நான் ஏன் திரு நரேந்திரமோடியை ஆதரிக்கிறேன்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:58 AM | Best Blogger Tips
Image result for மோடி

1) 1993 வழக்கு முடிக்கப்பட்டு,அபு சலீம் சிறையில் இருக்கிறார்,
2) சசிகலா சிறையில் இருக்கிறார்,
3) ராம் ரஹீம் 2002 வழக்குக்காக சிறையில் இருக்கிறார்,
4) நிதி அமைச்சகத்துக்கு, மொத்த கருப்பு பணத்தின் அளவு தெரிந்துள்ளது. இதை செய்பவர்கள் யார் என்கிற விபரங்களை தெரிந்து வைத்துள்ளது,கண்காணிப்புகள் சிறப்பாக நடைப்பெற்று வருகின்றன‌,

5) தில்லியின் தெற்கு பிளாக் மற்றும் வடக்கு பிளாக் பகுதிகளில் லஞ்சம் ஒழிக்கப்பட்டு விட்டது,
6) ஆதார் இந்தியாவில் உள்ள அனைத்து குடிமகன்களையும் இனி வேவு பார்க்கும்,அவர்கள் எங்கிருந்தாலும் சரி,

7) 2 கோடிக்கு மேற்பட்ட போலி ரேஷன் கார்டுகள் அழிக்கப் பட்டுவிட்டன,

 😎 மொத்தம் ஒரு கோடிக்கு மேற்பட்டஎரிவாயு அடுப்புகள் சரண்டர் செய்யப்பட்டுள்ளன‌,
    
9) முத்தலாக் ஒழிக்கப்பட்டு விட்டது,பலதார மணத்தை ஒழிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,கூடிய விரைவில் பொது சிவில் சட்டத்திற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,

10 ) இந்திய அமெரிக்க நட்புறவு மிகச்சிறப்பாக உள்ளது,பாகிஸ்தான் தீவிரவாத நாடாக அறிவிக்கப் பட்டுள்ளது,
11) 45 லட்சம் மக்கள் வரி விதிப்புக்குள் வந்துள்ளனர்,இதில் பெரும்பாலோர் பல தலைமுறைகளுக்கு வரி செலுத்தாமல் இருந்தவர்கள்,

12) 'ஜி எஸ் டி' ஒற்றை வரி விதிப்பு முறையை அமல்படுத்தி உள்ளது,விற்பனை வரி ஒழிக்கப்பட்டு, சோதனை சாவடிகள் நீக்கப்பட்டு,சரக்கு வண்டிகள் பல நாட்கள் பிடித்து இலக்கை அடைவது ஒழிக்கப்பட்டுள்ளது,இதனால் பல கோடி லிட்டர் டீசல் சேமிக்கப்பட்டுள்ளது,முறைப்படுத்தப்படாத தொழில்கள் பலவும் வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு முறைப்படுத்தப் பட்டுள்ளன
 Image result for மோடி
13) காஷ்மீர் கொஞ்சம் கொஞ்சமாய் சரி செய்யப்பட்டு,தீவிரவாதிகளுக்கு அனுப்பப்படும் நிதிகள் ஒழிக்கப்பட்டு, பல முக்கிய தீவிரவாதிகள் அழிக்கப்பட்டு,ராணுவமும் பாரா மிலிட்டரியும் அதி நவீன யுக்திகளை கொண்டதாக மாறி வருகின்றது

14) மிஷநரிகள் மூலமாகவும், முல்லாக்கள் மூலமாகவும், மதமாற்றத்திற்காக அனுப்படும் ஹவாலா பரிவர்த்தனைகளின் குரல்வளை நசுக்கப்பட்டு வருகின்றது. அவர்கள் செய்வதறியாமல் திகைத்து வருகிறார்கள்

15) இந்தியாவின் 70 சதவீதத்திற்கு அதிகமான மாநிலங்கள் 'என்.டி.. வின் ஆட்சியில் உள்ளது,இதனால் வேகமான முடிவுகளை எடுக்க இயலும், சீரான கொள்கைகளை அமல் படுத்தஇயலும்

16) 30 லட்சத்திற்கு மேலான "மணி லாண்டரிங்" எனப்படும் பண மோசடியில் ஈடுபட்ட 'என் ஜி ' க்கள் பிடி பட்டுள்ளனர்

17) வெளியுறவுத் துறை அமைச்சகம், வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் பலரை,இஸ்லாமிய நாடுகளுடனானபேச்சு வார்த்தை நடத்தி, அவர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்

18) போர் வெறியில் இருந்த சீனா, ஒடுக்கப்பட்டு,ராஜதந்திரத்தால் 'செக் மேட்' செய்யப்பட்டு,அடக்கப்பட்டுள்ளது

19) மியான்மரில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவும் இஸ்லாமிய அகதிகள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்

20) நீட் தேர்வு நேர்மையை கொண்டு வந்துள்ளது,மருத்துவ சீட்டுக்காக பல கோடிகள் தரும் நிலை ஒழிக்கப்பட்டுள்ளது,சமச்சீரான, தரமான முறையில் தேர்வு நடைபெறுகிறது. இட ஒதுக்கீட்டை முறைகேடாக பயன்படுத்துவது ஒழிக்கப்பட்டுள்ளது,உண்மையான ஒடுக்கப்பட்ட,தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மருத்துவ சீட்டுகள் கிடைக்கப்பெறும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது,
21) கால்நடைகள் முறைகேடாக வெட்டப்படுவது ஒழிக்கப்பட்டு, முறைப்படுத்தப்பட்டுள்ளது,
22) நேஷனல் ஹெரால்டு, டி எல் எஃப்,சுனந்தா புஷ்கர் வழக்குகளின் தீர்ப்புகள் வர உள்ளன,எந்த கிரிமினல்களும் தப்பித்து விட இயலாது

23) இந்தியாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவம் அமெரிக்க, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலின் அதி நவீன ஆயுதங்களோடும், உள்நாட்டு தயாரிப்பு ஊக்கப்படுத்தப்பட்டும், உலகின் தலைசிறந்த ராணுவத்தில் ஒன்றாக மாறி வருகின்றது,
இன்னும் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்,மொத்தத்தில் தற்போது அனைத்து துறைகளிலும் உள்ள ஊழல்கள் சுத்தப்படுத்தப்பட்டு, கண்கானிப்புகள் பலப்படுத்தப்பட்டு, கட்டமைப்பு செம்மைப்படுத்தப் பட்டுள்ளது. இனி எதிர்காலத்தில் திட்டப்படியான செயல்திறனும் விநியோகமும் நடைபெறத் தொடங்கும்,
ஆனால் நீங்கள் கருப்பு சந்தையில் செயல்புரிபவராகவோ,ஹவாலா மோசடியில் இருப்பவராகவோ, நக்ஸலோ,பிரிவினைவாதியோ, கம்யூனிஸ்டோ,தேச துரோகியோ, ராணுவத்திற்கு எதிரானவரோ, சிறுபான்மையினர் என்கிற பெயரில் இந்துக்களை எதிர்ப்பவரோ,மேலே உள்ளவற்றை புறந்தள்ளி விட்டு மோடியை எதிர்க்க புதிய காரணம் எதையேனும் கண்டு பிடியுங்கள்,இல்லையென்றால் உங்களுக்கு தூக்கம் வருவதே கடினம்.

நன்றி :
Prabha Jayachandran
Prabha Karan S

அன்பினால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:47 AM | Best Blogger Tips



*தேன்கூடு*-ன் *தினம் ஒரு கதை..*

_பால்காரர் ஒருவர் தன் பசுவை இழுத்துக் கொண்டு ரோட்டோரமாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்._
Image result for சிறுவன் சிங்கம்Image result for சிறுவன் சிங்கம்
_அமைதியாக நடந்து வந்துகொண்டிருந்த_ *பசு திடீரென அடம்பிடித்து நடு ரோட்டில் அமர்ந்து கொண்டது.*
Image result for அன்பினால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை
_அகலம் குறைந்த அந்த ரோட்டில் சைக்கிள், பைக் தவிர வேறு எந்த வாகனங்களும் செல்லமுடியாதபடி பசு நடுரோட்டில் படுத்திருந்தது._

_பால்கார்ர் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த பசுவை இம்மியளவும் நகர்த்த முடியவில்லை._

*அந்த வழியாக ஒரு போலீஸ்காரர் வந்தார்..*
*_தன்னுடைய முரட்டு மீசையையும் கையிலிருந்த லத்தியையும் வைத்து மிரட்டிப் பார்த்தார்._*

_
பால்காரரோடு சேர்ந்து பசுவை இழுத்துப் பார்த்தார். பசு அசையவில்லை._

அப்போது *ஐஸ்கிரீம் விற்கும் நபர் ஒருவர் அந்த வழியாக வந்தார். குளிர்ச்சியாகப் பேசிப்பார்த்தார்.*

_*நகராமல் நின்ற பசுவை மூவரும் சேர்ந்து இழுத்தனர். முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது.*_

*மல்யுத்த போட்டியொன்றில் வெற்றி பெற்று திரும்பிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் அந்த வழியாக வந்தார்.*

_ஒரு பசுவை ரோட்டிலிருந்து நகர்த்த மூன்று பேர் செய்து கொண்டிருக்கும் முயற்சிகளைப் பார்த்து நகைத்தார்._

*மூன்று பேரையும் நகரச் சொல்லி விட்டு மல்யுத்த வீரர் தனித்து மாட்டை இழுத்துப் பார்த்தார்.*

பசு அசரவில்லை.

*அந்த வழியாக ஒரு சிறுவன் வந்தான்.*

_
அவன் ரோட்டருகே வளர்ந்து நின்ற புற்களை பறித்து கட்டாக கட்டி பசுவின் முகத்தருகே காட்டினான்._
*
பசு புல்லை சாப்பிட எழுந்தது.*

_*சிறுவன் புல்லை பசுவிடம் காட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். பசுவும் அவனோடு நகர்ந்தது.*_

_தங்கள் பலங்களை காட்டி பிரச்னைகளை சீர்செய்ய சிலர் நினைக்கிறார்கள்._

ஆனால் *சில எளிய நிகழ்வுகளில் பிரச்சனைகளை சீர் செய்ய முடியும் என்பதை அவர்கள் ஏனோ மறந்து விடுகிறார்கள்.*
👇
பிரச்சனைகளை நாம் அணுகும் விதத்தில் தான் எல்லாம் உள்ளது.

அன்பினால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை!

🙏நன்றி இணையம்