ஒரு உண்மைக் கதை..
இது நடந்த வருடம் 1982..
வேலை நிமித்தமாக இந்தியாவிலிருந்து ஒரு பெண்மணி அமெரிக்காவின் ப்ரூக்லின் மாகாணத்திற்குச் சென்றிருந்தாள்..
அன்றைய தினம் வேலை முடிந்த பிறகு,
தான் தங்கியிருந்த இடத்திற்கு வருவதற்காக அவள் ஒரு காரை புக் செய்ய முயற்சித்தாள்..
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவளுக்கு அன்று வண்டி எதுவும் கிடைக்கவில்லை..
இதற்குள் இருளும் கவியத் தொடங்கியது..
அவள் தங்கியிருந்த இடமோ அலுவலகத்திலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில் இருந்தது..
போகும் பாதையோ சமூக விரோதிகளால் அடிக்கடி தாக்குதலுக்கு ஆளாகக்கூடிய பெயர்போன இடமாக இருந்தது..
அதை நினைக்கும் பொழுதே, இந்தப் பெண்ணிற்கு உடல் சில்லிட்டு ஒருமுறை சிலிர்த்து அடங்கியது..
இருந்தாலும், வேறு வழியில்லை...
தான் அறிந்த "ராம ரக்ஷா" ஸ்லோகத்தைச் சொல்லிக் கொண்டே அவள் நடக்க ஆரம்பித்தாள்..
அவளுக்கு அந்த ஸ்லோகத்தின் முழு அர்த்தமும் நன்றாகத் தெரிந்திருந்தது..
அதனால்,
ஸந்நத கவச கட்கீ
சாப பாண தரௌ யுவா
கச்சன் மனோரதோ அஸ்மாகம்
ராம: பாது ஸலக்ஷ்மண:
...என்கிற வரிகளையே திரும்பத் திரும்பப் பக்தி பூர்வமாகச் சொல்லிக் கொண்டே சென்றாள்..
இதனுடைய அர்த்தமாவது,
"வில், அம்பு, கத்தி போன்ற ஆயுதங்களோடு கவசத்தையும் அணிந்து கொண்டுள்ள ராம லக்ஷமணர்களாகிய யுவர்கள், எங்கள் (எனது) மனோரதம்போல் என்னைக் காக்கட்டும்.." என்பதாகும்..
இந்த வரிகளைச் சொல்லியவாறு வரும்பொழுது, இருளில் ஆங்காங்கே சில முரட்டு இளைஞர்களை இவள் பார்த்தாள்..
ஒருபுறம் அச்சம் இருந்தாலும், அதையும் மீறி, தான் சொல்லுகின்ற ஸ்லோகத்தில் இவளுக்கு நம்பிக்கை இருந்தது..
ஆச்சர்யப்படும் விதமாக
அந்த இளைஞர்கள் இவளை ஒன்றும் செய்யாமல், இவளுக்கு ஒதுங்கி வழிவிட்டனர்..
எந்த அசம்பாவிதமும் நேராமல் இவள் தனது இருப்பிடத்தைச் சமீபித்த பொழுது, அவள் அங்கே தனக்குத் தெரிந்த ஒரு இளைஞனைக் காண நேர்ந்தது..
அவன் இவளைக் கண்டதும் நட்போடு புன்னகைத்தான்..
தான் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து சேர்ந்ததும், இவள் ராமரக்ஷா ஸ்லோகத்தின் மீதி பாகத்தைப் பக்தியுடன் சொல்லி முடித்து, ராமனுக்கு ஆத்மார்த்தமாக நன்றி செலுத்தினாள்..
அடுத்த நாள் காலையில், முதல்நாள் இரவில் இவளைப் பார்த்துப் புன்னகைத்த அந்த இளைஞன், இவளைப் பார்த்துக் கேட்டான்..
"என்ன விஷயம் மேடம்?..
நேற்று நீங்கள் இரண்டு
போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்போடு வந்தீர்கள்?.."
...இந்தக் கேள்வியைக் கேட்டதும், அவள் மிகவும் ஆச்சர்யம் அடைந்தாள்..
"என்ன சொல்கிறாய்?..
நான் நேற்று தனியாக அல்லவா வந்தேன்.."
இப்பொழுது இளைஞன் ஆணித்தரமாக அடித்துப் பேசினான்..
"இல்லை..உங்களோடு இரண்டு போலீஸ் துப்பாக்கி ஏந்தி வந்தார்களே..
நான்தான் பார்த்தேனே..."
...மேலே சொல்லப்பட்ட இந்த உண்மைக் கதை, ஒரு மராத்திய பத்திரிகையில் வெளியாகி இருந்தது..
அதை ராமபக்தர் ஒருவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க,
அடியேன் தங்களோடு பகிர்ந்து கொள்ள விழைந்து தமிழாக்கம் செய்திருக்கிறேன்..
ஒன்று மட்டும் ஸத்யம்....
நம்ராமன் நம்பியவர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை!
அரணாகச் சூழ்ந்திருந்து, அந்த அயோத்திராமன் இந்தக் கலியுகத்திலும் நம்மைக் காக்கிறான்..
காக்கிறான்....
காக்கிறான்!!