சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கான மருந்து

மணக்கால் அய்யம்பேட்டை | 1:19 PM | Best Blogger Tips

கேள்வி.?
இன்றைய உலகையே ஆட்டிப்படைக்கும் நோய்களில்
ஒன்றான சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கான
மருந்துகள் ஏதும் சித்த மருத்துவத்தில் உண்டா ...!

நிச்சயம் உண்டு !
சித்தர்கள் நோய்க்கான மருந்துகளை மட்டும்
கூறவில்லை இவைகள் வராமல் தடுக்கும்
முறைகளை மிகத்தெளிவாக கூறியுள்ளார்கள்.
தை மாதம் முதல் நாள் தொடங்கி நாற்பது நாட்கள்
மட்டும் இம் மருந்தை உட்கொண்டால் ஒரு வருடம்
உங்கள் உடலில் சர்க்கரை நோய் தாக்காது .

சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து

1- கடுக்காய் தோல் பொடி-1 -கிராம்
2- நெல்லிக்காய் தோல் பொடி- 1 -கிராம்
3- தான்றிக்காய் தோல் பொடி- 1 -கிராம்
4- தலைச்சுருளி இலைப்பொடி- 2 -கிராம்

மேற்கண்ட ஐந்து கிராம் பொடியை மாலையில்
தண்ணீர் ஒரு தம்ளர் அளவில் கலந்து குடிக்கவும் .

தொடர்ந்து நாற்பது நாட்கள் அருந்தி வர உடலில்
நோயெதிர்ப்பு சக்தி பெருகும்,திரி நாடி நிலைகள்
சமன் படும்,இரத்தத்தில் உள்ள நஞ்சுகள் அகன்று
உடலில் புத்துணர்ச்சி கிட்டும்,உடலில் புது இரத்தம்
பெருகும்,மேலும் ஒரு வருடத்திற்கு சர்க்கரை நோய்
உடலில் வராமல் தடுக்கும்.

இது ஒரு கைகண்ட அனுபவ மருந்தாகும்.
கேள்வி.?
இன்றைய உலகையே ஆட்டிப்படைக்கும் நோய்களில்
ஒன்றான சர்க்கரை நோய் வராமல் தடுப்பதற்கான
மருந்துகள் ஏதும் சித்த மருத்துவத்தில் உண்டா ...!

நிச்சயம் உண்டு !
சித்தர்கள் நோய்க்கான மருந்துகளை மட்டும்
கூறவில்லை இவைகள் வராமல் தடுக்கும்
முறைகளை மிகத்தெளிவாக கூறியுள்ளார்கள்.
தை மாதம் முதல் நாள் தொடங்கி நாற்பது நாட்கள் மட்டும் இம் மருந்தை உட்கொண்டால் ஒரு வருடம் உங்கள் உடலில் சர்க்கரை நோய் தாக்காது .

சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் மருந்து

1- கடுக்காய் தோல் பொடி-1 -கிராம்
2- நெல்லிக்காய் தோல் பொடி- 1 -கிராம்
3- தான்றிக்காய் தோல் பொடி- 1 -கிராம்
4- தலைச்சுருளி இலைப்பொடி- 2 -கிராம்

மேற்கண்ட ஐந்து கிராம் பொடியை மாலையில் தண்ணீர் ஒரு தம்ளர் அளவில் கலந்து குடிக்கவும் .

தொடர்ந்து நாற்பது நாட்கள் அருந்தி வர உடலில் நோயெதிர்ப்பு சக்தி பெருகும்,திரி நாடி நிலைகள் சமன் படும்,இரத்தத்தில் உள்ள நஞ்சுகள் அகன்று உடலில் புத்துணர்ச்சி கிட்டும்,உடலில் புது இரத்தம் பெருகும்,மேலும் ஒரு வருடத்திற்கு சர்க்கரை நோய்
உடலில் வராமல் தடுக்கும்.

இது ஒரு கைகண்ட அனுபவ மருந்தாகும்.
Via Fb Aatika Ashreen

இதய நோய்களை தவிர்க்கும் மீன் உணவு..

மணக்கால் அய்யம்பேட்டை | 1:15 PM | Best Blogger Tips

வளர்ந்த நாடுகளில் மட்டுமல்லாது, வளர்முக நாடுகளிலும் நிகழ்கின்ற மரணங்களுக்கு இதயத்தாக்கும், மூளைத்தாக்குமே பெரும்பாலும் காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது. மூளைத் தாக்கினால் இறப்பவர்களை விட இதயத் தாக்கினால் இறப்பவர்களின் எண்ணிக்கையே மிகுதியாக உள்ளது. மீன் மற்றும் மீன் பொருள்களை உணவில் கணிசமாகச் சேர்த்துக் கொள்வதன் மூலம் இவ்வகை இதயத் தாக்குகளைத் தவிர்க்கலாம் என்பதும் அண்மைக்கால ஆய்வுகளின் மூலம் தெரியவருகிறது.

இதயத்தாக்கிற்கான காரணம்

இதயத்தசைகளுக்கு இரத்தத்தை அளிக்கும் கரோனரித் தமனிகளில் அடைப்பு ஏற்படும் போது, அவ்வழியே இரத்தவோட்டம் குறைவதாலோ அல்லது முற்றிலுமாகத் தடைப்படுவதன் விளைவாகவோ இதயத்தாக்கு உண்டாகிறது. இதயத்திற்குக் கிடைக்கும் இரத்தம் குறிப்பாக இரு முக்கிய காரணங்களால் தடைப்படுகிறது.

1. இரத்தக் குழாய்களில் லிப்பிடுகள் படிந்து குழாய் விட்டம் குறுகுதல்
2. இதயத் தமனிகளில் இரத்தம் உறைந்து போதல்.

இயல்பான நிலைகளில் இரத்த ஓட்டத்தில் எவ்விதத்தடங்கலும் ஏற்படுவதில்லை. மேற்சொன்ன இரு கோளாறுகள் உண்டாகும் போது, கரோனரித் தமனிகளின் இரத்தக் குழாய்கள் தடித்து அவற்றின் உள்விட்டம் குறுகுகின்ற போது இரத்தம் போக முடியாமல் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு விடுவதாலும் இரத்தத்திலுள்ள தட்டையங்கள் பிசுபிசுப்படைந்து இரத்தக் குழாய்களில் ஒட்டிக் கொள்வதாலும் இரத்தம் உறைதல் தூண்டப்பெற்று இரத்தக்குழாய் அடைப்பையும், இதயத்தாக்கையும் உண்டு பண்ணுகிறது.

உணவுக் கொழுப்பும், லிப்பிடுகளும்

கொலஸ்ட்ரால் உயர்விற்கும், இதய நோய்களுக்கும் இடையேயான தொடர்பு நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒன்று. கொலஸ்ட்ரால் இரத்தத்தில் இருக்கின்ற போது, லிப்போ புரோட்டீன் எனப்படும் கூட்டுப் பொருட்களுடன் இணைந்தே இருக்கிறது. இந்த லிப்போ புரோட்டீன் என்னும் கொழுப்புப் புரதங்கள் இரு வகைப்படும்.

1. உயர் அடர்த்தி லிப்போ புரோட்டீன்
2. தாழ் அடர்த்தி லிப்போ புரோட்டீன்

இதில் தாழ் அடர்த்தி லிப்போ புரோட்டீன் தான் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடியது என்று கருதப்படுகிறது. இதனுடன் கொலஸ்ட்ரால் இணைகின்றபோது இரத்தக் குழாய்களில் கொழுப்பு படியத் தொடங்குகிறது. இதனால் இரத்தக் குழாய்களில் குறுக்கமும் அடைப்பும் ஏற்பட வாய்ப்பாகிறது.

இதற்கு மாறாக உயர் அடர்த்தி லிப்போ புரோட்டீன்களுடன், கொலஸ்ட்ரால் இணைகின்ற போது, அது இரத்தச் சுற்றோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விடுவதால் இதய நோய்கள் வருவது தடுக்கப்படுகிறது.

தாழ் அடர்த்தி லிப்போ புரோட்டீன்களின் அளவு குறைவாகவும், உயர் அடர்த்தி லிப்போ புரோட்டீன்கள் செறிவாகவும் உள்ள உணவுப் பொருள்களில் மீன் வகைகள் முதலிடம் பெறுகின்றன. எனவே ஒவ்வொருவரும் தங்கள் உணவில் சரியான விகிதத்தில் மீன் பொருட்கள் சேருமாறு கவனமுடன் திட்டமிடுவது அவசியம். இதன்மூலம் இதய நோய்கள் வராமல் காத்துக்கொள்ள முடியும். மேலும் மீன் இதயத்திற்கேற்ற அரிய உணவாக உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளாலும், மருத்துவர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

மீன் நல்ல உணவாவதோடு, நோய்களுக்குக், குறிப்பாக இதய நோய்களுக்கு ஏற்ற மருந்தாகவும் செயல்படுகின்றது. வாரத்திற்கு இருமுறை மீன் உணவுகளுடன் கூடிய உணவு முறைகளைக் கடைப்பிடிப்போருக்கு, இதயத்தாக்கு வருவதற்கான வாய்ப்பு பாதியாகக் குறைக்கப்படுகிறது. தாவர எண்ணெய்யையும், மீன் எண்ணெய்யையும் ஒப்பீட்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் மூலம், நான்கு வாரங்கள் மீன் எண்ணெய் உட்கொண்டவர்களின் கொலஸ்ட்ரால் அளவு அதே நான்கு வாரங்கள் தாவர எண்ணெய் எடுத்துக் கொண்டவர்களுடைய கொலஸ்ட்ரால் அளவை விட 5 மடங்கு குறைவாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மீன்களின் ஒமேகா 3 எனப்படும் உயர்அடர்த்தி லிப்போ புரோட்டீன் மிகுந்தும் தாழ் அடர்த்தி புரோட்டீன் குறைந்தும் இருப்பதே இதற்குக் காரணம் எனவும் தெரியவந்துள்ளது.

இதய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மீன் எண்ணெய் அடங்கிய பொருள்கள் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன. என்றாலும் மீன்களின் கல்லீரலில் இருந்து எடுக்கப்படும் காட்லிவர் ஆயில் மற்றும் ஷார்க் லிவர் ஆயில் போன்றவைகளில் உடலுக்கு நன்மை அளிக்கும் செறிவுறா கொழுப்பு அமிலங்களுடன் வைட்டமின்களும் அடங்கியுள்ளன. மீன்களின் தசைகளிலிருந்து பெறப்படும் எண்ணெயில் இவ்வைட்டமின்கள் மிகுதியாக இருப்பதில்லை. எனவே இதய நோயுற்றவர்கள் இவ்வகை மீன் எண்ணெயை உட்கொள்வது நல்லது.

இரத்தக் குழாய்களில் படிந்துள்ள லிப்பிடுகளைக் குறைக்கவும், பல்வேறு காரணங்களால் இரத்தம் உறைவதை தவிர்க்கவும், நோய் நீக்கவல்ல டோஸ்களில் மீன் எண்ணெய் தேவைப்படுவதால், தினசரி திட்ட உணவுகளில் மீன்களையும் சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும் அன்றாடம் மீன் உணவு உண்போர்கள் இடையே நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் அவர்களுக்கு இதயத்தாக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

மீன்களில் காணப்படும் துத்தநாகம், செலினியம், பாஸ்பரஸ் போன்ற மணிச்சத்துக்கள் மூளை வளர்ச்சிக்கும், பொட்டாஷியம் இரத்த அழுத்தத்தை ஒரே சீராக வைத்திருப்பதற்கும் கால்சியம் வலுவான எலும்பு வளர்ச்சிக்கும், அயோடின், உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் துணை நிற்கின்றன. இவை தவிர, சருமப் பாதுகாப்பளித்து, இரத்தவோட்டைத்தைத் தூண்டி செயல்படும் வைட்டமின் E மீன்களில் தேவையான அளவு அடங்கியுள்ளது.

மேலும் மீன்களில் காணப்படும் ஒமேகா - 3 எனப்படும் கொழுப்புப் பொருள்

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
சருமநோய் வராமல் தடுக்கிறது.
முடக்குவாதம், மூட்டுப்பிடிப்பு போன்ற எலும்பு தொடர்புடைய கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.
மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
அனைத்திற்கும் மேலாக, இதயத்தாக்கு வராமல் காக்கிறது.

தவிரவும் இதயநோய் காரணமாக உடற் பருமனைக் குறைக்க விரும்புவோருக்கு ஏற்ற வகையில் குறைந்த கலோரித் திறனையே மீன் தருகிறது. 100 கிராம் எடையுள்ள மீன் உணவை உண்கிற போது, கிடைக்கின்ற கலோரிகள் 100 -க்கும் குறைவானதுவே. மேலும் 100 கிராம் மீன் உண்ணும்போது கிடைக்கக்கூடிய கொழுப்பு 0.1 இருந்து 0.2 வரை மட்டுமே. ஆனால் இதே அளவு (100கிராம்) ஆட்டிறைச்சி 11ம் கொழுப்பினைக் கொண்டுள்ளது.

100 - 200 கிராம் அளவு மீனை வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உணவில் சேர்த்துக் கொண்டால் அது இதய நோய்களைத் தவிர்க்க உதவும். மீன் சாப்பிடப் பிடிக்காதவர்கள், மீன் எண்ணெய் மாத்திரைகளை தக்க மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.
 
Via Fb Aatika Ashreen

நாகூர் – தமிழ்நாட்டில் ஒரு முக்கிய யாத்ரீக நகரம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:51 PM | Best Blogger Tips
நாகூர் புகைப்படங்கள் - நாகூர் தர்கா 

தமிழ்நாட்டில் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நாகூர் அமைந்திருக்கிறது. வங்காள விரிகுடாவை ஒட்டிய கடற்கரை நகரமான இது நாகப்பட்டிணத்திற்கு வடக்கே 4 கி.மீ தூரத்திலும் காரைக்காலுக்கு தெற்கே 16 கி.மீ தூரத்திலும் உள்ளது. வரலாற்றுக்காலத்தில் இந்த ஊரில் ஒரு புத்த விஹாரம் இருந்ததாக சீனப்பயணி யுவான் சுவாங் தனது பயணக்குறிப்புகளில் பதிந்துள்ளார். 690 முதல் 728ம் ஆண்டு வரை இந்த ஊர் ராஜசிம்மர் எனும் பல்லவ மன்னரால் ஆளப்பட்டதாக சொல்லப்படுகிறது.
நாகூருக்கு அருகில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்கள்
நாகூரில் உள்ள ஒரு தர்க்கா இந்த ஊரின் முக்கிய அடையாளமாகவும் பிரசித்தமான ஆன்மீக யாத்ரீக மையமாகவும் திகழ்கிறது. இந்த இஸ்லாமிய தர்க்காவானது மீரான் சாஹிப் அப்துல் காதிர் ஷாஹுல் ஹமீத் பாத்ஷா எனும் யோகிக்காக அமைக்கப்பட்டிருக்கிறது.

ஏழு லெப்பை ஜாமியா மஸ்ஜித், ஃபாத்திமா ஜாமியா மஸ்ஜித் மற்றும்தீருபள்ளி மஸ்ஜித் ஆகியன நாகூரில் உள்ள இதர முக்கியமான மசூதி பள்ளிவாசல்களாகும். தவிர, நாகூர் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள நாகூர் பட்டிணஞ்சேரி எனும் மீனவ கிராமத்தில் சீராளம்மன் கோயில்எனும் முக்கியமான கோயிலும் உள்ளது.
சீராளம்மன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் விமரிசையான உற்சவம் 10 நாட்களுக்கு நடத்தப்படுகிறது. மேலும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில்  நாகூரில் கந்தூரி திருவிழாவும் விசேஷமாக நடத்தப்பட்டு வருகிறது. 

மாரியம்மன் கோயில்ஆஞ்சநேயர் கோயில் சிவன் கோயில் மற்றும்பெருமாள் கோயில் ஆகியனவும் நாகூரில் அமைந்திருக்கின்றன. இப்படி பல கோயில்கள் மற்றும் மசூதிகள் மட்டுமல்லாமல் இங்குள்ள கடற்கரைப்பகுதியும் ஒரு முக்கியமான சுற்றுலாப்பொழுதுபோக்கு ஸ்தலமாக விளங்குகிறது.

வருடமுழுதும் நாடெங்கிலுமிருந்து ஏராளமான யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நாகூருக்கு வருகை தருகின்றனர்.

பயண வசதிகள்

தமிழ்நாட்டின் எல்லா நகரங்களிலிருந்து மிகச்சுலபமாக நாகூர் நகரத்துக்கு வரலாம். நாகூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை மற்றும் திருச்சிக்கு ரயில் சேவைகள் உள்ளன. சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்கள் நாகூருக்கு அருகிலுள்ள முக்கிய விமான நிலையங்களாகும்.

பருவநிலை

கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால் நாகூர் கடற்கரைப்பிரதேச பருவநிலையை கொண்டுள்ளது.

Thanks & Copy from Thatstamil.com

சின்முத்திரை

மணக்கால் அய்யம்பேட்டை | 12:06 PM | Best Blogger Tips
சின்முத்திரை

தக்ஷிணாமூர்த்தி சின்முத்திரையைக் காட்டிக் கொண்டிருக்கிறார். வலது கைக் கட்டைவிரலும், சுட்டு விரலும் ஒன்றையொன்று வளைத்து சார்ந்து நிற்க, ஏனைய மூன்று விரல்களும் விலகித் தனித்தனியேச் சேர்ந்து நின்று கொண்டிருக்கும் நிலை சின்முத்திரையாகும். நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரல் என்னும் மூன்றும் முறையே ஆணவம், மாயை, கண்மம், என்னும் மும்மலங்களைக் குறிப்பனவாகும்.நடுவிரல் நீண்டு முனைந்து நிற்பதால்,ஆணவ மலத்தைக் குறிப்பதாக உள்ளது. அதற்கு அடுத்த விரல், மாயாமலத்தைக் குறிப்பது என்பதனைப் புலப்படுத்தவே, மாயா, மல சம்பந்தமான பொன் முதலியவற்றால் இயன்ற மோதிரத்தினை, அதன் கண் நாம் அணிந்து கொள்கின்றோம்.

பெருவிரல் உதவியின்றி, நாம் எதனையும் எடுத்தல், பிடித்தல் முதலியன செய்தல் இயலாது. ஆதலின் அது சின்முத்திரையில் பகுதியினைக் குறிக்கின்றது. சுட்டுவிரல் தன்னியல்பில் ஏனைய மூன்று விரல்களோடு சேர்ந்து பெருவிரலை பிரிந்து நிற்கின்றது. அது பசு எனப்படும்.
கட்டைவிரலின் அடியில் சுட்டுவிரல் சென்று சேர்ந்து படிந்து நிற்பது. முத்திரையில் உயிர்கள் சிவத்தின் திருவடிகளில் சென்று ஒன்றி நிற்றலைப் புலப்படுத்துகின்றது.

உயிர்கள் பிறப்பு இறப்புத் துன்பங்களிலிருந்து விடுபடுதல் வேண்டுமாயின்,மும்மலங்களின் தொடர்பை விட்டுப் பதிப்பொருளின் திருவடிகளை அடையப் பெறுதல் வேண்டும். அதனை விளக்கவே சின்முத்திரையில் சுட்டுவிரலானது தான் சேர்ந்துள்ள ஏனைய மூன்று விரல்களைப் பிரித்து கட்டை விரலின் அடியில் சென்று வளைந்து பணிந்து தொட்டுக் கொண்டிருக்கிறது.தக்ஷிணாமூர்த்தி சின்முத்திரையைக் காட்டிக் கொண்டிருக்கிறார். வலது கைக் கட்டைவிரலும், சுட்டு விரலும் ஒன்றையொன்று வளைத்து சார்ந்து நிற்க, ஏனைய மூன்று விரல்களும் விலகித் தனித்தனியேச் சேர்ந்து நின்று கொண்டிருக்கும் நிலை சின்முத்திரையாகும். நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரல் என்னும் மூன்றும் முறையே ஆணவம், மாயை, கண்மம், என்னும் மும்மலங்களைக் குறிப்பனவாகும்.நடுவிரல் நீண்டு முனைந்து நிற்பதால்,ஆணவ மலத்தைக் குறிப்பதாக உள்ளது. அதற்கு அடுத்த விரல், மாயாமலத்தைக் குறிப்பது என்பதனைப் புலப்படுத்தவே, மாயா, மல சம்பந்தமான பொன் முதலியவற்றால் இயன்ற மோதிரத்தினை, அதன் கண் நாம் அணிந்து கொள்கின்றோம்.

பெருவிரல் உதவியின்றி, நாம் எதனையும் எடுத்தல், பிடித்தல் முதலியன செய்தல் இயலாது. ஆதலின் அது சின்முத்திரையில் பகுதியினைக் குறிக்கின்றது. சுட்டுவிரல் தன்னியல்பில் ஏனைய மூன்று விரல்களோடு சேர்ந்து பெருவிரலை பிரிந்து நிற்கின்றது. அது பசு எனப்படும்.
கட்டைவிரலின் அடியில் சுட்டுவிரல் சென்று சேர்ந்து படிந்து நிற்பது. முத்திரையில் உயிர்கள் சிவத்தின் திருவடிகளில் சென்று ஒன்றி நிற்றலைப் புலப்படுத்துகின்றது.

உயிர்கள் பிறப்பு இறப்புத் துன்பங்களிலிருந்து விடுபடுதல் வேண்டுமாயின்,மும்மலங்களின் தொடர்பை விட்டுப் பதிப்பொருளின் திருவடிகளை அடையப் பெறுதல் வேண்டும். அதனை விளக்கவே சின்முத்திரையில் சுட்டுவிரலானது தான் சேர்ந்துள்ள ஏனைய மூன்று விரல்களைப் பிரித்து கட்டை விரலின் அடியில் சென்று வளைந்து பணிந்து தொட்டுக் கொண்டிருக்கிறது.
 
Via Fb சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள்
 
இடுப்பு வலி நீங்க இயற்கை வைத்தியம்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:03 PM | Best Blogger Tips

இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் இன்று ஏராளம். இளைய தலைமுறை முதல் வயதானவர்கள் வரை இன்று சந்திக்கும் ஒரு பிரச்னை இடுப்புவலி.
இடுப்பு வலி ஏற்டுவதற்கு என்ன காரணம்?

இடுப்பு வலி நீங்க

அதிகபட்ச நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு ஏற்படுகிறது. குறிப்பாக கணினியின் முன்பு அமர்ந்து வேலை செய்யும் இளைய தலைமுறைகள் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இடுப்புவயால் துடித்துப் போகின்றனர்.

காரணம் இடைவிடாமல் உட்கார்ந்து கொண்டே கணினியின் முன்பு அமர்ந்திருப்பதுதான்.
இதற்குத் தீர்வு என்ன?

அடிக்கடி அமர்ந்திருக்கும் இருக்கை விட்டு எழுந்து செல்லலாம்.

சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட மேசைகளை பயன்படுத்த வேண்டும்.
கணினி வைத்திருக்கும் மேசையை ஏற்றி இறக்கும் வகையில் அமைக்க வேண்டும்.

அமர்ந்திருக்கும் இருக்கை நன்கு சுழலுமாறும், மேசையின் உயரத்திற்கு தகுந்தவாறும் இருக்கையின் உயரத்தை வைக்க வேண்டும்.

பணி முடிந்ததும் நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

சரியான முறையில் நாற்காலியில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும்.
தொடர்ச்சியாக கணினியின் முன்பு அமர்ந்து பணியாற்றுவதால் இடுப்புப்பகுதியில் சதைகள் அழுத்தப்பட்டு, முதுகுத் தண்டின் சவ்வில் தேய்மானம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். இதனால் தாங்க முடியாத இடுப்பு வலி ஏற்படும்.

தொடர்ச்சியாக இதே நிலை நீடித்தால், இறுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும். எனவே வரும் முன் காப்பதே சிறந்த வழி. மேற்கொண்ட முறைகளை நடைமுறைப்படுத்த, விரைவில் இடுப்பு வலியிலிருந்து மீள முடியும்.

இடுப்பு வலியை குணமாக்கும் கொள்ளு...

கொள்ளு பல பிரச்னைகளைத் தீர்க்கும் ஒரு இயற்கை உணவுப் பொருள். கிராமங்களில் அதிகமாக இது கிடைக்கும்.

கொள்ளு ரசம் வைத்து குடிக்க இடுப்பு வலி பறந்து போகும்.
உடல் பருமனாக உள்ளவர்கள் கொள்ளை வாரம் மூன்று முறை சேர்க்க உடல் தசைகள் இறுகி, ஒரு ஆரோக்கியமான உடல் வாகை பெற முடியும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.

அரை தம்ளர் தண்ணீரில் ஒரு கரண்டி அளவு ஓமம் சேர்த்து அதில் 100 மிலி தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ள வேண்டும்.பிறகு அவற்றுடன் கற்பூரப் பொடியை சேர்த்து இளஞ்சூடாக இருக்கும் போது தேய்க்க வேண்டும்.

முருங்கைப் பட்டை, சுக்கு இவை இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து மேலே பூச வலி போகும்.

நல்லெண்ணையில் மருதாணி இலையை போட்டு காய்ச்சி பூசவும்

பூண்டை போட்டு காய்ச்சிய வேப்பெண்ணை தடவவும்.

பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறு கலந்து தடவவும்.

விழுதி இலையை எடுத்து சாறு பிழிந்து அதனுடன் நல்லெண்ணையை கலந்து 5 மி.லி வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி குறையும்.

பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க:

மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிற்று வலியும் இடுப்பு வலியும் ஏற்படுவது இயற்கை. இந்த வலிகளைப் போக்க வெந்தயத்துடன் நூறு கிராம் அளவுக்கு வெந்தயத்தை நன்றாக பொடியாக்கி, அதில் இருநூறு கிராம் சர்க்கரையை கலந்து சாப்பிட வயிற்றுவலி, இடுப்பு வலி நீங்கும்.

வெள்ளைப் பூண்டுடன் கருப்பட்டியை கலந்து சாப்பிட இடுப்புவலி பெருமளவு குறைந்துவிடும்.

இளம்பெண்களுக்கு இடுப்பு வலி நீங்க:

நீங்கள் ஹைஹீல்ஸ் அணியும் பழக்கமுள்ளவர் எனில் அதன் மூலம் கூட உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.

ஹைஹீல்ஸ் அணிந்து நீண்ட நேரம் நடந்து செல்வதால் உடல் எடை முழுவதும் பாதத்தை நோக்கி அழுத்தப்படுவதால் முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி ஏற்படும்.
மிளகை பொன் வறுவலாக வறுத்து அதில் எள் எண்ணையை கலந்து சாப்பிட இடுப்பு வலி குறையும்.
தளுதாளி இலையுடன் பூண்டு, எள் எண்ணெய் (நல்லெண்ணெய்) சேர்த்து துவையல் செய்து சாப்பிட இடுப்பு வலி குணமாகும்.

ஆயூர்வேத சிகிச்சை முறைகள்:

ஆயுர்வேதத்தில் ‘கிரிதரஸி’ எனப்படும் இடுப்பு வலி வாயுவால் உண்டாகும் என கருதப்படுகிறது. தவறான அங்கஸ்திதி, முதுகுவலி, சுளுக்கு இவைகளை ஆயுர்வேதம் காரணமென்கிறது. குளிர்காலமும், மலச்சிக்கலும் ஸியாடிகா பாதிப்புகளை தூண்டிவிடும்.
அறிகுறிகள்

‘சியாடிகா’ உடலின் ஒரு பக்கத்தை முடக்கும் கீழ் இடுப்பிலிருந்து பாதம் வரை வலி, இழுப்பு ஏற்படும். கால் விரல்களில் பாதத்தில் ஊசி குத்துவது போன்ற வலி, விட்டு விட்டு வலி, தீடீர் வலி இவை ஏற்படும். வலி குறைவாக இருக்கலாம்.

இல்லை தீவிர பொறுக்க முடியாத வலியும் ஏற்படும். பிட்டம், தொடை, ஆடுகால் தசை, பாதம் இங்கெல்லாம் வலி வரும். இந்த பாகங்களில் மரத்துப்போனது போன்ற உணர்ச்சிகளிருக்கும். இந்த மரத்துபோகும் சமயத்தில் முதுகு வலி (சில வேளைகளில்) இருக்காது.

1) அபதர்பன சிகிச்சை – உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடற்பருமனைக் குறைத்தல்.

2) ஆலேபனம் - நாகராதி சூர்ணம், ஜடாமயாதி சூர்ணம், கொட்டம் சுக்காதி சூர்ணம், கருத்த மர்மனி குளிகை போன்றவற்றைக் கொண்டு பத்து போடுதல்.

3) பரிசேக சிகிச்சை – தான்யாம்லத்தில் (காடி) தாரை சிகிச்சை செய்தல். இச்சிகிச்சை வலியிலிருந்து விரைவில் நிவாரணம் அளிக்கும்.

4) அப்யங்கம் (MASSAGE) - சஹசராதி தைலம், சஹசராதி குழம்பு, தன்வந்தரம் தைலம், முறிவெண்ண, மஹா நாராயண தைலம், கற்பூராதி தைலம், மஹா மாஷ தைலம் போன்ற தைலங்களைக் கொண்டு ஆயில் மசாஜ் செய்தல் நல்ல பலனையளிக்கும்.

5) ஸ்வேதன சிகிச்சை – (SUDATION) இலைகிழி, ஜம்பீர பிண்டம், வாலுகா பிண்டம் வைத்து ஸ்வேதன சிகிச்சை செய்தல்.
6) விமலாபன சிகிச்சை - ஸ்பைனல் மசாஜ் (SPINAL MASSAGE) ட்ராக்ஸன் மசாஜ் (TRACTION MASSAGE) செய்தல். பொதுவாக 2.5 kg + 2.kg, 2.5kg+2.5kg எடை பயன்படுத்துதல் நன்று.

7) உபநாக சிகிச்சை – ஜடாமயாதி சூர்ணம், ஆமணக்கு இலை மற்றும் ஊமத்தை காய் அல்லது ஆமணக்கு விதையுடன் எள் சேர்த்து அரைத்து உபநாகம் செய்தல்.

8) விரேசன சிகிச்சை - இந்துகாந்த கிருதம், திக்தக கிருதம் கொண்டு ஸ்நேக பானம் செய்த பிறகு கந்தர்வஹஸ்தாதி ஏரண்டம், திரிவிருத் லேஹ்யம், அவிபத்தி சூரணம் கொண்டு பேதி செய்வித்தல். விரேசனம் மிக முக்கிய சிகிச்சையாக கருதப்படுகிறது.

10) பந்தன சிகிச்சை (BANDAGE) - ட்ரக்ஸன் செய்த பிறகு முறிவெண்ணெய் வைத்து கட்டு போடுதல் நல்ல பலனையளிக்கும். L.S CORSET அணிய பரிந்துரைக்கப்படுகிறது.

11) ஸ்நேக வஸ்தி – சஹசராதி குழம்பு, தாந்வந்தரம் குழம்பு எனிமா கொடுக்க மென்தட்டில் ஏற்படும் அழுத்தம் குறையூம்.

12) கடி வஸ்தி – கடி கிரகத்தில் (SCIATICA வில்) கடி வஸ்தி மிக முக்கிய சிகிச்சையாக மேற்கொள்ளப்படுகிறது. முறிவெண்ணெய் மற்றும் சஹசராதி தைலம் கொண்டு கடி வஸ்தி அல்லது பிச்சு செய்ய நல்ல பலனையளிக்கும்.

13) சஹசராதி கஷாயம், குக்குலு ராஸ்னாதி, மஹா ராஸ்னாதி, சிறிய ராஸ்னாதி போன்ற கஷாயங்கள் உள்ளுக்கு சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

14) யோகாசன சிகிச்சை – புஜங்காசனம், பவன முக்தாசனம் பரிந்துரைக்கப்படுகிறது.

இடுப்பு வலி வராமல் தடுக்க சில வழிமுறைகள்:

உடல் எடையை பராமரித்தல், மிதமான உடற்பயிற்சி, அதிக எடை தூக்காதிருத்தல், முறையின்றி நீண்ட நேரம் அமர்ந்திருத்தல், அதிக அளவில் டூ வீலர் பயணம் செய்யாமை, எண்ணெய் தேய்த்து குளித்தல் போன்ற உபாயங்களைக்கையாண்டால் IVDP ஏற்படாமல் தடுக்கலாம்.

உணவு கட்டுபாடும் உதவும். காரம், எண்ணெய், அதிக புளி, கிழங்கு வகைகள், பொறித்த வறுத்த உணவுகள் இவற்றை தவிர்க்க வேண்டும்.

இதர வழிகள்:

1. முன்பே சொன்னபடி ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் படுக்கையிலேயே முடங்கி விட வேண்டாம். அவ்வப்போது எழுந்து சிறு நடை பயிலுங்கள்.

2. குப்புற படுக்கக் கூடாது.

3. நெடுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி செய்கின்ற போது முதுகெலும்பு அதிக அழுத்தத்திற்கு ஆளாகிறது. குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாகிலும் இருக்கையை விட்டு நிமிட நேரம் நின்று சிறிது தூரம் நடந்து பின்னர் வந்து அமருங்கள்.

4. நெடுநேரம் இருக்கையில் அமர வேண்டி வந்தால் சாய்ந்தோ அல்லது தொய்வாகவோ இராமல் நன்கு நிமிர்ந்து உட்காரப் பழகுங்கள்.

5. உங்கள் பணி நிமித்தம் நெடுநேரம் நிற்க வேண்டி வந்தால் அது உங்கள் இடுப்பு மூட்டுக்களையும், முதுகு எலும்பையும் பாதிக்கக் கூடும். ஒரு காலை நேராகவும், மற்றொரு காலைச் சற்று மடக்கிய நிலையிலும் வைத்து நிற்கலாம். சிறிய பலகை அல்லது குட்டி ஸ்டூலின் மேல் ஒரு காலை வைத்துக் கொள்ளலாம்.

6. இயன்றவரை மிகத் தட்டையான தலையணை ஒன்றைப் பயன்படுத்தி மல்லாந்த நிலையில் படுத்துத் தூங்குவது நல்லது.

7. ஸ்பாஞ்ச், இலவம் பஞ்சு நிறைந்த மென்மையான மெத்தைகளைத் தவிர்த்து தேங்காய்நார் மெத்தைகளில் படுப்பது நல்லது.

8. ஸ்பிரிங் இல்லாத தட்டையான மரக்கட்டில் அல்லது கோத்ரெஜ் கட்டில் போன்ற ஒன்றில் படுக்க முயலுங்கள்.

9. படுக்கையிலிருந்து திடுமென எழுந்திராமல் மெல்ல உருண்டு படுக்கையின் ஒரத்திற்கு வந்து கால்களைத் தரையில் ஊன்றி எழுந்து உட்காருங்கள்.

10. நீண்ட நடைப்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

11. பளுதூக்குவது போன்ற பயிற்சிகளைத் தவிருங்கள்.

12. தரையில் கிடக்கும் பொருள்களைக் குனிந்து எடுக்காதீர்கள். குத்துக்காலிட்டு உட்கார்ந்து அதன் பின் எடுங்கள்.

13. தரையிலுள்ள பொருள்கள் எதையேனும் தூக்க வேண்டி வந்தால் மண்டியிட்டு உட்கார்ந்து அதன் பின்னர் தூக்குங்கள்.

14. கழுத்துவலி, தோள்வலி இருந்தால் அதற்கு மருத்துவம் செய்து கொள்ளுங்கள். இல்லாவிடில் அது முதுகு வலியில் போய் முடியலாம்.

15. உடல் எடையை இயன்ற அளவு கட்டுக்குள் வையுங்கள்.

16. பெண்கள் தங்கள் பிட்டப் பகுதியின் எடை பெரிதும் மிகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 கிலோ மீட்டராவது நடக்கின்ற பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

17. முதுகுவலி பற்றியே எந்த நேரமும் சிந்தனை செய்து வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாதீர்கள். எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்று தான் என்று இயல்பாக எடுத்துக் கொள்ளுங்கள்.

18. பெரும்பாலான ஆர்த்ரைடீஸ், முதுகெலும்பு பிரச்சனைகள் வர காரணம் மலச்சிக்கல். இதை தவிர்க்கவும்.

உணவு முறை:
• குளிர் உணவு / பானங்களை தவிர்க்கவும். ஐஸ்கீரிம், குளிர்பானங்களை தவிர்க்கவும்.
• பழைய உணவுகளை தவிர்க்கவும்.
• கத்தரிக்காய், முளைகட்டிய பீன்ஸ், கொய்யாப்பழம், வாழைப்பழம், சீதாப்பழம், அன்னாசி, வறுத்த உணவு, கடல் உணவு, இனிப்புகள், தயிர், ஊறுகாய் – இவற்றை தவிர்க்கவும்.
• எள்ளை சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து வலிக்கும் இடத்தில் பல தடவை தடவவும்.
• இரண்டு தேக்கரண்டி சீரகத்தை பொடித்து ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சவும். ஒரு துணியை இந்த சீரகத் தண்ணீரில் நனைத்து, வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.
• இரவில் படுக்கும் முன்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி, 2-3 ஏலக்காய் போட்டு காய்ச்சிய பாலை பருகவும்.
• இயற்கை வைத்திய முறையில், சுடுதண்ணீரில் இடுப்பு வரை அமிழ்ந்து உட்காருவது வலியை குறைக்கும்.
• இஞ்சியும், மஞ்சளும் ஸியாடிகாவை தவிர்க்கும் இயற்கை மருந்துகளாக கருதப்படுகின்றன. இவற்றை வைத்தியரின் ஆலோசனைப்படி உபயோகிக்க வேண்டும்.

இடுப்பு வலி குறைய சலபாசனம்

சலபாசனம் என்ற யோகாசன முறை இதற்கு நல்ல தீர்வு. முதலில் கைகளை வயிற்றுப் பகுதிக்கு அடியில் வைத்து கைகளின் மேல் படுக்க வேண்டும். பிறகு கைகளை தரையில் அழுத்தி, சுவாசத்தை உள்ளே இழுத்து, இரண்டு கால்களையும் மேலே உயர்த்த வேண்டும்.

20 நொடிகள் சுவாசத்தை அடக்கி வைத்துவிட்டு பின்பு வெளியேற்றி பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்தப் பயிற்சியை செய்யும்போது அடி வயிற்றையும் முதுகுத் தண்டின் கீழ் பாகத்தையும் நினைக்க வேண்டும்.

சலபாசனம் இதயத்தையும் ஜீரண உறுப்புகளையும் பலப்படுத்துகிறது. மேலும் முதுகுத் தண்டின் வளையும் தன்மையும் அதிகரிக்கும்.
 Via FB ஆரோக்கியமான வாழ்வு

வயிற்றைச் சுத்தம் செய்வது எப்படி?

மணக்கால் அய்யம்பேட்டை | 11:57 AM | Best Blogger Tips
வயிற்றைச் சுத்தம் செய்வது எப்படி? 

புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்

என்ற குறள் உடலின் தூய்மை மற்றும் மனதின் தூய்மை பற்றி வலியுறுத்துகிறது. இந்த அகத் தூய்மை மற்றும் புறத்தூய்மை தாண்டிய மூன்றாவது ஒரு தூய்மை குறித்து சித்தர் பெருமக்கள் பேசுகின்றனர். அதுவும் அகத் தூய்மைதான். நம் உடலின் உள்ளுறுப்புகளை பற்றியது அது. 

பிறந்த நிமிடம் முதல் இறுதி மூச்சுவரை ஓய்வறியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உள்ளுறுப்புகளின் தூய்மை மற்றும் ஓய்வினை சித்தர் பெருமக்கள் உணர்ந்திருந்தனர். 
அதன் பொருட்டே சீரான இடைவெளிகளில் உபவாசம் எனும் உண்ணா நோன்பினையும், உள்ளுறுப்புகளை சுத்தி செய்யும் வகைகளையும் வரையறுத்துக் கூறியிருக்கின்றனர்.அந்த வகையில் இன்று வயிற்றினை சுத்தம் செய்யும் முறை பற்றி பார்ப்போம். 

நம் உடலிற்குத் தேவையான சத்துகள் நாம் உண்ணும் உணவில் இருந்தே பெறுகிறோம். உணவில் இருந்து சத்துக்களை உடலுக்கு பிரித்தளிக்கும் வேலையை செய்வது நமது வயிறு. இதனை தூய்மையாய் வைத்திருந்தால் உடல் ஆரோக்கியத்தை பேண முடியும் என்கின்றர் சித்தர் பெருமக்கள்.
எப்படிச் சுத்தமாய் வைத்திருப்பது?

எளிய விதிகள்தான், யாரும் கடைபிடிக்கலாம்.

ஒரு நாளிற்கு இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும்.

வருடத்திற்கு இரு முறை பேதி மருந்து உட்கொள்ள வேண்டும்.

அதென்ன பேதி மருந்து?

இந்த பேதி மருந்தைப் பற்றி கோரக்கர் தனது "ரவிமேகலை" நூலில் "பேதிகல்பம்" என்ற பெயரில் அருளியிருக்கிறார்.

சித்தமுடன் குமரிமடல் பெரிதா யைந்து
சீவிய தன்னமோர் முடாவி லிட்டு
வித்தகமாய்க் கடுக்காய்த்தூள் பலமுந் தாக்கிப்
பிசைந்திடவே செயநீராய் நீர்த்துப் போகும்
சுத்தமுடன் வடிகட்டித் தேசிச் சாற்றுத்
துளிபத்து இட்டுவண்ணப் பேதி யாகிப்
பித்தமுடன் வாத ஐயபேதம் நீங்கும்
பிசகாமல் முக்காலை யருந்தல் நன்றே. 

- ரவிமேகலை.

சோற்றுக் கற்றாழை மடல் களில் பெரிதாக உள்ளதாகப் பார்த்து ஐந்து மடல்களைக் கொண்டுவந்து, அவற்றை சீவி அதில் உள்ள சோற்றை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கடுக்காய்த்தூள் ஒரு பலம் போட்டுப் பிசைந்தால் அது நீர்த்துப் போய் விடுமாம். பின்னர் அதனை வடிகட்டி எடுத்து, அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு பத்துத் துளி விட்டு கலந்து மூன்று நாட்கள் காலை வேளையில் தொடர்ந்து அருந்த வேண்டுமாம். அப்படி அருந்தினால் வயிறு கழியுமாம். அத்துடன் வாதம், பித்தம், ஐயம் ஆகிய மூன்று குற்றங்களும் நீங்கும் என்கிறார். 
இதன் மூலம் வயிறு சுத்தமாகி, அதன் செயல்பாடு மேம்படும் என்கிறார்.

via தமிழ்ச் சித்தர்கள்

இதன் மூலம் வயிறு சுத்தமாகி, அதன் செயல்பாடு மேம்படும் என்கிறார்.via தமிழ்ச் சித்தர்கள்

ஹிந்து மதம் - மூன்றாம் பகுதி

மணக்கால் அய்யம்பேட்டை | 11:51 AM | Best Blogger Tips
முன்றாம் பகுதி 

கட்டாயம் ஒவ்வரு ஹிந்துவும் படிக்க வேண்டிய கட்டுரை 

படித்து விட்டு உங்களுக்கு இந்த கட்டுரை பிடித்தால்
நண்பர்களுக்கு பகிரவும் 

நண்பர்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி 

 ஹிந்து மதம்

ஹிந்து மதத்தின் தோற்றம் பற்றி பலவாறான கருத்துக்கள் வரலாற்று ஆசிரியர்களிடம் இருக்கின்றன. அதை எல்லாம் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது சிந்துசமவெளி நாகரீகத்திற்கு முன்பே ஹிந்து மதம் தோன்றியிருக்கிறது. அதாவது புதிய கற்காலத்தின் இறுதியில். உருவ வழிபாடு ஏதும் இல்லாமல் ஐம்பூதங்கலாகிய நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் கடவுளாக கொண்டு இருந்துள்ளனர். ஹிந்து மத்த்தில் முதன்முதலில் தோன்றிய பிரிவு பிராமணர்கள். கிமு10 நூற்றாண்டில் ஆரம்பித்து கிமு6 நூற்றாண்டு வரை ஹிந்து மத்த்தின் வேதங்கள், மந்திரங்கள் மற்றும் கொள்கைகள் என அனைத்தும் இவர்களாலேயே உருப்பெற்றது. இதற்கு பல சான்றுகள் ரிக் வேத்த்தில் கிடைக்கின்றன. பின்னர் ஹிந்து மதத்தின் இரு பெரும் கிளைகளான சைவமும், வைணவமும் தோன்றியது.

இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று நம் ஹிந்து மதம். ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக விளங்குகிறது. நேபாளம், இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கபூர், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.
     பிற சமயங்கள் போல் இந்து சமயத்தை தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனைக் நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம்.

ஹிந்து மத கோட்பாடுகள் ஆறு கிளைகளாக பிரிக்கபடுகிறது
1.சம்க்யா(Samkhya),
2.யோகா(yoga),
3.நியாய(nyaya),
4.வைஷேஷிகா(vaisheshika),
5.மிமாச்யா(mimasya),
6.வேதாந்தா(vedantha)

சம்க்யா(Samkhya)
ஹிந்து மத தந்திரங்களை பற்றி கூறுவது சம்க்யா. கபிலர் இதை தோற்றுவித்தார். இதில் மனம், அக ஆற்றல், ஆத்மா, மோட்சம் பற்றி பல குறிப்புகள் உள்ளன. உள்ளார்ந்த நினைவுகளில் சத்வம், ரஜஸ், தமஸ் எனப்படும் மூன்று நிலைகளும் இதில் வருகின்றன. கடவுள் பற்றியோ மோட்சத்திற்கு பிறகு என்ன என்ற குறிப்புகள் இல்லை.

யோகா(yoga)
யோகா மனித மனதை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் வழிகாட்டி ஆகும். தியானம் முதல் சமாதி நிலை வரை பல நிலைகள் பதஞ்சலி முனிவரால் எழுதப்பட்டுள்ளது.
அஷ்டாங்க யோகா எட்டு நிலைகளை கொண்டது. இது தியானம் மூலம் மனிதன் முக்தி அல்லது சமாதி நிலையை அடைய வழிவகுப்பதாகும்

1.யாமா(yama- அஹிம்சை, சத்யம், பிரம்மச்சரியம்):
2.நியாமா(niyama- அகபுற தூய்மை, சந்தோசம், தவம், மத சார்பான புத்தகங்களை படித்தல் மந்திரங்களை தொடர்ந்து ஓதுதல், கடவுளிடம் தன்னை ஒப்படைத்தல்)
3.ஆசனா(asana- இயல்பாக சுவாசித்தல், சிரசாசனம், பத்மாசனம்)
4.பிரானயமா(pranayama- மனதையும் சுவாசத்தையும் ஒன்றாக்கி ஒருநிலைப்படுத்துதல்)
பிராணயாமா மூன்று பெரும் நிலைகளை கொண்டது
I) சுவாசத்தை உள்ளிழுத்தல்
II)சுவாசத்தை வெளிவிடுதல்
III)சுவாசத்தை நிலைப்படுத்துதல்
சுவாசத்தை உள்ளிழுத்து நிலைபடுதுதல்
சுவாசத்தை வெளிவிட்டு நிலைப்படுத்துதல்
சுவாசத்தை நிலைபடுத்தி உள்ளிலுதல் வெளிவிடுதல்
5.பிரத்யஹாரா(prathyahara- நினைவுகளிலிருந்து வெளிவருதல்)
6.தர்ணா(dharna- மன ஒருமைப்பாடு)
7.தியானா(dhayana- தியானம்)
8.சமாதி(samathi- சமாதி நிலை)

நியாய(nyaya)
ஹிந்து மத ஆறு தத்துவங்களில் இதுவும் ஒன்று. ஹிந்து மத்த்தின் அடிப்படை நியாய தர்மங்களை பற்றி இது குறிப்பிடுகிறது.

வைஷேஷிகா(vaisheshika)
இது ஹிந்து மத்த்தில் அறிவியல் சம்பந்தமான கோட்பாடுகளை கொண்டது. அணு பற்றிய குறிப்புகள் கூட இதில் உள்ளன.

மிமாச்யா(mimasya)
மிமாச்யா என்பதற்கு விசாரணை என்று பொருள். இது ஹிந்து மதத்தில் உள்ள ஆத்திகம் மற்றும் நாத்திகம் பற்றியதர்க்கான குறிப்புகள் உள்ளன

வேதாந்தா(vedantha)
    ஹிந்து மதத்தில் உள்ள வேதங்களை பற்றி இதில் குறிப்பிடுகின்றனர்
ஆதி சங்கரர் முதன் முதலில் வேதங்களை தோற்றுவித்தார் பின்னர் அது பல கிளைகளாக பல்வேறு முனிவர்களால் பிரிந்தது

இவ்வாறாக ஹிந்து மத தத்துவம் ஆறு கிளைகளாக உள்ளன. ஹிந்து மத தத்துவத்தை அடுத்து ஹிந்து மதத்தின் பிரிவுகளை பற்றி பார்ப்போம்.
ஹிந்து மதம் மூன்று பிரிவுகளாக பிரிக்கபடுகிறது
1.சைவம்
2.வைணவம்
3.ஸ்மார்த்தம்

சைவம்

சைவ சமயம் சிவ பெருமானை முழுமுதற் கடவுளாகக் கொள்ளும் சமயம். பிற சில முக்கிய சமயங்கள் போன்று இச்சமயத்தை ஒரு குறிப்பிட்டவர் தோற்றுவிக்கவில்லை. இந்து சமயப் பிரிவுகளுள் முதன்மையானதாக கொள்ளப்படுகின்றது. ஆரம்பகால வரலாறு பற்றி சரியான சான்றுகள் இல்லை. பிற்காலத்தில் பாண்டியர்கள் காலத்தில் நாயன்மார்கள் தோன்றி சைவத்தை எழுச்சி பெறச்செய்திருந்தனர். தமிழில் பதினெண் புராணங்களுள் பத்து புராணங்கள் சிவன் பற்றியவை. இந்தியா, இலங்கை, நேபாளம், தென்கிழக்கு ஆசியா ஐரோப்பா முதலான எல்லா நாடுகளிலும் சிவாலயங்கள் காணப்படுகின்றன

   மொகெஞ்சதாரோ - ஹரப்பா அகழ்வாராய்ச்சிகளிலிருந்து, ஆரியர் வருகைக்கு முன்பே ஒரு நாகரிகம் இந்தியாவில் இருந்த்தென்றும் அது திராவிட நாகரிகம் என்பதற்கும் அறிவியல் பூர்வமான சான்றுகள் கிடைத்தன. இதன் அடிப்படையில் ஜி.யு போப் அவர்கள் ஆரியர் வருகைக்கு முன்பே தெனிந்தியாவில் நிலவிய வரலாற்றுக்கு முற்பட்ட சமயமே சைவம் என்கிறார். அவர் கூறியவை பின்வருமாறு,

சிவனை வழிபடும் சிவநெறியாகிய சைவம் தென்னாட்டில் வரலாற்றுக்காலத்திற்கு முன்பிருந்தே நிலவிய தொன்மைச் சமயமாகும். இதனைச் சைவம் என்ற பெயரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிமேகலை ஆசிரியர் குறிப்பதால் அறியலாம். சைவசமயத்தின் வரலாற்றை நாம் வெளிநாட்டு அறிஞர்கள் எழுதியதை வைத்து பேசுகிறோம், எனது அறிவுக்கு அக்கருத்துகள், வரலாற்று கூற்றுகள் தவறாகப்படுகின்றது. 'சமயமென்பது மனிதர்களை கடவுளின் நிலைகளுக்கு கொண்டு செல்வது. அதாவது ஆன்மாக்களை பக்குவபடுத்தவே சமயத்தை சதாசிவ கடவுள் உலகம் உண்டாக்கப்பட்டபொழுது உண்டாக்கினான். இதை ஸ்ரீகண்ட உருத்தரர் தனது எட்டு சீடர்கள் மூலமாக உலகமக்களுக்கு போதிக்கபட்டது. அவர்களின் காலத்தில் இமயமலை பூமியில் இல்லை. கைலாயம் மேருமலையின் நடுவில் இருந்துள்ளது, மேருமலையோ பூமியின் மத்தியில் இருந்துள்ளது. அதாவது பூமத்திய ரேகையின் மீது, மேருமலைக்கு தெற்கே தில்லை இருந்துள்ளது {திருவாசகத்தில் மாணிக்கவாசகர் தென்தில்லை என்று குறிப்பிட்டு உள்ளார்} தில்லைக்கு தெற்கே இராவணவன்ன ஆண்ட இலங்கை இருந்துள்ளது. (இதை பட்டிணாத்தார் கூறியுள்ளார் 'தனது தாயின் உடலுக்கு நெருப்பு வைக்க பாடியபாட்டில் முன்னே இட்ட தீ தென் இலங்கை'. அன்று வாழந்த உயிரினங்களில் மனிதர்கள், தேவகள், அரக்கர்கள் என்ற உயிரினங்களும் வாழ்ந்து வந்துள்ளார்கள் (ஆராய்ச்சியாளர்கள் பூமியில் மூன்று விதமான மனிதரகள் வாழந்து வந்தார்கள என்கிறார்கள்) அரக்கர்களும், தேவர்களும் தீரா பகையால் சண்டையிட்டு அழிந்து விட்டார்கள் என்கிறது தமிழ். ஆரியன் என்ற சொல் சதாசிவனையும், அவனின் நிலைஅடைந்தவரகளையும் குறிக்கும். செத்து சம்பலாகவும், புழுக்களானவர்களை குறிக்காது. இன்றோ மடிந்து போன மனிதர்கள் உண்டாக்கிய மதங்கள் இப்பூமியை நரகமாக்கிறது. திருமந்திரத்தை படித்தால் நான் சொல்லியுள்ள கருத்துகள் உண்மை எனபதை உணர்வீர்கள்.
பழம்பெருஞ் சமயமாகிய சைவத்தில் கடவுள் வழிபாட்டு பண்பும், பயனும் திட்டவட்டமாக வரையறுக்கப்பட்டுள்ளன. வாழ்ந்தே ஆகவேண்டிய தவிர்க்க முடியாத நியதிக்கு உட்பட்டிருக்கும் நமது வாழ்க்கை பதி (கடவுள்), பசு (உயிர்), பாசம் என்ற மூலங்கள் மூன்றின் சேர்க்கையால் ஆனது. இவற்றில் பதிக்குப் பாசத்தால் ஆவதொன்றுமில்லை. பாசத்துக்குப் பதியைத் தொழுது பயன் பெற்றுக் கொள்ளமுடியாது. மூன்றாவதாகிய பசுவே பதியின் இடையறாத உபகாரத்தால் தனது வினைப் பயனாகப் பிறந்து இறந்து பெறும் நீண்ட கால அனுபவத்தில் பாசத்தடையில் இருந்து நீங்கிப் பதியினைச் சார்ந்து விடுதலை பெறுவதற்கான நிலையில் உள்ளது. இந்த நிலையே ஞானம் எனப்படுகிறது. இந்த ஞானமே சைவ வழிபாட்டின் தனித்துவப் பண்பாகும்

வைணவம்
வைணவ சமயம், விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இச்சமயம் ஹிந்து மதத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றாகும். தமிழ் மொழிக்கு வைணவம் என்ற பெயருண்டு.

உலகில் தீமைகள் ஓங்கும் போது இறைவன் அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக் கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள். விஷ்ணு அவதாரங்களில் மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, இராம, பலராம, கிருஷ்ண, கல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உபநிடதங்களில் பதின்மூன்று வைணவ உபநிடதங்களாகும்.

குப்தர் போன்ற அரசர்களின் காலத்தில் செல்வாக்கு பெற்று தென் ஆசிய முழுவதும் வைணவம் பரவியிருந்தது. வைணவத்தில் வடகலை, தென்கலை என்று இருபிரிவுகள் உள்ளன.
வைனவர்களிடத்தில் திருமண் இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு:

வடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம்
தென்கலை திருமண் காப்பு: பாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம்

வடகலை
தென்கலை
திருமால் தெய்வம்
திருமகளும் தெய்வம்
வடமொழி வேத வழி
நாலாயிர திவ்யபிரபந்தம் நூலும் போற்றப்படும்
பிராமணர்களுக்கு முதன்மை
மக்களில் உயர்வு-தாழ்வு இல்லை
வடக்கிலுள்ள திருப்பதிக்கு தென்கலை நாமம்.
தெற்கிலுள்ள திருவரங்கம் கோவிலுக்கு வடகலை நாம்ம்

ஸ்மார்த்தம்
ஸ்மார்த்தம் என்பது ஹிந்து மதத்தின் ஒரு பிரிவாகும். இதனைப் பின்பற்றுபவர்கள் சிவன்,சக்தி, திருமால், விநாயகர், சூரியன், மற்றும் முருகன் என்ற அறுவரையும் முழுமுதல் கடவுளாக வணங்குகின்றனர்.

ஸ்மார்த்தம் பழங்காலம் தொட்டே இருந்து வரும் இறைவழிதான் என்றாலும், ஆதிசங்கரர் தான் சீர்தூக்கி ஒரு புதுமுகத்தைக் கொடுத்தார். தனித்தனியாய் அவரவர்க்கு உகந்த இஷ்ட தேவதைகளை வணங்கிக் கொண்டு தனித்தனிப் பிரிவாய் கிடந்தவர்களை அழைத்து, இதோ உங்களுக்கெல்லாம் பொதுவானதொரு ஷ்ணமதம் என அதற்கான முறைகளை சீர்படுத்தினார். இதன் படி சிவன், சக்தி, திருமால், கணேசர், சூரியன் மற்றும் முருகன் என்ற அறுவரையும் முழுமுதல் கடவுளாக வணங்கலாம். பொதுவாக இந்த முறையினை பின்பற்றுவர்களுக்கு ஸ்மார்த்தர் என்று இந்நாளில் வழங்கப்படுவாதால், இந்த வழிமுறையை 'ஸ்மார்த்தம்' என்றே வழங்கலாம். இந்த வழியில் எல்லா வழிகளையும் ஏற்றுக் கொள்ளும், இலகுவான வளைந்து கொடுக்கும் தன்மையை ஏற்படுகிறது. இன்று இந்து மதம் என்று நாமெல்லாம் பொதுவாக சொல்லும் ஒரு பொது முகம் உருவாகுவதற்கு இந்த வழிதான் தான் வித்து.

ஸ்மார்த்தர்களுக்கு ஆதி சங்கரரின் அத்வைதம் தான் அடித்தளம். அதாவது இறைவன் ஈஸ்வரனும், நம் ஜீவனும் உண்மையில் முழுதிலும் பிரம்ம்மே. மாயையில் சிக்குண்டதால், ஈஸ்வரன் வேறு ஜீவன் வேறு என்பதாகத் தெரிகிறது. உயர் ஞானம் கிட்டுமாயின், இந்த வேறுபாடு தெளிந்திடும். முக்தி அடைவதற்கு ஒரே பாதை ஞானம் என்பது பெரும்பாலான ஸ்மார்த்தர்களின் நம்பிக்கை. இவ்வாறாக பிரிந்த ஹிந்து மதம் இன்று வரை தனித்தன்மையுடன் தலைதோங்கி நிற்கிறது.
பின்னர் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பல மன்னர்களால் பின்பற்றப்பட்ட வந்த ஹிந்து மதம். இஸ்லாமியர்கள் வருகைக்கு பின்பு பல்வேறு இன்னல்களை சந்தித்தது. ஒரு மதத்தை தோற்றுவித்தவர் என்று யாரும் இல்லாமல், ஒரு தனி அமைப்பு என்று ஏதும் இல்லாமல் கிட்டத்தட்ட 2000 வருடத்திற்கு மேல் இந்தியாவை முஸ்லிம்கள் ஆண்டும், 300 வருடங்களுக்கு மேல் பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டும் ஹிந்து மதத்தை ஒன்றும் செய்ய இயலவில்லை என்பதே அதன் தனி பெருமை.

ஹிந்து மதத்தின் வரலாற்றை தொடர்ந்து வேதங்கள், வேதகாலத்தில் தோன்றிய புராணங்கள் மற்றும் உபநிடதங்களை பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

life-is-sciencee.blogspot.in

நன்றி!!!
ம.ஞானகுரு
கட்டாயம் ஒவ்வொரு ஹிந்துவும் படிக்க வேண்டிய கட்டுரை

படித்து விட்டு உங்களுக்கு இந்த கட்டுரை பிடித்தால்
நண்பர்களுக்கு பகிரவும்

நண்பர்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி

ஹிந்து மதம்ஹிந்து மதத்தின் தோற்றம் பற்றி பலவாறான கருத்துக்கள் வரலாற்று ஆசிரியர்களிடம் இருக்கின்றன. அதை எல்லாம் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது சிந்துசமவெளி நாகரீகத்திற்கு முன்பே ஹிந்து மதம் தோன்றியிருக்கிறது. அதாவது புதிய கற்காலத்தின் இறுதியில். உருவ வழிபாடு ஏதும் இல்லாமல் ஐம்பூதங்கலாகிய நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் கடவுளாக கொண்டு இருந்துள்ளனர். ஹிந்து மத்த்தில் முதன்முதலில் தோன்றிய பிரிவு பிராமணர்கள். கிமு10 நூற்றாண்டில் ஆரம்பித்து கிமு6 நூற்றாண்டு வரை ஹிந்து மத்த்தின் வேதங்கள், மந்திரங்கள் மற்றும் கொள்கைகள் என அனைத்தும் இவர்களாலேயே உருப்பெற்றது. இதற்கு பல சான்றுகள் ரிக் வேத்த்தில் கிடைக்கின்றன. பின்னர் ஹிந்து மதத்தின் இரு பெரும் கிளைகளான சைவமும், வைணவமும் தோன்றியது.

அமுக்கரா செடியின் மருத்துவ குணங்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 11:47 AM | Best Blogger Tips
அமுக்கரா செடியின் மருத்துவ குணங்கள் :-

நோய்நீக்கி உடல்தேற்றியாகவும், பித்தநீர்ப் பெருக்கியாகவும், குடல் தாதுவெப்பு அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், காமம் 
பெருக்கியாகவும் செயற்படும்.
1. இலையை மென்மையாய் அரைத்துப் பற்றுப்போட அரசபிளவை, எரிகரப்பான், பாலியல் நோய்ப்புண் ஆகியவை குணமாகும்.

2. 2 கிராம் உலர்ந்த கிழங்குப் பொடி தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட்டு வர உடல் பலவீனம், காசம், பசியின்மை, மூட்டு அழற்சி,
செரிமானக் குறைவு, இருமல், உடல் வீக்கம், முதுமைத் தளர்ச்சி ஆகியவை நீங்கும்.

3. இலை வேர் ஆகியவற்றைச் சமனளவு எடுத்து மையாய் அரைத்துப் பற்றுப் போட அரசபிளவை, ஆறாத புண்கள், மூட்டு அழற்சியினால் 
ஏற்படும் வீக்கம் ஆகியவை தீரும்.

4. காயை அரைத்துப் படர்தாமரையில் தடவிவரத் தீரும்.

5. வேர்ச்சூரணம் 5 கிராம் தேனில் காலை, மாலை கொள்ளச் சளி கரைந்து (நிமோனியா) கபவாதச் சுரம் தீரும்.

6. சூரணத்தைப் பாலில் கலந்து வீக்கம், படுக்கைப்புண் ஆகியவற்றிற்குப் பூச ஆறும்.

7. வேர்ச்சூரணம் தூதுவேளை சமன் கலந்து 5 கிராம் நெய் அல்லது பால் அல்லது வெண்ணெயில் தினம், மூன்று வேளை பத்தியத்துடன் 
கொடுத்து வரச் சிலேத்துமக் காய்ச்சல், பக்கச் சூலைக் காய்ச்சல் தீரும்.

8. அமுக்கரா சூரணம் 10 கிராம், கசகசா 30 கிராம், பாதாம் பருப்பு 10 கிராம், சாரப்பருப்பு 5 கிராம், பிஸ்தாப்பருப்பு 5 கிராம் ஊற வைத்துத் 
தோல் நீக்கி அரைத்து 200 மில்லி பாலில் கலந்து சர்க்கரைச் சேர்த்து வெறும் வயிற்றில் காலையில் மட்டும் 90 நாள்கள் சாப்பிட இழந்த 
இளமையைப் பெறலாம்.

Via Fb இயற்கை அளிக்கும் நிவாரணங்கள்

சில வகைப் பழங்களின் மருத்துவ குணங்கள் !

மணக்கால் அய்யம்பேட்டை | 11:43 AM | Best Blogger Tips
சில வகைப் பழங்களின் மருத்துவ குணங்கள்:-

சாதாரணமாக சந்தைகளில் கிடைக்கும் பழங்களில் உள்ள சத்துக்களை நாம் அதிகம் தெரிந்திருப்போம். ஆனால் அரிய வகைப் பழங்களான இலந்தைப்பழம், வேப்பம்பழம், களாப்பழம் போன்றவைகளிலும் ஏராளமான சத்துக்களும், மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. அவற்றை தெரிந்து கொள்வோம்.

இலந்தைப்பழம்:

சிறிய அளவில் சிவந்த நிறத்துடன் காட்சியளிக்கும் இலந்தைப்பழத்தில் சிறிதளவே சதை காணப்படும். அதிக இடத்தை கொட்டைதான் அடைத்துக்கொண்டிருக்கும். கிராமப்புறங்களில் கரிசல்காடுகளில் தானாக முளைத்து வளரக்கூடிய முட்செடியில் இந்த பழம் பழுத்திருக்கும்

இனிப்பும், புளிப்பும் கலந்த ருசியுடன் காணப்படும் இப்பழத்தில் வைட்டமின் 'ஏ' சத்தும் சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. உடல் வளர்ச்சிக்கும், எலும்புகள் பலம் பெறவும் இலந்தைப்பழம் உதவிபுரிகிறது. இது உடல் உஷ்ணத்தை சமப்படுத்தும். தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும். அடிக்கடி வாந்தி ஏற்படுவதை கட்டுப்படுத்தும்.

களாப்பழம்:

வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் களாப்பழம் கருநிறத்துடன் முட்டை வடிவத்தில் காணப்படும். களாக்காயாக இருக்கும்போது ஊறுகாய் போட பயன்படுகிறது. இது புளிப்புச் சுவையுடன் காணப்படும்.

நன்றாக கனிந்த களாப்பழம் இனிப்புச் சுவை கொண்டது. இதில் வைட்டமின் 'ஏ' அதிக அளவில் உள்ளது. ஜீரண சக்தியை அதிகரிக்கும் தன்மை களாப்பழத்திற்கு உண்டு. உணவு உண்டபின் இந்த பழம் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகி நன்றாக பசியெடுக்கும். உடல் உஷ்ணம் காரணமாக தொண்டையில் ஏற்படும் வலியை களாப்பழம் குணப்படுத்துகிறது. உடல் சூட்டினை சமன்படுத்தும் தன்மை களாப்பழத்திற்கு அதிகம் உண்டு.

ஆல்பக்கோடா பழம்:

தமிழ் நாட்டு மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த பழம் கருநிறமாக இலந்தைப்பழம் அளவில் இருக்கும். அதிக புளிப்புச்சுவை கொண்ட இந்த பழத்தில் வைட்டமின் 'ஏ', 'பி' உயிர்ச்சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகின்றன. இது உடலுக்குப் பலத்தைத் தரும். இரத்தத்தை விருத்தி செய்யும்.

காய்ச்சலின் போது இந்த பழத்தைச் சாப்பிட்டால் உடல் சூட்டினை தணிக்கும். வாய்க்கசப்பைப் போக்கும். நாவறட்சி மாறும். வாந்தியை நிறுத்தும். தலைவலியை குணப்படுத்தும். சொறி, சிரங்கு உள்ளவர்கள் இந்த பழத்தைச் சாப்பிட்டால் சொரி, சிரங்கு உடனடியாக குணமடையும்.

வேப்பம்பழம்:

வேப்ப மரத்தின் பழங்களை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. நன்றாக முற்றி மரத்திலிருந்து தானாகவே கீழே விழும். பழங்கள் நன்றாக இனிப்பாக இருக்கும்.

வேப்பம் பழம் பித்தத்தை தணிக்கும் தன்மை கொண்டது. எந்த நோயும் வராமல் பாதுகாக்கும். இது பித்தத்தை தணிக்கும். சொரி, சிரங்கு மற்றும் தோல்நோய்களை குணப்படுத்தும்.

பழம் உதிரும் சீசனில் நன்றாக கனிந்த பழங்களை சேகரித்து அதை நீர் விட்டு கழுவி தோலையும், கொட்டையும் எடுத்துவிட்டு சுத்தமான துணியில் வடிகட்டி எடுக்கவும். எந்த அளவிற்கு பழச்சாறு இருக்கிறதோ அந்த அளவிற்குச் சர்க்கரையைச் சேர்த்து சுத்தமான களிம்பு ஏறாத பாத்திரத்தில் விட்டு, அதை அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும். பாகுபதம் வந்த சமயம் இறக்கி வைத்து ஆறிய பின் பாட்டிலில் ஊற்றிவைத்துக் கொண்டு தினமும் காலை, மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் சருமம் தொடர்பான வியாதிகள் குணமடையும். பித்தம் தொடர்பான நோய் தீரும்.

Via FB Karthikeyan Mathan