கண்ணப்பரின் அன்பு....

மணக்கால் அய்யம்பேட்டை | 9:55 AM | Best Blogger Tips
 சிவானந்தலஹரி 63வது ஸ்லோகம் பொருளுரை | வால்மீகி ராமாயணம் என்னும் தேன்

இறைவனிடம் எதையும் எதிர்பார்க்காத அன்புக்கு ஒரு மிக சிறந்த உதாரணம்.
 
கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்,
 
என் அப்பன், என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி,
 
வண்ணப் பணித்து, என்னை `வா' என்ற வான் கருணைச்
 
சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
 கண்ணப்ப நாயனார் புராணம் - பாகம்-2 | Kannappa Nayanar Part2
பஞ்ச பூத தலங்களில் வாயு தலமான காளஹஸ்தியில் கருவறையில் மட்டும் குளிர்ந்த காற்று சுழல்வதை நாம் உணரலாம்.
 
கண்ணப்பர் வேடுவ குலத்தில் பிறந்தவர். இறைவன் மீது கொண்ட அன்பினால்,தனக்கு தெரிந்த வகையில் பூஜை செய்தார். தாம் வேட்டையாடிய மாமிசத்தை படைத்தார். 
 
தன் கொண்டையில் இருந்த பூவை கொண்டு அலங்காரம் செய்தார். தன் வாயில் உள்ள நீரை வைத்து அபிஷேகம் செய்தார். இதை எல்லாம் மறைந்து இருந்து பார்த்த அந்தணர் திகைத்தார்.
 

 May be an image of 1 person

அடுத்தது நடந்தது தான் முக்கியமான பரீட்சை.
சிவனாரின் ஒரு கண்ணில் கண்ணீராக செந்நீர் வழிந்தது. அதிர்ந்த கண்ணப்பர், தன் ஒரு கண்ணை நொண்டி, சிவலிங்கத்தில் வைத்தார்.
 
அடுத்த கண்ணிலும் குருதி வழிய தொடங்கியது. 
 
தன் செருப்பணிந்த கால்களை ஒரு கண்ணில் அடையாளமாக வைத்து, தன் இன்னொரு கண்ணையும் நோண்டி எடுக்க முனைந்தார் கண்ணப்பர். 
 
இங்கே மணிவாசகர் தும்பியை தூது விடுகிறார்.
 
கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின் கண்ணப்பருக்கு இணையான அன்பு என்னிடத்தில் இல்லை என்று அறிந்தபின்னும்
என் அப்பன்,என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி
என் அப்பன், எதனோடும் ஒப்பிட முடியாத என்னையும் ஆட்கொண்டு அருளி
வண்ணப் பணித்து
நன்றாக நினைவில் வையுங்கள். 
 கண்ணப்ப நாயனார் சிவனுக்கு ஊன் படைத்தது சரியா?? -
மணிவாசகர் அரசியலில் இருந்தார்; அமைச்சர் பதவியில் இருந்தார். இறை அனுபவம் தானாக அவருக்கு கிடைத்தது. அதனால் எப்படி இருக்க வேண்டும் என்ற வகையையும் இறைவன் எனக்கு சொல்லிக்கொடுத்தான் என்கிறார்.
 
என்னை `வா' என்ற வான் கருணைச்
சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
 
என்னைத் தில்லைக்கு வருக என்று அருளிய, வானளவு கருணையுள்ள பொடி பூசிய அழகிய திருநீறு அணிந்த சிவனாரிடம் சென்று ஊதுவாய் தும்பியே.
 
இறைவனைக்காண ஏங்கும் மணிவாசகரின் திருக்கோத்தும்பி பாடல் இது.
 
திருச்சிற்றம்பலம்
 

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹