நாகூர் – தமிழ்நாட்டில் ஒரு முக்கிய யாத்ரீக நகரம்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:51 | Best Blogger Tips
நாகூர் புகைப்படங்கள் - நாகூர் தர்கா 


தமிழ்நாட்டில் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நாகூர் அமைந்திருக்கிறது. வங்காள விரிகுடாவை ஒட்டிய கடற்கரை நகரமான இது நாகப்பட்டிணத்திற்கு வடக்கே 4 கி.மீ தூரத்திலும் காரைக்காலுக்கு தெற்கே 16 கி.மீ தூரத்திலும் உள்ளது. வரலாற்றுக்காலத்தில் இந்த ஊரில் ஒரு புத்த விஹாரம் இருந்ததாக சீனப்பயணி யுவான் சுவாங் தனது பயணக்குறிப்புகளில் பதிந்துள்ளார். 690 முதல் 728ம் ஆண்டு வரை இந்த ஊர் ராஜசிம்மர் எனும் பல்லவ மன்னரால் ஆளப்பட்டதாக சொல்லப்படுகிறது.
நாகூருக்கு அருகில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்கள்
நாகூரில் உள்ள ஒரு தர்க்கா இந்த ஊரின் முக்கிய அடையாளமாகவும் பிரசித்தமான ஆன்மீக யாத்ரீக மையமாகவும் திகழ்கிறது. இந்த இஸ்லாமிய தர்க்காவானது மீரான் சாஹிப் அப்துல் காதிர் ஷாஹுல் ஹமீத் பாத்ஷா எனும் யோகிக்காக அமைக்கப்பட்டிருக்கிறது.

ஏழு லெப்பை ஜாமியா மஸ்ஜித், ஃபாத்திமா ஜாமியா மஸ்ஜித் மற்றும்தீருபள்ளி மஸ்ஜித் ஆகியன நாகூரில் உள்ள இதர முக்கியமான மசூதி பள்ளிவாசல்களாகும். தவிர, நாகூர் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள நாகூர் பட்டிணஞ்சேரி எனும் மீனவ கிராமத்தில் சீராளம்மன் கோயில்எனும் முக்கியமான கோயிலும் உள்ளது.
சீராளம்மன் கோயிலில் ஒவ்வொரு வருடமும் விமரிசையான உற்சவம் 10 நாட்களுக்கு நடத்தப்படுகிறது. மேலும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில்  நாகூரில் கந்தூரி திருவிழாவும் விசேஷமாக நடத்தப்பட்டு வருகிறது. 

மாரியம்மன் கோயில்ஆஞ்சநேயர் கோயில் சிவன் கோயில் மற்றும்பெருமாள் கோயில் ஆகியனவும் நாகூரில் அமைந்திருக்கின்றன. இப்படி பல கோயில்கள் மற்றும் மசூதிகள் மட்டுமல்லாமல் இங்குள்ள கடற்கரைப்பகுதியும் ஒரு முக்கியமான சுற்றுலாப்பொழுதுபோக்கு ஸ்தலமாக விளங்குகிறது.

வருடமுழுதும் நாடெங்கிலுமிருந்து ஏராளமான யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நாகூருக்கு வருகை தருகின்றனர்.

பயண வசதிகள்

தமிழ்நாட்டின் எல்லா நகரங்களிலிருந்து மிகச்சுலபமாக நாகூர் நகரத்துக்கு வரலாம். நாகூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை மற்றும் திருச்சிக்கு ரயில் சேவைகள் உள்ளன. சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்கள் நாகூருக்கு அருகிலுள்ள முக்கிய விமான நிலையங்களாகும்.

பருவநிலை

கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால் நாகூர் கடற்கரைப்பிரதேச பருவநிலையை கொண்டுள்ளது.

Thanks & Copy from Thatstamil.com