சாளக்கிராமம்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:59 PM | Best Blogger Tips

 

நைமிசாரண்யத்தில் இறைவன் காடாகவும், புஷ்கரத்தில் நீராகவும், பத்ரிநாத்தில் மலையாகவும், ஸ்ரீரங்கத்தில் அர்ச்சாவிக்ரகமாகவும், முக்திநாத்தில் சாளக்கிரமமாகவும் இருப்பதாக ஐதீகம்.

 சாளக்கிராமம் | Hindu Religious Extracts(HRE)

இந்த சாளக்கிரமங்களை ஸ்ரீமந் நாராயணனாக வழிபடு கின்றனர். வீட்டில் இதை வைத்துப் பூசை செய்வது  நல்லது.

 

சாளக்கிரமம் வைத்து வழிபடுபவர்கள் வீட்டினுள் நிரந்தரமான செல்வம் கொழிக்கும்.

 

ஒரு சங்கில் துளசி இலைகளை இட்டு அதனுள்   நீர் ஊற்றி அந்த சங்கினால் சாளக்கிரமத்திற்கு அபிஷேகம் செய்வது நல்ல பலன்களைத் தரும்  என்பார்கள்.

 சாளக்கிராமம் - தமிழ் விக்கிப்பீடியா

நேபாளத்தில் பாயும் காளி-கண்டகி ஆற்றில் கிடைக்கும் சாளக்கிராமத்தை வைணவ சமயத்தினர் திருமாலின் அம்சமாக கருதி பூஜையில் வைத்து வழிபடுவர்.

 

முக்திநாத் பகுதியில் பாயும் கண்டகி ஆற்றாங்கரையில் காணப்படும் சாளக்கிராமக் கற்கள் இயற்கையாக வட்ட வடிவத்தில் அல்லது சுருள் வட்ட வடிவில் காளி-கண்டகி ஆற்றாங்கரையில் கிடைக்கிறது. இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன.

 

முற்றிலும் சிவப்பு நிற சாளக்கிராமம்நரசிம்மக்கல்-இதை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும். 

 

சக்கர வடிவத்தில், கறுப்பாக இருந்தால் ஐஸ்வர்யம், மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம் பெருகும். குடும்பம் சிறக்கும்.

 

முன்பகுதியில் பாம்பு போன்ற தோற்றமோ, பொன்னிறத்தில் ரேகைகள் இருந்தாலோ நலங்கள் வந்து சேரும். இக்கல்லைவாமதேவன் கல்என்பர்.

 

இடப்புறம் பச்சை நிறத்தில் இருக்கும் கல் பாவத்தைப் போக்கக் கூடியது.

 

வட்ட வடிவமான சாளக்கிராமம் செல்வம் தரும்.

 

குடை வடிவ கல்லை வணங்கினால் நாடாளும் பாக்கியம் கிடைக்கும்.

 

சாளக்கிராமத்தில் சக்கரம் போன்ற அமைப்பு அல்லது பாம்புகளின் தலையுடன், பல்வேறு நிறங்களில் காணப்பட்டால் அதுலட்சுமி காந்தம்எனப்படுகிறது. இக்கல்லைப் பூஜை செய்து வணங்குபவர்களுக்கு வேண்டும் வரமும், செல்வமும் கிடைக்கும்.

 

சாளக்கிராமம் உடைந்ததாக இருப்பினும் அதனைப் பயன்படுத்தலாம். இதனால் எவ்விதக் கெடுதலுமில்லை.

 

நீல நிறம்செல்வம், சுகம் (ஸ்ரீ கிருஷ்ண ஷேத்திரம்)

 

பச்சைபலம் , தைரியம் (ஸ்ரீ நாரயண ஷேத்திரம்)

 

வெண்மைஞானம் , பக்தி , மோட்சம் (வாசுதேவ ஷேத்திரம்)

 

கருப்புபுகழ் , பெருமை (விஷ்ணு ஷேத்திரம்)

 

மஞ்சள் நிறம்வாமன ஷேத்திரம்

 

பசும்பொன் () மஞ்சள் கலந்த சிகப்பு நிறம்ஸ்ரீ நரசிம்ம ஷேத்திரம்

 

சப்பையான வடிவில் உள்ள சாளக்கிராமம் துன்பம் தரும்.

 

சாளக்கிராமம் இடப்புறம் கருப்பு, வலப்புறம் பழுப்பு நிறத்துடன் இருந்தால் வறுமை வரும்.

 

புகை நிறம் சாளக்கிராமம் துக்கம் , தரித்திரம்

 

சாளக்கிராமத்தில் தெய்வீக சக்தி இருப்பது மட்டுமின்றி , அவற்றில் 14 உலோகங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சாளக்கிராமங்களை பெரியவர்களிடமிருந்தும் , சாஸ்த்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்தும் வாங்குதல் நன்று .

 

சாளக்கிராமத்தை பால் () அரிசியின் மீது வைத்திருந்து பின்னர் எடுத்துப் பார்த்தால் ,அதன் எடை முன்பு இருந்ததை விடக் கூடுதலாக இருக்கும்-துண்டிக்கப்பட்டிருந்தாலும் () விரிந்து போனதாய் இருந்தாலும்-சாளக்கிராமம் எங்கு இருக்கிறதோ அங்கு தோசமில்லை.

 

லட்சுமி நாராயண சாளக்கிராமம், லட்சுமி ஜனார்த்தன சாளக்கிராமம், ரகுநாத சாளக்கிராமம், வாமன சாளக்கிராமம், ஸ்ரீதர சாளக்கிராமம், தாமோதர சாளக்கிராமம், ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம், ரணராக சாளக்கிராமம், மதுசூதன சாளக்கிராமம், சுதர்சன சாளக்கிராமம்... இப்படி 68 வகையான சாளக்கிராமங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

 

சாளக்கிராமம் வைத்து வழிபடுகிற வீட்டில் சகல இறைசக்திகளும் அருள்செய்வதாக ஒரு நம்பிக்கை. சாளக்கிராமத்தை இருமுறை வழிபட வேண்டும். சாளக்கிராமம் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டியது. அழகுக்காக ஷோ கேஸில் வைக்கக்கூடியது அல்ல. பூஜை அறையில் வைத்து தினமும் பாலாபிஷேகம், ஜலாபிஷேகம் செய்து வழிபட வேண்டும். வலம்புரி சங்கை போல் மிகவும் அரிய பலன்களை தரக்கூடியது இந்த சாளக்கிராமம்.

 

பசூர் ஜோதிடர் சு ஜெகன் நாதன்


🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 May be an image of 1 person, smiling, tree and grass  🌷 🌷🌷 🌷