சின்ன சின்ன யோசணைகள்
வாழ்வை வளமாக்க...
குழப்பமும், கவலையுமான நேரத்தில் ஒரு குட்டி தூக்கம் போடுங்கள்.
திருமணம் ஆகிவிட்டால் மனைவியை நேசியுங்கள், திருமணம் ஆகவில்லை என்றால் பெண்களை மதியுங்கள்.
விரும்பியது கிடைக்க சில
தியாகங்கள் செய்ய நினைத்திடுங்க.
எந்த தொழிலையும் விருப்பத்துடன் செய்து பழக நினைத்திடுங்க.
உங்களை மதிக்காத இடத்தில் உங்களின் நிழலை கூட நிற்க அனுமதிக்காதீர்கள்.
உங்களை மதிக்கும் இடத்தில் உண்மையுடனும், நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள்.
இவ்வுலகில் பணம்தான் எல்லாம் ஆகிவிட்டது, திருமணம் ஆகிவிட்டாலும் திருமணம் ஆகாவிட்டாலும், சேமிக்கும் பழக்கத்தை கைவிடாதீர்கள்.
உதவி, மற்றும் தர்மம் செய்வதை மறவாதீர்கள். உதவியின் பலனையும், தர்மத்தின் சிறப்பையும் உங்களுக்கு குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து வளர்த்திடுங்க.
வருமானத்திற்கு மீறிய செலவை விரும்பாதீர்கள்.
இரண்டு வழியில் வருமானம் கிடைக்கும் வகையில் தொழில் அல்லது வேலையை செய்திடுங்கள்.
உங்களுடைய ஆசையையும் உங்களின் மனைவி மக்களின் ஆசைகளையும் தேவைகளையும் அவ்வப்போது நிறைவேற்றுங்கள். அப்போதுதான் நீங்கள் அவர்களிடத்தில் மதிக்கப்படுவீர்கள்.
கோபமும், பேராசையும், ஒரு கொடிய நோய், முடிந்தவரை அதை மனக்கட்டுக்குள் கொண்டு வர முயற்சியுங்கள்.
வேண்டாத பழக்கம் (புகைப்பிடித்தல், மது அருந்துதல்,) உங்களுக்கு இருந்தால் அது உங்களுடைய தனிப்பட்ட சுய உரிமையாகும், அளவுக்கு மீறாமல் பார்த்து கொள்ளுங்கள். முடிந்தால் தவிர்க்க பாருங்கள்.
உறவுகள் விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏதேனும் வாக்குறுதி கொடுத்துவிட்டால் அதை முடிந்தவரை நிறைவேற்ற முயற்சியுங்கள்.
நாம் நாமாக இருக்கையில் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை.நாம் பிறருக்காக மாற நினைக்கையில்தான் பிரச்சினைகளை சந்திக்கிறோம்.
இவ்வுலகம் உயிருள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் உரியது,
நாம் அதில் ஒரு சிறிய துரும்பு அவ்வளவுதான்.
"இருக்கும் இந்த ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் திருப்தியுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும்."
நம் வாழ்வு நம் கையில்