யாருக்கு விதி?!! எங்கே எப்படி முடியும்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | 5:49 PM | Best Blogger Tips

 View and Download Annamalaiyar Photos Photos, Images and Wallpapers | Ram  wallpaper, Tanjore painting, Lord shiva painting

📮📮📮📮📮இந்திரன்மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாகவளர்த்துவந்தாள்.

ஒருநாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது.

அதை பரிசோதித்த மருத்துவர்
இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்.

உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி,
இந்த கிளியை எப்படியாவதுக்காப்பாற்றுங்கள்.
கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள்.

இந்திரன்,
கவலைப்படாதே இந்திராணி...நான் உடனே பிரம்மாவிடம்சென்று முறையிடுகிறேன்...
ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே?

அவரிடம்சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றியெழுதிவிடுவோம் என்று சொல்லிவிட்டு
பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்..

விஷயத்தைக்கேட்ட பிரம்மா ,

இந்திரா.... படைப்பது மட்டுமே என்வேலை.

உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில்.

நாம் அவரிடம்சென்று உதவிகேட்போம்...வா ...நானும் உன்னுடன் வருகிறேன் என்று இந்திரனை அழைத்துக்கொண்டு
மஹாவிஷ்ணுவிடம்சென்று விஷயத்தை தெரிவித்தார் பிரம்மா.



மஹாவிஷ்ணுவோ, உயிர்களை காப்பது நான்தான்.

ஆனால் உன் கிளி இறக்குந்தறுவாயிலிருக்கிறது.

அழிக்கும்தொழிலை மேற்கொண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற வேண்டும்.

வாருங்கள் நானும் உங்களுடன்வந்து சிவனிடம் பேசுகிறேன் என்று கிளம்பினார் விஷ்ணு.

விபரங்களைக்கேட்ட சிவன் , அழிக்கும் தொழில் என்னுடையதுதான்.

உயிர்களையெடுக்கும்பொறுப்பை நான்
எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன்.

வாருங்கள் ....நாம் அனைவரும்சென்று எமதர்மனிடம்கூறி அந்த கிளியின் உயிரை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவோம் என்றுசொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு எமலோகம் செல்கிறார் சிவன்.

தன்னுடைய அவைக்கு சிவன் , மஹாவிஷ்ணு , பிரம்மா , இந்திரன் ஆகிய நால்வரும் வருவதைக்கண்ட எமதர்மன் உடனே எழுந்து ஓடிவந்து வரவேற்கிறார்.

விஷயம் முழுவதையும்கேட்ட அவர் ,
ஒவ்வொரு உயிரையும் எந்தநேரத்தில் ,
எந்தசூழ்நிலையில் ,
என்னகார‌ணத்தால் எடுக்கவேண்டும் என்ற காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டுவிடுவோம்.

அந்த ஓலை அறுந்துவிழுந்துவிட்டால், அவரின் ஆயுள் முடிந்துவிடும்.

வாருங்கள் அந்த அறைக்குச்சென்று
கிளியின் ஆயுள் ஓலை எது என்று பார்த்து , அதை மாற்றி எழுதிவிடுவோம் என்று அவர்களை அழைத்துச்செல்கிறார்.
HD sivan wallpapers | Peakpx

இப்படியாக
இந்திரன் ,பிரம்மா ,விஷ்ணு , சிவன் , எம்தர்மன் ஆகிய ஐவரும் அந்த அறைக்குச்சென்றனர்.

அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது.

உடனே அவர்கள் அவசரமாகச்சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர்.

அது அந்த கிளியின் ஆயுள் ஓலை.

அவசரமாக அதை படித்துப்பார்க்கின்றனர்....

அதில்,,,

இந்திரன் , பிரம்மா , விஷ்ணு , சிவன் , எம‌தர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ
அப்போது இந்த கிளி இறந்துவிடும்.. என்று எழுதப்பட்டிருந்தது.

இதுதான் விதி!!
Lord Shiva , & pics, Lord, god sivan HD wallpaper | Pxfuel

விதியை மாற்றுவது என்பது முடியாது என்பதே கதை?!

யாருக்கு விதி?!!
எங்கே எப்படி முடியும்!!!
என்பது எழுதினவனுக்கே
தெரியாது என்பது தான் உண்மை?!  

வாழும் காலம் நிரந்தரம் இல்லை?                   வாழும் காலத்திலாவது அனைவரிடமும் அன்பாக இருக்க கற்றுக்
கொள்ளுங்கள்!..



நன்றி இணையம் 🔥

"சாராயம்"

மணக்கால் அய்யம்பேட்டை | 5:15 PM | Best Blogger Tips

 

 மெத்தனால் சாராயம் உயிர்களை காவு வாங்கியது எப்படி? மரக்காணத்தில் அது  புழங்கியது எவ்வாறு? - BBC News தமிழ்

ஒரு ஆணிற்கு "சாராயம்"தான் வாழ்க்கை எனில் அவன் நான்கு விசியங்களுக்கு 
 
முக்கியமில்லாதவனாக மாறிவிடுகிறான்!
 
1, பாசமிகு தாய்தந்தை கணவை நிறைவேற்ற முடியாத மிருகமாக
 
2)அன்பான மனைவியை ரசிக்க தெரியாத குருடனாக?
 
3), அழகான குழந்தைகளின்
பாசத்தை உணர முடியாத முரடனாக!
 
4), இச்சமுகத்தில் வாழ தகுதியற்ற மனிதனாக!
மதுவிற்கு ஏன் "குடி" என்று பெயர் வந்தது தெரியுமா?
 
மது மட்டுமே வாழ்க்கையையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும். சேர்த்து குடிப்பதால்...
May be an image of 6 people
 
*மனைவியை ரசிக்க தெரியாத குருடனாக...
போதையின் மயக்கத்தில், தன்னை நம்பி வாழ வந்தவளை, எந்தவொரு உறுதி மொழி ஏற்று கரம் பிடித்தானோ அதை கைக்கழுவி விட்டு, தன்னுடைய சுகத்திற்காக மட்டுமே வாழ தொடங்கிவிடுகிறான், அதன் விளைவாய் (சில பெண்கள்) கட்டியவனை வெறுத்து ஒதுக்கி வேறொருவரின் உதவியை நாடுகிறார்கள், இங்கு அடுத்தவன் மனைவிக்கு ஆசைபடாத ராமன் இன்னும் பிறக்க வில்லை... இறுதியில் தன் மனைவிக்கு மனசு மற்றும் உடல் சுகத்தை கொடுக்க முடியாத ஏமாளி கணவனாகிவிடுகிறான்,
 
*அழகான குழந்தைகளின் பாசத்தை உணர முடியாத முரடனாக...
 
மதுவிற்கு அடிமையானவன் தன் குழந்தைகளிடம் பேசுவதில்லை, குழந்தைகளிடம் பேசி, அவர்கள் பேசுவதை கேட்டால்தான் இச்சமூகத்தில் அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது புரியவரும், இல்லையேல் "குடிகாரன் பெத்த பிள்ளைதானே" என்று ஏசக்கூடும்,
 
*இச்சமூகத்தில் வாழ தகுதியற்ற மனிதனாக...
இறுதியில் ஒழுக்கம் கெட்டு அவன் மதிப்பை அவன் இழந்து விடுகிறான், வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு, வீட்டிலும் வெளியிலும் மரியாதை இல்லாமல், அவன் பேச்சை யாரும் கேட்பதுமில்லை, மதிப்பதுமில்லை,
மது அவன் ‌உழைப்பையும், உயிரையும், சிறுக சிறுக குடிக்கிறது... ஆனால்? தண்டனையோ... அவன் மனைவியை யாசியாக்கும், சிலரை வேசியாக்கும், அல்லது விதவையாக்கும்... இவனுக்கு கிடைக்கும் மரியாதைதான் இவன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்,
 
குடி தான் உன் வாழ்க்கை என்றால்?
உனக்கு திருமணம் எதற்க்கு? மனைவி எதற்க்கு?குழந்தைகள் எதற்க்கு?
உன்னை திருத்தி நல்வழிப்படுத்தி... எல்லாவற்றையும் சகித்து உன்னுடன் வாழ வேண்டும் என்ற கட்டாயத்தில் உன் குடும்பம் இருக்கிறது, தற்போதைய காலகட்டத்தில் இப்படியொரு குடும்பம் கிடைப்பது மிகமிக அரிது...
காரணம் இச்சமூகம்...
 
அவர்களின் ஒவ்வொரு சொட்டு கண்ணீற்கும் எதிர் வினை உண்டு...
 
இறுதியில் நீ அவர்களிடமே சென்று தஞ்சமடைவாய்...
 
காலம் கண்டிப்பாக அதை உனக்கு கொடுக்கும் ...
 
 
 

 

மணக்கால் அய்யம்பேட்டை | 5:10 PM | Best Blogger Tips

 May be a doodle of elephant and rhinoceros

 

கோவில் யானை ஒன்று நதியில் நீராடி நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு கோவிலுக்கு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தது.
 
ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சாக்கடையில் பிரண்டு உடல்பூரா சேரும்சகதியுமாக ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.
 
யானை பாலத்தின் ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று பன்றிக்கு வழி விட்டது.
 
அந்தப் பன்றியோ, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்தது.
அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா, நீ பயந்து விட்டாயா?” என்று கேட்டது.
 
 
அதற்குக் கோவில் யானை..
 
"நான் குழித்து சுத்தமாக கோவிலுக்கு போகிறேன் என் எதிரே சாக்கடை பிரண்ட பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன், அதனால் நான் ஒதுங்கிக் கொண்டேன்" என்றது.
 
"நான் தவறி இடறிவிட்டால் பன்றி நசுங்கி விடும், அந்த பன்றிக்கு அவ்வளவு கொழுப்பா" , என்று கோபமா யானை திரும்பி முறைத்து பார்த்ததும் பன்றி பயந்து நடுங்கி தலைதெறிக்க உயிர் தப்பினால் போதும் என்று ஓடியது.,
 
துஷ்டனைக் கண்டால் தூர விலகு! இந்த வாசகம் கிட்டத் தட்ட இதற்குப் பொருந்தும். பன்றி துஷ்டன் இல்லை. ஆனால் அழுக்கு
😔

 

#ததாஸ்து__அப்படியே_ஆகட்டும்...

மணக்கால் அய்யம்பேட்டை | 10:14 AM | Best Blogger Tips

 

 13 வகை சாபங்கள் - Seithi Saral

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
       #ததாஸ்து__அப்படியே_ஆகட்டும்...

''#வார்த்தைகள்_பலித்து_விடும்''  என்று  பெரியவர்கள்  வீட்டில்  சொல்லி  கேட்டதுண்டா?  

நான்  நிறைய  கேட்டிருக்கிறேன்.

அப்படி  என்றால்  என்ன அர்த்தம்?  எதற்கு  நாம்  இதற்கு பயப்படவேண்டும்?

சில  விஷயங்களைப் பற்றி  நாம்  அதிகம்  யோசிப் பதோ   சிந்திப்பதோ,தெரிந்து கொள்ள வேண்டும்  என்று நினைப்பதோ  இல்லை.

 இது  அப்படிப்பட்ட   ஒரு விஷயம்,

 ''ததாஸ்து.''என்கிற  வார்த்தை.   ''அப்படியே  ஆகட்டும்'', ''#அவ்வாறே_ஆகுக''  என்று  அர்த்தம் அதற்கு.

🌹  வீட்டில்  எந்த சுப காரியம்  நடந்தாலும்  வீட்டில், விழாக்களில்  ஆசீர்வாத மந்த்ரங்கள் , பகவானிடம்  கோரிக்கைகள், வேண்டுகோள்கள்  மந்த்ரங்கள்  உச்சரிக்கும்போது  

🌹மற்ற சில  பிராமணர்கள், பெரியவர்கள், வாத்தியார்கள்  அடிக்கடி  அந்தந்த  மந்த்ரங்கள் நாம்  உச்சரித்த பிறகு  

 ''#ததாஸ்து_ததாஸ்து'' என்று சொல்லி அக்ஷதை நம் தலையில்   தெளிப்பார்கள்.  

 'ததாஸ்து' வைப்  பற்றி சில விவரங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

🌹நமது வாயிலிருந்து வரும் வார்த்தைகள்  அமங்கல சொற்களாக இருக்கக்கூடாது,

🌹 யாருக்கும்  சாபம் இடக்கூடாது,

🌹நல்ல பயன் தரும் சொற்களையே சொல்ல வேண்டும்.  

🌹ஏனென்றால்  எங்கும்  தேவதைகள்  நம் கண்ணுக்கு தெரியாமல் நம்மிடையே உலவுகிறார்கள். ,

🌹தேவதைகளின் அதிர்வலைகள் எங்கும் நிறைந்திருக்கிறது .

🌹ஆகவே தான் நம் சொற்களை அப்படியே நடக்கட்டும் என்று அவர்கள் ஆசிர்வதிப்பார்கள்.   

🌹எப்போதும் அவர்கள்  நாம் விரும்பியது போலவே  நடக்கட்டும்,  

🌹நம் வார்த்தை  பலிக்கட்டும், வேண்டுவது கிடைக்கட்டும் என்று வாழ்த்திக்  கொண்டே இருப்பார்கள்.

🌹அவர்கள்  சொல்லும் வார்த்தை தான்  ''ததாஸ்து''

🌹ஆகவே நாம்  விரும்பியது போலவே  ஆகிவிடும், நடந்து விடும்.

🌹துர்  வார்த்தைகள், அமங்கல வார்த்தைகளை   நாம் உச்சரித்தால் அதுபோலவே  நடந்துவிடும்.

🌹சொன்னால் பலித்துவிடும்.

🌹 மனிதன்  வாயிலிருந்து புறப்படும்  வார்த்தைகள்  நல்லதும் செய்யும் கெட்டதும் செய்யும்.

🌑வெல்லும், கொல்லும் .  வாயிலே சனி  என்று அதனால் தான் சொல்கிறோம்.  

🌺 நம் வீட்டில் மகாலக்ஷ்மி வாசம் செய்யவேண்டும் என்றால்,  இப்படிப்பட்ட  அபசகுன, அமங்கல வார்த் தைகளை நாம்  உச்சரிக்கவே கூடாது.

🌿மனதில் நினைக்கவே கூடாது.

🌿மனதில் நினைப்பது தான் வார்த்தையாக வெளியே  வரும்.

🌿  அதற்கு தான் எப்போதும் பகவன் நாமாவை விடாமல்  சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும்.உச்சரிக்க வேண்டும் .

🌿அவன் அருள்  பெற முடியும் என்பதற்காகத்தான்.
நல்லதே நினைப்போம், நல்லதே செய்வோம் நல்லதே சொல்வோம்  என்று அடிக்கடி பெரியவர்கள் சொல்வது இதற்காகத்தான்.

🕊 இதன் மூலம்  மனதில் மட்டுமல்ல நம் வீட்டிலும், நம்மைச் சுற்றிலும்  எங்கும்  சுபிக்ஷம், சந்தோஷம் என்றும்  குடிகொள்ளும்.

#சதமானம்_பவதி ... என்று நூறாண்டு வாழ்க  என்று வாழ்த்தும் போது ''ததாஸ்து'' சொல்வதால் அப்படியே நடக்கும் என்று நமது நம்பிக்கை. நம்பிக்கை வீண் போனதில்லை.

 ''#புத்ரபிராப்திரஸ்து , #விவாஹபிராப்திரஸ்து_ஆயுராரோக்ய_அபிவிருத்தி_மங்களானி_பவந்து''  என்று எல்லாம்   விவாகம் நடக்கவேண்டும், குழந்தை பிறக்க வேண்டும் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழவேண்டும்  என்ற  பிரார்த்தனைக்கு  ''ததாஸ்து'' சொன்னால் அப்படியே  நடக்கட்டும்  என்று ஆசீர்வாதம் அளிப்பது வழக்கம். .

⭕நம்மைச் சுற்றி  தேவதைகள் இருக்கிறார்கள் என்கிறது சாஸ்திரம்.

⭕ அதேபோல் முனிவர்களும் யோகிகளும் குறிப்பாக நம்முடைய முன்னோர்களும் நம்மைச் சுற்றி இருப்பவர்கள்  அனைவரும் நம்  வார்த்தைகளை  கேட்டுக்கொண்டே  இருப்பதால்   

அதற்கெல்லாம்  ‘ததாஸ்து ததாஸ்து’ என்று சொல்கிறார்கள்.  நாம் சொல்லும் நல்ல வார்த்தைக்கும்  சாபத்துக்கும்   ‘ததாஸ்து’  தான்.

 ''என்ன  ராமண்ணா, சௌக்யமா'

பெண் சாபம் நீங்க பரிகாரம் | Pen sabam neenga enna seiyya vendum

'''எங்கத்த சௌக்கியம்? விடாம இருமல், ஜலதோஷம், முதுகுவலி, மூட்டு வலி,  தலை சுத்தல் , நிக்கவே மாட்டேன்  என்கிறது. இந்த  வியாதி பிடுங்கல்  என்னை விட்டு  போகும்னு எனக்கு  தோணலை.  எந்த டாக்டராலும் குணப்படுத்தவே  முடியாது.என் முடிவே  இதாலே  தான் ''.

 இப்படி   தானே வாங்கிக் கட்டிக்கொள்ளும்   ராமண்ணா  அவ்வளவு தான். ராமண்ணா  எதிர்பார்த்தது நடந்தே தீரும்.  

ஆகவே  தான்  இங்கிலீஷிலும் தமிழிலும்  அடிக்கடி  நாம் பாசிட்டிவ்  எண்ணங்கள்  மனதை நிரப்பவேண்டும் என்கிறோம்..

ராமாயணத்தில் இப்படித்தான்  ராவணனும் கும்பகர்ணனும்  பல்லாயிரம் வருஷங்கள் கடும் தவம் இருந்து கேட்ட வரத்தை   பெற்றார்கள்.

❄ராவணன் எந்த தேவனாலும்   ராக்ஷஸனாலும்,  மும்மூர்த்திகளாலும், தேவர்களாலும்  மிருகத்தாலும், எனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்று வேண்டியவன்

❄ 'மனிதனால் '  என்ற வார்த்தையை சொல்லவில்லை,

 ''ததாஸ்து'' என்று வரம் அருளினார் ப்ரம்மா.

❄ ஆகவே  தான் விஷ்ணு மனித  குலத்தில்  ராமனாக  பிறந்து ராவணனை முடித்தார்.  

 கும்பகர்ணன்   வரம் கேட்கும்போது  ''தேவர்களே  இருக்கக்கூடாது'  ''நிர்தேவஸ்ய '' என்று  கேட்ப தற்கு  பதிலாக ,வாய் குழறி  தவறுதலாக  ''நித்ரேவஸ்ய '' என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணி  கேட்டுவிட்டான்.  

அதனால் வாழ்க்கை முழுக்க நித்திரையில் கழித்து கடைசியில் மீளாத நித்திரையில் மறைந்ததும்  '' ததாஸ்து'' வால்  தான்.  

முன்னோர் சாபம் நீங்க பரிகாரம் | Pavam Theera

🙏நம்முடைய  உடம்பு  ஒரு கோவில்.  

🙏நமது மனம் இறைவன் வாழும் இல்லம்.

🙏 கோவிலுக்கு  செல்லும் போது எப்படி குளித்து விட்டு, தோய்த்து உலர்ந்த  சுத்தமான வஸ்திரம் உடுத்திக் கொண்டு, உடலில்  விபூதி, சந்தனம், குங்குமம் அணிந்து இறைவனை வணங்க செல்கிறோமோ

அப்படி மனத்திலும் தூய்மை யோடு, இருக்க  நல்ல எண்ணங்கள், சிந்தனைகள் தான்  ''ததாஸ்து''  வை நல்லதாக நமக்கு பெற்று தரும்.

 குழந்தைகளுக்கு நாராயணன் , சிவன், லக்ஷ்மி , ஸரஸ்வதி,   கோவிந்தன் , என்று பெயர் வைக்கும் காரணம் அவர்களைப்  பற்றி பேசும்போது, கூப்பிடும் போது

 பகவன் நாமா, நல்ல வார்த்தைகள் நாக்கில் இருந்து  எப்போதும் வெளிப்படவேண்டும்  என்று   ''ததாஸ்து' பெறுவதற்கு தான்.

குழந்தைகளை, உறவுகளை, மற்றவர்களை நோக்கி ,  ' நீ செத்துத் தொலை, நாசமாகப் போ,அழிந்து போ, ஒழிந்து போ' போன்ற  கொடிய  அமங்கல வார்த்தைகளை உபயோகப்படுத்தவே  கூடாது.

  இனிமேலாவது  'ததாஸ்து' தேவதைகள் பற்றிய  நினைப்பு இருக்கட்டும்.

இதைப் படித்தவுடனாவது அவை நம்மை விட்டு போகட் டும்  அவை போகவேண்டும் என்று வேண்டிக்  கொள்ளுங்கள் . ''ததாஸ்து'' நானே சொல்கிறேன்.




🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 

நன்றி இணையம்

முருகனின் வேலுக்கு அப்படி என்ன சிறப்பு ?

மணக்கால் அய்யம்பேட்டை | 10:08 AM | Best Blogger Tips

 

 

முருகனின் வேலுக்கு அப்படி என்ன சிறப்பு ?


 வேல் முருகா வேல் ... முருகனின் வேலுக்கு அப்படி என்ன சிறப்பு? - Seithipunal

நாம் வணங்கும் தெய்வங்கள் பெரும்பாலானவை ஆயுதம் ஏந்திய தெய்வங்களே. அந்த வரிசையில் காவல் தெய்வங்கள், பார்வதி, சிவபெருமான் மற்றும் முருகன் ஆகிய தெய்வங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

 

முருகன் என்றாலே நம் நினைவிற்கு வருவது மயிலும், வேலும் தான். புராணங்களின் படி அதிக முக்கியத்துவம் வாய்ந்த மிக முக்கியமான ஆயுதமாக முருகனின் வேல் கருதப்படுகிறது.

 முருகனின் வேலுக்கு அப்படி என்ன சிறப்பு? வேலை வணங்குவதால் ஏற்படும்  பலன்கள்.!! - Seithipunal

வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை" என்பதே தொன்று தொட்டு சொல்லும் கூற்று. முருகனுக்கு இந்த வேலினால் வேல்முருகன் என்ற பெயரும் உண்டு.

 

சூரபத்மன் எனும் அரக்கனை அழிக்க தேவி பார்வதி தன்னுடைய சக்திகள் அனைத்தையும் திரட்டி வேலை வடிவமைத்து, அதனை கொண்டு சூரனை வதைக்க சொன்னதாக புராணங்கள் கூறுகின்றன. அதாவது வேல் என்பதே சக்தியின் அம்சம். அதனாலேயே வேலிற்கு சக்தி வேல் என்ற பெயரும் உண்டு.

 

முருகனின் வேலுக்கு அப்படி என்ன சிறப்பு?

 ஸ்ரீ சொர்ண ஆகர்ஷன பைரவர் சேவா அறக்கட்டளை - 🤘🐚ஹரி ஓம் நமசிவாய🔱🤘 *வேல்  முருகா வேல் ... முருகனின் வேலுக்கு அப்படி என்ன சிறப்பு?* வேல் வழிபாடு ...

"வெல்" என்ற வினைச்சொல்லே நீண்டு 'வேல்" என்ற பெயர்ச்சொல் ஆகிறது. ஆகவே, வேல் என்றால் வெற்றி என்று பொருள்படும்.

 

பராசக்தியின் வடிவமே வேலாயுதம் என்பார்கள். அறிவு, ஞானம், பொருள், இன்பம், திருவருள், திருவருட்சக்தி முதலிய சொற்கள் வேலின் உருவமாக உள்ள பராசக்தியையே குறிப்பனவாகும்.

முருகப்பெருமானுக்கே உரிய ஞானசக்தி வேலாயுதம். வெல்லும் தன்மையுடையது வேல். தன்னை ஏந்தியவருக்கு நிச்சயம் வெற்றியைத் தருவதால், அதற்கு 'வெற்றிவேல்" என்ற பெயரும் உண்டு.

 

வேல் உணர்த்துவது என்னவென்றால்... வேலின் அடிப்பகுதி ஆழமாகவும், இடைப்பகுதி விசாலமாகவும், நுனிப்பகுதி கூர்மையாகவும் திகழ்கிறது.

 

வேலைப்போன்று அறிவானது கூர்மையானதாகவும், அகன்றும், ஆழமாகவும் இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துவதாக இருக்கிறது.

 அருள்மிகு பாதாள செம்பு முருகன் கோவில், திண்டுக்கல் | Aalaya Vazhipadu | 22  April 2022 |Sun TV - YouTube

முருக வழிபாட்டில் தொன்மை வாய்ந்தது வேல் வழிபாடு. இன்றும் பல முருகன் கோவில்களில் வேலுக்கு மட்டுமே பூஜை செய்து கொண்டிருக்கின்றனர்.

 

வேல் வழிபாட்டின் எளிமைப்படுத்தப்பட்ட நவீன வடிவமே சக்திவேல் வழிபாடு. சக்திவேலை வணங்குவது என்பது அன்னை பராசக்தியையும், தனயன் முருகனையும் ஒருசேர வணங்குவதாகும்.

 

மனம் பாரமாக இருக்கும் நேரங்களில் மனதுக்குள் சக்திவேலை நினைத்துக் கொண்டு 'ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க" என்று சொன்னால்; மனம் லேசாகி விடும்.

 

வேலை வணங்குவதால் ஏற்படும் பலன்கள் :

 

 காரிய தடைகள் விலகி திருமணம் கைகூடும், குழந்தைப்பேறு கிடைக்கும்.

 கல்வியில் மேன்மை, மன பயம் நீங்கி வலிமை உண்டாகும்.

 வியாபாரத்தில் இலாபம், பில்லி சூனியம், நவகிரகங்களினால் உண்டாகும் தோஷங்கள் நீங்கும்.

 சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மரண பயம் நீங்கி நீண்ட ஆயுள் பெறலாம்.

 சொந்தமாய் வீடு மற்றும் நினைத்த காரியம் நினைத்தப்படியே நிறைவேறும்.

 கலைகளில் தேர்ச்சி, பாவங்கள் தீர்ந்து புண்ணியம் பெருகும்.

 

🙏வெற்றிவேல், வீரவேல் என முழங்கும் இடத்தில் வேலின் ஆற்றலும், முருகனின் ஆசியும் அனைவருக்கும் கிடைக்கும்🙏

 



முருகா_சரணம்.


🙏🙏⚜️⚜️⚜️🔯🔯🔯⚜️⚜️⚜️🙏🙏

     

நன்றி இணையம்