழகாக இருக்கிறாங்க. இவங்க தானே உன் அம்மா? எனக் கேட்க, தன் அம்மா இன்னும் அழகாக இருப்பாள் என சிறுவன் பதிலளித்தான்.
வழியில் இரண்டு அழகான பெண்கள் தண்ணீர் சுமந்து செல்வதை உழவர் கண்டார். கண்டிப்பாக இவர்கள் ரெண்டு பேரில் ஒருவர் தான் சிறுவனின் அம்மாவாக இருக்க வேண்டும் என்று நம்பிய உழவன், சிறுவனிடம் கேட்டார்.
ஆனால் "இல்ல... எங்கம்மா இவங்க எல்லாரையும் விட அழகா இருப்பாங்க!" என்று உறுதியாகக் கூறினான்.
அப்போது எதிரில் பதற்றத்துடனும், கண்ணீருடனும் ஒரு பெண் ஓடிவருவதைப் பார்த்த சிறுவன் "அதோ என் அம்மா! அதுதான் என் அம்மா! என் அம்மா கிடைத்து விட்டாள்!" என சந்தோஷக் கூக்குரலிட்டான்.
கறுப்பாகவும், ஒரு கண்ணில் பார்வையில்லாமலும் காட்சியளித்த அந்தப் பெண்ணைப் பார்த்த உழவன்...
அந்த ஊரே அதிரும் படி சிரித்தான். "இதுவா உங்கம்மா..இவங்களையா அழகுன்னு சொன்ன" என்று சிறுவனைப் பார்த்துக் கேட்டான்.
அதற்கு சிறுவன் மிகவும் பெருமையாக, "ஆமா...அவங்க என்ன ரொம்ப பாசமா பாத்துக்குவாங்க.. எல்லோர்கிட்டயும் அன்பா நடந்துக்குற இவங்க தான் உலகத்துலயே ரொம்ப அழாகானவங்க!" என்று பதிலளித்து விட்டு, தன் தாயின் கையைப் பிடித்து துள்ளிக் குதித்து நடந்தான். 
உண்மையான அழகு எது என்பதை உணர்ந்து கொண்ட உழவன், முகம் இருண்டு போய் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான்!
ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் @[297395707031915:274:Relaxplzz]](https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash3/s526x296/943533_575749942475339_2036228792_n.jpg)




