16008 சாளக்கிராம கற்களை

மணக்கால் அய்யம்பேட்டை | 10:03 AM | Best Blogger Tips

 


 

ஸ்ரீராமஜெயம்

🌹🌺"  16008 சாளக்கிராம கற்களை  இணைத்து உருவான கேட்டதையெல்லாம் கொடுக்கும் பெருமாள்....  பற்றி - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------
🌺🌹ஒரு முறை பிரம்மா யாகம் நடத்திய போது ஏற்பட்ட தவறால், யாக குண்டத்தில் இருந்து கேசன், கேசி என்ற அரக்கர்கள் தோன்றினர். இவர்களால் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் தொந்தரவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட இவர்கள் திருமாலிடம் முறையிட்டனர்.

🌺திருமால் கேசனை அழித்து, கேசியின் மேல் சயனம் கொண்டார். கேசியின் மனைவி பெருமாளை பழிவாங்கும் நோக்கத்துடன், கங்கையையும், தாமிரபரணியையும் துணைக்கு அழைக்க, அவர்கள் இருவரும் வேகமாக ஓடி வந்தனர்.

🌺இதையறிந்த பூமாதேவி திருமால் சயனித்திருக்கும் பகுதியை மேடாக்கினாள். அவர்கள், திருமால் இருந்த இடத்தை சுற்றி வணங்கி இரண்டு மாலைகள் போல் வட்ட வடிவில் ஓட ஆரம்பித்தனர். இதனால் இத்தலம் "வட்டாறு' என அழைக்கப்பட்டது.

🌺இரு நதிகளும் பெருமாளுக்கு மாலை சூட்டியது போல் இருப்பதைக்கண்ட நம்மாழ்வார், "மாலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான்', என பாடுகிறார். கேசனை அழித்ததால் இத்தல பெருமாள் கேசவப் பெருமாள் எனப்படுகிறார்.

🌺கேசியின் மீது சயனித்த போது, அவன் தன் 12 கைகளால் தப்புவதற்கு முயற்சி செய்தான். பெருமாள் அவனது 12 கைகளிலும் 12 ருத்ராட்சங்களை வைத்து தப்பிக்க விடாமல் செய்தார். இவையே திருவட்டாரை சுற்றி சிவாலயங்களாக அமைந்தன.

🌺மகாசிவராத்திரியின் போது பக்தர்கள் 12 சிவாலயங்களையும், ஓடியவாறு தரிசித்து, கடைசியில் ஆதிகேசவப் பெருமாளையும், அவர் பாதத்தின் கீழ் உள்ள சிவனையும் தரிசிப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.

🌺 இங்குள்ள பெருமாளின் திருமேனி கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால், 16008 சாளக்கிராம கற்களை (நாராயணனின் வடிவமான கல் வகை) இணைத்து உருவானது.

🌺ஆண்டுதோறும் பங்குனி 3 முதல் 9 வரையிலும், புரட்டாசி 3 முதல் 9 வரையிலும் சூரியனின் அஸ்தமன கதிர்கள் மூலவரின் மீது பட்டு தரிசிப்பதைக் காணலாம்.

🌺அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில், திருவட்டாறு, கன்னியாகுமரி, தமிழ்நாடு*
இவருக்கு கேட்டதையெல்லாம் கொடுக்கும் பெருமாள் என வேறு பெயரும் உண்டு 🌹🌺

🌺🌹 வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க 🌷🌹
-------------------------------------------------
🌻🌺🌹 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் *🌹🌺 


நன்றி இணையம்