ஒரு சில விஷயங்கள் நடக்கும்போது நம்பமுடியாத வகையில் இருக்கின்றது, மெய் சிலிர்க்கின்றது, இதுதான் தெய்வ அருளா? இப்படியும் நடக்குமா என நடுங்கும் கரங்களுடன் மேனி உதற வணங்க வேண்டியிருக்கின்றது
மறுநிமிடம் இதிலெல்லாம் ஆச்சரியபட ஒன்றுமில்லை, உரிய காலத்தில் இப்படித்தான் நடக்கும் என இயல்பாக கடக்கவும் மனது சொல்கின்றது
நடந்த சம்பவம் அப்படியானது
நேற்று திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகளின் அவதார நாள், காஞ்சி பெரியவர் சொன்னது போல "திருவண்ணாமலை என்றாலே அண்ணாமலையார், ரமணர், சேஷாத்திரி ஸ்வாமிகள் என மூவர் முதன்மை" எனும் அளவு அவரின் மகா சக்தி பெரிது
அந்த அவதாரத்தின் தினத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் வழமையான "என் மண், என் மக்கள்" நடை பயணத்தின் பகுதியாக திருவண்ணாமலை சென்றிருக்கின்றார்
அங்கே அவர் அறிவித்த அறிவிப்பு "நாங்கள் இங்கே வென்றால் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அண்ணாமலையார் வளாகத்தை மிக அழகாக தெய்வீகமாக மாற்றுவோம், காசிபோல் உஜ்ஜைனி போல் அயோத்தி போல் மாற்றுவோம்" என்பது
இப்படி ஒரு வார்த்தையினை சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், சிவாஜி சாம்பாஜி என இந்து மன்னர்கள், கடைசியாக மங்கம்மாள் காலத்துக்கு பின் இப்போதுதான் தமிழகம் கேட்கின்றது
கவனியுங்கள் நேற்று சேஷாத்திரி சுவாமிகள் அவதார நாள்
அந்த அறிவிப்பினை வெளியிட்டவர் பெயர் அண்ணாமலை
வெளிட்ட இடம் திருவண்ணாமலை
இவை தற்செயலாக நடந்தது போல் தோன்றினாலும் உள்ளே இணைத்திருக்கும் சூட்சும சங்கிலி சாதாரணம் அல்ல, அது பிரபஞ்ச சக்திகளின் இயக்கம் , முன்பே திட்டமிட்ட காட்சி அது உரிய நேரத்தில் துலங்குகின்றது என்பது புரியவரும்
ஆக கண்களை மூடி மனதார கண்டால் நடப்பதெல்லாம் தெய்வத்தின் செயலாக நடப்பது புரியும், தமிழகத்தை மீட்க தெய்வீக சக்திகள் களமிறங்கிவிட்டதும் புரியும்
பாஜக அண்ணாமலைக்கு சித்தர்கள் அருள் இருப்பதும், அவர்களே அவரை இயக்குகின்றார்கள் எல்லாம் சிவனின் இயக்கம் என்பதும் சரியாக புரியும்
அண்ணாமலை சாமானியர் அல்ல, வடக்கே யோகி போல மோடி போல அவரும் இழக்க இனி ஏதுமில்லை என துணிந்து களத்துக்கு வந்துவிட்ட சன்னியாசி அவரும் ஒரு யோகி என்பதும் புரியும்
எது நடக்கின்றதோ அது நன்றாகவே நடக்கின்றது என்பது புரிகின்றது
தமிழக பாஜக அண்ணாமலைக்கு சித்தர்கள் அருளும் வழிகாட்டுதலும் உள்ளது என்பதை அவதானிக்க முடிகின்றது
தேசமெங்கும் இந்து ஆலயங்கள் துலங்க தொடங்கியிருக்கும் இந்நேரம், சேஷாத்திரி சுவாமிகள் அருளால் திருவண்ணாமலையும் துலங்கட்டும், அதிலிருந்து ஒவ்வொரு ஆலயமாக மீண்டெழட்டும்
தமிழகத்தில் யோகியாக நின்று ஆலயங்களை வாழவைக்க துலங்க வைக்க அண்ணாமலைக்கும் ஒரு வாய்ப்பினை தெய்வமும் காலமும் சித்தர்களும் அருளட்டும், அப்படி அருளும் காலம் நெருங்கி கொண்டிருக்கின்றது
நன்றி இணையம்
பிரம்ம ரிஷியார்