முன்னா் காலத்தில் கல்யானம் என்றால் .......வருஷத்துக்கு

மணக்கால் அய்யம்பேட்டை | 10:45 AM | Best Blogger Tips

 May be an image of 8 people and temple

#முப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால
ஒரு கல்யாணத்துக்கு அழைப்பு வந்தா...
10 நாளுக்கு முன்னாடியே குடும்பத்தோடு போயிருவோம்.
😍
😍
❤கோலம் போட்ட தெருக்களும்.,
சீரியல் பல்பு தோரணமும்.,
புனல் ஸ்பீக்கரில் ஓடும்.
 
❤️நம்ம வீட்டை மறந்து உறவு வீட்டு வேலைகளை இழுத்து போட்டு செய்வோம்..
 
❤️பந்தி முதல் பந்தல் வரை சலிக்காம பாப்போம்...
 
❤️விடிய விடிய பாக்காத உறவுகளுடன் பேசி தூங்காம,கோலமும்,மருதாணியும் வெப்போம்...
 
❤️வீட்டில் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்டிருக்கும்.
 
♥பெண்கள் அமர கலர் கலரா பவானி ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கும்.
அதுல குழந்தைகளும் பெண்களும்
உறவுக் கதைகளை பேசிட்டிருப்பாங்க.
சின்ன சின்ன பசங்க எல்லாம் ஓடியாடி விளையாடி கொண்டிருப்பார்கள்.
 
♥பெரியவர்கள் தாம்பூலம் நிறைந்த வாயோடு,வீட்டுக்கதைகள் முதல் அகில உலக கதை வரை பேசிக்கொண்டு இருப்பார்கள்.
 
♥சாப்பாட்டு பந்தியில்
வெளியாட்களை பாக்கவே முடியாது.
உறவுகளே பரிமாறினார்கள்.
 
நிச்சயம் ஒரு சண்டையும் கோபித்து கொண்டு அடம்பிடிக்கும் நிகழ்வும் நடக்கும்.
 
❤️பொண்ணு மாப்பிள்ளை போனாலும்
நாம் ஊர் திரும்ப மனசு வராது.
மனசு நெறைய சந்தோசத்துடனும்,
கனத்துடனும் திருப்புவோம்.
இப்படியாக.. ஒரு விஷேஷத்துக்கு போயிட்டு வந்தோம்ன்னா அங்கு நடந்த நிகழ்வுகளின் நினைவு சுவடுகள் மறைய மாதங்களோ வருடங்களோ ஆகும்.
 
ஆனா இன்னிக்கு?????????????????????
இந்த பழக்கம் எங்க போச்சுங்க?....
யார் மாத்துனது? ஏன்?
 
❤️காலை 6 மணி முகூர்த்தத்துக்கு
7 மணிக்கு போனா போதும்,
பசங்களுக்கு ஸ்கூல் இருக்கு.
 
எனக்கு லீவ் இல்ல..
 
லோன் கட்டனும்...
 
அவருக்கு ஆபீஸ் மீட்டிங்.
 
யப்பா எத்தனை காரணங்கள்?!...
 
இதெல்லாம் போக...
 
எப்ப இந்த பாழாய்போன செல்போன் வந்துச்சோ...குறிப்பா இணைய வசதியோட ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் வந்துச்சோ...
 
 அப்போ மறைந்து போனது மனித நேயமும் சக மனித நட்பு பாராட்டலும்,உறவின் புரிதலும்..
 
♥இப்போல்லாம்.... பஸ்சுல ,ட்ரையின்ல , கல்யாண வீட்டுல எழவு வீட்டுல, பார்க்குல, பீச்சுல, தியேட்டர்லனன்னு.... இப்படி எங்கெங்கு போனாலும் குனிந்த தலை நிமிராம பக்கத்துல என்ன நடக்குதுன்னு கூட தெரியாம கைப்பேசியே கதின்னு கிடக்குறோம்.
 
❤️இன்றைய கல்யாண வீடுகளில் கூட 1நாள் கூட யாரும் தங்குவதில்லை.
 
இப்படி இருந்து நீங்க என்ன சாதிச்சீங்க?
உறவுகளை இழந்ததுதான் மிச்சம்.
 

நம் ராமன் நம்பியவர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை....!

மணக்கால் அய்யம்பேட்டை | 10:41 AM | Best Blogger Tips

 May be an image of temple

ஒரு உண்மைக் கதை..
 
இது நடந்த வருடம் 1982..
 
வேலை நிமித்தமாக இந்தியாவிலிருந்து ஒரு பெண்மணி அமெரிக்காவின் ப்ரூக்லின் மாகாணத்திற்குச் சென்றிருந்தாள்..
 
அன்றைய தினம் வேலை முடிந்த பிறகு,
தான் தங்கியிருந்த இடத்திற்கு வருவதற்காக அவள் ஒரு காரை புக் செய்ய முயற்சித்தாள்..
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவளுக்கு அன்று வண்டி எதுவும் கிடைக்கவில்லை..
 
இதற்குள் இருளும் கவியத் தொடங்கியது..
அவள் தங்கியிருந்த இடமோ அலுவலகத்திலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில் இருந்தது..
 அனுமனை மெச்சிய ராமன் | Rama Hanuman affection
போகும் பாதையோ சமூக விரோதிகளால் அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாகக்கூடிய பெயர்போன இடமாக இருந்தது..
 
அதை நினைக்கும் பொழுதே, இந்தப் பெண்ணிற்கு உடல் சில்லிட்டு ஒருமுறை சிலிர்த்து அடங்கியது..
 
இருந்தாலும், வேறு வழியில்லை...
 
தான் அறிந்த "ராம ரக்ஷா" ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டே அவள் நடக்க ஆரம்பித்தாள்..
 
அவளுக்கு அந்த ஸ்லோகத்தின் முழு அர்த்தமும் நன்றாகத் தெரிந்திருந்தது..
அதனால்,
 
ஸந்நத கவச கட்கீ
சாப பாண தரௌ யுவா
கச்சன் மனோரதோ அஸ்மாகம்
ராம: பாது ஸலக்ஷ்மண:
 
...என்கிற வரிகளையே திரும்பத் திரும்பப் பக்தி பூர்வமாகச் சொல்லிக் கொண்டே சென்றாள்..
இதனுடைய அர்த்தமாவது,
 
"வில், அம்பு, கத்தி போன்ற ஆயுதங்களோடு கவசத்தையும் அணிந்து கொண்டுள்ள ராம லக்ஷமணர்களாகிய யுவர்கள், எங்கள் (எனது) மனோரதம்போல் என்னைக் காக்கட்டும்.." என்பதாகும்..
 
இந்த வரிகளைச் சொல்லியவாறு வரும்பொழுது, இருளில் ஆங்காங்கே சில முரட்டு இளைஞர்களை இவள் பார்த்தாள்..
 ஆஞ்சநேயரை பற்றி தெரிந்து கொள்ள! | rama-bakthan-hunuman
ஒருபுறம் அச்சம் இருந்தாலும், அதையும் மீறி, தான் சொல்லுகின்ற ஸ்லோகத்தில் இவளுக்கு நம்பிக்கை இருந்தது..
 
ஆச்சர்யப்படும் விதமாக
அந்த இளைஞர்கள் இவளை ஒன்றும் செய்யாமல், இவளுக்கு ஒதுங்கி வழிவிட்டனர்..
 
எந்த அசம்பாவிதமும் நேராமல் இவள் தனது இருப்பிடத்தைச் சமீபித்த பொழுது, அவள் அங்கே தனக்குத் தெரிந்த ஒரு இளைஞனைக் காண நேர்ந்தது..
 
அவன் இவளைக் கண்டதும் நட்போடு புன்னகைத்தான்..
 
தான் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து சேர்ந்ததும், இவள் ராமரக்ஷா ஸ்லோகத்தின் மீதி பாகத்தைப் பக்தியுடன் சொல்லி முடித்து, ராமனுக்கு ஆத்மார்த்தமாக நன்றி செலுத்தினாள்..
அடுத்த நாள் காலையில், முதல்நாள் இரவில் இவளைப் பார்த்துப் புன்னகைத்த அந்த இளைஞன், இவளைப் பார்த்துக் கேட்டான்..
"என்ன விஷயம் மேடம்?..
 
நேற்று நீங்கள் இரண்டு
போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்போடு வந்தீர்கள்?.."
 
...இந்தக் கேள்வியைக் கேட்டதும், அவள் மிகவும் ஆச்சர்யம் அடைந்தாள்..
 
"என்ன சொல்கிறாய்?..
 
நான் நேற்று தனியாக அல்லவா வந்தேன்.."
இப்பொழுது இளைஞன் ஆணித்தரமாக அடித்துப் பேசினான்..
 
"இல்லை..உங்களோடு இரண்டு போலீஸ் துப்பாக்கி ஏந்தி வந்தார்களே..
நான்தான் பார்த்தேனே..."
 
...மேலே சொல்லப்பட்ட இந்த உண்மைக் கதை, ஒரு மராத்திய பத்திரிகையில் வெளியாகி இருந்தது..
 
அதை ராமபக்தர் ஒருவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க,
 
அடியேன் தங்களோடு பகிர்ந்து கொள்ள விழைந்து தமிழாக்கம் செய்திருக்கிறேன்..
ஒன்று மட்டும் ஸத்யம்....
 
நம்ராமன் நம்பியவர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை!
 
அரணாகச் சூழ்ந்திருந்து, அந்த அயோத்திராமன் இந்தக் கலியுகத்திலும் நம்மைக் காக்கிறான்..
காக்கிறான்....
 
காக்கிறான்!!
ஜெய் ஸ்ரீராம்!
ஜெய் சீதா ராம்!!

 

''''அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி''''

மணக்கால் அய்யம்பேட்டை | 10:33 AM | Best Blogger Tips


தந்தை ஒருவர் ஒரு பெரிய ஆட்டை வெட்டி நெருப்பினில் வாட்டி, தன் மகனிடம் சொன்னார்.
"மகனே, நம்முடன் சாப்பிட என் நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைக்கவும் ... 
 
எல்லோரும் சாப்பிடுவோம் என்றார்.
அவருடைய மகன் தெருவுக்கு வந்து கத்த ஆரம்பித்தான். 
 
"தயவுசெய்து எங்கள் அப்பாவின் வீட்டில் எரியும் தீயை அணைக்க எங்களுக்கு உதவுங்கள்!".
 
சில நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு சில மக்கள் வெளியே வந்தனர், மீதமுள்ளவர்கள் உதவிக்கான கூக்குரலைக் கேட்காதது போல் செயல்பட்டனர்.
 
வந்தவர்கள் நள்ளிரவு வரை நன்றாக சாப்பிட்டு கொண்டாட்டமாக கழித்தனர்.
 
திகைத்த தந்தை! தன் மகனிடம் திரும்பி, அவனிடம் கேட்டார்.
 
"வந்த மக்களை எனக்கு தெரியாது, இதுவரை அவர்களைப் பார்த்ததில்லை, எனவே என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எங்கே?".
 
மகன் சொன்னான்,
 
"தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்தவர்கள் நம் வீட்டில் எரிவதாக நினைத்த தீயை அணைப்பதர்க்கே அன்றி, விருந்து உண்ண அல்ல. இவர்களே நம்முடைய தாராள மனப்பான்மைக்கும் விருந்தோம்பலுக்கும் தகுதியானவர்கள். "
 
நீங்கள், வாழ்க்கையில் துன்பப்படுகிறீர்கள் என்று தெரிந்தும்,
 
உங்களுக்கு உதவாதவர்கள், ஒருநாள் நீங்கள் வெற்றி அடையும் போது அந்த மகிழ்ச்சியில் பங்கு கொள்ள எப்படி தகுதியானவர்களாக இருக்கக்கூடும்!?
 
'அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி'

 

பிரசாதத்தை கால்களால் மிதிக்கக்கூடாது

மணக்கால் அய்யம்பேட்டை | 10:22 AM | Best Blogger Tips

 May be an image of cake and text

பிரசாதத்தை கால்களால் மிதிக்கக்கூடாது
( நரசிம்ம புராணம், இருபத்தி எட்டாவது அத்தியாயம் )
 
🍁🍁🍁🍁🍁🍁🍁
நரசிம்ம புராணத்தின் இருபத்தி எட்டாவது அத்தியாயத்தில் ஸ்ரீல சூத கோஸ்வாமி பரத்வாஜ முனிவரிடம், நாரத மகரிஷி மற்றும் ஸந்தனு மன்னருக்கிடையே நடைபெற்ற உரையாடலை கீழ்க்கண்டவாறு விளக்குகின்றார்: 
 
ஸந்தனு மஹாராஜா பகவான் நரசிம்மதேவரின் பக்தராக இருந்தார். மேலும் நாரத முனிவரின் வழிகாட்டுதலின்படி, ஸந்தனு மன்னர் பகவானை வழிபட்டுவந்தார். ஒருமுறை கவனக்குறைவாக நிர்மால்யத்தை, அதாவது நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலர்களை கால்களால் மிதித்துவிட்டார். இத்தகைய குற்றத்தின் பலனாக, அவர் அக்கணமே தனது பலத்தை இழந்து, தேவர்களால் தனக்கு வழங்கப்பட்டிருந்த ரதத்தில் ஏற முடியாமல் தடுமாறினார். இதனைக் கண்டு அதிசயித்த மன்னர், “எதனால் நான் எனது சக்தியை இழந்து, நகரவும் முடியாமல் இருக்கின்றேன்?” என்று எண்ணினார். 
 
மன்னர் கவலையுடன் இருப்பதைக் கண்ட நாரதர், “என்னவாயிற்று அரசரே?” என்று வினவினார். 
 
அதற்கு ஸந்தனு, “நாரதரே, என்ன காரணத்தினால் நான் எனது பலம் அனைத்தையும் இழந்து நகரவும் முடியாமல் தவிக்கின்றேன் என்று தெரியவில்லை” என்றார்.
இதனைக் கேட்ட நாரதர், இதற்கான காரணத்தை ஆராய்ந்தார். அதன்பின்னர் அவர் தன்முன்னர் பணிவுடன் நின்ற மன்னரை நோக்கி, “அரசரே, இது நிச்சயமாக தாங்கள் நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலர்களை, நிர்மால்யத்தை மிதித்த குற்றத்தின் விளைவே. அதனால் தான் தங்களால் நகரவும் முடியவில்லை. இது குறித்து புராதன வரலாறு ஒன்றை நான் கூறப்போவதை கவனமாக கேளுங்கள்: 
 
ஒருமுறை, கங்கைக்கும் யமுனைக்கும் நடுவில் அமைந்துள்ள அந்தர்வேதி என்ற இடத்தில் ரவி என்கின்ற புத்திசாலியான பூக்காரர் ஒருவர் இருந்தார். அவர் மிகப்பெரிய துளசி தோட்டம் ஒன்றை அமைத்து அதனை “விருந்தாவனம்” என்றழைத்தார். அந்த தோட்டத்தில், மல்லிகை, முல்லை, ஜாதிப்பூ மற்றும் பகுள எனப்படும் பல்வேறு வகையான மலர் செடிகளையும் வளர்த்து வந்தார். யாரும் உள்ளே நுழையாதபடி தோட்டத்தை சுற்றி மிக உயரமான மதில் சுவற்றை எழுப்பியிருந்தார், 
தோட்டத்திற்குள்ளேயே அவருடைய வீடும் இருந்தது. தோட்டத்திற்குள் யாரும் நுழையாத முடியாதபடி முன்பகுதியில் வீட்டை கட்டியிருந்தார். பூக்காரர் அந்த தோட்டத்தை மிகவுமே நேசித்தார். தோட்டம் முழுவதும் மலர்களால் நிறைந்திருந்ததால், அந்த பகுதி முழுவதுமே நறுமணத்தால் நிறைந்திருந்தது. அந்த பூக்காரர் தினந்தோறும் தனது மனைவியுடன் இணைந்து மலர்களைப் பறித்து மாலைகள் தொடுப்பார். தொடுத்துவைத்த நிறைய மாலைகளில் சிலவற்றை நரசிம்மருக்கு வழங்குவார், சிலவற்றை பிராமணர்களுக்கு பரிசாக வழங்குவார், மீதி மாலைகளை விற்று, தனது குடும்பத்தை பராமரித்து வந்தார். 
 
“சிறிது காலத்திற்கு பிறகு, இந்திரனின் மகனான ஜயந்தன், ரவியினுடைய அழகான தோட்டத்தைக் கண்டார். அன்றையே இரவே ஜயந்தன் ஸ்வர்க்க லோகத்து மங்கைகளுடன் ரவியினுடைய தோட்டத்திற்கு வந்தார். நறுமண மலர்களினால் கவரப்பட்டு, அவைகள் அனைத்தையும் தனது பெண் தோழிகளுக்கு வழங்குவதற்காக பறிக்கத் தொடங்கினார். நாளடைவில் செடிகளில் மலர்களே இல்லாமல் இருப்பதைக் கண்டு ரவி குழப்பம் அடைந்தார். “எனது வீட்டிற்குள் நுழையாமல் தோட்டத்திற்குள் நுழையவே முடியாது. தாண்டிவரமுடியாதபடி தோட்டத்தின் மதில் சுவர்களும் மிக உயரமாக உள்ளன. 
 
நிச்சயமாக மனிதர்களால் இரவு நேரத்தில் இவ்வளவு மலர்களை பறிக்கவேமுடியாது, எனவே இதனை மறைந்திருந்து கண்காணிக்க வேண்டும்” என்று முடிவு செய்தார். 
 
எனவே அந்த பூக்காரர் தோட்டத்திற்குள் யாரும் காணாதவாறு ஒளிந்துகொண்டார். ஜயந்தனும் எப்போதும் போலவே தோட்டத்திற்குள் நுழைந்து மலர்கள் அனைத்தையும் பறித்தார். பூக்காரர் ஜயந்தனைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவரால் அவரைத் தடுக்க முடியவில்லை. 
 
மனவேதனையுடன் அவர் தோட்டத்திலேயே உறங்கிவிட்டார். அப்போது அவருடைய கனவில் நரசிம்மதேவர் தோன்றி, “மகனே கவலைப்படாதே, உடனடியாக எனது நிர்மால்ய மலர்களைக் பெற்று, அதனை தோட்டம் முழுவதும் போட்டு வைப்பாயாக. இந்திரனின் மகனை இங்கு வரவிடாமல் தடுப்பதற்கு இதைத்தவிர வேறு வழியில்லை” என்றார். 
 
கனவிலிருந்து விழித்தெழுந்த ரவி, உடனடியாக நரசிம்மதேவர் கூறியபடி நிர்மால்ய மலர்களை பெற்றுவந்து, தோட்டம் முழுவதும் போட்டுவைத்தார். 
 
“அன்று இரவும் கண்களுக்கு புலப்படாத தனது இரதத்தில் வந்திறங்கிய ஜயந்தன் மலர்களைப் பறிப்பதில் மும்முரமாக இருந்தார். அப்போது கவனக்குறைவாக, அந்த தோட்டத்தில் போட்டு வைக்கப்பட்டிருந்த பகவான் நரசிம்மரின் நிர்மால்ய பிரஸாதத்தை கால்களால் மிதித்துவிட்டார். உடனடியாக தனது பலத்தை இழந்த ஜயந்தன் ரதத்தில் ஏறமுடியாமல் தடுமாறினார். இதனைக் கண்ட ரதசாரதி, “நரசிம்ம தேவரின் நிர்மால்ய மலர்களை கால்களால் மிதித்த காரணத்தினால், தாங்கள் இப்போது ரதத்தில் ஏறுவதற்கான தகுதியை இழந்துவிட்டீர்கள். எனவே நான் ஸ்வர்க்க லோகத்திற்கு திரும்பிச் செல்கிறேன்.
 
தாங்கள் இனி பூமியில் தா
ன் இருந்தாக வேண்டும். எனவே ரதத்தில் ஏறுவதற்கு முயற்சிக்க வேண்டாம்” என்றார்.
அதற்கு இந்திரனின் மகன் சாரதியிடம், “சாரதியே, ஸ்வர்க்க லோகத்திற்கு திரும்பிச் செல்லும்முன்னர், நான் இழைத்துள்ள குற்றங்களிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறையை கூறிவிட்டு, அதன்பின்னர் எனது தந்தையின் பேரரசிற்கு திரும்பிச் செல்லுங்கள்” என்றார் 
 
சாரதியும், “குருக்ஷேத்ர புண்ணிய பூமியில், பெரும் முனிவரான பரசுராமர் பன்னிரெண்டு வருடங்களுக்கு தொடரும் யாகத்தை மேற்கொண்டுள்ளார். நீ அங்கு சென்று, தினந்தோறும் பிராமணர்களின் உச்சிஷ்டத்தை சுத்தப்படுப்பத்தும் சேவையை மேற்கொள்வாயாக. யாக அரங்கினை சுத்தப்படுத்துவதின் மூலமாக உனது குற்றங்களிலிருந்து விடுபடலாம்” என்று அறிவுறுத்தினார். அதன்பிறகு அந்த சாரதி தேவ லோகத்திற்கு கிளம்பிவிட்டார்.
சாரதியின் அறிவுரையின்படி இந்திரனின் மகன், சரஸ்வதி நதிக்கரையில் அமைந்துள்ள குருக்ஷேத்ரத்திற்கு சென்றார். அங்கே அவர் பிராமணர்களின் உச்சிஷ்டத்தை சுத்தப்படுத்துவதின் மூலமாக பரசுராமரின் யாக அரங்கை சுத்தப்படுத்தினார். பன்னிரெண்டு வருட யாகம் நிறைவடைந்தபின்னர், ஜயந்ததின் நடவடிக்கையால் மகிழ்ந்த பிராமணர்கள் அவரிடம், “மேன்மைக்குரியவரே, நாள் தவறாமல் தாங்கள் எங்களுடைய எச்சங்களை சுத்தப்படுத்தி, யாக அரங்கை சுத்தமாக வைத்திருந்தீர்கள். இவ்வளவு காலமும் தாங்கள் எதுவுமே சாப்பிடவில்லை. இதுகுறித்து எங்களுக்கு கவலையாக இருக்கிறது. தாங்கள் யார் என்பதை கூறுங்கள்” என்றனர். 
 
பிராமணர்களால் கேட்டுக்கொள்ளப்பட்ட ஜயந்தன் நடந்தவைகளை விளக்கிவிட்டு, தனது தந்தையின் லோகத்தை சென்றடைந்தார்.
இதனையடுத்து நாரதமுனிவர் அரசரிடம், “தாங்களும் பரசுராமரின் பன்னிரெண்டு வருட யாகத்தில் பிராமணர்களின் உச்சிஷ்டங்களை சுத்தப்படுத்தி யாக அரங்கை சுத்தப்படுத்தும் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். ஒருவருடைய பாவங்களை போக்கிக் கொள்வதற்கு பிராமணர்களுக்கான சேவையைத் தவிர வேறுஎதுவும் உயர்ந்தது இல்லை. அரசரே, எனது வழிநடத்துலைப் பின்பற்றினால் மிக எளிதாக தேவர்களால் வழங்கப்பட்ட ரதத்தை திரும்பப் பெறலாம்.
 
 இனிமேல், நரசிம்மருக்கு அல்லது விக்ரஹங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலர்களை காலால் மிதித்துவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள்” என்றார்.
நாரதமுனிவரின் அறிவுரையின்படி ஸந்தனு மன்னர் பன்னிரெண்டு வருடங்கள் பிராமணர்களின் உச்சிஷ்டங்களை சுத்தப்படுத்தும் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதன்மூலமாக அவர் ரதத்தில் ஏறுவதற்கு தான் இழந்திருந்த சக்திகளை மீண்டும் திரும்பப்பெற்றார்.
 
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
(ஜெகந்நாத புரியின் உள்ளூர் வழக்கப்படி, ஜெகந்நாதரின் மஹாபிரஸாத்தை கால்களினால் மிதித்து குற்றமிழைப்பவர், நாள்பட்ட நோயான யானைக்கால் வியாதியால் அவதிப்படுவர் என்று கூறப்படுகிறது.” )
ஒருவன் திருமூர்த்ததிற்கு அர்ப்பணிக்கப்பட்ட மலர்களைத் தாண்டவோ, கால்களினால் மிதிக்கவோ கூடாது என்று ஸ்ரீல பிரபுபாதர் பக்தி ரஸாம்ருத சிந்து என்னும் நூலில் எட்டாம் அத்யாயத்திற்கான பொருளுரையில் விளக்குகிறார் .
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
இது ஸனாதன கோஸ்வாமியாலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது:
க்ஞேயா: பரே ‘பி பஹவோ ‘பராதா: ஸத்-அஸம்மதை:
ஆசரை: ஷாஸ்த்ர-விஹித-நிஷித்தாதி-க்ராமதிவிஹி
தத்ராபி ஸர்வதா-க்ருஷ்ண நிர்மால்யம் து ந லங்கயேத்
அத்துடன் எண்ணற்ற விதிமுறைகள் இருப்பதாக சாஸ்திரங்களும் வைஷ்ணவர்களும் விவரிக்கின்றனர். உதாரணமாக, கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலர்களைத் தாண்டவோ, கால்களினால் மிதிக்கவோ கூடாது.
( ஹரி-பக்தி-விலாஸம் 8.470 )
ஹரே கிருஷ்ண!.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே