"மன அமைதி’’.......................................

மணக்கால் அய்யம்பேட்டை | 4:30 PM | Best Blogger Tips


அவர் ஒரு விவசாயி. அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் ஒரு சிறிய பண்ணை வீட்டில் இருந்த அவர், பல ஆண்டுகளாகத் தன் கையில் ஒரு கடிகாரம் கட்டியிருந்தார்.

 

அவரைப் பொறுத்தவரை அது வெறும் கைக்கடிகாரம் அல்ல.சென்டிமென்ட். பல நல்ல தருணங்கள், வெற்றிகள் அவருக்கு நிகழ்ந்ததற்கு அந்தக் கடிகாரம் தான் காரணம் என்கிற நம்பிக்கை அவருக்கு இருந்தது.

 


ஒருநாள் பண்ணை வேலையெல்லாம் முடிந்து வெளியே வந்த பிறகு தான் கவனித்தார். அவர் கையில் கட்டியிருந்த கடிகாரத்தைக் காணவில்லை.

 


உடனே பரபரப்பாகி, தன் விவசாயக் கிடங்குக்குள் (Barn) போய்த் தேட ஆரம்பித்தார். எவ்வளவு நேரம் தேடியும் கடிகாரம் கிடைக்கவில்லை. கவலையோடு வெளியே வந்தார்.

 

அவருடைய கிடங்குக்கு வெளியே சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.

 


அவருக்கு உடனே ஒரு யோசனை வந்தது.. டேய்... பசங்களா!என்று அழைத்தார். சிறுவர்கள் ஓடி வந்தார்கள்.

 

இந்தக் கிடங்குக்குள்ள என் கடிகாரம் காணாமல் போயிடுச்சு. கண்டு பிடிச்சு கொடுப்பர்களுக்கு அருமையான பரிசு ஒண்ணு தருவேன்என்றார்.

 

மாணவர்கள் துள்ளிக் குதித்தபடி, அவருடைய வேளாண் கிடங்குக்குள் ஓடினார்கள்.

 


அத்தனை பேரும் உள்ளே இருந்த வைக்கோற்போர், புல், பூண்டு, இண்டு, இடுக்கு விடாமல் தேடியும் கிடைக்கவில்லை.

 

சோர்ந்து போனவர்களாக வெளியே திரும்பி வந்தார்கள். விவசாயியிடம், “மன்னிச்சுக்கங்க ஐயா, எங்களால கண்டுபிடிக்க முடியலை’’ என்றார்கள்..

 

அந்த நேரத்தில்Vilaiyaattu ஒரு சிறுவன் அவரருகே வந்தான்.

 

ஐயா, எனக்கு மட்டும் இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்.நான் அந்த கடிகாரம் கிடைக்கிறதா? என்று முயற்சி செய்து பார்க்குறேன்’’ என்றான்.

 

சிறுவன் கிடங்குக்குள் நுழைந்தான். கதவைச் சாத்திக் கொண்டான். அவன் உள்ளே நுழைந்து பதினைந்து நிமிடங்கள் தாம் ஆகியிருக்கும். கதவு திறக்கப்பட்டது.

 

வெளியே வந்தான். அவன் கையில் காணாமல் போயிருந்த அவரின் கடிகாரம் இருந்தது. அவருக்கு ஒரே ஆச்சரியம்..

 

தம்பி... நீ மட்டும் எப்படி சரியா கடிகாரத்தை கண்டு பிடிச்சே?’’ என்று கேட்டார்.

 


ஐயா... நான் உள்ளே போய் ஒண்ணுமே செய்யவில்லை... கிடங்குக்கு நடுவில் கண்ணை மூடி உட்கார்ந்து இருந்தேன்..

 

ஐஞ்சு நிமிடம் அப்படியே காத்திருந்தேன். அந்த அமைதியில கடிகாரத்தோட `டிக்...டிக்... டிக்...சத்தம் கேட்டுச்சு. சத்தம் வந்த திசைக்குப் சென்றேன், கடிகாரத்தை கண்டு பிடித்தேன் என்றான்..

 

ஆம்.,

மன அமைதிஎன்கிற இரண்டெழுத்து வசப்பட்டால் போதும்... எதிலும், எங்கும் வெற்றியே!

 

ஆனால், எல்லோருக்கும் எளிதாக அது வாய்ப்பது இல்லை.

 

பரபரப்பான மனம் கொண்ட ஒருவரை விட, மன அமைதியுள்ளவர் சிறப்பாகச் சிந்திப்பார்.

 

தினமும் கொஞ்ச நேரத்தை, மனதை அமைதிப்படுத்தச் செலவழித்துப் பாருங்கள்...

 

உங்களால் எவ்வளவு அற்புதமாக, சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை நீங்களே அறிவீர்கள்.


நன்றி இணையம்

ராஜாவே வீட்டுக்கு . . . . . .

மணக்கால் அய்யம்பேட்டை | 1:04 PM | Best Blogger Tips

 

ராஜாவே வீட்டுக்கு வந்தார்.

 

வேங்கைபுரி மன்னன் தன் ஆளுகைக்கு உட்பட்ட ஊருக்கு மக்களைக் காணச் சென்றார்..

 

மன்னர் வருவதைக் கேள்விப்பட்ட மக்கள், அவரைக் காணக் கிளம்பினர். அன்று யாரும் வேலைக்குச் செல்லவில்லை. தங்களுக்கு, மன்னர் ஏதாவது பணம் கொடுப்பார் என்பது அவர்களது எதிர்பார்ப்பு.

 

உழைப்பில் நம்பிக்கை கொண்ட ஒரு மூதாட்டி மட்டும், நார்க்கூடை முடைந்து கொண்டு இருந்தாள். அப்போது ஒருவன் அவள் வீட்டைக் கடந்து சென்றான்.

 

"பாட்டி, ராஜா வாராருன்னு ஊரே கோலாகலமா கூடி நிக்குதே! நீ மட்டும் ஏன் போகலை?'' என்றான்.

 "உழைச்சா தான் என் மனசுக்கு மகிழ்ச்சி. வேலையைப் பாரமா நினைக்கிற சோம்பேறிக தான், ராஜாவைப் பாத்தா ஏதாவது கிடைக்குமுனு போயிருப்பாங்க,'' என்று சொல்லிப் படபடத்தாள்.

 

வாய் விட்டுச் சிரித்த அந்த வழிப்போக்கன்

பாட்டியிடம், அரசு முத்திரையிட்ட தங்க மோதிரத்தை நீட்டினான்.

 

வந்திருப்பவர் நாடாளும் அரசன் என்பதை அறிந்த அவள் எழுந்து நின்று மரியாதை செய்தாள்.

 

"அம்மா! என்னைப் பார்க்கப் போனவர்கள் திரும்பி வந்ததும், உழைச்சுப் பிழைக்கிற என்னைத் தரிசிக்க ராஜாவே வீட்டுக்கு வந்தார் என்று சொல்லுங்கள்.

 

முத்திரை மோதிரத்தை ஊராரிடம் காட்டுங்கள்,'' என்றார்.

 

ராஜா படாடோபத்துடன் வருவார் என்று காத்து நின்ற மக்கள், அவர் சாதாரண உடையில் வந்து சென்றதை அறிந்து ஏமாந்தனர்.

 

பாட்டிக்கு அவர் அளித்த சன்மானம் பற்றி அறிந்தனர்.

உழைப்பவரையே உயர்மக்கள் விரும்புவர் என்ற உண்மையை உணர்ந்தனர்..

 

ஆம்.,நண்பர்களே

 

உழைப்பே உயர்வு என்பார்கள்.

இருந்தாலும் நீங்கள் எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும், அந்த உழைப்பு சரியான முறையில்

முறைப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் அந்த உழைப்பின் பலனை முழுமையாக அனுபவிக்க முடியும்.


 நன்றி இணையம்

கர்ணன் கற்றது வித்தை அல்ல, வேதம்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:59 PM | Best Blogger Tips

 
கர்ணன் கற்றது வித்தை அல்ல, வேதம்!

கர்ணன் பிறப்பால் சத்ரியன். வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே?

துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலை போகிறான் கர்ணன். மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச் சொல்கிறார் குரு.

அர்ஜுனன் ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு தேரேறிப் போய்விட்டான்.

இப்போது கர்ணனின் முறை. அம்பை நாணில் பூட்டியாயிற்று. ஒரு கணம் பறவையை வானில் குறி பார்த்தவன் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டான்.


மிகச் சிறந்த வில் வீரனான கர்ணன் அப்படிச் செய்தது குருவுக்கு அதிசயம். காரணம் கேட்கிறார்.

குருவே இது மிகவும் அதிகாலை நேரம். இந்த நேரத்தில் ஒரு பறவை விண்ணில் பறக்கிறது என்றால் நிச்சயம் தன் குஞ்சுகளுக்கான உணவைக் கொண்டு போகிறது என்றுதான் பொருள். இப்போது திறமைக்காக அதைக் கொன்றுவிட்டால் நான் வீரனாவேன். ஆனால் அந்த இளம் குஞ்சுகள் அனாதை ஆகிவிடும். எனவே நான் கொல்ல மாட்டேன் என்றானாம்.

கலங்கிப்போன குரு சொன்னாராம், "கர்ணா நீ கற்றது வித்தை அல்ல வேதம்"

பணத்தாலும், பதவியாலும், அதிகாரத்தாலும் நீங்கள் பலமானவர்களாக இருக்கலாம். அந்த பலத்தை உன்னை நேசிப்பவர்களிடமோ, அல்லது உன்னை விட பலம் குறைந்தவர்களிடமோ காட்டாதீர்கள்.. இன்று நீ பலவானாக இருக்கலாம் நாளை என்னவாகும் என்பதை படைத்தவன் மட்டுமே அறிவான்.

இனிய

வாழ்த்துக்கள்

ஜெய்ஸ்ரீராம் நன்றி இணையம்

 


#தடுமாறும்தமிழன்!!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:06 PM | Best Blogger Tips

  

1. இந்திய மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த மோடியை "வட இந்தியர்" என எதிர்ப்பான்!!

 

இந்தியர் அல்லாத இத்தாலியை சேர்ந்த

சோனியாவை "அன்னை" என்று அழைப்பான்

"ஏன்?" என்று கேட்டால் முழிப்பான்!!

 

2. "வட இந்தியர்கள் முட்டாள்கள்" என்பான்,

எனவே பாஜகவின் மோடி அறிவாளி அல்ல என்பான்!!

 

"காங்கிரஸின் ராகுலும் வடஇந்தியர்தானே,   அவர் மட்டும் புத்திசாலியா?" என்று கேட்டால் முழிப்பான்!!

 

3. "டீ வியாபாரம் செய்தவர் பிரதமரா?"

என மோடியை எதிர்ப்பான்!!

 


"சோனியா கூட இத்தாலியில் ஒரு பாரில் வேலை செய்தவர்தானே?" என்று கேட்டால் முழிப்பான்!!

 

4. "நரேந்திர மோடி ஒரு ஆரியர்" என எதிர்ப்பான்

 


"ராகுல் மட்டும் திராவிடனா?" என்று கேட்டால் முழிப்பான்!!

 

5. "மோடி விதவிதமான ஆடைகளை அணிகிறாரே?"  என்று எதிர்ப்பான்!!

 

அந்த ஆடைகளை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் பெரிய தொகையை தேசத்திற்கு தானேஅவர் கொடுக்கிறார் என்று சொன்னால் முழிப்பான்!!

 

6. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த எளிய குடும்பத்தில் பிறந்த மோடியை "மேல் ஜாதியினருக்கு ஆதரவானவர்" என கூறி எதிர்ப்பான்!!

*

"கவுல் கோத்திரத்தில் பிறந்த பிராமணன் என ராகுல் தன்னை கூறிக் கொள்கிறாரே?"

என கேட்டால் முழிப்பான்!!

 

7. "வெறும் 7 ஆண்டுகளில் மோடி நாட்டுக்கு செய்த பணிகள் போதாது" என எதிர்ப்பான்!

 

"60 ஆண்டுகளில் காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் இந்த அளவுக்குக்கூட செய்யவில்லையே?" என்று கேட்டால் முழிப்பான்!!

 


8. தொழிலதிபராகவோ, கோடீஸ்வரராகவோ

இல்லாத மோடியை "கார்ப்பரேட்டுக்கு ஆதரவானவர்" என எதிர்ப்பான்!!

 

"உண்மையான கார்ப்பரேட்

தொழிலதிபர்களாகவும் பெரும்

கோடீஸ்வரர்களாகவும் இருப்பது  ராகுல்காந்தி, சிதம்பரம் ஆகியோர் குடும்பம்தானே?"  என கேட்டால் முழிப்பான்!!

 

9. இலங்கையில் தமிழர்களுக்கு வீடு  கட்டிக்கொடுத்து, இலங்கை

கடற்படையால் இந்திய மீனவர்களின்

படுகொலையை தடுத்த "மோடியை தமிழ்

மக்களுக்கு எதிரானவர்" என்று கூறி எதிர்ப்பான்!!

 

"இலங்கையில் இறுதிப்போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவிக்கக்  காரணமான காங்கிரஸ்  கூட்டணியை ஏன் ஆதரிக்கிறாய்?" என்று கேட்டால் முழிப்பான்!!

 


தமிழனை குறைகூறி எந்த பயனும் இல்லை!!!

தமிழன்,

*சிந்திக்க மறந்தவன்!

*தன்னையும் மறந்தவன்!!

*தன் மதத்தை யார் கேவலப்படுத்தினாலும்

பல்லை காட்டி கொண்டு நிற்பவன்!!

 

ஏனென்றால்  இங்கு சில கட்சிகளும் அதன் ஆதரவு ஊடகங்களும் சில சில்லரை கட்சிகளும் சேர்ந்து தமிழனுக்கு மோடியை எதிர்க்க மட்டும்தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்!!

 


"ஏன் எதிர்க்கிறோம்?"

என்று தெரியாமலேயே அவனும் எதிர்க்கிறான்

 

வெகு விரைவில் மாறுவான்,இல்லை மாற்றுவோம்🚩

பாரத் மாதாவுக்கு ஜெய்🇮🇳🚩🙏🙏🙏🙏🙏🙏

நன்றி இணையம்


சிவன் மட்டும் சிந்தையில்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:58 AM | Best Blogger Tips

 தேவாரம்

திருவாசகம்

உணர்வுகள்

வெளிப்பாடு.

 

சிவனே என இருந்திட ஆசை.

 

சிவன் மட்டும் சிந்தையில் 

நிறைந்திட ஆசை.

 

செய்தபாவமெல்லாம் தொலைத்திட ஆசை. பரமன் திருவடி பற்றிட ஆசை.

 

நல்லவை யெல்லாம் நடந்திட ஆசை. நான்  வணங்கும்  காட்சியெல்லாம் நீயாகஆசை.

 

உன்  நிழலாக  என்றென்றும்

நான்மாற ஆசை.

 

சினம்  தவிர்த்த மன நிலையை

நான்  அடைய ஆசை.

 

தினம்  போற்றும் மனம்  நினைக்கும்  

செயல் யாவும் சிறந்தோங்க ஆசை.

 

அந்த  செயலும்   பிறர்  நன்மைக்கென்றால்   அடைவேன்  பேராசை . தானென்ற  அகந்தை எல்லாம்  விட்டொழிக்க ஆசை.

 

உன் அடியவன் என்ற கர்வம் மட்டும்

நிறைந்திருக்க ஆசை.

 

பசி  தாகம் பிணி எல்லாம் 

விட்டொழிக்க ஆசை.

 

தாயுமானவா  உன்னோடு கலந்து

ஞானஅமிழ்து உண்ண ஆசை .

 

எடுத்த இப்பிறவிக்கு  

போதும்  இந்தஆசை.

 

இனி பிறவா நிலை

வேண்டும் என்ற ஆசை.

 

இந்த வரம்தனையே தந்தெனக்கு 

அருள் புரிவாய்  ஐயனே  ...  !

 

இறையே சரணம் சரணம் சரணம்,,


 நன்றி இணையம்