வழிகாட்டும் வாரன் பஃபெட்!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 12:22 | Best Blogger Tips
வழிகாட்டும் வாரன் பஃபெட்!

பணத்தைச் செலவு செய்வதுபற்றி, உலகின் மிகப் பெரிய பணக்காரர் வாரன் பஃபெட் கூறும்போது, ''தேவையில்லாத பொருள்களை வாங்கிக் குவித்துக்கொண்டிர
ுந்தீர்கள் என்றால், பின்னால் தேவையான பொருள்களை விற்க நேரிடலாம்'' என்கிறார்.

அவரே சேமிப்பதுபற்றிச் சொல்லும்போது, ''செலவுசெய்தது போக மீதியை சேமிக்காதீர்கள், சேமித்தது போக மீதியைச் செலவு செய்யுங்கள்'' என்கிறார்.

''ஒருவர், இன்றைக்கு மர நிழலில் உட்கார்ந்து இளைப்பாறிக்கொண்டிருக்கிறார் என்றால், ரொம்ப நாட்களுக்கு முன்னாலேயே அவர் அந்த மரத்தை நட்டுவைத்திருக்கிறார் என்று அர்த்தம்'' என்றும் முதலீடு பற்றி அவர் சொல்கிறார்.

தன் சொத்தில் 99 சதவீதத்தைத் தானம் செய்ததுபற்றி கூறும்போது, '6 பில்லியன் மக்கள், நமக்குக் கிடைத்த வசதிகள் எதுவும் இல்லாமல் வறுமையில் போராடும்போது, இந்தப் பணம் அவர்களுக்குப் பயன்படும் என்று எண்ணிப்பார்க்கும்போது, என் பரம்பரைக்காக சொத்து சேர்த்துக் கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை' என்று நமக்கு வழிகாட்டுகிறார் வாரன் பஃபெட்!


(சுட்டி விகடன் - துளித் துளியாய் தொடரில் இருந்து)