மரியாதை இல்லாமல்
போய்விட்டது-
சாவு!
*
மகிழ்ச்சி இல்லாமல்
நிகழ்கிறது
திருமணம்!
*
பரஸ்பர அன்பில் -கை
குளுக்குவதைத் தவிர்க்கிறது
காலம்!
*
உழைப்பை
ஏளனம் செய்கிறது
தொழிற்சாலை!
*
நிம்மதியை
அபகரித்து விட்டது
மாதச் சம்பளம்!
*
எதற்குச் செலவிடுவது
புலம்பிக் கொண்டிருக்கிறது
ஊதியம்!
*
பார்த்துப் பார்த்து
பொருள் வாங்குகிறது
பணம்!
*
உறவுக்கு உதவ முடியாமல்
கலங்கி நிற்கிறது
மனம்!
*
கோபுரத் தரிசனமாய்
தனக்குத்தானே வணங்குகிறது
சினம்!
*
துயரங்களே உயரங்களாய்
வாழ்க்கையை கடத்திவிட்டது!
வருடம்!
*
மாதத்தின் இறுதி நாட்களில் யோசனையில் கழிகிறது
விரக்தி!
*
பொன்னானப் பொழுதுகளை
வரமாக கழிக்காமல் கரைந்துவிட்டது
வாரம்!
*
இரவு உறக்கத்தில்
விழித்துக் கொண்டிருக்கிறது
பகல்!
*
விடியலில்
உறங்கிக் கொண்டிருக்கிறது
காலை !
*
கனவுகளோடு
மிதந்துக் கொண்டிருக்கிறது
பகல்!
*
தலைசாய்ந்து மணம் வீசாமல்
தொங்கிக் கொண்டிருக்கிறது
மாலை!
*
எதைச் சமைப்பது
கேட்டுக் கொள்கிறது
மனம்!
*
நிம்மதியாக எரியுமா?
கடுப்பில் கேட்கிறது
அடுப்பு !
*
உணவில் இல்லை
பசியில்
வாழ்க்கை ருசி!
*
கை அலம்பலில்
புலம்பலில் செல்கிறது
வாழ்க்கை!
*
இருக்கப்பட்டவர்
பாதாம் பிஸ்தா முந்திரி வாங்கி
இருப்பில் வைக்கிறார்
*
இல்லாதப்பட்டவர்
கை கழுத்து காதிலிருப்பதை கழட்டி
சேட்டுக்கடையில் அடகுவைத்து
வயிறை இறுக்கி வைக்கிறார்🤔💐💚
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏