கிணறும் அதிர்ஷ்டமும்...

மணக்கால் அய்யம்பேட்டை | 12:51 PM | Best Blogger Tips

 

 

✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️

கிணறும் அதிர்ஷ்டமும்... 

கோயில் கிணறும் அதிர்ஷ்டமும் என்ன தெரியுமா? | temple well remedy -  fnewsnow.com

  🦄🐂சிவ ஆலய கிணறு
பாவம் தீர்க்கும்..!...🦄🐂  விஷ்ணு ஆலய கிணறு
செல்வம் சேர்க்கும்...!


 
🦄🐂 நீங்கள் எந்த ஆலயத்திற்குள் நுழைந்தாலும் அந்த ஆலயத்தில் கிணறு (கேணி) இருக்கிறதா எனப் பாருங்கள்.🦄🐂  அப்படி கிணறு இருந்தால் அந்த கோயில் உங்களுக்கு
செல்வ வளம் தரும்/ பாவம் தீர்க்கும் கோயில் என்பதை முதலில் மனதில் இருத்துங்கள்.

கிணறும் அதிர்ஷ்டமும் - YouTube

🦄🐂  அந்த கோவிலில் பிரதான இறை வழிபாடு தொடங்குவதற்கு முன் முதன் முதலில் அந்த
கிணற்றில் உங்கள் முகம் பார்க்கவும்.🦄🐂  பின்பு
முகம் கை கால் சுத்தப்படுத்திய பின்பு தெய்வ வழிபாடு செய்யவும்.


🦄🐂 ஆலயம் சுற்றி வந்த பின் இறுதியாக  எக்காரணம் கொண்டும்
மீண்டும் கிணற்றை பார்க்கக்  கூடாது .இது மிகவும் முக்கியமான கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.  🦄🐂ஆலயம்
தொழுது வரம் பெற்றபின் இறுதியில் கிணற்று நீரைக் கண்டால் நாம் பெற்ற வரம் அனைத்தும் கிணற்றின்  ஜலம் ஈர்த்துக் கொள்ளும், எனவே வழிபாடு முடிந்து  வீடு திரும்பும்போது எக்காரணம் கொண்டும் கிணற்றை எட்டிப் பார்க்கக் கூடாது.🦄🐂 எப்பொழுதுமே ஆலயத்தில் உள்ள கிணற்றை உற்று நோக்கினாலே நம்
செய்த பாவத்தின்  சிறு பங்கு நாம் செய்த தர்மத்தின் பலனாக மாறும் சக்தி கொண்டது என்பதறிக.


 
 🦄🐂 ஜலத்தால்
பாவத்தையும் போக்கலாம் .

wife built for her husband Well Temple | கணவனுக்காக மனைவி கட்டிய 'கிணறு  கோவில்'

🦄🐂  பெற்ற வரன்களை தாரை வார்த்தும் கொடுக்கலாம்.🦄🐂  கோவில் கிணறு எதையும் வாங்கி கிரகித்துக் கொள்ளக் கூடியது.🦄🐂  அதனால்தான் அக்காலத்தில் கோயில் சொத்துக்களையும்  பிள்ளையில்லா சொத்துக்களையும், ஆயுதங்களையும் பாவக்கணக்கு சொத்துக்களையும் விற்க
கோயில் ஆலயத்தில் போட்டு விடும் பழக்கம் இருந்தது. 🦄🐂 விவரம் அறிந்தவர்கள் இன்றும் பலர் கோயில் கிணற்றில்
காசை தலையை சுற்றி போடுவார்கள். அதையும் கோவிலுக்கு உள்ளே செல்லும் போதே செய்வார்கள். 🦄🐂 குறிப்பாக திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தாயார் சன்னதிக்குள் ஒரு கண்ணாடிக்  கிணறு உண்டு, இதில்
மகாலட்சுமி அருள் நிரம்பவே உண்டு.🦄🐂 ஆண்டாள் தாயார் தினமும் தன் முகதரிசனத்தை இந்த கிணற்றில் கண்டு வந்ததால் அவள் பெற்ற சௌபாக்கியம்
பெருமாளையே மணாளனாக அடைய நேர்ந்தது என்றால் ....

wife built for her husband Well Temple | கணவனுக்காக மனைவி கட்டிய 'கிணறு  கோவில்'

🦄🐂புரிந்து கொள்ளுங்கள்..!!


 
🦄🐂 மொத்தத்தில் சிவன் கோவில் கிணறு
பாவம் தீர்க்கும்.  🦄🐂பெருமாள் கோயில் கிணறு
செல்வ வளம் சேர்க்கும்...
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️


 
May be an image of 1 person, smiling, grass and tree

நன்றி இணையம் 🌹

விஷ்ணு சகஸ்ரநாமம்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:43 PM | Best Blogger Tips

எண்ணிய காரியம் நிறைவேற விஷ்ணு சஹஸ்ரநாமம் | vishnu sahasranamam

 

விஷ்ணு சகஸ்ரநாமம்

 

தினமும் ஒரு திருநாமம்

 நாள்தோறும் நாராயணன் நாமம்

இன்று 139ஆம் திருநாமம்.

 

சதுராத்மனே நமஹ:

(Chathuraathmane namaha)

 ஸ்ரீ சத்ய நாராயண அஷ்டோத்ர சத நாமாவளி

திருமலையப்பனைப் பார்த்துக் கருடன், “எம்பெருமானே! இங்கே ஏழு மலைகளுள் ஆதிசேஷன் பெயரில் சேஷாத்ரி என்றொரு மலையும், எனது பெயரில் கருடாத்ரி என்றொரு மலையும் உள்ளன. ஆனால்கருடாத்ரிநாதன்என்று உன்னை யாரும் அழைப்பதில்லைசேஷாத்ரிநாதன்என்று தான் எல்லோரும் உன்னை அழைக்கிறார்கள்.

 

உனது பிரம்மோற்சவத்தில் கூட ஒருமுறை தான் கருட வாகனத்தில் நீ எழுந்தருளுகிறாய். சேஷ வாகனத்தில் மட்டும் இரண்டு முறை நீ எழுந்தருளுகிறாய். ஆதிசேஷனுக்கு நிகரான ஸ்தானத்தை எனக்கும் நீ வழங்கவேண்டும்!” என்று வேண்டினார்.

 

உன் கோரிக்கை நிச்சயம் பரிசீலிக்கப்படும்!” என்றார் மலையப்பன்.

 

இன்னொரு கோரிக்கையும் உள்ளது!” என்றார் கருடன்.

 

அதென்ன?” என்று கேட்டார் மலையப்பன்.

 

ஆதிசேஷனாவது பரவாயில்லை! ஆதிகாலத்திலிருந்து உனக்கு சேஷனாக (தொண்டனாக) இருந்து பணிவிடை செய்கிறார். சிறிய திருவடியான அனுமான் ராமாயணத்தில் தானே உன்னோடு வந்து சேர்ந்து கொண்டார். அவருக்கென்று எத்தனை தனி சந்நதிகள், அர்ச்சனைகள், மாலைகள், பூஜைகள்? ஆனால் பெரிய திருவடியான எனக்கெனத் தனியாக ஒரு சந்நதி கூட இல்லையே!” என்றார்.

 

இதையும் பரிசீலிக்கிறேன்!” என்றார் திருமால். சிலகாலம் கழிந்தது. வைகுண்டத்தில் திடீரென மகாலட்சுமியைக் காணவில்லை.

 108 திவ்ய தேச தலங்கள் – 14(நாச்சியார்கோயில்) – Pg Novels

கருடனை அழைத்த திருமால், மகாலட்சுமி எங்கு சென்றிருக்கிறாள் என்று தேடச் சென்னார் பல இடங்களில் தேடிய கருடன், திருநறையூர் எனப்படும் நாச்சியார்கோயிலில் மேதாவி என்னும் முனிவரின் மகளாக வஞ்ஜுளவல்லி என்ற பெயருடன் மகாலட்சுமி அவதரித்திருப்பதைக் கண்டறிந்து திருமாலிடம் தெரிவித்தார்.Rajalakshmi J (@RajalakshmiJ11) / X

 

அவளை மணந்து கொள்ள விரும்பிய திருமால், வாசுதேவன், பிரத்யும்னன், அனிருத்தன், சங்கர்ஷணன், புருஷோத்தமன் என ஐந்து வடிவங்களை எடுத்துக் கொண்டு நாச்சியார் கோயிலில் உள்ள மேதாவி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்தார்.

 அனந்தனுக்கு 1000 நாமங்கள் - Kungumam Tamil Weekly Magazine

மேதாவியிடம், “நாங்கள் ஐவரும் வேதம் கற்கும் பிரம்மச்சாரிகள். எங்களுக்கு இங்கே உணவு கிடைக்குமா?” என்று கேட்டார்.

 

மேதாவியும் தன் மகள் வஞ்ஜுளவல்லியிடம் வந்தவர்களுக்கு உணவு பரிமாறச் சொன்னார். ஐவரும் உண்டபின் கை கழுவுவதற்காக வஞ்ஜுளவல்லி ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்தாள்.

 

முதலில் வந்த வாசுதேவன், கையை அலம்பியவுடன், வஞ்ஜுளவல்லியின் கையைப் பிடித்து இழுத்தார்.

 

அப்பா!” என்று அலறினாள் வஞ்ஜுளவல்லி. மேதாவி ரிஷி கோபத்துடன் ஓடி வந்தார். அப்போது வாசுதேவன் தனக்கே உரிய அடையாளங்களாக இருக்கும் சுதர்சனச் சக்கரத்தையும், பாஞ்சஜன்யச் சங்கையும் எடுத்து மேதாவியிடம் காட்டவே, வந்திருப்பவர் திருமால் என உணர்ந்து அவருக்குத் தன் மகளை மணமுடித்து வைத்தார்.

 

இன்றும் நாச்சியார்கோவிலில் சங்கு சக்கரங்களை எடுத்து அடையாளமாகக் காட்டியபடி பெருமாள் எழுந்தருளியுள்ளார்

 

அதன்பின் கருடனை அழைத்த திருமால், “திருமலையில் நீ என்னென்ன கோரிக்கைகள் வைத்தாயோ அவை அனைத்தையும் இங்கே நிறைவேற்றி வைக்கிறேன். அனுமனுக்குத் தனியாகச் சந்நதி இருப்பது போல், இவ்வூரில் உனக்கெனத் தனிச் சந்நதி தருகிறேன்.."

 உலகப்பிரசித்திபெற்ற கல்கருடபகவான் கோயிலில் திருவிழா கொடியேற்றம்!,  function-named-panguni-perundruvizha-has-been-announced-in-the-world-famous-stone-carving-site-at-vanjulavalli-thayer-sametha  ...

"திருமலையில் கருடாத்ரி என்ற மலை இருந்தும், யாரும் என்னைக் கருடாத்ரிநாதன் என்றழைப்பதில்லை என்று வருந்தினாய் அல்லவா? அந்தக் குறை தீர, இவ்வூரில் நீ மலை போன்ற கல்கருடனாகக் கல்லால் ஆன திருமேனியுடன் விளங்குவாய். என்னை விடப் புகழ் பெற்றவனாக இவ்வூரில் நீ விளங்குவாய்.."

 

திருமலையில் இரண்டு முறை சேஷவாகனம் இருப்பது போல, இவ்வூரில் மார்கழியில் ஒருமுறை, பங்குனியில் ஒருமுறை என வருடத்தில் இரண்டு முறை கருட வாகனத்தில் நான் காட்சி தருவேன்!”என்று கூறினார்.

 

இன்றும் நாச்சியார்கோயிலில் தனிச்சந்நதியோடு கற்ற கருடன், கற்கின்ற கருடன், கற்க போகின்ற கருடன் என முக்காலத்திலும் கல்வி பயின்று கல்வி வரம் தரும்கல்-கருடனாககருடன் காட்சி தருகிறார். அவருக்கு அருள்புரியவந்த திருமால் வாசுதேவன், பிரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன், சங்கர்ஷணன் என ஐந்து வடிவங்களுடன் காட்சி தருகிறார்.

 கருட பட்சிகள் மோட்சம் பெற்ற நாச்சியார் கோவில் ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம் |  Srinivasa perumal temple Nachiyar kovil - Tamil Oneindia

இது போல் தன் அடியார்களுக்கு அருள் புரிவதற்காகப் பற்பல வடிவங்கள் எடுக்கிறார் திருமால்.

 

அந்த வகையில் வைகுண்டத்துக்கு வந்து திருமாலைத் தரிசிக்க முடியாத தேவர்களுக்குக் காட்சியளித்து அருள்புரிவதற்காகத் திருப்பாற்கடலில் வாசுதேவன், பிரத்யும்னன், அநிருத்தன், சங்கர்ஷணன் என நான்கு வடிவங்களோடு எழுந்தருளியுள்ளார்.

 

பாற்கடலில் இத்தகைய நான்கு வடிவங்கள் கொண்டு காட்சி தருவதால்சதுராத்மாஎன்று திருமால் அழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 139-வது திருநாமம். “சதுராத்மனே நமஹஎன்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அவர்களின் மனோபாவத்துக்கு ஏற்றபடி திருமால் அருள் புரிவார்.

 May be an image of 2 people and suitcase

(நன்றி டாக்டர்: .வே.வெங்கடேஷ்)