பேசப் பழகுவோம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 3:49 PM | Best Blogger Tips



ஓரிடத்துக்கு செல்லுகிறபோது நம்மை புதிதாக பார்ப்பவர்கள், நாம் பேச ஆரம்பிப்ப தற்கு முன்பே நம்மை எடை போட தயாராகிவிடுகிறார்கள்.

நம் நடை, உடை, தோற்றம், பொலிவு, தூய்மை ஆகியவற்றை கொண்டு அவர்கள் மனத்தில் தோன்றும் எண்ணங்களின் அடிப்படையில்தான் அவர்கள் நம்மிடம் பழகும் விதம் அமைகிறது. கம்பீரமான, அதேநேரத்தில் திமிராக தோன்றாத நடை அழகு, கச்சிதமான, தூக்கலாக இல்லாத உடை போன்றவை நம் ஆளுமையை அதிகரிக்க செய்கிறது. செருப்பு பூமியை தேய்க்க அலட்சியமாக நடப்பவர்கள் பிறரிடம் வெறுப்பை சம்பாதித்து கொள்கிறார்கள். இரண்டு பொத்தான்களை திறந்துவிட்டு கொண்டு, நிலா வெளிச்சத்தில் நடப்பதை போல் கருதுபவர்கள் மற்றவர்களின் மதிப்பீட்டில் தேர்ச்சி பெறுவது இல்லை.அளவான முடி, எண்ணெய் தேய்த்து கலையாமல் காப்பாற்றப்படும்போது தலைக்கு சிறப்பை சேர்க்கிறது. கலைந்த முடியும் அக்கறையற்ற தோற்றமும் சினிமாவில் மட்டுமே எடுபடும்.
...

துலங்கும் முகம், தூய உடை, சுத்திகரிக்கப்பட்ட நகங்கள் என நம் வெளித்தோற்றங்கள்தான் முதலில் நம்மை பற்றிய ஒரு நல்ல அபிப்ராயத்தை மற்றவர்களிடம் ஏற்படுத்துகிறது. முன்பின் தெரியாதவர்களிடம் வளவளவென பேசாமல் சுருக்கமாக தெளிவாக பணிவாக பேசும்போது அவர்களையும் அறியாமல் தொடர்பு வலையை பின்ன ஆரம்பித்துவிடுகிறோம். எடுத்தெறிந்து பேசாமல் யாரை பற்றியும் குறை சொல்லாமல் ஆரம்பிக்கிற அறிமுகம், பரஸ்பர விருப்பத்தை விதையூன்ற செய்கிறது.

சொந்த தகவல் பரிமாற்றத்தை பெறுகிற நிபுணத்துவம் நமக்கு தன்னம்பிக்கையையும் சொற்களை பிரயோகிக்கும் ஆற்றலையும் பெற்று தருகிறது. வளரும் போது அது நமக்கு எந்த சூழலிலும் சமயோஜித புத்தியுடன் பேசும் திறன்களை தருகிறது. ஆரம்ப காலங்களில் அடுத்தவர்களுடன் பேசுவதற்கு முன் நம் மனதிலேயே சின்ன ஒத்திகையை பார்த்துவிட்டு தொடங்கும்போது வார்த்தைகள் பிசிறில்லாமல் வந்துவிழும். குழப்பம் இல்லாத கருத்து பரிமாற்றம் நிகழும். அடுத்தவர்களின் பெயர்களை கேட்கும்போது அலட்சியமாக இருக்க கூடாது.

பெயர்களை நினைவு வைத்து கொள்வதன் மூலம் ஒருவர் இதயத்தில் எளிதில் இடம் பெற்றுவிட முடியும். எனவே பெயர்களை கேட்டவுடன் அவற்றை நாம் ஒருமுறை திரும்ப சொல்லி பார்த்து நீண்டகால நினை வாற்றலுக்குள் அவற்றை பதிய வைத்து கொள்ள வேண்டும். மேலும் பேசும் போது எதிரில் இருப்பவர்கள் மீது எச்சில் தெறிக்காமல் நாசுக்காக பேசுவது நல்ல பண்பு.

இன்னொரு விஷயம், ஒருவருடைய சொந்த விஷயங்களுக்குள் நுழைந்து நாம் கருத்து சொல்வது, அது பற்றி அவர்களிடம் விவாதிப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஒருவரது சொந்த விஷயம் பற்றி பேசினால் அவர்கள் நெளிய ஆரம்பித்து விடுவார்கள்.

இந்த பயிற்சிகள் நேர்முகத்தேர்வுகளை எதிர்கொள்ளவும், மேடைகளில் முழங்கவும் விவாத மேடைகளில் பங்கெடுக்கவும் சமரச பேச்சுவார்த்தைகளில் சுமூகத்தை நிலைநாட்டவும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

- வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.

( சுட்டி விகடன் இதழில் வெளியான 'உன்னோடு ஒரு நிமிஷம்!' தொடரில் இருந்து)

நீண்ட நேரமாக உட்காருறீங்களா? நிறைய பிரச்சனை வருமாம்!!!\

மணக்கால் அய்யம்பேட்டை | 2:28 PM | Best Blogger Tips


இன்றைய காலத்தில் நன்கு குனிந்து, நிமிர்ந்து வேலை செய்பவர்களை விட, நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் தான் அதிகம். அதிலும் சாப்ட்வேர் அலுவலகங்கள் மற்றும் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அவர்கள் உட்கார்ந்து கொண்டே அனைத்து வேலைகளையும் முடித்துவிடுவார்கள். அவ்வாறு உட்கார்ந்து கொண்டே இருந்தால், உடலில் இதுவரை வராத நோய் கூட வந்துவிடும். உட்கார்வதால் உடல் ரிலாக்ஸ் ஆகும் தான், அதுவே நீண்ட நேரம் உட்கார்ந்தால், உடல் பாதிப்பு தான் அடையும். அதிலும் தொடர்ந்து 8-10 மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்தால், சொல்லவே வேண்டாம். இப்போது அவ்வாறு நீண்ட நேரம் உட்கார்ந்தால் என்னென்ன பிரச்சனைகள் வருகிறதென்று பார்ப்போமா!!!

* முதுகு வலி- உட்கார்ந்து கொண்டே வேலை செய்யும் நிறைய பேர் முதுகு வலிக்கிறது என்று புலம்புவதை கேட்டிருப்பீர்கள். ஏனெனில், உடலில் உள்ள தசைகள் எந்த ஒரு அசைவும் இல்லாமல், நீண்ட நேரம் உட்கார்வதால் ஏற்படுகிறது. அதுவே நீண்ட நாட்கள் தொடர்ந்து பல மணிநேரம் உட்கார்ந்தால், ஒட்டு...
மொத்த முதுகும் வலி ஏற்பட்டு, பின் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆகவே எப்போதும் தொடர்ந்து ஒரே இடத்தில் உட்காராமல், உடலுக்கு ஏதேனும் அசைவை கொடுங்கள்.

* வளர்சிதை மாற்றப் பணிகள் பாதிக்கும்- தற்போது மேற்கொண்ட ஒரு ஆய்வில் நீண்ட நேரம் உட்கார்ந்தால், உடலின் வளர்ச்சிதை மாற்ற பணிகள் பாதிக்கப்படும் என்று கண்டுபிடித்துள்ளது. மேலும் அவ்வாறு பாதிக்கப்படுவதால், உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலில் உள்ள லிப்போபுரோட்டீன் அளவு குறைந்துவிடும். இந்த கொலஸ்ட்ரால் உடலுக்கு மிகவும் நல்லது. அது குறைந்தால், உடலில் ஏற்படும் பிரச்சனைகள் அதிகமாகிவிடும்.

* நீரிழிவு- நீண்ட நேரம் உட்கார்வதால், உடலில் உள்ள இன்சுலின் அளவு குறைந்துவிடும். இத்தகைய பிரச்சனை ஆண்களைவிட பெண்களுக்குத் தான் அதிகம் ஏற்படுகிறது. ஆகவே பெண்கள் அலுவலக நேரங்களை திவிர மற்ற நேரங்களில் உட்கார்தை தவிர்த்து, மற்ற வீட்டு வேலைகளை செய்வது நல்லது. மேலும் அலுவலகத்தில் கூட தொடர்ச்சியாக நீண்ட நேரம் உட்கார்வதை தவிர்ப்பது நல்லது.

* கழுத்து வலி- சில சமயங்களில் கழத்து வலி ஏற்படும் வாய்ப்புள்ளது. அப்போது உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இல்லையெனில் அதனால் முதுகெலும்புகளில் அழற்சி அல்லது வீக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் கழுத்தில் முதுகெழும்பின் இணைப்பு இருப்பதால், எளிதில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

* விரைவில் மரணம்- சமீபத்திய ஆய்வு ஒன்றில் நீண்ட நேரம் தொடர்ந்து உட்கார்பவர்களுக்கு விரைவில் மரணம் ஏற்படும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் உடலில் உள்ள இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாகவும், நல்ல கொலஸ்ட்ராலின் அளவு குறைவாகவும் மாறிவிடும். இதனால் வேகமாக இதயம் பாதிக்கப்பட்டு, மாரடைப்பு மற்றும் பல இதய நோய்கள் வரும் வாய்ப்பும் உள்ளது.

ஆகவே நீண்ட நேரம் உட்கார்வதால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது. இதனால் உடலும் ஆரோக்கியமாக இருப்பதோடு, நீண்ட நாட்கள் உயிரோடு வாழலாம்.

சாப்பிட்ட உடனே ஜில்லுனு குடிக்காதீங்க! இதயத்திற்கு நல்லதில்லை

மணக்கால் அய்யம்பேட்டை | 2:28 PM | Best Blogger Tips
உணவு உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய். கொழுப்புகளை ரத்த நாளங்களில் இந்த கொழுப்பு படியச் செய்வதே இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்களான ஜப்பானிய பெண்களின் சராசரி அதிகபட ்ட ஆயுட்காலம் 92. ஆண் ஜப்பானியர்கள் 84 வயது வரை உயிர் வாழ்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கம். பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். உணவு உண்ட உடன் வெதுவெதுப்பான வெந்நீர் உட்கொள்வதும், கிரீன் டீ அருந்துவதும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
...

கொழுப்பு உறைந்து விடும்

நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் இன்றைக்கு பெரும்பாலும் பிரிட்ஜில் வைத்த ஜில் தண்ணீரை அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கிராமமோ, நகரமோ இன்றைக்கு குளிர்ந்த நீர்தான். கோடை காலம் தொடங்கிவிட்டது இனி காலை உணவில் தொடங்கி இரவு உணவு வரைக்கும் நம் நாட்டவர்கள் உபயோகிப்பது ஜில் தண்ணீர்தான் தான். இவ்வாறு குளிர்ந்த நீர் அருந்துவது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். இது இதயத்தை பாதிக்கிறது. புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால், சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம்என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதயநோயாளிகள் பாதிப்பு

மாரடைப்பு நோய் உள்ளிட்ட இதயநோய்க்கு ஆளானவர்கள் சாப்பிடும்போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஜில் தண்ணீர் குடிப்பதனால் வேறு பல தீமைகளும் ஏற்படுத் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே ஜில் தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள் அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்

முகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன்னு இருக்குமாம்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:26 PM | Best Blogger Tips


முகத்தை அழகாக்க எத்தனை அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தினாலும், ஆவி பிடிப்பது போல் இருக்காது. ஏனெனில் அழகு சாதனப் பொருட்களில் கெமிக்கல்கள் கலந்திருக்கும். மேலும் சருமத்திற்கு ஏற்ப ஒவ்வொரு அழகுப் பொருட்களும் வேறுபடும். ஒரு வேளை மாற்றி பயன்படுத்திவிட்டால், அதனால் தேவையில்லாத பக்கவிளைவுகள் ஏற்படும். ஆகவே எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இதனால் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள், கிருமிகள் விரைவில் வெளியேறிவிடும். மேலும் இதற்கு எந்த ஒரு செலவும் ஆகாது. இதனை எந்த நேரத்திலும், வீட்டில் சூடான நீரை வைத்து செய்யலாம்.

வீட்டில் முகத்திற்கு எவ்வாறு ஆவி பிடிக்கலாம்?
...


சூடான நீரை வைத்து, ஒரு போர்வைக்குள் நீங்கள் உட்கார்ந்து, அந்த நீரின் முன் முகத்தை வைத்து, அதிலிருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி, ஒரு 30 நிமிடம் உட்கார வேண்டும்.
ஆவி பிடிப்பதால் என்ன நன்மை?

*
முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு, இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.

*
கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.

*
ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.

*
மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

*
பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.

*
ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.

ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள். மேலும் ஆவி பிடிப்பதை முகத்திற்கு மட்டுமல்லாமல, கூந்தலுக்கு செய்யலாம். அதாவது வெதுவெதுப்பான நீரால் கூந்தலை அலசுவது தான். அதுமட்டுமல்லாமல், உடலுக்கு கூட செய்யலாம்.