#கோவை_காவல்துறை என்றாலே.. ??
#K_K_முத்துசாமி தான் ஞாபகத்துக்கு வருவார்
நீதி, நேர்மை, நிர்வாகம் இவற்றில் கொங்கு வேளாளக்கவுண்டர்கள் என்று
ஒரு கட்டுரை எழுத வேண்டுமெனில் ஐயா திரு #K_K_முத்துசாமி அவர்களை பற்றி எழுதாமல் அந்த கட்டுரையை நிறைவு செய்ய முடியாது.
கொங்கு வேளாளக்கவுண்டர் என்பதால் KKM அவர்களுக்கு பெருமையா?
அல்லது
KKM அவர்களால் கொங்கு வேளாளக்கவுண்டர் சமுதாயத்திற்கு பெருமையா? என்றால்..????
KKM அவர்களால் கொங்கு வேளாளக்கவுண்டர் சமுதாயத்திற்கு பெருமை என்பதே உண்மை.
இன்றைக்கு ஒரு கமிஷனர், 4 டெபுடி கமிஷனர்கள் (DC) 19 அசிஸ்டென்ட் கமிஷனர்களை (AC) கொண்டு இயங்குகிறது
கோவை மாநகர காவல்துறை. அன்றைக்கு ஓருங்கிணைந்த கோவை மாவட்ட ஒரே சட்டம் ஒழுங்கு DSP ஐயா KKM அவர்கள் மட்டும்தான்.
கோவையில் சாராயம்,
கள்ளத்தனமான மது விற்பனை, கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம், அத்தனையையும் அடியோடு ஒழித்துக்கட்டிய பெருமைக்குரியவர்.
அன்று IG யாக இருந்த திரு வால்டர் தேவாரம் அவர்கள்...
வயதான கிழவன் போல் வேடமிட்டு தடியை ஊன்றிக்கொண்டு மாறுவேடத்தில் இரவு நேரத்தில் கோவையில் மதுபான கடைகள் இருந்த பல இடங்களுக்கும் சென்று
ஒரு கட்டிங் இருந்தா குடுங்கப்பா குடிக்கலைனா உயிரே போயிடும் என்று கேட்டாராம்.
அதற்கு கடைக்காரர்கள் இங்கே KKM எனும் DSP இருக்கிறார்.
அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகு கடையை திறந்து ஒரு சொட்டு கொடுத்தால் கூட
எங்களை தொலைத்து கட்டிவிடுவார் என்று தர மறுத்து விட்டார்களாம்.
தேவாரம் KKM அவர்களுக்கு போனை போட்டு நான் உங்களிடம் தோற்றுவிட்டேன் என்று சொல்லி KKM அவர்களை பாராட்டினாராம்.
சுப்ரீம் கோர்ட் நீதிபதி....
சொல்லியும் கேட்காதவர்,
எந்த அரசியல்வாதியின் சட்டதுக்கு புறம்பான உத்தரவுக்கும் கட்டுப்படாதவர்
என KKM அவர்களின் நேர்மையையும் பிரமிக்க வைக்கும் செயல்பாடுகளையும்...
சாதனைகளையும்....
ஓர் நாள் முகநூல் பதிவில் அடக்கிவிட முடியாது.
ஒரு வேளை காமராஜர் (K) ,
கக்கன் (K) போல
நேர்மையானவர் என்பதால்தான் இயற்கையிலேயே KK என்னும் இனிஷியல் அவர் பெயரோடு ஒட்டிக்கொண்டதோ என்னவோ ?
காமராஜரையும் கக்கனையும் நாம் நேரில் பார்த்தது இல்லை. ஆனால் அவர்கள் போல் வாழ்ந்த....
ஐயா KKM நாம் வாழும் சமகாலத்தில் தனது 85 வது வயதில் ஆரோக்கியமாக சாதாரண விவசாயியாக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்
நம்மோடு இருக்கிறார்
என்பது நமக்கு பெருமை.
நன்றி Kongan Voice
காரணம் பேட்டை இரா.சுப்புகவுண்டர்
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
🌷 🌷🌷 🌷
🌷 🌷🌷 🌷
