அன்பினால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை!

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:47 | Best Blogger Tips



*தேன்கூடு*-ன் *தினம் ஒரு கதை..*

_பால்காரர் ஒருவர் தன் பசுவை இழுத்துக் கொண்டு ரோட்டோரமாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்._
Image result for சிறுவன் சிங்கம்Image result for சிறுவன் சிங்கம்
_அமைதியாக நடந்து வந்துகொண்டிருந்த_ *பசு திடீரென அடம்பிடித்து நடு ரோட்டில் அமர்ந்து கொண்டது.*
Image result for அன்பினால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை
_அகலம் குறைந்த அந்த ரோட்டில் சைக்கிள், பைக் தவிர வேறு எந்த வாகனங்களும் செல்லமுடியாதபடி பசு நடுரோட்டில் படுத்திருந்தது._

_பால்கார்ர் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த பசுவை இம்மியளவும் நகர்த்த முடியவில்லை._

*அந்த வழியாக ஒரு போலீஸ்காரர் வந்தார்..*
*_தன்னுடைய முரட்டு மீசையையும் கையிலிருந்த லத்தியையும் வைத்து மிரட்டிப் பார்த்தார்._*

_
பால்காரரோடு சேர்ந்து பசுவை இழுத்துப் பார்த்தார். பசு அசையவில்லை._

அப்போது *ஐஸ்கிரீம் விற்கும் நபர் ஒருவர் அந்த வழியாக வந்தார். குளிர்ச்சியாகப் பேசிப்பார்த்தார்.*

_*நகராமல் நின்ற பசுவை மூவரும் சேர்ந்து இழுத்தனர். முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்தது.*_

*மல்யுத்த போட்டியொன்றில் வெற்றி பெற்று திரும்பிக் கொண்டிருந்த வீரர் ஒருவர் அந்த வழியாக வந்தார்.*

_ஒரு பசுவை ரோட்டிலிருந்து நகர்த்த மூன்று பேர் செய்து கொண்டிருக்கும் முயற்சிகளைப் பார்த்து நகைத்தார்._

*மூன்று பேரையும் நகரச் சொல்லி விட்டு மல்யுத்த வீரர் தனித்து மாட்டை இழுத்துப் பார்த்தார்.*

பசு அசரவில்லை.

*அந்த வழியாக ஒரு சிறுவன் வந்தான்.*

_
அவன் ரோட்டருகே வளர்ந்து நின்ற புற்களை பறித்து கட்டாக கட்டி பசுவின் முகத்தருகே காட்டினான்._
*
பசு புல்லை சாப்பிட எழுந்தது.*

_*சிறுவன் புல்லை பசுவிடம் காட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். பசுவும் அவனோடு நகர்ந்தது.*_

_தங்கள் பலங்களை காட்டி பிரச்னைகளை சீர்செய்ய சிலர் நினைக்கிறார்கள்._

ஆனால் *சில எளிய நிகழ்வுகளில் பிரச்சனைகளை சீர் செய்ய முடியும் என்பதை அவர்கள் ஏனோ மறந்து விடுகிறார்கள்.*
👇
பிரச்சனைகளை நாம் அணுகும் விதத்தில் தான் எல்லாம் உள்ளது.

அன்பினால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை!

🙏நன்றி இணையம்