கி.பி.1910 எழுதி வெளிவந்த இந்த புத்தகம் அவரது எண்ணங்களை
வெளிப்படுதுகிறது.இதை அவர் பத்தே நாட்களில் எழுதினார்.எழுதி எழுதி தனது
வலது கை ஓய்ந்த போது இடது கையாலும் எழுதினார்.கடுகு சிறுத்தாலும் காரம்
குறையாதது போல இந்தப் புத்தகம் சின்னஞ்சிறுபுத்தகமே!
இந்த
புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பு இந்திய சுயராஜ்ஜியம் என்ற பெயரில்
வெளிவந்துள்ளது.இந்த புத்தகத்தின் நூற்றாண்டு விழாவை மதுரையில் சுதேசி
விழிப்புணர்வு இயக்கம் பிப்ரவர் 2010 இல் நடத்துகிறது.அனைவரும் வருக!
விழா நடக்கும் இடம் பற்றிய விபரங்கள் ஜனவரி 2010 இல் வெளியிடப்படும்.
இப்போது இந்த புத்தகத்திலிருந்து சில துளிகள்:
ஆங்கிலம் அடிமைப்படுத்த வந்த மொழி, பட்டம் பெற்ற வக்கீல்களும்
டாக்டர்களும் சீர்கேட்டுக்குக் காரணமானவர்கள்.ஆங்கிலம் படித்தவர்கள் நாட்டை
வஞ்சிக்கிறார்கள்.
மேலைநாட்டுநாகரீகத்தில் மயங்கிக் கிடக்கும் இந்தியாவின் நிலையை நினைக்கும்போது எனக்கு என் கண்களில் நீர் வருகிறது.என் தொண்டையும்
உலர்ந்து விடுகிறது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை எடுத்துக்கொள்ளவில்லை.நாமே அதை அவர்களுக்குக்
கொடுத்திருக்கிறோம்.அவர்கள் தங்களது பலத்தின் காரணமாக இங்கிலாந்திலிருந்து
வரவில்லை.நாம் அவர்களை போற்றிக்கொண்டிருப்பதாலேயே இங்கே நம்மைச்
சுரண்டுகிறார்கள்.
“இதற்கு முன்னால் நாம் ஒன்றுபட்ட ஒரே தேசிய
இனமாக இருந்ததில்லை.அப்படி ஒரே தேசிய இனமாவதற்கு இன்னும் பல
நூற்றாண்டாகும்” என ஆங்கிலேயர்கள் நம்மிடம் போதித்தனர்.இது முற்றிலும்
ஆதாரமற்றது.அவர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னால் நாம் ஒரே தேசிய
இனமாகவே இருந்தோம்.ஒருமை எண்ணம் நமக்கு உத்வேகம் அளித்துவந்தது.நமது
வாழ்க்கையின் தன்மை ஒரே மாதிரியாக இருந்ததால் ஒரே ஆட்சியை அவர்களால் அமைக்க
முடிந்தது.பின்னால் நம்மை பிளவுபடுத்திவிட்டார்கள்.
ஆங்கிலக் கல்வி பெற்றதால் நாட்டை நாம் அடிமைப் படுத்திவிட்டோம்.நயவஞ்சகம்,கொடு மைமுதலியன அதிகரித்துவிட்டன.ஆங்கிலம் அறிந்த இந்தியர்கள் மக்களை ஏமாற்றி மிரட்டுவதற்குத் தயங்குவதே இல்லை.
ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்வதே கல்வியில் முதலிடம்.
ஒழுக்கத்தை கடைபிடிப்பது என்பது நம் மனத்தையும் நமது விருப்பங்களையும்
அடக்கி ஆள்வதாகும்.அப்படிச் செய்வதில் நம்மை நாமே அறிந்தவர்களாவோம்.
சுண்டெலி அரிக்கும் சப்தம்(ஆபாசம்) நம் காதுக்கு இனிமையாக இருந்தாலும் அது செய்வது(சமுதாய,குடும்பத்தின் அமைதியை)அழிப்பதே!
தாங்கள் விரும்பாத சட்டங்களை மக்கள் மதிப்பதில்லை.இவ்விதம் மீறியதற்கு விதிக்கப்படும் தண்டனைகளை அனுபவிப்பார்கள்.
சுதேசியை ஆதரித்து நாம் சுயாட்சியை(சுயச்சார்பை) அடைய முடியும்.
இந்திய நாகரிகத்தின் தன்மை ஒழுக்கமுடைமையை உயர்த்துவதாகும்.மேல்நாட்டு
நாகரிகத்தின் தன்மையோ ஒழுக்கக்கேட்டைப் பரப்புவதாகும்.பின்சொன்னது கடவுளைப்
புறக்கணிப்பதாகும்.முன்சொன்னது கடவுள் நம்பிக்கையை அடிப்படையாக்க்
கொண்டதாகும்.
நாம் ஆட்சேபிப்பதெல்லாம் எந்திரங்கள் பற்றிய
வெறியை.வெறும் எந்திரங்களை அல்ல.மனிதனுடைய கையையும் காலையும் முடக்கும்
அளவிற்கு எந்திரங்களுக்கு இடம் தரக்கூடாது.
சுயாட்சியை அடைய விரும்பும் ஒரு நாட்டு மக்கள் தங்களுடைய முன்னோர்களை அலட்சியமாகக் கருதிவிட முடியாது.
மெக்காலே போட்ட அஸ்திவாரம் நம்மை அடிமைப்படுத்திவிட்டது.
Via FB தர்மத்தின் பாதையில்

இந்த புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பு இந்திய சுயராஜ்ஜியம் என்ற பெயரில் வெளிவந்துள்ளது.இந்த புத்தகத்தின் நூற்றாண்டு விழாவை மதுரையில் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் பிப்ரவர் 2010 இல் நடத்துகிறது.அனைவரும் வருக!
விழா நடக்கும் இடம் பற்றிய விபரங்கள் ஜனவரி 2010 இல் வெளியிடப்படும்.
இப்போது இந்த புத்தகத்திலிருந்து சில துளிகள்:
ஆங்கிலம் அடிமைப்படுத்த வந்த மொழி, பட்டம் பெற்ற வக்கீல்களும் டாக்டர்களும் சீர்கேட்டுக்குக் காரணமானவர்கள்.ஆங்கிலம் படித்தவர்கள் நாட்டை வஞ்சிக்கிறார்கள்.
மேலைநாட்டுநாகரீகத்தில் மயங்கிக் கிடக்கும் இந்தியாவின் நிலையை நினைக்கும்போது எனக்கு என் கண்களில் நீர் வருகிறது.என் தொண்டையும்
உலர்ந்து விடுகிறது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை எடுத்துக்கொள்ளவில்லை.நாமே அதை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோம்.அவர்கள் தங்களது பலத்தின் காரணமாக இங்கிலாந்திலிருந்து வரவில்லை.நாம் அவர்களை போற்றிக்கொண்டிருப்பதாலேயே இங்கே நம்மைச் சுரண்டுகிறார்கள்.
“இதற்கு முன்னால் நாம் ஒன்றுபட்ட ஒரே தேசிய இனமாக இருந்ததில்லை.அப்படி ஒரே தேசிய இனமாவதற்கு இன்னும் பல நூற்றாண்டாகும்” என ஆங்கிலேயர்கள் நம்மிடம் போதித்தனர்.இது முற்றிலும் ஆதாரமற்றது.அவர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னால் நாம் ஒரே தேசிய இனமாகவே இருந்தோம்.ஒருமை எண்ணம் நமக்கு உத்வேகம் அளித்துவந்தது.நமது வாழ்க்கையின் தன்மை ஒரே மாதிரியாக இருந்ததால் ஒரே ஆட்சியை அவர்களால் அமைக்க முடிந்தது.பின்னால் நம்மை பிளவுபடுத்திவிட்டார்கள்.
ஆங்கிலக் கல்வி பெற்றதால் நாட்டை நாம் அடிமைப் படுத்திவிட்டோம்.நயவஞ்சகம்,கொடு
ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்வதே கல்வியில் முதலிடம்.
ஒழுக்கத்தை கடைபிடிப்பது என்பது நம் மனத்தையும் நமது விருப்பங்களையும் அடக்கி ஆள்வதாகும்.அப்படிச் செய்வதில் நம்மை நாமே அறிந்தவர்களாவோம்.
சுண்டெலி அரிக்கும் சப்தம்(ஆபாசம்) நம் காதுக்கு இனிமையாக இருந்தாலும் அது செய்வது(சமுதாய,குடும்பத்தின் அமைதியை)அழிப்பதே!
தாங்கள் விரும்பாத சட்டங்களை மக்கள் மதிப்பதில்லை.இவ்விதம் மீறியதற்கு விதிக்கப்படும் தண்டனைகளை அனுபவிப்பார்கள்.
சுதேசியை ஆதரித்து நாம் சுயாட்சியை(சுயச்சார்பை) அடைய முடியும்.
இந்திய நாகரிகத்தின் தன்மை ஒழுக்கமுடைமையை உயர்த்துவதாகும்.மேல்நாட்டு நாகரிகத்தின் தன்மையோ ஒழுக்கக்கேட்டைப் பரப்புவதாகும்.பின்சொன்னது கடவுளைப் புறக்கணிப்பதாகும்.முன்சொன்னது கடவுள் நம்பிக்கையை அடிப்படையாக்க் கொண்டதாகும்.
நாம் ஆட்சேபிப்பதெல்லாம் எந்திரங்கள் பற்றிய வெறியை.வெறும் எந்திரங்களை அல்ல.மனிதனுடைய கையையும் காலையும் முடக்கும் அளவிற்கு எந்திரங்களுக்கு இடம் தரக்கூடாது.
சுயாட்சியை அடைய விரும்பும் ஒரு நாட்டு மக்கள் தங்களுடைய முன்னோர்களை அலட்சியமாகக் கருதிவிட முடியாது.
மெக்காலே போட்ட அஸ்திவாரம் நம்மை அடிமைப்படுத்திவிட்டது.