விமானங்களும், விமான பயணங்களும் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை உள்ளடக்கியதாக உள்ளன. விமானங்களை இயக்கும் பைலட்களின் வேலை மற்றும் வாழ்க்கையும் கூட சுவாரஸ்யம் நிறைந்ததுதான். எனவே பைலட்கள் பற்றிய ஆச்சரியமான விஷயங்களை தெரிந்து கொள்ள பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
பைலட்களுக்கு முதலில் ஃப்ளைட் சிமுலேட்டர்களில் (Flight Simulator) பயிற்சி வழங்கப்படும். ஃப்ளைட் சிமுலேட்டர் என்பது விமானங்களின் யதார்த்தமான பிரதிபலிப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இயந்திரம் ஆகும். பயிற்சி நோக்கங்களுக்காக ஃப்ளைட் சிமுலேட்டர் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஃப்ளைட் சிமுலேட்டரில் பயிற்சி முடிவடைந்த உடனேயே, பைலட்கள் நேராக பயணிகளுடன் கூடிய பாசஞ்சர் விமானங்களை இயக்கும் பணிக்கு செல்வார்கள். எனினும் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்காக அனுபவம் வாய்ந்த பைலட் ஒருவர் அவர்களுடன் இருப்பார். சூப்பர்வைசர் பைலட்டின் இரண்டாவது சோதனைக்கு பிறகு, சுயமாகவே விமானங்களை இயக்க அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
குறைந்தபட்சம் ஒவ்வொரு
8 மாதங்களுக்கு ஒரு முறையும், பைலட்கள் மீண்டும் சிமுலேட்டர் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள். பைலட்கள் தங்களின் லைசென்ஸை புதுப்பித்து கொள்வதற்கு இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதே சமயம் போயிங் 777 விமானங்களை இயக்குபவர்களுக்கு இது 6 மாத காலமாக உள்ளது.
ஒரு சமயத்தில் ஒரே ஒரு வகையான விமானத்தை மட்டுமே பைலட்களால் இயக்க முடியும். வேறு வகையான விமானத்தை இயக்குவதற்கான லைசென்ஸை பெற வேண்டுமென்றால், அதற்கு முன்னதாக அவர்கள் மீண்டும் 8 முதல் 12 வார காலம் பயிற்சிக்கு சென்றாக வேண்டும். ஒவ்வொரு விமானமும் வெவ்வேறு விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
எனவேதான் ஒரு வகையில் இருந்து மற்றொரு வகை விமானத்திற்கு மாறும்போது பைலட்களுக்கு மீண்டும் கடுமையான பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதில், அவர்கள் புதிதாக இயக்கவுள்ள விமானத்தின் கண்ட்ரோல்கள் உள்பட அனைத்து அம்சங்கள் குறித்தும் விரிவாக பயிற்சி வழங்கப்படும்.
பைலட் வேலை என்றாலே, பொதுவாக வீட்டை விட்டு அதிக காலம் பிரிந்து இருக்க வேண்டியதிருக்கும். இந்த சூழ்நிலைகளில், ஒரு சில பைலட்கள் தங்கள் குடும்பத்தினர் அல்லது மனைவியின் புகைப்படத்தை தங்கள் தொப்பிக்குள் வைத்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. தங்களுக்கு விருப்பமானவர்கள் மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு சில பைலட்கள் இதை கடைபிடிக்கின்றனர்.
விமானங்களை இயக்கும் போது, பைலட்களும், கோ-பைலட்களும் உணவை பகிர்ந்து கொள்ள கூடாது என்ற விதிமுறை இருக்கிறது. அதாவது அவர்கள் இருவரும் ஒரே உணவை சாப்பிட கூடாது. ஒரு உணவால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டால், மற்றொரு பைலட் பாதிக்கப்பட மாட்டார் என்பதற்காகவே இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. எனவே இருவருக்கும் வெவ்வேறான உணவுகள்தான் வழங்கப்படும்.
வானில் இரண்டு விமானங்கள் சந்தித்து கொள்ளும்போது, பஸ் டிரைவர்களை போல ஹலோ சொல்வதற்கு, லேண்டிங் லைட்கள் அல்லது விங் இன்ஸ்பெக்ஸன் லைட்களை (Wing Inspection Lights) பைலட்கள் ஒளிர செய்வார்கள் என கூறப்படுகிறது. விமானங்களின் பைலட்களை பற்றிய இந்த விஷயம் உண்மையிலேயே கேட்பதற்கு கொஞ்சம் ஆச்சரியமாகதான் இருக்கிறது.
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏