இன்டர்நெட் கனெஷனும் பிரச்சனைகளும்!!!! அவசியமான தகவல் பகிருங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 2:01 | Best Blogger Tips
இன்டர்ெநட் கனெஷனும் பிரச்சனைகளும்!!!! அவசியமான தகவல் பகிருங்கள்
 ••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
 இன்டர்நெட் கனெக்ஷனும் வயதுப் பையன்களும் இருக்கிற வீடுகளில் இப்போது இது ஒரு பெரிய பிரச்னை. மெயிலில் தகவல் பரிமாறிக்கொள்ள, இடிக்கெட் புக் பண்ண, ஆன்லைன் பர்ச்சேஸ் பண்ண என பல வசதிகளுக்காக இன்று இணையம் அவசியப்படுகிறது. அதேநேரம் அதனுள்ளேயே இளைய தலைமுறையை தவறாக வழிநடத்தும் தகவல்கள், படங்கள், வீடியோக்கள் என தொந்தரவுகள்.

 இவற்றைத் தடுக்க எல்லா கணினிகளிலுமே ‘ஃபயர்வால்’ என்ற ஒரு அம்சம் உள்ளது. இணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொடர்புகளை மட்டுமே அனுமதித்து, மற்ற அணுகுதல்களைத் தடுத்து விடும் செட்டப் இது. நம் கணினியில் அமைந்துள்ள ஃபயர்வால், அத்தனை வீரியமுள்ளதாய் இல்லையெனில், தனியாகக் கிடைக்கும் ஃபயர்வால் மென்பொருட்களையும் உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளலாம். இவை, கன்டன்ட் கன்ட்ரோல் மென்பொருட்கள் என்று அழைக்கப்படுகின்றன.

 தவிர, இன்று ஏகப்பட்ட சைஃபர் செக்யூரிட்டி நிறுவனங்கள் இந்தப் பணியைச் செய்துதரக் காத்திருக்கிறார்கள். அவர்களைத் தொடர்புகொண்டால் உங்களுக்குத் தேவையான கன்டன்ட் கன்ட்ரோல் மென்பொருட்களை அவர்களே உங்கள் கணினியில் நிறுவித் தருவார்கள். இப்படிப்பட்ட மென்பொருட்கள் இணையத்திலும் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றை நீங்களே நிறுவிப் பரிசோதிப்பது உங்கள் தொழில்நுட்ப அறிவைப் பொறுத்தது. இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை எல்லாவற்றையும் ஏமாற்றி ஆபாசத் தளங்களைப் பார்க்க முடியும் என்பதால், உங்கள் மகனின் நடவடிக்கை மீது ஒரு கண் வைப்பதும், எப்போதும் ஆள் இருக்கும் வரவேற்பறை போன்ற இடத்துக்கு கணினியை இடம் மாற்றுவதும் நல்ல பலனைத் தருமஇன்டர்நெட் கனெக்ஷனும் வயதுப் பையன்களும் இருக்கிற வீடுகளில் இப்போது இது ஒரு பெரிய பிரச்னை. மெயிலில் தகவல் பரிமாறிக்கொள்ள, இடிக்கெட் புக் பண்ண, ஆன்லைன் பர்ச்சேஸ் பண்ண என பல வசதிகளுக்காக இன்று இணையம் அவசியப்படுகிறது. அதேநேரம் அதனுள்ளேயே இளைய தலைமுறையை தவறாக வழிநடத்தும் தகவல்கள், படங்கள், வீடியோக்கள் என தொந்தரவுகள்.

இவற்றைத் தடுக்க எல்லா கணினிகளிலுமே ‘ஃபயர்வால்’ என்ற ஒரு அம்சம் உள்ளது. இணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொடர்புகளை மட்டுமே அனுமதித்து, மற்ற அணுகுதல்களைத் தடுத்து விடும் செட்டப் இது. நம் கணினியில் அமைந்துள்ள ஃபயர்வால், அத்தனை வீரியமுள்ளதாய் இல்லையெனில், தனியாகக் கிடைக்கும் ஃபயர்வால் மென்பொருட்களையும் உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளலாம். இவை, கன்டன்ட் கன்ட்ரோல் மென்பொருட்கள் என்று அழைக்கப்படுகின்றன.

தவிர, இன்று ஏகப்பட்ட சைஃபர் செக்யூரிட்டி நிறுவனங்கள் இந்தப் பணியைச் செய்துதரக் காத்திருக்கிறார்கள். அவர்களைத் தொடர்புகொண்டால் உங்களுக்குத் தேவையான கன்டன்ட் கன்ட்ரோல் மென்பொருட்களை அவர்களே உங்கள் கணினியில் நிறுவித் தருவார்கள். இப்படிப்பட்ட மென்பொருட்கள் இணையத்திலும் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றை நீங்களே நிறுவிப் பரிசோதிப்பது உங்கள் தொழில்நுட்ப அறிவைப் பொறுத்தது. இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை எல்லாவற்றையும் ஏமாற்றி ஆபாசத் தளங்களைப் பார்க்க முடியும் என்பதால், உங்கள் மகனின் நடவடிக்கை மீது ஒரு கண் வைப்பதும், எப்போதும் ஆள் இருக்கும் வரவேற்பறை போன்ற இடத்துக்கு கணினியை இடம் மாற்றுவதும் நல்ல பலனைத் தரும். 

Via FB சுபா ஆனந்தி