
தேவையான பொருட்கள்
முட்டை - 4
வெங்காயம் - 1/2
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 1
உப்பு
கடுகு, சீரகம்
எண்ணெயில் வறுத்து அரைக்க:
மல்லி - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3
பூண்டு - 2 பல்
இஞ்சி - 1/2 இன்ச்
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
அரிசி - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
முட்டைகளை வேக வைத்து இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். தேங்காய் தவிர மற்ற வறுக்க வேண்டிய பொருட்களை 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்க வேண்டும். அரிசி வெள்ளை ஆனதும் இறக்கி, ஆற வைத்து தேங்காய், தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்க வேண்டும். பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி குழைய வதங்கியதும், அரைத்த மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். கொதிக்க ஆரம்பித்ததும் வெட்டி வைத்த முட்டை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்
Via-நலம், நலம் அறிய ஆவல்.