அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு !

மணக்கால் அய்யம்பேட்டை | 11:55 AM | Best Blogger Tips
Image result for அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்
https://www.facebook.com/images/emoji.php/v6/f49/1/16/1f320.png🌠 திருச்செங்கோட்டு மலை : திருச்செங்கோடு என்பதற்கு 'அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை என்றும், செங்குத்தான மலை" என்றும் பொருள். மலையின் பெயரே ஊருக்கு அமைந்துவிட்டது.
https://www.facebook.com/images/emoji.php/v6/f49/1/16/1f320.png🌠 இந்த மலை உருவானதற்கு ஒரு புராணக்கதை உண்டு. ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இதற்காக ஒரு பந்தயம் கட்டப்பட்டது. ஆதிசேஷன் தன் படங்களால் மேரு மலையை அழுத்தி பிடித்து கொள்ள வேண்டும். வாயு பகவான் தன் பலத்தால் மலையை விடுவிக்க வேண்டும் என்பதே பந்தயம்.
https://www.facebook.com/images/emoji.php/v6/f49/1/16/1f320.png🌠 இதன்படி வாயு வேகமாக வீச, மலையின் முகட்டுப்பகுதிகள் பறந்து சென்று பு+மியின் பல இடங்களிலும் விழுந்தன. அதில் ஒன்றே திருச்செங்கோட்டு மலை. ஆதிசேஷ பாம்பு மலையைப் பிடித்த போது, ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் கொட்டி, மலை செந்நிறமானதாலும் இப்பெயர் வந்ததாகச் சொல்வர். இம்மலைக்கு நாககிரி, வாயுமலை என்னும் பெயர்களும் உண்டு.
திருத்தலக் குறிப்பு:
தல இறைவன் : அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர், அருள்மிகு செங்கோட்டு வேலவர், அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள்.
தல விருட்சம் : இலுப்பை மரம்.
தல தீர்த்தம் : தேவ தீர்த்தம், கணபதி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், இந்திர தீர்த்தம், சிவ தீர்த்தம், குமார தீர்த்தம், பாவநாச தீர்த்தம், தீன்ம தீர்த்தம், வைரவ தீர்த்தம், வாண தீர்த்தம், சண்முக தீர்த்தம், வாயு தீர்த்தம், அக்னி தீர்த்தம், சப்தகன்னியர் தீர்த்தம், நாக தீர்த்தம்.
சிறப்பம்சங்கள் :
https://www.facebook.com/images/emoji.php/v6/f49/1/16/1f320.png🌠 ஒரே உருவத்தில் இடது பக்கம் பெண்ணுருவாகவும், வலது பக்கம் ஆணின் உருவமாகவும் உமையொரு பாகனாய், ஈருடல் ஓருயிர் என்னும் சொல்லிற்கு உண்மையிலேயே சரியானதொரு வடிவத்தை இங்கு காணமுடியும். வலது கையில் தண்டாயுதம் தாங்கிய வண்ணம் வீற்றிருக்கிறார் அம்மையப்பன்.
https://www.facebook.com/images/emoji.php/v6/f49/1/16/1f320.png🌠 மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றும் சிறப்புடன் அமையப் பெற்ற திருத்தலம். சிவனும் சக்தியும், அம்மையும் அப்பனும் இணைந்து கலந்த நிலையில், அம்மையப்பன் எனும் தோற்றத்தில் இறைவன் எழுந்தருளி உள்ளது உலகிலேயே இத்தலத்தில் மட்டும்தான். இதுவே இத்திருக்கோவிலின் பெருஞ்சிறப்பு. தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், திருப்புகழ், கந்தர் அனுபு+தி, கந்தர் அலங்காரம் என பல்வேறு தெய்வீக நு}ல்களில் இத்திருக்கோவில் போற்றி பாடப்பட்டுள்ளது.
https://www.facebook.com/images/emoji.php/v6/f49/1/16/1f320.png🌠 இத்திருக்கோவில் அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலன், ஆதி கேசவ பெருமாள் என மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனிச் சன்னதிகள், ஒவ்வொரு தெய்வங்களுக்கும் தனித்தனி பரிவார தெய்வங்கள் என மூன்று தனித்தனி கோவில் அமைப்புடன், ஒரே திருக்கோவிலாய் அமையப் பெற்ற திருத்தலம். ஒற்றுமையின் சின்னமாய் திகழ்கிறது இத்திருத்தல அமைப்பு.
நாக சிலை :
60 அடி நீளத்தில் ஐந்து தலை நாகத்தின் சிலை கோவில் படிக்கட்டு அருகில் உள்ளது. நாகதோஷம், ராகு-தோஷம், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடுசெய்கின்றனர்.
ஒற்றுமை விரதம் :
திருவண்ணாமலை போலவே இம்மலையை பௌர்ணமி நாளில் வலம் வந்தால் கயிலாயத்தையும் வைகுண்டத்தையும் வலம் வந்த பலன் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமையுடன் வாழ, இக்கோவிலில் கேதார கவுரி விரதம், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாள்கள் கடைபிடிக்கப்படுகிறது.
உங்களுடைய வேண்டுகேள் அனைத்தையும் நிறைவேற்றும் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரை வணங்கி எல்லா வளங்களையும் பெற்று மகிழுங்கள்....!

 நன்றி இணையம்

மனதிற்கான மருந்துகள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 11:51 AM | Best Blogger Tips
Image result for மனதிற்கான மருந்துகள்
https://www.facebook.com/images/emoji.php/v6/f71/1/16/1f339.png🌹 செலவுகளுக்கு யோசிக்காதீர்கள். மண்டையைப் பிய்த்துக் கொள்ளாதீர்கள். உங்கள் தேவைகளுக்கு நீங்கள் செலவழிக்காவிட்டால்-யார் செலவழிப்பார்கள்? ஆகவே தேவைகளுக்குப் பணத்தைச் செலவழியுங்கள்.
https://www.facebook.com/images/emoji.php/v6/f71/1/16/1f339.png🌹 இரசிக்க வேண்டியதை ரசியுங்கள். அனுபவிக்க வேண்டியதை அனுபவியுங்கள். மொத்தத்தில் நதெழல பண்ண வேண்டியதை எஞ்சாய் பண்ணுங்கள்.
https://www.facebook.com/images/emoji.php/v6/f71/1/16/1f339.png🌹 முடிந்த அளவு, தான, தர்மம் செய்யுங்கள். பணத்தை வைத்துப் பிறருக்கு உங்களால் முடிந்த அளவிற்கு உதவுங்கள்.
https://www.facebook.com/images/emoji.php/v6/f71/1/16/1f339.png🌹 உங்கள் குழந்தைகளையோ அல்லது பேரக் குழந்தைகளையோ, நீங்கள் இறந்த பிறகு தான், உங்கள் பணம் அவர்களுக்குக் கிடைக்கும் என்கின்ற நிலைமையை, நினைப்பை உண்டாக்கி விடாதீர்கள்.
https://www.facebook.com/images/emoji.php/v6/f71/1/16/1f339.png🌹 நீங்கள் இறந்த பிறகு உங்களுடைய பணம் என்ன ஆகும் என்றோ அல்லது உங்களை யார் பாராட்டுவார்கள் அல்லது திட்டித் தீர்ப்பார்கள் என்ற கவலை எல்லாம் உங்களுக்கு வேண்டாம். அதைக் கேட்பதற்கோ அல்லது பார்ப்பதற்கோ நீங்கள் இருக்கப் போவதில்லை.
https://www.facebook.com/images/emoji.php/v6/f71/1/16/1f339.png🌹 நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து, சேர்த்த பணம், சொத்து எல்லாம் ஒரு நாள் உங்களை விட்டுப் போகப் போகிறது. அதைத் தடுப்பதற்கும் அல்லது காப்பாற்றுவதற்கும் நீங்கள் இருக்கப் போவதில்லை. அதை மனதில் வையுங்கள்!
https://www.facebook.com/images/emoji.php/v6/f71/1/16/1f339.png🌹 உங்கள் குழந்தைகளுக்காக அதிகம் கவலைப்படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுடைய தலை விதிப்படி தான் நடக்கும். அதில் உங்கள் பங்காற்றலுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. நோ சான்ஸ் ஃபார் யு+!
https://www.facebook.com/images/emoji.php/v6/f71/1/16/1f339.png🌹 நீங்கள் மாங்கு மாங்கென்று என்ன தான் உழைத்தாலும், தினசரி வாழ்க்கை ஒரே மாதிரி சீராக இருக்காது. தொட்டிலில் படுத்திருந்த காலத்தில் இருந்து, சுடுகாட்டில் படுக்க வைக்கப்படும் காலம் வரை, ஒரே மாதிரி இருந்தால், அதில் சுவாரஸ்யம் எங்கே இருக்கும்?
ஒரு நாள் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். ஒரு நாள் மகிழ்ச்சியின்றி இருப்பீர்கள். எல்லா தினங்களையும் ஒரே மனப்போக்கில் ஏற்றுக் கொள்ளுங்கள்.
'வந்ததை வரவில் வையுங்கள், சென்றதை செலவில் வையுங்கள்" அது தான் கவியரசர் கண்ணதாசன் எழுதி வைத்த கிழ்ச்சிக்கான சு+த்திரம்!
https://www.facebook.com/images/emoji.php/v6/f71/1/16/1f339.png🌹 எப்போதும் உற்சாகமாக இருந்தால் உங்களுக்கு ஏற்படும் நோய் நொடிகள் தானாகவே சரியாகும். உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பவரை நோய் நொடிகள் அண்டாது!
https://www.facebook.com/images/emoji.php/v6/f71/1/16/1f339.png🌹 உங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் போற்றி வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் இல்லையேல் உங்கள் வாழ்க்கை தனிமைப்பட்டுப் போய்விடும்!
https://www.facebook.com/images/emoji.php/v6/f71/1/16/1f339.png🌹 மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? எதிர்பார்ப்பிற்கும், நடப்பிற்கும் உள்ள இடைவெளி தான் மன அழுத்தத்தை உண்டு பண்ணும். அந்த இடைவெளி அதிகமாக, அதிகமாக, மன அழுத்தமும் அதிகமாகும். ஆகவே எதையும் எதிர்பார்க்காதீர்கள். எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
https://www.facebook.com/images/emoji.php/v6/f71/1/16/1f339.png🌹 அடிக்கு அடி, சரிக்குச் சரி என்ற போட்டி மனப்பான்மையை உதறித் தள்ளுங்கள். ஒரு நாய் நம்மைக் கடித்தால் அதை நாம் திருப்பிக் கடிக்க முடியாது. ஆகவே உங்கள் மதிப்பையும், மேன்மையையும் விட்டுக் கொடுக்காதீர்கள். அடுத்தவர்களுக்கு உதாரணமாக இருங்கள். அது தான் நல்லது.
எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்துச் செய்யுங்கள். புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ளுங்கள். நடப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை சுவையாக இருக்கும்!
Image result for மனதிற்கான மருந்துகள்

 நன்றி இணையம்