வேற்று கிரக மனிதர்கள் என்று இங்கே குறிப்பிடுவது ஏதோ ஆங்கிலப்படங்களில்
நாம் பார்த்து பழகிவிட்ட முட்டை கண்களும், பொம்மை முகங்களும் கொண்ட
உயிரினங்களை அல்ல. நம்மை விட விஞ்ஞானத்தில் எட்ட முடியாத அளவிற்கு
வளர்ந்த, மிகப்பெரும் சக்திகள்.
மஹாபாரதத்தை படிக்கும் போது
நமக்கு வரும் சந்தேகம், எப்படி பழமையான ஈட்டிகளையும், வாள்களையும்,
குதிரைகளையும், யானைகளையும் பயன்படுத்துபவர்கள், மிகவும் முன்னோடியான
ஆயுதங்களான அஸ்திரங்கள், அதை ஏவும் மிகவும் முன்னோடியான ஏவும் கருவிகள்,
விமானங்கள் மற்றும் கவச வண்டிகளை பயன்படுத்தி இருக்க முடியும் ?
என்பதுதான்.
மஹாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முன்னோடியான
ஆயுதங்கள் மற்றும் கருவிகளை உண்டாக்குவதற்கு நிச்சயமாக மிகப்பெரும்
தொழிற்சாலைகள் இருந்திருக்க வேண்டும். ஆனால் பூமியில் அத்தகைய
தொழிற்சாலைகள் இருந்ததற்கு எந்த விதமான தடயங்களும் இல்லை. ஆகையால் இத்தகைய
நவீன ஆயுதங்கள் மற்றும் கருவிகள் வேற்று கிரகத்தவர்களால்தான் பூமிக்கு
கொண்டுவரப் பட்டிருக்க வேண்டும்.
உண்மையில் வேற்று கிரகத்தவர்கள்
இருக்கிறார்களா, என்றால் நிச்சயம் இருக்க வாய்ப்பு உள்ளது என்று இன்றைய பல
விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். புகழ்பெற்ற "ஸ்டீபன் ஹாக்கிங்" என்கிற
பிரித்தானிய இயற்பியல் விஞ்ஞானி வேற்று கிரக வாசிகள் இருப்பது உறுதி
என்கிறார். அதோடு அவர்களோடு தொடர்ப்பு படுத்த நினைப்பதை நாம் தவிர்த்தல்
நல்லது என்றும் சொல்கிறார். நம்மை விட அறிவியலில் மிகவும் முன்னேறிய
அவர்களால் நமக்கு ஆபத்து வரக் கூடும் என்று அறுதியிட்டு சொல்கிறார்.
மஹாபாரத போரை நாம் இன்னும் ஆழமாக பார்க்க தொடங்கினால் சில விஷயங்கள்
தெளிவாகும். குறைந்த எண்ணிக்கை கொண்ட பாண்டவர்கள், அதிக எண்ணிக்கை கொண்ட
கௌரவர்களை வெற்றிப் பெறுகிறார்கள். இதற்கு மிக முக்கியமான காரணம் அர்ஜுனன்
பெற்று வந்த ஆயுதங்கள் தான். அர்ஜுனன் பாசுபதம் எனும் அஸ்திரத்தை
சிவனிடம் இருந்தும், வேறு பல அஸ்திரங்கள், தளவாடங்கள், கவச வண்டிகள்
ஆகியவற்றை மற்ற தேவர்கள் (இந்திரன், குபேரன், யமன், வாயு) இடமிருந்தும்
பெற்றதினால்தான் மிகவும் சக்தி வாயந்தவனாக மாறுகிறான். மக்கள் தொகையில்
மிகவும் குறைந்த இஸ்ரேல், தன்னை சுற்றியுள்ள, தன்னை விட பலமடங்கு மக்கள்
தொகை அதிகம் உள்ள எதிரி நாடுகளை கலங்கடிப்பது, அதன் நவீன ஆயுதங்கள் மற்றும்
போர் கருவிகளால் என்பதை நாம் இப்போதும் பார்க்கிறோம்.
நவீன
முன்னோடியான ஆயுதங்கள் எத்தகைய பங்கை வகிக்கிறது என்பதை அன்றே எடுத்துக்
காட்டியுள்ளது மஹாபாரதம். தேவர்கள் மற்றும் அசுரர்கள் எனக்
குறிப்பிடப்படுபவர்கள் நம் பூமிக்கு அல்லது பால்வெளிக்கு வெளியிலிருந்து
வந்துள்ள ஆற்றல் மிகுந்த, விஞ்ஞானத்தில் உச்சத்தில் இருப்பவர்களாக
இருக்கலாம். விஞ்ஞானத்தில் மிக உயரத்தில் இருக்கும் தேவர்களுக்கும்,
அசுரர்களுக்கும் இடையே உள்ள போரில் தேவர்கள் கை ஓங்கி இருக்கிறது. தங்கள்
ஆற்றலை இழந்த அசுரர்கள், அதை மீட்கும் பொருட்டு, பூமி என்கிற நம்
கிரகத்துக்கு வந்து, தங்கள் சக்தியை மீட்டெடுக்க முயன்றிருக்கலாம்.
அவர்கள் தங்கள் மரபனுக்களை பூமியின் பல உயிரினங்களுக்கு செலுத்தி, தங்கள்
எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டிருந்த வேளையில், அதை முறியடிக்க
தேவர்களும் பல மனித உருவங்களில் தோன்றுகின்றனர். இதை தெளிவாக மஹாபாரதம்
விளக்குகிறது.
"ADI PARVA SECTION LXIV (Adivansavatarana Parva
continued)"The Asuras, O lord of men, began to be born in kingly lines.
And the sons of Diti (Daityas) being repeatedly defeated in war by the
sons of Aditi (celestials) and deprived also of sovereignty and heaven,
began to be incarnated on the earth. And, O king, the Asuras being
possessed of great powers, and desirous of sovereignty began to be born
on earth amongst various creatures".
இந்த வேற்றுகிரக வாசிகள்
மனித உருவில் ஏன் வரவேண்டும் ? மனித உருவம் இந்த பூமியின் சூழ்நிலைக்கு,
மரபியல் ரீதியாக மிகப்பொருத்தமானதாக இருக்கலாம். இவர்கள் மனித உடல்
எடுத்திருந்தாலும், இவர்களின் உடல்கள் பெரும் அஸ்திரங்கள் மற்றும்
ஆயுதங்களை தாங்கும் வண்ணம் மரபியல் ரீதியாக வடிவமைக்கப் பட்டிருக்க
வேண்டும். மஹாபாரதத்தில் பல இடங்களில் நம் பூமியை சார்ந்த சாதாரண மக்கள்
ஆயிரக்கணக்கில் இறந்து விழ, இந்த வேற்று கிரக மனிதர்கள் மட்டும் பல
கடுமையான ஆயுதங்களால் தாக்கப்பட்டும் வீழாமல் போர் புரிகிறார்கள்.
அவர்களை குறித்து மேலும் விவரமாக அடுத்த பாகத்தில் பார்ப்போம்.
Via FB Enlightened Master