சுக பிரசவத்திற்கு உதவும் -காய்ச்சி ஊற்றிய விளக்கெண்ணை செய்வது எப்படி ?

மணக்கால் அய்யம்பேட்டை | 3:50 PM | Best Blogger Tips

கடைகளில் விற்கும் விளக்கெண்ணை அப்படியே மருத்துவத்திற்கு பயன்படுத்துவது அரிது ..

வழக்கொழிந்து போன நமது மூதாதையர்கள் விளக்கெண்ணையை இப்படி தான் தயாரித்தார்கள் ...

இந்த காய்ச்சி ஊற்றிய விளக்கெண்ணை பல நோய்களுக்கு மருந்தாக அமைகிறது ..

துளிர் என்ற சித்த மருத்துவத்தை உலகறிய செய்யும் முயற்சியில் உள்ள துளிர் குழு -டாக்டர் ஸ்ரீராம் மற்றும் டாக்டர் கோகுலகுமார் அவர்களின் முயற்சியால் இந்த வீடியோ உலக மக்களை சென்றடையும் என்று நம்பியவனாக ..மருத்துவர் ஸ்ரீராம் அவர்களின் இந்த யூ ட்யூப் இணைப்பை உங்களுக்கு பகிர்கிறேன் ..

https://www.youtube.com/watch?v=GWcrmbnd9hU

Via FB ஆரோக்கியமான வாழ்வு

பாத வெடிப்பு நீங்க எளிய வழிகள்

மணக்கால் அய்யம்பேட்டை | 2:56 PM | Best Blogger Tips
Photo: பாத வெடிப்பு நீங்க எளிய வழிகள்

கடினமான செருப்பு அணிவதால் கால் வெடிப்புகள் வரும். சிலருக்கு சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை. இதனாலும் கால் வெடிப்புகள் வரும்.  

கால் வெடிப்பு ஸ்கின் ட்ரை ஆவதால் ஏற்படுகிறது. துணி துவைக்கும் போது சோப்பு தண்ணீரில் நிற்காமல் பார்த்துக் கொள்ளவும். அதே போல் காலுறைகளையும் அழுக்கின்றி அணியவும். கால் வெடிப்பு நீங்க சில எளிய வழிகள் இதோ:  

• வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் குணமாகும். நீங்கள் தினமும் சொரசொரப்பான கல்லில் காலை வைத்து தேய்த்தாலும் கால் வெடிப்பு மறையும்.  

•  கால் வெடிப்பிற்கு எலுமிச்சைச் சாறு, பயிற்றம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை கலந்து, கால் வெடிப்புகளில் பூசி வர, கால் வெடிப்பு மறைந்து, பளபளப்பாகும். 

•  இரவில் கை பொறுக்கும் சூட்டில் வெந்நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து அதில் கால்களை ஊற வைத்து, பிரஷினால் தேய்க்கவும். கால் வெடிப்பு மறையும் வரைக்கும் செய்யவும். குளிக்கும்போது தேங்காய் எண்ணை தேய்த்து குளிக்கவும். 

(கடையில் மெட்டல் ஸ்க்ரப்பர் கிடைக்கும் அதை வாங்கி தினமும் குளிக்கும்போது கால் பாதங்களை தேய்க்கவும் சரியாகிவிடும்.) அல்லது (கால்களுக்கு தேய்க்கும் ப்ரஷ் அல்லது ப்யூமிஸ் ஸ்டோன் கொண்டு தேயுங்கள். பின் கால்களை துடைத்துவிட்டு ஃபூட் க்ரீம் போட்டு மசாஜ் செய்யுங்கள். தினமும் குளிக்கும் போதும் ப்யூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்துக் குளியுங்கள். சரியாகி விடும்.    

•  ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை பழ தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, பாதத்தை சுத்தமாக்கும். மேலும் கிருமிகளை ஒழிக்கும்.  

•  கடுகு எண்ணெயை தினமும் கால் பாதம் மற்றும் கைகளில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும்.   

• மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு விட்டு விழுதாக அரைத்து கால் வெடிப்பில் பூசி வர கால் வெடிப்பு குணமாகும்.  

•  கற்றாழையில் இருக்கும் ஜெல்லி போன்ற திரவத்தை தினமும் இரண்டு முறை பூசி வந்தால் இரண்டு மாதங்களில் வெடிப்பு சரியாகிவிடும்.

காளான் இட்லி

மணக்கால் அய்யம்பேட்டை | 2:54 PM | Best Blogger Tips
Photo: காளான் இட்லி

காளான் இட்லி || mushroom idli

தேவைப்படும் பொருட்கள்: 

இட்லி மாவு - 4 கப், 
காளான் - 1 பாக்கெட், 
வெங்காயம் - 2, 
தக்காளி - 4, 
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன், 
தேங்காய் விழுது - 2 ஸ்பூன், 
மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன், 
கரம் மசாலா - 1 ஸ்பூன், 
எண்ணெய் - 2 ஸ்பூன், 
உப்பு, கறிவேப்பிலை சிறிதளவு. 

செய்முறை: 

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

* காளான்களைச் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். 

* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

* சிவக்க வதங்கியதும், பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, தேங்காய்விழுது சேர்த்து நன்கு வதக்கவும். 

* பின், காளான்களைச் சேர்த்து நன்கு கிளறி கடைசியில் கரம் மசாலா சேர்த்துக் கிளறி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். இட்லி தட்டுகளில் அரை கரண்டி மாவு ஊற்றி இரண்டு நிமிடம் மூடி வைத்து மீண்டும் திறந்து அதன் மேல் காளான் கலவையை பரவலாக வைத்து மேலும் அரை கரண்டி மாவை அதன் மேல் ஊற்றி மூடவும். 

* பின் வேக விட்டு, எடுத்து சூடாக பரிமாற அப்படியே சாப்பிடலாம் அல்லது சாம்பார், சட்னி, இட்லி பொடியுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.காளான் இட்லி || mushroom idli

தேவைப்படும் பொருட்கள்:

இட்லி மாவு - 4 கப்,
காளான் - 1 பாக்கெட்,
வெங்காயம் - 2,
தக்காளி - 4,
இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன்,
தேங்காய் விழுது - 2 ஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்,
கரம் மசாலா - 1 ஸ்பூன்,
எண்ணெய் - 2 ஸ்பூன்,
உப்பு, கறிவேப்பிலை சிறிதளவு.

செய்முறை:

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* காளான்களைச் சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* சிவக்க வதங்கியதும், பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, தேங்காய்விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

* பின், காளான்களைச் சேர்த்து நன்கு கிளறி கடைசியில் கரம் மசாலா சேர்த்துக் கிளறி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும். இட்லி தட்டுகளில் அரை கரண்டி மாவு ஊற்றி இரண்டு நிமிடம் மூடி வைத்து மீண்டும் திறந்து அதன் மேல் காளான் கலவையை பரவலாக வைத்து மேலும் அரை கரண்டி மாவை அதன் மேல் ஊற்றி மூடவும்.

* பின் வேக விட்டு, எடுத்து சூடாக பரிமாற அப்படியே சாப்பிடலாம் அல்லது சாம்பார், சட்னி, இட்லி பொடியுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
Via FB ஆரோக்கியமான வாழ்வு
 
வாத நோய்க்குச் சித்த மருத்துவச் சிகிச்சை

மணக்கால் அய்யம்பேட்டை | 2:53 PM | Best Blogger Tips
Photo: வாத நோய்க்குச் சித்த மருத்துவச் சிகிச்சை

காலம் போன கடைசியில் வாதம் வந்து வாய்த்ததே என்பது கிராமத்துப் பழமொழி. ஆம் வயது முதிர்ந்து நாடி தளர்ந்து உடல் ஒடுங்கிய வேளை இது. இந்த நேரத்தில் வாதம் வேறு வந்து வாய்த்துவிட்டதே என்ற வேதனையின் பிரதிபலிப்பே இந்தப் பழமொழியாகும்.

உடலில் உண்டாகும் பிணிகள் 4448 என்று சித்த மருத்துவம் சொல்கிறது. இதில் வாதம், என்பது 80 வகை என்று வரையறுத்துக் கூறப்பட் டுள்ளது. இவற்றின் குணங்களைத் துல்லியமாக விளக்குகிறது. யூகிமுனி வைத்திய காவியம் என்னும் சித்தர் நூல்.

மேற்கூறியபடி வலியென்று சொல்லப்படும் வாதக் குற்றம் மிகுதலே வாத நோயாகும். இன்னும் விளக்கமாகச் சொன்னால் நரம்பு செல்களில் கெட்ட நீர் தங்கித் தசைகளில் ஊறி வாயு அதிகரித்து வரும் நோயே வாத நோயாகும்.

வாதநோய் தாக்கும் இடங்களைப் பொறுத்து அது வெவ்வேறு பெயர்களைப் பெறுகின்றது. உதாரணமாக மூட்டுகளைத் தாக்கினால் மூட்டுவாதம் என்றும், முகத்தைத் தாக்கி முகம் கோணிக் கொண்டால் முக வாதம் என்றும், சர்வ அங்கங்களையும் தாக்கினால் சர்வாங்க வாதம் என்றும் பெயர்களைப் பெறுகிறது. இவ்வாறாக 80 வகை வாதங்களில் மனிதனை அதிகமாகத் தாக்குவது முடக்குவாதம், பக்கவாதம் எனும் இருவகை வாத நோய்களாகும். ஏனெனில் வாத நோய்களிலேயே மூட்டுகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு மனிதனின் இயக்கங்கள் அனைத்தையுமே முடக்கி அவனைச் செயலற்றவனாக்கி விடுவதே முடக்குவாதம்.

நரம்புகள் பாதிக்கப்பட்டு உறுப்புகளை உணர்விழக்கச் செய்து மனிதனைச் செயலற்றவனாக்கி விடுகிறது பாரிசவாதம்.

இந்த இருவித நோய்களுமே மனிதனை அணுவணுவாகச் சித்திரவதை செய்யும் நோய்களாகும்.

நவீன மருத்துவத்தில் எல்லாவித வாத நோய்களுக்கும் அவர்களிடம் இருக்கும் மருந்துகள் வலி கொல்லி மாத்திரைகள், உணர்விழக்கச் செய்யும் கிரீம்கள் மட்டுமே. அவை தற்காலிக மான நிவாரணம்தான். அதைத் தொடர்ந்து உண்டு வந்தால் மூட்டு எலும்புகளைத் தேய வைத்து நோயாளியை மேலும் முடமாக்கும் அபாயம் உண்டு. அதோடு ஜீரண மண்டலும் தோலும் பாதிக்கப்படுகின்றன.

முடக்குவாத நோயும் நிவாரணமும்

முடக்குவாதம் என்பது உஷ்ணம் மிகுதியா லோ கிருமித் தொற்றுகளாலோ உடலில் பிரிக்கப்பட வேண்டிய நீர் உடல் அங்கங்களின் மூட்டுகளில் தங்கி இணைப்புத் தசைகளை வீங்கச் செய்து மிகுந்த வலி தரும். தொடர்ந்து காய்ச்சல் அதனால் உடலை அசைக்க முடியாத தன்மையே முடக்கு வாதம். சுருங்கச் சொன்னால் மனிதனின் இயக்கங்கள் அனைத்தையுமே முடக்கி வைப்பதே முடக்கு வாதம். 

முடக்குவாத வியாதியின் ஆரம்பத்தில் சில சமயம் தொண்டை பாதிக்கப்படுகிறது. பின்பு எலும்பு சந்துகள் சிவந்து வீங்கி வலியுண்டாகிப் படிப்படியாக பெரிய மற்றும் சிறிய மூட்டு களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. அதனால் காய்ச்சல், வாந்தி, மயக்கம், உடம்புப் பெருக்கம் உண்டாகும். உட்கார்ந்தால் எழ முடியாது. அசைந்தால் உயிர் போவது போல் வலிக்கும். எந்த வேலையிலும் கவனம் செல்லாது. இந்த நோயைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் இதயம் நோய் வாய்ப்படும். இதனால் இதய வால்வுகளிலும், உட்பகுதிகளிலும் அழற்சி உண்டாகும்.

முடக்குவாதம் நரம்புத் தளர்ச்சி, மனச் சஞ்சலம் ஆகியவைகளால் கூட வரவாய்ப்புள்ளது.

சீன நாட்டில் முடக்குவாதம் போன்ற நோய்களுக்குப் புறச் சிகிச்சையையே மேற்கொள்ளுகிறார்கள். உடல் இயக்கத்திற்குத் தேவையான ஆதார சக்தி மெரிடின் என்று அழைக்கப்படும் 12 சக்தி நாளங்களின் வழியாக உடலில் ஒட்டிக் கொண்டிருப்பதாகச் சீன மருத்துவம் கூறுகிறது. இந்த சக்தியில் ஏதேனும் குறைபாடோ அல்லது, சக்தி நாளங்களின் ஓட்டத்திற்குத் தடையோ வருமாயின் அது பல நோய்களை உருவாக்குகிறது. அதற்குச் சக்திப் புள்ளிகளில் நுண்ணிய ஊசிகளைத் கொண்டு தூண்டிச் சக்தியை சீர் செய்வதே அக்குபஞ்சர் மருத்துவமாகும். இதன் மூலம் முடக்குவாதத்தை சரி செய்கிறார்கள். சிகிச்சை மேற்கொள்ளுமுன் ஓகிசிமாக்ஸô என்னும் மூலிகையால் ஒத்தடம் கொடுக்கிறார்கள்.

மின்காந்த உயிரியல் ஒரு புதிய அறிவியல். இதன் மூலம் மிகவும குறைந்த அளவு மின் அலைகளைக் கொண்டு மின்காந்த அலைகளாக மாற்றித் தீராத முடக்குவாதம் மற்றுமுள்ள வாத நோய்களுக்கு வெற்றிகரமாகச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. முடக்குவாத நோயாளிகளின் வசதிக்காக உட்கார்ந்த நிலையிலும், படுக்கை கொண்ட நிலையிலும் மின்காந்தக் கூண்டுகள் அமைக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பல்வேறு வகையான சிகிச்சை முறைகள் சித்த மருத்துவத்தில் உண்டு. முதலில் வாதத்திற்கான சிகிச்சை முறை பற்றிப் பார்ப்போம்.

முடக்குவாதக் குடிநீர் :

முதிர்ந்த பூவரசன் பட்டை டீ கிலோ எடுத்து ணீ லிட்டர் நீரில் போட்டு 100 மில்லியாகக் சுண்டக்காய்ச்சி அதில் 20 கிராம் தேன் விட்டுக் கலந்து 3 நாள் வெறும் வயிற்றில் குடித்து உப்பில்லாப் பத்தியம் இருக்கவும். குடிநீரைத் தினமும் தயாரித்துக் கொள்ளவும்.

அதைப் போலவே மாவிலிங்கம் இலை 2 பிடி எடுத்து டீ லிட்டர் தண்ணீர் ஊற்றி 50 மில்லியாகக் காய்ச்சி வற்ற வைத்து 50 மில்லி தேங்காய்ப்பால், 50 மில்லி ஆவின் பால் கலந்து வேளைக்கு 50 மில்லி வீதம் மூன்று வேளையும் கொடுத்துவர முடக்குவாதம் சாந்தப்படும்.

சூரணம்

கொடி வேலி, மிளகரணை, நொச்சி இவைகளின் வேர்ப்பட்டையைக் சமமாக எடுத்துச் சூரணமாகச் செய்து வைத்துக்கொண்டு திரிகடி அளவு காலை மாலை குளிர்ந்த நீரில் சாப்பிட்டுவர முடக்குவாதம் விலகும்.

லேகியம்

100 கிராம் ஆமணக்குப் பருப்பை வெண்ணெய் போலரைத்துச் சிறிதுசிறிதாக 100 கிராம் நெய் விட்டுச் சிவக்க வதக்கி அதில் 600 மில்லி பால்விட்டுக் காய்ச்சி குழம்பு பதமானதும் 100 கிராம் சுக்குத் தூளைப் பொடித்துத் தூவிக் கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு 5 கிராம் அளவு காலை, மாலை உண்டு வர முடக்கு வாதம், அதனால் ஏற்பட்ட இடுப்பு, பிடிப்பு, இடுப்பு வலியும் குணமாகும்.

பரங்கிப்பட்டை, கொடி வேலி வேர்ப்பட்டை சங்கன் வேர்ப்பட்டை, அமுக்கிலான் கிழங்கு ஆகிய நான்கிலும் வகைக்கு 100 கிராம் எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஏலம் இவைகள் வகைக்கு 15 கிராம் வீதம் சேர்த்துச் சூரணித்து வைத்துக்கொள்ளவும். ஆவின் நெய் ணீ லிட்டர், தேன் டீ லிட்டர், சர்க்கரை டீ கிலோ விட்டுக் காய்ச்சி சூரணத்தைப் போட்டுக் கிண்டி வேளைக்கு 5 கிராம் உட்கொள்ள முடக்கு வாதத்திற்கு தீர்வு உண்டு. கடுமையான முடக்கு வாதமாக இருந்தால் மகாவில் வாதி லேகியத்தை முறைப்படி உண்ண நோய் விலகும்.

முடக்குவாத எண்ணெய்

சுத்தி செய்த வீரம் 20 கிராம் எடுத்து 20 கோழி முட்டையின் வெண்கருவில் சுருக்குக் கொடுக்கவேண்டும். சுத்தி செய்த வெடியுப்பு 20 கிராம், சுத்தி செய்த நேர்வாளம் 20 கிராம், முற்றிய தேங்காய்ப்பால் விட்டு மெழுகு போல் அரைத்து முற்றிய ஏழு தேங்காயைத் துருவிப் பாலெடுத்து, அரைத்து வைத்துள்ள மெழுகைப் போட்டுக் காய்ச்ச வேண்டும். நீர் சுண்டிய தருணத்தில் எண்ணையை வடித்துக் கொள்ளவும்.

இவ்வெண்ணையில் 5 முதல் 10 சொட்டு வரை சர்க்கரையில் கலந்து கொடுக்கவும். 2 முறை பேதியாகும். அளவு சொட்டுக்களைக் கூட்டியோ, குறைத்தோ கொடுக்கவேண்டும். 10 நாட்கள் கொடுத்து மருந்து நிறுத்திவிட வேண்டும். தேவையானால் 1 வாரம் கழித்து மீண்டும் கொடுக்கலாம். இது முடக்கு வாதத்திற்கு மிக நல்ல அநுபவ மருந்து.

பக்கவாத நோயும் பரிகாரமும்

இதைப் பக்ஷவாதம், பாரிசவாதம், பாரிசவாயு என்று ஜீவரட்சாமிர்தம் என்னும் சித்த மருத்துவ நூல் குறிப்பிடுகிறது. இந்நோய் தனி நோயாகவோ அல்லது மற்ற நோயின் தொடர் நோயாகவோ வரலாம். பக்கவாத நோயில் மூன்று வகைகள் உள்ளன.

உடலின் வலது அல்லது இடது பக்கத்தை யோ அல்லது பாகத்தையோ செயலிழக்கச் செய்துவிடுகிறது. அதாவது ஒரு கால் ஒரு கை அசைக்கமுடியாமல் போய்விடுகிறது இது ஒரு வகை.

ஒரு காலோ அல்லது ஒரு கையோ மட்டும் அசைக்கமுடியாமல் செயலிழந்து விடுவது மற்றொரு வகையாகும்.

இரண்டு கால்களுமே அசைக்க முடியாமல் போவது மூன்றாவது வகையாகும்.

பக்கவாத நோய் வரக்காரணம் காரம், கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவையுள்ள உணவு வகைகளை அதிகமாக உண்ணுதல், அளவுக்கதிகமாகக் குளிரால் தாக்கப்படுதல், மிதமிஞ்சியச் சிற்றின்பம், தொடர்ந்து போதைப் பொருள்களை உபயோகிப்பது, குறிப்பாகப் போதை மயக்கத்தில் அடிக்கடி உடலுறவு கொள்ளுதல், ஆகிய காரணங்களால் பக்கவாதம் வரலாம்.

மேலும் முதுகுத் தண்டில் அடிபடுவதால் நரம்பிகள் கெட்டிப்பட்டுக் கட்டிகள் ஏற்பட்டு நரம்புகளை அழுத்துவதால் மூளையில் ரத்தக் குழாய்கள் உடைந்து போதல், அல்லது ரத்தம் உறைந்து கெட்டிப்படுதல், ஆகிய காரணங்களால் மூளைக்கு ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. அதனால் அதை நிர்வகிக்கக்கூடிய பகுதிகள் உணர்ச்சி குறைந்து திடீரென இந்நோய் தாக்கலாம். பிரதானமாக வர்மம் புள்ளிகளில் அடிபட்டுவிட்டால், அதை உடனே கவனிக்காமல் விட்டுவிட்டால், நாளடைவில் பக்கவாத நோய் பற்றிக்கொள்ள அதுவே காரணமாகலாம்.

த்ராம்பஸஸ் என்று சொல்லப்படுகின்ற ரத்தத்தில் ஏற்படும் சிறுசிறு கட்டிகள் அல்லது பெரியகட்டி கள் ரத்த நாளங்களை அடைத்துவிடுவதால் மூளையின் செயல்திறனில் பாதிப்பு ஏற்பட்டு உடலில் சில பாகங்கள் செயலிழந்து பக்கவாதத் தால் பாதிக்கப்படலாம். இது தவிர, நுண்ணுயிர்க் கிருமிகளாலும், இதய வால்வுகள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதாலும் இரத்தம் அழுத்தம், நீரிழிவு, ரகசிய நோய்களாலும் வரலாம்.

பொதுவாக பக்கவாத நோய் 40 முதல் 60 வயதுள்ளவர்களைத் தாக்குகிறது. அதிகமாக ஆண்களுக்கே இந்நோய் ஏற்படுகிறது எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பக்கவாத நோய் ஆணுக்கு வலதுபுறமும், பெண்ணுக்கு இடது புறமும் தாக்கினால் எளிதில் தீராது. அதோடு நாக்கும் பாதிக்கப்பட்டால் மருந்துக்கு வசப்படு வதில்லை. கால தாமதம் ஆகலாம். பக்க வாத நோய் தாக்கி நீண்ட நாளாகுதல், உடல் மெலிதல், நோய் தாக்கிய பகுதி சூம்பிப் போதல், உடல் வீங்குதல், நடுக்கம் ஏற்படல் ஆகிய இவை மருத்துவத்திற்குக் கட்டுப்படுவது கடினம். நீண்ட நாள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டால் பலன் கிடைக்கலாம்.

பக்கவாத நோய் வாதமிகுதியால் வரும் நோய் எனவே வாதத்தை தன்நிலைப்படுத்த வேண்டும்.

பக்கவாத நோயாளிக்குத் தாக்கப்பட்ட உறுப்புகள் பயனற்றுப் போவதால் முதலில் தேங்கியுள்ள மலத்தைக் கழிச்சல் மருந்துகளைக் கொடுத்து மலச்சிக்கலைப் போக்கவேண்டும்.

அதற்கு கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக் காய் மூன்றையும், கொட்டைகளை நீக்கிச் சமமாக எடுத்து உலர வைத்து சூரணமாக எடுத்து சலித்து வைத்துக்கொண்டு பக்கவாத நோயாளிக்கு 1 முதல் 2 தேக்கரண்டி வரை இரவு சாப்பிடச் சொல்லலாம். இதையே திரிபலா சூரணம் என்பர். இதைப்போலவே நிலாவரைச் சூரணத்தையும் உபயோகிக்கலாம். இவை இரண்டும் சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும். மலச்சிக்கல் தீர்ந்த பின்பு, கேடடைந்து பயனற்றுப் போன உறுப்புகளுக்கு வலிமை தந்து, வாதக் குற்றத்தைப் போக்கக்கூடிய உள் மருந்துகளைத் தரவேண்டும். அதற்கான எளிய சிகிச்சை முறைகளை அறிவோம்.

முள் சங்கின் இலை, அதன் விதை, அதன் பட்டை இம்மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து சுண்டைக்காயளவு காலை, மாலை, சாப்பிட்டு, சுடுநீர் அருந்தி வர, பாரிசவாதம் அதனால் கை கால்கள் உணர்வற்றுப்போன நிலை மாறும்.

மேலும் சித்திர மூலப்பட்டை, மாவிலிங்கப் பட்டை, கொன்றைப் பட்டை, முருங்கைப்பட்டை., சங்கன்பட்டை, வேப்பம் பட்டை, வெள்ளறுகு, சுக்கு, மிளகு, பஞ்சலவணம் என்று சொல்லப் படுகின்ற இந்துப்பு, வளையலுப்பு, சோற்றுப்பு, கல்லுப்பு, கரியுப்பு முதலியவைகளைச் சமமாக எடுத்து இடித்துச் சூரணமாகச் சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்தச் சூரணத்தில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் முதல் 2 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர, பக்கவாதம் குணமடையும்.

இவையன்றிப் பக்கவாத நோய்க்குச் சண்ட மாருத செந்தூரம், ஆறுமுகச் செந்தூரம், அயவீரச் செந்தூரம், கெந்தி மெழுகு, நந்தி மெழுகு, மகாவீர மெழுகு, வாதராட்சதன் போன்ற உயரிய மருந்துகள் சித்த மருத்துவத்தில் உள்ளன. ஆனால் இவைகளைக் கை தேர்ந்த சித்த மருத்துவரின் ஆலோசனைப்படிதான் உண்ண வேண்டும். பக்கவாத நோயில் உள் மருந்துகளுடன் வெளிப்பூச்சுத் தைலங்களும், மற்றும் ஒத்தடம் போடுதல் போன்ற சிகிச்சைகளும் மிகவும் அவசியம். காரணம் உணர்விழந்த பகுதிகளைத் தேய்த்துச் சூடு உண்டாக்குவதன் மூலம் ரத்த ஓட்டம் உண்டாகி உணர்வு திரும்ப வாய்ப்புள்ளது.

அவ்வகையில் பச்சைச் சித்திர மூலவேர் 150 கிராம், ஊமத்தன் இலைச்சாறு 1 லிட்டர், ஓமம் 50 கிராம், நல்லெண்ணெய் ஒரு லிட்டர், கற்பூரம் 25 கிராம் இவைகளில் முதல் சொன்ன சித்திர நூல் வேலை சோற்றுக் கற்றாழையின் சாறு விட்டு நன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு மீதமுள்ள ஊமத்தை இலைச்சாறு, நல்லெண்ணெய் இவைகளை நன்றாகக் கலந்து வண்டல் மெழுகு பதமாகத் தங்கும்போது தேக்கி வைத்துக் கொண்டு பக்கவாத நோயில் பாதிக்கப்பட்ட இடத்தின்மீது தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். காலை, மாலை இப்படிச் செய்தால் போதும்.

இது தவிர பிண்டத் தைலம், வாத கேசரித் தைலம், மையத் தைலம் விஷமுஷ்டித் தைலம் உளுந்துத் தைலம் போன்ற தைலங்கள் கடையில் கிடைக்கின்றன. இவையும் பக்கவாத நோய் களுக்குப் பயன்படுத்தலாம்.

பக்கவாத நோயினால் சில நேரம் நாக்கு பாதிக்கப்பட்டுத் துவண்டுவிடும். அதற்கு அண்டத் தைலம் எனும் மருந்து அற்புதமாகப் பயன் தருகிறது.

மேற்பூச்சித் தைலங்களைப் பூசி மசாஜ் செய்த பின் கழற்சிக் கொழுந்து, வாதநாராயணன் உத்தாமணி இலை, முடக்கற்றான் இலை, நொச்சி இலை, தழுதாலை இலை ஒவ்வொன்றும் ஒரு கைப்பிடி அளவு எடுத்துப் பொடியாக நறுக்கி ஆமணக்கு எண்ணெயில் போட்டுச் சிறு மூட்டை களாகக் கட்டிப் பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

பக்கவாதத்தால் செயலிழந்த உறுப்புகளுக்குச் சிகிச்சை முறைகளுடன் லேசான பயிற்சியும் அவசியம். பக்கவாத நோயாளிகளுக்கு இதய நோய், நீரிழிவு மற்றும் பால்வினை நோயிருந்தால் அதற்கான மருந்துகளையும் கொடுத்து நோயைக் குணப்படுத்த வேண்டும். பக்கவாத நோயாளி களுக்கு அக, புற சிகிச்சைகளோடு உணவு முறைகளிலும் கவனம் செலுத்தினால் துரிதமாகக் குணமடைய வாய்ப்புள்ளது.

பொதுவாக வாதரோகம் அனைத்திற்குமே உள் மருந்துகளுடன் மேற்பூச்சு தைலங்களும் ஒத்தட முறைகளும் மேற்கொள்வது அவசியம்.

பொதுவாக வாத நோய்க்குச் சிகிச்சை மேற்கொள்ளும்போது பத்தியம் மிக முக்கியம். மலச்சிக்கலை உண்டாக்காத உணவு முறை முக்கியம். சைவ உணவே சாலச் சிறந்தது.

வெங்காயம், தக்காளி, காரட், புதினா, கறிவேப்பிலை, வெள்ளரிக்காய் போன்றவை களைக் கலந்து பச்சடி செய்து உண்ணவேண்டும். வாரம் இருமுறை கொள்ளு ரசம் சாப்பிட வேண்டும். அரிசி உணவைக் குறைத்து கோதுமை உட்கொள்ளலாம். புளிளை அறவே நீக்க வேண்டும். உப்பைக் குறைக்க வேண்டும். உடலில் நீர் சேராமல் காக்கும் முள்ளங்கிச் சாம்பார் வாழைத்தண்டு கூட்டு, முருங்கைக்கீரை பொரியல் ஆகியவை உணவில் சேர்க்கலாம்.

டீ, காப்பிக்கு பதிலாக காலையில் 1 டம்ளர் பார்லித் தண்ணீர் குடிக்கலாம். இரவில் 2 பல் பூண்டு போட்டுக் காய்ச்சிய பாலையும், பூண்டை யும் தேன் கலந்து சாப்பிடலாம். முடக்கு வாதத்திற் கென்றே இறைவன் படைத்த மூலிகை முடக் கற்றான். இதனை சூப்பாக செய்து வாரம் ஒரு முறை அருந்தி வரலாம்.

முன் சொன்னவாறு பொதுவாக வாதநோய்க்குப் புறமருந்து, அகமருந்து, உணவுப் பத்தியம் இவைகளுடன் உடற்பயிற்சியும் அவசியம். ஆதலால் கால்களுக்குப் பயிற்சி தரும் விதத்தில் மடக்கி நீட்ட முயலவேண்டும். ஆசனத்தில் திரிகோணாசனம் (முக்கோணநிலை) மிகவும் பயன்தரவல்லது. பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சியால் உயிர்காற்று உடலுக்கு அதிகம் கிடைப்பதால் நோய் விரைவில் குணமாகும்.

வாதத்திற்குச் சிகிச்சை அளிப்பதில் மிகுந்த கவனம் தேவை. தழைபார், வேர்பார், மெல்ல மெல்ல பஸ்பம், செந்தூரம் பார் என்ற சித்தர் களின் மறைமொழிக்கேற்ப ஆரம்பத்தில் பாஷான மருந்துகளைப் பிரயோகிக்கக்கூடாது. தேவை யானால் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

அதோடு நோயாளிகளுக்குச் சிறுநீரகக் கோளாறு, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் உள்ளனவா எனப் பரிசோதித்து அதற்குத் தகுந்த வண்ணம் மருந்துகளைப் பிரயோகிக்க வேண்டும். மருந்துகளுடன் உடல் தேற்றி மருந்துகளையும் இணைத்தே மருத்துவம் மேற்கொள்ளவேண்டும். முடக்கு வாதத்திற்கு முதல் தரமான சிகிச்சை சித்த மருத்துவத்தில் மட்டுமே உண்டு.

இரும்பு கோணிடில் யானையை வெல்லலாம்.

அரும்பு கோணிடில் அதன் மணம் குன்றுமோ      

கரும்பு கோணிடில் கட்டி பாகாகலாம்

நரம்பு கோணிடில் நாமதற் கென்செய்யலாம்

என்ற சித்தர் பாடலைப் படிக்கும்போது வாத நோய்கள் என்பது தெளிவாகிறது. எனவே இவைகளுக்குச் சுயமருத்துவம் செய்து காலத்தை வீணாக்காமல் ஆரம்ப நிலையிலேயே திறமையான சித்த மருத்துவரை நாடிச் சிகிச்சை மேற் கொண்டால் கண்டிப்பாக எல்லாவித வாத நோய் களையும் வெல்லலாம்.

 Dr.K.S.சுப்பையா

மூட்டு வலியை குணப்படுத்த ஆயுர்வேத சிகிச்சை !

மணக்கால் அய்யம்பேட்டை | 2:47 PM | Best Blogger Tips
Photo: மூட்டு வலியை குணப்படுத்த ஆயுர்வேத சிகிச்சை !

வலியை அதிகப்படுத்தும் செயல்களை தவிர்த்து (உதாரணம்- பழுதூக்குதல்) ஓய்வாக இருந்தல். வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கவும். முதல் நாளுக்குப்பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறையாவது இப்படி செய்ய வேண்டும். 

கால் முட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீக்கங்களை குறைக்கலாம். மூட்டிகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து உறங்கலாம். சுடு தண்ணீரில் 2 கிராம் உலர்ந்த இஞ்சியை கலந்து குடித்தல் மற்றும் மோர் உட்கொள்ளுதல் கபம் மற்றும் வாதத்தைக் குறைக்கும். 

இது செரிமான சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, மூட்டு இணைப்புகளின் வீக்கத்தைக் குறைக்கிறது. சுரைக்காய் போன்று கொடியில் காய்க்கும் கசப்பு காய்கள், வாடாமல்லிகை இலைகள், வேப்பிலைகள், பாகற்காய், கோதுமையில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தியுடன் பார்லி சேர்த்த உணவு பொருள், ஸ்டார்ச் நீக்கப்பட்ட அரிசி சோறு, கொள்ளு, பியஸ் ஆகியவை உணவு பொருள்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

பால், தயிர், பன்னீர், பாலாடையுடன் கூடிய கரும்புச் சாறு குறிப்பாக வெல்லம், சர்க்கரை, பருப்பு, மீன் மற்றும் நறுமணப் பொருள் கொண்ட பொருள்களை உட்கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி (வாரத்தில் 4 நாள்களுக்கு 30-லிருந்து 40 நிமிடம் வரை நடக்க வேண்டும்) செய்தல் அவசியம். தினசரி வாழ்க்கையில் யோகா மேற்கொள்ள வேண்டும். 

ஒரு மேசை கரண்டி டில் ஆயில், ஒரு மேசை கரண்டி மாட்டு நெய், அரை மேசை கரண்டி இஞ்சி சாறு, அரை மேசை கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு கரும்பு சாறு ஆகியவை சேர்ந்த கலவை வாதத்தைக் குறைக்க உதவுவதோடு, எலும்பு மூட்டு இணைப்பில் வீக்கத்தையும் குறைக்கிறது. 

இதற்கு மாற்றாக வெதுவெதுப்பான பாலுடன் ஒரு மேசை கரண்டி விளக்கெண்ணெய் கலந்து இரவில் குடிப்பதால் அதிக செரிமானத்தையும், வாதத்தையும் குறைக்கலாம். 5 கிராம் இஞ்சி கூழுடன் கூடிய ரோஸ்ட், சீரகம், கல் உப்பு, கருப்பு உப்பு, உலர்ந்த இஞ்சி பவுடர் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை வெண்ணெயுடன் சேர்த்து உட்கொள்ளுவதால் மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஆகியவற்றை வெகுவாகக் குறைக்கிறது. 

போதுமான நெய் அல்லது எண்ணெய் சேர்த்து உணவு சமைக்கப்பட வேண்டும். பால், சோறு, மட்டன் சூப் மற்றும் இனிப்பு, புளிப்பு அல்லது உப்பு நிறைந்த சத்தான உணவுப் பொருள்களை உட்கொள்ள வேண்டும். வலியை அதிகப்படுத்தும் செயல்களை தவிர்த்து (உதாரணம்- பழுதூக்குதல்) ஓய்வாக இருந்தல். வலி ஏற்படும் இடத்தில் ஐஸ் கட்டிகளை வைக்கலாம். முதல் நாளில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 நிமிடங்கள் வரை ஐஸ் கட்டிகளை வைக்கவும். முதல் நாளுக்குப்பின் குறைந்தது ஒரு நாளில் நான்கு முறையாவது இப்படி செய்ய வேண்டும்.

கால் முட்டியினை முடிந்தவரை உயரமாக தூக்குவதனால் வீக்கங்களை குறைக்கலாம். மூட்டிகளின் கீழ் அல்லது இடையில் தலையணைகளை வைத்து உறங்கலாம். சுடு தண்ணீரில் 2 கிராம் உலர்ந்த இஞ்சியை கலந்து குடித்தல் மற்றும் மோர் உட்கொள்ளுதல் கபம் மற்றும் வாதத்தைக் குறைக்கும்.

இது செரிமான சக்தியை அதிகரிக்க உதவுவதோடு, மூட்டு இணைப்புகளின் வீக்கத்தைக் குறைக்கிறது. சுரைக்காய் போன்று கொடியில் காய்க்கும் கசப்பு காய்கள், வாடாமல்லிகை இலைகள், வேப்பிலைகள், பாகற்காய், கோதுமையில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தியுடன் பார்லி சேர்த்த உணவு பொருள், ஸ்டார்ச் நீக்கப்பட்ட அரிசி சோறு, கொள்ளு, பியஸ் ஆகியவை உணவு பொருள்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பால், தயிர், பன்னீர், பாலாடையுடன் கூடிய கரும்புச் சாறு குறிப்பாக வெல்லம், சர்க்கரை, பருப்பு, மீன் மற்றும் நறுமணப் பொருள் கொண்ட பொருள்களை உட்கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி (வாரத்தில் 4 நாள்களுக்கு 30-லிருந்து 40 நிமிடம் வரை நடக்க வேண்டும்) செய்தல் அவசியம். தினசரி வாழ்க்கையில் யோகா மேற்கொள்ள வேண்டும்.

ஒரு மேசை கரண்டி டில் ஆயில், ஒரு மேசை கரண்டி மாட்டு நெய், அரை மேசை கரண்டி இஞ்சி சாறு, அரை மேசை கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு கரும்பு சாறு ஆகியவை சேர்ந்த கலவை வாதத்தைக் குறைக்க உதவுவதோடு, எலும்பு மூட்டு இணைப்பில் வீக்கத்தையும் குறைக்கிறது.

இதற்கு மாற்றாக வெதுவெதுப்பான பாலுடன் ஒரு மேசை கரண்டி விளக்கெண்ணெய் கலந்து இரவில் குடிப்பதால் அதிக செரிமானத்தையும், வாதத்தையும் குறைக்கலாம். 5 கிராம் இஞ்சி கூழுடன் கூடிய ரோஸ்ட், சீரகம், கல் உப்பு, கருப்பு உப்பு, உலர்ந்த இஞ்சி பவுடர் மற்றும் கருப்பு மிளகு ஆகியவற்றை வெண்ணெயுடன் சேர்த்து உட்கொள்ளுவதால் மூட்டு வலி மற்றும் முதுகு வலி ஆகியவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

போதுமான நெய் அல்லது எண்ணெய் சேர்த்து உணவு சமைக்கப்பட வேண்டும். பால், சோறு, மட்டன் சூப் மற்றும் இனிப்பு, புளிப்பு அல்லது உப்பு நிறைந்த சத்தான உணவுப் பொருள்களை உட்கொள்ள வேண்டும்.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு
 
விந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 2:32 PM | Best Blogger Tips

இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது. இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம். மேலும் கருவுறுதல் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் தான் இருக்கும். எனவே இந்த மாதிரி பிரச்சனை என்றதும் பெண்கள் மட்டும் நல்ல சரியான உணவுகளை உண்டால் மட்டும் போதாது, ஆண்களும் தான் ஒரு சில உணவுகள் மற்றும் செயல்களை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக இந்த மாதிரியான பிரச்சனை வந்தால், அனைவரும் உடனே மருத்துவரிடம் சென்று அதற்கான தீர்வை சரிசெய்ய முயல்வார்கள். ஆனால் அவ்வாறு சென்று என்ன தான் சிகிச்சை மேற்கொண்டாலும், ஒரு சில உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் உணவுகள் மூலமும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். குழந்தை பெற நினைப்பவர்கள். சிகரெட் பிடிப்பவராக இருந்தால், உடனே நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் அவையும் குழந்தை பிறப்பிற்கு தடையை ஏற்படுத்தும். இப்போது எந்த உணவுகளை ஆண்கள் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவை அதிகரிக்கலாம் என்று பார்ப்போமா!!!

பூண்டு

இந்த உணவு ஆண் மற்றும் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின் பி6 இருப்பதால், இது இருபாலரும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதற்கான உணர்வை அதிகரித்து, கருவுறுதலுக்கு வழிவகுக்கும்.

மாதுளை (very effective)

இந்த சுவையான சிவப்பு நிற பழத்தை சாப்பிட்டால், ஆண்களின் விந்தணு அதிகரிப்பதோடு, அதன் சக்தியும் அதிகமாக இருக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் விந்தணுவின் அளவையும், சக்தியையும் அதிகரிக்கும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் புரோட்டீன்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, இதில் ப்ரோமெலைன் என்னும் நொதிப்பொருள் இருப்பதால், அவை உடலில் உள்ள உறவில் ஈடுபடுவதற்கான உணர்ச்சியை அதிகரிக்கும்.

பசலைக் கீரை

பசலைக் கீரையில் ஃபோலிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. இது விந்தணுவின் உற்பத்தியை அதிகரித்து, விந்தணுவில் உள்ள டி.என்.ஏ -வைப் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த உணவில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. எனவே தான், பசலைக் கீரை ஆண்களின் ஆண்மைத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது.

மிளகாய்

மிளகாய் என்றதும் நம்பமுடியாது. ஆனால் உண்மையில் மிளகாய் விந்தணுவை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், இவை எண்டோர்பின்கள் என்னும் ஒருவித சந்தோஷம்ன உணர்வைத் தூண்டக்கூடிய ஹார்மோன்களை விடுவிக்கும். இதனால் உடல் தளர்வடைந்துவிடும். மேலும் இதில் வைட்டமின் சி, பி, ஏ மற்றும் ஈ சத்துக்களும் உள்ளன.

தக்காளி

இது பொதுவாக சமையலில் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் ஒன்று. இந்த உணவுப் பொருளில் விந்தணுவை ஆரோக்கியமாக்கவும், அதிகரிக்க செய்யும் கரோட்டினாய்டு லைகோபைன் உள்ளது. அதிலும இதனை பருப்புகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இல்லையெனில் தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடிக்கலாம். இதனால் இயற்கையாகவே விந்தணுவின் அளவானது அதிகரிக்கும்.

தர்பூசணி (very effective)

தர்பூசணிப் பழத்தில் லைசோபைன் மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், விந்தணு அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

வைட்டமின் சி உணவுகள்

வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதாலும், ஆண்கள் தங்களது விந்தணுவின் அளவை அதிகரிக்கலாம். அதற்கு வைட்டமின் சி நிறைந்துள்ள உணவுகளான சிட்ரஸ் பழங்கள் சரியானதாக இருக்கும்.

ஆப்பிள்

பழங்களில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஆப்பிள் முதன்மையானது. அத்தகைய பழத்தை பெண்களை விட ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். அதிலும் ஆப்பிள் சீடர் வினிகரை சாப்பிட்டால், நம்பமுடியாத அளவில் தீர்வு கிடைக்கும்.

முந்திரி

ஸ்நாக்ஸில் சிறந்த உணவுப் பொருள் ஸ்நாக்ஸ் தான். அத்தகைய நட்ஸில் முந்திரிப் பருப்பு மிகவும் சுவையுடன் இருக்கும். எனவே இதனை ஆண்கள் மற்றும் பெண்கள் அவ்வப்போது ஸ்நாக்ஸாக சாப்பிட்டால், இதில் அதிகமாக இருக்கும் ஜிங்க் சத்து, கருவுறுதல் தன்மையை அதிகரிக்கும்.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு

ஆடி மாதம் வந்தால் புது கல்யாணமான ஜோடிகளை பிரிப்பதேன்...

மணக்கால் அய்யம்பேட்டை | 1:22 PM | Best Blogger Tips
ஆடி மாதம் வந்தால் புது கல்யாணமான ஜோடிகளை பிரிப்பதேன்...

ஆடி மாதம் வந்தாலே புதிதாக கல்யாணமான ஜோடிகளுக்கு ஆகாத மாதமாகிவிடும். வீட்டில் உள்ள பெரியவர்கள் புதுமண ஜோடிகளை பிரித்து பெண்ணை அம்மா வீட்டுக்கு அணுப்பி வைத்துவிடுவார்கள். இந்த பழக்கம் காலம் காலமாக நடந்து வருகிறது. அறிவியல் பூர்வமாகவும் இதை ஏற்றுகொள்கிறார்கள்.

ஆடி மாதம் கூடினால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும். சித்திரை மாதம் அதிகம் வெப்பம் நிறைந்த மாதம் இந்த மாதத்தில் கர்பிணிகளும் பிறக்கும் குழந்தையும் மிகவும் சிரமத்துக்குள்ளாகும். குழந்தைக்கு சின்னம்மை போன்ற வெப்ப நோய் எளிதில் தாக்கும்.

ஆடி மாதத்தில் தான் பருவமழை தொடங்கும்,தண்ணீர் மூலமாகவும் காற்று மூலமாகவும் நோய்கள் எளிதில் பரவும். இந்த சமயத்தில் புதுமணத்தம்பதிகள் இணைய நேரிட்டால் கருவில் வளரும் குழந்தைக்கு நோய் எளிதில் தாக்கும். எனவே தான் இந்த மாதத்தில் புதுமண தம்பதிகளை பிரித்து வைக்கிறார்கள்.

அறிவியல் பூர்வமான காரணங்கள் இருப்பதால் புது ஜோடிகள் இதை ஏற்று கொள்ளத்தான் வேண்டும்.

Via FB இந்து மத வரலாறு - Religious history of hinduism
 
சீழ்க் கட்டிகள் - வெயில் கால நோய் பற்றிய தகவல்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | 12:52 PM | Best Blogger Tips
சீழ்க் கட்டிகள் - வெயில் கால நோய் பற்றிய தகவல்கள்:-

சீழ்கட்டிகள் என்பது ஆபத்தான நோயல்ல என்ற போதும் வேதனை அளிக்கின்றவையாக இருக்கின்றன.  சருமத்தில் உள்ள முடி வேர்களில் கிருமித் தொற்று ஏற்படுவதால் இவை உண்டாகின்றன. சொறிவது உராய்வது போன்றவற்றால் சழுமத்தில் ஏற்படக் கூடிய நுண்ணிய காயங்களுடாக கிருமிகள் சருமத்தைத் தாண்டி உள்ளே ஊடுருப் பெருகுவதால் கட்டிகள் ஏற்படுகின்றன

பொதுவாக முகம், கழுத்து, அக்குள், முதுகு, தொடை போன்ற இடங்களிலேயே இவை அதிகம் தோன்றுவதுண்டு. இருந்தாலும் வேறு முடி உள்ள வேறு இடங்களிலும் தோன்றலாம். காது, மூக்கு போன்ற நொய்த இடங்களில் தோன்றும் கட்டிகள் கடுமையான வேதனையைக் கொடுக்கும்.

எவ்வாறு இருக்கும்?

கட்டி தோன்றும்போது ஆரம்பத்தில் சற்று வலி இருக்கும், தடவினால் வீக்கம் இருப்பதாக உணர்வீர்கள். உற்று நோக்கினால் அவ்விடம் சற்றுச் சிவந்து தடித்திருப்பதாகத் தென்படும். நாட்கள் செல்ல வீக்கம் அதிகரிக்கும். பின்பு கடினமமாக இருந்த வீக்கம் சற்று மெதுமையாகி தொள தொளவென மாறும். உள்ளே கட்டி கரைந்து சீழ் தோன்றியிருக்கும். சீழ் அதிகரிக்க வலியும் அதிகரிக்கும்.

கட்டிகளின் அளவுகளில் வித்தியாசங்கள் இருக்கும். கச்சான் கொட்டை அளவு முதல் டெனிஸ் பந்தளளவு அல்லது அதனிலும் பெரிதாகவும் வீங்கலாம். கட்டி பழுக்க ஆரம்பிக்கும்போது அதன் மத்தியில் சற்று மஞ்சள் நிறமாக மாற்றமுறும். இதனை மருத்துவத்தில் Pரளவரடந  என்பார்கள்.  
சில அருகருகாக பல கட்டிகள் தோன்றும்போது ஒன்றுடன் மற்றது இணைந்து பெரிதாக மாறக் கூடும்.

வலி அதிகமாகி வீக்கமும் அதிகரிக்கிறது எனில் நீங்கள் மருத்துவரை நாட நேரிடலாம். ஆனால் சில கட்டிகள் தானாகவே உடைந்து சீழ் வெளியேற வலி தணிந்துவிடும். உடைந்து சீழ் வெளியேறிய பின்னரும் சில நாட்களுக்கு அதிலிருந்து கசிவு ஏற்படக் கூடும். அவ்வாறு கசிவதனால் அவ்விடத்தில் தானாகவே காய்ந்து படிவதுண்டு.

சீழ்கட்டிகள் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல கிருமியின் தாக்கத்தால் ஏற்படுவதாகும். கிருமித் தொற்றுக் காரணமாக உடலில் அலுப்பு வேதனை ஏற்டலாம். சில நேரங்களில் காய்ச்சலும் தோன்றக் கூடும். சிலருக்கு அது தோன்றுவதற்கு முன்னர் அவ்விடச் சருமத்தில் சற்று அரிப்பு ஏற்படுவதுண்டு.

நீங்கள் செய்யக் கூடியது எவை?

சிறிய வேதனை அதிகமற்ற கட்டி எனில் உடடியாக மருத்துவரை நாட வேண்டியதில்லை. அது தானாகவே உடைந்து சீழ் வெளியேறிய பின்னர் குணமாகும்.

சுத்தமான துணியை சுடுநீரில் நனைத்து ஒத்தடம் கொடுக்கலாம். ஒரு நாளில் பலதடவைகள் செய்ய வேண்டும். இது வேதனையைத் தணிக்க உதவும். அத்துடன் கிருமி பெருகுவதையும் குறைக்கும்.

கைகளால் அழுத்தியோ அல்லது பிளெட் போன்ற கூரிய ஆயதங்களால் வெட்டியோ சீழை நீங்களாக அகற்ற முற்பட வேண்டாம். சீழ் அகலுவதற்குப் பதிலாக கிருமிகள் பரவி நோயை தீவிரப்படுத்தலாம். 

கட்டி தானாக உடைத்துவிட்டால் தொடர்ந்தும் சுடுநீர் ஒத்தடம் கொடுத்து அழுக்குகள் முழுமையாக வெளியேற உதவுங்கள். சீழ் வடிந்து கொண்டிருந்தால் அந்த இடத்தை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.
அந்த இடத்தை நீங்கள் தொட்டால் சுத்தமாக நன்கு கை கழுவிய வேண்டும்.

அதேபோல நோயாளி உபயோகித்த, துணி. டவல், படுக்கை விரிப்புகள் போன்றவற்றை மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது. அவர் உபயோகித்த துணிமணிகளை நன்கு கழுவி உலர்ந்த பின்னரே மற்றவர்கள் உபயோகிக்கக் கூடாது. அவற்றை சுடுநீரில் கழுவுவதும் சிறந்தது.

நன்றி=  ஹாய் நலமா

Via FB Karthikeyan Mathan
 
இடுப்பளவு அதிகமாகாமல் இருக்க வேண்டுமா? அப்ப இந்த ஸ்நாக்ஸ் தான் பெஸ்ட்...

மணக்கால் அய்யம்பேட்டை | 12:47 PM | Best Blogger Tips

 உடல் எடை சரியாகவும். தொப்பையின்றியும் இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அதே நேரத்தில், அந்தி மாலை 7.30 மணிக்கு நன்கு பசி எடுக்கும் பொழுது, எடையைக் கருத்தில் கொண்டு துரித உணவு வகைகளை சாப்பிட பயப்படுவோம். சொல்லப்போனால் மற்ற நேரங்களில் கூட நொறுக்குத்தீனிகளை சாப்பிட தோன்றாது. ஆனால் மாலை வேளையில் நன்கு மொறுமொறுவென்று எண்ணெயில் பொரித்த ஸ்நாக்ஸ்களை சூடாக சாப்பிட வேண்டுமென்ற ஆசை அதிகம் எழும். ஏனெனில் அப்போதுள்ள காலநிலையானது மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், பசியுடன் அதனைக் கட்டுப்படுத்துவது என்பது கடினம்.

ஆகவே பசியைத் தீர்க்கவும், அதே சமயம் உடல் எடையை அதிகரிக்கச் செய்யாமல் இருக்கவும், மும்பையிலுள்ள ஹெல்தி லிவ்விங் டயட் கிளினிக்கின் (Healthy Living Diet Clinic) மூத்த பதிவு பெற்ற உணவு வல்லுனர் மற்றும் நீரிழிவு நோய் குறித்த அறிவுரையாளர் திருமதி. அனிதா பத்தானியா அவர்கள் பரிந்துரைத்த ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களைத் தொகுத்து, உங்களுக்காகக் கீழே வழங்கியுள்ளோம்.

அந்த ஸ்நாக்ஸ்களை மாலை வேளையில் சாப்பிட்டால், நிச்சயம் உடல் எடை அதிகரிப்பதை தவிர்ப்பதோடு, பசியும் நீங்கி, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

கலோரி குறைவான ஸ்நாக்ஸ்கள்!!!

பாதாம் பருப்பானது மாலை நேர பசியைத் தீர்ப்பதற்கான சிறந்த சிற்றுண்டியாகும். எனவே மாலையில் 13-14 பருப்புகளை சாப்பிடலாம். இதில் 98 கலோரிகளே உள்ளன. எனவே இது மிகச் சரியான மாலை நேர ஸ்நாக்ஸாக இருக்கும்.

ஆப்பிள் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இல்லை என்பார்கள். ஒரு ஆப்பிளில் 100 கலோரிகளே உள்ளது. எனவே பசி எடுக்கும் போது ஒரு ஆப்பிளை நன்கு மென்று சாப்பிடும் போது, அதிலுள்ள நார்ச்சத்து உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்தினைக் குறைக்கவும், சுற்றுப்புற மாசுக்களால் ஏற்படும் துன்பங்களிலிருந்து காக்கவும் செய்கிறது.

வேர்க்கடலை
வேர்க்கடலையானது ஆரோக்கியமான ஒரு சிற்றுண்டி. எனவே ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலைகளை சாப்பிடும் பொழுது, அது 74 கலோரிகளே தருகிறது. மேலும், இது குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் இருப்பதால், அது ஆற்றலை மெதுவாக வெளிப்படுத்தி வெகு நேரத்திற்கு வயிறு நிறைந்தது போல உணர வைக்கும்.

திராட்சை

திராட்சைப் பழம் வயிற்றை நன்கு நிரப்புவதோடு, குறைந்த அளவே கலோரிகளை கொண்டது. ஆகவே மாலையில் பசிக்கும் போது 30 திரட்சைப் பழங்கள் சாப்பிட வேண்டும். இதில் வெறும் 100 கலோரிகளே உள்ளன. மேலும் இது இரத்த சோகை, அதிகக் களைப்பு, மூட்டுவலி, கீல்வாதம், வாத நோய் போன்றவைகளையும் போக்கக்கூடியது.

மெலான் வகைப் பழங்கள்

மெலான் வகைப் பழங்கள் மிகச்சிறந்த சிற்றுண்டிகளாகும். தர்பூசணி, முலாம் பழம் போன்ற மெலான் வகைப் பழங்களில் 88 கலோரிகள் உள்ளன. இதில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், குறைந்த அளவு கலோரிகளையே கொண்டுள்ளது.

தக்காளி சூப்

உணவை அதிகம் விரும்பாதவராக இருந்தால், எளிய முறையில் செய்யக்கூடிய தக்காளி சூப்பை அருந்தலாம். ஒரு சிறிய கிண்ணம் அளவுள்ள தக்காளி சூப்பில் 74 கலோரிகளே உள்ளன.

செர்ரி

இந்த சிறிய செர்ரிப் பழங்களில் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகின்றன. மேலும் மிகக் குறைந்த அளவே கொழுப்புச் சத்தும் உள்ளது. அதுமட்டுமல்லாமல், இதில் வெறும் 100 கலோரிகளே உள்ளன.

பேரிக்காய்

பசி எடுக்கும் பொழுது, ஒரு முழு பேரிக்காயை சாப்பிட்டால், வயிறு நன்கு நிறைவதோடு, 100 கலோரிகளையே அது நமக்குத் தருகிறது.

ப்ளூபெர்ரி

ஒரு கப் ப்ளூபெர்ரிப் பழத்தில் 83 கலோரிகளே உள்ளன. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. ஆகவே இவை முதுமையைத் தடுப்பதோடு, இதயத்தையும் பாதுகாக்கிறது.

கிவிப் பழம்

கிவிப் பழத்தில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. பசிக்கும் பொழுது இரண்டு கிவிப் பழங்களை உண்டால், அது வெறும் 58 கலோரிகளையே தரும். எனவே இதை மாலை நேர உணவாகப் பயன்படுத்துவது நல்லது. கிவிப் பழம் உணவின் செரிமானத்திற்கு உதவுவதோடு, சருமத்திற்கு நல்ல நிறத்தைக் கொடுத்து, அழகையும் கூட்டுகிறது.
 
Via FB ஆரோக்கியமான வாழ்வு