ராமக்கல்மேடு - ஆசியாவிலேயே அதிக காற்று வீசும் இடம்💛💛💛💛

மணக்கால் அய்யம்பேட்டை | 5:51 PM | Best Blogger Tips

 

 

ராமக்கல்மேடு - ஆசியாவிலேயே அதிக காற்று வீசும் இடம் :
🚶நீங்கள் மலையுச்சியை அடைந்தவுடன், உங்கள் முன் விரிந்திருக்கும் காட்சியின் மகத்துவத்தை ஒரு நிமிடம் எடுத்துக் கொள்ளுங்கள். மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவுகளில் உள்ள தமிழ்நாட்டின் கம்பம் கிராமம் உண்மையில் பார்ப்பதற்கு ஒரு காட்சி பதிவு செய்கிறது கண்கள்., 
May be an image of 8 people, the Qutub Minar and temple
☘️மூணாரிலிருந்து தேக்கடி செல்லும் வழியில், சங்குராந்தம்பாறை ஒரு பெரிய பாறை உள்ளது, இது ராமக்கல்மேட்டின் அழகிய காட்சி தான் இந்த இடம்,
🌼ஒவ்வொரு பார்வையாளரின் இதயத் தளங்களிலும் இது ஒரு வித்தியாசமான அனுபவம், இங்கே, பழங்கால பாறைகள் மற்றும் காற்றின் நடுவில் மறந்துபோன கதைகளை கிசுகிசுக்கும்போது, ​​​​ஒருவரால் ஒரு ஆழமான சொந்த உணர்வை உணர முடிகிறது,
🌴ராமக்கல்மேடு மலைகள், தமிழ்நாட்டில் அமைந்துள்ள அழகிய கிராமங்களின் அற்புதமான காட்சிகளை பார்க்க முடியும்.,
May be an image of monument
🍁300 மீ உயரமுள்ள தூண் போன்ற பாறை அமைப்பு கிழக்கு நோக்கி நிற்கும் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். அதிக காற்று வீசும் நிலப்பரப்பாக இருப்பதால், 10.5 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப் பயன்படும் பகுதியில் கேரள அரசின் நிறுவனங்களான பல காற்றாலைகள் உள்ளன.,
🌳கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு சொர்க்கம் ராமக்கல்மேடு, மூடுபனி, காற்றினால் அடித்துச் செல்லப்படும் பச்சை மலைகள் மற்றும் ஆச்சர்யமான காட்சிகள் என தன்னிடம் கொண்டது இந்த பகுதி,
 
🍂ராமக்கல்மேடு சந்திப்பில் கேரளாவும் தமிழ்நாடும் பாதைகள் பிரிக்கப்படுகின்றன.
 
🌾பாறை மலையின் அடிப்பகுதிக்கு செல்லும் பல பாதைகள் உள்ளன. தமிழ்நாடு பள்ளத்தாக்கைக் கண்டும் காணாத பக்கமாகச் செல்லும் ஒன்று ஒரு வகையான அனுபவத்தை அளிக்கிறது. பாறையின் நுழைவு அழகிய மூங்கில் காடுகளால் தழுவி அமைதியான உணர்வையும், இயற்கைக்கு அன்பான வரவேற்பையும் தருகிறது. இயற்கையிலிருந்து வரும் ஒலிகள் எப்படி ஒருவரின் மனதை அமைதிப்படுத்துகின்றன என்பதுதான் இங்கு ஒருவர் உடனடியாக கவனிக்கும் மாற்றம்.
 
🌿இயற்கை உங்களுக்காக விரித்திருக்கும் சிறிய விஷயங்களைக் கவனிக்க நேரம் ஒதுக்க ஒரு அழகிய இடம் .,
 
☘️இராவணனால் கடத்தப்பட்ட சீதையைத் தேடி இலங்கை செல்லும் வழியில் ராமர் இத்தலத்திற்குச் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. ராமேஸ்வரத்தை 'சேதுபந்தனம்' (ஆதாம் பாலம் கட்டுதல்) தேர்வு செய்ய முடிவு இங்கு எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த நிலத்தில் ராமர் தனது கால்களை பதித்ததாக நம்பப்படுவதால் இந்த இடத்திற்கு ராமக்கல்மேடு என்று பெயர் வந்தது.
 
🍀நெடுங்கண்டத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ராமக்கல்மேடு, கீழே உள்ள கிராமங்களின் பரந்த காட்சியைப் அப்படியே கண்முன் காட்டுகிறது,
 
🌻ஆசியாவிலேயே அதிக காற்று வீசும் இடங்களில் ராமக்கல்மேடு ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சராசரியாக மணிக்கு 32.5 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும், சில சமயங்களில் மணிக்கு 100 கிமீ வேகம் வரை செல்லும். காற்றாலை ஆற்றலைப் பெறுவதற்காக கேரள அரசு இப்பகுதியில் காற்றாலைப் பண்ணைகளை அமைத்துள்ளது.
 
🌷ராமக்கல்மேட்டில் காணப்படும் இயற்கை குகைகள் மட்டுமின்றி, உச்சியில் அமைந்துள்ள 'குரவன்' மற்றும் 'குரதி' சிலை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளது.
🪻தேக்கடி, குட்டிகானம், மூணாறு மற்றும் பருந்தும்பாறை போன்ற புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களுக்கு அருகாமையில் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்கின்றனர்.
 
🌱எப்படி போகலாம், வழி :-
தேக்கடி - மூணாறு வழித்தடத்தில் நெடுங்கண்டம் 15 கிமீ தொலைவில் ராமக்கல்மேடு உள்ளது. இந்த அற்புதமான சுற்றுலாத் தலமானது எர்ணாகுளத்திலிருந்து 150 கிமீ மற்றும் தேக்கடியிலிருந்து முறையே 43 கிமீ தொலைவில் உள்ளது. கட்டப்பனாவில் இருந்து 20 கிமீ மற்றும் மூணாறில் இருந்து 70 கிமீ ராமக்கல்மேடு செல்லலாம்.,
 
🌲அந்தி சாயும் வேளையில் இந்த மலைகளை அணைத்துக்கொள்வது முற்றிலும் மாறுபட்ட மந்திரம். சூரியன் மெதுவாக அஸ்தமித்து, நட்சத்திரங்கள் மின்னத் தொடங்கும் போது, ​​​​உங்கள் முன் விரியும் இயற்கையின் அழகிய காட்சிகளைக் கண்டு நீங்கள் பிரமிப்புடன் பெருமூச்சு விடுவீர்கள்.
 
🌺ஆமைப் பாறை, தவளைப் பாறை போன்ற பல்வேறு இடங்கள் இங்குள்ள மற்ற இடங்களாகும்.
 
💐ஆச்சர்யங்களை நோக்கிய பயணங்கள் தொடரும்,
 
அன்புடன்
ஆரோ.செல்வா

 May be an image of 1 person, pool, temple, horizon and grass

தென்காசி ரயில் பிரம்மிக்க வைக்கும் சுற்றுலா

மணக்கால் அய்யம்பேட்டை | 5:17 PM | Best Blogger Tips

 May be an image of railway

தென்காசி ரயில் பிரம்மிக்க வைக்கும் சுற்றுலா :
(மனதை கவரும் பதிவு)
 
தமிழகத்தில் இரண்டே ரயில் சுற்றுலா பயணம் உள்ளது .ஒன்று நீலகிரி ரயில் மற்றொன்று தென்காசி ரயில்.
 
அழகிய ரயில் பாதைகள் உலகில் பல இருக்கலாம். அப்படிப்பட்ட ரயில் பாதைகளில் ஒன்று தமிழகத்திலும் இருக்கிறது, அது தென்காசி மாவட்டம் ‘செங்கோட்டை- கொல்லம்’ ரயில் பாதை. பசுமை செழித்து பச்சையாகப் பூத்துக்கிடக்கும் காட்டைக் கிழித்தபடி மலையின் மீது, ஒரு மலைப்பாம்பைப் போல வளைந்து நெளிந்து செல்லும் அந்த ரயில் பாதை அழகின் ஊற்று; உற்சாகத்தின் மறுவடிவம். அதேநேரம், மகிழ்ச்சிக்கும் பிரமிப்புக்கும் இணையாகத் திகிலையும் மிரட்சியையும் தரக்கூடியது அந்தப் பாதை. 
 
இப்பயணத்தின்போது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே பயணிப்பதுடன், மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ள குகைகள், மலைகளை இணைத்துச் செல்லும் பாலங்கள் என, பயணமே மறக்க முடியாத இனிமையான அனுபவமாக இருக்கும்.
 
இந்தியாவில் உள்ள சிறப்பான இயற்கைக் காட்சிகள் கொண்ட ரயில் பாதைகளில் இதுவும் ஒன்று 
 
குகைகளும், பாலங்களும்!
இந்த இடைப்பட்ட 49.38 கி.மீ. தூரத்திற்கான ரயில் பாதையில் ஏற்கனவே இருந்த நூற்றாண்டை கடந்த 5 குகைகளுடன், புதிதாகக் குடையப்பட்ட ஒரு குகையும் சேர்ந்து 6 குகைகளும், 23 பெரிய பாலங்களும், 178 சிறிய பாலங்களும் உள்ளன.
யோசித்துப் பாருங்கள்! இப்பகுதி எப்படியிருக்கும் என்று!....
இந்த வழித்தடத்தில் உள்ள பெரும்பாலான கற்பகாலங்கள் மலைகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்டவைதான். இவற்றை எல்லாம் கடந்தபின். அழகிய மலைகளின் நடுவே ரயில் சென்று புனலூர் ரயில் நிலையத்தை அடைகிறது. 
 
இந்த 49.38 தூர ரயில் பாதையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பாதை வளைவுகளாக உள்ளது. இதில் 52 வளைவுகள் 10 டிகிரியிலும், 5 வளைவுகள் 12.3 டிகிரியாவும் உள்ளது. அதனால் 30 முதல் 40 கி.மீ. வேகத்தில்தான் ரயில்கள் செல்லும்!
 
தென் தமிழகத்தின் தென்காசி, செங்கோட்டை, சங்கரன்கோயில், பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடையநல்லூர் பகுதிகளில் விளையும் காய்கறிகள், பூக்கள் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கேரள மாநிலத்தின் புனலூர் கொல்லம் பகுதிகளுக்கு செல்லும் சரக்குகளும் இத்தடத்தில்தான் முன்பு போல், இனிமேலும் கொண்டு செல்லப்படும்.
இனி வரும் நாட்களில் திருநெல்வேலி பகுதிக்கு சுற்றுலா வருபவர்கள், இந்த ரயில் பயணத்தையும் திட்டமிட்டு வருவது நல்லது! 
 
50 கி.மீ. தூரத்திற்குள் கம்பீரமான மலைகள், அழகிய பசுமையான மலைச்சரிவுகள், மனதைக் கவரும் பள்ளத்தாக்குகள், சலசலவென தவழ்ந்தோடும் சிறு நீரோடைகள், எப்போதுமே மழைச்சாரல் விதவிதமான பாலங்கள், திகைப்பூட்டும் குகைகள் என வியப்பையும், மகிழ்ச்சியையும் ஊட்டும் இனிய பயணமாக இருக்கும்! வாழ்க்கையில் கட்டாயம் ஒருமுறையேனும் இந்த தென்காசி ரயில் பயணத்தில் பயணம் செய்யுங்கள். 
 
தென்காசி - கொல்லம் ரயில்வே காட்சிகளை பின்னர் ஒரு பதிவில் பதிவிடுகிறேன்.
வண்டி வண்டி ரயிலு வண்டி இப்பாடலில் வரும் காட்சிகள் அனைத்தும் தென்காசி ரயில் பயணத்தில் எடுக்கப்பட்டது
 
 

 
 

 🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

 May be an image of 5 people and temple

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

வானில் 2 விமானங்கள் சந்தித்து கொண்டால் பைலட்கள் என்ன செய்வார்கள் தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 11:07 AM | Best Blogger Tips

 May be an image of aircraft and text

 
 
விமானங்களும், விமான பயணங்களும் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை உள்ளடக்கியதாக உள்ளன. விமானங்களை இயக்கும் பைலட்களின் வேலை மற்றும் வாழ்க்கையும் கூட சுவாரஸ்யம் நிறைந்ததுதான். எனவே பைலட்கள் பற்றிய ஆச்சரியமான விஷயங்களை தெரிந்து கொள்ள பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
 
பைலட்களுக்கு முதலில் ஃப்ளைட் சிமுலேட்டர்களில் (Flight Simulator) பயிற்சி வழங்கப்படும். ஃப்ளைட் சிமுலேட்டர் என்பது விமானங்களின் யதார்த்தமான பிரதிபலிப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இயந்திரம் ஆகும். பயிற்சி நோக்கங்களுக்காக ஃப்ளைட் சிமுலேட்டர் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 
ஃப்ளைட் சிமுலேட்டரில் பயிற்சி முடிவடைந்த உடனேயே, பைலட்கள் நேராக பயணிகளுடன் கூடிய பாசஞ்சர் விமானங்களை இயக்கும் பணிக்கு செல்வார்கள். எனினும் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக அனுபவம் வாய்ந்த பைலட் ஒருவர் அவர்களுடன் இருப்பார். சூப்பர்வைசர் பைலட்டின் இரண்டாவது சோதனைக்கு பிறகு, சுயமாகவே விமானங்களை இயக்க அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
 
குறைந்தபட்சம் ஒவ்வொரு
8 மாதங்களுக்கு ஒரு முறையும், பைலட்கள் மீண்டும் சிமுலேட்டர் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள். பைலட்கள் தங்களின் லைசென்ஸை புதுப்பித்து கொள்வதற்கு இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதே சமயம் போயிங் 777 விமானங்களை இயக்குபவர்களுக்கு இது 6 மாத காலமாக உள்ளது.
 
ஒரு சமயத்தில் ஒரே ஒரு வகையான விமானத்தை மட்டுமே பைலட்களால் இயக்க முடியும். வேறு வகையான விமானத்தை இயக்குவதற்கான லைசென்ஸை பெற வேண்டுமென்றால், அதற்கு முன்னதாக அவர்கள் மீண்டும் 8 முதல் 12 வார காலம் பயிற்சிக்கு சென்றாக வேண்டும். ஒவ்வொரு விமானமும் வெவ்வேறு விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
 
 எனவேதான் ஒரு வகையில் இருந்து மற்றொரு வகை விமானத்திற்கு மாறும்போது பைலட்களுக்கு மீண்டும் கடுமையான பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதில், அவர்கள் புதிதாக இயக்கவுள்ள விமானத்தின் கண்ட்ரோல்கள் உள்பட அனைத்து அம்சங்கள் குறித்தும் விரிவாக பயிற்சி வழங்கப்படும்.
 
பைலட் வேலை என்றாலே, பொதுவாக வீட்டை விட்டு அதிக காலம் பிரிந்து இருக்க வேண்டியதிருக்கும். இந்த சூழ்நிலைகளில், ஒரு சில பைலட்கள் தங்கள் குடும்பத்தினர் அல்லது மனைவியின் புகைப்படத்தை தங்கள் தொப்பிக்குள் வைத்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. தங்களுக்கு விருப்பமானவர்கள் மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில பைலட்கள் இதை கடைபிடிக்கின்றனர்.
 
விமானங்களை இயக்கும் போது, பைலட்களும், கோ-பைலட்களும் உணவை பகிர்ந்து கொள்ள கூடாது என்ற விதிமுறை இருக்கிறது. அதாவது அவர்கள் இருவரும் ஒரே உணவை சாப்பிட கூடாது. ஒரு உணவால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டால், மற்றொரு பைலட் பாதிக்கப்பட மாட்டார் என்பதற்காகவே இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. எனவே இருவருக்கும் வெவ்வேறான உணவுகள்தான் வழங்கப்படும்.
வானில் இரண்டு விமானங்கள் சந்தித்து கொள்ளும்போது, பஸ் டிரைவர்களை போல ஹலோ சொல்வதற்கு, லேண்டிங் லைட்கள் அல்லது விங் இன்ஸ்பெக்ஸன் லைட்களை (Wing Inspection Lights) பைலட்கள் ஒளிர செய்வார்கள் என கூறப்படுகிறது. விமானங்களின் பைலட்களை பற்றிய இந்த விஷயம் உண்மையிலேயே கேட்பதற்கு கொஞ்சம் ஆச்சரியமாகதான் இருக்கிறது.

  

 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏 

May be an image of 1 person, temple and lake

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

இந்த மாதிரி நல்ல வாழ்க்கை.....🌹 🌹 🌹 🌹 🌹 🌹

மணக்கால் அய்யம்பேட்டை | 10:33 AM | Best Blogger Tips

 May be a black-and-white image of 3 people

திருமணம் என்பது சரியான துணையைத் தேடிப்பிடிப்பது அல்ல... கடைசிவரை சரியான துணையாக இருப்பதே...
 படித்ததில் பிடித்தது: இந்த மாதிரி நல்ல வாழ்க்கைத் துணை இருந்தாலே போதும்..!!  - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS  |TNTET 2024:
சிறந்த துணை ...!!! என்பது உடனிருப்பதோ... 
 
உணவளிப்பதோ... உடையளிப்பதோ... 
 கிடையாது...!!! எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பது...!!
 உயிரோடு உறவாடு.... (18)
அன்பின் எதிர்பார்ப்புகள் பணமோ பொருளோ இல்லை.. பாசத்துடன் ஒரு பார்வை, 
அக்கறையுடன் ஒரு வார்த்தை!.
 உயிரோடு உறவாடு... (25)
புரிந்து கொண்டால் கோபம்கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும், புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தெரியும்..!!
 
புரிந்து நடக்க ஒரு துணையிருந்தால் சரிந்து விழாமல் வாழ்ந்திடலாம். வாழ்க்கை முழுவதும்!!
 உயிரோடு உறவாடு.. (28)
ஒருவருக்கொருவர் அன்பை அள்ளிக் கொடுப்பதில் எல்லாம் கணவன் மனைவி உறவல்ல..
 
தவறென தெரிந்தாலும் மனதோடு மன்னித்து விட்டுக் கொடுப்பதில் தான் ஆயுள் மொத்தமும் அடங்கும்!
 உயிரோடு உறவாடு... (22)
உன்னை நம்பி வந்த பெண்ணை
 
எந்த இடத்திலயும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டு கொடுக்காதே
 
அவள் உன் உறவல்ல உன் உயிரில்
பாதி.....
 
தள்ளாடும் வயதிலும் தாங்கிப்பிடிக்க உறவு இருந்தால் வயதானாலும் என்றும் நீ வாலிபனே..!
 The old couple by Vani Pradeep
நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ பணம் பதவி தேவையில்லை..!
 Old Couple Painting Photos, Images & Pictures | Shutterstock
இந்த மாதிரி நல்ல வாழ்க்கைத் துணை இருந்தாலே போதும்..!
 
**படித்ததில் பிடித்தது**

 

 

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

May be an image of 2 people and temple

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷