கருத்துடன் செயல்படு

மணக்கால் அய்யம்பேட்டை | 3:20 PM | Best Blogger Tips
கருத்துடன் செயல்படு
---------------------------------

ஓரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.

அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின.

அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.

அந்தப் பத்தியில் கருங்கடற் கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது என்றும் அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக் கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம்.

இதைத் தெரிந்து கொண்ட மனிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கருங்கடல் கரை நோக்கி உடனே புறப்பட்டான்.

அங்கு தினமும் காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான்.

பல மாதங்களும் வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு அனிச்சைச் செயல் போல் ஆகி விட்டது.

ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் யோசிக்குமுன் கடலில் தூர எறிந்து விட்டான்.

நீதி : செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.

Via வாழ்வது ஒரு முறை வாழ்த்தட்டும் தலை முறை

Pen Drive பென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி ? ? ?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:58 PM | Best Blogger Tips
Pen Drive பென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி ? ? ?

சில நேரம் பென் டிரைவில் எதாவது கோப்புகளை Copy செய்யும் போது "Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk " என்று பிழைச்செய்தியைக்காட்டும். நாம் என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்க்கு காரணம் வைரஸ்கள் Registry இல் மாற்றம் செய்து விடுவது தான். இதை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.

எளிமையான வழி:

Start - Run செல்லவும். பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.

reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 0

பின்னர் பென் டிரைவை எடுத்து விட்டு மறுபடியும் நுழைக்கவும். இப்பொழுது நீங்கள் விரும்பியபடி வேலை செய்யலாம். 

உங்களுடைய பென் டிரைவை Write Protected செய்ய விரும்பினால் கீழே உள்ள வரி பயன்படும்.

reg add "HKLM\System\CurrentControlSet\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 1

சில நேரங்களில் இதை கொடுத்தும் உடனே மாறாவிட்டால் கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டு பென் டிரைவை செருகவும்.

ரிலாக்ஸ் ப்ளீஸ் ஆங்கிலத்திலும் @[297395707031915:274:Relaxplzz]சில நேரம் பென் டிரைவில் எதாவது கோப்புகளை Copy செய்யும் போது "Cannot copy files and folders, drive is Write protected . Remove write protection or use another disk " என்று பிழைச்செய்தியைக்காட்டும். நாம் என்ன தான் போராடினாலும் காப்பி செய்ய இயலாது. இது போல Format செய்யும் போதும் கோப்புகளை நீக்கும் போதும் இதே தொல்லையை கொடுக்கும். இது போல மெமரி கார்ட்களிலும் இந்த பிழைச்செய்தி வரும். இதற்க்கு காரணம் வைரஸ்கள் Registry இல் மாற்றம் செய்து விடுவது தான். இதை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.

எளிமையான வழி:

Start - Run செல்லவும். பின் கீழே உள்ள வரியை காப்பி செய்து Ok கொடுக்கவும்.

reg add "HKLM\System\CurrentControlSet
\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 0

பின்னர் பென் டிரைவை எடுத்து விட்டு மறுபடியும் நுழைக்கவும். இப்பொழுது நீங்கள் விரும்பியபடி வேலை செய்யலாம்.

உங்களுடைய பென் டிரைவை Write Protected செய்ய விரும்பினால் கீழே உள்ள வரி பயன்படும்.

reg add "HKLM\System\CurrentControlSet
\Control\StorageDevicePolicies" /t Reg_dword /v WriteProtect /f /d 1

சில நேரங்களில் இதை கொடுத்தும் உடனே மாறாவிட்டால் கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விட்டு பென் டிரைவை செருகவும்.Viaரிலாக்ஸ் ப்ளீஸ்

பர்கின்சனிசம் எனும் நடுக்க நோய்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:36 PM | Best Blogger Tips

1817-ம் ஆண்டு லண்டன் மருத்துவர் ஜேம்ஸ் பார்க்கின்ஸன் வழக்கத்திற்கு மாறாக சில நபர்களிடம் காணப்படும் நடவடிக்கைகளை கண்காணித்தார். அந்நபர்களிடம் நடத்திய ஆய்வின் போது நடுக்கம், தசை இறுக்கம், தசைகள் ஒற்றுமையாய் இயங்காமை, நடையில் தள்ளாட்டம் போன்ற நோயறி குறிகளை வகைப் படுத்தினார். மனித மூளையிலுள்ள (நியூரான்) செல்களிலிருந்து உடல் இயக்கத்திற்கு மூலாதார மான டோபமைன் எனும் இரசாயன பொருள் உற்பத்தியாகிறது என்றும் சிலநபர் களுக்கு (நியூரான்) மூளை செல்கள் செயலிழக்கும் போது டோபமைன் உற்பத்தி குறைவதால் உடல் தசை களின் இயக்கத்தின் செயல்பாடுகளில் குறைபாடு நிகழ்கிறது என்றும் தனது ஆய்வின் மூலம் முடிவுக்கு வந்தார். இக்குறைபாட்டினை அவரது பெயரிலேயே ‘பர்கின்சனிசம்’ என்று அழைக்கி றார்கள்.

பார்க்கினிஸம் எனும் நடுக்க நோய் ஆண்களைத்தான் அதிகம் தாக்குகிறது. லட்சத் தில் 20 முதல் 30 நபர்களுக்கு இந்நோய் வருகிறது. மிக அரிதாகவே இளம் பருவத்தினரை தாக்கும். இந்நோய் நாற்பது வயதிலிருந்து 60 வயதிற்குட் பட்டவர்களுக்கு ஒரு வகையாகவும், அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வேறு ஒரு வகையாகவும் பார்க்கினிஸத்தின் பாதிப்பு இருக்கும். நடுத்தர வயதினர் சிலருக்கு தீவிரமா கவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கும். 1918 முதல் 1932 வரையிலான கால கட்டத்தில் உலகளவில் இந்நோய் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தியது.

முதல்நிலை (அ) ஆரம்ப அறிகுறிகள்:

ஆரம்ப அறிகுறிகளின் போது உடலின் இயக்கத்திற்கு மென்மையாக இருக்க வேண்டிய உடல் தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு தேவைக் கேற்ப கை, கால்களை இயக்க முடியாமல் போய் விடுகிறது. மேலும், கை, கால், தலை எப்பொழுதும் நடுங்கிக்கொண்டே இருக்கும். சிலருக்கு உடலின் ஒரு புறம், அல்லது ஒரு பகுதியில் மட்டும் கூட நடுக்கம் இருக்கும். கால்களை தூக்கி வைத்து நடக்க சிரமப்பட்டு குழந்தையைப் போல் சின்னச் சின்ன நடை நடப்பார்கள். உட்கார்ந்து எழும் சமயங்களிலும் நடக்கும் போதும் பக்கவாட்டில் திரும்ப மிகுந்த சிரமப்படுவார்கள்.

இரண்டாம்நிலை அறிகுறிகள்:
இந்நோயினால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோருக்கு அதிகளவு மனச்சோர்வு ஏற்படுகிறது. இரவில் ஆழ்ந்த தூக்கம் இருக்காது; பயங்கர கனவுகளால் தூக்கம் பாதிக்கும்; தூக்கத்தில் தனக்குத்தானே பேசுவார்கள். தசை இறுக்கத்தினால் படுத்திருந்த நிலையிலேயே திரும்பி படுக்க முடியாமல் தவிப்பார்கள். பேசும் போது முணுமுணுப்பது போலவும், உணர்ச்சி யற்றும் பேசுவார்கள். வாயிலிருந்து உமிழ்நீர் ஒழுகும். விழுங்கஇயலாது. தசை இறுக்கம் உடலின் அனைத்து தசைகளிலும் ஏற்படுவதின் ஒரு பகுதியாக உணவுக் குழாயும் இறுக்கமாகி விடுகிறது. சிறிதளவு உணவும், இரைப்பைக்குச் செல்ல சிரமம் ஏற்படும். இதன்விளைவாக உடல் மெலிவு ஏற்படும், செரிமான இயக்கம் குறைந்து மலச்சிக்கல் ஏற்படும். உட்கார்ந்து எழும் சமயம் தலைச்சுற்றல் ஏற்பட்டு கீழே விழுந்து அடிபட்டுக் கொள்ளும் நிலை ஏற்படும். தசை இறுக்கத்தினால் பாதத்தில் உள்ள இரத்த நாளங்கள் பாதிப்படைந்து பாத வீக்கம் ஏற்படும். ஞாபகத் திறன் குறைந்து காலப்போக்கில் நோயாளி தனது பெயரையே மறந்து விடுவார். இந்நோய் மெதுவாக துவங்கி படிப்படியாக முன்னேறி தீவிரத் தன்மையை அடையும். நாட்பட்ட நோய் நிலையில் தாம்பத்திய ஆர்வம் குன்றி மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படும். தன் வேலை களைக் கூட தானே செய்ய முடியவில்லையே என்ற ஏக்கமும் காரணமாக பசியின்மை, தூக்க மின்மை ஏற்படும். சிலருக்கு தற்கொலை உணர்வு தலைதூக்கும்.

காரணம்:
சுகாதாரமற்ற சுற்றுப்புற சூழலுக்கு ஆளாவதாலும், இரும்புத்தாது பொருட்கள் தொடர்புடைய இடங்களில் பணிபுரிவதாலும், பூச்சிக் கொல்லிகளை கையாளும் பணிகளில் ஈடுபடுவோர்க்கும் மூளையின் ஒருபகுதியான செரிபெல்லம் (CEREBELLUM) சுருங்குவதாலும், இந்நோய் ஏற்படுகிறது. இரட்டை குழந்தைகளாக பிறப்பவர் களுக்கும் 50 வயதுக்கு மேல் இந்நோய் வரவாய்ப்பு உள்ளது. 15% சதவீதமானவர்களேபாரம்பரியமாக பாதிக்கப்படுகின்றனர். தாய்க்கு இந்நோய் இருந் தால் பிள்ளைகளுக்கு இந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

சிகிச்சை:

இந்நோய்க்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை யில் பயங்கர கனவுகள், தூக்கத்தில் தனக்குத்தானே பேசிக் கொள்ளுதல், தலைச்சுற்றல், சிறுநீர் தடைபடுதல், தாம்பத்திய ஆர்வம் குறைதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஆனால் ஹோமியோபதி அக்குப்பஞ்சர், மலர் மருத்துவ முறைகளில் இந்நோய்க்கு நல்ல தீர்வு காணலாம்.

ஹோமியோபதி சிகிச்சை:
இம்மருத்துவ முறை பொறுத்தவரையில் நோயின் பெயரின் அடிப்படையில் சிகிச்சை வழங்குவதில்லை. தனிமனித உடலில் நோய் மையம் கொண்டு வெளிப்படுத்தும் நோயறி குறிகள் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு விதமாய் வெளிப்படுத்தும். அப்படி வெளிப் படுத்தும் குறிகளின் தன்மைக்கேற்ப பொருத்த மான மருந்தை தேர்வு செய்து வழங்கும் போது நோயாளியின் நோய் எதிர்பாற்றல் மேம்படுகிறது, நோய் நீங்குகிறது.

தன்னையறியாமல் உடலில் ஏற்படும் நடுக் கம், முக தசைகளில், இழுப்புக்கள் விட்டு, விட்டு வருதல். தலை சுற்றலின் போது பின்புறமாய் விழுதல்.

அபிசிந்தியம்;

குடிகாரனைப்போல் தள்ளாட்ட நடை, நடுக்கமான தெளிவற்ற பேச்சு, தலை நடுங்கு தல். கண் இமைகள் தாமாகவே துடித்தல். தசை இழுப்பு, நடுக்கம், தூக்கத்தில் மட்டும் நடுக்கம் இருக்காது.

அகேரிகஸ்;
பொருட்களை எடுக்கும் போது கைகளில் நடுக்கம், தசைகள் ஒற்றுமையாய் இயங் காமை. நடக்கும் போது கை, கால் நடுக்கம். நாக்கு நடுங்கும். கடுமையாக நடுக்கம் உள்ள போது தன்னை இறுக பிடித்துக் கொள்ளும் படி அருகில் உள்ளவரை கேட்டுக் கொள் வார்.

ஜெல்சிமியம்;
உண்ணும்போது கை நடுங்குதல், தடுமாறி தள்ளாடி நடத்தல். நேராக நிற்க இயலாமை, ஒருபக்கமாகவிழச் செய்தல். வலது புற கை, கால் தானாகவே அசைதல் - விழித்திருக்கும் போது மட்டும் இருக்கும்.

காக்குலஸ்;
நிற்கும்போதும் நடக்கும்போதும் தள்ளாட் டம், தன்னை பிறர் கவனிக்க வில்லையே என்று நினைக்கும் போது தள்ளாட்டம் அதிகரிக்கும். பொதுவான பலவீனத்துடன் நடுக்கம். மயக்கம் வருவது போல நடுங்கிக் கொண்டே இருத்தல்.

அர்ஜென்டம் நைட்ரிகம்;
தன்னுணர்வின்றி கை நடுங்குதல்.

மெக்பாஸ், வாரம் ஒருமுறை;
தள்ளாட்டமான நடை, எல்லா தசைகளிலும் சோர்வு நடக்கும்போது முழங்கால்களிலி ருந்துபாதம் வரை ஆடுவது போன்ற உணர்ச்சி. கவனமாக அடிஎடுத்து வைப்பார்.

பைசோஸ்டிக்மா;
தடுமாற்ற நடை, சேவல் போல நடத்தல். நடக்கும்போது பாதத்தை வழக்கத்திற்கு மாறாக உயரே உயர்த்தி குதிங்காலை பலமாக வைத்தல், பஞ்சு மீது நடப்பது போன்ற உணர்வு, நடக்கும்போது வலது பக்கம் திரும்புதல்.
ஹெலோடெர்மா.
குறிப்பாக வயதானவர்களுக்கு ஏற்படும் கோளாறுகள். பாதிப்பு உள்ள பக்கத்தில் மதமதப்பு.

அம்ப்ரா கிரிஸியா;
தலையிலும், கைகளிலும் நாட்பட்ட நடுக்க கோளாறு உள்ளவர்கள். உழைப்புக்கு பின் ஒவ்வொரு தடவையும் தலையிலும் கைகளி லும் நடுக்கம் ஏற்பட்டு வெகுநேரம் நீடித்திருக்கும்.

ஆண்ட்டிடார்ட்;
வயதானவர்களுக்கு ஏற்படும் தலை, கை, நடுக்கம். தானாகவே தசைகள் துள்ளுவதும், துடிப்பதும்.

அவினா சட்டிவா;
உடல் வலிமை வரவரக் குறைந்து நடுக்கத்து டன் மயக்கம் வருவது போன்ற பலகீனம். கைகளிலும், உள்ளங்கைகளிலும் உள்ள தசைகள் நடுங்கிக் கொண்டே இருக்கும்.

காஸ்டிகம்;
உடல் முழுவதும் நடுக்கம், ஒருசில தசை களில் மட்டும் நடுக்கம். கை, கால்களில் பலவீனமும் நடுக்கமும், எழுதும்போது கை களில் நடுக்கம், தூக்கத்திலும் கால்களில், உடலில் நடுக்கம், சிலருக்கு ஒரு கையும், தலையிலும் நடுக்கமிருக்கும்.

 (மாற்று மருத்துவம் இதழில் வெளியானது)
 
 Via -நலம், நலம் அறிய ஆவல்.

காய்கறி ஊறுகாய்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:33 PM | Best Blogger Tipsதேவையான பொருட்கள்

நறுக்கிய காரட் - 100 கிராம்
பட்டாணி - 100 கிராம்
பிஞ்சு பீன்ஸ் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 10
நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப்
மிளகாய்த்தூள் - 3/4 கப்
எலுமிச்சம் பழம் - 2
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
வினிகர் - தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

பச்சைமிளகாயை வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். நறுக்கி வைத்த காய்கறிகளை வினிகரில் வேக வைத்து குழைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு கலந்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெயை ஊற்றி கடுகைத் தாளித்து ஊறுகாயில் ஊற்ற வேண்டும். எலுமிச்சம் பழ சாற்றை ஊறுகாயில் பிழிந்து கரண்டியால் கிளறி விட வேண்டும். பின்பு அதில் வினிகர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 Via -நலம், நலம் அறிய ஆவல்.

செட்டிநாடு முட்டை குழம்பு

மணக்கால் அய்யம்பேட்டை | 2:30 PM | Best Blogger Tips
செட்டிநாடு முட்டை குழம்பு 

தேவையான பொருட்கள்
முட்டை - 4
வெங்காயம் - 1/2
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 1
உப்பு
கடுகு, சீரகம்

எண்ணெயில் வறுத்து அரைக்க:

மல்லி - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3
பூண்டு - 2 பல்
இஞ்சி - 1/2 இன்ச்
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
அரிசி - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

முட்டைகளை வேக வைத்து இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். தேங்காய் தவிர மற்ற வறுக்க வேண்டிய பொருட்களை 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்க வேண்டும். அரிசி வெள்ளை ஆனதும் இறக்கி, ஆற வைத்து தேங்காய், தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி குழைய வதங்கியதும், அரைத்த மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். கொதிக்க ஆரம்பித்ததும் வெட்டி வைத்த முட்டை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.

 Via-நலம், நலம் அறிய ஆவல்.

அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்..

மணக்கால் அய்யம்பேட்டை | 2:28 PM | Best Blogger Tips
அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்..

லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்.

நகங்களில் சொத்தை விழுந்து கறுத்து காணப்பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள்.

நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது.

விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.

விரல் நகங்கள் சற்று மஞ்சள் நிறத்தில் இருந்தால் ரத்தத்தில் நிகோடின் விஷம் கலந்திருக்கிறது என்று பொருள்.

கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.

கைவிரல் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், உடல் நலம் குன்றியிருப்பதற்கு அடையாளம்

கைவிரல் நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால், வாயுத் தொல்லை இருப்பதற்கான அடையாளம்.லேசான சிவப்பு நிறத்தில், சற்று பளபளப்பாக இருக்கும் கைவிரல் நகங்களில் ஒரு சிறு வளர்பிறை வடிவம் இருந்தால் உடலில் நல்ல ரத்த ஓட்டத்தைக் குறிக்கும்.

நகங்களில் சொத்தை விழுந்து கறுத்து காணப்பட்டால் உடலுக்கு போதிய ஊட்டச் சத்துகள் கிடைக்கவில்லை என்று பொருள்.

நகங்கள் மிகவும் சிவந்து காணப்பட்டால், உடலின் ரத்த அளவு அதிகம் என்பதைக் காட்டுகிறது.

விரல் நகங்கள் சற்றே நீல நிறமாக இருந்தால் இதயம் பலவீனமாக இருப்பதாக அர்த்தம்.

விரல் நகங்கள் சற்று மஞ்சள் நிறத்தில் இருந்தால் ரத்தத்தில் நிகோடின் விஷம் கலந்திருக்கிறது என்று பொருள்.

கைவிரல் நகங்கள் உப்பினாற்போல் இருந்தால் ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புண்டு.

கைவிரல் நகங்களில் வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், உடல் நலம் குன்றியிருப்பதற்கு அடையாளம்

கைவிரல் நகங்களில் வரிகள் அதிகமாக இருந்தால், வாயுத் தொல்லை இருப்பதற்கான அடையாளம்.
 
Via ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.
 
கறி வடை

மணக்கால் அய்யம்பேட்டை | 2:20 PM | Best Blogger Tips
கறி வடை 

தேவையான பொருட்கள்:

கொத்திய கறி - 100 கிராம்
பச்சை மிளகாய் - ஒன்று
கரம் மசாலா தூள் - கால் தேக்கரன்டி
தேங்காய் - இரண்டு பத்தை
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 4 துண்டு
காய்ந்த மிளகாய் - 2
கொத்துமல்லிக் கீரை - கால் கட்டு
கடலை பருப்பு - கால் கப்
மைதா - ஒரு தேக்கரண்டி
கார்ன்பிளர் பவுடர் - ஒரு தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி
எண்ணை - பொரிப்பதகுத் தேவையான அளவு

செய்முறை:

கடலை பருப்பை அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

கொத்திய கறியை கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி அதில் காய்ந்த மிளகாய், பூண்டு, பச்சை மிளகாய், உப்பு போட்டு வேக வைத்து தண்ணிரை வற்ற விட வேண்டும். அதில் ஆலிவ் ஆயில், வெங்காயம் போட்டு நன்கு பிறட்டி எடுத்து, கொத்து மல்லியும், தேங்காயை துருவி சேர்த்து ஊறவைத்த கடலை பருப்பையும் சேர்த்து சுருட்டி கரம் மசாலா பொடி சேர்த்து ஆற வைக்க வேண்டும்.

மிக்சியில் முதலில் மைதா, கார்ன்பிளார் மாவை போட்டு பிறகு ஆறிய கலவையைப் போட்டு நல்ல அரைக்க் வேண்டும். பின்பு ஒரு தவ்வாவில் வேண்டிய வடிவில் தட்டி பொரித்தெடுக்க வேண்டும்.
-நலம், நலம் அறிய ஆவல். என்றும் உங்கள் Shamvel.
இணைந்திருங்கள் எங்களுடன்...
பகிர்ந்துக் கொள்ளுங்கள் நண்பர்களுடன்...
http://www.facebook.com/mrksamivel?ref=tn_tnmn
http://www.facebook.com/pages/Leprosy-and-Disability-People/535050236511161
http://www.facebook.com/pages/நலம்-நலம்-அறிய-ஆவல்-என்றும்-உங்கள்-Shamvel/475332812532648
இந்த பக்கத்தை குறித்து உங்களுடைய கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் வரவேற்க்க படுகிறது.தேவையான பொருட்கள்:

கொத்திய கறி - 100 கிராம்
பச்சை மிளகாய் - ஒன்று
கரம் மசாலா தூள் - கால் தேக்கரன்டி
தேங்காய் - இரண்டு பத்தை
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 4 துண்டு
காய்ந்த மிளகாய் - 2
கொத்துமல்லிக் கீரை - கால் கட்டு
கடலை பருப்பு - கால் கப்
மைதா - ஒரு தேக்கரண்டி
கார்ன்பிளர் பவுடர் - ஒரு தேக்கரண்டி
ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி
எண்ணை - பொரிப்பதகுத் தேவையான அளவு

செய்முறை:

கடலை பருப்பை அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

கொத்திய கறியை கழுவி தண்ணீர் இல்லாமல் வடிகட்டி அதில் காய்ந்த மிளகாய், பூண்டு, பச்சை மிளகாய், உப்பு போட்டு வேக வைத்து தண்ணிரை வற்ற விட வேண்டும். அதில் ஆலிவ் ஆயில், வெங்காயம் போட்டு நன்கு பிறட்டி எடுத்து, கொத்து மல்லியும், தேங்காயை துருவி சேர்த்து ஊறவைத்த கடலை பருப்பையும் சேர்த்து சுருட்டி கரம் மசாலா பொடி சேர்த்து ஆற வைக்க வேண்டும்.

மிக்சியில் முதலில் மைதா, கார்ன்பிளார் மாவை போட்டு பிறகு ஆறிய கலவையைப் போட்டு நல்ல அரைக்க் வேண்டும். பின்பு ஒரு தவ்வாவில் வேண்டிய வடிவில் தட்டி பொரித்தெடுக்க வேண்டும்.

 Via-நலம், நலம் அறிய ஆவல்.

கக்கன் பிறந்த தினமின்று!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:18 PM | Best Blogger Tips

பனித்துளியை விடவும் பரிசுத்தமான மனிதர் கக்கன். பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடுகளுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட புனிதர் அவர்.

சத்தியமூர்த்தி காமராஜரை தழுவிக் கொண்டதுபோல், மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். மாசுமருவற்ற தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது. காந்தி 1934-ல் மதுரை வந்தபோது அவருக்குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது.

காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற கக்கன் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது மேலூர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டு 5 நாட்கள் கடுமையான கசையடிக்குள்ளானார். சுயநினைவு இழந்தவரை குதிரை வண்டியில் பாதம் வைக்கும் இடத்தில் கிடத்தி, தலையும் கால்களும் தொங்கிய நிலையில் இழுத்துச் சென்றதைப் பார்த்தவர்கள் விழிநீர் சிந்தினர்.

காமராஜருக்கு உண்மையும், நேர்மையும், இளமையும் நிறைந்த கக்கனிடம் பெருமதிப்பிருந்தது. தான் முதலமைச்சராக ராஜாஜிக்கு பின் பொறுப்பேற்றதும், காமராஜர் கக்கனைத் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக்கினார். தமிழ்நாடு கங்கிரஸின் தலைவராகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட இனத்தின் முதல் மனிதர் கக்கன். 1957-ல் காமராஜர் மீண்டும் முதல்வரானதும் கக்கனுக்கு அமைச்சரைவையில் இடம் கொடுத்தார்.

தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து அமைச்சராக இருந்த கக்கன் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு, அரசின நலம், அறநிலையத்துறை போன்ற பல்வேறு இலாக்காக்களை நிர்வாகித்தார். இவருக்குப் பின் எந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த அமைச்சரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் உள்துறை, பொதுப் பணித்துறை போன்ற முக்கியமான இலாக்காக்களின் பொறுப்பை ஏற்றதில்லை.

பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967 - தேர்தலில் தோற்ற பின்பு சொந்தக் கூரை கூட இல்லாத பரம ஏழையாகப் பேருந்தில் நின்றபடி பயணித்தார். விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்தில் ஒப்படைத்தார்.

முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்படார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார்.

மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைபோய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார்.

அங்கே உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார் கக்கன்.

மேலும் மனிதப் புனிதர் கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார்.

தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார்.

இன்று அந்த இடம் 50 லட்சத்துக்கு மேல் பெறும். எளிமையின் வடிவமாக நேர்மையின் விளக்கமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த கக்கன் உடல் கண்ணம்மாபேட்டையில் டிசம்பர் 24, 1981 அன்று எரியூட்டப்பட்டது.

நன்றி :ஆந்தை ரிப்போர்டர்.

நமஸ்காரங்கள் எத்தனை வகை?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:10 PM | Best Blogger Tips
நமஸ்காரங்கள் எத்தனை வகை?

நாம் செய்யும் நமஸ்காரங்கள் ஐந்து வகைப்படும் அவை, ஓரங்க நமஸ்காரம், மூன்று அங்க நமஸ்காரம், (பஞ்ச அங்க) பஞ்சாங்க நமஸ்காரம், சாஷ்டாங்க நமஸ்காரம் மற்றும் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகும்.

ஓரங்க நமஸ்காரம்: வழிபடுபவர், தனது தலையை மட்டும் குனிந்து வழிபாடு செய்தல் ஓரங்க நமஸ்காரம் எனப்படுகிறது.

மூன்று அங்க நமஸ்காரம்: வழிபடுபவர், தலைமேல் தனது இரு கைகளையும் கூப்பி வழிபடுவது மூன்றங்க நமஸ்காரம்

பஞ்ச அங்க நமஸ்காரம்: வழிபடுபவர், தனது தலை, கைகள் மற்றும் முழந்தாள்கள் ஆகிய ஐந்து அங்கங்கள் மட்டும் தரையில் படுமாறு வழிபாடு செய்வது பஞ்ச அங்க (பஞ்சாங்க) நமஸ்காரம் எனப்படுகிறது. பஞ்சாங்க நமஸ்காரம், பொதுவாக பெண்கள் மட்டுமே செய்யக்கூடிய நமஸ்காரம் ஆகும்.

அஷ்டாங்க நமஸ்காரம்: ஒருவர், தமது தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் படும்படி வணங்குதல் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகிறது.

சாஷ்டாங்க நமஸ்காரம்: வழிபடுபவர் தமது தலை, கைகள், மார்பு மற்றும் முழந்தாள்கள் முதலான அத்தனை அங்கங்களும் பூமியில் படும்படி வழிபாடு செய்வது சாஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும்.

நமஸ்கார தத்துவம்:

என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை;
எல்லாம் உன் செயல்;
என்று இறைவனை சரணாகதி அடைவதே நமஸ்காரத்தின் நோக்கமாகும்

கோயிலின் உள்ளே நமஸ்காரம் செய்வதெப்படி?

கோயில் வளாகத்தில் எல்லா இடங்களிலும் நமஸ்கரிப்பது உசிதமல்ல. கோயில் கர்ப்பக்கிருகம் வடக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ இருந்தால். கொடிமரத்தின் இடது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம் கர்ப்பக்கிருகம் தெற்கு நோக்கியோ அல்லது கிழக்கு நோக்கியோ இருந்தால், கொடிமரத்தின் வலது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம். அபிஷேகம் அல்லது நிவேதனம் செய்யும் நேரங்களில் நமஸ்காரம் செய்வதைத் தவிர்க்கவும். பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் செய்வது நியதி, நமஸ்காரம் செய்வதானால் 3,5, 7,9,12 முறைகள் நமஸ்காரம் செய்ய வேண்டும், 1 அல்லது 2 முறை நமஸ்கரித்தல் கூடாது. நமஸ்காரம் செய்பவர் தலை, கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்கும்படி நமஸ்காரம் செய்யவேண்டும்.

Via உலக தமிழ் மக்கள் இயக்கம்
 
நிறப் பார்வைக் குறைபாடுகள் (color blindness) பற்றிய தகவல்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:41 PM | Best Blogger Tips
 
வண்ணக் குருடு அல்லது நிறக் குருடு என்பது என்ன?

நிறக்குருடு பிரச்சனையில் அடிப்படை நிறங்களான சிவப்பு, பச்சை, மற்றும் நீல நிறங்களை அல்லது அவற்றின் கலப்பால் உருவாகும் வண்ணங்களைக் பார்த்து உணர்வதில் உள்ள பிரச்சனையாகும்.

நிறக் குருடு (color blindness) என்று பொதுவாகச் சொல்லப்பட்டபோதும் அது மிகச் சரியான பதம் என்று சொல்ல முடியாது. நிறப் பார்வைக் குறைபாடு என்று சொல்வதே சரியான பதமாகும்.

ஒருவர் நபர் எந்த நிறத்தையம் பார்க்க முடியாதிருத்தல் மிக அரிதாகும். அவ்வாறான மிகக் கடுமையான நிலையில் ஒருவரால் கருப்பு, சாம்பல், வெள்ளை போன்றே உருவங்கள் தோன்றும்.

அறிகுறிகள்

பெரும்பாலானவர்களுக்கு அது குறைந்த அளவிலேயே இருக்கும். அவர்களில் பலர் தங்களுக்கு அக் குறைபாடு இருப்பதை அறியாமலே இருக்கக் கூடும். உண்மையில் இதனை ஒரு பாரிய பாதிப்பு என்று சொல்ல முடியாது.

இவர்களால் சில நிறங்களை மட்டுமே பொதுவாக பார்க்க முடியாதிருக்கும். ஒருவரது வழமையான பார்வையில் பல வண்ணங்கள் தெரியக் கூடும். ஆனால் மற்றவர்கள் காணும் அத்தனை நிறங்களையும் பிரித்தறிய முடியாதிருக்கலாம்.

உதாரணத்திற்கு ஒருவரால் சிவப்பு நிறத்தையும் பச்சை நிறத்தையும் வேறுபடுத்தி அறிய முடியாதிருக்கும். ஆனால் நீலத்தையும் மஞ்சளையும் பிரித்தறியும் ஆற்றல் இருக்கக் கூடும். இதன் காரணமாக ஆயிரக் கணக்கான வண்ணங்களால் உலகம் பிரகாசித்துக் கொண்டிருக்கையில் இவர்களால் குறைவான அளவு வண்ணங்களையே காணக் கூடியதாக இருக்கும்.

நிறப் பார்வைக் குறைபாடு ஏன் ஏற்படுகிறது?

பெரும்பாலும் இது பிறவிக் குறைபாடுதான். பரம்பரை அம்சம் கொண்டது. மரபணுக்கள் (X chromosome) மூலம் பெற்றோரிலிருந்து பி்ள்ளைகளுக்கு கடத்தப்படுகிறது.

எனவேதான் பெரும்பாலும் ஆண்களையே பாதிக்கிறது. ஆண்களில் பத்துப் பேரில் ஒருவருக்கு சிறிய அளவிலேனும் நிறப் பார்வைக் குறைபாடு இருக்கிறது எனக் கணித்திருக்கிறார்கள்

ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களில் மிகக் குறைவாகவே (20ற்கு ஒன்று என்ற விகிதத்தில்) இருக்கிறது.

இருந்தபோதும் பெண்களுக்கு வண்ண உடைகளில் உள்ள பேரார்வத்திற்கு நிறப் பார்வைக் குறைபாடு அவர்களுக்கு பெருமளவு இல்லாதது மட்டும் காரணமாக இருக்க முடியாது.

நிறங்களைக் கண்டறிவதற்கு கண்ணில் உள்ள மூன்று வகையான கூம்புக் கலங்கள் (cone cells) இருக்கின்றன. இவையே அடிப்படை நிறங்களான சிவப்பு, பச்சை, மற்றும் நீல வண்ணங்களைப் பிரித்தறியும் வல்லமை கொண்டவை. அதேபோல அவற்றின் கலவையான பல்லாயிரக்கணக்கான நிறங்களையும் காண வைக்கின்றன.

இந்தக் கூம்புக் கலங்களில் பெரும் பகுதி விழித் தரையின் நடுப்பகுதியில் உள்ள மக்கியூலாவில் (macula) இருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஓரிரு வகை கூம்புக் கலங்கள் இல்லாதபோது அல்லது அவை சரியான முறையில் இயங்காதபோதே நிறப் பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது.

இத்தகைய நிலையில் ஒருவரால் சில நிறங்களைக் காண முடியாதிருக்கும். அவை வெறுமையாக இருப்பதில்லை. வேறு வண்ணமாக (Shade) இவர் உணர்வார்.

இவ்வாறான பிறவி நிறப் பார்வைக் குறைபாடு காலகதியில் மாற மாட்டாது. மருந்துகளாலும் மாற்ற முடியாது. வாழ்நாள் முழுவதும் தொடரும்.

வேறு காரணங்கள்

பிறவியில் இல்லாதபோதும் பிற்காலங்களில் சிலருக்கு நிறப் பார்வைக் குறைபாடு தோன்றுவதுண்டு.
முதுமையடையும்போது
குளுக்கோமா, மக்கியூலர் பாதிப்பு, நீரிழிவு ரெட்டினோபதி, போன்ற கண் நோய்களும் காரணமாகலாம். இவற்றால் விழித்திரை மற்றும் மக்கியூலாவில் எற்படும் பாதிப்புகளால் நிறப் பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது.
கற்றரக்ட். இங்கு கண்வில்லை வெண்மையாவதால் ஒளித்தெறிப்புகள் காரணமாக நிறப் பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது. சத்திரசிகிச்சை செய்ததும் அது குணமாகும். .
கண்ணில் அடிபடுதல்
சில மருந்துகளின் பக்க விளைவுகளால்.
பாதிப்புகள்

பெரும்பாலும் பிறவிக் குறைபாடாக இருப்பதால் இப் பிரச்சனையுள்ள குழந்தைகள் கற்றை ஆற்றலைக் பாதிக்கலாம். வாசித்தல் பிரச்சனைகளையும் ஏற்படுத்தக் கூடும்.

இதனால்தான் குழந்தைகளின் கண்களைப் பரிசோதிப்பது அவசியம். பொதுவாக குழந்தைகள் 3 - 4 வயதாகும்போது கண்பரிசோதனை செய்வது அவசியம்.

பிறவி நிறப் பார்வைக் குறைபாட்டை மாத்திரமின்றி. தூரப் பார்வை கிட்டப்பார்வை, வாக்குக் கண் (மாறுகண்) போன்றவற்றையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குழந்தைகளின் கற்கை ஆற்றல் பாதிப்படையாது காப்பாற்றலாம்.

நிறப் பார்வைக் குறைபாடுள்ளவர்களால், சரியாக நிறங்களை இனங் காண முடியாத காரணத்தால் சில தொழில்களைச் செய்ய முடியாது. கலர் வயர்களை இனங்காண வேண்டிய அவசியம் இருப்பதால் மின்னியல் தொழில் (எலக்ரிசியன்) பிரச்சனையாகும். அதேபோல பேஷன் வடிவமைப்பாளர்களாலும் திறமையாக செயல்பட முடியாது. விமான ஓட்டிகளில் இதனை அவசியமாகப் பரிசோதிக்கிறார்கள்.

பரிசோதனை

நிறப் பார்வைக் குறைபாட்டை இனங்காண பரிசோதனைகள் உள்ளன. பொதுவாக Ishihara color test எனப்படும் பல்வேறு நிறங்களிலான எண் பட்டியலைப் பயன்படுத்துகிறார்கள். கலர் புள்ளிகளால் நிறைந்த அட்டையில், குறிப்பிட்ட நிறமுடைய வண்ணத்தில் எண்கள் எழுதப்பட்டிருக்கும். இந்த எண்களை அடையாளம் காண முடிவதை வைத்தே குறைபாட்டைக் கண்டறிகிறார்கள்.

சிறு குழந்தைகளில் எண்களைச் சொல்ல முடியாததால் வட்டம் ,சதுரம், கார் குருவி, போன்ற சின்னங்களைக் கொண்ட நிறப் பட்டியலைப் பயன்படுத்துகிறார்கள்.

பெரும்பாலான விலங்குகளுக்கு நல்ல நிறப்பார்வை இல்லை. குரங்குகள், அணில், பறவைகள், பூச்சிகள், மற்றும் பல மீனகள் ஓரளவு நிறப் பார்வை கொண்டவையாகும். ஆயினும் பூனைகள் மற்றும் நாய்களது நிறப் பார்வை மோசமானது.

Thanks: Hainalama.com

பற்களை பாதுகாக்க பாட்டி வைத்தியம்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:34 PM | Best Blogger Tips
பற்களை பாதுகாக்க பாட்டி வைத்தியம்:-

* பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 
* ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைக்கவும். இத்துடன் படிகாரம் சேர்த்து அரை த்து வைத்து கொண்டு, அதில் பல் துலக்கினால் பல் தொடர்பான பாதிப்  புகள் குறையும். 
* ஆலமர பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும். 
* நல்லெண்ணெய் 20 மிலி அளவுக்கு வாயில் ஊற்றி அடக்கி இருபது நிமிடம் கழித்து வாய் கொப்பளித்து துப்பினால் வாயில் ஏற்படும் கிருமித் தொற்று குணமாகும். 
* கிராம்பு, கொட்டைப்பாக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல்வலி குணமாகும். ஈறுகள் பலப்படும். 
* கொய்யா இலையை மென்று தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும். 
* கொய்யா இலை, கருவேலம்பட்டை, உப்பு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி உள்ளிட்ட அனைத்து நோய்களும் விலகும்* பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைக்கவும். இத்துடன் படிகாரம் சேர்த்து அரை த்து வைத்து கொண்டு, அதில் பல் துலக்கினால் பல் தொடர்பான பாதிப் புகள் குறையும்.
* ஆலமர பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல் வலி குறையும்.
* நல்லெண்ணெய் 20 மிலி அளவுக்கு வாயில் ஊற்றி அடக்கி இருபது நிமிடம் கழித்து வாய் கொப்பளித்து துப்பினால் வாயில் ஏற்படும் கிருமித் தொற்று குணமாகும்.
* கிராம்பு, கொட்டைப்பாக்கு இரண்டையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கினால் பல்வலி குணமாகும். ஈறுகள் பலப்படும்.
* கொய்யா இலையை மென்று தின்று வெந்நீரில் வாய் கொப்பளித்தால் பல் கூச்சம் விலகும்.
* கொய்யா இலை, கருவேலம்பட்டை, உப்பு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து பல் துலக்கி வந்தால் பல் வலி உள்ளிட்ட அனைத்து நோய்களும் விலகும்.
 
Via  Karthikeyan Mathan
 
அழகான முகத்திற்கு ஆலோசனைகள்.

மணக்கால் அய்யம்பேட்டை | 1:31 AM | Best Blogger Tips
அழகான முகத்திற்கு ஆலோசனைகள்.

முகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்க மின்றி இருக்கவும்… வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில வழிமுறைகள்…

தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,; ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.

தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ; செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும். இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள்காலையில் முகம் கழுவி வரவும்.

சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும். வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றhக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணைவழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.

முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக வேண்டுமா?
கோசு இலைகளின் சாற்றை எடுத்து அத்துடன் ஈஸ்டை கலந்து ஒரு ஸ்பூன் தேன் போட்டு நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து அதை முகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் வாஷ் செய்து கொண்டு பின்னர் குளிர்ந்த நீரை முகத்தில் மறுபடியும் தடவவும்.

நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.

கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.

ஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் காரட் சாறு கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.

சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.

பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.

ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Viaஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்

Youtube Video க்களை தரவிறக்க முடியாதே என ஏங்குகின்றீர்களா?

மணக்கால் அய்யம்பேட்டை | 1:29 AM | Best Blogger Tips
Youtube Video க்களை தரவிறக்க முடியாதே என ஏங்குகின்றீர்களா?

கவலையை விடுங்கள் எவ்வித மென்பொருளுமின்றி மிக இலகுவாக தரவிரக்கமுடியும்.

நீங்கள் தரவிறக்க விரும்பும் Video இன் URL க்கு முன்னால் இருக்கும் www. என்பதனை நீக்கி விட்டு ss என்பதனை அவ்விடத்தில் சேர்த்து ENTER ஐ அழுத்துங்கள் இனி அதுhttp://en.savefrom.net/ எனும் தளத்துக்கு தானாக Redirect ஆகும் பிறகென்ன Download Button ஐ அழுத்தி தரவிறக்க வேண்டியது தான். 

உதாரணமாக www.youtube.com/xxxxxxxxxxxxxxxxஎன்றிருக்கும் URL இனை ssyoutube.com/xxxxxxxxxxxxxxxx என மாற்றியமைக்க வேண்டும்.

via page தகவல் தொழிநுட்பம்.

கவலையை விடுங்கள் எவ்வித மென்பொருளுமின்றி மிக இலகுவாக தரவிரக்கமுடியும்.

நீங்கள் தரவிறக்க விரும்பும் Video இன் URL க்கு முன்னால் இருக்கும் www. என்பதனை நீக்கி விட்டு ss என்பதனை அவ்விடத்தில் சேர்த்து ENTER ஐ அழுத்துங்கள் இனி அதுhttp://en.savefrom.net/ எனும் தளத்துக்கு தானாக Redirect ஆகும் பிறகென்ன Download Button ஐ அழுத்தி தரவிறக்க வேண்டியது தான்.

உதாரணமாக www.youtube.com/xxxxxxxxxxxxxxxxஎன்றிருக்கும் URL இனை ssyoutube.com/
xxxxxxxxxxxxxxxx என மாற்றியமைக்க வேண்டும்.

via page தகவல் தொழிநுட்பம்.

முடக்கற்றான்

மணக்கால் அய்யம்பேட்டை | 1:20 AM | Best Blogger Tips

வேறுபெயர்கள் -: முடக்கறுத்தான், முடர்குற்றான், மொடக்கொத்தான்.
தாவரப்பெயர் -: CARDIOSPERMUM HALICACABUM.
தாவரக்குடும்பம் -: SAPINDACEAE.
பயன் தரும் பாகங்கள் -: இலை, தண்டு, வேர் முதலியன.

தாவர அமைப்பு -:
முடக்கற்றான் கொடிவகையைச் சேர்ந்தது. இது இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது.குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில்தான் முடக்கற்றான் பயிராகும்.தோட்டங்கள், வீட்டு வேலி இவைகளிலுள்ள பெரிய செடிகளின்மேல் படர்ந்து வளரும். உஷ்ண பிரதேசங்களில் முடக்கற்றான் கொடியைப் பார்க்கமுடியாது. வளமான இடங்களில் இந்தக் கொடிசற்று பெரிய இலைகளுடன் செழிப்பாகப் படரும். இந்தக் கொடியின்தண்டும் இலைக் காம்பும் மெல்லியதாகவே இருக்கும். இது ஏறுகொடியாக சுமார் 3.5 மீ. அளவு படரும்.

இதன் தண்டு, இலை, காம்பு எல்லாம் நல்ல பச்சை நிறமாகவே இருக்கும். இதன் பூ வெண்நிறமாக இருக்கும். இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். காயைப் பறித்துத் தோலை உறித்தால் உள்ளே மிளகளவு, பச்சை நிறமான விதைகள் இருக்கும். அதன் ஒரு பகுதியில் நிலாப்பிறைபோல் ஒரு வெண்ணிறக் குறி தோன்றும்.

இதன் காய் முற்றிய பின் பழுப்பு நிரமாக மாறிக் காய்து விடும். இதை மற்ற கீரைகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.இதை தனியாக மருந்தாகவும் பயன் படுத்தலாம்.

இதன் இலையில் அடங்கியுள்ள சத்துக்கள் -: ஈரப்பதம்-83.3, புரதச்சத்து-4.7, கொழுப்புச் சத்து 0.6, மாவு சத்து 9.1, தாது சத்து 2.3, சக்தி-6 கலோரி முதலியவை உள்ளது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப் படுகிறது.

முடக்கு+அறுத்தான்=முடக்கற்
றான். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும்மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான்எனப் பெயர் பெற்றது.

குழந்தை பிரசவிக்கும் நேரத்தில் ஒரு சில பெண்கள் ரொம்ப கஷ்டப் படுவார்கள் இவர்கள் வேதனையைக் குறைத்து, சுகமாகசுலபமாக பிரசவிக்கச் செய்ய இந்த முடக்கற்றான் நன்கு பயன்படுகிறது.

சுகப்பிரசவம் ஆக -: முடக்கற்றான் இலையைத் தேவையான அளவுகொண்டு வந்து அதைக் காரமில்லாத அம்மியில் வைத்து மை போல்அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ தோன்றாது. மருத்துவமனை அருகிலில்லாத கிராமங்களில் உள்ள மருத்துவம் பார்க்கும் பெண்களும், பாட்டி மார்களும் இந்த முறையையே கையாண்டு வருகின்றனர். இது கை கண்ட முறையாகும்.

மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக -: மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால்உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

முடக்கற்றான் இரசம் தயாரிக்கும் முறை -: ஒரு கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு சட்டியில்போட்டு ஒரு டம்ளரளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம் வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம் தயாரிக்க வேண்டும்.

பாரிச வாய்வு குணமாக -: கைப்பிடியளவு முடக்கற்றான் இலையைக்கொண்டு வந்து நைத்து ஒரு சட்டியில் போட்டு இதே அளவு வேலிப்பருத்தி இலையையும், சூரத்து ஆவரையிலையையும் இத்துடன் சேர்த்துஇரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வடிகட்டிக் காலைவேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால் பாரிச வாய்வு குணமாகும். தேவையானால் மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடி 3 நாளாக மூன்று முறை கொடுத்து வந்தால், பாரிசவாய்வு பூரணமாகக் குணமாகும்.

சுக பேதிக்கு -: ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை ஒருசட்டியில் போட்டு, வெள்ளைப் பூண்டு பற்களில் ஐந்து நைத்துஇதில் போட்டு அரைது தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாகஉடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சியகஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால் ஒரு எலுமச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம்மட்டும் சாப்பிடலாம். இரவு தேவையான பதார்த்தம் சாப்பிடலாம்.

முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும். இதன் இலையை இடித்துப் பிழிந்துஎடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி,காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.

முடக்கற்றான் இலையையும், வேரையும் குடி நீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்டஇருமல் குணமாகும்.

சில பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாதுஇவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு ஒழுங்காக வரும்.

முடக்கற்றான் இலையை உலர்த்தி எடுத்த பொடியுடன், சித்திரமூல வேர் பட்டை, கரிய போளம் இவைகளையும் பொடி செய்துகுறிப் பிட்ட அளவு மூன்று நாள் அருந்தி வர மாதவிலக்கு ஒழுங்காக வரும்.

முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியைமுறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்துஅருந்த மலத்தைக் கழிக்கச் செய்யும்.

முடக்கற்றான் வேரை உலர்த்தி பின்னர் முறைப் படி குடி நீர் அருந்திவர நாள் பட்ட மூல நோய் குணமாகும்.

 Via -நலம், நலம் அறிய ஆவல்.

சீதை தீக்குளித்தது ஏன்?

மணக்கால் அய்யம்பேட்டை | 1:17 AM | Best Blogger Tips

ராவணனிடம் இருந்து மீட்கப்பட்ட சீதையின் கற்புநெறியை நிரூபிக்க தீக்குளிக்கும்படி ராமன் சொன்னதை பெண் சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. ராமனே இப்படி சந்தேகப்படலாமா? என்று கூறுவதுண்டு. ஆனால் சீதையால் அக்னிபகவான் தனது தூய்மையை மீண்டும் பெறவே இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தது. ராவணனின் யாகசாலையில் வேலைசெய்த அக்னிபகவான் பல பாவங்களை செய்ய வேண்டியதாக இருந்தது. பல முனிவர்களையும் சாதுக்களையும் ராவணனின் உத்தரவுப்படி அவன் அழித்தான். இந்த பாவத்தில் இருந்து நீங்கி பரிசுத்தம் ஆகவேண்டுமானால் சீதாதேவி என்னுள் மூழ்கி எழவேண்டும் என கோரிக்கை விடுத்தான். ராமனும் அதை ஏற்றுக்கொண்டு சீதாவை தீயில் மூழ்கிவரும்படி உத்தரவிட்டான். பகவானின் உத்தரவை ஏற்ற சீதா தீக்குள் இறங்கினாள். அவளது கற்புத்தீ முன் அக்னியின் பாவங்கள் எல்லாம் அழிந்துபோயின. இதுதான் சீதாதேவி அக்னிக்குள் இறங்கிய வரலாறு. நெருப்பையும் பரிசுத்தமாக்கும் வல்லமை பெற்றவள் சீதா.

நல்ல செய்திகளை பகிர்வோம், பயனடைவோம்...

Via மெய்ப்பொருள்

ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்களுக்கு……

மணக்கால் அய்யம்பேட்டை | 1:14 AM | Best Blogger Tips

ஆண் குழந்தைக்கு ஆசைப்படாத பெண்கள் யார்தான் இல்லை?அப்படி ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் அவசியம் காலை உணவை உட்கொள்ள வேண்டும். என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று!

கர்ப்பம் உறுதிபடுத்தப்பட்ட பின்னர் பெண்களுக்கு இயல்பாகவே வரும் மசக்கை மற்றும் வாந்தி போன்றவை, சில பெண்களுக்கு உணவின் மீதே வெறுப்பை ஏற்படுத்தி விடும். ஆனால் குழந்தை – அதுவும் ஆண் குழந்தையாக – பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் ஆகாசம் வரை இருக்கும். பொதுவாகவே கர்ப்பம் தரித்திருக்கும்.

பெண்கள் நல்ல சத்தான் உணவை வேளை தவறாமல் உண்ண வேண்டும்;

அதுவும் சிறிது சிறிதாக ஐந்து வேளை வரை உட்கொள்ளலாம், என்றெல்லாம் அறிவுறுத்துகின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். இந்நிலையில், கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஒரு பெண் உட்கொள்ளும் உணவின் தன்மைதான் அவளது குழந்தை ஆணாக உருவாகுமா அல்லது பெண்ணாக உருவாகுமா என்பதையும், அந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள

இது தொடர்பாக அண்மையில் கொலம்பியாவில் உள்ள மிஸ்ஸோரி பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு பெண் கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் காலை உணவை தவறாமல் உட்கொள்வதோடு, நல்ல கொழுப்பு சத்தான ஆகாரத்தையும் எடுத்துக்கொண்டால் ஆண் குழந்தை பிறக்க மிகப்பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதுவே குறைந்த கொழுப்பு சத்துடைய உணவையும், உணவு இடைவேளையை நீண்ட நேரமாக வைத்துக்கொள்ளும பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள் அந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

சரி ஆண்குழந்தைக்காக இத்தனை தூரம் ஆராய்ச்சியெல்லாம் மேற்கொண்டவர்கள், பெண் குழந்தைதான் வேண்டும் என்று அடமாக ஆசை கொள்ளும் பெண்களுக்காக இதுபோன்ற ஆராய்ச்சியெல்லாம் மேற்கொள்ளவில்லையா என்று கேட்டால், அதற்கும் “உள்ளேன் ஐயா!” என்று ஆஜராகிறார்கள் ஹாலந்தின் மாஸ்ட்ரிக்ட் பல்கலைக் கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்!

இவர்கள் மேற்கொண்ட ஆய்வில், கர்ப்ப காலத்தில் பெண்கள் வாழைப்பழம் உண்பதை நிறுத்தி, உப்பு சேர்ப்பதை குறைத்துக் கொண்டால் பெண் குழந்தை பிறக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக சோடியம், பொட்டாசியம் அதிகம் உள்ள இறால், அரிசி உணவுகள், உருளைக் கிழங்கு, பிரட் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.அவற்றுக்குப் பதிலாக கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம் என பரிந்துரைக்க்கிறார்கள் மாஸ்ட்ரிக்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள்.

இவர்கள் கூறுவதை, கொலம்பிய பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கூறியவற்றுடன் – அதாவது கொழுப்பு சத்து குறைந்த உணவை உட்கொள்ளும் கர்ப்பிணி பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்க அதிக வாய்ப்புள்ளது என்று தெரிவித்ததோடு –ஒப்பிட்டு பார்க்கையில் நம்பகத்தன்மை மேலும் அதிகரிப்பதாகவே தோன்றுகிறது. ஆனால் இந்த ஆராய்ச்சி, ஆய்வு எல்லாம் இன்ன குழந்தைதான் வேண்டும் என்று அடம் பிடிப்பவர்களுக்குத்தான்…! ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ, ஒரு தாய்க்கு எந்த குழந்தையுமே அவள் குழந்தைதானே?!

Via-நலம், நலம் அறிய ஆவல்.

சிவசின்னங்கள் - உருத்திராட்சமும் அதன் மகிமையும்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:59 AM | Best Blogger Tips
இது அணிவோருக்கு மன அமைதியையும், மன ஊக்கத்தையும், புத்திக் கூர்மையும் அளிக்கிறது. 38 வகையான உருத்திராக்கத்தில், 21 வகை மிக பிரசித்தம். முகத்தைப் பொறுத்தே ஒரு முகம், இரு முகம் என்று வரிசைப் படுத்தப்படுகிறது.

ஒரு முகம்
மந்திரம் - ஓம் நமச்சிவாய, ஓம் ஹரீம் நமஹ

ஒரு முகமுடைய உருத்திராக்கம் சூரியனால் ஆளப்படுகிறது. இந்த உருத்திராக்கம் ஏனைய எல்லா முகங்களையுடைய உருத்திராக்கங்களுக்கும் அரசனாகையால்,இது தூய உணர்வைக் (Pure consciousness) குறிக்கிறது. அணிபவருக்குப் போகமும் மோட்சமும் கிட்டும்.

இரண்டு முகம்
மந்திரம் - ஸ்ரீ கௌரி சங்கராய நமஹ, ஓம் நமஹ

உருத்திராக்கம் அணிவோருக்கு 'ஒற்றுமை' (unity) உணர்வை அளிக்கும். இந்த ஒற்றுமை குரு-சிஷ்யன், பெற்றோர்-குழந்தைகள், கணவன்-மனைவி, நண்பர்களிடையே உள்ள தொடர்பைக் குறிக்கலாம். ஒருமைத் தன்மையை நிலை பெறச் செய்வது இதன் தனித்தன்மையாகும்.

மூன்று முகம்
மந்திரம் - ஓம் கிளீம் நமஹ

மூன்று முக உருத்திரக்கம் தாழ்வு மனப்பான்மை (Inferiority Complex) உள்ளார்ந்த பயம் (Subjective fear) குற்ற உணர்வு (Guilt) மனச்சோர்வு போன்றவற்றால் துன்பப்படுபவர்களுக்கும் உகந்ததாகும்.

நான்கு முகம்
மந்திரம - ஓம் ஹரீம் நமஹ

இந்த நான்கு முகமுள்ள உருத்திராக்கத்தை ஆளும் கோள் புதன். இது பிரம்மனைக் குறிக்கிறது. அணிவோருக்கு அருள் கிடைத்த போது ஆக்க சக்தி கிட்டுகிறது. மாணவர்கள், அறிவியலாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு நற்பயன் அளிக்க வல்லது. ஞாபகசக்தி, கூர்ந்த மதி புத்தி சாதுர்யம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. நான்முக உருத்திராக்கங்கள் மூன்றினை வலது கையில் கட்டினால் அவர் முன் யாரும் எதிர்த்து நிற்க முடியாது.

ஐந்து முகம்
மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ

ஐந்து முகங்களுடைய உருத்திராக்கத்தின் ஆளும் கோள் வியாழன். இது மங்களகரத்தின் குறியீடான சிவனை குறிக்கும். இந்த ஐந்து முகமுடைய உருத்திராக்க மாலை அணிதோருக்கு உடல் நலம், அமைதி ஆகியன கிட்டும். இது ஒருவரின் இரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கிறது. இந்த உருத்திராக்க மாலையை ஜபம் செய்வதற்கும் பயன்படுத்துவர். இந்த மாலையை அணிவோருடைய மனம் அமைதியாக இருக்கும். அத்துடன் இதை அணிபவர்களுக்கு அகால மரணம் ஏற்படாது என்பதில் சந்தேகம் ஏதுவுமில்லை.

ஆறு முகம்
மந்திரம் -ஸ்வாமி கார்த்திகேயாய நமஹ

இந்த ஆறு முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் வெள்ளி. இந்த உருத்திராக்கம் சிவனின் இரண்டாவது மகனான கார்த்திகேயக் கடவுளைக் குறிக்கும். இதை அணிந்து வேண்டியோருக்கு அறிவு, மேம்படுத்தப்பட்ட புத்தி, மனத்திட்பம், திடமான மனம் ஆகியவை அருளப்படும்.

ஏழு முகம்
மந்திரம் - ஓம் மஹா லட்சிம்யை நமஹ ஓஅம் ஹீம் நமக

இந்த ஏழு முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் சனி. இது தேவி திருமகளைக் குறிக்கும். இதை அணிவோருக்கு நல்ல உடல் நலம் அருள் பாலிக்கப்படும். உடல் தொடர்பான துன்பங்கள், நிதித் தொல்லைகள், மனத் துன்பங்கள் ஆகியவற்றால் வருத்த முற்றிருப்போர் இந்த உருத்திராக்கத்தை அணிதல் வேண்டும். இந்த ஏழு முக உருத்திராக்கத்தை ஒருவர் அணிவதால் அவருக்கு வணிகம், பணி ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்படுத்துவதுடன் அவர் மகிழ்வாகக் கழிக்க முடிகிறது.

எட்டு முகம்
மந்திரம் - ஒம் ஹீம் நமஹ, ஓம் கணேஷாய நமஹ

இந்த எட்டு முகமுடைய உருத்திராக்கத்தின் ஆளும் கோள் இராகு. இது பகவான் கணேசரைக் குறிக்கிறது. இது முயற்சிகளிலும் தடைகளை நீக்கி வெற்றியைத் தருகிறது. அணிவோருக்கு ரித்திகள் (Riddhis), சித்திகள் (Siddhies) ஆகிய எல்லாப் பேறுகளையும் அளிக்கும்.

ஒன்பது முகம்
மந்திரம் - நவ துர்க்காயை நமஹ, ஓம் ஹரீம் ஹும் நமஹ

இந்த ஒன்பது முக உருத்திராக்கத்தை ஆளும் கோள் கேது. இது தேவி துர்க்கையைக் (சக்தி) குறிக்கிறது. இதை அணிந்து வணங்குபவர்களுக்கு அன்னைக் கடவுள் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வதற்கு அதிக சக்தி, ஆற்றல், செயல் திறம், அச்சமின்மை ஆகியவற்றை அளிப்பாள்.

பத்து முகம்
மந்திரம் - ஸ்ரீ நாராணாய நமஹ,ஓம் ஹ்ரீம் நமஹ

இந்த பத்து முகமுள்ள உருத்திராக்கத்திற்கு ஆளும் கோள் என்று ஒன்றுமில்லை. கோள்களினால் ஏற்படும் தீய பலன்களையும் இது சாந்தப்படுத்தும். பத்துத் திசைகளினதும், பத்து அவதாரங்களிலும் செல்வாக்கு இந்தப் பத்துமுக உருத்திராக்கத்தில் உண்டு. ஒருவரின் உடலுக்கு இது கேடயம் போல் செயல்பட்டு, எல்லாத் தீய சக்திகளையும் விரட்டுகிறது. இதை அணிந்து வணங்குவோர்களுடைய குடும்பம் பரம்பரை பரம்பரையாகச் செழிப்புற்று வாழும்.

பதினோரு முகம்
மந்திரம் - ஒம் ஸ்ரீ ருத்திர நமஹ, ஒம் ஹரீம் நும் நமஹ

இது பகவான் அனுமானைக் குறிக்கும். இது வணங்கி வேண்டியோருக்கு அறிவு, நேர்மையான நீதி ஆற்றல் மிக்க சொல்லாட்சி, துணிவுள்ள வாழ்க்கை, வெற்றி ஆகியனவற்றை அருளும். எல்லாவற்றிற்கும் மேலாக, விபத்தினால் மரணம் ஏற்படுவதை இது தடுக்கும்.

பன்னிரண்டு முகம்
மந்திரம் - சூர்யாய நமஹ ஓம் க்ரோன் க்ஷோண் ரவுண் நமஹ

இது சூரியக் கடவுளைக் குறிக்கும். இதை அணிவோர் அளவற்ற நிர்வாகத் திறனைப் பெறுவர். அத்துடன் சூரியனின் குணங்களையும் பெறுவர். இக்குணங்களால் ஒருவர் என்றும் பிரகாசிக்கும் ஒளியுடனும், பலத்துடன், பிறரை ஆட்சி செய்து வருவர்.

பதின்மூன்று முகம்
மந்திரம் - ஓம் ஹரீம் நமஹ

இது இந்திரனைக் குறிக்கும். தொழுது வேண்டியவர்களுக்கு மனிதன் விரும்பத்தக்க எல்லா சுகங்களையும் இது அளிக்கும். செல்வம், மாட்சிமை ஆகியவற்றை அளிப்பதுடன் உலகத்து ஆசைகள் அனைத்தும் இது நிறைவேற்றும். அத்துடன் அஷ்டமா சித்திகளையும் இது அளிக்க வல்லது.

பதினான்கு முகம்
மந்திரம் - ஓம் நமஹ சிவாய

இந்தப் பதினான்கு முகமுடைய உருத்திராக்கமே அதி உயர்ந்த விலை மதிப்பற்ற தெய்வீக மணியாகும். அதுவே தேவ மணியுமாகும். இந்த உருத்திராக்கம் அணிவோருடைய ஆறாவது புலனை விழிக்கச் செய்கிறது. அதனால் அவர் எதிர்கால நிகழ்வுகளை முன் கூட்டியே அறிகின்றார்.

பதினைந்து முதல் இருபத்தொன்று வரை உள்ள முகங்கள் பண்டையக் கால முனிவர்கள் இந்த உருத்திராக்க மணிகளை பூஜை மேடையில் வைக்கும்படியும் அதன் வழி முழுக் குடும்பத்திற்கும் செழிப்பைக் கொடுக்கின்றன. பகவான் உருத்திரனின் அருளைப் பெறும்படியும் அறிவுரை கூறியுள்ளனர்.

உருத்திராக்கத்தை 3, 4, 5, 6, எண்ணிகையில் வளையமாகக் கோர்த்து அணிவர். கழுத்தில் அணியும் மாலைகள் 27, 54, 108 என்ற கணக்கில் இருக்கும். கழுத்தில், கையில் அணியும் உருத்திராக்கம் அங்குபங்சர் போல் செயல்பட்டு பயன் அளிக்கும்.

நெல்லிக்கனி அளவுள்ள மணி உத்தமமானது ;

இலந்தைக் கனிஅளவுள்ளது மத்திமம் ;

கடலை அளவுடையது அதமம்.

  1008 செபித்தல் உத்தமம்; அதிற்பாதி மத்திமம்; 108 செபித்தல் அதமம்
"வலது கரத்தில் ஜப மாலை கொண்டு - துணியால் மறைத்துக் கொள்க; தனது குருவும் அதனைக் காண்டல் கூடாது" என்பது விதி. செபிக்கும் காலம் உருத்திராக்க மாலை கைதவறிக் கீழே வீழின், ஜபமாலைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு, நன்னீராட்டி, 108 முறை காயத்திரி எண்ண வேண்டும்.

  உருத்திராக்க அணிந்திருக்கும் போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்று எதுவுமில்லை. நமது புனித நூல்களின்படி உருத்திராக்கத்தை எப்போதும் அணியலாம். அவற்றை நம்பிக்கை, மரியாதை, அன்பு ஆகிய பண்புகளுடன் அணிய வேண்டும். சைவர்கள் மட்டும்தான் இதை அணிய வேண்டும் என்றில்லை. எல்லோரும் உருத்திராக்கத்தை அணியலாம்.

  வேறு பெயர்கள்

  கடவுண்மணி, சிவமணி, தெய்வமணி, நாயகமணி, கண்மணி, கண்டம், கண்டி, கண்டிகை, முண்மணி என்பன அக்கமணியின் மறு பெயர்கள்.

நமது கலாச்சாரத்தின் பெருமைகளை அனைவரும் அறிய அதிக எண்ணிக்கையில் பகிரவும்.

Om namashivaya _
/\_
 
Via மெய்ப்பொருள்