சுந்தரர் தேவாரம்
ஏழாம் திருமுறை
பண் - பழஞ்சுரம்
*இராகம் - சங்கராபரணம்*
*ஓதியவர்*
*சண்முகசுந்தரம்*
*பிரதோஷத்தை முன்னிட்டு*
*சிவ பக்தி கீதம்*



மருவார் கொன்றை மதிசூடி
மாணிக் கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு
மகிழ்ந்து பூதப் படைசூழத்
திருமால் பிரமன் இந்திரற்குந்
தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.
* சிவபக்தி கீதம்*


சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருபாட்டு.
திருச்சிற்றம்பலம்



இத்திருப்பதிகம் இறைவரது தன்மைகளைச் சிறப்பித்து அருளிச் செய்தது. திருக்கடவூர் மயானத்தில் கோயில் கொண்டிருக்கும் பெரிய பெருமான் அடிகளாகிய சிவபெருமானார், நறுமணம் நிறைந்த கொன்றை மலர் மாலையையும் பிறையையும் திருமுடியில் சூடிக்கொண்டு உமாதேவியோடு பூதப் படைகள் மகிழ்ந்து சூழ, வெள்ளி மலையின்மேல் ஒரு மாணிக்க மலை வருவது போல விடையின்மேல் வருவார். திருமால் பிரமன் இந்திரன் என்ற பெருந்தேவர்கட்கும். மற்றைய தேவர். நாக லோகத்தார். அசுரர் என்பவர்கட்கும் அவரே தலைவர்.
