🌷 🌷🌷♥விஞ்ஞான வளர்ச்சி அவசியம்தான் ♥ நம் மெய்ஞானத்தை அழிக்கிற காரணியாக .....♥🌷 🌷🌷🌷

மணக்கால் அய்யம்பேட்டை | 4:57 PM | Best Blogger Tips

♥முப்பது வருஷத்துக்கு முன்னால நாம்ம ஒரு கல்யாணவீட்டுக்கு போனோம்னா...
 
♥ஆண்கள் அமர்வதற்கு இரும்பு சேர் அல்லது மர சேர் போடப்பட்டிருக்கும். 
 
♥பெண்கள் அமர கலர் கலரா பவானி ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கும்.
 
♥சின்ன சின்ன பசங்க எல்லாம் ஓடியாடி விளையாடி கொண்டிருப்பார்கள்.
 
♥பெரியவர்கள் தாம்பூலம் நிறைந்த வாயோடு
ஊர்க்கத முதல் அகில உலக கதை வரை பேசிக்கொண்டு இருப்பார்கள்.
 
♥மண்டத்துல ஒரு ஓரமா பச்ச பெல்ட் கட்டுன பெருசுங்க எல்லாம் சட்டைய கழட்டி போட்டுட்டு சீட்டு விளையாடிக்கொண்டு இருப்பார்கள்.
 
♥சட்டைப்பையில் டெஸ்ட்டரோடு அங்கேயும் இங்கேயும் திரியும் மைக்செட் காரரை ஏதோ விஞ்ஞானி மாதிரி பார்ப்பார்கள்.
 
♥விசேஷத்துக்கு வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களை பைலட் ரேஞ்சுக்கு மதித்து அவர்களை உபசரிப்பார்கள்.
 
♥வழ வழப்பான சில்க்துணியில் பெரியகாலரோடு சட்டை அணிந்து ,தலை முடியை வித்தியாசமாக சீவியிருக்கும் இளைஞர்களை ஹீரோ போல பார்ப்பார்கள்.
 
♥ இருசக்கர வாகனங்களில் வந்தாலே தனிமதிப்புண்டு. அதிலும் புல்லட் ,எஸ்டி, ராஜ்தூத் "சில்வர் ப்ளஸ் போன்ற வாகனங்களில் வருவோருக்கு சிறப்பு மரியாதை நிச்சயம் உண்டு.
 
♥சாப்பாட்டு பந்தியில் நிச்சயம் ஒரு சண்டையும் கோபித்து கொண்டு அடம்பிடிக்கும் நிகழ்வும் நடக்கும்.
 
♥இப்படியாக.. ஒரு விஷேஷத்துக்கு போயிட்டு வந்தோம்ன்னா அங்கு நடந்த நிகழ்வுகளின் நினைவு சுவடுகள் மறைய மாதங்களோ வருடங்களோ ஆகும்.
 
♥எப்ப இந்த பாழாய்போன செல்போன் வந்துச்சோ...குறிப்பா இணைய வசதியோட ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் வந்துச்சோ... அப்போ மறைந்து போனது மனித நேயமும் சக மனித நட்பு பாராட்டலும்.
 
♥இப்போல்லாம்.... பஸ்சுல ,ட்ரையின்ல , கல்யாண வீட்டுல எழவு வீட்டுல, பார்க்குல, பீச்சுல, தியேட்டர்லனன்னு.... இப்படி எங்கெங்கு போனாலும் குனிந்த தலை நிமிராம பக்கத்துல என்ன நடக்குதுன்னு கூட தெரியாம கைப்பேசியே கதின்னு கிடக்கும் தலைமுறைகளை பாக்க பரிதாபமாக இருக்கு.
இவர்கள் இழந்தது எத்தனையோ?.
இழக்க போவது எத்தனையோ?
  
♥காக்கா கத்துது...உறவுகள் வரப்போறாங்கடான்னு ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி அந்த உறவுகளின் வருகைக்காக ஏங்க வைத்த தாய்மார்களின் குரல்கள் மழுங்கடிக்கபட்டு... வாட்சப் வீடியோ கால்களின் சத்தங்கள் சகல வீடுகளிலும் ஒலிக்க தொடங்கிவிட்டது.
 
♥விஞ்ஞான வளர்ச்சி அவசியம்தான். அதுவே நம் மெய்ஞானத்தை அழிக்கிற காரணியாக மாறிவிடக்கூடாது.
🙏
இந்த தலைமுறை மாறினால் மட்டுமே
அடுத்த தலைமுறை இழந்ததை மீட்கலாம்.
பதிவு பிடித்து ஷேர் பண்ணினால் மட்டும் அல்லாமல், 
 
இந்த மொபைல் அடிமைத்தனத்திலுருந்து வாருங்கள்.
 
உங்கள் அடுத்த தலைமுறையோடு..
..!
✿ ..!
✿ ..!

 

🌷 🌷🌷 🌷May be an image of 1 person, smiling, grass and tree  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

தெருவில் போகும் வாகனங்களை குரைத்துக்...

மணக்கால் அய்யம்பேட்டை | 3:28 PM | Best Blogger Tips

 


🐕‍🦺தெரு_நாய்கள் ஏன் திடீரென தெருவில் போகும் வாகனங்களை குரைத்துக் கொண்டே துரத்த ஆரம்பிக்கிறது ?
👍🏻அதற்கான அறிவியல் பூர்வமான காரணம் என்ன ? அதனால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க என்ன வழி ?

🐕‍🦺👍🏻அதற்கான சரியான காரணம் என்னவெனில் துரத்தப்படும் வாகனமானது எங்கேயாவது நின்று இருந்தபோது அதன் மீது அந்த பகுதியில் வசித்த ஒரு தெரு நாய் அதன் சிறுநீரைக்  அந்த வாகனத்தின் மீது கழித்து தனது எல்லையை வரையறுத்து இருக்கும்.

🐕‍🦺தற்போது_அந்த சிறுநீர் மணத்துடன் வாகனமானது இன்னொரு நாயின் எல்லைக்குள் நுழையும் போது இங்குள்ள நாய் அந்த சிறுநீரை மோப்பம் பிடித்து அந்த வாகனத்தினை  எதிரி நாயாக பாவித்து துரத்த ஆரம்பிக்கும்.

🐕‍🦺நாயின்_துரத்தலுக்கு பயந்து வாகனத்தினை வேகமாக செலுத்தினால்  அந்த நாயும் வேகமாக துரத்தி வாகனம் விபத்தில் சிக்கும் அபாயம் உண்டாகும்.

👍🏻🐕‍🦺ஆகவே_அப்படி நாய் துரத்தினால் வாகனத்தினை சட்டென பயப்படாமல்  நிறுத்தினால் துரத்தி வரும் நாய் அருகில் வந்து பார்த்து எதிர்பார்த்த நாய் இல்லாத நிலையினைக் கண்டு குழம்பி நின்று விடும். 👍🏻

👍🏻அடுத்து_வீட்டுக்கு சென்ற பின்னர் முதல்வேலையாக நீரை வாகனத்தின் மீது பீய்ச்சி அடித்து நாயின் சிறுநீர் மணம் போகும்படி கழுவி விடவும்...👍🏻
 

 

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

 

*மருவார் கொன்றை மதிசூடி*

மணக்கால் அய்யம்பேட்டை | 3:26 PM | Best Blogger Tips

 Sri Brahmapureeswarar Temple - Thirumeignanam | அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர்  கோயில், திருமயானம் - YouTube

சுந்தரர் தேவாரம்
ஏழாம் திருமுறை
பண் - பழஞ்சுரம்
*இராகம் - சங்கராபரணம்*
*ஓதியவர்*
*சண்முகசுந்தரம்*
*பிரதோஷத்தை முன்னிட்டு*
*சிவ பக்தி கீதம்*
 
👇👇👇
மருவார் கொன்றை மதிசூடி
மாணிக் கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு
மகிழ்ந்து பூதப் படைசூழத்
திருமால் பிரமன் இந்திரற்குந்
தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.
* சிவபக்தி கீதம்*
 Tirumayanam Brahmapureeswarar Temple Nagapattinam | திருமயானம்  பிரம்மபுரீஸ்வரர் கோயில் நாகப்பட்டினம் - YouTube
🌺அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருமயானம்,நாகப்பட்டினம் மாவட்டம்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருபாட்டு.
திருச்சிற்றம்பலம் 
எமவாதனை நீக்கும் பிரம்மபுரீஸ்வரர் கோவில், திருக்கடையூர் மயானம்எமவாதனை நீக்கும் பிரம்மபுரீஸ்வரர் கோவில், திருக்கடையூர் மயானம்
🌺தெளிவுரை :
இத்திருப்பதிகம் இறைவரது தன்மைகளைச் சிறப்பித்து அருளிச் செய்தது. திருக்கடவூர் மயானத்தில் கோயில் கொண்டிருக்கும் பெரிய பெருமான் அடிகளாகிய சிவபெருமானார், நறுமணம் நிறைந்த கொன்றை மலர் மாலையையும் பிறையையும் திருமுடியில் சூடிக்கொண்டு உமாதேவியோடு பூதப் படைகள் மகிழ்ந்து சூழ, வெள்ளி மலையின்மேல் ஒரு மாணிக்க மலை வருவது போல விடையின்மேல் வருவார். திருமால் பிரமன் இந்திரன் என்ற பெருந்தேவர்கட்கும். மற்றைய தேவர். நாக லோகத்தார். அசுரர் என்பவர்கட்கும் அவரே தலைவர்.
🌹


 

*🙏🕉️பிரதோஷ சிவன் 108 போற்றி நாமாவளி : 🕉️🙏*

மணக்கால் அய்யம்பேட்டை | 3:13 PM | Best Blogger Tips

 Pradosham Mantra Tamil,பிரதோஷ சிவன் 108 போற்றி நாமாவளி : பிரதோஷ நாளில்  சொல்ல வேண்டிய மந்திரம் - pradosham shivan 108 potri namavali - Samayam Tamil


*🌹பிரதோஷ நாளில் சொல்ல வேண்டிய மந்திரம்*.
 
*சிவ பெருமானுக்குரிய எட்டு விரதங்களில் சிவராத்திரி பூஜைக்கு இணையாக முக்கியமானதாக சொல்லப்படுவது பிரதோஷ விரதம். தேய்பிறை, வளர்பிறை என மாதத்திற்கு இரண்டு முறை பிரதோசம் வருகிறது. வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரயோதசி திதியை பிரதோஷ என்கிறோம்.*
 
*தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது முதலில் வெளிப்பட்ட விஷத்தை அருந்தி, உலக உயிர்களை காத்தார் சிவ பெருமான். அமிர்தம் கிடைத்த சந்தோஷத்தில் சிவ பெருமானுக்கு நன்றி சொல்ல மறந்த தவறை உணர்ந்து, தேவர்கள், சிவ பெருமானை பூஜை செய்த நேரமே பிரதோஷ காலமாகும்.*
lord shiva potri in tamil, SAVE 32% - www.jacotbilley.fr
*🙏🌹தேவர்கள் வழிபட்ட அந்த சமயத்தில் சிவ பெருமானையும், நந்தியையும் வழிபடுவது சகல நன்மைகளையும் தரக் கூடியதாகும். தோஷங்கள், பாவங்கள் அனைத்தையும் நீக்கி, மேலான நன்மையை தரக் கூடியதே பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் சிவனிடம் முன் வைக்கும் வேண்டுதல் அனைத்தையும் அவர் நிறைவேற்றி வைப்பார்.🌹🙏*
 சிவனே என் ஜீவன் - இன்று தேய்பிறை பிரதோஷம் (11.06.2018) பிரதோஷ நேரத்தில் கூற  வேண்டிய ஸ்லோகம் ! ஸித்தயோகீ மஹர்ஷிச்ச ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக ...
*🙏🕉️பிரதோஷ சிவன் 108 போற்றி நாமாவளி : பிரதோஷ நாளில் சொல்ல வேண்டிய மந்திரம்🕉️🙏*
ஓம் முக்கண் முதல்வனே போற்றி
ஓம் மும்மூர்த்திகளில் மூத்தவனே போற்றி
ஓம் திக்கெட்டும் ஆள்பவனே போற்றி
ஓம் தில்லையம்பலவாணனே போற்றி
ஓம் சக்தியின் நாயகனே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
ஓம் பக்திக்கு பணிபவனே போற்றி
ஓம் பரம்பொருளாய் இருப்பவனே போற்றி
ஓம் நவசிவாயனே போற்றி போற்றி
ஓம் கங்கை கொண்டவனே போற்றி
ஓம் காசி விஸ்வநாதனே போற்றி
ஓம் திங்களை சூடியவனே போற்றி
ஓம் திருவிளையாடல் புரிந்தவனே போற்றி
ஓம் சங்கமேஸ்வரனே போற்றி
ஓம் சங்கரி துணைவனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் இயக்கத்தின் மூலவனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் மாதொரு பாகனே போற்றி
ஓம் இமயமலையனே போற்றி
ஓம் ஆதரவாய் இருப்பவனே போற்றி
ஓம் அரவணைக்கும் அய்யனே போற்றி
ஓம் சோதனைகள் தீர்ப்பனே போற்றி
ஓம் சுடரொளியாய் தெளிபவனே போற்றி
ஓம் நாதபிரம்மமே போற்றி
ஓம் நல்லோரைக் காப்பவனே போற்றி
ஓம் நவசிவாயனே போற்றி போற்றி
ஓம் அடியார்க்கு அடியனே போற்றி
ஓம் அர்தநாரீஸ்வரனே போற்றி
ஓம் தடைநீக்க வல்லோனே போற்றி
ஓம் தண்டீஸ்வரனே போற்றி
ஓம் அடிமுடியில்லாதவனே போற்றி
ஓம் அண்ணாமலையானே போற்றி
ஓம் சடைமுடி கொண்டவனே போற்றி
ஓம் சாம்பசிவனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் பிட்டுக்கு மண்சுமந்தவனே போற்றி
ஓம் பிரகதீஸ்வரனே போற்றி
ஓம் கட்டுகடங்காத கருணைக்கடலே போற்றி
ஓம் கபாலீஸ்வரனே போற்றி
ஓம் பிச்சைப்பாத்திரம் ஏந்தியவனே போற்றி
ஓம் பெரியபுராணம் நாயகனே போற்றி
ஓம் முப்புரம் எரித்தவனே போற்றி
ஓம் முன்வினை தீர்ப்பவனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் அறுபத்துமூவரின் ஆண்டவனே போற்றி
ஓம் அருணாசலனே போற்றி
ஓம் பிறவிப் பயன் தருபவனே போற்றி
ஓம் பட்டீஸ்வரனே போற்றி
ஓம் வரம்கொடுக்கும் வள்ளலே போற்றி
ஓம் வைத்தீஸ்வரனே போற்றி
ஓம் கரம்குவித்தோம் உன்னையே போற்றி
ஓம் காரணீஸ்வரனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் பொன்னார் மேனியனே போற்றி
ஓம் புலித்தோலணிந்தவனே போற்றி
ஓம் விண்ணோரைக் காப்பவனே போற்றி
ஓம் வெங்கேஸ்வரனே போற்றி
ஓம் அன்னாய் காப்பவனே போற்றி
ஓம் கையிலாத நாதனே போற்றி
ஓம் உண்ணாமுலையான் துணைவனே போற்றி
ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் திரிசூலம் தரித்தவனே போற்றி
ஓம் திருநீறு அணிந்தவனே போற்றி
ஓம் பரிபூரணமானவனே போற்றி
ஓம் பரத்வாஜேஸ்வரனே போற்றி
ஓம் கரிமுகன் தந்தையே போற்றி
ஓம் காந்திமதி நாதனே போற்றி
ஓம் சரவணனை தந்தவனே போற்றி
ஓம் சாம்பசிவனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் வஜ்ர லிங்கேஸ்வரனே போற்றி
ஓம் வையகம் காப்பவனே போற்றி
ஓம் சக்திலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் சர்வ வல்லமையானே போற்றி
ஓம் தண்டலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் தரணி ஆள்பவனே போற்றி
ஓம் தக்கலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் தாக்ஷயினி துணைவனே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஈசனடி போற்றி :
ஓம் பாசலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் பக்திக்கு மகிழ்பவனே போற்றி
ஓம் கதாலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் கலைகளின் அரசனே போற்றி
ஓம் சத்ரலிங்கேஸ்ரவனே போற்றி
ஓம் சர்வம் சிவமயமே போற்றி
ஓம் துவஜலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் சூலலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் சூட்சுமதாரியே போற்றி
ஓம் பத்மலிங்கேஸ்வரனே போற்றி
ஓம் பகைவரை அழிப்பவனே போற்றி
ஓம் சக்ர லிங்கேஸ்வரனே போற்றி
ஓம் சரபேஸ்வரனே போற்றி
ஓம் சிக்கலைத் தீர்ப்பவனே போற்றி
ஓம் தீர்த்தங்கள் பலகொண்டாய் போற்றி
ஓம் நமசிவாயனே போற்றி போற்றி
ஓம் நெற்றிக்கண் உடையவனே போற்றி
ஓம் நினைப்பவர்க்கு அருள்பவனே போற்றி
ஓம் வற்றா அருளுடையவனே போற்றி
ஓம் வணங்கிடுவோம் உன்னையே போற்றி
ஓம் பற்றிடுவோம் பதமலரே போற்றி
ஓம் பாபவிமோச்சனனே போற்றி
ஓம் ஒற்றியூர் வாழும் ஈசனே போற்றி
ஓம் உடலின் உயிரே போற்றி
ஓம் திருச்சிற்றம்பலமே போற்றி போற்றி💐🌷🌹🤲👣🙇‍♂️🕉️🙏புதன் கிழமையில் வரும் பிரதோஷ வழிபாட்டு பலன்கள் !!
🙏
*🙏🕉️ஓம் நமசிவாய ஓம் 🕉️🙏*
*🙏🕉️திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் 🕉️🙏*

 

🌷 🌷🌷 🌷May be an image of 1 person and temple  🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏