திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில்

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:41 | Best Blogger Tips

Image result for திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில்
மூலவர் : உச்சிப்பிள்ளையார்
தீர்த்தம் : காவிரி
ஆகமம்ஃபு+ஜை : சிவாகமம்
பொது தகவல் :
தமிழகத்தில் திருச்சீராபுரம் என்ற ஊரே நாளடைவில் திருச்சி என அழைக்கப்படுகிறது.
திருச்சியை நினைத்தவுடன் கண் முன்னே தெரிவது மலைக்கோட்டையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலும் அதன் கம்பீரமும் தான் என்பது அனைவரும் அறிந்ததே.
சுமார் 1800 வருடங்களுக்கு முன்பே, குணபரன் என்ற மகேந்திர பல்லவ மன்னர் காலத்தில் இதைக் கட்ட ஆரம்பித்து, மதுரை நாயக்க மன்னர்களால் விஜய மன்னர்கள் முன்னிலையில் பு+ர்த்தி செய்யப்பட்டது. இதைப் பு+ர்த்தி செய்ய 300 மனிதர்கள் தொடர்ந்து 11 வருடங்கள் உழைத்தனர்.
தலச் சிறப்பு : மலை உச்சி மேல் அமைந்துள்ள விநாயகர் கோவில்.
வரலாறு :
மகாவிஷ்ணு ராமவதாரத்தில், ராவணனை வதைத்து சீதையை மீட்டு அயோத்திக்கு சென்றார். விபீஷணன், சுக்ரீவன் மற்றும் அனுமன் ஆகியோரும் உடன் சென்றனர்.
அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்புகையில், நினைவுப்பரிசாக ரங்கநாதர் சிலையை பெற்றுக் கொண்டு விபீஷணன் தெற்கே வந்தான்.
எழில் வனப்புடன் மிகுந்த சோலை நடுவே அகண்ட காவிரியில் சற்று ஓய்வெடுக்க எண்ணினான். அப்போது, அங்கு சிறுவன் உருவில் நின்று கொண்டிருந்த விநாயகரிடம் ரங்கநாதர் சிலையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு கொடுத்துவிட்டு சென்றான். விநாயகர் சிறிது நேரம் பார்த்து விட்டு அச்சிலையை பு+மியில் வைத்துவிட்டு அருகில் இருந்த மலையில் போய் அமர்ந்து கொண்டார்.
திரும்பி வந்து வீபிஷணன் சிறுவனைக் காணாமல் மலைத்து போனான். செய்வதறியாது பு+மியில் இருந்த சிலையை எடுக்கப்பார்த்தும் அவனால் சிலையை நகர்த்த முடியவில்லை. இதனால் இலங்கைக்கு செல்ல இருந்த ரங்கநாதர், விநாயகரின் அருளால் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளினார்.
தான் சிலையை கொடுத்த அந்த சிறுவன் மலையில் அமர்ந்திருப்பதை பார்த்த வீபிஷணன் கோபமடைந்து, விநாயகர் தலையில் ஒரு குட்டு வைத்தான் என்பது வரலாறு.
உச்சிப்பிள்ளையார் தலையில் இன்றும் அந்த குட்டின் வடு காட்சியளிக்கிறது. இப்படி சிறப்பு வாய்ந்த விநாயகர் தான் தமிழகத்தின் நலன் காக்க அருகில் அமைந்துள்ள ரங்கநாதருடன் ஆண்டாண்டு காலமாய் ஆட்சி செய்து வருகிறார்.
அமைப்பு :
மலைக்கோட்டையின் மீது இருந்து பார்க்கையில், திருச்சி மாநகரின் எல்லா பக்கமும் ரம்மியமாக தெரியும். மலைக் கோட்டையின் உயரம் 275 அடி. மலைக்கோவிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன. இப்படி வடிவமைக்கப்பட்ட கோவிலின் ஆயிரங்கால் புனித மண்டபம் சிறப்பு வாய்ந்தது. இங்கு இன்றும் திருமண வைபவங்கள் நடந்து வருவது மிகச்சிறப்பு.
இக்கோவிலின் கீழ் உள்ள தாயுமானவர் கோவில் தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்று.
பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி மாநகரின் மத்தியில் சுமார் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின் சிறப்பாகும். மிக பழமையான இந்த மலை ஏறத்தாழ 3400 மில்லியன் வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது.
நேர்த்திக்கடன் :
விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அருகம்புல் மாலை சாற்றி வழிபடுகிறார்கள்.

 நன்றி இணையம்