பல்லாயிரம் ஆண்டுகள் முன்னாடி ......

மணக்கால் அய்யம்பேட்டை | 3:09 PM | Best Blogger Tips

போகர் சித்தர் வரலாறு | bogar siddhar history 

#இயேசு கிருஸ்து பிறந்ததாக சொல்லப்பட்ட ஆண்டைவிட பல்லாயிரம் ஆண்டுகள் முன்னாடி பிறந்தவர் #போகர் என்ற மாபெரும் சித்தர்.
இவரின் குறிப்புகளை வைத்து தான் திருடி வெள்ளைக்காரன் அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்திருப்பான் என தோன்றுகிறது.
  Murugan2Agathiar
இவர் காளாங்கிநாதர் என்ற சித்தரின் சீடரும் 18 சித்தர்களில் ஒருவரும் ஆவார். இவர் பழனியில் இருக்கும் நவபாஷான சிலையை செய்தவரும் இவர்தான். இவரை பற்றிய தகவல் மிக ஆச்சரியத்தை கொடுக்கும். இவரை பற்றிய ஒரு தகவலை அவர் இயற்றிய சப்தகாண்டம் என்ற நுலில் அவர் கூறிப்பிட்ட தகவலைப் படித்து ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்று விட்டேன்.
 SIVAPITHAN
இப்பேர்பட்ட தமிழனை உலகம் முழுவுதும் தெரியபடுத்த வேண்டும் என்பதே என் நோக்கம். அவர் இயற்றிய அந்த நூலில் 1799, 1800 ஆம் பாடலில் விமான தொழில்நுட்பத்தை பற்றிய குறிப்பையும் அதை எப்படி செய்யவேண்டும் என்றும் அதை வைத்து அவர் பறந்ததையும் தெள்ளதெளிவாக கூறிப்பிட்டிருக்கிறார்.
 சித்தர்கள் வரலாறு - *சித்தர்கள் சமாதியான இடம்.* *அவர்கள் வாழ்ந்த நாட்கள்.*  1. பதஞ்சலி சித்தர் - 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் ...
அது மட்டும் அல்ல 1926 ஆம் பாடலில் நீராவி இஞ்சின்(steam engine) வைத்து கப்பலை எப்படி இயக்குவது என்றும் கப்பலின் டிசைனிங்கையும் குறிப்பிட்டிருக்கிறா­ர். இதை 5000 ஆண்டுகள் முன்பே தமிழன் கண்டுபிடித்து விட்டான் என்பது நமக்கெல்லாம் பெருமை. ஆனால் அப்பேர்பட்ட தமிழனை நாம் மறந்து விட்டோம் என்பது வேதனையளிக்கிறது.
 
தமிழனின் புகழ் உலகம் முழுவதும் பரவவேண்டும் உலகத்தின் முதல் இனமும் முதல்மொழியும் முதல் அறிவியல் விஞ்சானியும் முதல் மருந்துவனும் முதல் ஆன்மீகவாதியும் தமிழனே. இப்படி தமிழனின்
புகழை மறந்து நாத்திகம் பேசியும் மதமாற்றம் செய்தும் தமிழனின் பெருமை மறைக்கபட்டுவிட்டது. }
 
போகர்! சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் இது. மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் _ என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான்.
 
அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார். சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து 'கடவுளைப் போல உதவினீர்கள்... என் வரையில் நீங்களே கடவுள்' என்று சொல்வோம், அல்லவா...!
 SIVAPITHAN
அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும். உண்மையில், முதல் சித்தன் அந்த ஆதிசிவன்தான். அவனே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றான். போகரைப்பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள், இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள்.
 
 
ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து, தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள். ஆனால் இதில், போகர் பெரிதும் வேறுபட்டே தெரிகிறார். பல சித்தர்கள் போல், இவரும் ஒரு சிவத் தொண்டரே. அதே சமயம், அன்னை உமையை தியானித்து அவளருளையும் பெற்றவர்.அவளது உபதேசம் கேட்டு பழனி மலைக்குச் சென்று தவம் செய்து முருகனை தண்டாயுத பாணியாகவே தரிசனம் செய்தவர். உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக, தான் தரிசித்த தண்டாயுபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர்.
 
பாஷாணங்களைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதம்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். அவைகளை உரிய முறையில் சேர்ந்துப் பிசைந்தால்தான் உறுதியான, ஒரு பொதுவான பாஷாணம் உருவாகும். இதை நயனங்களால் பார்த்தாலேகூட போதும். அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர்வீச்சு, கண்வழியாக உடம்பின் உள்ளும், உடம்பின் புறத்திலும் படிந்து, நலம் ஏற்படும். இதன்மேல் பட்டு வழியும் பொருள் எதுவாயினும் அதுவும் மருத்துவ குணம் கொண்டு தீராத வியாதியை எல்லாம் தீர்த்து வைக்கும்.
 
உயர்வான பாஷாணங்கள் ஒன்பதை தேர்வு செய்து அதைக் கொண்டு போகர் செய்ததுதான் பழனிமுருகனின் மூலத் திரு உருவம். அவ்வாறு செய்ததோடல்லாமல், அவ்வுருவத்திற்கு ஏற்ற வழிபாட்டு முறையை ஒரு புதிய சித்தாகமமாகவே உருவாக்கி அதையும் நடைமுறைப்படுத்தியவர் போகர்.
 
மனிதப் பிறப்பானது கோள்களால் நிர்வகிக்கப்படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வுசெய்து அதிலிருந்து தண்டாயுத பாணியை செய்து, கோள்களை ஓர் உருவுக்குள் அடக்கிப் பூட்டியவர் போகர் என்றும் கூறுவர்.
 
தண்டாயுத பாணியை எவர் வந்து தரிசித்து வணங்கினாலும் நவ கோள்களையும் ஒருசேர வணங்கிய ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு உண்டாவது, இதனுள் அடங்கிக் கிடக்கும் இன்னொரு நுட்பம்.
 
இப்படி பழனியம்பதியில் முருக வழிபாட்டிற்கு களம் அமைத்த போகரின் வாழ்க்கையும் ஒரு வகையில் நவரசங்களால் ஆனதுதான். பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி வைகாசி மாதத்து பரணி நட்சத்திரத்தில் பிறந்த போகரின் பிறப்பு மூலம் பற்றி பெரிதாக செய்திகள் இல்லை. ஆனால்,நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதரின் மாணவர் இவர் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒரு செய்தி.அதை இவரது, அரிய நூல்களுள் ஒன்றான 'போகர் ஏழாயிரம்' எனும் நூலின் வழி அறியலாம்.
 
பதினெண் சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பு, நவசித்தர்களே பிரதானமாகக்கருதப்பட்டனர். மேருமலைதான் இவர்களின் யோகஸ்தலம். மேருவும் இமயமும் உலகப் பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு வெளியாகவே விளங்கியது. இங்கேதான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர், காலாங்கிநாதர். காலாங்கி நாதர், போகர் வந்த சமயம் மகாசமாதியில் இருந்தார்.
 
போகர், சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி, அவ்விரு மலைகளிலும் பல தாது வகைகளை தேடிக்கண்டு பிடித்தார். அதைக் கொண்டு பல காய கற்பங்களை செய்து, தானே உண்டு பார்த்து அதன் பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும், வானவெளியில் பறப்பது, நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிக மிகச் சாதாரணமாகியது. இதனால் போகருக்குள் கர்வம் துளிர்த்துவிட்டது.
 
துரோணருக்கு ஓர் ஏகலைவன் போல தானும் குருவை வணங்கி அந்த அருளாலேயே பல தாதுக்களை கண்டறிந்து விட்ட ஒருவன்; உண்மையில் காலாங்கி நாதருக்கு சீடர்கள் இருந்திருந்தால், அவர்கள் கூட இப்படி எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள்; என்றெல்லாம் நினைக்கத் தொடங்கிவிட்டார்.
 
இதனால், அந்த மலைத் தலத்தில் பணிவாக பார்த்துப் பார்த்து நடந்தவர், நிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தார்.
 
மேருவிலும் இமயத்திலும் சூட்சம வடிவில் பலநூறு சித்த புருஷர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களில் பலரது தவம், போகரின் கர்வமான நடையால் கலைந்தது. அவர்கள் கண்விழித்ததோடு போகருக்கும் காட்சியளித்தனர். திடுக்கிட்ட போகரிடம் நாங்கள் காலாங்கி நாதரின் மாணவர்கள்.
 பலப்பல யுகங்களாக எங்களை மறந்து தவம் செய்தபடி இருக்கிறோம் என்றார்கள். அத்தனை யுகங்களும் சில நாட்கள் கடந்தது போலத்தான் இருக்கிறது என்று அவர்கள் கூற, போகருக்கு அது ஆச்சரிய அதிர்ச்சியாகியது.அப்படியானால் அவர்கள் தவத்தை எவ்வளவு பெரிய விஷயமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அந்த நொடி, தான் கற்ற தாதுவித்தை எல்லாம் மிக அற்பமானது என்கிற எண்ணம் ஏற்பட்டு அவரது கர்வமும் அடங்கியது. அதை அறிந்த அந்த சித்தபுருஷர்கள், போகருக்கு பல சித்த ரகசியங்களை போதித்தார்கள்.
 
ஒரு சித்தர், போகர்மீது பெரும்கனிவு கொண்டு, 'அமிர்தமணிப்பழம்' என்னும் தேவக்கனி மரம் ஒன்றை அந்த வெளியில் காட்டி, அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள்முழுக்க பசிக்காது, நரைக்காது, முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை உண்டுவிட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறிட,போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய 'பசி, தாகம், மூப்பு' என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார்.
 Agathiyar Arudam – Applications sur Google Play
இப்படி படிப்படியாக முன்னேறிய போகருக்குள் சில விசித்திரமான எண்ணங்களும் ஏற்பட்டன. அவை முழுக்க முழுக்க மனித சமுதாயம் தொடர்பானவையே.. ஒரு உயிர் எதனால் மனிதப் பிறப்பெடுக்கிறது? அப்படிப் பிறக்கும்போது அது எதன் அடிப்படையில் ஏழையின் வயிற்றிலும், பணக்காரனின் வயிற்றிலும் பிறக்கிறது? 
 
இறப்புக்குப்பின் கொண்டு செல்வது எதுவும் இல்லை என்று தெரிந்தும் வாழும் நாளில் மனிதன் ஏன் ஆசையின் பிடியிலேயே சிக்கிக் கிடக்கிறான்? எவ்வளவு முயன்றும் அவனால் மரணத்தை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை?
 
இப்படிப் பலவித கேள்விகள் போகரை ஆட்டிப்படைத்தன. மொத்தத்தில் மனித சமூகமே வாழத் தெரியாமல் வாழ்ந்து விதியின் கைப்பாவையாக இழுத்துச் செல்லப்படுவது போல உணர்ந்தவர், மனித சமூகத்தை காப்பாற்றியே தீர வேண்டும் என்று எண்ணம் கொண்டார். இதனால், தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் 'போகர் ஏழாயிரம்', போகர் நிகண்டு, 17000 சூத்திரம், 700 யோகம் போன்றவை.
 
இவர் உள்ளத்தில் மனித சமூகத்தை நோயின்றி வாழவைக்கும், அரிய குறிப்புகள் தோன்றின. அதேசமயம், இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர். சித்த ரகசியங்களை எழுதிவைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். 
 
போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை, ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர், அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றி காட்டினார்.
 வலைப்பதிவுகள் – Tagged "Bogar Siddhar" – Om Spiritual Shop
அந்த மந்திரம், தம்பணா மந்திரம் எனப்படுகிறது. இன்றும் காடுகளில் மூலிகை தேடிச்செல்வோர் தம்பணா மந்திரத்தை மானசீகமாக உச்சரித்து, காணப் பெறாத மூலிகைகளையும்கண்டு அதைக் கைப்பற்றுவர். அமிர்தத்துக்கு இணையான ஆதிரசத்தையே இவர் கண்டறிந்தார் என்பர். அதைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமோ, 
 
அமிர்தமோ தேவர்களுக்கே உரியது. அசுரர்களோ மானிடர்களோ அதை உண்டால் அதனால் உலகம் அழிந்து விடும் அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர்.
 
தங்கள் அச்சத்தை தட்சிணா மூர்த்தியாகிய சிவபிரானிடம் கூறிட, சிவபிரானும் அவர்களது கவலையை நீக்குமூலமாக போகரை அடைந்து அவர் அறிந்து எழுதிய அவ்வளவு ரகசியங்களையும் கேட்டார். போகர் எழுதியதை, போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர்களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த அவர், போகரின் முயற்சியை ஆசிர்வதிக்கவேசெய்தார். 
 
அதன்பின் இவர் புகழ் பலமடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள், குளிகைகள் பெற்றுச் சென்றனர்.
 
மொத்தத்தில் மனித சமூகத்தை, இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே, தேவர்களுக்கும் கந்தவர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார்.
 
அண்டை நாடான சீன தேசமும், நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும், புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால், மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. 
 
எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது. அங்கே, 'போ யாங்' என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள், கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து, சீனராகவே வாழ்ந்தார் என்றும் ஒரு கதை உண்டு.
 
சீனர்கள், இந்தியர்களில் இருந்து உணவுப் பழக்க வழக்கங்களில் பெரிதும் வேறுபட்டவர்கள். இந்திய உணவில் எண்ணெய், கொழுப்பு சத்து, காரம், புளிப்பு, உவர்ப்பு என்றெல்லாம் பல சுவைகள் உண்டு. சீனர்களிடம் அப்படி இல்லை. அவர்களது உணவுமுறை ரஜோ குணத்தை தூண்டுவதாகவும்; எலும்பு, நரம்பு இவைகளை வலுவாக வைத்துக்கொள்ளத் தக்கதாகவும் இருந்தமையால், அவர்களிடம் பல வித்யாசமான பயிற்சி முறைகள் இருந்தன.அதில் 'ரஜோலி' என்னும் யோக முறையும் ஒன்று. போகர் அதை ஆர்வத்துடன் பழகிடும்போது தலையில் அடிபட்டு அவருக்குள் அவர் பற்றிய அவ்வளவு எண்ணங்களும் மறைந்துபோன. பின்னர், அவரைத் தேடிக்கொண்டு வந்த போகரின் மாணாக்கர்களில் ஒருவரான புலிப்பாணி, போகரின் நிலை கண்டு கலங்கி, அவரைத் தன் முதுகில் சுமந்துகொண்டு இந்தியா திரும்பினார் என்றும் சொல்வர்.
 Guru Bogar | Palani
அதன்பின் குருவுக்கே அவரிடம் கற்றதை உபதேசித்து, அவருக்குள் மீண்டும் பழைய எண்ணங்களை தோற்றுவித்தார். ஒரு சீடன், குருவுக்கு உபதேசிப்பது என்பது காரியப் பிழையில் முடிந்து, முடிவில் அவனையே சாபத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதால்,புலிப்பாணி, போகரின் தண்டத்திற்கு உபதேசிப்பது போல போகருக்கு உபதேசித்து போகரை மீண்டும் நிலை நிறுத்தினார்.
 போகர் சித்தரின் வரலாறு
அதன்பின், போகர் ஒரு புத்துயிர்ப்போடு எழுந்தார்.பலவித அனுபவங்களால் பழுத்த ஞானியாகிவிட்ட அவர், இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் பழனி. அங்கேயே முக்தியும் அவருக்குக் கிட்டியது. மொத்தத்தில் போகர் என்றால் 'நவநாயகர்' என்றும் கூறலாம்.
அகஸ்திய முனிவர் போக சித்தரை சீன தேசத்தவர் என்று கூறுகிறார். புலிப்பாணியின் குரு என்றும் இவருடைய தாய் தந்தையர் சீனாவில் பெண்களுக்குத் துணிகள் வெளுத்துக் கொடுத்துப் பிழைத்து வந்தனர் என்றும் அகத்தியர் கூறுகிறார். போகர் திருமூலர் காலத்தினைச் சேர்ந்தவரென்றும் பழனி மலையில் வசித்து பழனி தண்டபாணி சிலையை நவபாஷானக் கட்டில் தயாரித்தார் என்றும் அவருடைய வரலாறு பேசப்படுகிறது. போக முனிவர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார்.
 சித்தர்களின் தலைமகன் அகத்தியர் பற்றிய அரிய தகவல்கள்
அகத்தியர் தமது சௌமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத் தருகிறார்.
 
1. போகர் – 12,000
2. சப்த காண்டம் – 7000
3. போகர் நிகண்டு – 1700
4. போகர் வைத்தியம் – 1000
5. போகர் சரக்கு வைப்பு – 800
6. போகர் ஜெனன சாகரம் – 550
7. போகர் கற்பம் – 360
8. போகர் உபதேசம் – 150
9. போகர் இரண விகடம் – 100
10. போகர் ஞானசாராம்சம் – 100
11. போகர் கற்ப சூத்திரம் – 54
12. போகர் வைத்திய சூத்திரம் – 77
13. போகர் மூப்பு சூத்திரம் – 51
14. போகர் ஞான சூத்திரம் – 37
15. போகர் அட்டாங்க யோகம் – 24
16. போகர் பூஜாவிதி – 20
 
இவைகளில் போகர் 12000 மற்றும் இரண வாகடம் நூல்கள் கிடைக்கவில்லை. போகரின் நூல்கள் யாவுமே அமுதமாகும் என்று காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார். போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர்.
அகத்தியர் சித்தாந்தம் - Agathiyar Spiritual Foundation
இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திர சக்தியைப் பெற மேருமலையின் அருகிலிருக்கும் நவநாத சித்தர்கள் சமாதியை அடைந்தார். ஒன்பது சித்தர்களும் போகருக்கு தரிசனம் தந்தனர். போகரும் இறந்தவர்களைப் பிழைக்க வைக்கும் சஞ்சீவினி மந்திரவித்தையைக் கற்றுத் தருமாறு கேட்டார்.
 
“தகுதியுள்ளவர்களுக்கு காயகல்ப முறையைச் சொல்லிக்கொடு அவர்களை நீண்ட காலம் வாழவை. மரணமடைந்தவர்களுக்காக மனதைக் குழப்பிக் கொள்ளாதே” என்று அறிவுரை கூறினர். அதுவரையில் போகர் அறிந்திராத காய கல்ப முறைகளையும் கற்றுக் கொடுத்து மறைந்தனர்.
போகர் தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார். கொஞ்ச தூரத்தில் ஒரு புற்றிலிருந்து ஒளிக் கற்றை ஒன்று புலப்பட்டது.
 
அந்த ஒளியை தொடர்ந்து புற்றின் முன் போய் நின்றார். யாரோ ஒரு சித்தர் இந்தப் புற்றின் உள்ளே தம் செய்து கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்த போகர், அந்தப் புற்றை வலம் வந்து அதன் அருகிலேயே ஆசனம் போட்டு அமர்ந்து கண்களை மூடித் தியானத்தில் ஆழ்ந்தார். நீண்ட நேரம் ஆனது, போகரின் தியானத்தால் புற்றில் இருந்த சித்தரின் தியானம் கலைந்தது. உடனே அவர் புற்றை உடைத்துக் கொண்டு வெளியில் வந்தார்.
 
போகர், “தங்களை தரிசித்ததில் வாழ்வின் பெரும்பயனை அடைந்தேன்” என்று கூறினார். சித்தர் அங்கிருந்த மரங்களில் ஒன்றைக் காட்டி “போகா! அந்த மரத்தின் பழங்களில் ஒன்றைச் சாப்பிட்டால் போதும் ஆயுள் முழுவதும் பசிக்காது, முடி நரைக்காது, பார்வை மங்காது, இவ்வளவு ஏன்? எல்லோருக்கும் அச்சம் தரும் முதுமை என்பதும் வரவே வராது. தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும்” என்றார். போகர் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார்.
 
சித்தர் புலித்தோல் ஆசனம் ஒன்றைக் கொடுத்து, “இது உனக்கு தவம் செய்ய உதவும்” என்றார். அந்த சமயத்தில் பதுமை ஒன்று அவர் எதிரில் தோன்றவே “போகா! இனி உனக்கு தேவையானவைகளை இந்த பதுமை சொல்லும்!” என்று சொல்லிவிட்டு மறுபடியும் தியானத்தில் மூழ்கி விட்டார். பதுமை மூலிகை ரகசியங்கள், போகருக்கு உயிரின் தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்த உடலில் அது படும் துன்பம் ஆகிய நிலைகளைத் தெளிவாக உணர்த்தியது. அதைக் கேட்டு ஆச்சரியத்தில் இருக்கும் போது பதுமை வந்தது போலவே மறைந்தும் விட்டது.
 
பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு உணவு சமைத்து உண்ட பின் நீர் வேட்கையால் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் கும்பலாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். போகர் அவர்களிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார்.
“யார் நீ! அப்பாலே போ! அருகில் வந்தாலே நாற்றமடிக்கிறது” என்று எரிந்து விழுந்தனர். 
 
போகர் அவர்களின் அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து அந்த வழியாக வந்த பூனை ஒன்றின் காதில் போகர் வேதத்தை ஓதிவிட்டார். பூனை நன்றாக உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொட்ங்கியது.
 
அந்தணர்கள் தாங்கள் அறியாமல் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர். “ஐயனே எங்கள் வறுமை அகல தாங்கள் வழி செய்ய வேண்டும்” என்றும் வேண்டிக் கொண்டனர்.
 
போகர் அவர்களுடைய வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார்.
 
போகர் தவம் செய்து முடித்த இரச மணிக் குளிகைகளின் ஆற்றல் கண்டு மிகவும் வியப்படைந்தார். அதே போல குளிகைகளைச் செய்து மற்ற சித்தர்களுக்கும் அளிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார்.
 
அதற்காக ரோமாபுரி சென்று மிகத் தூய்மையான ஆதி ரசம் கொண்டு வர வேண்டுமென்று நினைத்தார். உடனே குளிகைகளில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு ரோமாபுரியில் தோண்றி அங்கு இருந்த இரசக் கிணற்றைத் தேடிப் பிடித்தார். இரசத்தை சுரைக் குடுவையில் நிரப்பிக் கொண்டு விண்ணில் தாவினார்.
 
அதன்பிறகு ஆதிரசத்துடன் விண்மார்க்கமாக பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.
தஞ்சையில் பிரகதீசுவரர் ஆலய லிங்கப் பிரதிஷ்டைக்காக காக்கையின் கழுத்தில் ஓலை ஒன்றை கருவூராருக்கு அனுப்பினார். கருவூரானும் அதன் படியே செய்து லிங்கப் பிரதிட்டை செய்து முடித்தார்.
 
போகர், தட்சிணா மூர்த்தி உமைக்கு அருளிச் செய்த ஞான விளக்கம் ஏழு சட்சத்தையும் ஏழு காண்டமாக்கி தமது மாணவர்களுக்கு உபதேசித்தார். மற்ற சித்தர்கள், “இறைவன் உபதேசித்ததை வெளியில் சொல்வது குற்றம்” என்று கூறி இத்தகைய செயலை அவர் உடனே நிறுத்தியாக வேண்டும்” என்று தட்சிணாமூர்த்தியிடம் முறையிட்டனர்.
 
தட்சிணாமூர்த்தி போகரை அழைத்து விசாரிக்க ஆரம்பித்தார். “போகரே! நீர் பூனைக்கு நான்கு வேதங்களையும் உபதேசித்து ஓதச் செய்தீர், சிங்கத்திற்கு ஞானம் கொடுது அரசனாக்கினீர், மேருமலைக்குச் சென்று தாதுக்களைக் கொண்டு வந்தீர், ரோமபுரி சென்று ஆதிரசம் கொண்டு வந்தீர், இதையெல்லாம் விட நாம் உமாதேவிக்கு கூறிய தீட்சை விதி, யோக மார்க்கம் எல்லாவற்றையும் ஏழு காண்டமாக உருவாக்கியுள்ளீராமே! நீர் செய்த நூலைச் சொல்வீராக” எனக் கேட்டு போகரின் நூலாழத்தினையும் பொருட்சிறப்பையும் உணர்ந்து மகிழ்ந்து வாழ்த்தினார்.
 
போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர்முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம், முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார்.
 
போகர் கனவில் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாஷாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். பழனிமலை இறைவன் திருமேனியைத் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார்.
 
 ஒன்பது விதமான விஷங்களை (நவ பாஷாணங்கள்) முயன்று கூட்டி உருவாக்கிய திருமேனியில் ஊறிய விபூதியும், பஞ்சாமிர்தமும் போகருக்கு உள்ளொளியைப் பெருக்கியது.
இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரனை உருவாக்கியவரும் போகரே என்றும் கூறுவதுண்டு. பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். 
 
அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.
 
போகர் பூசித்து வந்த புவனேச்வரி அம்மையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும் புவனேச்வரி அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்றிருப்பதாக கூறப்படுகிறது. இங்கு கூறப்பட்ட வரலாற்று செய்திகளனைத்தும் சதுரகிரி தலப்புராணத்தில் கூறப்பட்டவை.
 

 
நன்றி இணையம்**சித்தர் அறிவியல்**

 

திருமண வாழ்க்கையில் காதல் மட்டும் போதாது,.......

மணக்கால் அய்யம்பேட்டை | 2:57 PM | Best Blogger Tips

 May be a black-and-white image of 3 people and text


கணவன்-மனைவி ஒருவரையொருவர் மதிக்க வேண்டும். 
 
கோபமாக இருக்கும்போது ஒருபோதும் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள். 
 
பல சமயங்களில், அதிக அன்பு இருந்தபோதிலும், ஒரு சிறிய தவறு உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்திவிடும். 
 
இந்த விரிசலில் மூன்றாவது நபரை உள்ளே அனுமதிக்காதீர்கள்...
 
காதல் எப்போதும் இருக்கிறது என அடிக்கடி வெளிப்படுத்துவதை தவிர்க்காதீர்கள். 
 
இதனால் இருவருக்கும் இடையில் இடைவெளி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. 
 
எனவே இருவரும் வெளியில் செல்வது, மனம் திறந்து பேசுவதற்கு எல்லாம் தனிப்பட்ட நேரம் கொடுக்க மறந்துவிடாதீர்கள்
 Nanjil Nadu (நாஞ்சில் நாடு) - தொல்காப்பிய களவியல்! காதல் வாழ்க்கையைக்  கூறும் அகத்திணையின் இரு பகுதிகளாகக் களவும், கற்பும் அமையும். ஒருவனும் ...
திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருந்தாலும், அல்லது பல ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்தாலும் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அக்கறை எப்போதும் குறையக்கூடாது. 
 
இது இருவருக்கும் இடையே பரஸ்பரம் நம்பிக்கையை உருவாக்கும்.
பல நேரங்களில், திருமணத்திற்குப் பிறகு, தம்பதிகள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்வது, அசிங்கமான சொற்களை பயன்படுத்துவது எல்லாம் விளையாட்டாக செய்துவிடாதீர்கள். 
 
இது இருவருக்கும் இடையிலான உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்திவிட வாய்ப்பு இருக்கிறது....
 
ஒருவரையொருவர் அச்சுறுத்திக் கொள்ளவே கூடாது. வீட்டை விட்டு போகிறேன் உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தையும் கூறி தன் துணையை அச்சுறுத்தக்கூடாது. இது ஒருகட்டத்தில் ஆபத்தில் முடிய வாய்ப்பு இருக்கிறது..
 Love Marriage Planet Responsible Astrology In Tamil : காதல் திருமணம்  யாருக்கு அமையும்? - உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?
அன்பு செலுத்துங்கள், எந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என அமர்ந்து பேசுங்கள். நிதானமாக விவாதிக்கும்போது வாழ்க்கை சூழல் அமைதியாக இருக்கும். அழகாகவும் இருக்கும்.
 உங்கள் காதல் திருமணம் வெற்றிகரமாக அமைய வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்
சிறிய விஷயங்களே பெரிய பிரச்சனைகளுக்கு, கடினமான முடிவுகளுக்கு காரணமாக இருக்கின்றன என்பதால் அதனை நினைவில் வைத்து வாழ்க்கையை அழகாக வாழுங்கள். 
 UNICEF Pakistan - A wonderful illustration of a nutritious life? A healthy  planet? A happy mother Earth with its little friends? Tell us in the  comments what comes to your mind looking
பூமியில் வாழும் வாழ்க்கை கொஞ்சம் காலம் தான் அந்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்.,

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

 

 

ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?

மணக்கால் அய்யம்பேட்டை | 2:50 PM | Best Blogger Tips

 May be an image of train, railway and text

ரயிலில் பயணம் செய்யும் போது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?
 
ஒவ்வொரு இஞ்சினிலும்
"WDM2", "WAP4" போன்று
ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்.. அப்படி என்றால் என்ன அர்த்தம்?
 
WDP 3A
 Central Railway on X: "WDP3A Loco wonderfully painted by Kalyan Diesel Loco  Shed staff in #Tejas Livery for 22119/22120 CST-Karmali Tejas Express  @sureshpprabhu https://t.co/HB8J4mTEvn" / X
 
முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும்
 
W - அகன்ற இருப்பு பாதை
(Broad Gauge / Wide Gauge - 1,676 மில்லி மீட்டர்)
 
Y - மீட்டர் இருப்புப் பாதை
(Metre Gauge - 1000 மில்லி மீட்டர்)
 
Z - குறுகிய இருப்புப் பாதை
(Narrow Gauge - 762 மில்லி மீட்டர்)
 
N - குறுகிய இருப்புப் பாதை
(Narrow Gauge - 610 மில்லி மீட்டர்)
 
 
WDM 2
 WDM-2 and Variants
இரண்டாம் எழுத்து ரயில் எந்த வகை சக்தியால் இயங்குகிறது என்பதைக் குறிக்கும்.
 
D - டீசல் இஞ்சின்
 
A - மின்சக்தி - மாறுதிசை மின்னோட்டம் (AC traction)
 
C - மின்சக்தி - நேர் மின்னாட்டம்
(DC traction)
 
CA - மின்சக்தி - எந்த மின்னோட்டத்திலும் ஓடும் (AC & DC traction)
 
B - பேட்டரி சக்தி
 
இவற்றில் எதுவும் இல்லாமல் கீழ்காணும் மூன்றாம் எழுத்தில் உள்ள எழுத்துகள் இருந்தால்,
அது நீராவி இஞ்சின்.
 
YG
 
 YG Indian Railways Steam 2-8-2 at Delhi, India by Daniel SIMON
மூன்றாம் எழுத்து ரயிலின் பயன்பாட்டைக் குறிக்கிறது. (நீராவி இஞ்சினில் இரண்டாம் எழுத்து)
 
G - சரக்கு ரயில் (Goods)
 
P - பயணிகள் ரயில் (Passenger)
 
M- சரக்கு & பயணிகள் ரயில்
 
U - புறநகர் ரயில்
 
சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து எல்லா இஞ்சின்களிலும்
 
மூன்று எழுத்துகளுக்குப் பிறகு, நான்காவதாய் ஒரு எண் மட்டும் இருக்கும்.
 
அந்த எண் இஞ்சினின் மாடல் எண்ணைக் குறிக்கிறது
 
( WAP 5 என்றால் அந்த இஞ்சினின் மாடல் எண் ஐந்து)
 
WAP 1
மேலே "சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து" என்று இருந்தது அல்லவா?
 
அந்த சில இஞ்சின்களில் மட்டும் நான்காவதாய் ஒரு எண்ணும், அதன் பிறகு ஒரு எழுத்தும் இருக்கும்.
 
இவை இரண்டும் அந்த இஞ்சினின் சக்தியைக் குறிக்கின்றன. இவை அனைத்தும் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இஞ்சின்களாகும். WDM1 மற்றும் WDM2 ஆகிய இஞ்சின்கள் மட்டும் இதில் வராது.
 
WDG 3A
 
நான்காம் எண்ணை ஆயிரத்தால் பெருக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவதாய் இருக்கும் எழுத்திற்கு இணையான எண்ணை
(A - 1; B - 2; C - 3; D - 4; E - 5; F - 6) எழுதி அதை நூறால் பெருக்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் சேர்த்தால் கிடைப்பதுதான் அதன் சக்தி (குதிரைச்சக்தியில்).
 
எடுத்துக்காட்டாக,
 
WDM 3E
இஞ்சினின் சக்தி = 3×1000+ 5×100 = 3500 HP ஆகும். அதன் பிறகு எதுவும் குறியீடுகள் இருந்தால்
அவை அந்த ரயில் இஞ்சினின் சிறப்பம்சங்களைக் (Technical Features) குறிக்கும். பெரும்பாலும் சரக்கு ரயில்களில்தான் அவை இருக்கும்.
 
WAG 5
 
சில ரயில்களில், குறிப்பாக வடநாட்டு ரயில்களில், ஆங்கிலத்தைப் பார்க்க இயலாது. இந்தியில் குறியிட்டு இருப்பர். அதை (இந்தி தெரிந்தவர்கள்) எழுத்துக் கூட்டிப் படித்தால், மேற்கண்ட குறியீடே வரும்.
 
அதாவது, ஆங்கிலத்திற்குப் பதில் அப்படியே இந்தியில் எழுதி இருப்பார்கள்.
 
படித்ததில் பிடித்தது
 
🌹

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹

கண்ணப்பரின் அன்பு....

மணக்கால் அய்யம்பேட்டை | 9:55 AM | Best Blogger Tips
 சிவானந்தலஹரி 63வது ஸ்லோகம் பொருளுரை | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்

இறைவனிடம் எதையும் எதிர்பார்க்காத அன்புக்கு ஒரு மிக சிறந்த உதாரணம்.
 
கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்,
 
என் அப்பன், என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி,
 
வண்ணப் பணித்து, என்னை `வா' என்ற வான் கருணைச்
 
சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
 கண்ணப்ப நாயனார் புராணம் - பாகம்-2 | Kannappa Nayanar Part2
பஞ்ச பூத தலங்களில் வாயு தலமான காளஹஸ்தியில் கருவறையில் மட்டும் குளிர்ந்த காற்று சுழல்வதை நாம் உணரலாம்.
 
கண்ணப்பர் வேடுவ குலத்தில் பிறந்தவர். இறைவன் மீது கொண்ட அன்பினால்,தனக்கு தெரிந்த வகையில் பூஜை செய்தார். தாம் வேட்டையாடிய மாமிசத்தை படைத்தார். 
 
தன் கொண்டையில் இருந்த பூவை கொண்டு அலங்காரம் செய்தார். தன் வாயில் உள்ள நீரை வைத்து அபிஷேகம் செய்தார். இதை எல்லாம் மறைந்து இருந்து பார்த்த அந்தணர் திகைத்தார்.
 

 May be an image of 1 person

அடுத்தது நடந்தது தான் முக்கியமான பரீட்சை.
சிவனாரின் ஒரு கண்ணில் கண்ணீராக செந்நீர் வழிந்தது. அதிர்ந்த கண்ணப்பர், தன் ஒரு கண்ணை நொண்டி, சிவலிங்கத்தில் வைத்தார்.
 
அடுத்த கண்ணிலும் குருதி வழிய தொடங்கியது. 
 
தன் செருப்பணிந்த கால்களை ஒரு கண்ணில் அடையாளமாக வைத்து, தன் இன்னொரு கண்ணையும் நோண்டி எடுக்க முனைந்தார் கண்ணப்பர். 
 
இங்கே மணிவாசகர் தும்பியை தூது விடுகிறார்.
 
கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின் கண்ணப்பருக்கு இணையான அன்பு என்னிடத்தில் இல்லை என்று அறிந்தபின்னும்
என் அப்பன்,என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி
என் அப்பன், எதனோடும் ஒப்பிட முடியாத என்னையும் ஆட்கொண்டு அருளி
வண்ணப் பணித்து
நன்றாக நினைவில் வையுங்கள். 
 கண்ணப்ப நாயனார் சிவனுக்கு ஊன் படைத்தது சரியா?? -
மணிவாசகர் அரசியலில் இருந்தார்; அமைச்சர் பதவியில் இருந்தார். இறை அனுபவம் தானாக அவருக்கு கிடைத்தது. அதனால் எப்படி இருக்க வேண்டும் என்ற வகையையும் இறைவன் எனக்கு சொல்லிக்கொடுத்தான் என்கிறார்.
 
என்னை `வா' என்ற வான் கருணைச்
சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
 
என்னைத் தில்லைக்கு வருக என்று அருளிய, வானளவு கருணையுள்ள பொடி பூசிய அழகிய திருநீறு அணிந்த சிவனாரிடம் சென்று ஊதுவாய் தும்பியே.
 
இறைவனைக்காண ஏங்கும் மணிவாசகரின் திருக்கோத்தும்பி பாடல் இது.
 
திருச்சிற்றம்பலம்
 

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹