பொன்மொழிகள் ! உன் எதிரியின் எதிரி நீதான்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:35 | Best Blogger Tips
Image result for பொன்மொழிகள்
தோற்ற இடமே
வெற்றியின்
தோற்ற (ஆரம்ப) இடம்!

வெளுத்ததெல்லாம்
பால் அல்ல,
பழைய சட்டை!

உலகில் அதிகம் பேர்
இறக்கும் இடம்
படுக்கையே!

குறைவாகப் பேசுங்கள்,
நிறைய நண்பர்கள்
கிடைப்பார்கள்!

ஒரே கருப்பு பேன்ட்டுக்கு
ஐந்து சட்டைகளைப்
பயன்படுத்துபவன்தான்
மிடில் க்ளாஸ்!

நீந்த தெரிந்தும்
மூழ்கி விடுகிறேன்
கடனில்!

''கரம் மாறியதால்
வி'ளை' நிலம்
வி'லை' நிலமானது!

எல்லாரும் அறியாதவர்களே, வெவ்வேறு விஷயங்களில்!

குறுக்கு வழியை
என்றும் பயன்படுத்தாதவர்கள்
ஆட்டோ/கார் டிரைவர்களே!

தந்திகூட ஒழிந்துவிட்டது,
'தந்தி ஒழியவில்லை!

விதவையான தயிர்சாதம்
சுமங்கலியானது
ஊறுகாயின் வரவால்!

கோடையில்
குளிர்ந்த காற்று
குடிநீர் குழாயில்!

'மன்னிப்பு'
கொடுக்கப்படும்போதைவிட கேட்கப்படும்போது
சுகமானது!

துணை இழந்தவுடன்
உடன் கட்டை ஏறிவிட்டது
செருப்பு!

அப்பா இறந்தவுடன்
சகுனம் பார்ப்பதை
விட்டுவிட்டோம்,
எதிரில் வருவோரெல்லாம்
அம்மாவாகத் தெரிவதால்!

தமிழிலேயே அர்ச்சனை
நடக்கும் இடம்
வீடுதான்!

பிச்சைக்காரர் நம்புவது
கடவுளை அல்ல,
பக்தர்களையே!

விண்ணை முட்ட
உயர வேண்டுமானால்
வெந்துதான் ஆகவேண்டும்
சூளையில் செங்கல்!

பரிதாப்படும்
நிலையில் இருப்பதை விட,
பொறாமைப்படும் நிலையில்
இருப்பது மேல்!

காலையில் வாங்கப்படும் பாக்கெட் பாலில் தொடங்குகிறது ப்ளாஸ்டிக்கின்
அன்றாட வாழ்க்கை!

தாமதமாக வரும்
ரயிலுக்கு சமம்
"
நீதி"
அவமதிப்பை புரியவும் அவமானப்பட வேண்டியுள்ளது!

தொடுவதற்கு சண்டை,
பின்
தொட்டதுக்கெல்லாம் சண்டை!

உன் எதிரியின் எதிரி நீதான்!


மாற்றங்கள்....!! மனங்களிலும், குணங்களிலும், வந்தால் தான்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 4:14 | Best Blogger Tips
Image result for மாற்றங்கள்....!! மனங்களிலும்,  குணங்களிலும்,  வந்தால் தான்
ஒரு புகழ்பெற்ற ஞானியிடம்
சிலர் சென்று,
நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம்.!
நீங்களும் எங்களோடு வந்தால் நன்றாக இருக்கும் என அவரை அழைத்தார்கள்...!
ஞானியோ, இப்போது வருவதற்கான சாத்தியம் இல்லை என்று கூறி விட்டு,
அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து,
''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?''
என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.
அவர்கள் ''என்ன செய்ய வேண்டும் கட்டளை இடுங்கள் மகராஜ்' என்றனர்.
''ரொம்ப பெரிய வேலை எல்லாம் இல்லை.
நீங்கள் புனித நதியில் முழுகும் போதெல்லாம் ,
இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு
வந்து இதை சேர்த்து விடுங்கள்'' என்றார்.
அன்பர்கள் ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!
திரும்ப வந்து அவரிடம் அந்த பாகற்காயை பத்திரமாக ஒப்படைத்தனர்.
அவர் அந்த பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி,
எல்லாருக்கும் ஒரு துண்டை கொடுத்தார்..!
புனித நதியில் முழுகி வந்த பாகற்காய்..!
இப்போ சாப்பிட்டுப் பாருங்க தித்திக்கும் என்றார்...!
ஆர்வமுடன் வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற வேகத்தில் முகம் மாறியது..... !
*தித்திக்கும்னு சொன்னீங்க..ஆனா கசக்குதே...!*என்றார்கள் .
ஞானியிடம் ஏமாற்றத்துடன்..!*
"பார்த்தீர்களா....?
பாகற்காய் எத்தனை தான் நதியில் முழுகினாலும்,
அதன் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
அதைப் போலவே ,
*நாம் நமது
தவறான செயல்களையும்,
தீய பழக்கங்களையும் ,
துர் குணங்களை
மாற்றிக் கொள்ளாமல்*,
எந்த புண்ணிய தீர்த்தத்தில் ஆயிரம் முறை முழுகினாலும் ,
எந்த கோயிலுக்கோ ,
சர்ச்சுக்கோ,
மசூதிக்கோ,
குளத்துக்கோ,
புண்ணிய ஸ்தலங்களுக்கோ 1008 முறை வலம் வந்து விழுந்து, விழுந்து வணங்கினாலும்....
எந்த பயனும் வந்து விடப் போவதில்லை....??
......*மாற்றங்கள்....!!
மனங்களிலும்,
குணங்களிலும்,
வந்தால் தான்
வாழ்க்கை இனிமையாகும்....!!
என்றார் அந்த ஞானி....!!

 நன்றி இணையம்

வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:40 | Best Blogger Tips
Related image
கடுங் குளிர் நிறைந்த ஒரு இரவில் ஒரு மன்னன் தன் அரண்மனைக்கு வந்தான்.
அரண்மனைவாலில் மெல்லிய ஆடையுடன் வயது முதிர்ந்த காவலாளியைப் பார்த்தான்.
"குளிர் கடுமையாக இருக்கிறதே அதை நீ உணரவில்லையா?"
என்று கேட்டான்.
"ஆம். உணர்கிறேன் மன்னா.
ஆனால்,
குளிரை தடுக்கும் ஆடை என்னிடம் இல்லையே!"
என்றான் காவலாளி.
அதற்கு மன்னன்,
"கவலைப்படாதே, நான் அரண்மனை சென்று குளிரை தாங்கும் கம்பளி ஆடையை உனக்கு அனுப்புகிறேன்".
என்று கூறி அரண்மனைக்குள் சென்றான்.
மன்னரின் வார்த்தையை கேட்டு அந்த காவலாளி அகமகிழ்ந்தான்.
அரண்மனைக்கு சென்ற மன்னன் தான் வாக்களித்தை மறந்து விட்டான்.
காலையில் அந்த காவலாளி இறந்து கிடந்தான்.
அவனருகே ஒரு கடிதம் இருந்தது.
அந்த கடிதத்தில் இவ்வாறும் எழுதப் பட்டிருந்தது.
"மன்னா...
இவ்வளவு நாட்களாக கடும் குளிரை மவுனமாக தாங்கி கொண்டிருந்தேன்.
ஆனால்,
குளிரை தாங்கும் ஆடை கிடைக்கும் என்ற என் எதிர்பார்ப்பு இதுவரை இருந்த என்னுடைய மன உறுதியை குழைத்து என்னை கொன்று விட்டது".
ஆம்! சகோதரர்களே!
மற்றவர்களிடம் நீங்கள் கொடுக்கும் வாக்குறுதி மற்றவரிடம் நீங்கள் எண்ணி பார்க்காத அளவு நம்பிக்கையை ஏற்படுத்தலாம்.
எனவே, அந்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.
நீங்கள் அறியமாட்டீர்கள்!
*உங்களின் நிறைவேற்றப்படாத அந்த வாக்குறுதி.*
*
நீங்கள் வாக்களித்தவருக்கு எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று.*
படித்ததில்... பிடித்தது...

நன்றி இணையம்